சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...
சிறை - 25
ஆராவின் அணைப்பில் இழைந்திருந்த அன்பை அறிய முடியாத சங்கமித்ரா, திக்குத் தெரியாத காட்டில் நின்றாள். தவித்தாள்.
ஆராவை விலகச் சொல்லி விரல்கள் தள்ள, நின்றால் என்ன? என்று நெஞ்சம் சொல்ல, ஆண் என்றால்ஆபத்து என்று அறிவு அறிவுறுத்த, சுழன்ற வேகத்தில் முடிவெடுக்க முடியாமல், கண்கள் மூடினாள்.
மெல்ல தலையை நிமிர்த்தி ஆரா சங்கமித்ராவை பார்த்தான். உதடுகள் துடிக்க, இமைகள் இறுகி மூடி நின்ற தன்னவளின் தடுமாற்றத்தை அறிந்து கொண்டவனும், தன் சுட்டு விரலினால் அவளின் கீழ் இதழை மெல்லத் தட்டினான்.
இதழ் என்னும் மையப் புள்ளியில் குவிந்திருந்த அவளின் மெல்லிய உணர்வுப்படலம், மெல்லச் சிதறி முகம் எங்கும் சிவப்பு வண்ணப் பூக்களை பூக்கச் செய்தது.
அந்திவானச் சிகப்பாய் சிவந்திருந்த அவள் முகத்தில், ஒளிந்திருந்த அந்தக் கருப்புச் சூரியனை, அவளின் புருவக்காட்டை விலக்கி, சுட்டு விரலால் தொட்டுப் பார்த்தான்.
தொட்டுப் பார்த்த சுட்டு விரல் சுட்டு விட, கையை விலக்கிக் கொண்டவன், ஆசை மேலிட, தவிப்பின் வெப்பத்தில் உதடு குவித்து சூடான காற்றை அனுப்பி, அந்த மச்சக்கன்னியின் சுடும் கரும் சூரியனை குளிரச் செய்ய பார்த்தான்.
அவள் நெற்றியில் மோதிய காற்று அவளின் இமைக் கதவுகளை தட்டித் திறக்க, மெல்ல விழி மலர்த்தினாள். ஒற்றைக்கரும் சூரியனோடு போராடிக் கொண்டிருந்தவன், அவள் விழியில் மலர்ந்த மயக்கும் இரட்டை சூரியனைப் பார்த்து மதி கிறங்கி நின்றான்.
ஏளனத்துடனும், கோபத்துடனும் பார்க்கும் ஆராவின் விழிகளில் தாபத்தைக் கண்டவள், தன்னிலை பெற்று நிமிர்ந்து உடல் விரைக்க நின்றாள்.
" பெண்மையின் உணர்வுகளோடு விளையாடுவது தான் ஆண்மையா?" அடிபட்ட குரலில் ஆற்றாமையோடு வினவினாள்.
"இயற்கை நியதியில் இருவரின் உணர்வுகளும் சமமே மித்ரா. அதை நீ ஒளித்துக் கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. நீ நீயாக இரு. உன்னை ஒளித்துக் கொள்வதால் பயன் என்ன? உன்னைச் சூழ்ந்திருக்கும் இருளை கிழித்து விட்டு வெளியே வந்து விடு. உனக்கான வாழ்க்கையை வாழ்ந்து விடு மித்ரா!" என்றான் அவளின் பதிலை ஆர்வத்துடன் எதிர்பார்த்து.
" எனக்கான வாழ்க்கை என்று குறிப்பிடுவது உங்களையா?" என்றாள் வார்த்தைகளில் அழுத்தம் கூட்டி.
" நிச்சயமாக! என்னை மீறி ஒரு வாழ்க்கை உனக்கு உண்டா?" என்றான் ஆண்மைக்கர்வத்தில்.
" என் பிறப்பை சிதறச் செய்த வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் வளரும் பருவத்தை வாரிச்சுருட்டிக் கொண்ட வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் செல்லும் பாதையை எல்லாம் புரட்டிப் போட்ட வாழ்க்கையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இனி என் மொத்த வாழ்க்கையே நீங்கள் தான் என்று கூறினாலும் அதற்கும் நான் கவலைப்பட போவதில்லை. ஏனென்றால் நான் வாழாத வாழ்க்கை பற்றி எனக்கு என்றுமே கவலை இல்லை. வாழ நினைத்து வாழாமல் போன வாழ்க்கை என்ற ஒன்று எல்லோருக்கும் உண்டு" என்றாள் பெண்மையின் மிளிர்வில்.
" பூ மலர்வதைப் போல் இயல்பான ஒன்றுதான் திருமணம், தாம்பத்தியம் எல்லாம். இயற்கையின் நியதியை மீறுகிறது, மலராமலேயே உதிரத் துடிக்கும் உன் இயல்பு. உன் இயல்பை மாற்றும் வல்லமை அந்த இயற்கைக்கு உண்டு. அதை உன்னால் மறுக்க முடியாது. உன் உள்ளம் என்னிடம் உருகப் போவது உறுதி. உன்னை மாற்றும் மந்திரம் நான்தான்" என்றான் தீர்க்கமான குரலில்.
" என் போராட்டம் உங்களோடு தான் என்றால், எந்தன் தோல்வி உங்கள் வெற்றி. ஆனால் என் போராட்டம் என்னோடு தானே. எந்தன் தோல்வியும், எந்தன் வெற்றியும் எனக்கே எனக்கு. என் உலகத்தில் என் அன்னையைத் தவிர யாருக்கும் இடமில்லை. உங்களுக்கு சொந்தமாக நீங்கள் நினைக்கும் இந்த உடலை, நீங்கள் சொந்தம் கொண்டாட இத்தனை வார்த்தை ஜாலம் தேவையில்லை. வா என்றால் வந்து விடப் போகிறேன்" என்றவள் நிதானமாக தன் நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை புடவை நுனியால் துடைக்க ஆரம்பித்தாள்.
தாபம் அடங்கி, கோபம் தலை தூக்க, அவளின் சங்கு கழுத்தை பற்றியவன், அனல் கக்கும் பார்வையோடு அவளைப் பார்த்து, "நீ வேண்டும் தான் மித்ரா. விலைமாது போல அல்ல. காதல் மனைவியாக. சற்றுமுன் என் கை வளைவில் மயங்கி நின்றாயே அந்தத் தோற்றம் உண்மையா? வெற்றுப் பார்வை பார்க்கும் இந்தத் தோற்றம் உண்மையா? சொல் மித்ரா!" என்றான் உறுமலாக.
அவளின் விழிகள் அலைப்புருதலுடன் ஆராவின் கண்களை பார்த்தது. "எனக்கு வரையறுக்கப்பட்ட எல்லை கோட்டை என்னால் தாண்ட முடியவில்லை அமுதா! எத்தனை காலம் சென்றாலும் இது உங்களுக்கு ஏமாற்றம்தான். இந்த மாயையை நம்பி ஏமாறாதீர்கள் " என்றவளின் குரல் சற்று இறங்கி ஒலித்தது.
கோபப்பட்டவனின் முகம் சற்றே சாந்தமாகியது. அவன் பிடித்திருந்த கழுத்து வளைவை தன் பெரு விரல்கள் கொண்டு வருடினான்.
"இவ்வளவு தானே மித்ரா! நீ அந்த எல்லைக்கோட்டை தாண்டும் போது இந்த ஆராவின் கைகளில் மிதந்து கொண்டிருப்பாய்" என்றவன் அவளின் குழப்பமான தோற்றத்தை தெளிவிக்கும் பொருட்டு நெற்றியில் மெல்லமாய் முட்டினான்.
என் விளக்கம் அவ்வளவுதான் என்பது போல் முடித்துக் கொண்டவள், தன் கால் சலங்கைகளை கழட்டி, மீண்டும் அந்த பூக்குவியலின் மீது வைத்தாள்.
வரவேற்பறையின் இருக்கையில் இருவரும் அமர்ந்தனர் அவரவர் யோசனையுடன்.
கட்டிடங்களை கட்டுவதில் வல்லமையான ஆராவமுதன், சங்கமித்ரா தன்னைச் சுற்றி எழுப்பிய கற்கோட்டையை தகர்க்கும் தன் முயற்சியை தீவிரப்படுத்தும் சிந்தனையில் மூழ்கினான்.
கண்மூடி இருக்கையில் சாய்ந்த சங்கமித்ரா தன் தாயின் நினைவுகளுடன் கண் மூடினாள்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து சிவா கண்விழித்ததும், உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்தான். சங்கமித்ராவின் அருகில் சென்று, "பாப்பா!" என்றான் பாசமாக.
சிவாவின் கண்களில் தெரிந்த ஏக்கம், தவிப்பு, நிராசை கலந்த ஒரு எதிர்பார்ப்பைக் கண்டவளின் முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது.
"பையா, நீங்கள் சாப்பிட்டீர்களா?" என்றாள் நிலைமையை சாதாரணமாக்கும் பொருட்டு.
தன் குடும்பத்தினருக்கு பிறகு தன்னை ஆசையாக, பாசமாக பசியாறினாயா? என்று கேட்கும் ஒரு உறவைக் கண்டதும் கண்கள் கலங்க ஆரம்பித்தது சிவாவிற்கு.
" ஓ சாப்பிட்டேன் பாப்பா" என்றான் தலையசைத்துக் கொண்டே.
"ம்..." என்று பதிலளித்தாள்.
" பாப்பா! நீ அருமையாக நடனம் ஆடுகிறாய். எங்கள் வீட்டில் சிறு நாட்டியக்கூடம் இருக்கிறது. பார்க்க விரும்புகிறாயா? " என்றான்.
சங்கமித்ராவின் கால்கள் அவள் அனுமதியின்றி எழுந்து நின்றது. கீழே வரவேற்பறையை ஒட்டி அமைந்திருந்த அந்த நாட்டிய அறையை திறந்து விட்டான். பூஜையறைக்குள் நுழையும் பக்தை போல் கவனமாக உள்ளே நுழைந்து அங்கே வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களையும், கருவிகளையும் ஆர்வத்துடன் பார்வையிட்டாள். அவளுக்கு தனிமை கொடுத்துவிட்டு வரவேற்பறைக்கு வந்தான் சிவா.
தன் முன்னே அமர்ந்திருந்த ஆராவை கூர்ந்து பார்த்தான். பின் ஆராவைப் பார்த்து கைநீட்டி கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.
"என்னடா?" என்றான் குழப்பமாக.
சிவா வெட்கப்பட்டுக் கொண்டே, தன் கால் பெருவிரலால் தரையில் கோலமிட்டான். சுண்டுவிரல் நகத்தினை வாயில் வைத்து, கடித்து கொண்டே நாணிக் கோணினான்.
" கருமம் பிடித்தவனே! சகிக்கல. என்னவென்று சொல்லித் தொலைடா " என்றான்.
தலையைச் சரித்து, ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே ஆராவின் வெண்மைச் சட்டையைப் பார்த்து கை நீட்டினான்.
சட்டென்று ஆரா குனிந்து தன் சட்டையைப் பார்க்க, அங்கே சங்கமித்ராவின் நெற்றித் திலகம் வட்டமாய் வீற்றிருந்து, ஆராவை கட்டம் கட்டிக் காட்டியது.
தோன்றும் வெட்கப் புன்னகையை, கீழிதழ் மடித்து, அடக்கிக் கொண்டு, "அதுக்கு என்னடா?" என்றான் அதட்டலாக.
" இல்லை கொஞ்ச நேரம் தான் கண் அசந்தேன். பாப்பாவின் நாட்டியக் கச்சேரியோடு, நீயும் உன் கச்சேரியை வைத்திருக்கிறாயே! பலே கில்லாடிதான் நீ" என்றான் ஆராவை கிண்டல் பார்வை பார்த்து.
" பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான் மச்சி" என்றான் ஆரா.
"நானும்..." என்று பதில் சொல்ல ஆரம்பித்த சிவாவை தடுத்து நிறுத்தி, " மச்சி எடுத்த உடனே கட்டிடம் கட்ட முடியாது. இடம் வாங்கணும். தோண்டனும். அப்புறம்தான் கட்டனும்டா " என்ற ஆராவை சிவா முறைத்துப் பார்த்தான்.
" அது சரி. அது என்ன பாப்பா?" என்றான் ஆரா.
"மச்சி, சங்கமித்ரா நடனமாட ஆரம்பித்ததும், என் தங்கை மீண்டும் உயிர் பெற்று நடனமாடியது போல் இருந்ததுடா. நான் என் தங்கையை பாப்பா என்று தான் செல்லமாக அழைப்பேன். ஏனோ சங்கமித்ராவை பாப்பா என்று அழைக்க வேண்டும் என்று என் உள்ளம் கட்டளையிட, என்னை அறியாமல் அந்த வார்த்தை வந்துவிட்டது. அப்படியே நிலைபெற்றும் நின்று விட்டது.
காலையில் ஏதோ ஏதேச்சையாக தங்கை என்று நினைக்க வைத்தவள், இப்பொழுது நிஜமான தங்கையாகவே என் மனதில் உருப்பெற்று விட்டாள். என் வாழ்விற்கு அர்த்தம் சேர்த்து விட்டாள். என் பாப்பாவை நன்றாக பார்த்துக் கொள் ஆரா. என் தங்கைக்கான அங்கீகாரத்தை நீ தந்தே ஆக வேண்டும். " என்று கோரிக்கை வைத்தான் சிவா.
" உன் பாப்பா என்னைப் பார்த்துக் கொண்டால் போதாதா? அது என்னடா அங்கீகாரம்? " என்றான் ஆரா.
" இல்லை ஆரா. இன்று அலுவலகத்தில் மட்டுமே, மனைவி என்று வார்த்தைகளால் அங்கீகாரம் தந்த நீ, அதே அங்கீகாரத்தை ஊரறிய, உலகறியத் தர வேண்டும். பாட்டிக்கான கல்யாணம் என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டாதே. உன் மாற்றம் தான் உன் கண்களில் அப்பட்டமாக தெரிகிறதே " என்றான்.
" நீ எப்பொழுதிருந்து எனக்கு கட்டளையிட ஆரம்பித்தாய் சிவா? என் செயலும், முடிவும் என்றும் என் வசமே. எனக்கு எப்பொழுது அங்கீகாரம் தரத் தோன்றுகிறதோ அப்பொழுது தருவேன். ஏன் தராமலே இருப்பேன். என் விருப்பம். என் நியாயம் என்னோடு" என்றான்.
" அப்புறம் ஏன்டா அலுவலகத்தில் வைத்து மட்டும் என் மனைவி என்று சொந்தம் கொண்டாடினாய்?" என்று கொதித்துப் போய் கேட்டான்.
"உன் பாப்பா தான் அத்தனை தடவை தன்னை மிஸஸ் ஆராவமுதன் என்று அடையாளப்படுத்திக் கொண்டாள். அப்படிப் பார்த்தால் நான் ஒரு முறை தான் சொன்னேன். அதில் சில பல கொடுக்கல் வாங்கல் உள்ளது. என் அந்தரங்கத்தை உனக்கு அம்பலப்படுத்த முடியாது" என்றான் அலட்சியமாக.
"ஆரா உன்னை கரம் பிடிக்கும் போது சங்கமித்ரா யாருமற்றவளாக இருந்திருக்கலாம். இன்று சங்கமித்ராவிற்கு, அவள் அண்ணன் என்று இந்த சிவா இருக்கிறேன். வருடக் கணக்கில் உறங்காத சாபத்தை வாங்கிய எனக்கு நிமிடத்தில் உறக்கத்தை தந்த தேவதைப் பெண்ணடா அவள்.
சாரா உடன் பழகி அவளை விட்டு விட்டது போல் இவளை விட்டு விடாதே. உனக்கு கிடைத்த வைரக்கல்லை வீசிவிட்டு கூலாங்கல்லை சுமந்து விடாதே" என்றான் சிவா தவிப்பாக.
"சாரா... ம்... நல்லவேளை நினைவுபடுத்தினாய் சிவா. அவளைப் பற்றிய தகவல்களை எனக்கு சீக்கிரம் அனுப்பு. உன் பாப்பா வைரமாக இருந்தாலும் பட்டை தீட்டினால் தான் மிளிர முடியும். உன் அறிவுரைகள் எனக்குத் தேவைப்படாது. அப்படியே உன் பாப்பாவிற்கு, உன் அறிவுரைகளை மூட்டை கட்டி அனுப்பி வை" என்றான் ஆரா சிவாவின் தோளைத் தட்டியபடி.
சிவாவின் பாசம் சங்கமித்ராவின் மனதில் ஓர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்றும், எங்கும் வார்த்தையின்றி அமைதியாய் விடை பெறுபவள், அன்று வீட்டை விட்டு வெளியேறும் போது, "வருகிறேன் பையா" என்றாள்.
குழந்தைத்தனமான மன மகிழ்ச்சியுடன் கையசைத்து அவளை வழி அனுப்பி வைத்தான் சிவா.
எப்பொழுதும் தெளிவான சிந்தனையுடன் இருக்கும் சங்கமித்ராவின் மனதில், ஆராவின் கண்ணடித்த முகம் மின்னி மின்னி மறைந்தது. தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்குள் நுழைந்தவள், தழும்பத் தழும்ப வாளியில் நீரை நிறைத்தாள்.
மண்டியிட்டு அமர்ந்து தன் முகத்தை நிரம்பிய வாளி நீருக்குள் அமிழ்த்தினாள். மூச்சினை அடக்கும்போது, வெளிவரத் துடித்த ஆராவின் நினைவுகளையும் அடக்கினாள்.
குளியலறையை விட்டு வெளியே வந்து, நீரில் நனைந்த தன் உடையினை மாற்றிக் கொண்டாள். நாயகி சங்கமித்ராவின் அறைக் கதவை தட்டி, ஆரா சங்கமித்ராவை மாடி அறைக்கு வரும்படி அழைத்ததாக கூறிவிட்டுச் சென்றாள்.
அறைக் கதவை தட்டிவிட்டு ஆராவின் பதிலுக்காக வாசலில் காத்திருந்தாள் சங்கமித்ரா.
உள்ளே வரும்படி ஆராவின் உத்தரவு கிடைத்ததும் அறைக்குள் நுழைந்தாள்.
ஜன்னல் ஓரம் நின்றவன், அவளைத் திரும்பிப் பார்க்காமல் தன்னருகே வரும்படி அழைத்தான்.
ஆராவின் பின் வந்து நின்றாள் சங்கமித்ரா. ஜன்னலின் வழியே விரல் நீட்டி, "இதோ தெரியும் இந்த இருட்டிற்குப் பிறகு, வெளிச்சம் இருக்கிறது மித்ரா" என்றான் பூடகமாக.
ஜன்னலின் அருகே வந்தவள், அவன் காட்டிய அதே இருள் திசையைப் பார்த்து, "எனக்கு இருளை தவிர வேறு எதுவும் தெரியவில்லை அமுதா" என்றாள்.
தன்னருகே அவள் வந்தும், அவளை திரும்பிப் பார்த்தான் இல்லை. "கண்களை மூடிப் பார் மித்ரா" என்றான்.
"பச்...." என்ற ஒலியுடன் கண்களை மூடிக்கொண்டாள்.
" கண்ணைத் திறந்து பார்த்த அந்த இருளுக்கும், கண்ணை மூடிப் பார்த்த இந்த இருளுக்கும் என்ன வித்தியாசம் மித்ரா? " என்றான்.
சங்கமித்ராவின் தலை ஒன்றும் இல்லை என்பது போல் அசைந்தது.
ஆரா தன் கையை நீட்டி, அறையில் ஒளிர்ந்த அனைத்து விளக்குகளின் சுவிட்சை அணைத்தான்.
" இப்பொழுது பார் மித்ரா நீ கண்ணை திறந்தாலும் கண்ணை மூடினாலும் அதே இருட்டு தான் " என்றான்.
இருட்டு அறையில் சங்கமித்ராவின் எண்ணங்கள் தறி கெட்டு ஓட ஆரம்பித்தது. நடுங்கும் கைகளை சமன் செய்ய ஜன்னல் கம்பிகளை இறுக்க பற்றிக் கொண்டாள்.
சங்கமித்ராவின் பின் வந்து நின்று கொண்டான் ஆரா. தன் வலது கையில் நான்கு விரல்களையும் மடக்கி, சுட்டு விரலை மட்டும் நீட்டி, வியர்த்து வழிந்த சங்கமித்ராவின் முதுகில் எழுத ஆரம்பித்தான்.
சங்க மித்ராவின் எண்ணச் சங்கிலிகள் அறுபட்டு, ஆரா என்ன எழுதுகிறான்? என்பதை கவனிக்க ஆரம்பித்தது.
கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக, வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக கோடிழுத்து, வளைந்து, நெளிந்து, புள்ளிகள் இட்டு, அவன் விரல் போடும் புதிரை உடைக்கும் முயற்சியில் தீவிரமாக சிந்தித்தாள் சங்கமித்ரா.
அவன் விரல் போகும் திசையெல்லாம், அவள் அறியாமலேயே அவள் உடல் வளைந்து நெளிய ஆரம்பித்தது.
அவன் எழுதி முடித்து, முற்றுப்புள்ளி வைத்ததும். இருள் தந்த தைரியத்தில், சங்கமித்ராவின் மென் இதழ்கள் விரிந்து சிரித்தது, விடை கண்ட மகிழ்ச்சியில்.
முற்றுப்புள்ளி வைத்தவனின் விரல்கள் அவள் முதுகை விட்டு அசையாமல் அதே இடத்தில் இருந்ததால், அவளின் மென் சிரிப்பில் உண்டான அதிர்வலைகளை உணர்ந்து ஆராவும் மென்னகை புரிந்தான்.
" என்ன மித்ரா கண்டுபிடிக்க முடியவில்லையா? எனது வெற்றியை நான் கொண்டாடிக் கொள்ளலாமா? " என்றவள் காதில் கிசுகிசுப்பாக கேட்டான்.
அவளின் தலை மறுப்பாக அசைந்தது.
" அப்படி என்றால் நான் என்ன எழுதினேன் என்பதைச் சொல். நிச்சயம் உனது பதில் தவறாகத்தான் இருக்கும்" என்றான் அவளைச் சீண்டியபடி .
எப்பொழுதும் தன்னை உள்ளிழுத்துக்கொள்ளும் அந்த இருள், இன்று தன்னை மிரட்டாதது கண்டு அதிசயத்தாள்.
ஆராவின் கேள்வியை சவால் போல எடுத்துக்கொண்டு, அவன் எழுதிய சொற்களின் அர்த்தத்தை உணராமல், சட்டென்று "அமுதசங்கமம்" என்றாள்.
இருளிலும் ஒளி பெற்ற ஆராவின் விழிகள், மயக்கம் கலந்த பளபளப்புடன் அவளைப் பாராட்டியது.
சுட்டு விரலோ மீண்டும் அவளது முதுகில் பரபரவென எழுதியது.
ஆரா தான் எழுதியது என்ன? என்று கேள்வி கேட்கும் முன்பே சங்கமித்ரா, "எப்பொழுது?" என்றாள்.
ஆரா, சட்டென்று அறையின் அனைத்து விளக்குகளையும் உயிர்பெறச் செய்துவிட்டு, "அதை நீ தான் சொல்ல வேண்டும், இந்த அமுதனின் சங்கமமே" என்றான்.
விளையாட்டாய் விடை தேடியவள், அவனின் வினாவில், விடை இல்லாமல், விழி விரித்து நின்றாள்.
சிறை எடுப்பாள்...

Last edited: