• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 26

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 26

"மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்று போற்றப்பட்ட இந்த நாட்டில் தான், மங்கையருக்கு மாபாதகமும் நடக்கின்றது.

காதல் வாழ்வு வாழ, வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். என் பிறப்பே ஒரு சாபம்தான். என் சாபத்தின் சாயல் உங்களுக்கு வேண்டாம் அமுதா. அமுத சங்கமமாய் நீங்கள் நினைப்பது உங்களுக்கு ஆலகால விஷமாய் மாறலாம்.

என்னுள் நீங்கள் தேட நினைக்கும் தேடல்கள் எல்லாம் புதைந்தது அல்ல. முற்றிலும் சிதைந்தது. சுக்கு நூறாய் உடைந்த கண்ணாடியில் என்றுமே முகம் பார்க்க முடியாது" என்றாள் அவனுக்கு தன் நிலையை புரிய வைக்கும் நோக்கில்.

சங்கமித்ராவின் முகத்தை தன் இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு, " ஒரு முகம் என்ன? நொறுங்கிய ஒவ்வொரு துகள்களிலும் உன் முகத்தை பிரதிபலிக்கச் செய்வேன் என் நேசத்தினால்.

தன்னைத் தாண்டுபவர்களையெல்லாம் கண்டு கொள்ளாத கற்பாறை, உடையவனின் விரல் பட்டதும், தன்னுள் ஒளிந்த சிற்பத்தை வெளிக் கொண்டு வரும்" என்றவன்,

தன் இரு விரல்களால் அவள் முக வடிவை அளந்து, " மாற்றம் ஒன்றே மாறாதது, என் காதல் சிற்பமே. உன் மனதை என்னை நோக்கி திசை திருப்பு. உன் வாழ்க்கையை திசை திருப்புவது என் பொறுப்பு " என்றான்.

தன் முகவடிவை அளந்து கொண்டிருந்த அவன் விரல்களைப் பிடித்துக் கொண்டாள். " கனலைக் கிளறுவதால் கனல் பெருகுமே தவிர காதல் வராது என் கணவனே" என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

தன்விரல்களைப் பிடித்துக் கொண்டவள் கையின் மீது தன் கன்னத்தை சாய்த்து, " காதல் என்ற வார்த்தையை இப்பொழுதுதான் உன் உதடுகள் உச்சரிக்கிறது. இனி உன் இதயமும் காதலை இசைக்கும். என் பிடிக்குள் உன்னை வைத்திருந்தேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது... " என்று கண்களால் அவள் கைகளுக்குள் சிறைப்பட்ட தன் கரத்தை காட்டினான்.

வராத வெட்கமெல்லாம் வண்டி கட்டி வரிசையாய் நிற்கத் தொடங்கியது சங்கமித்ராவின் வாசலில். சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்டு ஆராவை பார்க்க முடியாமல் திரும்பி நின்றாள்.

மெல்லிய விசில் அடித்து சிரிக்க ஆரம்பித்தான் ஆரா. "மாற்றம் வேண்டும் தான் மித்ரா. ஆனால் ஒரே இரவில் இல்லை. உன்னுடைய ஒரே முடிவில்" என்றான்.

அவன் புறம் திரும்பி, " பகலில் தோன்றும் நிலவை நம்பும் உங்கள் புத்திசாலித்தனத்திற்கு என் பாராட்டுக்கள் " என்று கூறிவிட்டு விறுவிறுவென தன்னறைக்கு விரைந்தாள்.

' நீ நிலவென்றால், நான் பூமியாகி, என்னை சுற்ற வைப்பேன். பகல் என்றால் என்ன? இரவு என்றால் என்ன? என் வட்டத்திற்குள் உன்னை நிற்க வைப்பேன்' என்று எண்ணியவன், தன் அடுத்த திட்டத்திற்கு தயாரானான்.

அதிகாலையில் எழுந்து தோட்டத்தில் தன் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு, சங்கமித்ரா திரும்பி வரும்போது, நாயகி அவளை நோக்கி வருவதும், பின் செல்வதுமாயிருக்க, நாயகியை தன்னருகில் வரும்படி சைகை செய்தாள் சங்கமித்ரா.

" என்னிடம் என்ன கேட்க வேண்டும் கேளுங்கள்" என்றாள்.

"இல்லை. உங்களிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று ஒரே யோசனையாக இருக்கிறது " என்றாள் நாயகி.

"பரவாயில்லை கேளுங்கள்" என்றாள்.

" நீங்கள்... உங்களுக்கும்... சாருக்கும் பெரிய பிரச்சனையா? சார் பற்றி யாரேனும் உங்களுக்கு தவறாகக் கூறி விட்டார்களா? அவர்கள் கூறியதை நம்பி நீங்கள் சாரை விலக்கி வைக்கிறீர்களா? ஒரு வேலைக்காரிக்கு இந்தப் பேச்சு அதிகம் தான்.

ஆனால் உண்ட வீட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் எனக்கு இல்லை. தேனம்மா அவர்கள் பேரனை பார்த்துக் கொள்வதற்காக எங்களை ஏற்பாடு செய்தார்கள். ஒரு குறையும் இல்லாமல் இதுவரை எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நன்றிக் கடன் என் உயிர் உள்ளளவும் இருக்கும்.

நீங்கள் மும்பைக்கு வரும் முன்னரே தேனம்மா உங்களை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி எங்கள் இருவரிடமும் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டார்கள். இந்த வீட்டில் நுழைந்த நாள் முதல் இன்று வரை உங்கள் இருவரையும் சுமூகமான சூழ்நிலையில் ஒரு நாளும் நாங்கள் பார்த்ததே இல்லை. புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான அன்யோனியம் ஒரு துளி கூட உங்களிடையே இல்லை.

எங்கள் சார் எந்த மாதிரியான சூழ்நிலையில் மும்பைக்கு வந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்றாள் நாயகி தைரியத்தை சேர்த்துக்கொண்டு.

கையைக் கட்டிக் கொண்டு, 'மேலும் சொல்!' என்பது போல் பார்த்தாள் சங்கமித்ரா.

" எங்க சாருடைய அம்மா, அப்பா இருவரும் அவருடைய சிறு வயதிலேயே ஒரு விபத்தில் ஒரு சேர இறந்து விட்டனர். தாயின் புடவையைப் பிடித்துக் கொண்டு அலையும் வயதில், கண் முன்னே இரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்ட தன் அன்னையை கட்டிக்கொண்டு அவர் அழுத காட்சியை இன்று வரை யாரும் மறக்கவில்லையாம். தன் முரட்டு தந்தையை விட, அன்பைப் பொழிந்த அன்னை இறந்ததில் அதிக வருத்தம் அவருக்கு.

அன்னையின் பொருட்களை எல்லாம் தன்னறையில் வைத்துக்கொண்டு உறங்காமல் தவிப்பாராம். தன்னை யாரும் பார்க்கவோ, தொடவிடவோ அவர் அனுமதிப்பதில்லை. தன்னிடம் யாரையும் நெருங்க விடாமல் இருந்தவரை, தேனம்மா மட்டும் தன்னுடைய முழு அன்பினால் சிறிது மாற்றி இருக்கிறார்கள்.

சிறு பாலகனாய் இருந்தபோது தேடிய தன் அன்னையின் தேடலை வளர்ந்த பிறகும் தன் மனதிற்குள்ளே வைத்திருந்திருக்கிறார். அந்த மனஅழுத்தத்தை யாரிடமும் அவர் வெளிக்காட்டவும் இல்லை.

முதலில் தன் தொழிலை அவர், அவருடைய பாட்டியின் ஊரில்தான் ஆரம்பித்தார். ஒரு முறை, ஒரு பெரிய திருமண வீட்டிற்கு தேனம்மா பாட்டியுடன், ஆரா சாரும் சென்று இருக்கிறார். மேடையில் தன் அன்னையின் சாயலில் ஒரு பெண்ணைக் கண்டதும், மதி கெட்டு, தன் அன்னை தானா? என்று சோதிக்க, புடவை நுனியைப் பிடித்து, அப்பெண்ணின் பின்னால் இருந்து முகர்ந்து பார்த்திருக்கிறார். என்னவோ ஏதோ என்று அப்பெண் திரும்பிய வேகத்தில், அவர் கீழே விழுந்து, அவர் மேல் ஆரா சாரும் விழுந்து விட அங்கே ஒரே ரசாபாசமாகிவிட்டது.

ஆரா சார் ஒரு பெண் பித்தன் என்று அங்கே முத்திரை குத்தப்பட்டு விட்டது. அவர்கள் சொந்தத்தில் இருந்து யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன் வரவில்லை. அனைவரின் முன்பும் ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டவன் எங்களுக்குத் தேவையில்லை என்று முடித்துக் கொண்டனர்.

ஆரா சாரும் கோபத்தில்,அவமானத்தில் தன்னை யாரிடமும் நிரூபிக்க முயலவில்லை. பெண்களுடன் அவர் பெயர் இணைத்து வெளிவருவதையோ, கிசுகிசுக்கப்படுவதையோ அவர் தடுக்கவில்லை.

தேனம்மா அவரை மாற்ற எவ்வளவோ முயல, அதற்குப் பிடி கொடுக்காமல், அவரது அன்புக்கு கட்டுப்பட முடியாமல், அங்கிருந்து அவர் மும்பை வந்து தன் தொழிலை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் மனதில் இன்றும் தன் அன்னையைத் தேடும் அந்த பாலகன் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான். நீங்கள் அவருக்கு ஓர் அன்னையாக மாறினால், அவரை அவரின் இயல்புக்கு திருப்பி விடலாம் எளிதாக.

இந்தக் கோபம் எல்லாம் அவர் போட்டுக் கொண்ட முகமூடி தான். நான் உங்களை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. அவரை விட்டு விடாதீர்கள் என்று தான் கேட்கிறேன். விஷயம் யார் மூலமாகவோ தெரிந்து நீங்கள் அவரை தவறாக நினைக்க கூடாது என்று தான்... " என்று இழுத்த நாயகியை, " இதுவரை எனக்குத் தெரியாது. நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றாள் சங்கமித்ரா.

அலுவலகத்திற்கு இருவரும் ஒன்றாகவே கிளம்பினர். ஆராவிற்குத் தந்த அதே வரவேற்பை சங்கமித்ராவிற்கும் வழங்கியது அந்த அலுவலகம். சிறு புன்னகையுடன் ஆரா அதை ஏற்றுக் கொண்டு முன்னே செல்ல, அவன் வேகத்திற்கு ஈடாக நிமிர்ந்த நடையுடன், அவனுடன் நடந்தாள் அவனின் சரிபாதி.

சிவாவிடமிருந்து அழைப்பு வரவே, அதனை ஏற்றுப் பேசிய ஆராவிற்கு சாராவின் அனைத்து திட்டங்களும் தெளிவாய் விளக்கப்பட்டது. நின்றபடியே தன் தொடையினைத் தட்டி, தலையாட்டிக் கொண்டே அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டான்.

அழைப்பு நின்றதும், தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு புயல் வேகத்தில் வெளியேறினான். மதிய உணவு இடைவேளை கடந்தும் ஆரா வராமல் இருக்கவே, வேலைகள் குறைந்திருக்க, அலைபேசி வாங்கிய நாளிலிருந்து யாருக்கும் அழைப்பு விடுக்காதவள், முதல் முறையாக, தேனம்மாவிற்கு அழைப்பு விடுத்தாள்.

" அட சங்கமித்ராவா? கொஞ்சம் காத்திரும்மா. வெளியில் ஏதாவது இடி, மின்னல், மழை வருகிறதா என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று நக்கல் செய்து தான் ஆராவின் பாட்டி என்பதை நிரூபித்தார்.

" ஆராவின் அம்மா எப்படி இருப்பார்கள்? " என்ற முதல் கேள்வியிலேயே அவரை வாயடைக்க வைத்தாள்.

ஏன்? என்று தேனம்மாவும் கேள்வி கேட்கவில்லை. எதற்கு? என்று சங்கமித்ராவும் விளக்கம் அளிக்கவில்லை.

சாதாரண அழைப்பை வீடியோ காலாக மாற்றி தேனம்மா ஆராவின் அறைக்குள் நுழைந்து, அவனது அன்னையின் புகைப்படங்களை காணொளியாகக் காட்டினார்.

அனைத்து புகைப்படங்களிலும் சிகப்பு சேலை, முல்லை மலர்ச் சரம், வைர வளையல்கள், காதோர வளையம், நெற்றியில் நீண்ட செந்தூரம் அவரின் அடையாளமாகக் காட்டப்பட்டது.

" செவ்வாய், வெள்ளிகளில் முருகனுக்கு பொங்கல் படைத்துவிட்டு, தன் மகனுக்கு ஊட்டி விட்ட பிறகுதான் வேறு வேலையே பார்ப்பாள். அவள் போன பிறகு எத்தனையோ முறை நான் ஊட்ட முயன்றும், என்னை தடுத்து விடுவான் உன் புருஷன். என்று உன் கைகளில் என் மருமகளின் வளையல்களைப் போன்ற வளையல்களை கண்டேனோ அன்றே எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. உன் புருஷனுக்கு பொங்கல் உன் கையால்தான்" என்று கூறி சிரித்தார் தேனம்மா.

"பொங்கல் தானே பாட்டி. தாராளமாக போட்டு விடலாம்" என்றாள்.

இதுவரை தன்னை உறவு முறை சொல்லி அழைக்காத சங்கமித்ரா பாட்டி என்று அழைத்ததும் உருகியது அந்த வயதான பெண்மணிக்கு. இதுவே நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறி என்பதைக் கண்டு கொண்ட அந்த அனுபவசாலி, " இருவரின் கடந்த கால கசப்புகளும் கடந்து, வரும் காலம் வசந்த காலமாய் மாறட்டும். எனக்கு கொடுத்த வாக்கை என்றும் மறக்காதே, என் பேரன் பொண்டாட்டியே " என்று மனதார வாழ்த்தி, இன்னும் சிறப்பாக வாழ்வு தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அந்தப் பிரபலமான ஹோட்டலின் பிரத்யோகமான பெண்கள் ஜிம்மிற்குள் நுழைந்தாயன் ஆரா. விதவிதமான கருவிகளில் தங்களின் உடல் எடையை குறைப்பதற்காக பெண்கள் கடும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் கூட்டத்தின் தலைவியான சாரா, ரோயிங் மிஷினில் அமர்ந்து கொண்டு, வலு போட்டு கயிறுகளை இழுத்துக் கொண்டு இருந்தாள். " ஜஸ்ட் மிஸ்! இல்லையென்றால் மொத்த புடவையும் கையில் வந்திருக்கும். அடுத்த தடவை பிட்டுத் துணி கூட மிச்சம் வைக்க மாட்டேன். ஆராவின் சாம்ராஜ்யத்திற்கு ஒரு பிச்சைக்காரி மகாராணி ஆகுவதா? காத்திருந்தவள் புருஷனை நேற்று வந்தவள் மடக்கிக் கொண்டு போவதா? பெற்றோர் இழந்த குழந்தைகளின் மீது அவனுக்கு இருக்கும் அனுதாபத்தை நான் சம்பாதித்துக் கொண்டு, ஒரு வழியாக திருமணத்திற்கு தயார் செய்தால், பெயரளவில் மனைவி என்றவள் உண்மையாக வந்து நிற்கிறாள். அவளைப் பார்த்த முதல் நாளே அவளை கண்டம் துண்டமாக்கி இருக்க வேண்டும். இனியும் விட்டு வைக்க இந்த சாரா என்ன முட்டாளா? என் மீது கை வைத்தவளின் கதி அதோ கதிதான்" என்று கருவினாள்.

ஆராவின் செவியில் விழுந்த செய்தி தந்த சினத்துடன் நுழைந்தவனின் சீற்றமான பார்வையில் அனைத்து பெண்களும் வெளியேறினர்.

சாரா மட்டும் எந்தவித பயமும் இன்றி, முழு வேகத்துடன் கைகளில் இருந்த கயிற்றினை இழுத்துக் கொண்டிருந்தாள்.

நொடியில் அவள் கையில் இருந்த கயிற்றை தன் கைகளில் மாற்றி அவள் கழுத்தை நோக்கி அழுத்தினான் ஆரா. உயிர் பயம் கண்களில் தெரிந்தாலும், பழி உணர்ச்சியில் தன் கைகளினால் ஆராவை அடிக்க ஆரம்பித்தாள் சாரா.

தன் ஒற்றை காலை அந்தக் கருவியின் மீது வைத்து "ஏன்?" கேட்டான் அமர்த்தலாக .

"எனக்கு நீ வேண்டும்" என்றாள் கண்களில் வெறியுடன்.

" எனக்கு நீ வேண்டாம் " என்றான் நிதானமாக.

" என்ன இல்லை என்னிடம்? அழகு, பணம்.... அந்த பிச்சைக்காரியிடம் எதைப் பார்த்து மயங்கினாய்?"

" எத்தனை தூரம் வளைத்தாலும் வளைக்க முடியாத பெண் என்ற திமிர்! அத்தனை அழகு மிஸஸ் ஆரவமுதன்" என்றான் நேசம் ஊறும் விழிகளுடன்.

"ஆரா..." என்று கத்திய சாரா, ஆராவின் கைகள் தந்த அழுத்தத்தில், கயிறுகள் இறுக்கிய வேகத்தில் மூச்சிழுக்க தத்தளித்தாள்.

" நீ சங்கமித்ராவின் திசைப் பக்கம் திரும்பினாலும் உன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. ஏமாற்றியது உனது குற்றம் என்றாலும், உனது செய்கைகளை உண்மை என்று நம்பியது எனது குற்றமுமே. அதனால் இந்த முறை நீ பிழைத்தாய். ஆராவின் வாழ்வில் உனது பக்கங்கள் எல்லாம் கிழித்து எறியப்பட்டு விட்டன.

இனியும் என்னோடு விளையாடுவாயா? " என்று அறை அதிரச் சிரித்தவனின் அரக்கத் தோற்றம் அவளின் காதல் மாயையை விரட்டி அடித்தது.

உயிர் போகும் வலியில், வார்த்தைகள் வெளிவர முடியாமல் தலையசைத்து, "இல்லை " என்று அவனுக்கு பதில் அளித்தாள்.

தன் கைகளில் இருந்த கயிற்றை விடுவித்தான். வேகமாக தன் கைவிரல்கள் கொண்டு அழுத்தத்தை சரி செய்தாள் சாரா.

" அப்புறம் சாரா. இனி நீ எங்களுக்கு எதிராக எந்த ஒரு அடி எடுத்து வைத்தாலும் அது உனக்கு மரண அடியாக இருக்கும். ஏனென்றால் உன் சதித்திட்டங்களை வாக்குமூலமாக கொடுத்து விட்டனர் என் அலுவலகத்தில் பணியாற்றிய உன் கைக்கூலிகள். நீ போலியாக தொடங்கிய அந்த ஆசிரமம் மேல் வழக்கு பதிந்தாகி விட்டது. அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் உன் தந்தையின் தொழிற்சாலை பற்றி வழக்கு தொடுத்தால் மொத்தம் சொத்தும் இழந்து நிமிடத்தில் நடுத்தெருவிற்கு வந்து விடுவீர்கள். மேடத்திற்கு வசதி எப்படி? " என்றான்.

தன் சுயம் வெளிப்பட்டதில், எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி,
ஆத்திரத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளின் முகத்தை தன் கை கொண்டு திருப்பி, " குட் பை! ரைட்..." என்றான் அழுத்தத்துடன். அவனின் 'ரைட்' என்ற வார்த்தைக்கு உள்ளம் பதறினாலும், இனி அவனை ஏமாற்ற முடியாது என்று தெரிந்து அமைதியாக இருந்தாள்.

அவன் வெளியேறியதும் மடமடவென சாராவின் தோழிகள் உள்ளே நுழைந்தனர். நடந்ததைப் பற்றி சாராவிடம் கேட்க, ஸ்டைலாக தோளைக் குலுக்கி, "பச்... அவனின் வாழ்வு அந்த பிச்சைக்காரியுடன் தான் " என்று உதடு சுளித்தாள்.

அதற்கு மேல் அவளிடம் கேட்கப் பயந்து தோழிகள் கூட்டமும் அமைதியாகியது. அவர்கள் தான், ஒரு ஓரமாக, கண்ணாடி வழியாக உள்ளே நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தார்களே. அதைப்பற்றி கேட்டால் அவள் இருக்கும் ஆத்திரத்தில், தங்களை கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

தன் கண்களை மறைத்திருந்த மாயை விலகியதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு எழுந்தது அவனுக்கு. சங்கமித்ரா தன் வாழ்வில் நுழையாமல் இருந்திருந்தால், சாராவுடன் ஆன வாழ்க்கை என்ன மாதிரி இருந்திருக்கும் என்று அவனால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

சங்கமித்ராவை நினைத்ததும் ஆராவின் இதழ்களில் கர்வப் புன்னகை ஒட்டிக்கொண்டது.

வெளியில் வந்த ஆராவை சிவா எதிர்கொண்டான். "இந்த நச்சுப் பாம்புடன் இத்தனை நாள் பழக்கம் வைத்திருந்திருக்கிறாயே. இப்பொழுதாவது உண்மை தெரிந்தது. அது மட்டும் சந்தோஷம். ஆனால் நீ அப்படியே விட்டுவிட்டு வந்திருக்கக் கூடாது ஆரா.

என் பாப்பாவை என்ன செய்ய நினைத்தாள். பாப்பா இருந்த இடத்தில் வேறு பெண்கள் இருந்திருந்தால் அவ்வளவுதான். என்ன இருந்தாலும் நீ அதிர்ஷ்டசாலி மச்சி" என்றான் சிவா.

"போதும்டா உன் பாப்பா சோப்பு"

" இருடா என் பாப்பாவிடம் சொல்லி வைக்கிறேன் ஆப்பு "
என்று நக்கல் அடித்தபடியே நண்பர்கள் வெளியேறினார்கள்.

இரவு உணவிற்கு வீட்டிற்கு வந்து உணவருந்த அமர்ந்தான் ஆரா. தொடர் அலைச்சல் காரணமாக கண்மூடி நாற்காலையில் சாய்ந்திருந்தான்.

முல்லைப் பூ வாசம் நாசியை நிரட, மெல்ல கண் விழித்துப் பார்த்தான். உணவுத் தட்டில் பரிமாறும் கைகள் அணிந்திருந்த வைர வளையல்கள் நங்... நங்... என்று சத்தம் எழுப்ப, மனம் கொண்ட ஆனந்தத்தில் பரிமாறும் நபரை திரும்பிப் பார்த்தான்.

முல்லைச் சரம் இருபுறமும் வழிய, சிகப்பு சேலையில், காதில் மாட்டிய வளையத்துடன், நெற்றியில் நீண்ட செந்தூரப் பொட்டுடன் சங்கமித்ராவைக் கண்டதும், அதிர்ந்தான். எழுந்தான். நின்றான்.

சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
சாராவையே சாய்த்து விட்டான், தன் மித்ராவிற்காக 😎😎😎

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ரகம் தான் சாரா போல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆராவிற்குள் இப்படியொரு தாயை தேடும் சிறுவனா 😢😢😢 அவன் தாயே அவனுக்கு தாரமாய் வரமாய் 🥰🥰🥰

சங்கமித்ராவின் மாற்றம் நிஜம் தானா அல்லது ஆராவிற்காகவா 🤔🤔🤔
 
Tamil elakkiyam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 1, 2022
9
2
3
Karaikudi

அருமை சகோ