• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 27

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 27

சங்கமித்ரா தன் கண் அசைவில் ஆராவை இருக்கையில் அமர்ந்து உண்ணும்படி சமிக்கை செய்தாள்.

தலையசைத்துக் கொண்டே சிமிட்டா இமைகளுடன் அமைதியாக அமர்ந்தான். அவள் கை வளையல்கள் குலுங்கும் சத்தத்துடன் உணவைப் பரிமாற, அவன் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் கொப்பளிக்கத் தொடங்கின.

புடவையை இழுத்து வாசம் பார்க்கத் துடித்த தன் கையை அடக்குவதற்குள் ஆராவிற்கு பெரும்பாடாகிவிட்டது. ஆராவின் கைக்குள் இட்லி, சட்னியுடனும், சாம்பாருடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.

அவனின் கை நரம்புகள் முறுக்கிக் கொண்டு, அவனுடைய புஜத்தின் தசைநார்கள் இறுகத் தொடங்கின. கையில் இருந்த பாத்திரத்தை உணவு மேஜையில் வைத்த சங்கமித்ரா, இறுகிய அவன் புஜத்தில் இரண்டு தட்டுத் தட்டி, "சாப்பிடுங்கள் அமுதா!" என்றாள் சாந்தமாக.

அவன் கையை மீறி உணவு வாய்க்குள் செல்வேனா என்று அடம்பிடித்தது. நேரம் செல்லச் செல்ல அமைதி ஆத்திரமாக மாறத் தொடங்கியது ஆராவுக்கு. மனதில் புதைந்த நினைவுகள் எல்லாம் கிளர்ந்து எழத் தொடங்கின. தன் முக மாற்றத்தை அவள் கவனிக்கக் கூடாது என்று தலைகுனிந்தே அமர்ந்திருந்தான் .

" அமுதா, நீங்கள்தானே சொன்னீர்கள், உணர்வுகள் பொதுவானது என்று. எந்தன் உணர்வுகளை பகடைக்காயாய் மாற்றி என்னை வென்றீர்களே! எனக்கும் இப்படித்தான் வலித்தது. உயிரை அதன் வேரோடு அறுத்து தூர எறிந்தது. மரணத்தில் கூட அத்தனை வலி இருந்திருக்காது. வாழ்க்கை எனக்கு ஒரு வலியை பரிசளித்திருக்கிறது என்றால், உங்களுக்கும் ஒரு வலியை பரிசளித்திருக்கிறது. எந்தன் வலியை உங்களின் வெற்றியின் வழியாய் நீங்கள் மாற்றும்போது அதையே நான் ஏன் செய்யக்கூடாது? " என்று நிறுத்தி நிதானமாக தன் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

ஆராவின் மனதில் கோபம், ஆத்திரம், மூர்க்கம், வன்மம் தலை தூக்க, தன் தலையை நிமிர்த்தாமலேயே, கோபத்தில் வலது கையால் உணவு மேசையில் இருந்த பாத்திரங்களை எல்லாம் தட்டி விட்டான்.

உணவோடு சேர்ந்த பாத்திரங்கள் எல்லாம் திசைக்கு ஒன்றாக உருண்டு சிதறியது. தட்டிவிட்டும் ஆத்திரமடங்காமல் கையினை மடக்கிக் கொண்டு உணவு மேசையில் குத்திக் கொண்டே இருந்தான்.

உணவு மேஜையின் மீது மிச்சம் மீதி இருந்த பாத்திரங்கள் எல்லாம், நிலநடுக்கத்தில் நடுங்குவது போல் அதிர்ந்து கொண்டிருந்தன.

பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதும் ஓடி வந்த நல்லான் மற்றும் அவன் மனைவி நாயகியை, தலையசைத்து வராமல் தடுத்து, அவர்களை திரும்பிப் போகும்படி சைகை செய்தாள் சங்கமித்ரா.

அதையும் மீறி ஓரடி எடுத்து வைத்த நல்லானை, சங்கமித்ராவின் உறுத்தும் விழிப் பார்வை பின்னடையச் செய்தது.

நாயகி நல்லானின் கரத்தைப் பிடித்து, அவனை இழுத்துக் கொண்டு வீட்டின் பின்னே இருக்கும் தங்கள் குடியிருப்புக்குள் சென்றாள்.

அவர்கள் இருவரும் வெளியேறியதை உறுதி செய்து கொண்ட சங்கமித்ரா, ஆராவின் குத்தும் கைகளுக்கு அடியில் தன் உள்ளங்கையை நகர்த்தினாள். ஆத்திரத்தில் இரண்டு குத்து குத்திய அவன், பின் தன் வேகத்தை குறைத்து நிறுத்தினான். ஆனாலும் குனிந்த தலை நிமிரவே இல்லை.

மெல்லத் தன் கரத்தினால் ஆராவின் நாடியைப் பற்றி முகத்தை நிமிர்த்தினாள். அந்த முரட்டுக் குழந்தையோ, தன் முகத்தை காட்டப் பிடிக்காமல் முரண்டு பிடித்தது.

"உங்களை காயப்படுத்த நான் நினைக்கவில்லை. உங்கள் காயத்தை ஆற்ற முயற்சி செய்து பார்க்கிறேன். காதலன்பு எப்படி இருக்கும் என்று தெரியாது அமுதா. ஆனால் தாயன்பு எப்படி இருக்கும் என்று அதன் எல்லை வரை எனக்குத் தெரியும்.

யார் வழியிலும் குறுக்கிட்டு எனக்கு பழக்கம் இல்லை. ஏனோ உங்களை யாரோ என்று என்னால் கடக்க முடியவில்லை. எனக்கு இருள் தந்த காயத்தை மாயம் செய்தவர் நீங்கள். என்னால் முடிந்த சிறு முயற்சி. சரி பிடிக்கவில்லை என்றால் ஒன்றும் இல்லை. எந்தன் முயற்சிக்கான பிரதிபலிப்பு உங்களிடம் இல்லாத போது உங்களின் அன்பளிப்பும் எனக்குத் தேவையில்லை" என்று கைகளில் இருந்து அவன் அணிவித்த வைர வளையல்களைக் கழற்ற முயன்றாள்.

ஆராவின் கரம் சட்டென்று சங்கமித்ராவின் கைகளைப் பற்றிக் கொண்டது. மெல்ல தன் தலையை நிமிர்த்தினான் ஆராவமுதன். ரத்தமெனச் சிவந்த கண்கள், அவன் கொண்ட துயரத்தை, வலியை பறைசாற்றியது.

அவன் கலங்கிய கண்களைப் பார்த்ததும் சங்கமித்ராவின் மனம் பிசைய ஆரம்பித்தது. பெண்மை கொண்ட தாய்மையுடன், தான் நின்ற நிலையிலேயே, இருக்கையில் அமர்ந்திருந்த அவனை தன் வயிற்றோடு இறுக அணைத்துக் கொண்டாள்.

புயல் காற்றின் வேகத்தோடு, அவனும் அவளோடு ஐக்கியமாகி இறுக்க அணைத்துக் கொண்டான். சங்கமித்ராவின் கைகள் அவளையும் மீறி பரிவாக அவன் தலையை கோத ஆரம்பித்தது. நிமிடங்கள் கடந்தும் அவன் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவனை தன்னிலிருந்து பிரிக்க முயன்றாள்.

விடாக்கண்டன் அவள் முயற்சியை தோற்கடித்துக் கொண்டே இருந்தான். "அமுதா..." என்று அமைதியாக அழைத்தாள். அவன் தலை மறுப்பாக அசைந்தது அவள் வயிற்றோடு.

"அமுதா..." என்றவள் அழுத்தமாக அழைத்ததும், மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தான். தன் அன்னையின் வடிவாய் நிற்கும் அவளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை ஆராவுக்கு.

அமர்ந்திருந்த நாற்காலியை அவன் பின்னே தள்ளிய வேகத்தில் ஆறடி தள்ளி விழுந்தது நாற்காலி. வேங்கை கொண்ட வேகத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் நிமிர்ந்து கைகட்டி நின்றாள் சங்கமித்ரா.

ஆராவின் கைகள் ஆசையாக அவள் காது வளையத்தை நிரடியது. நெற்றியில் நீண்ட செந்தூரத்தில் அவன் விரலும் பயணம் செய்து அவள் உச்சியை அடைந்தது. தட்டி விட தன் கைகளை உயர்த்திய சங்கமித்ராவின் கைகளை பற்றிக்கொண்டு, வைர வளையல்களை இன்னிசை இசைக்க வைத்தான்.
சங்கமித்ராவின் தோளைப் பற்றிய ஆராவின் கைகள் மெல்ல நகர்ந்து அவள் மெல்லிடையில் சொருகி இருந்த புடவை நுனியை எடுத்து, நாசியில் வைக்க, சுகந்தமாய் வாசம் பிடித்தான். தாயின் புடவை தரும் தெய்வீக வாசனையோடு, மனதை மயக்கும் வாசனையும் கலந்திருப்பதைக் கண்டு புது வித சுகந்தத்தில் மயங்கி நின்றான்.

" இத்தனை நாள் என்னை ஏங்க வைத்து எங்கே இருந்தாய் மித்ராம்மா?" கரகரப்பான குரலுடன் காதில் கிசுகிசுத்தான்.

'மித்திரை' என்ற சொல்லுக்கு அன்பால் அடிபணிந்து நிற்பது போல், 'மித்ராம்மா' என்ற சொல்லுக்கும் தன் மனம் குழைந்து நிற்பதைக் கண்டு அதிர்வதா? இல்லை ஆனந்தப்படுவதா? என்ற குழப்பத்தில் நின்றாள் சங்கமித்ரா.

தன் கை சேர்ந்த சொர்கத்தை, தன் கை வளைவில் வைத்துக் கொண்டு மூச்சடைக்க நின்றவன், மனம் கொண்ட பேராசையில் கைகள் நடுங்க அவளை அணைத்துக் கொண்டான்.

அவன் செயலை மறுக்காமல், அவனுக்கு உடன்பட்டு அமைதியாய் நின்றாள் சங்கமித்ரா. அவன் எதிர்பார்க்கும் தாய்மைப் பாசத்தை அள்ள அள்ளக் குறையாமல் கொடுக்க முடிந்த அவளால், அடுத்த நிலை செல்லும் வழியில் கால் எடுத்து வைக்க முடியவில்லை.

மனம் நிறைந்த மகிழ்வுடன் நிமிர்ந்த ஆராவின் சட்டையில் இருந்த பேனாவில் சிக்கிக்கொண்ட சங்கமித்ராவின் பொன் தாலியும் மாட்டிக் கொண்டு வெளியே வர, 'என் பந்தம்' என்ற உரிமை உணர்வுடன் ஆராவின் விழிகள் சங்கமித்ராவை ரசிக்க ஆரம்பித்தது.

அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு மாடிப்படி ஏறியவன், அவள் நெற்றியின் செந்தூரத்திற்கு முத்தமிட்டான். காது வளையத்தோடு உதடுகளை உறவாட விட்டான். கை வளையல்களோடு இதழ் யுத்தத்தை நடத்தி முடித்தான். தான் யார்? சங்கமித்ரா யார்? என்பதெல்லாம் மறந்து அவளுள் புதையத் துடித்தான்.

அவன் எண்ணங்கள் புரிந்தது. அவன் தேவைகள் புரிந்தது. அவனுள் ஏற்பட்ட மாற்றமும் புரிந்தது. அவன் தன் பெண்மையை மதிப்பதும் புரிந்தது. அவனின் உணர்வுகள் தன்னில் பிரதிபலிக்காததை நன்கு உணர்ந்தாள். ஏனோ அவள் உணர்வுகளின் வாசல் கதவு மட்டும் பூட்டியே இருந்தது. எனினும் விதியின் வழியில் தன் வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முயன்றாள்.

சங்கமித்ராவை அழைத்து வந்த ஆராவின் அறை இருளைப் பூசி இருந்தும், நடுக்கமும், தயக்கமும் இன்று இல்லை அவளுக்கு. சங்கமித்ராவை படுக்கையில் கிடத்தி, அவள் முகம் நோக்கி குனிந்த ஆராவிற்கு, அவளின் உயிர்ப்பற்ற நிலை எதையோ உணர்த்தியது.

அவளிலிருந்து விலகி தன் தலையை இரு கரங்களாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்தான். நேரம் சென்றும் எதுவும் நிகழாமல் இருக்க, படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சங்கமித்ரா.

ஆராவின் வரி வடிவம், அவன் முதுகைத் திருப்பி அமர்ந்திருப்பதைக் காட்டியது. ஆர்வமாக வந்தவனின் உணர்வுகள் வடியக் காரணத்தைக் கேட்கத் தயங்கி, மெல்ல அவன் அருகில் நகர்ந்து வந்தாள்.

அவன் முதுகில் தன் தளிர் விரல்கள் படர, 'ஏன்?' என்று எழுதினாள்.

இறுக்கம் தளர்ந்தவனின் இதழ்களில் மெல்ல புன்னகை தவழ்ந்தது. "விடை தெரிந்து கொண்டே வினா கேட்டால் எப்படி?" என்றான்.

மீண்டும் அவன் முதுகில், "நானா?" என்று எழுதினாள்.

" எனக்கு, தனக்குள் வீழ்ந்த சங்கமித்ரா வேண்டாம். என்னை, தனக்குள் வீழ்த்தும் சங்கமித்ரா தான் வேண்டும்" என்றான் இதழ் கொள்ளாப் புன்னகையுடன்.

" என் பாதை இதோடு நின்று விட்டது. என் முன்னே இருக்கும் தடுப்பைத் தாண்ட எனக்கு விருப்பம் இல்லை" என்றவள் எழுந்து தன்னறைக்குப் போக முயன்றாள்.

சங்கமித்ராவின் கைகளை இழுத்து தன்னருகே படுக்க வைத்துக் கொண்டவன், அவளின் கைகளை தன் கையோடு பின்னிக் கொண்டு, " கட்டிடம் கட்டுபவனிடம், கட்டுமானப் பொருட்கள் ஏகப்பட்டவை கைவசம் இருக்கிறது" என்றான்.

" புரியவில்லை" என்றாள்.

"அதான் மித்ரா. உன் பாதையைத் தடுக்கும் அந்த தடுப்புச் சுவற்றை கடப்பாரை, புல்டோசர், பொக்லைன் கொண்டு தகர்த்து விடுவேன்" என்று சிரிக்காமல் சொன்னான்.

கேட்டுக் கொண்டிருந்தவளின் இதழ்களில் புன்னகைப் பூக்கள் பூக்க ஆரம்பித்தது.

" நீ என்னை முழுவதும் நம்புகிறாயா மித்ரா? " என்றான் வார்த்தைகளில் கூர்மைத் தீட்டி.

இருளோடு சங்கமித்ராவின் மௌனமும் தொடர்ந்தது.

அவளின் கைகளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, " நீ என்னை முழுதாய் நம்பும்போது, உன் கண்களில் என் நேசம் பிரதிபலிக்கும் போது, உன் உள்ளம் என்னை ஏற்றுக் கொண்ட வேளையில், இந்தக் கட்டடக்கலை மன்னனுக்குள் ஒளிந்திருக்கும் காதல் மன்னன் வெளி வருவான். அவனிடம் சரணடையத் தயாராக இரு என் மகாராணியே" என்றவன் அவள் கைகளோடு தன் கைகள் கோர்த்த நிம்மதியில் இதமாய் உறங்கத் தொடங்கினான்.

அன்னையின் கைகளைப் பற்றிக் கொண்டு உறங்கும் பாலகன் போல், கண்மூடித் துயில் கொள்ளும் ஆராவின் மீது சங்கமித்ராவுக்கு பாவமும், பாசமும் ஒருங்கே தோன்றியது. நினைவு தெரிந்த நாள் முதலாய் தன்னை துரத்திய இருட்டை, விரட்டிய நன்றி உணர்வில் அவன் பிடியில் இருந்து ஒரு கையினை மெல்ல உருவி, அவன் கைகள் மேல் தட்டிக் கொடுத்துக்கொண்டே கண்ணயர்ந்தாள்.

அவள் கைகள் இயல்பு போல் அவனைத் தீண்டுவதை உணர மறந்தாள். ஆனால் உடையவன் அதை உணர்ந்தே இருந்தான்.

மறுநாள் மும்பை ஓபராய் ஹோட்டலில் ஒரு முக்கியமான மீட்டிங் நடைபெறுவதால், ஆராவும், சங்கமித்ராவும் இணைந்து சென்றனர். கிளம்புவதற்கு முன் சங்கமித்ராவை ஆவலோடு பார்த்த ஆராவின் முகம், எப்பொழுதும் போல் தனது உடையில் வந்தவளைக் கண்டு முகம் சுருங்கியது.

ஏனோ அந்த சுருங்கிய முகத்தை மலரச் செய்ய வேண்டும் என்று நினைத்த சங்கமித்ரா, தனது அறைக்குள் சென்று ஆராவின், 'மித்ராம்மா' வடிவில் வெளியில் வந்தாள்.

ஆரா பளீரிட்ட முகத்துடன், உல்லாசமாக காரைக் கிளப்பினான். ஓபராய் ஹோட்டலின் வரவேற்பு அறைக்குள் நுழையும் போது, கம்பீரமாக அவள் கைகளை, தன் கைகளோடு சேர்த்துக் கொண்டான். கிடைத்த சந்தர்ப்பத்தில் சங்கமித்ரா நாசூக்காக அவன் கைகளை விலக்கிக் கொண்டாள். உள்ளூர ஆரா வருந்தினாலும், சங்கமித்ரா உடன் வருவது அவனுக்கு உற்சாகமாகவே இருந்தது.

மீட்டிங் நடக்கும் தளத்திற்கு செல்வதற்காக லிப்ட்டிற்குள் நுழைந்தனர். இரண்டாவது தளத்தில் ஏறிய நபருக்காக இடம் கொடுக்கும் பொருட்டு, எதேச்சையாக திரும்பிய சங்கமித்ராவின் பார்வையில் விழுந்தான் ஆதிஷ் குப்தா. அவன் பார்வை, ஆராவிடம் தொடங்கி சங்கமித்ராவிடம் வந்து, அவளை கேவலமாய் குற்றம் சாட்டியது.

லிப்டில் அவர்களைத் தவிர, வேறு யாரும் இல்லை என்பதைக் கண்டு கொண்டவள் தன் முழு உருவத்திற்கும் நிமர்ந்தாள். "அமுதா! ஒரு குழந்தைக்கு அவள் தந்தையின் பெயரை மறைத்து, சொல்லாமலேயே ஒரு தாய் வளர்த்திருக்கிறார் என்றால், யார் மீது தவறு? தாயா? தந்தையா?" என்றாள் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து.

" ஒரு குழந்தைக்கு தந்தையாக அறிமுகப்படுத்த முடியாத நடத்தை கொண்ட அந்த தந்தை மீதுதான் தவறு இருக்க முடியும்" என்றவன் அப்பொழுதுதான் எதிரில் நின்றவனை அளவெடுத்தான்.

ஆதிஷின் முகம் கருத்து சுருங்கியது. அவனை அறிமுகப்படுத்தாமலேயே அவன் யார் என்று அறிந்து கொண்டான் ஆரா.

சங்கமித்ராவை தரம் குறைத்து பேசும் நோக்கில், ஆதிஷ் ஆராவை பார்த்து, "இவள்..." என்று தொடங்க, "ஷ்.... நோ... மரியாதை! ஷி இஸ் மை லேடி. மிஸஸ் ஆராவமுதன். ரைட்" என்றவனின் கைகள் தன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டது.

தன்மானம் காத்த மன்னவனின் மார்பில் பெருமையுடன் சாய்ந்தாள் சங்கமித்ரா உறவும், உரிமையும் தந்த கர்வத்தில். அவர்களின் நெருக்கத்தில், திடீரென்று அவளைப் பார்த்த அதிர்ச்சியில், வாயடைத்துப் போனான் ஆதிஷ்.

லிப்டிலிருந்து வெளியேறும் போது விசிட்டிங் கார்டை தவறவிடுவது போல் லிப்டிற்குள் வேண்டுமென்றே போட்டுச் சென்றான் ஆரா. ஆதிஷ் அதை கவனத்துடன் எடுத்துக் கொண்டான்.

அவர்களைப் பின்தொடர்ந்த ஆதிஷ் ஆராவின் பண பலத்தை அறிந்து கொண்டான். அவன் மனதிற்குள் பல வகையான திட்டங்கள் உருவாக ஆரம்பித்தது. தன் கையை மீறிச் சென்ற சங்கமித்ராவை பழிவாங்கும் வன்மம் தலை தூக்கியது.

ஆதிஷ் சங்கமித்ராவை எளிதில் நெருங்காதபடி, அவளை தன் பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்துக் கொண்டான் ஆரா. தன் அன்னையின் அழிவிற்கு முழு காரணமானவனை ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் உள்ளுக்குள் தவிக்க ஆரம்பித்தாள் சங்கமித்ரா.

மீட்டிங் முடிந்து, பஃபே முறையில் உணவு எடுத்துக் கொள்ளும் போது, ஆரா சில தொழில்முறை நண்பர்களுடன் நின்று கொள்ள வேண்டிய இருந்தது.

தனித்து விடப்பட்ட சங்கமித்ராவை நெருங்கினான் ஆதிஷ். தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் தட்டில் இருந்த உணவை நிதானமாக உண்டு கொண்டிருந்தாள் சங்கமித்ரா.

"என்ன? சோனாவிற்கு குழி தோண்டி விட்டு தந்திரமாக தப்பித்து விட்டாயா? இந்த மும்பை முழுவதும் உன்னை தேடி அலைந்தேன். குப்பையாக இருப்பாய் என்று நினைத்தேன். நீ கோபுரத்தில் ஏறி அமர்ந்திருக்கிறாய். அதுவும் எனக்கு ஒரு வகையில் வசதி தான்.

உன் பிறப்பை பற்றிச் சொன்னால், இல்லை இல்லை உன் தாயைப் பற்றி சொன்னால் போதும், உன்னை கரம் பிடித்தவன் காரி உமிழ்ந்து விட்டுச் சென்று விடுவான். சொல்லட்டுமா?" என்று சங்கமித்ராவை பயமுறுத்திப் பார்த்தது அந்த ஆதிஷ் என்னும் சுயநலப் பேய்.

சங்கமித்ராவின் கைகள் முள் கரண்டியால் மெதுவாக உணவைக் கிளறி, ரசித்து உண்டது.

"ஏய்! உன் கழுத்தை நெரிக்கும் ஆத்திரம் எனக்கு வருகிறது. எத்தனை பொய்களைச் சொல்லி இவனை திருமணம் செய்து கொண்டாய். பரவாயில்லை உன் அன்னையை விட உனக்கு சாமர்த்தியம் அதிகம் தான். அவள் பல பேருடன் சம்பாதித்ததை நீ ஒருவனிடமே சம்பாதித்து விடுகிறாய்" என்றான் நக்கல் குரலில்.

சங்கமித்ரா கையில் வைத்திருந்த முள் கரண்டியை, முழு வேகத்தோடு ஆதிஷின் பாதம் நோக்கி குறிபார்த்து எறிந்தாள். வலியில் கத்தி, குனிந்து கால் சதையோடு இறங்கி இருந்த முள் கரண்டியை, எடுத்துவிட்டு, இரத்தம் கசியும் கால்களை உதறி, தன்னை சமன் செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

சங்கமித்ரா தன் கைகளில் மற்றுமொரு முன்கரண்டியை வைத்து லாவகமாக சுற்றிக் கொண்டிருந்தாள். ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான், அடிபட்ட கருநாகமாய் ஆதிஷ்.

ஆராவின் அருகே வந்ததும் சங்கமித்ரா, "அமுதா அது..." என்றவளை நிறுத்தி, "ஆதிஷ் குப்தா. ரைட்..." என்றான்.

தன்னவனின் புரிதல் தந்த பூரிப்பில் சிரித்தாள். அவனை சிறை எடுத்தாள்...

சிறை எடுப்பாள்...
 
Tamil elakkiyam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 1, 2022
9
2
3
Karaikudi

அருமை சகோ இவங்க ரெண்டு பேருடைய புரிதல் வேற லெவல்
 
Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஆராவின் கண்ணில் பட்டு விட்டாயே முட்டாள் ஆதீஷ் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இனி உனக்கு என்ன நிகழுமோ 🤭🤭🤭 ஆனால் பெரிய பூகம்பமே காத்திருக்கின்றது என்று நினைக்கின்றேன் 😜😜😜

அவள் பயத்தையும் இறுக்கத்தையும் உடைத்தவனால், அவள் மனதை உடைத்து உணர்வை தட்டி எழுப்புவது ஒன்றும் கஷ்டமல்லவே 😎😎😎 ஆராவால் முடியாதது ஒன்றுண்டோ 😜😜😜