• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 4

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 4

"ஏந்தாயி இப்படி ஏங்கிபோய் கேட்குறே.. மனச கொல்லாத தாயி.. இப்போ என்ன உன்னை நான் அதிதின்னு கூப்பிடனும் அதுதானே.. அதுக்கு எதுக்கு சாமி இப்படி ஏங்கற.. அப்படியே கூப்பிடறேன் தா.. ஆனா உன்னை போல ஒரு பெண் எங்க தம்பிக்கு கிடைக்கனும்னு இருந்திருக்கு.. அது தான் அவரோட கல்யாணம் தள்ளி போய் இருக்கு.. மனசு நிறைவா இருக்கு தா.. சரி நீ போய் எதாவது வேலை இருந்தா பாரு.. நான் சமைச்சிட்டு கூப்பிடறேன்.." என்றவர் விறுவிறுவென சமைக்க ஆரம்பித்தார்.

அவரின் சுறுசுறுப்பில் இத்தனை நாள் இல்லாத சந்தோஷம் இருந்தது.

அவரிடம் இருந்து வெளியே வந்த அதிதி அமர்நாத்தின் அறைக்கு முன் நின்று கதவை தட்டினாள்.

அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தவளின் பார்வையில் மடியில் லேப்டாப்புடன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து வேலை பார்த்த அமர்நாத் தெரிந்தான்.

அவளை கண்டதும் பார்வையில் வினாவுடன், "சொல்லு அதிதி.." என்றான் கேள்வியாய்.

" தேங்க்ஸ் சார்.. " என்றாள் பொதுவாய்.

எதற்கு என்று வினாவுடன் அவளை பார்த்தான்.

"அது இல்லைங்க சார்.. வசந்தா அம்மாகிட்ட எனக்கு பிடிச்ச மாறி சமைக்க சொல்றீந்தங்களே அதுக்கு தான் சார்.." என்றாள் சந்தோஷமான முகத்துடன்.

அவளின் சந்தோஷம் அவனையும் தேற்றி கொண்டது போல் சிரித்தவன், "இந்த வீட்டை விட்டு நீ போற வரைக்கும் இங்கே நீ சுதந்திரமா இருக்கலாம் அதிதி.. அதுக்கு உனக்கு யாரோட அனுமதியும் தேவையில்லை சரியா.." என்றவனின் பதிலுக்கு சந்தோஷமாய் தலையாட்டியவள்,

"தேங்க்யூ சார்.." என்றவள் சந்தோஷமாய் அங்கிருந்து சென்றாள்.

அவளின் சந்தோஷத்தை கண்டவனுக்கு ஏனோ மனமெங்கும் பொங்கி வழிந்தது.

செங்கதிரோன் துளிர்விடும் அந்த காலை வேலையில் தூக்கம் கலைந்து எழுந்தான் அமர்நாத்.

ஏனோ மனதோரம் ஏதோ மகிழ்ச்சி.. பெயர் காரணம் தெரியவில்லை.

அதே சந்தோஷத்துடன் எழுந்தவன் தன் காலை கடன்களை முடித்து குளித்து விட்டு கீழே வர வீடு ஏதோ புதிதாய் தெரிந்தது.

ஆம் வீட்டில் இத்தனை நாளாய் இல்லாத நேர்த்தி எப்போதும் சுத்தமாய் இருக்கும் வீடு தான்.. ஆனால் இன்று புதிதாய் ஆங்காங்கே சின்ன சின்ன மாற்றங்கள். ஆனால் அதுவும் கூட அழகாய் தெரிந்தது.

அதையெல்லாம் பார்த்தவன், "வசந்தா அக்கா ஒரு காபி கொண்டு வாங்க.." என்றான் சமையலறை நோக்கி.

அவன் முன்னே டம்ளர் நீட்டபட அதை வாங்கியவன் அதிலிருந்ததை கண்டு யோசனையுடன் தலை நிமிர்ந்து பார்க்க அங்கே புன்னகையுடன் அதிதி நின்றிருந்தாள்.

டம்ளரையும் அவளையும் கேள்வியாய் பார்க்க அவளோ தயங்கியபடி,

"அது வந்து சார் சாப்பிடற நேரமாச்சு.. டிபனும் ரெடி இப்போ போய் காபி குடிச்சா சாப்பிடமாட்டீங்க.. அது தான் கை கழுவிட்டு வந்தீங்கன்னா சாப்பிடலாம் சார்.." என்றாள் மெல்லிய குரலில்.

ஏனோ அவளின் அக்கறையை தவிர்க்க முடியாதவன் அவள் கொடுத்த டம்ளரை வாங்கி சாப்பிட எழுந்தான்.

அவன் வாங்கி கொண்டு சாப்பிட வந்து அமர்ந்ததும் அவனுக்கு தட்டை வைத்து பரிமாறபோனாள்.

அதை கை வைத்து தடுத்தவன், "அதிதி இங்கே நீ கெஸ்ட் சோ நீயும் உட்கார்ந்து சாப்பிடு.. அதுமட்டுமில்லை நம்மோட உறவு நிரந்தரமானதும் இல்லை.. அப்புறம் ஏன் இந்த பார்மாலிட்டிஸ்.. வசந்தா அக்கா நீங்க வந்து பாரிமாறுங்க.." என்றவன் அமைதியாய் தன் தட்டில் வைத்ததை சாப்பிட ஆரம்பித்தான்.

ஏனோ அவனின் வார்த்தை பெண்ணவளின் மனதை காயப்படுத்தியது.. அந்திமந்தாரை போல மலர்ந்து விகசித்த அவளின் முகம் சட்டென்று கூம்பியது.

அதை அறிந்தவன் அவளின் முகத்தை பார்க்காமல் சாப்பிட்டு முடித்து எழுந்தவன் கைகழுவி விட்டு அவளை திரும்பியும் பார்க்காமல் சென்றான்.

அதற்கு மேலும் சாப்பிட பிடிக்காமல் எழுந்தவள் வேகமாய் உள்ளே சென்று விட்டாள்.

இருவரின் பேச்சையும் கேட்டு கேட்காது போல் நின்ற வசந்தி அவள் சென்றதும் அவசரமாய் வெளியே வந்தவர் கண்டது அலைபேசியில் யாரிடமோ பேசியபடி இருந்த அமர்நாத்தை தான்.

தன் அலைபேசி பேச்சை முடித்து கொண்டவன் காரின் அருகே வர அங்கே இருந்த வசந்தாவை புருவ முடிச்சுடன் பார்த்தான்.

" என்னக்கா என்னாச்சி எதாவது சொல்லனுமா என்ன..?" என்றான் கேள்வியாய்.

"தம்பி அந்த பொண்ணு சாப்பிடலை பா.. உள்ளே போயிடுச்சி.. காலையில சந்தோஷமா எழுந்து சமைச்சிட்டு உங்களுக்காக காத்திருந்த பொண்ணுகிட்ட போய் இப்படி பேசலாமா.. இதெல்லாம் சொல்றதுக்கு நான் யாருன்னு நீங்க கேட்கலாம்.. ஆனா அந்த பொண்ணு என்ன அம்மான்னு வாய்நிறைய கூப்பிடறா.. என்னால அவ அப்படி போனதை ஏத்துக்க முடியலை பா.." என்றார் ஆதங்கமாய்.

அதை கேட்டவன் இதழோ மென்மையாய் விரிய, "அக்கா எங்களோட இந்த உறவு நிரந்தரமானது இல்லை.. அவ ரொம்ப சின்ன பொண்ணு கா.. என்னோட வயசும் அவளோட வயசும் வித்தியாசம் என்ன தெரியுமா.. இருபது வருஷம் வித்தியாசம்.. இந்த கல்யாணம் கட்டாயத்துல தான் நடந்துச்சி.. ஒரு இக்கட்டான தருணத்துல தான் நான் அவளை கல்யாணம் செஞ்சிகிட்டேன்.. சீக்கிரமே அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி தரணும் கா... நான் இப்படி இருக்கறது தான் கா சரி.. அவளை சாப்பிட வைங்க.." என்றவன் தன் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் நோக்கி சென்றான்.

அவன் இந்த பக்கம் சென்றதும் உள்ளே வந்த வசந்தாவின் முன்னால் நின்றாள் அதிதி.

"அம்மா நான் ஆபிஸ் போயிட்டு வர்றேன்.." என்றாள் சிரித்தபடி.

"ஏங்கண்ணு நீ சாப்பிடலையே மா.. சாப்பிட்டு போடா.." என்றவரின் குரலில் இருந்த அக்கறையில் நெகிழ்ந்தவள்,

"நீங்க இப்படி கேட்டதே எனக்கு வயிறு நினைஞ்சி போச்சி மா.. எனக்கு பசிக்கலை மா.. நான் பாத்துக்குறேன்.. பாய் மா.." என்றவள் அவர் எதிர்பாராத நேரம் அவரின் கண்ணத்தில் முத்தத்தை தந்து விட்டு ஓடிவிட்டாள்.

அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரித்தவரின் முகம் செஞ்சாந்துவாய் சிவந்து போனது.

" போக்கிரி பொண்ணு.." என்று செல்லமாய் அவளை வைதவள் உள்ளே சென்று தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

இங்கே தன் அலுவலகத்திற்கு வந்தவன் ஒரு வாரமாய் காணாமல் விட்ட அக்கவுண்ட்ஸை சரிபார்க்க ஆரம்பிக்க அதில் நிறைய குழப்பங்கள் வர ஆரம்பித்தன.

இதற்கு பதில் சொல்ல வேண்டியவளோ அப்பொழுது தான் அலுவலகத்திற்கு வந்தாள்.

அவள் வந்ததை தன் அறையிலிருந்து பார்த்தவன் அடுத்த நொடியே அவளுக்கு அழைத்திருந்தான்.

"கொஞ்சம் என்னோட கேபின் வாங்க அதிதி.." என்றவனின் பேச்சில் மெல்லிய புன்னகை பூக்க எழுந்து அவனறைக்கு சென்றாள்.


தன்னறைக்கு வந்தவளை ஏற இறங்க பார்த்தான்.. ஏதோ அவனுக்கு புதிதாய் தெரிந்தாள்.

அந்த மாற்றம் என்னவென்ற தான் அவளை அளந்தான்.

இத்தனை நாளாய் இல்லாமல் இன்று புதிதாய் புடவை அணிந்திருந்தாள். அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு, நெற்றயிலும் அதன் வகிட்டிலும் குங்கும தீற்றல் என மங்களகரமாய் காட்சி அளித்தாள்.

ஏனோ அவளின் இந்த பரிணாமம் புதிதாய் ஆடவனின் மனதை கொய்தது.

அவளின் உச்சி வகிட்டில் இருந்த குங்குமமும் கழுத்தில் உரசியிருந்த மஞ்சள் கயிரும் அவள் அவனின் உரிமையென சொன்னது.

ஆனால் அந்த உரிமையுணர்வும் வந்த சடுதியில் தொலைந்து போனது.

" மிஸ் அதிதி இந்த அககவுண்ட்ஸ் டீடெயில் என்னன்னு கொஞ்சம் பாருங்க.." என்றான் அந்த பைலை அவளிடம் நகர்த்தி வைத்தபடி.

" ம்ம் ஓகே சார்.." என்றவள் அதனை எடுத்து கொண்டு கதவை நெருங்கிடும் சமயம் சட்டென்று நின்றவள் அவனின் புறம் திரும்பி,

"எக்ஸ்க்யூஸ் மீ சார்.. நான் மிஸ் அதிதி இல்லை.. மிஸ்ஸஸ் அதிதி அமர்நாத்.." என்று கம்பீரமாய் சொன்னவள் அடுத்த நொடியே அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

அவள் அப்படி சொன்னதும் கோபம் கொண்டு நிமிர்ந்து அவளை முறைப்பதற்குள்ளாகவே அங்கிருந்து மறைந்துவிட்டாள் பெண்ணவள்.

' என்னாச்சி இந்த அதிதிக்கு இந்த கல்யாணத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தேவைதானா..? நான் என்ன சொன்ன இவ என்ன பண்ணிட்டு இருக்கா.. சின்ன பொண்ணா பிஹேவ் பன்றா.. ' என்றவனுக்கு கோபம் தான் என்றாலும் கூட ஏனோ மனதோரம் சின்னதாய் சந்தோஷ ஊற்று கிளம்பியதை தடுக்க முடியவில்லை.

ஆனால் அடுத்த நிமிடம் தன்னை மீட்டு கொண்டவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அலெக்ஸ் தலையில் கட்டுடன் கை கால்களில் கட்டுடன் படுத்திருந்தான் அந்த மருத்துவமனையில்.

அதே நேரம் அங்கே வந்த அவனின் நண்பன் ஜீவா பதட்டமாய், "டேய் அலெக்ஸ் இது எப்படி டா நடந்துச்சி.. நீ குடிச்சிட்டு நிதானமில்லாம வண்டியை ஓட்டினியா.." என்றான் அதிர்ச்சியாய்.

"ஹேய் அதெல்லாம் இல்லை டா.. கொஞ்சமா குடிச்சிருந்தேன் தான்.. ஆனா நிதானத்தை இழக்கலை டா.. அந்த அமர்நாத் வீட்டுக்கு போயிட்டு வரும் போது தான் இப்படி ஆயிடுச்சி.." என்றான் அடங்காத கோபத்துடன்.

"அங்கே ஏன்டா நீ போன.." என்றான் கேள்வியாய்.

"ஏய் நீ லூசா டா.. அந்த அதிதி நமக்கு வேணும் இல்லை.. அது தான் அந்த அமர்நாத்தை கொஞ்சம் வளைக்கலாம் னு பார்த்தேன்.. ஆனா அவன் என்னவோ தாலி கட்டிட்டின என் பொண்டாட்டின்னு சொல்லிட்டான்.. இனி அவன் மாற போறதில்லை.. அதனால அந்த அதிதியை அவன்கிட்ட இருந்து தூக்கிடலாம்னு நினைச்சிட்டு வந்தேன்.. ஒரு டாங்கர் லாரிகாரன் விட்டு ஏத்திட்டு போயிட்டான்.. ஒரு மாசத்துக்கு பெட் ரெஸ்ட் எடுக்கனுமா.. அம்மாகிட்ட நான் சொல்லவே இல்லை.. அது தான் உன்னை வர வச்சிட்டேன்.. அம்மாகிட்ட வெளியூருக்கு வேலையா போயிருக்கேன்னு தொல்லிருக்கேன் டா.. சரி நாம இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப்போடுவோம்.. நான் சரியாகி வந்ததுக்கு அப்புறம் அந்த அதிதியை பாத்துக்கலாம்.." என்றவன் அதே உடல் சோர்வுடன் கட்டிலில் படுத்து மருந்தின் வீரியத்தில் தூங்கிவிட்டான்.

ஆனால் அவன் அறியாதது இனி அதிதியை அவனால் எளிதாய் நெருங்க முடியாது என்பதை தான்.

அவனுடன் ஜீவாவும் அவனுக்கு துணையாய் இருந்துவிட்டான்.

வாழ்க்கை தன்னை போல் கடந்து சென்று ஒரு வாரம் ஆகியிருக்க அன்று அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அதிதி திடிரென தன் வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டாள்.

" அம்மா.." என்றவளுக்கு கண்களில் கண்ணீர் வழிந்தது.

எப்போதும் வரும் மாதாந்திர வலி தான்.. அவளுக்கு எப்போதுமே வலி அதிகமாக இருக்கு.. பெரும்பாலும் அந்த வலியை போக்க மாத்திரை எடுத்து கொள்வாள்.

ஆனால் அவளின் கல்யாண கலேபாரத்தில் அதை சுத்தமாய் மறந்தே போய் விட்டாள்.

மெல்ல தான் இருக்கும் இருப்பிடத்தை நினைத்து தன் வலியை பொருத்து கொண்டவள் மெதுவாய் அலைபேசியை எடுத்து அமர்நாத்தை அழைத்தாள்.

"சொல்லுங்க அதிதி.." என்றான் தன் வேலையை செய்தபடியே.

"சார் எனக்கு ஆஃப் டே லீவ் வேணும் சார்.." தன் வலியை குரலில் காட்டாமல்.

"அதிதி உங்களுக்கு மறந்து போச்சா.. இது ஆடிட் நடக்க போற டைம்.. இப்போ நீங்க லீவ் போட்டா எப்படி ஆடிட் ஓர்க் பினிஷ் பண்ணுவீங்க.. நமக்கு நாள் நிறைய இல்லை.. இன்னும் ரெண்டு நாள் தான்.. நாளை மறுநாள் நாம சப்மிட் பண்ணனும்.." என்றான் வேலையில் கறாராய்.

"சார் அது எனக்கும் தெரியும் சார்.. நான் இன்னைக்கு மட்டும் தான் லீவ் கேட்குறேன்.. நாளைக்கு வந்து ஓர்க் முடிச்சிர்றேன் சார்.." என்றவளுக்கு வலியில் கண்களில் கண்ணீர் சுரந்தது.

" ம்ம் சரி போங்க.." என்றவன் வேகமாய் அலைபேசியை வைக்கும் சத்தம் அவள் வரை கேட்டது.

அதில் ஒரு விரக்தி முறுவல் தோன்ற தன்னை சமாளித்து கொண்டு பஸ்ஸில் போக முடியாத காரணத்தால் வண்டியை புக் செய்தாள்.

தான் கட்டிய புடவை மடிப்பை சிங்கில் பிளிட்டில் விட்டவள் முந்தியை எடுத்து கையில் பிடித்தபடி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அவள் சென்றதை பார்த்தவன், 'என்னாச்சி இவளுக்கு இப்படி போறா..' என்றவனின் யோசனையை கலைத்தது அவனின் அலைபேசி.

அதை எடுத்து பேசியவன் முக்கியமான அக்கவுண்ட்ஸ் பைல் வேணும் என்ற எண்ணத்தில் அதிதிக்கு கால் செய்ய போக ச்சீய் அவ இப்போ தான லீவ் சொல்லிட்டு போறா.. சரி வேற யாரையாவது எடுத்துட்டு வர சொல்லலாம்..' என்று நினைத்தவனின் மனதில் எதுவோ உந்த அவனே எழுந்து அவளறைக்கு சென்றான்.

அங்கே அவளின் அறையின் டேபிள் டிராயரை திறந்து தனக்கு தேவையான பைலை எடுத்து கொண்டவன் அதை சாத்திவிட்டு நிமிரும் போது அவன் கண்ணில் விழுந்தது அந்த சேரில் இருந்த உதிர துளிகள்.

அதை கண்டவன் அதிர்ந்த தான் போனான். கடவுளே என்னவாயிற்று அவளுக்கு.. நான் வேற ஏன் என்ன பிரச்சனைன்னு கேட்காம அனுப்பி வச்சிட்டேனே.. வீட்டுக்கு போயிருப்பாளா.. இல்லை எங்கே போயிருப்பா.. ' என்று நினைத்தவனின் மூளை சற்று வேலை நிறுத்தம் தான் செய்தது.

பின்பு தன்னறைக்கு வந்தவன் வேகமாய் அவளுக்கு அழைக்கலாம் என்று அலைபேசியை எடுக்க ஏதோ ஒரு தயக்கம் அவனை தள்ளி விட பின்பு வசந்தாவிற்கு கால் செய்தான்.

"ம்ம் வசந்தா அக்கா அதிதி வீட்டுக்கு வந்துட்டாளா.." என்றவனின் மனம் பரபரப்பாய் இருந்தது.

அவள் வீட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் பதிலுக்காக காத்திருந்தான்.

" இன்னும் வரலையே பா..இது அவளோட ஆபிஸ் டயம் தானா பா.." என்றவரின் பதிலுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே அலைபேசியை வைத்து விட்டான்.

ஏனோ மனம் படபடவென அடித்து கொண்டது.. இதுநாள் வரை எப்போதும் இப்படி தவித்து துடித்ததில்லை.

அவளுக்கு என்னாச்சி.. அவளோட இடத்துல இருந்த உதிர துளி ஏன் என்னை இப்படி ஆட்டி வைக்குது.. இது இயல்பா பெண்களுக்கு வர பிரச்சினை தானே என்றவன் அதை மறக்கத்தான் முயன்றான்.

ஆனால் மீண்டும் மீண்டும் அவளின் குரல் அவன் காதுகளில் ஏதோ வலியுடனே ஒலித்து கொண்டிருந்தது.

அதற்கு மேலும் தன் பிடிவாதத்தை விட்டு அவளுக்கு அழைத்தான்.. ஆனால் அவளின் தொலைபேசியோ முழுதாய் அடித்து நிறுத்தியும் கூட அவள் எடுக்கவில்லை.

ஒன்று இரண்டு மூன்றானது.. ஆனால் அவள் தான் எடுக்கவில்லை. ஏனோ ஆடவனின் மனம் தவியாய் தவித்து துடித்தது.

இது என்ன மனசு ஏதோ போல இருக்கு.. அவளுக்கு அப்படின்னா நான் ஏன் இப்படி துடிக்கனும்.. ஒரு வேளை என் பாதுகாப்பில இருக்கற பொண்ணுங்கறதால இப்படி தவிக்கிறனோ.. என்று தானே கேள்வியும் கேட்டு தானே பதிலும் கூறி கொண்டான்.

மீண்டும் ஒர் முறை அழைத்து பார்க்க அவள் தான் அலைபேசியை எடுக்கவே இல்லை.

ஒரு மாதிரி உணர்வில் சிக்கி தவித்தவன் அவளை தேடி கிளம்பிவிட்டான்.

தன் கைத்தடியுடன் அவன் வெளியே வந்து தன் காரில் ஏற அடுத்த நொடி அவனின் அலைபேசி தன் இருப்பை உணர்த்தியது.

அதில் அபிதாவின் நெம்பரை பார்த்தவன் அதை எடுத்து காதுக்கு கொடுத்தான்.

" சொல்லு அபி மா.." என்றான் அழுத்தமாய்.

அவள் என்ன கூறினாளோ அடுத்த நொடியே அவனின் கார் அங்கிருந்து பறந்தது.


தொடரும்..
✍️


 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அதிதி கல்யாணத்தை முழுமனசா ஏத்துக்கிட்டா😍ஆனா அமர்நாத்.. 🤔

இந்த தவிப்பு எதனாலன்னு புரிஞ்சிகிட்டு எப்ப அதிதியை உரிமையானவளா ஏத்துப்பானோ🧐🤔

அதிதி எங்க போனா🤔 என்னாச்சு அவளுக்கு🧐😢
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அதிதி கல்யாணத்தை முழுமனசா ஏத்துக்கிட்டா😍ஆனா அமர்நாத்.. 🤔

இந்த தவிப்பு எதனாலன்னு புரிஞ்சிகிட்டு எப்ப அதிதியை உரிமையானவளா ஏத்துப்பானோ🧐🤔

அதிதி எங்க போனா🤔 என்னாச்சு அவளுக்கு🧐😢
thanks akka
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️கொஞ்சம் நாள்ல அமர் அதிதிய முழுமனசா விரும்பிடுவான் அதுவரை அவன் எண்ணங்கள், மனசு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் நிக்கும் 😍😍😍😍😍😍
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️கொஞ்சம் நாள்ல அமர் அதிதிய முழுமனசா விரும்பிடுவான் அதுவரை அவன் எண்ணங்கள், மனசு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் நிக்கும் 😍😍😍😍😍😍
thanks sis