• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே - 5

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 5

அந்த மருத்துவமனை பரபரப்பாய் இருந்தது.. அங்கே தன் காரை நிறுத்திவிட்டு வேகமாய் உள்ளே வந்த அமரை,

"மாமா.." என்றொரு குரல் அழைத்தது.

அந்த குரல் வந்த திசையில் பார்க்க அங்கே அபிதா நின்றிருந்தாள்.

அவளருகே தடுமாறியபடி வேகமாய் வந்தவன், "என்னாச்சி அபி.." என்றான் அங்கிருந்த அறையை பதட்டமாய் பார்த்தபடி.

" தெரியலை மாமா.. உள்ளே செக் பண்ணிட்டு இருக்காங்க.." என்றாள் அவனின் கையை பாசமாய் பிடித்தபடி.

அவளின் பதிலில் நிற்க முடியாமல் அமர்ந்தவன், "உனக்கு எப்படி மா தெரியும்.." என்றான் யோசனையாய்.

"நான் எதேர்ச்சியா தான் போன் பண்ணேன் மாமா.. அன்னைக்கு அப்புறம் உங்களை பார்க்கலை வரலாமான்னு கேட்டு தான் கால் பண்ணேன்.. ஆனா கொஞ்ச நேரத்துல அவங்களோட கத்துற சத்தம் கேட்டுச்சி.. பயமாயிடுச்சி மாமா.. அது தான் எங்க இருக்காங்கன்னு கேட்டு நானே வந்துட்டேன்.. அவங்களை பாக்கும் போதே அறை மயக்கமா தான் இருந்தாங்க மாமா.. இப்போ டாக்டர் உள்ளே போய் ரொம்ப நேரமாச்சி.. இன்னும் வரலை அது தான் பயமா இருக்கு மாமா.." என்றாள் பதட்டமாய்.

ஏனோ அவன் மனதின் உந்துதலில் சொன்ன விஷயம் சரியாய் போய்விட்டது.

தங்கை மகளை அருகில் அழைத்தவன் அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு,

"பெருசா ஒன்னும் இருக்காது மா.. டாக்டர் வரட்டும் மா.." என்றவன் அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் தனக்கும் சொல்லி கொண்டான்.

அதே நேரம் அந்த அறையில் இருந்த வந்த பெண் மருத்துவர்,

"சார்.." என்று அவனை அழைத்தார்.

"டாக்டர் அவளுக்கு என்னாச்சி.. இப்போ எப்படி இருக்கா.." என்றான் பதட்டமாய்.

"நீங்க அவங்களுக்கு என்ன உறவு சார் ஆகணும்.." என்றவரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுணிந்தான்.

"அவங்களோட ஹஸ்பண்ட் டாக்டர் இவரு.." என்றாள் அபிதா.

ஓஓ பெருசா ஒன்னுமில்லை சார்.. இர்ரெகுலர் பீரியட்ஸ்.. அதுமட்டுமில்லாம வலிக்கு மாத்திரை எடுத்திருக்காங்க.. அது தான் அவங்களை ரொம்ப அபெக்ட் ஆக்கியிருக்கு.. இப்போதைக்கு டிரிட்மெண்ட் கொடுத்திருக்கோம்.. கண் முழிச்சதும் நீங்க கூட்டிட்டு போகலாம்.." என்றவர் அங்கிருந்து சென்றார்.

இருவரும் பெருமூச்சு விட்டு, "சரி அபிதா நீ அவளை பாத்துக்கோ.. நான் ஹாஸ்பிடல் பில் செட்டில் பண்ணிட்டு வர்றேன்.." என்றவன் அங்கிருந்து சென்றான்.

இங்கே கண் விழித்து படுத்திருந்த அதிதியின் கண்கள் கலங்கி சிவந்து போய் இருந்தன.

அவள் எழுந்துவிட்டாள் என நர்ஸ் வந்து சொல்ல அபிதா வேகமாய் உள்ளே சென்றாள்.

" அதிதி க்கா.." என்றபடி உள்ளே வந்த அபிதாவை கண்ட அதிதி,

"ஹேய் அபி தேங்க்ஸ் டா.. என்னை காப்பாத்தனுக்கு.." என்றாள் புன்னகைத்தபடி.

"இப்போ எப்படிக்கா இருக்கு உடம்பு.." என்றாள் அக்கறையாய்.

" ம்ம் இப்போ ஓகே தாண்டா.. கொஞ்சம் பெயின் இருக்கு.. வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.." என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கே அமர்நாத் கதவை திறந்து கொண்டு வந்தான்.

அவனை கண்டதும் அவளின் விழிகள் மெல்ல நிலம் நோக்கி சென்றது.

"அபி வீட்டுக்கு போலாம்.. உன் அக்காவை கிளம்ப சொல்லு.." என்றவன் இருவருக்கு முன்னதாக வெளியேறினான்.

அபிதாவிற்கு தன் தாய்மாமனின் கோபம் நன்றாகவே தெரியும். யாரிடமாவது கோபமாய் இருந்தால் தான் இப்படி பேசாமல் செல்வார்.

இப்பொழுது அவருக்கு அதிதியின் மேல் கோபம். அதை காட்டும் வழி அறியாது அமைதியாய் சென்றுவிட்டான்.

அதிதியும் எதுவும் பேசாமல் அபிதாவுடன் கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்த அபிதாவோ இருவரின் வாழ்வையும் கண்டவள் எதையோ யோசிக்க மெதுவாய் தன் தந்தைக்கு அழைத்து பேசினாள்.

அதன் முதல் படியாய் தன் தாய்மாமனிடம் சென்றவள்,

"மாமா.." என்றாள் கெஞ்சுதலாய்.

ஏதோ பைலை பார்த்து கொண்டிருந்தவன், "சொல்லுடா அபி.." என்றான் வேலையில் கவனத்தை செலுத்தியபடி.

" மாமா எனக்கு கொஞ்ச நாளைக்கு இங்கே இருக்கனும்னு ஆசையா இருக்கு.. தங்கவா.." என்றாள் ஆசையாய் கேட்டபடி.

"இதுக்கு என்ன மா தயக்கம்.. இதுவும் உன்னோட வீடு தாண்டா.. தாராளமா நீ தங்கலாம்.." என்றான் தங்கை மகளின் மனம் கோனாமல்.

" மாமா நான் மட்டும் இல்லை.. அப்பா அம்மா அண்ணா எல்லாருமே.. எனக்கு எல்லாரும் ஒரே குடும்பமா இருக்கனும்னு ஆசையா இருக்கு மாமா.." என்றாள் ஏக்கம் தொனித்த குரலில்.

முன்பே அவள் மேல் பாசமாய் இருப்பவன் இன்று அவள் ஆசையாய் கேட்கும் விடயத்தை கூடவா நடத்தி வைக்க வேண்டாம் என்பான்.. சந்தோஷமாய் தலையசைத்தான்.

"ஹய் ஜாலி மாமா.. தேங்க்ஸ் மாமா.. நீயே அம்மாகிட்ட போன் பண்ணி வர சொல்லிடு மாமா.. நான் போய் வசந்தாம்மா கிட்ட எனக்கு புடிச்சதா சமைக்க சொல்ல போறேன்.." என்றபடி அங்கிருந்து வேகமாய் ஓடினாள்.

அவள் சநுதோஷமாய் போவதை மகிழ்ச்சியாய் பார்த்தவன் தன் அலைபேசியை எடுத்து தன் தங்கைக்கு அழைக்க போகும் நொடியில் ஏனோ அதிதியை பார்க்க மனம் துடிக்க அவளின் அறையில் சென்று பார்த்தான்.

மருந்தின் வீரியத்தில் நன்கு தூங்கி கொண்டிருந்தாள்.. மெதுவாய் அவளருகே வந்தவனுக்கு அவளின் வாடிய முகம் ஏனோ மனதை அசைத்து பார்த்தது.

மெல்ல தன் நிலை உணர்ந்தவன் அவளின் தலையை மெதுவாய் வருடி கொடுக்க சென்ற கரத்தை இறுக்கி பிடித்தவன் வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.

தன் தங்கை பூவிழிக்கு அழைத்து அபிதாவின் ஆசையை சொல்லி அவர்களை குடும்பத்துடன் வர சொல்லிவிட்டு இவன் தன் அலுவலகத்தை நோக்கி சென்றான்.

அதை கேட்ட பூவிழியும் கூட தமையன் திருமணத்திற்கு கூட செல்லாமல் விட்டதால் இப்பொழுது தன் குடும்பத்துடன் வந்துவிட்டாள்.

யாருமில்லாமல் இருந்த அந்த பங்களா இன்று தன் சொந்தத்துடன் நிறைந்திருந்தது.

எப்போதும் தனிமையை விரும்பும் ஆடவன் இன்று தன் தங்கையின் குடும்பத்தை தன்னுடன் சில நாட்கள் தங்க அனுமதித்தான்.

அனைவரும் வந்ததும் அந்த வீடு நிம்மதியில் ஜொலித்தது.


பூவிழி வந்ததும் அதிதியை தன் தமையனின் அறையில் தான் தங்க வேண்டும் என்று கட்டளையிட்டாள்.

அதிதியின் பொருட்கள் அனைத்தும் அமர்நாத்தின் அறைக்குள் இடம் பெயர்ந்தது.

ஆடவன் அதை விரும்பவில்லையென்றாலும் தற்சமயம் இருந்த சூழல் அவனை அதை ஏற்றுக் கொள்ள செய்தது.

மறுநாள் அலுவலகத்திற்கு வந்த அதிதி அவனின் அலுவலக ஆடிட் சம்பந்தபட்ட வேலையை முடித்து கொண்டு வேகமாய் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

இன்று சீக்கிரமே வர சொல்லி அபிதா ஆத்விக் உத்தரவு.

"இன்று வெளியே அவர்களை அழைத்து செல்ல வேண்டுமென்று இரவே போடபட்ட ஒப்பந்தம்.. அதுதான் சீக்கிரமே வந்துவிட்டாள்.

அபிதா ஆத்விக் உடன் இவளும் என மூவருமாய் வெளியே சென்றனர்.

தனியே வீட்டு வேலைகளில் இருந்த பூவிழியின் அருகே வந்த மகேந்திரன்,

"விழி கொஞ்சம் வா உன்கிட்ட பேசனும்.." என்றான் வேகமாய்.

"சொல்லுங்க மாமா.. நான் போய் வசந்தா அக்காகிட்ட நைட்டுக்கு டிபன் மெனு சொல்லனும்.." என்றார் சிரித்தபடி.

அவளை மெதுவாய் தன்னருகே அமர வைத்துவிட்டு, "என்மேல கோபமா விழி மா.." என்றான் படபடப்பாய்.

"ச்சீய் எதுக்கு மாமா உங்க மேல நான் கோபப்படபோறேன்.. என் மேல மட்டும் தான் மாமா எனக்கு கோபம்.. எவ்வளவு சுயநலமா இருந்துருக்கேன் இல்லை.. சொந்த அண்ணனோட வாழ்க்கையை நான் யோசிக்கலை இல்லை.. ஆனா அன்னைக்கு மட்டும் நீங்க எனக்கு கொடுத்து கட்டலை.. நான் இப்பவும் திருந்தியிருக்க மாட்டேன் மாமா.. எனக்கு இப்போ தான் மாமா உங்களை ரொம்பவே பிடிச்சிருக்கு.. என்னை மன்னிச்சிடுங்க மாமா.." என்றபடி தன்னவனை அணைத்து கொண்டாள்.

தானும் தன் மனைவியை இறுக்கமாய் அணைத்து கொண்டவர், "ஏய் விழி என் பொண்டாட்டி ரொம்பவே நல்லவ தான்.. ஆனா அவளோட மனசுல கொஞ்சமே பொறாமை தான்.. வேற எதுவும் இல்லை.. சரி அதை விடு.. நம்மளை பத்தி அப்புறம் பேசலாம்..

ஆமா உன் தம்பி ஏன்டி இப்படி இருக்கான்.. அந்த பொண்ணு பாவம் டி.. அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான் இல்லை.. சேர்ந்து வாழ வேண்டியது தானே.. ஏன் தான் அந்த புள்ளையை பிரிச்சி வச்சிருக்கான்.. நாம ஏன் இங்கே வந்தோம்னு தெரியும் இல்லை..

உன் பொண்ணோட சபதம்.. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டு தான் நாம இங்கிருந்து போகனும்.. அமர் இன்னும் வரலையா மா.." என்றான் கேள்வியாய்.

"இன்னும் இல்லை மாமா.. அண்ணா வர நேரம் தான் மாமா.. நீங்க ஏன் இதை பத்தி அண்ணாகிட்ட பேச கூடாது மாமா.." என்றாள் கேள்வியாய்.

" இன்னைக்கும் வரட்டும் டி பேசுறேன்.. சரி எனக்கு ஒரு காபி மட்டும் குடு.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் முடிச்சுட்டு வந்துர்றேன்.." என்றவன் தன் கையில் உள்ள லேப்டாப்பை திறந்து வைத்து தன் வேலையை பார்த்து கொண்டிருந்தான்.

பெண்ணவளும் தன் கணவன் கேட்ட காபியை எடுக்க சென்றாள்.

அதே நேரம் வீட்டிற்கு சோர்வுடன் வந்த அமரின் விழிகள் நாலாபுறமும் தேடியது.

அவள் மதியமே வந்தது வேறு மனதை உறுத்தியது.

அவளை மனைவியாய் ஏற்று கொள்ள முடியவில்லை.. அதன் முதன் காரணமாய் இருந்தது இருவருக்கும் இருந்து வயது வித்தியாசம்.

ஏனோ அதை தாண்டி அவனால் யோசிக்க முடியவில்லை.

ஆனால் அவள் இந்த வீட்டிற்கு வந்த இந்த கொஞ்ச நாளில் அவனின் வாழ்வினில் இன்றியமையாதனவளாய் மாறிவிட்டாள் என்பதை ஏனோ மனம் முரன்பட்டது.

"அமர் வந்துட்டியா.." என்றபடி வந்தார் மகேந்திரன்.

தங்கையின் கணவனை கண்டதும், "ம்ம் இப்போ தான் மகேன் வந்தேன்.." என்றபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.

"என்ன வீடு அமைதியா இருக்கு.. அபிதா ஆத்விக் எங்கே.." என்றான் வீட்டை சுற்றியும் தன் விழிகளால் தேடியபடி.


"அப்போ நீ அபிதா ஆத்விக் மட்டும் தான் தேடுறியா மச்சான்.." என்றவனை கேள்வியாக பார்க்க,

"இல்லை உன் பொண்டாட்டியும் தான் இங்கே இல்லை.. அவளை பத்தி எதுவும் கேட்கலையே நீ.. இல்லை அவளையும் தான் கேட்டியா.." என்றான் ஓரவிழியில் அவனை பார்த்தபடி.

"மகேன் ப்ளீஸ் இனி அவளை என்னோட மனைவின்னு சொல்லாத.. அவ சின்னபொண்ணு.. எனக்கும் அவளுக்கும் இருக்கற வித்தியாசம் இருபது வருஷம்.. ஏன் உங்க பொண்ணு அபிதாவை விட ரெண்டு வருஷம் நான் பெரியவ.. நான் எப்படி மகேன்.." என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

அதே நேரம் அபிதா ஆத்விக்குடன் உள்ளே வந்த அதிதியும் கேட்க நேர்ந்தது.

அவளின் மனம் வலித்தது தன் கணவனின் சொல் கேட்டு.. ஆனால் அதை வெளியில் காட்டாமல் சிரித்தபடியே அப்படியே நின்றாள்.

இங்கே மகேந்திரனும் அமர்நாத்தும் பேசி கொண்டிருக்க பூவிழியும் காபி கோப்பைகளுடன் வந்தாள்.

"ஏய் அமர் அதெல்லாம் சரிதான்.. ஆனா அந்த பொண்ணோட கழுத்துல நீ தாலி கட்டியிருக்க.. இப்போ போய் வயசு வித்தியாசம் பாக்கலாமா.. அதுமட்டும் இல்லாம உனக்கும் இது தான் முதல் கல்யாணம்.. உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு இல்லை.. அவள் இங்கே யாரும் கட்டாயப்படுத்தலையே.. அவளும் விருப்பத்தோட தானே உன்னோட வாழப்போறா.. நீ ஏன் இப்படி வயசை மட்டும் பாக்குற அமர்.." என்றான் வேதனையுடன்.

"அய்யோ மகேன் நான் வயசுக்காக மட்டும் பாக்கலை.. என்னோட நிலை உங்களுக்கு தெரியும் தானே.. என்னோட கால் ஊனம்.. வயசும் அதிகம்.. அவளை சந்தோஷமா என்னால வச்சிக்க முடியுமா.. அவளும் சின்ன பொண்ணு தான்.. அவளோட ஆசைகள் எல்லாத்தையும் என்னால நிறைவேத்த முடியலைன்னா என்ன பண்ண முடியும் சொல்லு..

நாமளே இப்போ நிறைய நியூஸ் பாக்குறோம்.. தப்பு முன்னாடி நடக்காம தடுக்கனும்.. அது நடந்ததுக்கு அப்புறம் வருத்தப்படுறதுல என்ன அர்த்தம் இருக்கு சொல்லு பாக்கலாம்.. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லை மகேன்.. அது வேணாம்.. சீக்கிரமே அந்த பொண்ணுக்கு நல்ல எடத்துல மாப்பிள்ளை பாரு.. நான் டைவர்ஸ் கொடுத்துர்றேன்.." என்றவன் அங்கிருந்து வேகமாய் எழுந்து சென்றுவிட்டான்.

அவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் நியாயம் தான் என்றாலும் எல்லோரும் அதே மனநிலையில் இருப்பார்கள் என்று நினைப்பது முற்றிலும் தவறு.

கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் மறைத்தவள் யாரிடமும் பேசாமல் மெல்ல சென்று தங்களது அறைக்கு சென்றுவிட்டாள்.

அறையின் உள்ளே இருந்த பால்கனியில் இருந்தவனை கண்டவளின் உள்ளம் அவன் வார்த்தை பட்டு உடைந்து சிதறியது.

அவனையே பார்த்து கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கி கண்ணீர் கரை கட்டியது.

எதுவும் பேசாமல் தனக்கென ஒதுக்கப்பட்ட சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள்.

நீண்ட நேரம் வானை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன் உள்ளே வரும் போது அதிதி நல்ல தூக்கத்தில் இருந்தாள்.

அவளை நின்று ஒரு நொடி கண்டவன் கண்கள் அவளின் காய்ந்த கண்ணீர் தடங்களை கண்டதும் ஒரு நொடி பதறியவனின் மனம் உடனே தன்னிலை மீட்டு கொண்டவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் கீழே வர அவனின் தங்கை குடும்பம் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தது.

அவன் வந்ததை கண்ட பூவிழியோ, "அண்ணா அதிதி எங்க.. சாப்பிட வரலையா.." என்றாள் கேள்வியாய்.

"அவ தூங்கறா மா.." என்றவன் சாப்பிட அமர்ந்துவிட்டான்.

அதை கண்ட அபிதாவோ, "மாமா போய் அக்காவை கூட்டிட்டு வாங்க.. அப்போ தான் உங்களுக்கு சாப்பாடு.." என்றாள் முகத்தை திருப்பியபடி.

"ஏய் அபி அவ தூங்கறா எப்படி போய் எழுப்ப சொல்ற.. அவளுக்கு பசிச்சா அவ வந்து சாப்பிடுவா.." என்றவன் தனக்கு தானே பரிமாறி சாப்பிட ஆரம்பித்தான்.

அதனை கண்ட நால்வரும் தலையிலடித்து கொண்டனர்.

" ஏய் விழி உன் அண்ணன் கொஞ்சமும் மாறமாட்டானாடி.. அய்யோ இதுங்களை சேர்த்து வைக்குறதுக்குள்ள எனக்கு வயசாயிடும் போலயே.." என்று மனைவியின் காதுகளில் முனுமுனுத்தவன் தன் மகளின் பக்கம் திருப்பி கண் அசைத்தான்.

அதை கண்டு கொண்டவள், "சரி நானே போய் அக்காவை கூட்டிட்டு வர்றேன்.." என்று அவளை அழைக்க சென்றாள்.

மற்றவர்களும் சாப்பிட ஆரம்பிக்க ஏனோ ஆடவனின் உள்ளம் மட்டும் அவளின் கண்ணீரின் காயந்த தடங்களை நினைத்து பார்த்தது.

அதற்கு மேலும் சாப்பிட துளியும் விரும்பாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான்.

அதே நேரம் அங்கே அபியுடன் வந்த அதிதி அவர்களுடன் அமர்ந்து சாப்பாட்டை வாயருகே கொண்டு வந்தவள் ஏதோ உந்துதலில்,

"அம்மா அவரு சாப்பிட்டாரா.." என்றாள் பூவிழியிடம்.

"கொஞ்சமா சாப்பிட்டு போயிட்டாரு மா.. நீ சாப்பிடு நான் போய் கூட்டிட்டு வர்றேன்.."

" இல்லைம்மா நானே போய் கூட்டிட்டு வர்றேன்.." என்று எழுந்தவள் தன்னவனை தேடி சென்றாள்.

தோட்டத்தில் நிலவின் வெளிச்சததில் கிரேக்க சிற்பமாய் நின்றிருந்தவனை தன் விழிகளுக்குள் நிரப்பிக் கொண்டவள் மெதுவாக அவனருகே வந்து,

"சார் சாப்பிட வாங்க.. அங்கே எல்லாரும் வெயிட் பண்றாங்க.." என்றாள் மெல்லமாய்.

அவளின் குரலில் அவளை பார்த்தவன், "எனக்கு வேணாம் நீ போய் சாப்பிடு.. இங்கிருந்து போ அதிதி.." என்றான் வெறுப்புடன்.

அவனின் வெறுப்பு கலந்த வார்த்தையில் சிதறி போனவள் கலங்கிய மனதுடன் அவனையே பார்த்திருந்தாள்.

அவளை இங்கிருந்து போ என்று சொன்னவன் நாளையே அவளுக்காக பைத்தியம் போல் அலையப் போகின்றான் என்று அவனிடம் யார் தான் சொல்லுவதோ..?

மறுநாள் அலுவலகத்திற்கு கிளம்பியவன் முன்னே, "மாமா அக்காவை காணலை.." என்றாள் கலங்கிய மனதுடன்.

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்தவன் சிலையாய் நின்றுவிட்டான்.



தொடரும்...
✍️

 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அமரு இது தேவையா? போன்னு வெறுப்பா சொல்லிட்டு இப்ப எதுக்கு தேடணும்? 🧐

கையில இருக்கிற வரைக்கும் அருமை தெரியறதில்லை 😬 அப்புறம் காணோமேன்னு அடிச்சுகிட்டு தேடவேண்டியது😢

அதிதி பாவம் எங்க போனாளோ 🤔
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அமரு இது தேவையா? போன்னு வெறுப்பா சொல்லிட்டு இப்ப எதுக்கு தேடணும்? 🧐

கையில இருக்கிற வரைக்கும் அருமை தெரியறதில்லை 😬 அப்புறம் காணோமேன்னு அடிச்சுகிட்டு தேடவேண்டியது😢

அதிதி பாவம் எங்க போனாளோ 🤔
thanks akka
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu