• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 8

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 8

அதிதி நன்றாக உடல் தேறிவிட்டாள். அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என மருத்துவரும் கூறிவிட அவளின் அருகில் இருந்த பூவிழி,

"அதிதி உனக்கு வேற ஏதாவது வேணுமா மா.." என்றாள் எல்லாம் எடுத்த வைத்தபடி.

"இல்லைம்மா எதுவும் வேணாம்.. அவரு இன்னும் வரலையா மா.." என்றாள் வாசலை பார்த்தபடி.

"அண்ணனும் அவரும் பில் செட்டில் பண்ணிட்டு வரேன்னு போயிருக்காங்க.. இந்த அபிதா என்ன இன்னும் காணோம்.." என்று யோசிக்கும் போதே,

"மம்மி நான் வந்துட்டேன்.. அக்கா போலாமா.. மாமாவும் அப்பாவும் கூப்பிட்டாங்க கா.." என்றபடி அவளை கைதாங்கி அழைத்து சென்றாள்.

அவளின் தோளை பற்றியபடி மெதுவாக அவளிடம் பேசியபடி அழைத்து சென்றாள்.

அங்கே காருடன் மகேந்திரனும் அமர்நாத்தும் காத்திருந்தனர். அவனை பார்த்து கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தாள் அதிதி.

அவளின் பார்வை அறிந்தும் அவளின் புறம் திரும்பாமல் வண்டியை செலுத்தினான்.

வீட்டிற்கு வெளியே போர்டிகோவில் காரை நிறுத்தியவன் அனைவரும் இறங்க இவனும் இறங்கி வேகமாக உள்ளே நுழையும் சமயம்,

"அண்ணா ஒரு நிமிஷம் இங்கே வா.." என்றழைத்தாள் பூவிழி.

தங்கையின் குரலில் வந்தவன், "என்னம்மா.." என்றான் மென்மையாய்.

"ஒரு நிமிஷம் இரண்ணோ.. உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்துர்றேன்.. உங்க கல்யாண சமயம் எல்லாருமே ஏதோ ஒரு மனநிலையில இருந்துட்டோம்.. இன்னைக்கு மனசு நிறைஞ்சி இருக்கு.. நான் இவளை என் பொண்ணாவே நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.. யாரு கண்ணு பட்டுதோ அடிபட்டு வந்து நிக்குறா.. இனியாவது உங்களோட வாழ்க்கை நல்லிருக்கனும் அண்ணா.." என்று அவனிடம் கூறியவள் உள்ளே திரும்பி,

"வசந்தா அக்கா அந்த ஆரத்தி தட்டை எடுத்துட்டு வாங்க.." என்று வேகமாய் குரல் கொடுத்தாள்.

சற்றேனும் சுயநலமாய் இருந்த தங்கை இன்று மாறியிருப்பது சந்தோஷமான மனநிலையை கொடுத்தது.

ஆனால் அது அவள் பெற்ற பெண்ணால் தான் இந்த மாற்றம் என்பதில் அதை சந்தோஷமாய் பார்த்தான் மகேந்திரன்.

இருவருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்தவள் இருவரையும் உள்ளே அழைத்து வந்தாள்.

" பூவிழி அதிதியை ரெஸ்ட் எடுக்க சொல்லு.. எனக்கு ஆபிஸ்ல இம்பார்ட்டெண்ட் ஓர்க் இருக்கு.. ஆடிட் நடக்குது.. நான் போய் அதை பார்க்கனும்.. நான் போயிட்டு வர்றேன்.. மகேன் நீங்க பாத்துக்கோங்க.." என்றபடி அங்கிருந்து கிளம்பியவனின் உள்ளுணர்வு உந்த அதிதியின் பார்வையை சந்தித்தான்.

அந்த பார்வையில் இருந்த அன்பு காதல் நேசம் ஏக்கம் என அனைத்தும் ஒன்று சேர்த்து அவனின் மனதை அவளின் காலடியில் கொண்டு சேர்த்த மனதை இறுக்கி பிடித்தவன் அவனறியாமல் அவனின் தலையசைத்து போயிட்டு வர்றேன் என்று சொல்லாமல் சொல்லியது.

அதை கண்டவளின் விழிகள் பளிச்சென மின்னி அவளின் சந்தோஷத்தை வடித்தது. கண்கள் சிரிக்க மெல்ல தலையசைத்தாள்.

அதில் தெளிந்தவன் தன்னை சிலுப்பி கொண்டு வேகமாய் சென்று விட்டான்.

"அக்கா என்ன மௌனமா ரொமான்ஸ் நடக்குது போல.." என்றபடி வந்து அவளருகில் வந்தாள் அபிதா.

"அட போ அபி உன் மாமாவை நம்பவே முடியாது.. எந்த நிமிஷம் எப்படி மாறுவார்னு.." என்றாள் விரக்தியாய்.

"அக்கா அப்படிலாம் நீங்க யோசிக்க கூடாது.. அவரு ஒரு வார்த்தை சொன்னா சொன்னது தான்.. உங்க மேல அவருக்கு விருப்பம் இருக்கு கா.. கூடிய சீக்கிரம் உங்களுக்குள்ள எல்லாம் சரியாகும்.." என்றாள் ஆறுதலாய்.

"என்னோட விஷயத்துல மட்டும் உங்க மாமாக்கு எல்லாமே மாறும் அபி.. அவரை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. என்னை அவரு நேசிச்சாலும் அதை வெளியே சொல்ல மாட்டாரு.. அது அவரோட தப்பில்லை.. அவரு இருந்த சூழல்..

இப்பவே அவரு இப்படித்தான் யோசிப்பாரு.. எங்களுக்குள்ள வயசு வித்தியாசம் தான் அவருக்கு பெருசா தெரியும்..

சரி விடு என் விதி போல நடக்கட்டும்.. ஆனா ஒன்னு இந்த ஜென்மத்துல அவரு தான் என்னோட புருஷன்.. இது அவரு கட்டுன இந்த தாலி மேல சத்தியம்.." என்றபடி கூறிவிட்டு அவள் உள்ளே செல்லவும் போகும் அவளை சிலிர்ப்புடன் பார்த்தவள் தன் அலைபேசியில் இத்தனை நேரமாய் அவள் பேசியதை பதிவு செய்ததை உடனே அமர்நாத்திற்கு அனுப்பிவிட்டவள்,

"சாரிக்கா உங்களோட காதல் நிச்சயம் மாமாக்கு புரியனும்.. அதுக்கு தான் உங்களை பேசவச்சி கேட்டேன்.. இனி மாமா தான்க்கா பேசனும்.. ஏதோ என்னால முடிஞ்சது உங்க காதலுக்கு உண்டான தூது அனுப்பிருக்கேன்.. பார்ப்போம் அதோட எதிர்வினையை.." என்றவள் உடனே தன் தம்பியை தேடி போனாள்.

இங்கே அலுவலகத்திற்கு வந்த அமர்நாத்திற்கு ஆடிட் வேலை சரியாக இருந்தது.. அதிதி இருந்தாள் ஓரளவுக்கு அவனுக்கு பக்க பலமாக இருப்பாள்.. இப்பொழுது அவளும் இல்லாமல் வேலை செய்வதால் வேறு எதை பற்றியும் அவனால் சிந்திக்க முடியவில்லை.

ஆடிட் வந்தவர்களிடம் தங்கள் கம்பெனியின் உண்மை தன்மையை விளக்கி கூறி அதற்குண்டான ஆதாரங்கள் சமர்பித்த பின்பு தான் அவனால் மூச்சு விடவே முடிந்தது. அதற்கே மாலை ஐந்து மணி ஆனது.

வேலை முடிந்ததும் தான் தன் அலைபேசியை ஆன் செய்தவனுக்கு அபிதாவின் நம்பரிலிருந்து ஏதோ செய்தி வந்திருக்க அதை ஓபன் செய்தான்.. அது ஒரு ஆடியோ மெசேஜ்.. அதை ஆன் செய்து தன் காதருகே வைத்தவன் அதில் ஓடிய தன்னவளின் பேச்சினில் மெல்லமாய் அவன் இதழ் புன்னகை பூத்தது.

அதை கேட்டு விட்டு தன் சேரில் கண் மூடி சாய்ந்து அமர்ந்தவனுக்கு அதிதியின் முகமே தோன்றி மறைந்தது.

"எங்கிருந்துடி வந்த.. நான்னா உனக்கு அவ்வளவு விருப்பமா.. நான் அப்படி என்னடி உனக்கு செஞ்சேன்.. அதி மா இது தப்பில்லையா டி.. நம்ம ரெண்டு பேருக்கும் இருக்கற இந்த வயசு வித்தியாசம் என் மனசை போட்டு கொல்லுதுடி.. நான் உனக்கு வேணாம் டி.. " என்றவனுக்கு மனம் போன போக்கில் உள்ளம் அதிர்ந்து துடித்தது.

இந்த சிறிது நாளில் அவள் மனதளவில் அவனுக்குள் நுழைந்துவிட்டாள். அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் விட்டு விலகவும் முடியாமல் அவன் மனம் தவியாய் தவித்தது.

தன் மனதை ஒரு நிலைப்படுத்தியவன் ஏதோ முடிவுடன் எழுந்தவன் அடுத்து சென்ற இடம் அவனின் நண்பனின் மருத்துவமனை தான்.

பெரிதாய் நட்பு வட்டம் இல்லையென்றாலும் ஆர்மியில இருக்கும் பொழுது அவனும் அங்கே மருத்துவதுறையில் இருந்தான்.

இரண்டு பேருக்கும் இருவரையும் பிடிக்கும் தான் என்றாலும் பெரிதாய் வெளிக்காட்டி கொள்வதில்லை.

ஆனால் தனக்கு ஒரு குழப்பம் என்றால் முதலில் அவனின் நினைவுக்கு வருவது அவன் தான்.

டாக்டர் குணசீலன் எம் பி பி எஸ் என்ற பெயர் பலகையை தாங்கியிருந்த கதவை தட்டியவனுக்கு கதவை திறந்தது மங்களகரமாய் ஒரு பெண் தான்.

அவனை கண்டதும் யோசனையில் முகம் சுருக்கியவள், "நீங்க.." என்று சற்று யோசித்தவள்,

"அமர் அண்ணா.." என்றாள் சிரித்தபடி.

" ம்ம் எப்படி இருக்க சத்யா.. குணா இல்லையா.." என்றபடி உள்ளே வந்தவனை கண்டு சிரித்தவள்,

"பாருடா அமர் அண்ணாவுக்கு எங்களை எல்லாம் கண்ணு தெரியுது.." என்று அவனை கிண்டல் பண்ணியவள் உள்ளே திரும்பி,

"என்னங்க இங்கே வந்து பாருங்க யாரு வந்துருக்காங்கன்னு.." என்று கூறியவள்,

"இருங்கண்ணா காபி எடுத்துட்டு வர்றேன்.." என்று இவனிடமும் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அதே நேரம் அங்கே வந்த குணசீலனும் தன் நண்பனை கண்டு திகைத்தபடி,

"ஏய் அமர் இது நீயா.. பாருடா எங்க நினைவுலாம் உனக்கு இருக்காடா.. வா வா இதே சென்னையில இருந்துட்டு வந்து பாக்க இவ்வளவு நாளா உனக்கு.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு டா.." என்றபடி அவனருகில் வந்தமர்ந்த குணசீலனும் கம்பீரமாய் தான் இருந்தான்.

" ஏன் நீ வந்துருக்கலாமே குணா.." என்றான் எதிர் கேள்வியாய்.

"அப்படி கேளுங்கண்ணா.. நானும் சொன்னேன் போலாம்னு.. ஆனா இவரு தான் ஓர்க் ஹெவி என்னால வர முடியலைன்னு தள்ளிட்டு வந்துட்டாரு.. இப்போ பாருங்க நீங்களே வந்து நிக்குறீங்க.." என்றபடி இருவருக்கும் காபியை கொடுத்தவள் கணவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

"தேங்க்ஸ் மா.." என்றபடி சிரித்து கொண்டே எடுத்து கொண்டான்.

"போதுமே நீ மட்டும் என்ன.. உனக்கும் தானடி வேலை இருந்துச்சி.. சரி அதை விடு.. நீ சொல்லு அமர் காரணம் இல்லாம நீ என்னை தேடி வரமாட்டியே.. சொல்லு என்ன விஷயம்னு.." என்றான் உன்னை நான் அறிவேன் என்ற பாணியில்.

காபியை உறிஞ்சியபடி இருவரையும் பார்த்தவன், "எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி குணா.." என்றான் பொதுவாய்.

அதை கேட்டு இருவரும் சந்தோஷமான முகத்துடன் நிமிர்ந்தவர்கள்,

"டேய் என்ன டா சொல்ற.. ரொம்ப சந்தோஷமான விஷயம் தானே இது.. இதுக்கு ஏன் இப்படி எதுவோ போல சொல்ற.. எப்படியோ ரொம்ப ஹேப்பி.. ஆமா உன் மனைவி என்னடா பண்றாங்க.." என்றான் குணாவும்.

"அவ என்னோட ஆபிஸ் ல தாண்டா வேலை பார்த்தா.. ஆனா அவளோட வயசு தான் எனக்கு ரொம்ப நெருடலா இருக்கு.." என்றவனின் குரலில் என்ன இருந்தது என்று கணவன் மனைவி இருவராலும் உணர முடியவில்லை.

"அப்படி என்னடா பெருசா வயசு வித்தியாசம்.." என்றான் கேள்வியாய்.

"இருபது வருஷம்.. எஸ் எனக்கும் அவளுக்கு இருபது வருஷம் வித்தியாசம்.. ஒரு எதிர்பாராத சுழ்நிலையில எங்களோட கல்யாணம் நடந்துச்சி.." என்றவன் நடந்ததை அப்படியே கூறினான்.

அதோடு தன் மனதில் இப்பொழுது தன் மனைவியாய் அவள் உள்ளாள் எனவும் தெரிவித்தான்.

"சோ வாட்.. இதுல உனக்கு என்ன டா பிரிச்சனை.. ஏன் இவ்வளவு வயசு வித்தியாசத்துல யாரும் கல்யாணம் பண்ணிட்டது இல்லையா என்ன..

அமர் உனக்கு தெரியாதது எதுவும் இல்லை.. அந்த காலத்துல எல்லாம் இப்படி சுலபமா நிறைய கல்யாணம் நடந்துச்சி.. ஏன் அவங்க சந்தோஷமா வாழலையா என்ன.. அதுமட்டும் இல்லாம உங்களை யாரும் வலுக்கட்டாயமா இந்த பந்தத்துல இணைக்கலையே.. அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணி தானே கல்யாணம் செஞ்சிகிட்டா.. அப்போ இதுல நீ வருத்தபடுற மாறி என்ன நடந்துச்சி.." என்றபடி நண்பனின் முகத்தை கண்டான்.

"அது இல்லை டா.. எனக்கு ஒரு தடவை செக் பன்றியா குணா.. என்னால ஒரு பொண்ணை சந்தோஷமா வச்சிக்க முடியுமா.. உனக்கு தெரியும் எனக்கு நடந்த ஆக்ஸிடென்ட்.. அதுல என்னோட காலை இழந்ததும் தெரியும்..

அவ சின்ன பொண்ணு டா.. என்ன தான் மனசு முக்கியம்னு நான் அவளை ஏத்துகிட்டாலும் ஏதோ ஒரு சூழ்நிலையில இந்த வாழ்க்கையை ஏண்டா ஏத்துகிட்டோம்னு அவ நினைக்க கூடாது குணா.." என்றவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று புரியவில்லை.

குணாவுக்கு அவனின் மனது புரிந்தது.. ஆனாலும் எப்படி அவனுக்கு புரிய வைப்பது என்பது தான் என்று புரியவில்லை.

அதை கேட்ட குணசீலனின் மனைவி சாரதாவோ,

"அண்ணா நாளைக்கு உங்க ஓய்ப் இங்கே கூட்டிட்டு வர்றீங்களா.." என்றாள் கேள்வியாய்.

இருவரும் அவளை ஒன்றும் புரியாமல் பார்த்தனர்.

"ஏய் சாரதா அவன் என்ன சொல்றான்.. நீ என்னடி சொல்ற.." என்றான் மனைவியிடம்.

"அதெல்லாம் நான் தெளிவா தான் சொல்றேன்.. அண்ணா நான் ஒரு பொண்ணு.. அவளும் ஒரு பொண்ணு.. நீங்க சொல்றபடி பார்த்தா நம்ம யக்ஷாவோட ரெண்டு மூனு வயசு தான் பெரியவளா இருப்பா.. நீங்க கூட்டிட்டு வாங்க.. நான் உங்க சந்தேகத்தை தீர்த்து வைக்குறேன்.." என்றாள் தெளிவாய்.

"ஏய் சாரதா நான் அவளை சந்தேகபடறேன்னு சொல்றியா.." என்றான் அமர்நாத் படபடப்பாய்.

அவளோ சிரித்தபடி, "சத்தியமா இல்லை.. உங்க மேல உங்களுக்கு சந்தேகம்.. அண்ணா பெண்களை பத்தி நீங்க இன்னும் சரியா புரிஞ்சிக்கலை.. அதுனால வந்த குழப்பம் இது.. சரி பண்ணிடலாம் விடுங்க.." என்றாள் தைரியமாய்.

ஆம் அவளும் ஒரு மருத்துவர் தான்.. மனோதத்துவ மருத்துவர்.

" அமர் சாரதா சொல்றதும் சரிதான்.. நீ உன் மனைவியையும் கூட்டிட்டு வா.." என்றான் குணாவும்.

"அதெல்லாம் சரி நான் அவளை கூட்டிட்டு வர்றேன்.. முதல்ல எனக்கு முழுசா செக் பண்ணு.. நான் அவளுக்கு தகுதியானவன் தான்னு என் மனசு முழுசா நம்பனும்.." என்றான் தெளிவாய்.

" சரி வா நர்ஸிங் ஹோம் போலாம்.." என்று தன் நண்பனை அழைத்து கொண்டவன் அதே வீட்டுடன் ஒட்டிய மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

முழுதாய் செக்கப் செய்ய இரண்டு மணி நேரம் பிடித்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் வரும் என்ற நிலையில் நண்பனுடன் பேச அமர்ந்தான்.

"அமர் இப்போ சொல்லு.. எதுக்காக இந்த செக்கப்.. எனக்கு நல்லா தெரியும் நீ சாரதா முன்னாடி சொன்ன விஷயம் இருக்குனாலும் அடுத்தது ஏதோ ஒன்னு இருக்கு.. என்னன்னு சொல்லு.." என்றான் நண்பனை அறிந்தவனாய்.

நண்பனின் புரிதலில் மென்மையாய் புன்னகை புரிந்தவன் சொன்ன பதிலில் குணசீலன் அதிர்ந்து தான் போனான்.

இங்கே பெண்ணவளும் தன்னவனின் வருகைக்காக காத்திருந்தாள் வழி மேல் விழி வைத்து.


தொடரும்...
✍️
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
65
40
18
Tamilnadu
Eythanala intha marriage nadanthuchu? Amar ay thavaira ellarukum intha marriage ok va tha iruku
 
  • Love
Reactions: MK10

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
180
43
Tirupur
டாக்டருக்கே அதிர்ச்சியாகுற அளவு அமர் சொன்ன காரணம் என்ன? 🤔🧐