வானதியின் அறையில் இருந்து வெளியே வந்ததுமே, தான் வெளியே வைத்து விட்டுப் போன அடுத்த மதுப் போத்தலை எடுத்துத் தொண்டையில் சரித்தான் அருண்மொழி.
அதுவரையில் நிதானத்தில் இருந்தவனது நிதானம் அக்கணமே சிதறிப் போக, அவனது எண்ணமெல்லாம் வானதி மட்டுமே நிறைந்து போனாள். ஆனால் பேச்சு மட்டும் தெளிவாக வந்து விழுந்தது.
அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டவள், அவனது கன்னம் பற்றித் தன் பக்கம் திருப்பினாள்.
"இப்ப என்ன குடி முழுகிப் போச்சுது எண்டு இப்புடிப் போத்திலும் கையுமா வந்தனியள்.."
"நீ தான்டி.. ஏன்டி நான் உனக்கு வேண்டாம்.."
"அதெல்லாம் முடிஞ்சு போன கதை அருண்.. அதைப் பத்திக் கதைக்க வேண்டாமே.."
"ஒண்டுமே முடியல்லைடீ.. இப்பத் தான் ஆரம்பிச்சிருக்குது.. நான் அதைப் பத்தி மட்டும் தான் கதைப்பன்.."
"அருண் பிளீஸ்.."
"நோ பேபீ.. நீ எனக்கு வேணும்.. இதுக்கு முதல் எப்புடியோ தெரியேல்லை.. ஆனா எப்ப உன்னைத் தனியாத் திரும்பப் பாத்தனோ அப்பவே முடிவு செஞ்சிட்டன்.. லைஃப் லோங் இனி உன் கூடத் தான்னு.. அதை இனி நானே நினைச்சாக் கூட மாத்த முடியாது.."
"நீங்கள் என்ன நினைக்கிறது.. நீங்கள் நினைச்சா மட்டும் போதுமோ.. நான் நினைக்க வேண்டாமோ.."
"தாராளமா நினைச்சுக்கோ.. பட் என்னையைப் பத்தி மட்டும் தான் இனி நீ நினைக்கோணும்.. பிக்கோஸ் யூ ஆர் மை ப்ராப்பெர்ட்டி.."
"உங்களைத் திருத்தவே முடியாது.. எப்புடியோ போங்கோ நான் போறன்.."
என்று கொண்டு அவனை வேகமாகத் தள்ளி விட்டு வானதி எழவும், அவள் தள்ளிய வேகத்தில் நெற்றி இடிபடக் கீழே விழுந்தான் அருண்மொழி, நெற்றி வேகமாக மோதியதில் அவனது நெற்றிப் பக்க வெள்ளைத் தோல் செக்கச் சிவப்பாக மாறிப் போக, நெற்றியைப் பொத்திக் கொண்டு அப்படியே சாய்ந்தான்.
அதைப் பார்த்ததும் பதறிக் கொண்டு மீண்டும் அவனிடம் ஓடி வந்தாள் வானதி.
"என்னாச்சு என்னாச்சு அருண்.."
"போடி நீ.."
"அச்சோ கையை எடுங்கோ முதல்ல.."
"உன்னைப் போன்னு சொன்னன்.."
"எனக்குப் போகத் தெரியும்.. நீங்கள் முதல்ல கையை எடுங்கோ.."
என்று கொண்டு அவனது கையை விலக்கிப் பார்த்தவள் பதறித் தான் போனாள்.
நெற்றியின் ஓரம் லேசாக வீங்கிக் கன்றிச் சிவந்து போய்க் கிடந்தது. அந்த வீக்கத்தை விரல்கள் நடுங்க மெல்ல வருடிக் கொடுத்தவளின் கையை வேகமாகத் தட்டி விட்டவன், அதே வேகத்தோடு எழப் போக, கால் வழுக்கி அவள் மேலேயே விழுந்தான்.
அவனின் முழுப் பாரமும் அவள் மேல் கிடக்க, அவனை எழுப்பப் பெரும் பாடு பட்டவளோ கடைசியில் களைத்துப் போய் அப்படியே கிடந்தாள்.
அவனோ பஞ்சு மெத்தை மேல் படுத்துக் கொண்ட சொகுசு போல, அப்படியே படுத்து விட்டான்.
"குடிகாரா.. எழும்படா.."
"யாருடி குடிகாரன்.."
"நீ தான்டா எருமை.. முதல்ல எழும்பித் தொலை.. மூச்சு முட்டியே செத்ருவன் போலயே.."
"கஷ்டமா இருக்கா பேபி.."
"ரொம்ப மெத்து மெத்தெண்டு அம்புட்டு சொகுசா இருக்கு.. கேக்கிறான் பாரு கேள்வி கேனைத்தனமா.. எருமை எருமை எழும்பித் தொலை.."
"நீயே எழுப்பி விடு பேபீ.."
"மலையைப் புரட்டிப் போடுற தென்பெல்லாம் எனக்குக் கிடையாதுப்பா.."
"நான் மலையா பேபி.."
"நீயி.. மலைமாடு.."
"அப்போ போடி நான் எந்திரிக்க மாட்டேன்.."
என்றபடி இரண்டு கரங்களாலும் அவளை இறுகக் கட்டிக் கொண்டவனைப் பாவமாகப் பார்த்தாள் வானதி.
"என்னடி லுக்கு.."
"பிளீஸ் எழும்புங்கோ.."
"மாட்டன் போடி.."
"சரி இப்ப நான் என்ன செய்யோணும்.."
"அப்புடி வாடி செல்லம் வழிக்கு.."
"என்ன செய்யோணும் சொல்லித் தொலையுங்கோ.."
"இங்க ஒரேயொரு கிஸ் குடு.. உடனேயே விட்டிடுறன்.."
என்று கொண்டு அருண்மொழி தன் கன்னத்தைக் காட்ட,
"முடியாது போடா.."
என்று கொண்டு தலையைத் திருப்பிக் கொண்டாள் வானதி.
"அப்ப நானும் முடியாது போடி.. பாவம் போனாப் போகுதுனு கன்னத்தைக் காட்டினா ரொம்பத் தான் நீ.."
என்று கொண்டு அவனும் முறுக்கிக் கொள்ள, அவன் பக்கம் திரும்பி அவனது கன்னத்தை மெல்லப் பற்றிக் கொண்டாள்.
அவள் கன்னம் பற்றியதும் அவனது பிடி தளர்ந்து போக, தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவனைப் புரட்டிப் போட்டவள், வேகமாக எழுந்து ஓடியே விட்டாள்.
அவளது அந்தச் செய்கையைச் சற்றும் எதிர்பாராதவன்
"ராட்சசி.."
என்று முணுமுணுத்தபடி நெற்றியைத் தடவிக் கொண்டான்.
அடுத்த நாள் அதிகாலையில் தலைக்குக் குளித்து விட்டு, கட்டிக் கொள்வதற்குப் புடைவை எடுத்துக் கொள்ள வந்த வானதி, தன் அலுமாரியைப் பார்த்ததும் திகைத்துப் போய் நின்று விட்டாள்.
அந்த அலுமாரியில் அதுவரை கிடந்த அவளது வெள்ளைப் புடைவைகள் எங்கே போயிற்றோ தெரியவில்லை, நிறப் புடைவைகள் மட்டும் அடுக்கி வைக்கப் பட்டிருக்க, போதாக் குறைக்கு அவைக்கு ஏற்றார் போல வளையல்கள், ஜிமிக்கிகள் என ஒரு கடையே அங்கே இருக்க, அலுமாரியைத் திறந்தபடியே கீழே அமர்ந்து விட்டாள் வானதி.
"என்னடி பிள்ளை.. இருந்தபடியே நித்திரையோ.. ஏதாவது ஒரு சீலையை எடுத்துக் கட்டிக் கொண்டு வா.. எல்லாமே உனக்குத் தானே.."
என்று கொண்டு அவளுக்குப் பக்கத்தில் வந்தார் கனகலக்சுமி.
அவரை அண்ணாந்து பார்த்தபடி
"இதெல்லாம் நான் கட்டினால்.. ஆரும் ஏதும் சொல்ல மாட்டினமோ அம்மா.."
என்று கேட்டவளது தலையை வருடியபடி
"அது ஒண்டும் கொலைக் குற்றமில்லையடி பிள்ளை.. புருஷன் செத்தால் வெள்ளைச் சீலை கட்டிக் கொண்டு மூலையில கிடந்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சுது பிள்ளை.. உனக்குப் பிடிச்ச மாதிரி வாழப் பழகு.. முதல்ல எழும்பு.."
என்று சொன்ன கனகலக்சுமி
"இப்ப நீ மட்டும் கலர்ச்சீலை ஒண்டை எடுத்துக் கட்டாட்டிக்கு.. வேறை வழியில்லை நான் ராசாவைக் கூப்பிட வேண்டியது தான்.."
என்று கொண்டு வெளியே போய் விட்டார்.
அவரின் ராசாவுக்கு எப்படித் தான் மூக்கு வியர்த்ததோ தெரியவில்லை, அறையின் பின் வாசல் வழியே எட்டிப் பார்த்து
"கூப்பிட்டீங்களா கனகாம்மா.."
என்று கேட்டவனைக் கொஞ்சமும் எதிர்பாராத வானதி, சட்டென்று அலுமாரியில் கிடந்த ஒரு புடவையை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டாள்.
அவனும் கூட அவள் ஒரு டவலை மட்டும் சுற்றிக் கொண்டு நிற்பாள் எனக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அவளது கோலம் கண்டதும் வேகமாக வெளியே போகத் திரும்பியவனோ ஏதோ யோசனையில் மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவசரத்துக்கு அவள் எடுத்துச் சுற்றிக் கொண்ட சிகப்பு நிறச் சேலை அவளுக்குப் பாந்தமாகப் பொருந்தி இருந்தது.
அவளையே பார்த்தபடி நிதானமாக அவளருகில் வந்தவன், சில கணங்கள் அவளையே பார்த்தபடி அப்படியே நின்று விட்டான்.
அவனது செய்கையில் சங்கடமாக நெளிந்தவளது, வெற்று நெற்றியில் அவனது பார்வை நிலைத்து நின்று விட, வானதியோ வாசலை வாசலைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அலுமாரியில் இருந்து எதையோ எடுத்தவன், அவளைத் தன்னை நோக்கி இழுக்க அவனோடு மோதிக் கொண்டு நின்றவள், சுற்றியிருந்த சேலை விலகாமல் இறுகப் பற்றிக் கொண்டு அவனை முறைத்தாள்.
தன்னைப் பார்த்து முறைத்தவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், தன் கையில் கிடந்த சாந்துப் பொட்டை எடுத்து அவளது நெற்றியில் வைத்து விட்டு, அவளைக் கண்ணாடி முன்னால் நிற்க வைத்தான். கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து விட்டு விக்கித்துப் போய் நின்றாள் வானதி.
விரல்கள் நடுங்கத் தன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவள், வேகமாக அவனிடம் திரும்பி அவனது சட்டையை இறுகப் பற்றிக் கொண்டு
"ஏன்டா ஏன் இப்புடி.. நான் உனக்கு எப்பவுமே நிம்மதியே குடுத்தது இல்லையே.. என்னால உனக்கு எந்தச் சந்தோஷமுமே இல்லை.. நான் அழகி கூட இல்லை.. பிறகு எனக்காக ஏன் இப்புடி எல்லாம்.. நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும் என்னில மட்டும் ஏன் இப்புடி அக்கறை.. நான் உனக்கு வேண்டாம்.. நீ நீ போயிடு நீ நல்ல பொண்ணாக் கட்டிக் கொண்டு சந்தோஷமா இரு.. நான் உனக்கு வேண்டாம் வேண்டாம்.. இப்புடி எல்லாம் ஏன் ஏன்.."
என்று உடைந்து போய்க் கதறி அழுதாள்.
அழுதவளது வாயைப் பொத்தியவன்
"அதுக்குப் பேரு தான்டி காதல்.."
என்று சொல்லிக் கொண்டே அவள் விழிநீரைத் துடைத்து விட்டு, அவளது கன்னங்களைத் தன் கரங்களால் ஏந்தி
"கடைசியும் முதலுமா ஒரு விஷயம் சொல்றேன் பேபி.. எனக்கு நீ அழுதாப் புடிக்காது அது உனக்கே தெரியும்.. இப்போ நான் எவ்வளவு கன்றோல்ல இருக்கேனு எனக்கு மட்டும் தான் தெரியும்.. எதையாவது தூக்கி அடிக்கோணும் போல வருது.. இனி நீ இந்த மாதிரி அழக் கூடாது.. எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.. இந்த சாறியைக் கட்டீட்டு சீக்கிரமா வா.."
எனப் பொறுமையாகச் சொன்னவன், அவளது உச்சியில் முத்தம் வைத்து விட்டு விலகிப் போய் விட்டான்.
அவன் தன் கன்னங்களைப் பற்றி இருக்கும் போது, அவன் கொடுத்த அழுத்தமே அவனது கோபத்தை அவளுக்குக் காட்டிக் கொடுத்திருந்தது.
இந்தப் புடைவையை மட்டும் உடுத்தாமல் அவள் வெளியே சென்றாள் என்றால், அதற்குப் பிறகு நடக்கப் போகும் விளைவுகளுக்கு அவளால் பொறுப்பு ஆக முடியாது என்பதால், வேக வேகமாக அந்தச் சிவப்பு நிறப் புடைவையை உடுத்திக் கொண்டாள் வானதி.
புடைவையைச் சரி செய்யக் கண்ணாடியைப் பார்த்தவளுக்கு, அவளது தோற்றம் அத்தனை தூரம் பிடித்திருந்தது. வெள்ளை நிறச் சேலையோடும் வெற்று நெற்றியோடும் வலம் வரும் போது ஒரு நாள் கூட அவள் ஆர்வமாகக் கண்ணாடி பார்த்தது இல்லை.
இன்றோ அடிக்கொரு தடவை தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்த கனகலக்சுமி ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டார்.
"என்ரை சீமாட்டி.. இப்புடியே இருந்தால் எவ்வளவு லட்சணமா இருக்குப் பாரன்.. முதல்ல என்ரை தங்கத்துக்குச் சுத்திப் போடோணும்.. என்னங்கோ என்னங்கோ இங்க ஓடியாங்கோ.."
என்று கொண்டு தன் கணவனை அழைக்க, அவரது அழைப்பில்
"என்ன கனகு.. நடு வீட்டில நிண்டு கொண்டு ஏலம் விடுறாய்.. என்ன சங்கதி.."
என்று கொண்டு வெள்ளைத் தேவர் முன்னால் வர
"அது தானே கனகு.. என்ன சங்கதி.."
என்று கொண்டு அவரின் பின்னாலேயே வந்தான் ஜனகன்.
வந்த இருவரும் வானதியைப் பார்த்ததும் வாயைப் பிளந்தார்கள்.
"கனகு முதல்ல பிள்ளைக்குச் சுத்திப் போடு.."
என்று சொன்ன வெள்ளைத்தேவர், உள்ளே போய்
ராஜேந்திரனை அழைத்து வந்தார்.
"குட்டியப்பன்.. அம்மாவைப் பாருங்கோ.. அம்மா எப்புடி இருக்கா.."
என்று கொண்டே கனகலக்சுமி ராஜேந்திரனை வானதியின் முன்னால் நிறுத்த, தாயைப் பார்த்த சின்னவனோ தன் கன்னத்தில் கை வைத்து
"அம்மாச்சீ தூப்பர்.."
என்று சொல்லிக் கொண்டே, அவளது சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே அமர்த்திக் கன்னங்களில் முத்தம் வைத்தான்.