கமலும் தன் அன்னை வந்தவுடன் உண்மையைக் கூறி டிஸ்சார்ஜ் செய்வதற்கான ஏற்பாட்டைப் பார்க்கச் சொன்னான். அம்முவிற்காக மட்டுமே அவள் பேச்சை கேட்டு இல்லம் திரும்ப சம்மதித்தான் கமல். அதுவும் அதற்கு முன்னதாக ஒரு காரியமும் கூட செய்திருந்தான்.
தன்னவள் மூலம் முதன்முதலில் அறிமுகமாகியிருந்த டீன், தானாகவே உதவுவதாகக் கூறி முன்வந்த டாக்டர் போஸ் மற்றும் சற்று முன் தோழன் எனக் கூறிச் சென்ற தேவ் மூவரிடமும், அம்முவின் உயிருக்கு ஆபத்து, அதனால் அவளை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்திருந்தான். அது மூவருக்குள்ளும் அடுத்தவர்களுக்கு தெரியாமலும் ரகசியம் காத்தான்.
மதியமே கமல் தன் இல்லம் திரும்பிட மீண்டும் ஒரு குறுந்தகவல்,
"திருடன் கையிலேயே சாவியை கொடுத்துட்டு போகும் உன்னைப் போல ஒரு முட்டாளை நான் பார்த்ததில்லை..." என்றிருக்க கமலாலுமே அதனை நம்ப முடியவில்லை...
மதியமே கமல் தன் இல்லம் திரும்பிட மீண்டும் ஒரு குறுந்தகவல், "திருடன் கையிலேயே சாவியை கொடுத்துட்டு போகும் உன்னைப் போல ஒரு முட்டாளை நான் பார்த்ததில்லை..." என்றிருக்க கமலாலுமே அதனை நம்ப முடியவில்லை...
ஆனால் இதுவரை யாராக இருக்கும் என்ற கேள்விக்கு இப்போது மூவரில் ஒருவர் தான் என்ற பதில் கிடைத்துவிடவே, இனி தன் வேலை சுலபம் என்ற நம்பிக்கை பிறந்தது. அதுமட்டும் இன்றி எதிரி யார் என்று தெரியாமல் அம்முவை யாரிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்ற போராட்டத்திற்கு விடையும் கிடைத்திருந்தது.
இந்த தகவலையும் பவனுடன் பகிர்ந்து கொண்டவன் மேலும் சில வேலைகளை பவனின் மூலம் முடித்திருந்தான்.
அங்கே அம்முவோ கமலை நினைத்து கவலை கொள்வதா அல்லது தன் மேல் அவன் கொண்ட உயிர் காதலை நினைத்து மகிழ்வதா என்று இருதலைக் கொள்ளி எறும்பாய் சுற்றித் திரிந்தாள். கூடுதல் கவலையாக கமலின் காதலை நினைத்து மகிழும் போதெல்லாம் அவளது குடும்பம் வேறு கண் முன்னே வந்து நிழலாடியது.
வழக்கமாக மாலை இல்லம் அழைத்துச் செல்ல வரும் கமல் இன்று அழைக்க வர முடியாததால் அவளது ட்யூட்டி முடியும் நேரத்திற்கு ட்ரைவருடன் காரை அனுப்பி வைத்திருந்தான். ஆனால் அதற்கு முன்னதாகவே அம்மு மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டதாக தகவல் கிடைத்திடவே, அவளது எண்ணிற்கு அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்பட, அம்முவின் குரலைக் கேட்க காத்திருந்திருந்தவனது செவிகளில் வந்து விழுந்தது தேவ்வின் குரல் தான். சந்தேகத்தோடு அதிர்ச்சி கலந்த குரலில் "தேவ்" என்றான் கமல்.
"ஐம் சாரி கமல்... நீ அவ்ளோ சொல்லியும் நான் தான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்துட்டேன்..."
"தேவ்..... என்னாச்சு? அமுலு எங்கே?" என்று படபடவென வினவினான்.
"நாங்க இப்போ ###### ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..." என்றது தான் தாமதம் அடுத்த நொடியே அழைப்பைத் துண்டித்துவிட்டு தன் உடல் உபாதையைக் கூட பொருட்படுத்தாது, மிதுன்யாவின் குரலையும் அலட்சியப்படுத்திவிட்டு தன் இருசக்கர தானுந்தை உயிர்ப்பித்து காற்றையும் கிழித்துக் கொண்டு பறந்தான்.
தேவ் கூறிய மருத்துவமனையின் வளாகத்தை அடைய சரியாக காத்திருப்பு அறையின் பக்கவாட்டிலிருந்து "கண்ணா" என்ற அழைப்போடு அவனை நெருங்கினாள் அம்மு.
அவளைக் கண்ட நிமிடமே, நொடிப்பொழுதில் உயிர் பெற்றவனாய், இரண்டே எட்டில் அவளை நெருங்கி "உனக்கு ஒன்னும் இல்லேயே!" என்று கண்களால் அவளை மேலிருந்து கீழாக நோட்டமிட்டவன், பார்ப்போர் கண்களையும் உறுத்தாதவண்ணம் அவளது தோளில் கைவைத்து தோளோடு சேர்த்து அணைத்து தன்னையும் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
காந்தனவனின் காதலில் மெழுகாய் உருகி, பனியாய் கரைந்து, முகிலாய் மலர்ந்து, மணம் வீசிக் கொண்டிருந்தவள், தன் அகத்தவனை நினைத்து செங்காந்தளாய் சிவந்து தன் உள்ளமவை கொண்ட மகிழ்ச்சியை வதனமதில் காண்பித்து நின்றாள்.
காதலிப்பது வானில் பறவைகளோடு இணைந்து பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறப்பது போல் ஒரு மகிழ்ச்சி கலந்த மாயையை உருவாக்குமென்றால், காதலிக்கப்படுவது விண்வெளியில் இரவின் மடியில் நட்சத்திரங்களோடு கை கோர்த்து, நிலவன்னையவளின் மடியில் தூளியாடும் இனிமையையும், பகலவனின் வெம்மையில் கூட இதமாய் குளிர்காய வைக்கும் மாயாஜாலம் நிறைந்த சொர்க்கத்தில் அல்லவா நம்மை ஆழ்த்திவிடும்.!!!
அப்படி ஒரு இனிமையில் தான் அம்மு தத்தித் தவழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் அவனது காதலின் எல்லை அறியும் போது அவள் மூர்ச்சையாகிப் போனாலும் அதிசயிக்க ஒன்றுமில்லை....
"கண்ணா... இந்த கையையும், காலையும் வெச்சுக்கிட்டு நீ அவசியம் இவ்ளோ கஷ்டபட்டு வரனுமா? ஏன் உன்னை நீயே இப்படி வருத்திக்கிறே!"
"ச்சீ பைத்தியம்... உன்னை பாக்க வர்றதுல எனக்கு என்ன சிரமம் இருக்கப் போகுது!!!"
"அது தான் எனக்கும் தெரியுமே! என் சேஃப்ட்டிக்காக உன் கை, காலை ஒடிச்சுக்கக் கூட ரெடியா இருக்கும் போதே தெரிஞ்சுக்கிட்டேனே!!!"
"சரி அதைவிடு.. இப்போ என்னாச்சு? ஏன் ஹாஸ்பிட்டல் வந்திருக்கிங்க?" என்றான் பொறுமையாக....
வெளியே வந்த கேள்வி மட்டும் தான் மிருதுவாக இருந்தது. உள்ளே குறுந்தகவல்க்காரன் தேவ்வாக இருக்குமோ என்ற சந்தேகம் சுடர்விட்டு எறிந்து அவனை குதறிக் கொண்டிருந்தது. கண்களும் கூட தேவ்வைத் தான் தேடிக்கொண்டிருந்தது.
அவனது எண்ணங்கள் பற்றி அறியாதவள், "ஆமா... நாங்க இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்குறது உனக்கு எப்படி தெரியும்... தேவ் சொன்னானா?"
"ம்ம்ம்...யாருக்கு என்னாச்சு?" என்று அம்முவிற்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நினைப்பே சற்று நிம்மதியைத் தர பொறுமையாகவே வினவினான்.
"நீ இன்னைக்கு வரமாட்டேனு நான் தேவ் கூடவே கிளம்பிட்டேன்..."
"அறிவு இருக்கா டி... நான் உன்னை பிக் அப் பண்ண வரலேனா உன்னை அப்படியே நட்டாத்துல விட்டுடுவேனா என்ன? எனக்கு ஒரு கால் பண்றதுக்கு என்ன!!" என்று மருத்துவமனை என்று கூட பாராது பற்களைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளை வெளிவிட்டான்.
அதிலும் அவனது காதலையே கண்டவள், அப்பாவியாய் அவனைப் பார்த்து "உன்னை லவ் பண்ணும் போதே உனக்கு தெரிய வேண்டாமா கண்ணா.... எனக்கு அதெல்லாம கொஞ்சம் கம்மி தான்னு...." என்று வழக்கம் போல் தனது பாணியில் கமலிடம் வம்பு வளர்த்தாள்.
அவளது கேலிப் பேச்சில் மூக்கு விடைத்த போதும் முகபாவனை சிரிப்பு மூட்டிட, "சரியான இம்சை டி உன்னோட.... வர வர உன் மேல முழுசா கோபப்படக்கூட முடியலே..." என்று அலுத்துக் கொண்டான்.
அவனுக்கும் தான் தெரியுமே! அவள் அவ்வளவு அவசரமாகக் கிளம்பியது தன்னை பார்க்கத் தான் என்று! அதனை அவள் வாய்மொழியாகவும் கூறியபோது அவனது உள்ளம் குளிரத் தான் செய்தது.
"தேவ் இன்னைக்கு சீக்கிரம் கிளம்பவும், உன்னை பாக்கனுன்ற ஆர்வத்துல நானும் அவன் கூடவே கிளம்பிட்டேன்... வர்ற வழில ஐஸ்கிரீம் பார்லர் பாத்ததும் ருத்து நியாபகம் வந்திடுச்சு... ருத்து மார்னிங்கே ஐஸ்கிரீம் கேட்டானேனு வாங்குறதுக்கு பார்லர் போனோம்... தேவ் பைக்கை பார்க்க பண்ணிட்டு வரட்டும்னு ரோட்டோரமா வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்... அதுக்குள்ள ஒரு கார் சடெனா இடிக்கிற மாதிரி வந்திடுச்சு... தேவ் மட்டும் என் கைய பிடிச்சு இழுக்கலேனா இந்நேரம் என் உடம்புல எத்தனை கட்டுப்போட்டிருப்பாங்கனு கூட தெரியலே.... தேவ்க்கு தான் கீழே விழுந்ததுல கையில ப்ராக்ச்சர் ஆகிடுச்சு... எக்ஸ்ரே ரிப்போர்ட் வாங்கிட்டு திரும்ப டாக்டரை பாக்கனும்...." என்று கையில் வைத்திருந்த தேவ்வின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை காண்பித்து சாதாரண விபத்து தான் என்பது போல் கூறினாள்.
ஆனாலும் நிம்மதியற்றுத் திரியும் கமலின் மனம் அதனை அப்படியே ஏற்க மறுத்து, இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கியது...
யோசனையோடு நின்றிருந்த கமலின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மருத்துவரின் அறைக்கு முன்னால் இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தேவ்வின் அருகே அழைத்துச் சென்றாள் அம்மு.
கமலைப் பார்த்ததும், "சாரி கமல்... என்னோட கேர்லெஸ் மிஸ்டேக் தான்..." என்றான் தேவ்.
"அப்படியெல்லாம் இல்லே தேவ்.... இன்ஃபேக்ட் நான் தான் தேங்க்ஸ் சொல்லனும்.... இவளை காப்பாத்த போயி கடைசி உனக்கு தான் இப்போ கஷ்டம்.... சாரி தேவ்..."
"அப்படி யாருக்கு என்ன தான் கோபம் அம்மு மேல? கொலை செய்யிற அளவுக்கு..."
ஒரு உயிரை காப்பாற்றியதைக் கூட வெளியே சொல்லிக்கொள்ள முடியாத நிலையில் தன் அமுலு இருக்கிறாள். கலியுகம் அவளை அப்படி ஒடுக்கி இருக்க வைத்திருக்கிறது... என்று நினைக்கும் போது கமலுக்குமே உள்ளுக்குள் ஒரு வெறுப்பு தோன்றியது. பெருமைக்காக இல்லாவிட்டாலும் பேச்சுக்காக கூட அவள் செய்த நற்காரியத்தை சொல்ல முடியாத, சொல்ல விடாத அரக்க குணம் படைத்த மனிதர்கள்.... என்று நினைத்து ஏளனப் புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாகக் கொடுத்தான் கமல்.
"சாரி... பர்ஸ்னல் ப்ராப்ளம்னா சொல்ல வேண்டாம்..." என்றான் தேவ்.
இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்த அம்முவிற்கு விஷயம் புதிதல்ல என்ற போதும், இன்னுமா இந்த இன்னல் தொடர்கிறது!!! மனிதனே மனித உடலை சூரையாடுவதில் அப்படி என்ன அர்ப்ப சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது என்ற வெறுப்பு.
ஒரு உயிரைக் காக்க அவனவன் குடும்பம் குழந்தை என்றும் பாராது இரவு பகலாக உழைக்க தயாராக இருக்கும் கூட்டம் ஒருபுறம் என்றாலும், உயிரைப் பறித்து அதன் உறுப்பை பிடிங்கி விற்று பணம் திண்ணும் கூட்டம் மறுபுறம்... என்ற எண்ணத்தில் அவளுமே சலிப்பான இதழ் வளைவைத் தாங்கி நின்றிட, இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த தேவ் உதடு பிதுக்கி இதழ் வளைத்து,
"எனிவே..... இன்னைக்கு எப்படியோ தப்பிச்சுட்டா! இதே மாதிரி தினமும் தப்பிச்சிட முடியுமா என்ன!" என்றிட இருவருக்கும் அப்படி ஒரு அதிர்ச்சி...
"என்ன பாக்குறிங்க... ஐம் சீரியஸ்... இன்னைக்கு ஓரமா நின்னவளை ஆக்ஸிடன்ட் செய்ய ட்ரை பண்ணிருக்காங்க.... நாளைக்கு உன் கூட வரும்போது ரெண்டு பேரையும் சேத்து போட ட்ரை பண்ணினா என்ன செய்விங்க? உங்க ப்ரச்சனைய வெளியே சொல்லாத வரைக்கும் இது கன்டினியூ ஆகத் தான் செய்யும்? மொதோ அவளை கொல்ல ட்ரை பண்றது யாருனு கண்டுபிடிச்சேயா?" என்று தேவ் வினவிட, கமல் இடவலமாக தலையசைத்தான்.
முதன்முறையாக அம்முவிற்கு உயிர் பயம் வந்தது. அதுவும் தன்னவனது உயிருக்கும் ஆபத்து என்ற போது தான்....
அதற்குள் மருத்துவர் அழைப்பதாக தாதிப்பெண் வந்து அழைத்திட அம்முவும் தேவ்வுடன் சென்றாள்.
இருவரும் உள்ளே சென்றவுடன் கமல் பவனை அலைபேசியில் அழைத்தான். "பவன் சீக்ரெட் செக்யூரிட்டி ஏற்பாடு செய்ய சொன்னேனே என்னாச்சு?"
"பண்ணியாச்சு டா... நாளைல இருந்து அம்முவுக்கே தெரியாம ஃப்லோ பண்ணுவாங்க..."
"பவன்...."
"என்ன டா?"
"நாம அல்ரெடி லேட்...." என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடித்து மனக்குமுறல் தாங்காமல் மேலும் கமலே புலம்பத் தொடங்கினான்.
"அவனுங்களுக்கு என்ன தான் டா ப்ரச்சனை? ஹாஸ்பிட்டல் இதை ஒரு விஷயமா கன்சிடர் பண்ணின மாதிரி கூட தெரியலே! ஆனா எவனோ ஒருத்தன் எங்கேயோ இருந்துகிட்டு மெசேஜ்லேயே நம்மல ஆட்டி வைக்கிறானே!" என்று கோபம் கொந்தளிக்கக் கூறினான்.
"கமல் அப்போ நீ சொல்றதைப் பாத்தா அம்முவுக்கு அந்த ஆர்கான் பையர் மூலமாத் தான் ப்ரச்சனையா?"
"என்னோட கெஸ்ஸும் அதே தான். அமுலு காப்பாத்தின அந்த பொண்ணுக்கு பதிலா இவளையே யூஸ் பண்ணிக்க பாக்குறாங்க.... கொல்லனும்னு நினைக்கிறவன் கண்டிப்பா இப்படி பூச்சாண்டி காட்டமாட்டான்..."
"நீ சொல்றது சரி தான் கமல்... அப்போ அம்முவே கிட்நாப் பண்ண ட்ரை பண்றாங்க? இன்னைக்கு நடந்த ஆக்ஸிடன்ட் சும்மா ஒரு மிரட்டல் மாதிரி தான். தேவ் காப்பாத்தலேனாலும் அம்முவை ஒன்னும் செஞ்சிருக்கமாட்டாங்க... அப்படித் தானே!"
"ம்ம்ம்.... இன்னொரு விஷயம் யோசிச்சேயா பவன்? எல்லா மெசேஜ்-ம் இன்சிடன்ட் நடக்குறதுக்கு ஒன் ஹவர்க்கு முன்னாடியே வந்திடும்... இன்னைக்கு அப்படி வரலே.... சோ இன்னைக்கு நம்ம மெசஜ்சருக்கே தெரியாம நடத்தப்பட்ட ஆக்ஸிடன்ட் தான் இது...."
"அப்போ என்ன சொல்ல வர்றே!!! அந்த மெசஜ்சர் நமக்கு ஹெல்ப் பண்றான்னு சொல்றேயா?"

சீண்டல் தொடரும்.