சாலையோர சிறிய விபத்திலிருந்து தப்பித்த அம்முவை மருத்துவமனை சென்று அழைத்து வந்தான் கமல். 'இவ்வளவு இன்னல்களுக்கிடையே அவள் வேலைக்குச் செல்ல வேண்டுமா!' என்று வருத்தம் கொண்ட மிதுன் மற்றும் விமலாவை சமாளிக்க கங்காதரன் தன் யோசனையை உரைத்தார்.
அது தான் கமல் மற்றும் அம்முவின் திருமணம். இருவரின் திருமணம் பற்றி பேசுவதற்கும், பெண் கேட்டு செல்வதற்கும் என சில காரணங்களை முன் வைத்து அம்முவின் அன்னை, தந்தையர் பற்றி விசாரித்தார் கங்காதரன்.
அவரது விசாரிப்பில் சற்று தடுமாறியவள், நாளை தன்னை பற்றியும் தன் குடும்பம் பற்றியும் அனைத்தையும் கூறுவதாகச் சொல்லி அவளது அறைக்குள் தஞ்சம் அடைந்தாள்.
மறுநாள் காலை கங்காதரன் குடும்பத்தார் காலை உணவிற்காக உணவுமேசை கூடியிருக்க, அம்மு மட்டும் அதில் இல்லாமல் இருந்தாள்.
"குட் மார்னிங் மிதும்மா" என்றபடி வந்து அமர்ந்த கங்காதரன்... " எங்கே சின்ன மருமகளை மட்டும் காணலே!" என்று அக்கரையாக விசாரித்தார்.
உணவில் கை வைப்பதற்கு முன் இந்த கேள்வியை யாரடா கேட்பார் என்று ஆவலாக காத்திருந்திருந்த கமல் "இதோ பாத்துட்டு வரேன் ப்பா" என்று உரைத்து சட்டென எழுந்து புயல் வேகத்தில் நான்கு படிகளை தாவியிருந்தான்.
பாய்ந்து சென்றவனை நிறுத்தியது மிதுனின் குரல் "கமல் நில்லு... அம்மு அவ ரூம்ல இல்லே!" என்றிட
காலைப்பொழுதில் அவளது தரிசனத்துடன் கட்டியணைத்து, இதழ் முத்த பரிமாற்றம் முடித்து அழைத்து வரலாம் என்று எதிர்பார்ப்போடு புறப்பட்டவனுக்கு சற்று ஏமாற்றம் ஆகியதோடு, 'ஏன்? எங்கே சென்றாள்? நல்லிரவு வரை கூட குறுந்தகவல் பகிர்ந்து கொண்டவள் இப்போது சொல்லாமல் கொல்லாமல் எங்கே சென்றாள்! என்ற குழப்பத்தோடு படியில் அப்படியே நின்றிருந்தான்.
அனைவரது பார்வையிலும் 'சாப்பிடாமல் கூட எங்கே சென்றாள்?' என்ற கேள்வியோடு மிதுனைத் தான் பார்த்திருந்தது.
"இன்னைக்கு சீக்கிரமாவே ஹாஸ்பிட்டல் வர சொன்னதா சொல்லி அப்போவே ஹாஸ்பிட்டல் போயிட்டா" என்றாள் மிதுன்.
கமலுக்கு மட்டும் அல்ல, கங்காதரனுக்கும் கூட தெளிவாகவே புரிந்தது, அம்மு தன் குடும்பத்தைப் பற்றிய ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறாள் என்று.
'அவளுக்கு என்ன தான் ப்ரச்சனை! அவள் குடும்பத்தைப் பற்றிக் கூற ஏன் இவ்வளவு தயங்குகிறாள்!' என்ற சிந்தனையோடும் 'இவ்வளவு தூரம் சொல்லியும் என் மேல் நம்பிக்கையில்லாமல் இப்படிச் செய்கிறாளே!' என்று கோபத்தோடும் கமல் தன் காலை உணவைத் தவிர்த்து அடிபட்ட கையோடு கடைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
கங்காதரனோ இப்போதே மருத்துவமனை சென்று தன் சின்ன மருமகளிடம் இது பற்றி பேசி தைரியம் சொல்லவதோடு 'அவளது விருப்பம் தான் அனைத்தும், அதனைத் தாண்டி இந்த குடும்பமோ கமலோ எதுவும் அவளை கட்டாயப்படுத்த மாட்டார்கள்' என்று நம்பிக்கையூட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினார்.
மூவரின் கண்ணிமூச்சி ஆட்டத்தில் யார் தான் வெல்லப்போவது! நாளைய சிக்கலை நினைத்து அஞ்சி உண்மையை மறைக்கும் அம்முவா? இல்லை சொன்னால் தானே தீரும்! என்று எண்ணும் கமலா? அதுவும் இன்றி உன் வாழ்க்கை உன் விருப்பப்படி வாழ் என்று தன் மக்களைப் போல் மருமகளுக்கும் கற்றுத்தர நினைக்கும் கங்காதரனின் எண்ணமா? விடை ஆண்டவள் கையில் தான் இருக்கிறது.
பொய் சொல்லி வெகு விரைவாகவே மருத்துவமனை வந்த அம்முவிற்கோ என்ன செய்வது என்று ஒன்றும் ஓடவில்லை. தன் பணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தவள் தன் எண்ணை ப்ளாக் செய்து வைத்திருந்த தன் தமையனின் அனைத்து சமூக ஊடகத்திற்குள்ளும் புகுந்து ஒரு அலசு அலசிவிட்டாள்.
தமையனைச் சென்றடையும் வழி தான் இன்னமும் கிடைத்தபாடில்லை. தந்தை தன் எண்ணை ப்ளாக் செய்யவில்லை என்ற போதும் ஏனோ அவருக்கு குறுந்தகவல் அனுப்ப அவளுக்கு மனம் வரவில்லை.
இந்த விஷயத்தில் நாளுக்கு நாள் கோழையாக மாறி முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாக கமலின் முன் நிற்கப் போகிறோம் என்று சிந்திக்காமலும் அவளால் இருக்க முடியவில்லை.
இதற்குத் தீர்வு ஒன்று கமலின் காதுகளுக்கு விஷயம் சென்றடையாமல் தானே தன் குடும்பத்தோடு போராடுவது... இல்லை கங்காதரன் குடும்பத்தாரிடம் உண்மையை உரைத்து கமலுடன் போராடுவது.... என்று ஒரு முடிவுக்கு வந்த பின் தான் சற்றே நிமிர்ந்து நிற்பது போல் உணர்ந்தாள் அம்மு.
சற்று நேரத்திற்கெல்லாம் தன்னைத் தேடி ஒரு பெரியவர் வந்திருப்பதாக பணி பெண் கூறிச் செல்ல, அது கங்காதரனாகத் தான் இருக்கும் என்று நினைத்து தன்னைப் பற்றியும் தன் குடும்பம் பற்றியும் கேட்டால் இப்போது கிடைத்திருக்கும் தனிமையில் உண்மையை உரைப்பது தான் உசிதம் என்று நினைத்து நிமிர் நடையிட்டு காத்திருப்பு அறை நோக்கிச் சென்றாள்.
அங்கே இருந்த நபரைக் கண்டதும் இத்தனை நாள் இருந்த வைராக்கியம் காணாமல் போக ஓடிச் சென்று அவரை அனைத்துக் கொண்டாள்.
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பதற்கு ஏற்ப, கல் நெஞ்சக்காரியாய் அவள் இருந்துவிட்ட போதும், பித்து பிடித்த பெற்ற மனம் அவளுக்கு நேர்ந்த விபத்து பற்றி கேள்வியுற்று அடுத்த நொடி பிள்ளையைக் காண மருத்துவமனை வந்து சேர்ந்தது.
ஆம் அம்முவின் தந்தை தியாகராஜன் அவளைத் தேடி அவள் பணிபுரியும் மருந்துவமனை வந்துவிட்டார்.
வெகு நேரம் அவளின் "ப்பா" என்ற வார்த்தையைக் தாண்டி வேறு எதுவும் வராமல் இருக்க, அதிலேயே தியாகராஜன் தன் தவறை தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டார்.
"அப்பாவே ரெம்ப மிஸ் பண்ணினேயா டா அம்மு?" என்று கலங்கிய குரலில் கேட்க, "ரெம்ம்ம்பபபப...." என்று ஒற்றை வார்த்தையாகக் கூறினாலும் அவரை சாடும் குரலில் பதிலளித்தாள் அவரது செல்ல மகள்...
அம்முவின் குற்றச்சாட்டு புரிந்த போதும் தன் மகளின் வீக்னஸ் அறிந்து அடுத்த கேள்வியை முன் வைத்தார் அவர்.
"கமலை மிஸ் பண்ணியதை விடவா!!" என்று அவர் கேட்ட தோரணையில் அத்தனை கேலி.
"ப்பா..." என்று சிணுங்கினாலும் இல்லை என்ற பதிலைக் கூற முடியவில்லை அவளால். எப்படி உரைப்பாள்! இருபத்து ஐந்து வருட பாசத்தையும் தாண்டி கமலின் மேல் பித்தாகித் திரிபவளால் அவனுக்காக அனைவரையும் இழந்து வாழத் தயாராக இருந்ததை எப்படி அவளே ஒப்புக்கொள்வாள்!!! அப்படியே ஒப்புக் கொண்டாலும் பெற்ற மனம் அதனைத் தாங்காது என்று அறிந்தவளால் அதனை வாய் தவறிக் கூட உரைத்திட முடியாதே!!!
"எப்படி டா இருக்கே!!"
"நல்லா இருக்கேன் ப்பா..." என்று மட்டுமே அவளால் கூற முடிந்தது. மனதில் அவ்வபோது உருவெடுத்து ஆடிக் கொண்டிருக்கும் உறுத்தலையும், வலியையும் தந்தையிடம் இறக்கி வைக்க முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது...
அவளின் பதிலில் தியாகுவிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது... "என்னத்தே நல்லா இருக்கே!!! நேத்து தான் அவ்ளோ பெரிய ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு... இன்னைக்கு இதோ டியூட்டிக்கு வந்து நிக்கிறே!
அந்த கங்காதரன் உன்னை என்னத்தே கவனிச்சுக்கிறான்னு தெரியலே! அவன் பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் இப்படி வேலைக்கு அனுப்பி வெச்சிருப்பானா!!! இல்லே இந்த பவனும் கமலும் தான் பாடிகார்ட் வேலை பார்க்காம அவனுங்க வேலைய பாக்கப் போயிருப்பானுங்களா!!!" என்று மன குமுறலைக் கொட்டினார்.
தன் தந்தையின் பேச்சில் இருந்த அன்பை மட்டும் கண்டவள் அவரது கூற்றில் ஒன்றை கூர்ந்து கவனிக்க மறந்தாள். தனக்கு நேர்ந்த விபத்து எப்படி அவரது காதுகளுக்கு எட்டியது என்று விசாரித்திருந்தால் அப்போதே தெரிந்திருக்கும் விபத்தை நிகழ்த்தியது யார் என்று...
"அப்ப்ப்பா...." என்று அவரது செல்லமகள் கண்டிப்பு குரலில் அவரை அடக்கிட, அந்த பேச்சை விடுத்து அடுத்த பேச்சிற்குச் சென்றார் தியாகு...
"உன் அத்தை எப்படி இருக்கா?"
"ரெம்ப நல்லா இருக்காங்க... வாங்கலேன் வீட்டுக்கு போயி அவங்களை பாத்துட்டு, அவங்க கையால சமச்சதை சாப்பிட்டுட்டு வரலாம்!!!" என்றாள் சற்று கேலியாக,
"நான் வரலே.... அங்கே வந்தா உன் மாமன் ஓவரா பண்ணுவான். அவளுக்கு தாலி கட்டியிருக்கான்ல! அந்த உரிமையை நிமிஷத்துக்கு நிமிஷம் என் முன்னாடி அவகிட்ட காண்பிப்பான்...." என்று பொறாமையோடு முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு உரைத்தார் அவர்.
அதில் நமட்டு சிரிப்பு சிரித்தவளைப் பார்த்து அவள் தந்தை முறைத்திட, அவளும் கை கொண்டு தன் வாயை மூடி பயப்படுவது போல் பாசாங்கு செய்தாள். அதில் இன்னும் கொஞ்சம் கடுப்பாகி முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான் தியாகு.
பொய்க்கோபமாய் முறுக்கி கல் கொண்டு திரியும் தந்தையின் மனதை மாற்ற "அப்போ கடைவீதி பக்கமா போயி உங்க மருமகனை பாத்துட்டு வருவோமா?" என்றாள்.
"ஏன்!!! நீ காலையில இருந்து உன் ஆருயிர் காதலனை பாக்கலேயோ!!!" என்று இப்போது அவர் நக்கலாகக் கேட்க, தன்னை தன் தந்தை கண்டுகொண்டாரே என்று நினைத்து அசடு வலிந்த போதும், தனக்கும் தன் தந்தைக்கும் இருக்கும் புரிதலை நினைத்து சற்று கர்வமும் தெரிந்தது அவளது முகத்தில்.
மகளின் மலர்ந்த முகத்தையும் தாண்டி தலைப்பு தெரிந்திட மெல்லிய தலை வறுடலுடன் "மார்னிங் என்ன சாப்பாடு டா சமைச்சா உன் அத்தை?" என்று சாப்பிட்டிளா இல்லையா என்பதை மறைமுகமாக வினவினார்.
பெற்றவரின் உள்நோக்கம் அறிந்தவள் அவரது பாசத்தின் முன் பொய்யுரைக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாள். "பொங்கல் ப்பா"
"சக்கரை பொங்கல் நல்லா இருந்ததா?"
இப்போது தந்தையின் கேள்வியில் இருக்கும் அர்த்தம் புரிபடாமல் போக சொன்ன பொய்யை அப்படியே வலிநடத்திச் சென்றாள்.
"ப்பா சக்கரை பொங்கல எப்படி ப்ரேக் ஃபாஸ்ட்டா எடுத்துக்க முடியும்!!!. ஏதோ நல்ல நாள்னா காலம்பர கொஞ்சமா சாப்பிடலாம்... அதையே எப்படி ஃபுல்லா சாப்பிட முடியும்... அத்தை இன்னைக்கு வெண்பொங்கல் சமைச்சாங்க..."
"ஆமா ஆமா... நீ சொன்னா சரியா தான் இருக்கும்..... எல்லாரும் ஒன்னா தான் உக்காந்து சாப்பிட்டிருப்பிங்க!!"
"ஹாங்... எப்பவும் அப்படித் தான்"
"இன்னைக்கு எப்படி உன் மாமன் சாப்பிடும் போது மூக்கையும், வாயையும் சேத்து அடச்சுகிட்டு சாப்ட்டானா?" என்றதும் தான் பெண்ணவளுக்கு அந்த விஷயமே நியாபகம் வந்தது, விமலா வெண்பொங்கல் சமைக்கமாட்டார் என்பது.
ஒருமுறை வெண்பொங்கல் தன் விருப்ப உணவு என்று விமலாவிடம் கூறியபோது கங்காதரனுக்கு வெண்பொங்கல் பிடிக்காது என்பதால் விமலா பல ஆண்டுகளாக வெண்பொங்கல் சமைத்ததே இல்லை என்று கூறியதும், அவளுக்காக ப்ரத்யேகமாக சமைத்துக் கொடுத்ததும். கங்காதரனுக்கு மட்டும் அல்ல, பலனும் கமலும் கூட உண்ணமாட்டார்கள். காலையிலேயே பச்சரிசி சாதம் உண்டுவிட்டு கடையில் சென்று அமர்ந்தால் உறக்கம் தான் வரும் என்று அவர்களும் உண்பதில்லை.
'ஆனாலும் இந்த அப்பா இவ்வளவு தூரம் மாமாவைப் பத்தி தெரிந்து வைத்திருக்கவில்லை என்றால் தான் என்னவாம்!' என்று சலிப்பாக மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் கூறிய பொய்யை மேலும் தொடர்ந்தாள்.
"அவர் சாப்பிடலேனா என்னவாம்! என் அத்தை எனக்காக சமச்சாங்க..." என்று பெறுமைபோல் கூறி சமாளித்தாள்.
"சரி தான்.... ஆனா எனக்கு பசிக்கிறது... சாப்பிட போலாமா?" என்றுஅவள் அடுக்கடுக்காய் கூறிய பொய்யை யெல்லாம் நம்பாமல் மகள் உண்ண வலிவகுத்தார்.
ஆனால் அம்முவிற்கு தான் ஏதோ போல் ஆகிவிட்டது. தன் தந்தை சாப்பிட்டாரா இல்லேயா என்று கூட கேட்காமல் இவ்வளவு நேரம் வாய்யடித்துக் கொண்டிருந்தோமே என்று தன்னையே கடிந்து கொண்டு உணவகம் நோக்கி அழைத்துச் சென்றாள்.
காலைப்பொழுதில் தன் சந்திப்பைத் தவிர்த்து விரைவாக மருத்துவமனை சென்றிருந்த அம்முவைத் தேடி இப்போது அங்கே வந்திருந்த கங்காதரன் அம்முவுடன் இணைந்து செல்லும் தியாகராஜனைப் பார்த்து அப்படியே சிலையென நின்றுவிட்டார்.
அவரது மனதில் பல போராட்டங்கள்.... இவனது மகளான அம்மு! என்று அதிர்ச்சி அதில் அதிகமாகவே இருந்தது. இத்தனை நாள் அம்முவின் பின்புலம் அறிந்து கொள்ளாமல் போன தன் மடத்தனத்தை நினைத்து நினைத்து நொந்து போனார்.
அதேநேரம் முந்தைய நாள் கமல் கூறிய அவனது 'காதல் எதிரி' யார் என்பதும் புரிய ஆண்டுகள் பல கடந்தும் கொஞ்சமும் மனவலி குறையாது இடிந்த மனதோடு நின்றிருந்தார். ஏனோ அவரது பார்வை என்றும் இல்லாமல் இன்று நம்பகமற்று அம்முவை காற்றில் பின்தொடர்ந்தது.
மனமோ எதிர்காலத்தை படமிட்டு காட்டுவது போல் மாயத்திரையை உண்டாக்கியது. அந்த எதிர்காலத் திரையில் குடும்ப உறுப்பினர் ஒருவர் நிச்சயம் இருக்கப்போவதில்லை என்று தோன்றிட மேலும் மேலும் அயர்ந்து கலைத்து உடல் வியர்க்க, ரத்த அழுத்தம் குறைந்து மருத்துவமனை வாசலிலேயே மயக்கமடைந்தார்.

சீண்டல் தொடரும்.