• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 40

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
உறக்க மருந்தின் வீரியத்தில் நன்றாகத் தூங்கி எழுந்த அம்மு, முதலில் கண்டது கமலைத் தான். அவன் தான் அவள் எப்போதடா விழிப்பாள் என்று அவள் பார்வைக்கு நேராகத் தானே அமர்ந்திருந்தான்!

தன்னை மட்டுமே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை முறைத்து விழித்தாள் அம்மு. 'என்னை விரட்டி விட்டுட்டு இப்போ மட்டும் எதுக்கு சீன் போட்டுகிட்டு மூஞ்சிக்கு நேரே வந்து உக்காந்திருக்கான். இதுல நீங்க யாருனு கேட்டதும் ஒரே அழுவாச்சி சீன் வேற... இந்த டாக்டர் சார் எங்கே போனார், எப்பவும் கூடவே இந்த ரூம்லயே கிடக்குறவர், இவனை மட்டும் தனியா அனுப்பி வெச்சிட்டு எங்கே எஸ்கேப் ஆகிட்டார். அதான் இந்த திருட்டு ராஸ்கல் என்கிட்ட அப்படி நடந்துகிட்டான்' என்று நடந்த விபரீதம் தெரியாமல் தன் மனதிற்குள், கமலை சக்கை பிழிந்து கொண்டிருந்தாள்.

தன்னை முறைத்துக் கொண்டே இருந்தவளைப் பார்த்து ஒற்றைக் கண் சிமிட்டி நடப்புக்குக் கொண்டு வந்தவன், அதிர்ச்சியாய் விழி உருட்டிப் பார்த்தவளுக்கு இதழ் குவித்து காற்றில் பறக்கும் முத்தமும் பரிசளித்தான்.

அதில் மீண்டும் பொங்கி எழுந்தவள், படுக்கையை விட்டு எழுந்து வந்து அவன் அமர்ந்திருந்த ஒற்றை சாய்விருக்கையில் அவன் மடியில் இருபக்கம் காலிட்டு அமர்ந்து, சில பல அடிகளோடு தான் ஆரம்பித்தாள்.

"யூ.... யூ.... ராஸ்கல்... உன்னாலத் தான் டா எல்லாம்... நீ மட்டும் அன்னைக்கே நான் சொல்ல வந்ததை ஒரு நிமிஷம் கேட்டிருந்தா இன்னேரம் எனக்கு இந்த ஆக்ஸிடன்ட் நடந்திருக்குமா! நான் பழசை மறந்து எனக்கு இவ்ளோ பெரிய ஆப்ரேஷன் பண்ணி படுக்கையிலே கிடந்திருப்பேனா...

ஏதோ டாக்டர் சார் நல்லவரா இருக்கப்போயி எனக்காக ரிஸ்க் எடுத்து என்னை காப்பாத்தி என் ஃபேமிலிய உன்னை எல்லாரையும் என் கண்ணுல காட்டிருக்காரு... அவரு மட்டும் இல்லேனா நான் எப்பவோ பரலோகம் போயிருப்பேன்..." என்று அவனை அடிக்கும்போது வலியெடுக்கும் தன் கை வலியையும் தாங்கிக் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு நேரம் அவளது அடிகளை தாங்கி, அவள் நெருக்கத்தை விரும்பி ஏற்றிருந்தவன், அவளது கடைசி சில வார்த்தைகளில் அவள் கைகளை இருக்கிப் பிடித்து அவளது முதுகின் பின்னால் அழுத்தி வைத்து, பற்களை நரநரவென கடித்தான்.

அவனது முக மாற்றத்தைக் கண்டவள், சற்றே உள்ளே சென்ற குரலில் "என்ன?" என்றாள்.

போஸ்-ஸின் 'அதிகப்படியான சந்தோஷத்தையோ, அதிகப்படியான அதிர்ச்சியையோ அவளது மூளை இன்னும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடையவில்லை... அதனால் இரண்டையும் தவிர்ப்பது நல்லது' என்ற அறிவுரையை மனதில் ஒருமுறை ஓட்டிப் பார்த்தான்.

அவளது மனநிலைக்கு இப்போதைக்கு தேவ் என்னும் அயோக்கியன் பற்றியும், அவனது ஏமாற்று வேலைகளையும் உரைப்பது உசிதமல்ல என்று உணர்ந்து, கட்டாயப்படுத்தி புன்னகையை வரவழைத்து, தேவ் கூறிய கட்டுக்கதைக்கு ஏற்ப அவனும் ஆடத் தொடங்கினான்.

"உன் டாக்டர் சார் நல்லவர் தான். ஒரு மனிதநேயம் உள்ள டாக்டர் இதைத் தான் செய்யனும். யாரோ ஒருத்தர் தானே நமக்கென்ன வந்ததுனு ஒதுங்கிப் போகாம, உதவி செய்ய முன் வரனும் தானே! இல்லே இப்போ இதை செய்தா பின்னாளில் நம்ம பாக்கெட் நிறையுமானு பார்த்தா செய்வாங்க!!! ஒரு டாக்டரா தான் படிச்ச படிப்புக்கு என்ன செய்யனுமோ அதைத் தானே அவரும் செய்தார். இதுக்கு எதுக்கு நீ இவ்ளோ ரியாக்ட் பண்ணுறே!" என்று தன்னவள் மனதில் உயர்ந்து நிற்கும் தேவ்-ஐ மெல்ல மெல்ல இறக்க முயற்சித்தான்.

ஆனால் அவனது இந்த பேச்சு பூம்மராங் போல் அவனையே திருப்பித் தாக்குவதாக, அவளது பேச்சை இருமடங்காக்கியது. வழக்கம் போல் அவனது இம்சை இதனை பொறாமையால் உண்டான கோபம் என்று நினைத்து, அவனை இம்சிக்கக் கிடைத்த துரும்புச் சீட்டாய் இதனைப் பயன்படுத்தி மேலும் மேலும் கோபமூட்டும் விதமாக, தேவ்-ஐ புகழ்ந்து தள்ளினாள்.

"என்ன தான் இருந்தாலும் இவ்வளவு பெரிய ஆப்ரேஷன் செஞ்சு, இத்தனை நாள் கூடவே இருந்து எனக்காக மட்டுமே என்னையும் என் இம்சையையும் சகிச்சுகிட்டார் இல்லையா! சோ அவர் கிரேட் தான்..."

மீண்டும் பல்லைக் கடித்தவன், இதற்கு மேல் இவளிடம் பேசினால் தன் வாய் அமைதியாக இருக்காது என்று உணர்ந்து, "சரி தான் போடி..." என்று தன்மேல் அமர்ந்திருந்தவளை இறக்கிவிட்டு எழுந்து சென்றான்.

அவனது இம்சையும் அவனை விரட்டிப் பிடித்து அவன் பின்னாலேயே நடந்து வந்து, "யூ நோ ஒன் திங் கண்ணா..." என்று சத்தமாக வினவி விட்டு, ரகசிய குரலில் "அந்த டாக்டர் என்னை லவ் பண்றார்னு நினைக்கிறேன்" என்றாள்.

ஒரு நொடி நின்று அவளை முறைத்தவனிடம், "காட் பிராமிஸ்" என்று தன் குரல்வளையை இரு விரல்களால் பிடித்து அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, கண்களை உருட்டிக் காட்டி உரைத்தாள்.

அவளது வார்த்தைகளில் உச்சகட்ட கோபம் கொண்டவன், பற்களை நரநரவென கடிப்பது அப்பட்டமாக வெளியே வரை கேட்க, பெண்ணவள் மென்னகை புரிந்து, மீண்டும் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

கோபம் கொண்ட அறிவிற்கு இப்போது தான் புரிந்தது, அவள் தன்னை சீண்டி தூண்டிவிடுகாறாள் என்று. அவளது முகம் கொள்ளா நக்கல் சிரிப்பில் கவரப்பட்டவன் தேவ்வின் மேல் மூண்ட கோபத்தையும் மறந்து, மெல்லிய குரலில் "லூசு..." என்று அவள் முன்னந்தலையில் தட்டிவிட்டு மீண்டும் அறை வாசலை நோக்கிச் சென்றான்.

அறை கதவில் கை வைத்த நேரம், மீண்டும் விரட்டி வந்து அவன் முன்னால் நின்றதோடு தன் கால்களை பின்னால் எட்டு வைத்து பின்பக்கமாக நடந்த படியே, "சீரியஸ்லி கண்ணா.... நான் உன்னை பத்தி அவர்கிட்ட ஷேர் பண்றதுக்கு காதல் பத்தி பேச்செடுப்பேன். ஆனால் அவர் சிரிச்சுகிட்டே என்னை பார்ப்பாரே ஒழிய நான் என்ன சொல்றேன்னு கவனிக்கவே மாட்டார். எனக்கு சிரிப்பு தான் வரும்... ஒருநாள் நல்லா ஏமாற போறார்னு நெனப்பேன்..." என்று அதுவரை இயல்பாக பேசியவள் திடீரென சந்தேகம் எழ, "ஆனா உன்னை யார் இங்கே அழச்சிட்டு வந்தா!!! மிஸ்டர் அரக்கன் டாக்டரா?" என்று போஸ்-ஐத் தான் அவ்வாறு வினவினாள்.

போஸ்-ஐ அவள் குறிப்பிட்ட விதத்தில் காந்த சிரிப்போடு, "இதை மட்டும் அவர் கேட்டிருந்தா அவ்ளோ தான். அவர் உன்னை தன் பொண்ணு மாதிரி நினைக்கிறார். ஆனா நீ.... அரக்கன் ரேஞ்ச்-ல இமாஜின் பண்ணி வெச்சிருக்கே!!!" என்று நடப்பதை நிறுத்தி பதில் கூற, இப்போது தான் அம்மு சுற்றம் உணர்ந்தாள்.

அறையை விட்டு வெளியேறுவது அவளுக்குப் புரியத் தான் செய்தது. ஆனால் இத்தனை நாள் மருத்துவமனை அமைப்பில் இருந்த அறைக்குள் முடங்கிக் கிடந்தவளது மனம், தான் இருப்பது ஒரு மருத்துவமனை என்று தான் மூளையில் பதித்திருந்தது. ஆனால் தன் அறைக்கு அப்பாற்பட்ட விடயங்கள் அனைத்தும் மாடமாளிகை என்று அவளது கண்கள் உரைக்க அதனை மனம் தான் ஏற்க மறுத்தது. ஒரு நொடியில் தலையில் கை வைத்து நின்றவளை சட்டென வலைத்துப் பிடித்து தன் மேல் சாய்த்துக் கொண்டான் கமல். அவளது பார்வை சுற்றி வருவதையும், அதில் ஏற்பட்ட முக மாற்றத்தையும் கொண்டே அவளது மனதைப் படித்தவன்,

"அமுலு... இன்னும் நிறைய ஷாக்கிங் ஸர்ப்ரைஸ் இருக்கு... கொஞ்சம் தைரியமா இரேன்... ப்ளீஸ் எனக்காக டி... நான் எப்பவும் உன் கூடவே தான் இருப்பேன்... என்னை நம்பு..." என்றவனை,

அவள் குற்றம் சாட்டும் பார்வை பார்த்திட, "என் காதலை நிரூபிக்க எனக்கும் ஒரு ச்சான்ஸ் கொடு..." என்று இரைஞ்சும் குரலில் கண்களிலும் அதே எதிர்பார்ப்போடு வினவினான்.

அவனது வாய்மொழி வார்த்தை அவளுக்கு நம்பிக்கை கொடுத்ததோ இல்லையோ! ஆனால் கண்கள் அந்த நம்பிக்கையை கொடுத்தது. 'மீண்டும் ஒருமுறை உன்னைப் பிரிய மாட்டேன் கண்மணியே!' என்று வெறுமனே உரைக்காமல், அதனை தன் மனதில் பதிக்க தன்னிடமே அனுமதி வேண்டி நிற்பவனை தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டாள்.

மேலும் அவன் கையை இருக்கிப் பிடித்தபடி அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள். கமல் அவளை நேரே அழைத்துச் சென்றது அவர்களது குடும்பம் அடைக்கப்பட்டிருந்த அறைக்குத் தான்.

அறை கதவைத் திறந்ததும் அம்முவின் கண்கள் முதலில் கண்டது, நேத்ராவின் மடியில் தலை வைத்து படுத்திருந்த அகிலனும் அவன் அருகே அமர்ந்து நேத்ராவுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த ரூபினியும் தான். அடுத்ததாக தன் தந்தையின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த விமாலவும், கங்காதரனின் கைகளைப் பிடித்தபடி பேசிக்கொண்டிருந்த சித்தப்பாவும் தான். பார்க்கும் போதே தெரிந்தது கனகவேல் கங்காதரனினடம் மன்னிப்பு வேண்டுகிறார் என்று.

இதனைத் தானே அவளும் விரும்பினாள். கண்களில் இந்த காட்சிகளை பதிவு செய்தபடி அவளது இதழ்கள் கீற்றாய் விரிந்து மெல்லிய குரல் எழுப்பிட, அந்த அரவம் கேட்டு நிமிர்ந்து வாசலைப் பார்த்தவர்கள் நொடியில் அவளைச் சுற்றிக் கொண்டனர்.

அதன்பிறகு அங்கே மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. தன்னைக் கண்டு அழுவோர்களுக்கு அம்முவே ஆறுதல் கூறும் அளவிற்கு தேரியிருந்தாள். மனதின் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியோ! என்னவோ! அவளை புத்துணர்வோடு காண்பித்தது.

அன்று இரவே அனைவரும் தங்களது இல்லம் நோக்கி பயணிக்க, கமல் தான் தவித்துப் போனான். காலில் விழுகாத குறையாக அம்முவிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டான். அவள் தன் இல்லம் தான் செல்வேன், மதுரை வரமாட்டேன் என்று விட்டாள்.

செல்லும் வழியெங்கும் குறுந்தகவல்கள் மூலம் அவளை கரித்துக் கொண்டே தான் பயணித்தான். மதுரை வந்து சேர்ந்த நிமிடத்திலிருந்தே, மண்டபம் பார்க்கிறேன் என்று பறக்கவும் தொடங்கியிருந்தான்.

"டேய் கமலகண்ணா... மானத்தை வாங்காதே டா... மொதோ பொண்ணு பாக்கணும்... அப்பறம் பூ வைக்கனும்.... அதுக்கப்பறம் நிச்சயம் பேசனும்... கல்யாணத்துக்கு மூனு நாளைக்கு முன்னாடி நலங்கு வைக்கனும்... இடையிலே மெஹெந்தி ஃபங்ஷன் இருக்கு... அப்பறம் முதல் நாள் ரிஷப்ஷன் வேற இருக்கு... அதுக்கப்பறம் தான் டா கல்யாணம்... நீ இப்போவே மண்டபம் பாக்குறேனு திரியிறே!"

"ஏது! மெஹெந்தி ஃபங்ஷனா? இப்போ இதெல்லாம் முறைப்படி சம்பிரதாயமா பண்ண சொல்லி நாங்க கேட்டோமா!!!" என்றான் கடுகடுப்பாக...

"நீ தான் டா வேண்டாங்குறே! என் மருமகளுக்கு இதெல்லாம் செய்து தான் கல்யாணம் நடக்கனும்னு எப்பவோ சொல்லிட்டா டா... மும்பைல படிச்ச பொண்ணுல... அதான் அங்கே ஃப்ரெண்ட்ஸ் கல்யாணத்துல பார்த்து ஆசை வந்திருக்குமா இருக்கும்... ஃபங்ஷன் லிஸ்ட் போட்டதே அவ தான்..."

"சதிகாரி.... என்னை புலம்ப விடுறதுக்குன்னே பண்ணிருப்பா!!! இம்சை" என்று முனுமுனுக்க சரியாக அவனது இம்சையிடம் இருந்து அழைப்பு வந்தது.

திறன்பேசியை உயிர்ப்பிக்கும் முன் தனிமை தேடியவன், சட்டென அவனது அறைக்குப் பறந்தான். கதவைச் சாத்தும் வரை கூட பொறுமை காக்க முடியாமல், தொடுதிரையைத் தடவி, காதில் வைத்து

"அதான் முடிஞ்ச வரைக்கும் கல்யாணத்தை தள்ளி வெச்சுட்டியே! இப்போ சந்தோஷமா டி!!!" என்று பொறித்தான்.

"யாரு! நானு!! நீ பாத்தே!!! போடா தடியா... நானே அதே கடுப்புல தான் உனக்கு கால் பண்ணினேன்.... சார் தங்கத்துல சொம்பு இல்லாம தாலி கட்டமாட்டிங்களோ! இதுலே மெஹெந்தி ஃபங்ஷன் வேற! உன்னை யாருடா இவ்ளோ ஃபங்ஷன் வரிசையா அடுக்க சொன்னது?"

"நான் எந்த ப்ரோக்ராமும் ப்ளான் பண்ணலே டி..."

" நீ பண்ணாம பின்னே உங்க தாத்தாவா பண்ணினாறு? வாயில நல்லா வருது... போடா"

"ஏய் ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்... ரெண்டு பேர்கிட்டேயும் ஒரே பொய் தான் சொல்லியிருக்காங்க... ஆனா ஏன்?"

கமலின் பின்னால் குரல் கேட்க காதில் திறன்பேசியை வைத்தபடி திரும்பிப் பார்த்தான்.

"எல்லாம் அம்முவோட ஹெல்த் கண்டிஷன்க்காகத் தான்" என்றபடி அங்கே வந்து நின்றார் போஸ்.

அவரது குரல் திறன்பேசி வழியே அம்முவிற்கும் கேட்க, "நம்ம கல்யாணத்துல எதுக்கு டா அந்த அரக்கன் தலையிடுறார். ஒழுங்கு மரியாதையா அந்த சொட்ட தலையனை ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க சொல்... இல்லே நடக்குறதே வேற" என்று காட்டு கத்தல் கத்தினாள்.

"ஏய்! இம்சை..... கொஞ்ச நேரம் சும்மா இரு டி..." என்று மெல்லிய குரலில் ரகசியம் போல் கூறினான்.

"நோ வே.... யோவ் சொட்ட.... நீ மட்டும் என் கையில கெடச்சே!" அதற்கு மேல் என்ன பேசினாளோ, அதனை கேட்கும் பொருமையின்றி இணைப்பைத் துண்டித்து, அவளைப் பற்றி அறிந்தவன் கைபேசியையும் அணைத்தும் வைத்தான்.

"வாங்க டாக்டர்... ஹவ் ஆர் யூ?"

"யா.... ஐம் குட்... என்ன கல்யாணம் தள்ளிப் போனதுல ரெண்டு பேரும் செம டென்ஷன் போல..."

"இல்லையா பின்னே!"

"கமல் அவ ஹெல்த் கன்டிஷனை நீ மொதோ புரிஞ்சுகனும்... அன்னைக்கு ஒரு முத்தத்துக்கே மயங்கிட்டா... கல்யாண வாழ்க்கைனு வந்தா அடுத்தடுத்த ஸ்டேஜ் க்ராஸ் பண்ணி தான் ஆகனும்... சோ அம்மு ஃபுல்லா க்யூர் ஆனதுக்குப் பிறகு தான் உங்க கல்யாணம்."

"இவ்ளோ தானா... நான் கூட என்னமோ ஏதோ நெனச்சேன். ஆஃப்டர் மேரேஜ் அவ தனி ரூம் நான் தனி ரூம்... இப்போ ஓகே வா."

"கமல் புரியாம பேசாதே டா... பஞ்சும் நெருப்பும் பக்கம் பக்கமா இருந்தா நம்மை மீறி சில தவறுகள் நடக்கத்தான் செய்யும்"

"அது தான் அவளை க்யூர் பண்ணும் டாக்டர். அவ இங்கே இருந்தா தினமும் என்னை சீண்டி டென்ஷன் ஆக்கனும்ன்றதுக்காகவே நிறையா யோசிப்பா... அதுல அவ சந்தோஷத்தை மட்டுமே ஃபீல் பண்ணும் போது கண்டிப்பா அவளுக்கு ஸ்ட்ரெஸ் இருக்காது. ஏன்னா அவளுக்கு நான் அவஸ்தைப் படுறதை பாக்குறதுல அவ்ளோ குஷி... அந்த சீண்டல்களும் தீண்டல்களும் அவளை இயல்பா திருமண வாழ்க்கையில பொருத்தும்...

இதுக்காக தனியா மெனக்கெட்டு, மைண்ட் லெவல்ல நாம மேரேஜ் லைஃப்க்கு ஃபிட் டா, அன்-ஃபிட்டானு யோசிச்சு மூளைய கசக்கி அதுக்கு அதிக அழுத்தம் கொடுத்து, மூன்றாவது நபரோட அறிவுரைக்காக மட்டுமே கணவனை நெருங்கி........" என்று ஒரு நிமிடம் நிறுத்தியவன்,

"இந்த கஷ்டம்லாம் என் அமுலுக்கு வேண்டாமே டாக்டர். இங்கே இந்த வீடு, பக்கபலமா அவள் குடும்பம், அவளாவே நிதர்சனத்தை புரிஞ்சு அதை சீக்கிரமே அக்ஸப்ட் பண்ணிப்பா..... அப்படினாலே அவ 100% க்யூர் ஆகிட்டானு தானே அர்த்தம்..."

அவனது பதிலில் இருந்த உண்மை தலைசிறந்த மருத்துவர் என்ற நிலையில் நின்று யோசிக்கும் போது முற்றிலும் உண்மை என்றே அவரை ஒத்துக் கொள்ள வைத்தது. ஆனாலும் ஆரம்பத்திலிருந்தே அம்முவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் வேர்பிடித்திருந்தமையால், அவரால் அம்முவை ஒரு பேஷண்ட்டாக பார்க்க முடியவில்லை. அது தான் அவருக்குள் அந்த பயத்தை விதைத்திருந்தது.

"நீ சொல்றது சரி தான்... இருந்தா...லும்...." என்று அவர் இழுத்து நிறுத்த,

"அப்போ ஒன்னு பண்ணுங்க... டெய்லி அவளுக்கு செக்கப்-க்கு நீங்களே வீட்டுக்கு வந்திடுங்க... அவ சந்தோஷமா இருக்குறதைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கோங்க, அவளோடு உணர்வும், உயிரும், உயிர்நாடியும் எல்லாமே நான் மட்டும் தான்னு" என்று சற்றே என்னவள் என்ற செருக்கோடு சந்தோஷமாகக் கூறினான்.

மருத்துவம் பாதி மன தைரியம் பாதி என்ற கலவை தான் ஒரு நோயாளியை குணப்படுத்தும் என்று அறிந்தந்தவர், கமலின் தைரியத்தைக் கண்டு, தானே கமல்-அம்முவின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பதாகக் கூறினார்.

அவர் சம்மதம் சொல்லி முடிக்க, சரியாக அவரது திறன்பேசி மங்கல அறிகுறியாக ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தவர், சிறிய நெற்றி சுருக்கத்தோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தார்.

"ஹலோ மிஸ்டர். அரக்கன் டாக்டர் அவர்களே! இப்போ எனக்கும் கமலுக்கும் கல்யாணம் நடக்குறதுல உங்களுக்கு என்ன ப்ரச்சனை?" சாட்சாத் அம்முவே தான்.

அவர் பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாக நிற்க, கமலும் சற்றே பதற்றமாக "என்ன டாக்டர்? என்ன ப்ராப்ளம்?" என்றான்.

ஒலிபெருக்கி பொத்தானை தடவி அம்முவின் பேச்சு வெளியே கேட்கும் படிச் செய்தார்.

"ஹலோ எமன் சார்... லைன்ல இருக்கீங்களா? இல்லையா? மாட்டுக் கொம்பை பிடுங்கி உங்க சொட்ட தலைல வெச்சுக்கோங்க... ரொம்ப பொருத்தமா இருக்கும்" என்று படபடவென பொறிந்தாள் கைபேசி வழியாகவே.

கமல் சட்டென அவர் கையிலிருந்த திறன்பேசியை பரித்து, "ஏய் அரை லூசு... என் இனிய இம்சை... இப்போ நம்ம கல்யாணத்தை நடத்தி வைக்கப் போறது அவர் தான். ஓவரா பேசி ஒரு வர்ஷத்துக்கு கல்யாணத்தை தள்ளி வெச்சிடாதே... போனை வை மொதோ" என்று திட்டி அழைப்பைத் துண்டித்தான்.

மேலும் போஸ்-ஐப் பார்த்து அசடு வழிந்த படி சிரித்து, "அது ஒரு.... லூசு டாக்டர்"

போஸ்-ஸிற்கும் பின்னால் ஒலித்த குரலில் கமலின் ரேட்டிங் ஏறிக் கொண்டே சென்றது. "என்னடா? இவ்வளவு பெரிய டாக்டர் இவரு... இப்படி பொசுக்குனு மட்டு மரியாதை இல்லாம லூசு டாக்டர்னு சொல்லிட்டே" என்றபடியே உள்ளே நுழைந்தான் அபினவ்கிரண்.

பேராபத்தை கடந்து வந்திருந்தவர்களை பார்த்து நலம் விசாரிக்க வந்திருந்தனர் கிரண் ப்ரோஸ் மற்றும் குடும்பத்தார்.

"ஓஓஓ... அப்போ போன்ல அரை லூசு சொன்னது! இப்போ நேர்ல லூசு டாக்டர் சொன்னது எல்லாம் என்னத் தானா!!!" என்று அப்படி இல்லை என்று அறிந்துமே கமலை கதி கலங்க செய்யும் நோக்கில் மிரட்டும் குரலில் வினவினார் போஸ்.

"சத்தியமா இல்லே டாக்டர்... உங்க மேல பிராமிஸ்" என்று கையை தலைக்கு மேல் கொண்டு சென்றவன், "சத்தியத்து மேலேயே யாராவது சத்தியம் பண்ணுவாங்களா!!! நெவர்... இவன் மேல சத்தியமா சொல்றேன் டாக்டர்... நானே என் வாயால உங்களை அப்படி சொல்வேனா" என்று ஆஸ்கார் பெர்ஃபாமென்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவரும் அவனது நடிப்பைப் பார்த்து சிரித்தபடி "சரி... சரி ஓவரா சீன் போடாம மேரேஜ்-க்கு ரெடியாகு" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

கமல் தாவிச் சென்று அபியின் கழுத்தைப் பிடித்து "அடிங்ங்ங்ங்க.... அவதார் குட்டி.... கங்கிராட்ஸ் டா..." என்று அடுத்த நொடியே கை குலுக்கினான்.

ஆம் அபினவ்கிரணின் ஆருயிர் மனைவி, அம்முவின் தோழி சுனைனா இப்போது மூன்று மாதக் கருவைச் சுமக்கும் வரம் பெற்றிருக்கிறாள்.

"எப்படியோ உன் பொண்டாட்டி அந்த அரை லூசை அம்மாவாக்கிட்டே... யோசிச்சு பாரேன்... அதுவே ஒரு குட்டி சாத்தான்... அதுக்கு ஒரு குட்டி சாத்தான் வரப் போகுது... வேடிக்கையா இல்லே!!! வாட் அ ஃபன்னி!!! வாட் அ ஃப்ன்னி" என்று சிரித்தவனை, துரத்தி துரத்தி அடித்தான் அபினவ்.

சீண்டல் தொடரும்.