சு(நர)கமான சுடரே! - 1
“நல்ல நேரம் முடிய போகுது, சீக்கிரம் பொண்ணை அழைச்சிட்டு வாங்க!” என்றார், ஐய்யர்.
இதில் யாருடைய நல்ல நேரம் முடிய போகுதோ, படைத்தவன் மட்டுமே அறிவான்?
மணவறையில், வெண்பட்டு அணிந்து, நெற்றியிலே சிறியதாக ஒரு சந்தன கீறல், முகமெல்லாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பிரகாசமாக ஜொலித்தது அவன் கண்கள், ஆண்களுக்கே உரித்தான மிடுக்கும், மாப்பிள்ளை என்ற தோரணையும் சேர்ந்து கொண்டது அகிலனுக்கு.
அவனை கிண்டல் செய்யும் விதமாக, “என்ன அகில் அண்ணா… நினைச்சதை நடத்தி காட்டிங்க போலியே!” என்றான் ரகு.
“அய்யா யாரு, விட்ட சவால் ல ஜெயித்துவிட்டேன் பாரு” என்று சொல்லி மீசை முறுக்கி விட்டான் அகில்.
“தம்பி பேசனது போதும், மந்திரத்தை கூடவே சொல்லுங்கோ!” என்றார் ஐய்யர்.
ரகுவோ வாயை பொத்தி கொண்டு சிரித்தான்.
பச்சை வண்ண பட்டு புடவையில், தங்க சரிகையில் வேலைப்பாடு நிறைந்த மயில் தோகை விரித்தாடுவது போல் முந்தானை இருந்தது, புடவையின் அழகை எடுத்து காட்டவே, இளஞ்சிவப்பு நிற ப்ளவுஸ், உச்சி தலை முதல் பாதம் வரை, தேடி தேடி மாப்பிளை சார்பாக கொடுப்பது என்று கட்டளையாக சொல்லி,தங்க ஆபரணங்கள் வாங்கி கொடுத்து இருந்தான் அகிலன்,
அனைத்தும் அவனின் தேடலில் ஒவ்வொன்றாக, சேர்ந்து ‘அழகுக்கு அழகு சேர்க்கும்’ வகையில் மணபெண்ணை அழகு படுத்தியது.
என் தங்கை பெண்ணிற்கு, ஒரு
தாய்மாமனாக நான் கொடுக்கும் நகைதான் போட வேண்டும், என்று
விருத்தாச்சலம் எவ்வளவு சொல்லியும், தன்னோட பணத்தில் தான் புடவையும், நகையும் தான், என்னோட ஆசை காதலி போட்டு கொண்டு மணபெண்ணாக அமர வேண்டும் என்று, உறுதியாக இருந்து விட்டான்.
இறுதியில் இளையவர் ஆசைக்கு சம்மதம் தெரிவித்து இருந்தார்கள் பெரியவர்கள்.
“விடுங்க சம்மந்தி இப்ப இருக்கற பசங்களுக்கு,
நம்மளோட பழக்க வழக்கங்கள் எங்கே தெரிய போகுது!, நீங்க நினைக்கிறதை சீதனமாக கொடுத்து விடுங்க” என்றனர் அகில் பெற்றோர்.
இதோ அகிலன் ஆசை காதலி ‘அன்ன நடையும், குனிந்த தலை நிமிராமல், மணபெண் தோழிகளுடன் நடந்து வந்தாள்
சுடர்கொடி.
‘வாயை மூடு கொசு உள்ள போக போகுது’ என்றான் கார்த்திக்.
அவளையே பார்த்து கொண்டு இருந்த அகில், கார்த்தியின் புறம் திரும்பி, “என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? ‘அண்ணனும் தம்பியும்’ மாத்தி மாத்தி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க” என்றான் அகி.
“இது எங்களுடைய பொன்னான நேரம், இதை விட்டால் திரும்ப கிடைக்குமா? அதுவும் இல்லாமல், எங்க ஊரு மாப்பிள்ளை வேற ஆக போற, பஞ்சாயத்து தலைவர் மகனா மாற போகும் உன்னை இப்படி கிண்டல் பண்ண முடியுமா! என்னோட நண்பனை நான் கிண்டல் பண்ணாம வேற யாரு செய்வா?” என்றான் கார்த்திக்.
‘ஹம்’ என்று சொல்லி விட்டு மீண்டும் செவ்வனவே தனது வேலையை தொடர்ந்தான்.
‘அதான் சுடரை பார்த்து ஜொல்லு விடுவது’
சாந்தாவிடம் மாங்கல்ய தட்டை கொடுத்த ஐய்யர், “போங்கோ போய் எல்லோர் கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வாங்கோ” என்றவர், கல்யாணியிடம் அட்சதை தட்டை நீட்டினார், அதை பெற்றவளும் சாந்தாவை பின் தொடர்ந்தாள்.
அனைவரிடமும் ஆசி வாங்கிய பின், இஸ்லாமிய பெண் போன்று முழுவதும் தன்னை மறைத்து கொண்டு இருந்த பெண்ணிடம் தட்டை நீட்டி நின்றாள் சாந்தா,
சிறிது நேரம் கை குப்பி வணங்கி,
கண்களில் கண்ணீர் மல்க தொட்டு வணங்கி அச்சதை பெற்று கொண்டாள்.
இதை மேடையில் இருந்த இரண்டு ஜோடி கண்கள் வலிகள் நிறைந்தும், வேறு வழி இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தது.
‘கெட்டி மேளம், கெட்டி மேளம்’ என்று வாத்தியம் வாசிப்பவர்களுக்கு, சைகை காட்டி விட்டு,
‘மாங்கல்ய நாண்’ அகிலனிடம் நீட்ட, அதை பெற்று கொண்டவனோ,
சுடரை பார்த்து உனக்கு சம்மதமா? என்றான்.
‘ம்ம்’ என்று தலை நிமிராமல் தலையை அசைத்தால்.
அகில் மகிழ்ச்சியின் உச்சியில் மெய்மறந்து சுடரை ரசித்துபார்த்து கொண்டு இருந்தான்.
“மாப்பிள்ளை தாலி கட்டுங்கோ” என்றார் புரோகிதர்.
அகிலன் சுடர் கழுத்தில் தாலி கட்டி கொண்டு இருக்கும் போதே அவனின் தங்கை மூன்றாவது முடிச்சு போட வந்தால், அவளை தடுத்து, இவனே மூன்றாவது முடிச்சு போட்டு விட்டான்.
“ரொம்ப தான் பண்ற!” என்றாள் அகிலனின் தங்கை காயத்ரி.
“இது என்னோட பல நாள் கனவு நான் மட்டும் தான் செய்வேன், யாருக்கும் பங்கு இல்லை” என்றவன் தங்கையை மிரட்டிவிட்டு மூன்றாவது முடிச்சும் அவனே போட்டு விட்டு இருந்தான்.
“அம்மா பாரு மா அண்ணனே!,”
“விடு டி, அங்க பாரு உங்க அப்பாவும் சரி, சுடர் மாமாவும் சரி ரெண்டு பேரையும் அவன் ஒன்னும் செய்ய விட மாட்டேன், சொன்னவன் உன்னையும் செய்ய விட மாட்டான் என்று, எனக்கு ஏற்கனவே தெரியும்.
நீதான் புரிஞ்சிக்க இவ்வளவு நேரம்”
எப்படியோ அவன் ஆசை பட்ட வாழ்க்கை அமைந்ததே எனக்கு போதும்” என்றாள் கல்யாணி.
மற்ற சடங்குகள் வரிசை கட்டி கொண்டு நிற்க,
புரோகிதர் சொல் பிரகாரம் ஒவ்வொன்றாக செய்து கொண்டு இருந்தனர், அகிலும் சுடரும்.
எல்லா சடங்கும் முடிந்தது, “பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம்
வாங்கிங்கோ” என்றார் ஐய்யர்.
முதலில் அகில் பெற்றவர்களிடம் வந்தனர்.
சுடரோ தன் மாமனின் முகத்தை பார்த்தாள்.
“போ மா போய் அத்தை, மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ” என்றவரோ எங்கேயோ வெறித்து பார்த்தார்.
வந்தவளும் மாமியார் எதிரே நின்றாள். அகிலன் அவனது தந்தைக்கு எதிரே நின்று தம்பதிகள் இருவரும் விழுந்து வணங்கினர்.
அடுத்து அவளை வளர்த்த மாமா விடம் ஆசிர்வாதம் வாங்கினர்.
சுடரின் விழி எதையோ தேடிக் கொண்டு இருந்தது, ஏதோ ஒரு
மூலையில் இருந்த பெண்ணவளை கண்டதும், புன்னகை பூத்தது அவளிடம்.
“வாங்க” என்று அகிலனின் கையை பிடித்து அந்த பெண்ணிடம் சென்றாள் சுடர் கொடி.
“அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று, சுடர் விழுந்தாள் அகிலனோ நின்று கொண்டு இருந்தான். “விழுங்க” என்று அவனை சீண்டினாள் அவனும் யார் என்றே தெரியாதவர் காலில் சுடரின் ஒரு வார்த்தைக்காக விழுந்தான்.
கண்ணை தவற ஏதும் தெரியாது, முழுவதும் மூடி இருந்த அவளின் கண்களில் தான் எத்தனை உணர்ச்சிகள்.
“போதும் மா போய் அடுத்த வேலையை பாரு” என்று வாழ்த்தி அனுப்பி வைத்து இருந்தாள் அந்த இஸ்லாமிய பெண்.
வேறு வழி இல்லாமல் அவளை திரும்பி பார்த்து கொண்டே நடந்த சுடரை கை பிடித்து அழைத்து சென்றான் அகிலன்.
“சரி மறுவீட்டிற்கு மாப்பிள்ளையும் பொண்ணையும் அனுப்பி வைக்கிறோம்” என்று சொல்லி மகேந்திரன் தனது வீட்டிற்கு புதுமண தம்பதிகள் இருவரையும் அழைத்து சென்றார்.
சுடரும் அமைதியாக பின் தொடர்ந்தாள்.
சுடரும் அகிலனும் ஒரு காரிலும், மற்றவர் இன்னொரு காரிலும் வந்தனர்.
வாசலில் இருந்த கேட்டே சொன்னது, அவர்களின் வீட்டின் பிரமாண்டத்தை
பல அடுக்குகளை கொண்ட மாளிகை வீடு, தேவைக்கள் என்று சொல்லி வெளியே செல்ல அவசியம் இல்லாது, அனைத்தும் இந்த ஒரு காம்போட் சுவற்றினுள் அடக்கம்.
இதை ஏதும் ரசிக்க தான் மனமில்லாமல் போனது சுடருக்கு.
இந்த முறை காயத்ரி ஆர்த்தியை சுற்றி, தனது நாத்தனார் உரிமையை நிலை நாட்டினாள்.
“ஹலோ ப்ரோ ஆர்த்தி சுத்தி இருக்கேன், காசை போடுங்க” என்று
தட்டை நீட்டி, கண்ணை காண்பித்தாள்.
‘இத்தா எடுத்துக்கொள்’ என்ற பாணியில் சட்டையில் இருந்த பணம் முழுவதையும் தட்டில் வைத்து இருந்தான்.
“எம்மோடியோ! எங்க அண்ணி வந்த நேரம் ‘கஞ்சபையன் கூட தாராள பிரபு வா மாறிட்டான்’ என்று தட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு சொன்னாள் அவனின் தங்கை.”
அவள் தலையில் கொட்டு ஒன்று வைத்து “என்னோட பையன் எப்பவுமே வள்ளல் தான் போடி”என்று மகளை விரட்டினாள்.
இதுவரை அமைதியாக இருந்த சுடரும் அகிலனுடன் நடந்தவள் ‘நிலை வாசல் தாண்டி இடது காலை வைத்தாள்’ சுற்றும் முற்றும் பார்த்தவாறு.
இதை பின்னே வந்த வேலைக்கார பெண் கண்டு விட்டாள்,
“அம்மாடி என்னது இது முதல் முதல்லா உள்ள வரும் போது வலது கால் எடுத்து வச்சி வரணும் அது கூட தெரியாத?” என்றவள் பேச்சில் கல்யாணி வந்து விட
மனதில் நெருடல் இருந்தாலும்,”பரவால விடுங்க சின்ன பொண்ணு தானே!” இந்த காலத்து பொண்ணுங்ககிட்ட ஒவ்வொண்ணும் சொல்லி தந்ததா புரிஞ்சிப்பாங்க, “நீ வாம்மா சுடர்!”
சகுந்தலா வை முரைத்தவாறு “இல்லைங்க அத்தை முதலில் வலது கால் தான் வைத்து வந்தேன், இவங்க தூரத்துல இருந்து பார்க்கும் போது, சரியா தெரிந்து இருக்காது” என்றாள் சுடர்.
“ஆமாம் என்னோட மருமக ஒழுங்கா தான் வலது கால் எடுத்து வைச்சி வந்து இருப்பா, நீ சும்மா பேசிட்டு இருக்காதே! அப்புறம் பாலும் பழமும் ரெடி பண்ணு” என்று சகுவை விரட்டினால் கல்யாணி.
‘நான் பார்த்தேன் அவ முதல இடது கால் தான் வைத்தாள்’ ‘கண்ணாடி போட்டு இருந்தா இந்த பேச்சு வந்து இருக்காது’ என்று தனக்குள்ளே பேசி கொண்டே சமயலறை சென்றாள்.
‘விட்டு புடி சுடர்’ எண்ணியவள் அடுத்து நிகழ்வாக இருந்த மாமியார் வீட்டில் முதல் முறையாக வந்த பெண் விளக்கை ஏற்றி தெய்வ வழிபாடு செய்ய சொல்லி பூஜை அறை அழைத்து சென்று இருந்தனர்.
“என்னங்க வாங்க இப்படி உக்காந்துட்டா எப்படி, வாங்க சாமி கும்பிடலாம், மகனும் மருமகளும் வாழ்க்கை தொடங்க போறாங்க, சாமி கும்பிட்டு அப்படியே ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று கல்யாணி அழைத்தும்
“ஐய்யோ என்னால முடியாது மா, நீயே எல்லாம் பார்த்துக்க நான் இப்படி உக்காந்து இருக்கேன்” என்று அவர்களை பூஜை அறைக்கு அனுப்பி வைத்து விட்டு, சோர்வாக ஹாலில் உள்ள ஷோபாவில் அமர்ந்து கொண்டார் மகேந்திரன்.
பூஜை அறையிலே சுடர் தீபம் ஏற்றி மனசார கும்பிட்டு வெளியே வரும் போது, பெரிய சத்தத்துடன் கண்ணாடி பொருள் ஒன்று விழுந்து நொறுங்கும் சத்தமும் அதை தொடர்ந்து ஐய்யோ! என்ற ஆணின் குரலும் கேட்டு எல்லோரும் வேகமாக ஹாலை நோக்கி வேகமாக வந்தனர்.
அகில் தந்தையோ காலைபிடித்து கொண்டு, கத்தி கொண்டு இருந்தார்.
“ஐய்யோ என்னங்க ஆச்சி, எப்படி?” என்று கண்ணீரோடு கணவனின் காலை பார்த்து கொண்டே பதறியவள்,“அகிலா டாக்டருக்கு போனை போடு” என்று பரிதவித்து கூறினாள்.
“ஐய்யோ என்னடி இதுக்கு இப்படி கத்தி கூப்பாடு போடுற, சின்னதா தான் அடி பட்டு இருக்கு, ஏதோ குழந்தைங்க விளையாட்டுல கண்ணாடி ஜாடியை தள்ளி விட்டு இருப்பாங்க, பாரு வந்தவங்க மருமகளை தப்பா பேசுறாங்க, நான் பார்த்துக்கிறேன், பசங்களை கவனி!” என்று சொல்லி வேலையாட்களை ஃபர்ஸ்ட் அய்ட் பாக்ஸை எடுத்து வர சொல்லி, தாமே போட்டு கொண்டார்.
அப்போது தான் கவனித்தாள், தன்னோட மகளை கட்டாமல் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டாங்க, என்ற பொறாமையில் இருந்தவர்கள், “மருமகளா வந்த முதல்நாளே இப்படி அபசகுணமா நடக்குது, இதுவே நம்ம பொண்ணுங்களில் யாராவது கட்டி இருந்தா இப்படி நடந்து இருக்குமா! என்று தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர்.
இந்த வார்த்தைகள் யாவும் சுடரையும் சேர்த்தே சுட்டு கொண்டு இருப்பதை கவனித்தவர் “அம்மாடி எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே, டேய் அகிலா அவளை கூட்டிட்டு போடா!” என்று சொன்னவள் பூஜையறைக்கு சென்று இருந்தாள்.
“அம்மா தாயே எதுக்கு இப்படி எல்லாம் நடக்கணும்” என்று பிராத்தனை செய்தவள் கண்ணில் விளக்கு அணைந்து கரும்புகை செல்வதை பார்த்து மேலும் கலக்கம் கொண்டாள்.
மகேந்திரணுக்கு முதலுதவி செய்து, “நீங்க இங்க இப்படியே உக்கார்ந்து கொண்டு இருந்தா, இன்னுமே இதை பத்தி பேசிட்டு கஷ்டம் படுத்துவாங்க, வாங்க உங்களை நம்ம ரூம்ல விட்டு வரேன்” என்று சொல்லி அனுப்பினாள்.
“சகு இத சுத்தம் செய்ய சொல்லு” என்ற கல்யாணி உறவினர்களை
அனைவரையும் அனுப்பியவள் சிந்தனையோ நிலை கொள்ளவில்லை ‘என்னது இது! நடக்கிற எதுமே சரி இல்லையே?’
“சகுந்தலா ஆ ஆ…” என்று கத்தி அழைத்தாள் கல்யாணி.
“சொல்லுங்க மா” என்றவளிடம்
“மத்தவங்களை அகில் ரூம் ரெடி பண்ண சொல்லு, அப்புறம் ஜோதிடரை வர சொல்லு” என்றாள்.
அகிலன் சுடரை அழைத்து கொண்டு வந்தவன், அவனது அறையை காட்டி விட்டு, வீடு முழுவதையும்
பெரியதாக சுற்றி பார்க்கும் ஆர்வம் இல்லாமல், குழப்பமாக ஜன்னலை பிடித்து கொண்டு வெளியே தெரியும் இயற்கையை பார்த்து கொண்டு இருந்தவளை, பேசிக்கொண்டே நெருங்கினான் அகில்.
“அண்ணே..!” என்று சொல்லி கதவை தட்டி உள்ளே வந்தாள் காயத்ரி.
‘வந்துட்டா எப்படி தான் மூக்கு வேர்க்குமோ, இப்ப தான் நெருங்களாம் நினைச்சேன்,’ மனதிலேயே தங்கைக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருந்தான்.
“டேய் உன்னோட மனசை
புடிச்சிட்டேன், இவ்வளவு நாள் காத்துட்டு இருந்த கொஞ்ச நேரம் தான், மானத்தை வாங்காதே” என்று அவனின் காதை கடித்தாள் காயத்ரி.

Last edited: