“ஏய் பிளாக்கி! அமைதியா இரு...” என்று அவளின் செல்ல பிராணியான நாயை அடக்கினாள்.
“எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க?” என்று திரும்பி பார்த்தாள் சுடர்கொடி.
“யாருடா இவன் அடிக்கிற வெயில்ல,
கோட்சூட் மாட்டிக்கிட்டு…” என்று வாய் முணங்கினாலும், அவனின் நடையிலும் அவனுடைய மீசை தாடியையும் அவளை அறியாமலே ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
‘பரவால்ல, பையன் ஜிம் போய் உடம்பை நல்லா ஃபிட்டா வைச்சி இருக்கான். இந்த மாதிரி பசங்க எல்லாம் எங்க இருக்கானுங்கன்னு தெரியவே மாட்டேங்குது. ம்ம்… இந்நேரம் இவன் ஃப்ரீ பேர்ட்டாவா இருப்பான்? வத்தலும் தொத்தலுமே இப்ப ஒரே நேரத்துல ரெண்டு கூட சுத்துதுங்க… இவனை சொல்லவா வேண்டும்!” என்று நினைத்து ஏகத்துக்கும் பெருமூச்சு ஒன்றை விட்டாள்.
இவளை போன்றே அவனும்,
“ப்பா, என்ன பொண்ணுடா! இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் வேணும்னா கிராமத்துக்கு தான் வரணும் போலியே. அங்கேயும் இருக்காங்களே தலையை விரிச்சி போட்டுகிட்டு விதவிதமா கலர் பண்ணிகிட்டு, ஜீன்ஸ் பேண்ட் சட்டை போட்டுகிட்டு… இங்க பாரு இந்த காலத்திலும் பாவாடை தாவணி, இடுப்பு வரைக்கும் அழகாக ஜடை பின்னி பூவெல்லாம் வெச்சுகிட்டு…
ப்பா! கட்டுனா இந்த மாதிரி பொண்ணை தான் கட்டணும்’ என்று ஏகத்துக்கும் ‘ம்ம்...’ என பெருமூச்சை உள்ளிழுத்து விட்டான்.
‘இந்த மாதிரி குடும்ப குத்து விளக்கை கட்டிக்க யாருக்கு கொடுத்து வைச்சி இருக்கோ!’ என நினைத்தவனின் கண்கள் அவனையும் மீறி பாவாடை சொருகி இருந்த இடத்தை மேய்ந்து கொண்டு இருந்தது.
திடிரென்று நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு போனான் அகிலன்.
அதுவரை கம்பீரமாக நடந்து வந்தவன், பிளாக்கி கத்திய கத்தலில் பயந்து போய் கண்களில் அணிந்து இருந்த கூலிங் கிளாஸை கழற்றிவிட்டு அவளை பார்த்து,
“ஏங்க அந்த நாயை புடிச்சிக்கிங்க பயமா இருக்கு, விட்டா கடிச்சிடும் போலியே?” என அகிலன் சுடர்கொடியிடம் கெஞ்சினான்.
அவன் கெஞ்சலை அவன்
அறியா வண்ணம் ரசித்தவள் அவன் விழியில் என்ன கண்டாளோ மெய் மறந்து நின்றாள் சிறிது நேரம்.
பிளாக்கி கத்தலில் தன்னை சுதாரித்து கொண்டவள்,
இடுப்பில் சொருகி இருந்த துணியை அவிழ்த்து விட்டவள், “பிளாக்கி கொஞ்சம் அமைதியா இரு” என்றவளின் பேச்சில் கட்டுண்டு அமைதியாக வாலை ஆட்டி கொண்டு அவளின் அருகே அமர்ந்தது.
‘நீ ஏதாவது பண்ணுனா என்னிடம் இருந்து தப்ப முடியாது’ என்ற தோரணையில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தது நன்றிக்கு பெயர் போனவர்.
“என்ன விசயம் சொல்லுங்க?” கேட்டவளின் பேச்சில் இருந்த
உத்தரவும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல் வெடுக்கென்ற பேச்சும் அவனை தடுமாற வைத்தது.
“அது... வந்து… ம்ம்…” என தயங்கினான்.
“சீக்கிரம் சொல்லுங்க, எனக்கு வேலை இருக்கு. ஒரு நிமிசம்…” என்றவள்.
“பார்வதி அக்கா… சீக்கிரம் அந்த தார்பாயை எடுத்து போடுங்க. நெல்லு அறுக்குற மெஷின் அறுவடை முடிச்சிட்டு வந்துட்டு இருக்கு. நெல்லை கொட்டனும் ஆகட்டும்” என்றாள்.
அவள் கத்திய கத்தலில் காதை குடைந்து இரண்டு அடி நகர்ந்தான்.
‘ஐய்யோ! தெரியாமல் வந்து மாட்டிகிட்டனோ? என்ன இவ கத்தியே பயமுறுத்துறா. சரியான தைரியசாலியாதான் இருக்கா. இதுல பாதி இருந்தா போதும் எனக்கு’ மனதில் நினைத்தே அவளை வெறித்து பார்த்தான்.
“ஹலோ மிஸ்டர் இருக்கீங்களா? என்ன விசயம் இப்பவாது சொல்றீங்களா?”
“ஹான்... ஹ...” என்று அவளின் பேச்சை கேட்டு நிகழ் உலகத்துக்கு வந்தான் அகிலன்.
“இங்க இராமலிங்கம் அய்யா வீடு எங்க இருக்கு? எப்படி போகனும்?”என்றான்.
“ஓ… இராமலிங்க மாமா வீடா? இப்படியே நேரா போனா ரோடு ரெண்டா பிரியும். வலது பக்கமாக இருக்குற ரோடு போங்க, அதில இருந்து எந்த ரோடும் எடுக்க வேண்டாம் ஒரே ரோடு தான். இடது பக்கமாக பந்தல், தோரணம், வாழை மரம் கட்டி இருக்கும். அதுதான் மாமா வீடு என்ன புரிஞ்சுதா?” என்றாள்.
எங்கே அவன் காதில் விழுந்தது? அவள் கை நீட்டி பேசும் போது அவளின் உடல் மொழியையும், முகம் காட்டிய பாவனையையும் தானே மனதில் ஏற்றி கொண்டு இருந்தான்.
“என்னங்க... என்ன சொன்னீங்க?” என்றான் அகிலன்.
“சரியா போச்சி போ! என்ன சார் நீங்க,
எனக்கு எவ்வளவு வேலை இருக்கு?
மறுபடியும் முதல்ல இருந்தா…” என்று ஏகத்துக்கும் முறைத்தாள்.
“ஐய்யோ! முறைக்காதீங்க” என்று கெஞ்சியவன், “இன்னும் ஒரு முறை…” என தனது போனை நீட்டி ரெகார்ட் உள்ளே சென்று ஆன் செய்தவன்,
“இப்ப சொல்லுங்க…” என்றான் பாவமாக.
மீண்டும் ஒருமுறை சொல்லி கொண்டு இருந்தாள் சுடர் கொடி.
“சரிங்க, ரொம்ப தேங்க்ஸ்!” என்றான்.
“ஹான்! இருக்கட்டும்” என்று திரும்பி கொண்டாள்.
“இந்த டவர் கிடைக்க கூட மாட்டேங்குது” அவள் காதில் விழுமாறு சொல்லி கொண்டே போனை அவன் இஷ்டத்துக்கும் மேலே தூக்கி பிடித்தான். அதே சமயம் கேமிரா ஆன் செய்து போட்டோ எடுக்கும் சத்தம், வெளிச்சம் இரண்டத்தையும் ஆஃப் செய்து இருந்தான்,
“சரிங்க, நான் வரேன்” என்றவன் அவள் திரும்பினால் எப்படியாவது ஒரு போட்டோ எடுத்திடனும், என்ற ஆசையில் சொன்னான்.
அவள் திரும்புவாள் என்று போன் அவளுக்கு எதிரே சிக்னலுக்கு காத்திருப்பது போல் வைத்தவனும், இரண்டு மூன்று போட்டோ எடுத்துக்கொண்டான்.
“ம்ம் சரி…” என்றதோடு திரும்பி தனது வேலையை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
நடந்து சென்றவனும், “ம்ம், சரி… இதை கூட அடிக்கிற மாதிரி பேசுரா. வேலுநாச்சியார் பரம்பரையா இருப்பாளோ? பொண்ணு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா, போனதும் இவளை பத்தி கார்த்திகிட்ட கேட்டே ஆகணும். இவ பேரு மட்டும் கேட்டா நல்லா இருக்கும். திரும்பி போய் கேட்டா பக்கத்துல இருக்குற நாயை விட்டு கடிக்க வைச்சாலும் வைச்சிடுவா”
“ஏலே சுடரே! இங்க வாடி, அங்க என்ன பண்ணுறவ?” பார்வதி கூப்பிட,
திரும்பி நடந்தவனின் காதிலும் விழுந்தது. அப்படியே நின்றவன் திரும்பி பார்த்தான்.
வயலில் பிளாக்கியும், வரப்பில் சுடரும் ஓடினார்கள். ஓடும் அவளை பார்த்து கொண்டு, “சுடர்… சுடர்…” என்று சொல்லி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். ஓடும் அவளின் உடுப்பு காற்றில் வண்ண மயில் தோகை விரித்து நடனம் ஆடுவது போல இருந்தது அகிலனுக்கு.
காதல் வந்தாலே எங்கே இருந்து தான் வருமோ இந்த கவிதையும், கற்பனையும்?
சுடர் பதிவு செய்து கொடுத்த வாய்ஸ் ரெகார்ட் உதவியுடன் எந்த சிரமமும் இல்லாமல் கல்யாண வீட்டை அடைந்து இருந்தான்.
“டேய் தம்பி! இங்கன வந்து பாரு, யாரோ கார்ல வந்து இறங்கி இருக்காங்க. பார்த்தா உங்க அண்ணனுக்கு தெரிஞ்சவங்களா தான் இருப்பாங்க” என்று பாக்கியம் தனது இரண்டாவது மகனை அழைத்து சொல்லி இருந்தார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த ரகு,
“அம்மா, அந்த மைக் செட்டை கொஞ்சம் அமுத்த சொல்லு காதை கிழிக்குது” என சொல்லியவன் வாசலில் இருந்து வந்து கொண்டு இருந்த அகிலனை கண்டு ஒரே ஓட்டம் பிடித்து அவனிடம் சென்றான்.
“அண்ணே! வாங்க, எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? என்ன நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? எங்க அப்பா அம்மா யாரையும் காணோம்” என்று காரை திறந்து பார்த்தான்.
இவனின் செயலில் நெகிழ்ந்து போனவன், “ஏய்! இருப்பா, கொஞ்சம் மூச்சு வாங்கிக்க. கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டே போனால் எப்படி? என்னையும் பேச விடுடா...” என்றவன் ரகுவின் தலையில் தட்டி, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தான்.
பாக்கியம் கொண்டு வந்த தண்ணீரை வாங்கி குடித்தவனை அருகில் இருக்கும் நாற்காலியில் அமர வைத்து சாப்பிட ஏதாவது எடுத்து வருவதாக சொன்னவள் ரகுவிடம், “பேசிட்டு இரு” என்றாள்.
“எங்கடா கார்த்தியை காணோம்?” வீட்டினை விழியால் அளந்தவாறு கேட்டான் அகில்.
“அய்யோ அண்ணா, உனக்கு தெரியாதா? அவன் அழகுக்கு அழகு சேர்க்க போயிருக்கான்” கிண்டல் செய்யும் விதமாக சொன்னான்.
“என்னடா சொல்ற? எங்காவது புரியுற மாதிரி பேசுறியா நீ?” என்றான் அவனை அடித்தவாறு.
அடிகளை வாங்கியவன் சிரித்தவாறு, “அவன் அழகு நிலையம் போயிருக்கான்”என்றான்.
“அவனுக்கு என்னடா ஓட்டை? நல்லா கலரா தானே இருக்கான்” வந்த சிரிப்பை அடக்கியவாறு.
“வர போற அண்ணி நல்லா கலரா, அழகாக இருப்பாங்க. அதான் ஐயா பொண்ணுக்கு மேட்ச்சா இருக்க பட்டி டிங்கிரிங் பார்க்க போயி இருக்காரு துரை” சொல்லி சிரித்தான்.
இவன் பேசிய பேச்சிலும், முகம் காட்டிய நவரசமும் அடக்கி வைத்த சிரிப்பை இப்போது வாயை விட்டு சிரித்து வைத்தான் அகிலன்.
“டேய் ரகு! போதும்டா. சரி, அப்ப அவன் வர நேரம் ஆகுமாடா? அவனை பார்த்திட்டு அப்படியே இங்க இருக்கிற எங்க காலேஜ் வேற போகனும்” என்றவன் பேசி கொண்டே காரை நோக்கி நடக்க ஆரம்பித்தது இருந்தான்.
“இல்ல அண்ணா, வர நேரம் தான். அவன் வந்ததும் நலங்கு வைச்சிட்டு
கிளம்ப வேண்டியது தான்” ரகு சொல்லி கொண்டு இருக்கும் போதே,
“ஏய் பிளாக்கி! நீயா நானா பார்த்துடலாம்” என்று சொல்லி கொண்டே ஒரே ஓட்டமா ஓடினாள் சுடர்கொடி. அவள் பின்னால் நானும் ஓடுகிறேன் என்ற பெயரில் அவளை விட குறைவாக ஓடியது பிளாக்கி.
ஓடி வந்தவர்கள் அகிலனை கடந்து இரண்டு வீடு தாண்டி ஒரு பெரிய கேட்டை தொட்டனர்.
“ஹே! நான் தான் ஃபர்ஸ்ட்…” சொல்லி கொண்டே கேட்டை திறந்து உள்ளே சென்று மறைந்தாள் சுடர்.
இது வழக்கமாக நடக்க கூடிய ஒன்று தான். அவள் ஓடுவதும் பிளாக்கி ஓடுவது போல் நடிப்பதும். சுடரும் ஓட்டம் ஆரம்பிக்கும் முன் அவனை ரசித்து பார்த்து விட்டு ஓட்டத்தை ஆரம்பித்து இருந்தாள். வீடு சென்றவளும் அவன் கண் காணா நேரம் அவனை பார்த்து தான் உள்ளே சென்றாள்.
மறையும் வரை அவளை கண் இமைக்காமல் பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் அகி.
அதற்கு மாறாக ரகுவோ, “ஐய்யோ அரிமா!” என்றான் பயந்துகொண்டே..
“என்ன சொன்ன அந்த பொண்ணை பார்த்து?” என்றான் அகில்.
அவள் சென்ற திசையை பார்த்து,
“அப்பாடா! அவ என்னைய கவனிக்கல...” என நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டான் ரகு.
“ஹான்…! என்ன அண்ணா கேட்டீங்க?” தன் பதட்டத்தை மறைத்தவனாய்.
“எதுக்குடா அந்த பொண்ணை பார்த்து இப்படி பயப்புடுற?” பீதி அடைந்த முகத்தை ஆராய்ந்தவாறு.
“ஒருவேளை அந்த பொண்ணு கெட்டவளோ?” என்று கேட்டவன் மனதில் ‘அப்படி மட்டும் சொல்லிட கூடாது’ என்று நொடியில் அதனை கடவுளிடம் வேண்டுதல் வைத்து இருந்தான் அகில்.
“ச்சீ ச்சீ! கெட்ட பொண்ணும் இல்ல மேடம் ரொம்ப நல்ல பொண்ணும் இல்லை” என்றவனை குழப்பமாக பார்த்தான் அகில்.
“டேய் விளங்காதவனே! எப்பவுமே நீ இப்படி தானா? நேரா விஷயத்துக்கு வர மாட்டியா?”
‘அவனவன் இருக்குற அவசரம் புரியாம’ என்று மனதில் குமுறினான் அகி.
சற்று நேரத்தில் பூத்த காதல் என்னும் மலர் செடியை இவன் பேச்சில் தண்ணீர் விட்டு வளர்த்து அவளின் கையில் கொடுப்பதும், இல்லையேல் மனதினிலே யாரும் அறியாத ரகசியமாய் இருப்பதும் இவன் சொல்லில் தானே உள்ளது.
“எதுக்கு அண்ணே அவளை பத்தி இவ்வளவு அவசரமா கேக்குறீங்க?” அவனின் முகத்தை கேள்வியாக பார்த்தான்.
‘இவனிடம் சொல்லலாமா இல்லை சொன்னா இவன் என்னைய பத்தி என்ன நினைப்பான்?’ தனக்குள் பேசியவன் ‘இப்போதைக்கு பாதி மட்டும் சொல்லுவோம்’
“இங்கே வரத்துக்கு முன்னாடி அவங்ககிட்ட தான் வழி கேட்டேன்” என்றான்.
“என்னது! அவ உங்களுக்கு வழி சொன்னாளா?” என்று மீண்டும் அதிர்ச்சியாக.
“ஒன்னு விட்டேனா பார்த்துக்க, அவ்வளவு தான்! நண்பனோட தம்பி எல்லாம் பார்க்கமாட்டடேன். சும்மா சும்மா மனுசனோட பொறுமையை சோதிச்சிட்டு…” என்றவன்.
“இப்ப முழுவதும் அவளை பத்தி சொல்லிட்டு ஷாக் ஆகு” என்று தலையை தட்டி விட்டான்.
“கல்யாண வேலை அவ்வளவு இருக்கு அதை எல்லாத்தையும் விட்டு நம்ம அண்ணன்னு வந்தா ஒரு சின்ன புள்ளை என்ற கருணை கூட இல்லாம அடிக்கிறிங்களா?” என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு.
அவனின் செயலில் சிரித்தவன்,
“சரி, என்னோட குட்டி தம்பி, இதுக்கு எல்லாம் கோவிச்சிகலமா? அண்ணன் தானே, மன்னிச்சிடுடா!”
‘எல்லாம் என் நேரம்! அவளை பத்தி தெரியறதுக்குள்ள எத்தனை வாட்டி இவனோட கால்ல விழ வேண்டி இருக்கோ?’ என்று தன்னையே நொந்து கொண்டான்.
“ரொம்ப ஆர்வமா இருக்கீங்க, அதனாலே சொல்றேன்” என்றவனை பார்த்து தனது காது இரண்டையும் பட்டை தீட்டாத குறையாய் கூர்ந்து கவனித்தான் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.
“அவ பெயர் சுடர்கொடி. அவளும் நானும் ஸ்கூல் வரைக்கும் ஒன்னாதான் படிச்சோம். அப்பவே அவ டெரர் பீஸ். கிளாஸ் லீடர் வேற. டீச்சர் இல்லாத நேரம் கிளாஸ் பாத்துப்பா” என்றவன் தனது உள்ளங்கைகளை தடவி விட்டு கொண்டே,
“எப்ப பாரு செலக்டெட்டா ஒரு ஐந்து பேரை மாட்டி விடுவா. அதுல நான் தான் முதல் ஆளு. கையில மூங்கில் குச்சில வெளுத்துடுவங்க தெரியுமா?” என்றவன் இப்போதுதான் அடி வாங்கியது போல் கையை பார்த்தான்.
(நான் அப்ப அவ கூட சண்டை போட்டு இருக்கேன். அதனாலே என்னைய மாட்டிவிட்டா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா அவனுங்க கூட எந்த பிரச்சனையும் இல்லையே? பாவம் அவனுங்க. ஹான்! கண்டுபுடிச்சிட்டேன். ஒருத்தன் வாய், இன்னொருத்தன் சேட்டைகாரன். ஆனா அந்த ரெண்டு பசங்க ரொம்ப பாவம். அவங்க அப்பாங்களை கூட, விருத்தாச்சலம் ஒரு முறை நல்லா வெச்சி வெளுத்திட்டாரு. அப்புறம் அவங்க பொண்டாட்டிங்க கெஞ்சி கேட்டதுக்கு அப்புறம் தான் விட்டாரு. அதுல இருந்து தான் அவனுங்க இவகிட்ட மாட்டினாங்க. இவளும் அதிலிருந்து தான், பாவமா இருந்தவ பத்ரகாளி அவதாரம் எடுத்தா. என்னவோ நடந்து இருக்கு? என்று நினைத்தான்.)
“அய்யோ! அப்பா டேய்… நீ அடி வாங்கின கதையெல்லாம், இப்ப யாரு கேட்டது?” என்றான் சிறிது சிரித்தும், கோபப்பட்டும்.
அவனை முறைத்து பார்த்தவன் இயல்பு நிலைக்கு வந்து, “சரி, அவளை பத்தி மட்டும் சொல்றேன். இங்க ஒரு ஜீவன் பட்ட வலியை ஒரு பொருட்டாக கூட மதிக்காதிங்க. உனக்கு உன் கவலை. அவளுடைய மாமா விருத்தாச்சலம் பஞ்சாயத்து தலைவர். அவருக்கு அப்புறம் இவ தான் அந்த இடத்துக்கு வர போறா அப்படி சொல்றாங்க. ஏற்கனவே முக்கா ஆம்பிளை கணக்கா சுத்திட்டு இருக்கா. இந்த பாவாடை தாவணி மட்டும் தான் அவ பொண்ணு சொல்லுது”என்றவன்,
“இன்னும் வர எலக்சன்ல மகளிர் ஒதுக்கீடு திட்டத்துல எங்க ஊர் பேரும் அடிபடுது. அப்படி பஞ்சாயத்து தலைவர் பெண்களுக்கு தான் வந்தது, அவ தான் போட்டியே இல்லாம ஜெயிச்சிடுவா” என்றான்.
“சரி, அதனால் என்ன? பொண்ணுங்க எல்லாம் அரசியலுக்கு வர கூடாதா? அவங்களும் சாதிக்க வேண்டாமா?” என்றான் அகிலன்.
“அட! நீங்க வேற வயித்து எரிச்சல்
கெளப்பிகிட்டு?” என்றான் ரகு.
“அவ ஏற்கனவே என்ன மாதிரி இருக்குற பசங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டிட்டு இருக்கா. இன்னும் பதவி கிடைச்சா?” பதவி அவங்க மாமா கையிலும், அதிகாரம் இவ கையிலும் இருக்கும் போதே இவளால நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம். மொத்தமா அவ கையில நினைச்சாலே…? ஐய்யோ கடவுளே! அப்படி ஒரு தண்டனை மட்டும் எங்களுக்கு கொடுத்துடாதே…” என்று மேலே பார்த்து கூறினான் ரகு.