இவன் என்னடா! ஊர் கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கான், அவளை பத்தி சொல்ல சொன்னா! என்று எழுந்த எரிச்சலை கட்டுபடுத்தி
“அதை விடு ரகு அவ எப்படி? நல்ல பொண்ணா!” என்று கேட்டான்.
“அவ நல்லவளா இருந்தால் அண்ணே கல்யாணம் பண்ணிக்கிற, ஐடியா ஏதாவது வைச்சி இருக்கீங்களா?
அப்படி ஏதாவது இருந்தா இப்பவே அழிச்சிடுங்க,அவளுக்கும் உங்களுக்கும் சுத்தமா ஒத்து போகாது, அவ தென் துருவம் என்றால் ஐய்யா வடதுருவம்”
என்றான் ரகு,சற்று முன்னர் பூத்த காதல் பூவிற்கு ஆசிட் ஊற்றி வைத்து இருந்தான் அவன் பேச்சில்.
“எதுக்கு அப்படி சொல்ற,
ஏன் அவ எனக்கு செட் ஆக மாட்டா நினைக்கிறாய் அப்படி தானே, அவளை எப்படியாவது, கல்யாணம் பண்ணி காட்டுறேனா, இல்லையா பாரு!” என்றான் விறைப்பாக.
“ஐய்யோ! அதுக்கு தலைவருக்கு தைரியம்,கம்பீரம் எல்லாம் மலை அளவுக்கு இருந்தா தான், ‘அந்த மகேஷி கூட குப்பை கொட்ட முடியும்!’ என்றான்.
“அப்படி என்னடா? உனக்கு நான் பாவம் பண்ணேன், நல்லதா நாளு வார்த்தை சொல்ல மாட்டியா! சிங்கம்,ராட்சசி அப்படி சொல்லி பயமுறுத்துர” என்றான் கலக்கமா
“சரி நல்லதா சொல்லிட்டா போச்சி
சுடருக்கு கராத்தே சிலம்பம் களரி வாள்வீச்சு இன்னும் இருக்கிற எல்லா தற்காப்பு கலை எல்லாம் அத்துப்படி தலைவர் எப்படி?” நக்கலாக கேட்டான்.
அகிலன் முகம் சிறிது கறுத்து விட்டது, அதை சமாளிக்கும் பொருட்டு, “டேய் எவ்வளவு நேரம் இப்படியே வெளியே நிக்கிறது வர போறவங்களுக்கு தொந்தரவா இருக்கும். எங்கேயாவது உக்கரலாமா” என்றான் பேச்சை மாற்றும் விதமாக
“வாங்க ப்ரோ வீட்டுக்கு பின்னாடி இருக்குற, தோட்டத்துக்கு போவோம்
அங்க உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துட்டு இருக்கு!” என்று மர்மமாக சிரித்தான். என்னவா இருக்கும் நினைத்து கொண்டு நடந்தவன் “ம்ம் எதுவா இருந்தாலும் ஒரு கை பார்த்திட வேண்டியது தான்!”போகும் வழியில் பாக்கியம் கொடுத்த பலகாரங்களை இரண்டு தட்டில் ஏந்தி கொண்டு நடந்தான் ரகு.
அவளை பார்த்த முதல் இதுவரை
சுடரை மனதளவில் உருவக படுத்தி இருந்த பிம்பம் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்தது போனது அகிலனுக்கு. பாவாடை தாவணியில் வயலில் பார்த்தவளை அப்படியே! ‘மனதில் சந்தான லக்ஷ்மியாக பூஜித்தவனுக்கு தைரியலக்ஷ்மியாய் மிரட்டுவாள்’ என்று எதிர்பார்க்கவில்லை போலும்.
“டேய் என்னடா இது?” என்று விழி பிதுங்கி வெளியே வராதது தான் குறை, தலைவருக்கு.
“வேகமா வாங்க அகில், எவ்வளவு நேரம் இன்னும் ரெண்டு கலை தான் முடிய போகுது” என விரட்டினான் ரகு. வந்து அமர்ந்தவனின் கையில், பாக்கியம் கொடுத்த தட்டில் ஒன்றை நீட்டினான். வாங்கியவனின் மனம் தட்டில் செல்லாமல், எதிரே பேண்டும்
டிஷர்ட்டும் போட்டு கொண்டு, வாள் வீச்சு செய்து கொண்டு இருந்தவளை பயத்துடன் எச்சிலை விழிங்கியவாறு பார்த்து கொண்டு இருந்தான்.
ரகுவின் வீட்டின் பின் புறத்தில் இருந்து பார்த்தால் சுடரின் வீட்டின் பின்புறம் தெரியும், வழக்கமாக பயிற்சியாளர் வந்து சுடருக்கும் கபிலனுக்கும் பயிற்சி அளித்து விட்டு செல்வார், சனிக்கிழமை சீனியர் மாணவர்களுடன் சேர்த்து போட்டி வைத்து மெருகேற்றுவார்,
இன்று சனிக்கிழமை போட்டி நடந்து கொண்டு இருந்தது.
“அண்ணா! பாருங்க.. பாருங்க
இப்ப தான் செம சீன் வர போகுது”என்று சொன்னவன் உற்சாகமாக நிமிர்ந்து உட்கார்ந்து பார்த்தான். ஏதோ கிரிக்கெட் மேட்ச் விக்கெட் எடுக்கும் போதும், கடைசி பாலில் வெற்றியை எதிர்பார்க்கும் ரசிகனை போல் ஆர்வமாக பார்த்தான் ரகு, கலக்கமா அகில் பார்த்து கொண்டு இருந்தான்.
கராத்தே முடிந்து, சிலம்பத்திற்கு வந்து இருந்தனர். பயிற்சியாளர் முதலில் ஒருத்தரோடு ஒருத்தர் என்ற முறையில் சுடருக்கு எதிராக களம் இறக்கினார், அடுத்த ஐந்து நிமிடத்தில் இன்னும் ஒருவரை சேர்த்து சண்டை செய்ய அனுப்பினார், இறுதியாக மூவராக களம் கண்டனர் சுடருக்கு எதிராக,
இதில் அனைத்திலும் வெற்றி கண்டு இருந்தாள் சுடர்.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த அகிலிடம்,
“அண்ணா..! இந்த உலகத்துல தான் இருக்கியா?” என்று உலுக்கி அழைத்து வந்து இருந்தான். இந்த உலகத்திற்கு
“ராஜாவுக்கு இந்த ஜான்சி ராணி தான் இப்பவும் வேணுமா?” என்றான் கிண்டலாக.இப்ப தெரியுதா இந்த பொண்ணு ஊர்ல இருக்குற பசங்களை எப்படி ஆட்டி படைக்குதுனு!” என்று.
கல்யாண வீட்டில் வேலைக்கா பஞ்சம் தாய் அழைத்ததால்
வீட்டினுள் சென்று இருந்தான் ரகு.
அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான் அகிலன்,அவளும் அவன் பார்வையை உணர்ந்தும் கண்டும் காணாதது போல் சிலம்பத்தை சுழற்றி கொண்டு இருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவ்விடத்தை விட்டு அனைவரும் சென்று விட, ஆளில்லா மைதானம் மட்டுமே இவனுக்கு காட்சி அளித்தது, கையில் இருந்த தட்டு பார்த்தவன் “ம்ம்” என்ற பெரு மூச்சை நன்றாக இழுத்து விட்டான்.
அதற்குள் ரகுவும் வந்துவிட,
அண்ணா கார்த்தி இன்னும் பத்து நிமிடத்தில் வந்துடுவான்,
நான் போய் ஊருல இருக்குற ஆளுங்க கிட்ட, கல்யாண வேன் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடும், சொல்லிட்டு வந்துறேன்
என்றவணை கையை தடுத்து,
( கிராம புறங்களில் இப்பவும் கல்யாணம் யார் செய்யுரமோ, அவர்கள் சார்பாக பொது வாகனம் வைப்பது வழக்கம், ஊர் மக்கள் பெரும்பாலும் அதிலே பயணிப்பர், வரவேற்பு முடிந்த பிறகு, மீண்டும் கொண்டு விடும் படி ஏற்பாடும் செய்வார்கள்.)
“அவ போயிட்டா இப்ப அவளை எப்படி பாக்கிறது?” என்று ஏக்கமாக கேட்டான்.
“அப்ப அந்த ராங்கி தான் முடிவு பண்ணிட்டிங்க!” என்றான் ரகு.
ஏக்கம் போய், ராங்கி என்ற பெயர் சொன்னதும் கோவம் வந்து ஒட்டிக்கொண்டது அகிலுக்கு,
“சரி.. சரி. சுடர்கொடி” என்றான் ரகு.
“இப்ப மணி நாலேமுக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல, அவ இந்த வழியா தான் பஞ்சாயத்து கூடத்துக்கு போவா” என்றான்.
கேள்வியாக ரகுவை ஏறிட்டான் அகில்.“வாரத்துல ஒரு நாள் ஊர் நிலவரம் நிறை குறை பத்தி கருத்து கேட்டு கூட்டம் நடக்கும் தேவை இருக்குறவங்க பேசி தீர்த்துபாங்க!,
இது முழுக்க சுடர் ஐடியா அதனால் அவ தான் விசியம் என்ன ஏது கேட்டுட்டு வந்து, அவங்க மாமாகிட்ட சொல்லுவா! இன்னிக்கு அதுக்கான நாள், போய் பார்க்கிறது என்றால் பாருங்க அண்ணா!” என்றான் ரகு.
ரகுவோ தண்டோரா போடாத குறையா வீடு வீடாக சென்று கல்யாண வேன் ஆறு மணிக்கு எல்லாம் கிளம்பிடும்,என்று சொல்லி கொண்டு இருந்தான்.வாசலிலேயே அவள் வருவாளா! என்ற ஆர்வத்தில் தவம் கிடந்தான் அகி. ஆனால் அவளுக்கு பதில் கார்த்தி தான் வந்து சேர்ந்து இருந்தான்.
“வாடா கல்யாண மாப்பிள்ளை
கலக்குறீங்க, ‘ம்ம்’ பொண்ணே! உன்கிட்ட தோத்து போயிடும் போல”என்று வழக்கமாக மாப்பிள்ளையை கலாயக்கும் நட்பாக இருந்தான் அகில். ஒரு கண் வாசலிலும் மறு கண் கார்த்தி மேலும் இருந்தது, திடிரென்று நினைவு வந்தவனாய், காரின் அருகே சென்று தான் வாங்கி வந்த தங்கத்தால் ஆனா கை கடிகாரம் ஒன்றை பரிசு பெட்டியில் இருந்து எடுத்து கார்த்திக்கு அணிவித்தான்.
“எப்படி இருக்கு கார்த்தி!” என்று கேட்டான் அகில்.
“டேய் என்னடா இது! எனக்கு இது எல்லாம் ரொம்ப அதிகம்” என்றான் சங்கடமாக.
“அடி வாங்குவ! பார்த்துக்க நீ இல்லைனா, இந்த அகில் எடுப்பார் கைப்பாவை டா, ஏதோ கொஞ்சம் தைரியமா இருக்கேன் என்றால், இந்த கார்த்தி தான் காரணம்
நன்றி மறக்காதவன் இந்த அகிலன்
சும்மா பழசை பேச வைக்காத” என்றவன் அவனை இறுக்கி அணைத்து கொண்டான்.
“சரி டா மச்சான் அப்ப நான் கிளம்புறேன்?” என்றவனை
கார்த்திக் முறைத்து வைத்தான்.
“இப்ப தான் வந்த அதுக்குள்ள கிளம்பிறேன் சொன்னா என்ன அர்த்தம்!” என்றான்.
“நான் சொல்லி தான் தெரியனுமா உனக்கு அவ்வளவு வேலை இருக்கு, அப்பா வேற கம்பனி விசயமா வெளியூருக்கு போயிருக்கார், நாளைக்கு மறுநாள் தான் காலேஜ் ‘பிரேஷேர் டே’ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ராகிங் இருக்கும், அதுக்கு தான் அப்பா இல்லாத இந்த நேரம் கண்டிப்பா நான் இருந்தாக வேண்டும், இன்னைக்கு காலேஜ் போய் தங்கி இருக்குற வேலையெல்லாம்,பார்க்கணும் புரிஞ்சிக்க மச்சான்”என்றவனை இதற்கு மேல் கட்டாயப்படுத்த விருப்பம் இல்லாமல்,
“சரி மச்சான், கல்யாணம் முடிச்சிட்டு உனக்கு போன் பண்றேன்” என்றான் கார்த்திக்.
“சரி அப்ப நான் கிளம்புறேன்”என்றான் அகி ஊரெல்லாம் தண்டோரா போட்டவனும் வந்து சேர்ந்து இருந்தான்.“என்ன அண்ணா கிளம்பிட்டிங்களா!” என்றவாறு அகிலை நெருங்கினான் ரகு.
“டேய் கார்த்தி! நான் அகி அண்ணாவை அனுப்பிச்சிட்டு வரேன், மாப்பிள்ளையா அடக்க ஒடக்கமா வீட்டுக்குள்ள போ’’ என்றான் ரகு. ரகுவை முறைத்து கொண்டே, “சரி பார்த்து பத்திரமா கிளம்புடா” என்று சொல்லி உள்ளே சென்றான் கார்த்தி.
“அவன் சென்றதும் என்னடா அவ இந்த பக்கமா இன்னும் வரவே இல்ல?” என்றான்.“அவங்க வீட்டுக்கு போயிட்டு தான் வரேன், மேடம் ரெடி ஆகிட்டு இருக்காங்க வந்துடுவாங்க” என்றான்.
ரகுவிடம் பேசி கொண்டு இருக்கும் போதே, கத்தரி நீல நிற பாவாடையும், மஞ்சள் நிற தாவணியும் போட்டு கொண்டு,
ஆண்கள் பயன்படுத்தக்கூடிய புல்லட் வண்டியை ஓடிக்கொண்டே அவர்களை ஓர கண்ணால் பார்த்து விட்டு, கடந்து சென்றாள் சுடர். ரகு பயந்தும், அகிலன் ஏக்கமாகவும் என பார்த்து கொண்டு இருந்தனர்.
“சரி ரகு நானும் கிளம்புறேன், அவ என்ன தான்! பஞ்சாயத்து ஆபீஸ் ல பண்ண போறா தெரியலையே ஒரே ஆர்வமா இருக்கு! அப்புறம் உன்னோட ஃபோன் நம்பர் கொடு, அவ என்ன செய்யுறா? என்பதை எனக்கு உடனுக்குடன் சொல்லனும் என்னசரியா!” என்றவன் அவனது பதிலை கூட எதிர் பார்க்காது,
தனது விசிட்டிங் கார்டு ஒன்றை, அவன் கையில் வம்படியாக திணித்து, “நாளைக்கு சாந்திரம் ஒரு ஆறு மணிக்கு மேல ஃபோன் பண்ணு” என்று சொல்லி கொண்டே காரை எடுத்து பறந்து சென்றான்.
“என்ன மனுஷன் இவன்
எதிரே இருக்கிறவன் என்ன சொல்றான் என்று கேட்போம், ஒரு எண்ணம் இருக்கா, என்னோட பதிலை கூட கேக்கமால், அவன் பாட்டுக்கு அவனுக்கு கீழே வேலை பாக்கிறவங்க கிட்ட கட்டளை போட்டுட்டு போறான்.இந்த காதல் வந்தா, இப்படி தான் இருப்பாங்க போல!” என்று தனக்குள்ளே பேசி கொண்டே, கல்யாண வேலை, பார்க்க சென்று இருந்தான் ரகு.
தூரத்தே செல்லும் அவளை, குறிப்பிட்ட தூரத்தில் பின் தொடர்ந்தான் அகி.
“ப்பா என்னமா இருக்கா! முடியா இது? அவளின் பார்வைதான் காந்தம் போல் இழுக்கிறது என்றால், அவளின் கார்குழலோ, மயிலிறகு போல் மாயஜாலம் காட்டுதே! உன் குழல் அழகில் காணாமல் போவேன் நானேடி! என்று திடீர் கவிஞனாய்
பிதற்ற ஆரம்பித்து இருந்தான்.
‘ம்ம்’ அகி நீ ரொம்ப பாவம் டா,
இம்புட்டு அழகை பக்கத்துல வைச்சிட்டு தள்ளி நிக்கணுமா?” எண்ணியவனின் மனதிற்கு,
மூளையோ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளை அந்த கோலத்தில் பார்த்தும் உனக்கு தைரியம் தான்! என்று மூளையும், மனதும் போட்டி போட்டு கொண்டு இருக்க, அகிலனோ மூளையை மூலையில் தள்ளி விட்டு, மனதின் பக்கம் சாய்ந்தான்.
சுடர் பஞ்சாயத்து கட்டிடத்திற்கு அருகில் வண்டி நிறுத்துவதை பார்த்தவன், சற்று தள்ளி காரை நிறுத்தி அவள் காணா வண்ணம் மறைந்து நின்றான். முடிந்த அளவு, அவளை கண்களில் நிரப்பி கொண்டு இருந்தான், இன்றே கடைசி என்பது போல். அலுவலகம் வந்தவள் சில நிமிடம் ஸ்தம்பித்து போனாள்,
( சுடர் இவன் எல்லாம் உனக்கு ஒரு ஆளு இல்லை, வந்த வேலைய பாரு! என்று புத்திக்கு எட்டினாலும், அடிபட்ட மனசோ அந்த வடுவை எண்ணிக் கொண்டாள். ‘ம்ம்’ என்று தன்னையே தேற்றி கொண்டவள், இவனை விட நீ எதிர்க்க வேண்டியவன் இருக்கான், அதை மட்டும் கருத்துல வைச்சிக்கிட்டு இதை விடு, இந்த ஆளு உனக்கு தைரியத்தை வர வழைத்தவன், அதற்காகவது அவனை மன்னிக்க முடியாத பட்சத்தில், கண்டுக்காம விட்டு விடு, தனக்குள் போராடி கொண்டு இருந்தாள் சுடர்.)
அவளின் மெளனத்தை கலைக்கும் விதமாக,
“அம்மாடி சுடரு! வாடா நீயே, என்னனு கேளு? என்னோட பையன் நீ வேலை செய்யும் காலேஜில் தானே படிக்கிறான்! என்னமோ காசு கட்டணும் சொல்லுறான் எனக்கு என்னமோ சரியா படல, உண்மைய கேட்டு போலாம் என்று இவனையும் கையோடு கூட்டிட்டு வந்துட்டேன்.” என்றவளை பாவமாக பார்த்து வைத்தவள்
“அம்மா, நீங்க கவலைபடாதீங்க!
நானும் வேலை செய்யுறது வேற டிபார்ட்மெண்ட் என்ன எது விசாரிச்சிட்டு சொல்றேன்” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு
“என்ன சரத் இதெல்லாம் அவங்க பாவம் இல்லையா, நம்ம காலேஜ் ல இப்ப எதுக்கும் காசு கேக்குல எனக்கு நல்லா தெரியும், நாள் முழுக்க வெயில் கூட பார்க்காம உனக்கும் உன்னோட தங்கச்சிக்கும் இப்படி
உழைக்கிறவங்க கிட்ட போய் ஏமாத்தி காசு வாங்கி என்ன பண்ண போற! அவங்களுக்கு உதவி செய்யாமல் இருந்தாலும் பரவால்ல ஆனா, அவங்க இரத்தத்தை உறிஞ்சாம இருக்கலாம் இல்ல” என்றாள் கோவமாக.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக நடந்தான் சரத்.
“டேய் நாளைக்கு ஒழுங்கா கிளாஸ்க்கு போனமா படிச்சம்மா மட்டும் இரு உன்னையே மரத்தடியில் இல்ல கிரவுண்ட் அப்படி வேற ஏதாவது இடத்தில உன்ன பார்த்தேன் அப்புறம் என்ன பண்ணுவேன் தெரியும்ல!” என்றாள் சுடர்.
“எல்லாம் எனக்கு தெரியும்!” என்று சொல்லி முறைத்து விட்டுச் சென்றான்.
“உன்ன எல்லாம் திருத்த முடியாது?” என்றவள் அடுத்து வந்தவரிடம் பேசிக்கொண்டு இருந்தாள்
இவளுக்கு ஒரு நாள் இருக்கு! மாமன் தலைவன் என்ற, தைரியத்தில் ஆட்டம் போட்டு கொண்டு இருக்கா,அடிச்சா மாட்டிப்போம் ஊருக்கு முன்னால அசிங்கபட்டு தலை குனிய வைக்கல, நான் சரத் இல்லைடி! என்று தனக்குள்ளே சூளுரைத்து கொண்டான்.
சரத்திற்கு அவன் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் அமையுமா? அவன் வீசும் சதி வலையில் சிக்குவாளா? சுடர்.