பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து கோவமாக முகத்தை வைத்து கொண்டு, சுடரை பழி தீர்க்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணதுடன் நடந்து வந்த சரத்தின் முகத்தை பார்த்ததும் உணர்ந்து கொண்டான் அகில்.
இவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அவனுள் எழவே, சரத் வரும் திசை புறம் திரும்பி தன்னை தானே செல்ஃபி எடுப்பது போல அவனையும் சேர்த்து எடுத்து கொண்டான்.
“இவனுங்க வேற! இந்த செல்ஃபி வந்தாலும் வந்துச்சி, சும்மா சும்மா போட்டோ எடுத்து தள்ள வேண்டியது” என்று புலம்பி கொண்டு சென்றான்.
“அப்பாடா! அவனை போட்டோ எடுத்ததை கவனிக்கலை போல?”
என்று சொல்லி கொண்டு இருக்கும் போது, தனது அருகே யாரோ நிற்பது போல் தோன்றியது அகிலுக்கு.
மொபைல் போனில் இருந்து தலையை நிமிர்த்து பார்த்தான்
திடுக்கென்று ஆனது ஒரு நொடி, ஒருவாறு தன்னையை சுதாரித்து கொண்டவன்,
“என்ன மேடம்! ஏதாவது உதவி செய்யணுமா” என்றான் அவளை பேச விடாது முந்திக்கொண்டு.
அவனை முறைத்து பார்த்தவள் “அதை நான் உங்க கிட்ட கேக்கணும்,
ரொம்ப நேரமா இங்கேயே பார்த்திட்டு இருக்கீங்க! என்ன வேணும்? ஒரு நிமிசம் இருங்க நீங்க அந்த ரகு வீட்டுக்கு வழி கேட்டவரு தானே! இங்க என்ன வேலை?” என்று கேள்வி மேல கேள்வி கேட்டுகொண்டே இருந்தாள் சுடர்.
அடங்கி போய் இருந்த பயமும், நடுக்கமும் மீண்டும் வந்து ஒட்டிகொண்டது அகிலுக்கு.
“டேய் அகிலு எப்படியாவது சமாளிச்சிடுடா?” என்று தனக்கு தானே நம்பிக்கையை வளர்த்து கொண்டவன். “அ…அது.. வந்து…அது என்று முகமெல்லாம் வெளிறியதை, பார்த்த சுடருக்கு உள்ளுக்குள் அரும்பிய சிரிப்பை மறைத்து மீண்டும் அவனிடம் கோவமாக,
“ஹலோ மிஸ்டர் உங்களை தான் இங்க என்ன? வேலை உங்களுக்கு” என்றாள் மறுபடியும்
இந்த முறை ஓரளவு தன்னை சமன்படுத்தி கொண்டவன்
“வந்த வேலை முடிந்தது தான் என்று இழுத்தவன், இங்க பஞ்சாயத்து எல்லாம் நடக்கும் என்று ரகு சொன்னான் அதான்” தயங்கியவாறு பல்லை காட்டினான்.
“ஓ.. பஞ்சாயத்து பார்க்க வந்திங்க!
அப்படி!” என்று சிரித்தவள்,
உடனே அவனை முறைத்து பார்த்தாள், சிரிக்கிறா என்று அகிலும் அவளுடன் சேர்ந்து சிரித்தான், உடனடியாக
முறைப்பதை கண்டு சிரித்த வாய் மூடிக்கொண்டது.
“ஹே மேன் பாக்க நினைச்சா அங்க வந்து இருக்கணும், அதை விட்டுட்டு திருட்டு தனமா மறைந்து நின்று பார்க்கிறீங்க உங்களை பார்க்க நல்லா படிச்சவர் மாதிரி தெரியுது! இப்படியா நடந்துக்கிறது?” என்று வார்த்தைகளை பற்களை கடித்தவாறு கூறியதில்
“அகிலன் எப்படியாவது தப்பிக்கனும் என்ன சொன்னா இந்த அரிமகள் கிட்ட இருந்து தப்பிக்க முடியும்
யோசி டா! யோசி..”என்று தனது மூளையை கசக்கி கொண்டு இருந்தான்.
“நான் கிராமத்துக்கு வரது, இது தான் முதல் முறை, அதான் வித்தியாசமா இருந்தது அப்படியே தள்ளி நின்னு பார்த்திட்டு இருந்தேன்” என்று
சமாளித்தவனை திட்ட மனம் இல்லாமல் “சரி பார்த்திட்டு இருந்தது வரை போதும் கிளம்பு” என்றாள்.
மெகா சீரியல் பார்த்திட்டு இருந்தவருக்கு பாதியில் கரண்ட் போனால் எந்த மனநிலை இருக்குமோ! அப்படி இருந்தது அகிலனுக்கு. இன்னும் இரண்டு பஞ்சாயத்து கதை என்னவா இருக்கும்? என்ற ஆவலே அவனை மருகசெய்தது.
“ ஹலோ சார்
கிளம்புறீங்களா!”என்றாள் சுடர்.
வேற வழியே இல்லாமல் கிளம்பினான் அகிலன், போகும் அவனையே வெறித்து பார்த்தவள் மனதில் ஏதோ இனம் புரியாத அழுத்தம் ஒன்று குடி கொண்டது.
“என்ன மாதிரியான உணர்வு இது!
சந்தோசமா இருக்கிற மாதிரி இருக்கு, அதே சமயம் என்னவோ தேக்கி வைச்சி இருந்த வலியை கிளறி விட்ட மாதிரியும் இருக்கு,
இருந்தாலும் மனதின் ஓரத்தில் இனிமையாக தான் இருக்கிறது,
என்ன யோசிக்கிற சுடர் மனசை கட்டுபடுத்த கத்துக்க” என்று அலைந்த மனதிற்கு கடிவாளம் போட முயற்சி செய்து கொண்டு இருந்தாள் சுடர்கொடி.
அவனை விடுத்து அடுத்த வேலைக்கு சென்று இருந்தாள், மீதம் இருந்த பஞ்சாயத்து வேலைகள் அவளை அவனிடம் இருந்து விலக்கி வைத்தது, இன்னும் கிளம்பாமல் இருந்த அந்த மனிதனின் மனைவி சுடரிடம் வந்து, அவருக்கு பாவ விமோச்சனம் வேண்டி மண்டி போட்டு! அவளின் முந்தானை நீட்டினாள்,
கேள்வியாக அவளை பார்த்த சுடரோ
“நீங்க என்னதான் எங்க மாமா கிட்ட
உங்க புருசனுக்கு உயிர் பிச்சை வாங்கினாலும், என்னோட மனசு கரையாது எழுந்திருங்க! அப்புறம் நீங்களும் சரி, என்னோட மாமாவும் சரி, இதுல மூன்றாவது மனிதர்கள் தான், பாதிக்கப்பட்ட நான் தான் முடிவு எடுக்கணும் ஆனா, ஒரு விஷயத்துல உங்க புருசனுக்கு நன்றி சொல்லி தான் ஆகணும், அந்த சம்பவத்துக்கு பிறகு தான் இந்த சுடருக்கு தைரியமும், திமிரும் வந்து ஒட்டி கொண்டது..”
ஆவேசமாக பேசி விரக்தியாக சிரித்தவள்.
அவளின் புறம் திரும்பி “என்னோட குழந்தை பருவத்தை அனுபவிக்க முடியாமல் போனது யாரால? அதை திருப்பி உங்க புருஷனாலும் அவனோட சுத்திட்டு இருந்த இன்னொருத்தன் ஏன் யாராலுமே தர முடியாது!” என்று உலை கணலாக கொதித்தாள்.
“பாரு உன்னோட புருஷனை எப்படி இருக்கான் என்று, இதுவும் உன்னோட புண்ணியத்தால் மட்டுமே இந்த ஒரு கால் கையாவது வலித்து கொள்ளாமல் இருக்கே என்று சந்தோஷ பட்டுக்க, உன்னோட பையன் சம்பாதிக்கிறான் தானே சாப்பாட்டுக்கு ஒன்னும் கஷ்டம் இல்லையே! ஒருவேளை கஷ்டம் என்றால் சொல்லு வேண்டியதை அனுப்பி வைக்க சொல்றேன்
என்னால இவனுக்கு பாவ நிவர்த்தி எல்லாம் தரமுடியாது?” என்றவள் எரிமலையாக வெடித்து சிதறினாள்.
அகிலோ அவள் பார்வையை விட்டு காரை எடுத்தானே அன்றி, காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி வந்தான். வந்தவன் மீண்டும் ஒளிந்து கொண்டு அங்கே நடப்பதை பார்த்து கொண்டு இருந்தான்.
இவளின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தவன், மனநிலை சோகத்தை தத்து எடுத்துக் கொண்டது
இதற்குமேல் இருக்க முடியாது என்று நினைத்தவன், அந்த கிராமத்தை விட்டு, தனது கல்லூரியில் பிரத்யோகமாக இவனக்கு என்று ஒதுக்க பட்ட ஆபீஸ் அறையோடு கொண்ட ஓய்வு அறையில் சென்று அமர்ந்து கொண்டான்.
ஒருவாறு வேலைகள் முடித்து வீடு திரும்பி இருந்தாள் சுடர்,
கிளம்பும் போது இருந்த உற்சாகம்
முற்றிலும் வடிந்து விட்டது அவளுக்கு வண்டியை விட்டு வீட்டிற்குள் நுழந்தவளை “சுடர்..” என்று சொல்லி ஓடி வந்து கட்டி கொண்டான் கபிலன்.
பின்னே வந்த சாந்தாவோ
“டேய் கபிலா என்னது இது அவளை பெயர் சொல்லி கூப்பிடுற பழக்கம் அடி வாங்க போற பார்த்துக்க!” என்றாள்.
அவளின் பேச்சில் இன்னும் இறுக்கி கட்டி கொண்டான் கபிலன்.
“விடுங்க அண்ணி அத்தை பொண்ணு தானே! அவனுக்கு இல்லாத உரிமையா இவ கிட்ட!” என்றாள் சுடரின் தாய் மகேஷ்வரி.
இது எதுவும் சுடரை பாதிக்கவில்லை அம்முவரையும் விட்டு நகர்ந்து சென்றவள், தனது தந்தை புகை படத்திற்கு அருகே வந்து நின்றாள்.
“அப்பா..!” என்று சொல்லி தனது சோகங்களை கண்ணீர் வழியாக கரைத்து கொண்டு இருந்தாள்.
“சுடர் என்னடி ஆச்சி!” என்றாள் மகேஷ்வரி, மூவரும் மாற்றி மாற்றி
என்ன ஆச்சி என்று கேட்டு கொண்டே இருந்தனர்,தூரத்தில் வந்து கொண்டு இருந்த விருத்தாச்சலம், “அவளை கொஞ்சம் தனியா விடுங்க!” என்றார்.
அவர் வந்த திசையை திரும்பிய பார்த்த அனைவரும் அவர் முகத்தில் இருந்த கடுமையை கண்டு, அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.
“இங்க பாரு சுடர்! எப்பவோ நடந்தது நினைச்சி, இப்ப அழுகிறது கோழை தனம், அவங்களுக்கு நீ பதில் சொல்லிட்டு வந்த பிறகு அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத, உன்னோட இலக்கு வேற அதை மட்டும் நினைச்சி முன்னரே வழியை பாரு” என்றார்.
தன்னிலை மீட்டு எடுத்தவளும், “சரிங்க மாமா ஏதோ பழைய நினைப்பு நான் எதுவுமே மறக்கவில்லை!”என்று சொன்னவள் தனது கண்களை துடைத்துக் கொண்டு குறுநகை செய்தால் சுடர்.
“இது தான் என்னோட சுடர் திங்கள் கிழமை காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் ஆரம்பம் தெரியும் தானே ஏதாவது திட்டம் இன்னேரம் ரெடி பண்ணி இருப்ப நினைக்கிறேன்”என அவளின் தலையை வருடி கொடுத்தார்
“வரும் போது சரத்தை கொம்பு சீவிட்டு வந்து இருக்கேன் எப்படியும் ஏதாவது செய்வான், அப்புறம் அந்த சீனியர் பையனுக்கு போன முறை சண்டை போட்டதுக்கும், ஆள் சேர்த்ததுக்கும் காசு குடுத்திட்டிங்களா, இன்னும் ஒரு வாரம் கழித்து மறுபடியும் வேற பிரச்சனை கிளப்ப சொல்லுங்க!
நாளைக்கு காலேஜ்க்கு அந்த மகேந்திரன் பையன் வரதா ஒரு தகவல் வந்து இருக்கு,
மகேந்திரன் கிட்ட வாங்கின நல்ல பெயரை வைச்சி, அவனை நெருங்க போறேன்” என்றாள்.
“அவனை பழி வாங்க, உன்னோட வாழ்க்கையை பணயம் வைக்கணுமா?” என்றார் விருத்தாச்சலம்.
“இல்ல மாமா இது தான் சரி அவங்க குடும்பம் இவ்வளவு நாள் நிம்மதியா இருந்ததே எனக்கு நெஞ்சு நெருப்பா கொதிக்குது, ஏதோ இந்த
ரெண்டு வருஷமா, அவனுக்கு கொஞ்ச கொஞ்சமா நிம்மதியை வாங்கிட்டு இருக்கேன், அது எனக்கு போதாது அவனோட வீட்டுக்குள்ள போய் அவங்க வீட்டுல இருக்கிற மத்தவங்களையும் ஒரு வழி பண்ணணும்.” என்றாள் சுடர்.
ஞாயிறு வழக்கமாக கபிலனோடு விளையாடி ஊரையே சுற்றி வந்து கழித்து இருந்தாள் சுடர்.
காலேஜ் வந்தவன், தனது அறையில் அவளது நினைவே அகிலனை கட்டி போட்டது மொபைல் போனின் அலறல் கேட்டு எடுத்தவன் அதில் அம்மா என்ற பெயரை பார்த்ததும்,
அவனே அறியாமல் உதடு புன்னகை பூ பூக்க செய்தது, வழக்கமான நலவிசாரிப்பு முடித்தவன், சுடரை பார்த்து அவளின் செயல் தைரியம் என்று அவளை புகழ்ந்து கொண்டு இருந்தவன், பாராட்டு விழா எடுக்காதது தான் குறை அகிலன் தாய் கல்யாணியோ ‘அடேய் அப்பா விடுடா போதும்’ என்று கெஞ்சும் அளவிற்கு இருந்தது சுடரின் புராணம் பேசி தீர்த்து விட்டான்.
அதற்கு அடுத்த நாள் கல்லூரியில் இவன் பொறுப்பேற்று, கல்லூரியில் உள்ள ஸ்டாப் அனைவரையும் அறிமுகம் செய்யும் போது அங்கே சுடர் நின்று இருப்பது இவனுக்கு ஆச்சரியம் என்றால், அவளுக்கோ அதிர்ச்சியா இருந்தது.
இவ்வாறு அன்று நடந்ததை நினைத்து பாட்டு பாடிக்கொண்டே வண்டியை ஓட்டிய அவனை விசித்திரமாக பார்த்தான் ரகு.
“டேய் எதுக்கு டா இப்படி பாக்குற, இதுக்கு முன்னாடி நான் பாட்டு பாடி கேட்டது இல்லையா? எப்படி இருக்கு என்னோட வாய்ஸ்” என்றதும் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான் ரகு.
“ஹே சிரிக்காதடா என அவனை தடுத்தவன், காரணத்தை சொல்லு என்று விடாபடியாக கேட்டு கொண்டு இருந்தான். இந்த “நரி இருக்குல நரி அது வடைக்கு ஆசை பட்டு, காக்காக் குரல் இனிமையா இருக்கும் சொல்லும், அதை நம்பி இந்த காக்காவும் வடை கீழே விழுந்து கூட தெரியாமல் கத்தும் அந்த மாதிரி இருக்கு உன்னோட குரல்!” என்று சொல்லி சிரிக்கவும் சுடர் இருக்கும் இடத்திற்கு வரவும் காரை நிறுத்தியவன் அடிக்கும் முன் ஓடி சென்றான் ரகு.
அவனை துரத்தி கொண்டு வந்தவன் தன்னவள் சிலம்பம் சுற்றி பயிற்சி கொடுப்பதை ஆவலாக ரகுவின் தோலில் கையை போட்டு ரசித்து கொண்டு இருந்தான்.
அவளும் இவர்கள் வந்ததை கண்டு கொண்டாலும் அவர்களை தவிர்த்து, தனது வேலையில் முழுமனதாக கவனம் செலுத்தி இருந்தாள்.
கம்பை சுற்றியவள் வேண்டுமென்றே ரகுவும் அகியும் இருந்த இடத்திற்கு, தெரியாமல் கை தவறி நழுவது போல வேகமா அனுப்பினாள்.
“ஹா அய்யோ அம்மா என்னோட முட்டி!” என்ற கத்தல் சத்தம் அவளை வந்தடைந்தது.