தான் விட்ட சிலம்பம் எப்படியும் ரகுவின் காலை உடைத்து இருக்கும் என்று நினைத்து சந்தோசமாக அவர்கள் இருந்த பக்கம் திரும்பி பார்க்க, ரகுவிற்கு பதில் அகிதான் தனது முட்டியை பிடித்து கொண்டு கீழே அமர்ந்தான்.
அகிலன் தனது முட்டியை பிடித்து கொண்டு கத்த அவன் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தாள் “என்னங்க நீங்க, அதான் கம்பு வருவதை பார்த்தீங்க தானே! தள்ளி நிற்கலாம் தானே” என்று அவனின் முட்டியை எண்ணெயை வைத்து நீவி கொண்டே கேட்டாள்.
“நான் தள்ளி தான் நின்னுட்டு இருந்தேன் சுடர். இந்த ரகுதான், சடாரென்று என்னை அவன் பக்கம் இழுத்து விட்டுவிட்டான், நானும் கவனிக்கல” ' இஸ்.. ஹா ' என்று என்று வலியால் முனங்கினான், அவனை விடுத்து ரகுவை முறைத்து “டேய் அதான் கம்பு வருவதை பார்த்த தானே அப்படியே நிக்க வேண்டியது தானே, இப்ப பாரு அவருக்கு அடி பட்டிருக்கு” என்று அவனின் தலையில் ஓங்கி ஒருகொட்டு வைத்து சென்றாள்.
“இவ என்னை அடிக்க அனுப்புன கம்புல அவங்க புருஷன் மாட்டினதும் ரொம்ப வருத்தம் படுறாங்க, இதே இடத்துல நின்னு நான் அந்த அடியை வாங்கனுமா! ஏன் எனக்கு எல்லாம் வலிக்காதா” என்று முனங்கி கொண்டே அகில் அருகே சென்றான்.
“கார்ல உக்காருங்க நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்” என்று விலகி சென்றவள் எதிரே வந்த ரகுவை முறைக்க, பதிலுக்கு அவனும் முறைத்து கொண்டே சென்றான், “இது தான் நீ காப்பாற்றிய லச்சனமா?” என்று அடிபட்ட காலை காண்பித்து கேட்டான் அகில். “எதுவா இருந்தாலும் தனக்கு பிறகு தான், முதல்ல நான் நல்லா இருந்தால் தானே உங்களை காப்பாற்ற முடியும்” என்று உச்சு கொட்டி பேசினான் ரகு.
“அடி பலமோ! எனக்கு தெரியும் வழக்கமா இப்படி யாராவது சுத்தி பார்க்குற ஆண்களின் கூட்டத்தில் இப்படி ஏதாவது ஒன்றை தவறி விடுவது போல செய்வாள் என்று, அதுக்கு தான் நிறைய பேர் இந்த பக்கம் வரக்கூட மாட்டாங்க, நானும் உங்களுக்காக தான் வந்தேன்” என்று சொன்னவன் காரில் ஏசியின் அளவை கூட்டி பாட்டை போட்டு அமர்ந்து கொண்டான்.
தனக்கு பதில் நியமித்த மாஸ்டரை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து, இனிமேல் எதுவா இருந்தாலும் அவரே செய்வார் என்ற நம்பிக்கை சொல்லி, அதை மேற்பார்வை பார்க்கவும், வீடியோ எடுத்து அனுப்பவும் நம்பிக்கையான ஆளை நியமித்து இருந்தாள்.
தனது புல்லட் எடுத்தவள் அகியின் காருக்கு அருகில் கொண்டு வந்து, அவனை தன்னோடு அழைத்து சென்றாள், கபிலனை ரகுவோடு வருமாறு சொல்ல, அகியோ கபிலனுக்கு பழிப்பு காட்டி அவளின் பின்னால் ஏறி கொண்டான். காலில் அடிபட்டத்தை நினைத்து இப்போது சந்தோசம் பட்டு கொண்டான்.
வண்டியை விட்டு இறங்கியவனை தாங்கி பிடித்து கொண்டே வீட்டிற்குள்ளே அழைத்து சென்றவள், மீண்டும் ஒரு முறை எண்ணெயை வைத்து நீவி விட்டவள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லா வலியும் காணாமல் போயிடும், இப்படி காலை நீட்டி படுத்து தூங்குங்க” என்று அவனை படுக்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டாள். அவள் சொன்னது போலவே தூங்கி எழுந்த பிறகு வலி குறைந்தது போல் உணர்ந்தான்.
சுடரை பார்க்க வந்தவர்களை வேடிக்கை பார்த்து கொண்டே காபியை குடித்தவன், “இவன் இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!” என்று சந்தேகமா மீண்டும் மீண்டும் அவனையே உற்று பார்த்தன். அவனை சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை என்றாலும் அவனையும் சுடரையும் சேர்த்தே போட்டோ எடுத்துக்கொண்டான்.
“இப்ப எதுக்கு இங்க வந்த அரவிந்த் அவரும் இங்கே தான் இருக்காரு! உனக்கு வேண்டிய பணத்தை மாமாவை தர சொல்லுறேன் இப்ப போ” என்று அவனை விரட்டி கொண்டு இருந்தாள். “எனக்கு ரொம்ப அவசரம் சுடர் இப்பவே பணத்தை கொடுக்க முடியுமா!” என்று எப்போதும் பணத்தை எதிர்பார்க்காமல் வேலை செய்பவன் திடிரென கேட்டதும் “சரி இங்கேயே இரு” என்று சொல்லி வீட்டில் இருந்து அவன் கேட்ட பணத்தை விட அதிகமாகவே கொடுத்து அனுப்பினாள், இத்தனையும் மறைந்து நின்று அகிலும் பார்த்து கொண்டு இருந்தான்.
எதற்கு அவனுக்கு இவ்வளவு பணம் தரணும் அதுவும் அவன் முகம் பழக்கப்பட்ட முகமா இருக்கு, யாரா இருக்கும் என்று படுத்து கொண்டே யோசித்தவனிடம் வந்த சுடர் “சீக்கிரம் படுத்து தூங்குங்க இங்க இருந்து காலேஜுக்கு போக ரொம்ப நேரமாகும்” என்று சொல்லியவள் வழக்கம் போல் கட்டிலுக்கு நடுவே தலையணை போட்டே படுத்து கொண்டாள்.
சீக்கிரமே எழுந்தவள் வீட்டில் உள்ளவரிடம் பேசிவிட்டு பிளாக்கியை கொஞ்சி கொண்டு இருந்தாள், “நான் கிளம்பிட்டேன் சுடர் போகலாமா” என்று பேசிக் கொண்டே வெளியே வந்தான். “ஏய் சுடர் இந்த மாமனை மறந்திராதடி” என்று கட்டி கொண்டவனை வெறித்து பார்த்தான் அகி.
“என்னோட கபியை மறக்க முடியுமா?” என்று அவனின் கன்னத்தை கிள்ளி முத்தம் வைக்க, கபிலனோ அகிலனை பார்த்து சிரித்தான். எல்லாம் என் நேரம் இந்த பொடிசு கூடயெல்லாம் போட்டி போட வேண்டியாத இருக்கு என்று அலுத்து கொண்டவன், “நான் காரில் இருக்கிறேன் நீங்க சொல்லிட்டு வாங்க” என்று அவன் கிளம்பிவிட, எல்லோரிடமும் சொல்லி கொண்டு அவளும் கிளம்பினாள்.
அவர்களின் காரை சிறிது தூரம் துரத்தி கொண்டே வந்த பிளாக்கி, எதிரே வந்த பெண்மணியை பார்த்து அவளின் பின்னால் நடந்து சென்றது. சுடருமே காரில் இருந்து ஏக்கமாக எட்டி பார்த்து மீண்டும் இயல்பாக அமர்ந்து கொண்டாள்.
கடந்து சென்ற பெண் அகியின் கருத்தில் பதியவில்லை போலும், அதனால் நாயை நினைத்து வருத்தம் கொள்கிறாள் என்று நினைத்தவன், “உங்களுக்கு நாய் ரொம்ப பிடிக்குமா சுடர்” என்று கேட்டவன் அவளின் முகத்தை பார்க்க, அவளோ சோகமாக முகத்தை வைத்து கொண்டு கண்ணை மூடினாள். சொந்த ஊர் வீடு இவற்றை விட்டு வருவதில் வருத்தமாக இருக்கிறாள் என்று நினைத்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் வண்டியை ஓட்டி கொண்டு வந்தான்.
விழிமூடியவளை ரசித்து கொண்டும், வண்டியை ஓட்டி கொண்டும் வந்தவன் “ஏங்க சுடர் காலேஜ் வந்துடுச்சி” என்று எழுப்பிய பின்னரே கண்ணை திறந்து பார்த்தவள், “சரி ஈவினிங் இதே இடத்துல உங்களுக்காக வெயிட் பண்ணுறேன்” என்று சொன்னவனை பார்த்து சிறியதாக தலை அசைவை கொடுத்தவள் எதுவும் பேசாமல் காரை விட்டு இறங்கி சென்றாள்.
அவளை எப்படியாவது சந்தோசமாக மாற்ற வேண்டும் என எண்ணி கொண்டே அவனது அலுவலகம் சென்றான். விளையாட்டு மைதானத்தில் தனியாக அமர்ந்து கொண்டு இருத்த மலரை, தூரத்தில் இருந்து பார்த்த ரகுவோ அவளிடம் ஓட்டமும் நடையுமாக சென்றான்.
“என்ன மலர் வேலை நேரத்துல இப்படி உக்கார்ந்து இருக்க, ஏதாவது பிரச்சனையா! உடம்பு ஏதாவது பண்ணுதா!” என்று பதட்டமாக கேட்டுக்கொண்டு இருந்தவனின் கையை பிடித்து தனது முகத்தில் வைத்து சத்தமில்லாமல் அழுது கொண்டு இருந்தாள். அவளின் கண்ணீரை உணர்ந்தவன் “எதுக்குடி இப்படி அழுகிற, என்ன நடந்தது!” என்று கேட்பவனுக்கு மறுப்பாக தலையை அழைத்தவளோ, “ஒன்னும் இல்ல ரகு சும்மாதான் உன்னோட வேலையை பாரு” என்று அவனை தள்ளி நிற்க வைத்து எழுந்து நடக்க முற்பட்டவளை தடுத்து தன்புறமாக திருப்பி “என்னைய பாரு எதுக்கு அழுத காரணத்தை மட்டும் சொல்லு” என்று கோவமாக கேக்க வேற வழியே இல்லாமல்,
“சொல்றேன் ரகு ஆனா இப்ப இல்ல வேலை முடியட்டும் அப்புறம் சொல்லுறேன்” என்று சொன்னவள் முகத்தை கழுவிவிட்டு, வேலையை பார்க்க சென்று இருந்தாள், இவனுக்கு தான் என்னவா இருக்கும் என்று வேலைக்கு இடையிலும் அவளை அடிக்கடி பார்த்து கொண்டு இருந்தான்.
வேலை முடிந்ததும் அவளை அருகில் இருக்கும் காஃபி ஷாப் ஒன்றுக்கு அழைத்து சென்றவன், இருவருக்கும் காஃப் ஆர்டர் செய்தவன், அவளுக்கு எதிராக அமர்ந்தவன் மலரின் கையை பிடித்து தேற்றும் விதமாக வருடி கொடுத்து கொண்டு இருந்தான். காஃபி குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் “இப்ப சொல்லு!” என்று அவளின் முகத்தை பார்த்தான்.
“பொறந்தா நல்லா பணக்கார வீட்டுல பொறக்கணும், ஏழையா கூட பொறந்திடலாம் ஆனா இந்த நடுத்தர வர்க்கத்துல மட்டும் பொறந்திட கூடாது இல்ல!, ஏழையை திரும்பி போகவும் முடியாமல், பணக்காரனா வளரவும் முடியாமல் அப்படியே இந்த தரையில போட்ட மீனாட்டும் காலத்துக்கும் கஷ்டம் மட்டும் தான் படனும் இல்ல!” என்று வெறுப்பாக புன்னகை தந்தவளிடம் சென்று அருகில் அமர்ந்து கொண்டான்.
“என்ன ஆச்சி மலர் எதுக்கு இப்படி சம்மந்தம் இல்லாமல் ஏதேதோ பேசி வருத்த பட்டுட்டு இருக்க, எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லு”
என கேட்டவனின் தோலில் சாய்ந்து கொண்டவள், “என்னைய இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறியா ரகு?” என்று கேட்டவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளின் தாடையை பிடித்து,
“என்னமா ஆச்சி! எதுக்கு இப்படியெல்லாம் கேட்டுகிட்டு இருக்க, நானா கல்யாணம் பண்ணலாமா கேட்டால் தம்பி படிப்பு முடியட்டும் சொல்லுவ, இப்ப நீயே திடிரென வந்து கல்யாணம் பண்ணலாமா கேக்குற! எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு” என்று அவளை அழுத்தமாக கேட்டான்.
“தம்பியோட படிப்புக்கு நான் வெளியே வட்டிக்கு கடன் வாங்கி இருக்கேன்ல” என்று சொன்னவள் அமைதியாகிவிட, “சரி அதனால் என்ன நீயும் மாதம் தவறாமல் வட்டியை கட்டிக்கிட்டு தானே வர, இப்ப என்ன அதுக்கு!” என்றவனிடம் எப்படி சொல்வது என்று தயங்கியவள்.
“அவனுக்கு வட்டி தவறாமல் கொடுத்துட்டு தான் இருக்கோம், ஆனா நேத்து வீட்டுக்கு தாம்பூல தட்டோட வந்தவன் என்னை பொண்ணு கேட்டு சட்டமா உக்காந்துட்டு இருந்தான், அம்மாவும் தம்பியும் தட்டி கேட்டதுக்கு முழு பணத்தையும் ஒரு வாரத்துல வட்டியும் முதலுமாக கொடுக்கணுமா! இல்ல அவன் கட்டாய தாலி கட்டுவேன் சொல்லி மிரட்டிட்டு போறான்” என்று அழுதவள் ரகுவின் கையை அழுத்தமாக பிடித்து கொண்டாள்.
“அவனுக்கு எவ்வளவு பணத்தை தரணும்” என்று பல்லின் இடுக்கில் வார்த்தையை கடித்து துப்பினான் கோவத்தில். அது ஒரு ஆறு லட்சம் இருக்கும் என்றதும் என்னடி சொல்ற அவ்வளவு பணமா! என்று கேட்டவன் எப்படி அவ்வளவு செலவு!” என்று அதிர்ச்சியாக கேட்டான். முதல் வருடத்தில் இருந்து இதோ அடுத்த மாதம் நாலாவது வருடமே முடிய போகுது, வருடத்துக்கு ஒன்னு முக்கால் லட்சம் தேவைபடுது, செமஸ்டர்பீஸ், வேன் பீஸ், கேன்டீன் பீஸ் அப்படி மொத்தமா வந்துடுது, இதுக்கு எல்லாம் பேங்க்லோன் எங்க கிடைக்குது என்று வருத்தபட்டவள், அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்.
“சரி கவலை படாதே நம்ம கல்யாணத்துக்கு எவ்வளவு நகையை சேத்து வைச்சி இருக்க!” என்று ரகு கேக்க, திருதிருவென முழித்தவள் “அது எல்லாமே பழைய நகை, அதை மாற்றி தான் புதுசா எடுக்கணும், எப்படியும் ஒரு எட்டுல இருந்து பத்து சவரன் இருக்கும்” என்றதும், அப்ப கவலையை விடு என்றவன் அதற்கான தீர்வை சொன்னதும், ஏதோ ஓரளவுக்கு அவளின் மனநிலை மாறி இருந்து.
சுடரை வீட்டிற்கு அழைத்து சென்ற பிறகு, எல்லோருக்கும் முன்னிலையில் அவளின் கையில் ஒரு அட்டை பெட்டியை கொடுத்தான், என்ன என்பது போல் அவனை பார்த்தவள், “வாங்கி பிரித்து பாருங்க சுடர்” என்றதும், தனது மாமியார் முகத்தை பார்த்து விட்டு, அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கி பார்த்தாள். அதில் பிளாக்கியை போலவே ஒரு கறுப்பு நிற நாய் குட்டி இருந்தது, அதை பார்த்தவளுக்கு, பிளாக்கியை குட்டியாக கொண்டு வந்து போல் இருக்க, அதனை வாங்கி கொண்டவள் நன்றி சொல்லி, தனது நெஞ்சோடு அணைத்து அதனை வருடி கொண்டு இருந்தாள்.
தனது மகனை தனியே அழைத்து வந்தவள் “என்னடா நாய்க்குட்டி வாங்கி வந்து இருக்க, நீ இவங்களை பார்த்தா தள்ளி நிற்ப இப்ப எப்படி!” என்று ஆச்சரியமாக கல்யாணி கேக்க, அந்த குட்டியை கொஞ்சம் தனது மனைவியை பார்த்தவாறு “அவங்களுக்கு புடிச்சி இருக்குமா” என்ற சொல்லோடு அவனது அறைக்கு சென்று விட, போகும் மகனை வியப்பில் பார்த்தாள் பெற்றவள்.
இந்த காதல் நமக்கு பிடிக்காத பல விசயங்களை, நம்மோட இணைக்காக எதுவேண்டுமானாலும் செய்ய வைக்கும், அகிலன் மட்டும் விதி விலக்கா என்ன?