• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 15

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
ரகு சொன்னதை போல அவளுடைய பழைய நகையை எடுத்து கொண்டு வந்தாள் மலர், அகியுடன் பேசிக்கொண்டு இருந்த ரகுவை பார்த்தவள், அவன் வருவான் என்று தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்க, அவனோ வருவது போல் தெரியவில்லை பொறுத்து பார்த்தவள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றவள், அகிலனுக்கு ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு, தான் கொண்டு வந்த நகையை அவன் கையில் கொடுத்துவிட்டு, வேலையை பார்க்க சென்று இருந்தாள்.

“என்னடா உனக்கு மட்டும் ஸ்பெசல் கவனிப்பு அப்படி என்ன தான் இருக்கு” அவள் எப்படியும் சாப்பிட உணவை எடுத்துவந்து இருப்பாள், இருவரும் காதலிப்பது அகியும் அறிந்துதான் இருந்தான், கவரில் இருக்கவே ஏதோ பிரசாதமாக இருக்கும் என்று எண்ணி அவனின் மறுப்பையும் மீறி பிடுங்கியவன், உள்ளே நகையை பார்த்ததும் திகைத்து போய் “என்னடா இது எதுக்கு உனக்கு நகை கொடுத்திட்டு போறா, ஏதாவது அவசரமா நான் இருக்கும் போது அந்த பொண்ணை எதுக்கு தொந்தரவு பண்ணுற” என்று ரகுவை கோவமாக அதட்டினான்.

அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் நின்றவன், வேறு வழியே இல்லாமல் உண்மையை சொல்லி இருந்தான்.
“ச்சீ என்ன மனுசனுங்கடா, ஒருத்தரடோ இயலாமையை அவங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்க பார்க்கிறாங்க, அவங்களை!” என்று கோவமாக கெட்ட வார்த்தைகளை போட்டு ஏகத்துக்கும் திட்டி கொண்டு இருந்தான் அகி. “சரி நான் இந்த நகை எவ்வளவு விலைக்கு எடுத்துப்பாங்க கேட்டு மீதி ரெடி பண்ணிட்டு, அவளை கூட்டிட்டு போய் அவன் முகத்துல விசிறி அடிச்சிட்டு வரேன்” என்று சொன்னவனை முறைத்து கொண்டு இருந்தான் அகி.

“எதுக்குடா முறைக்கிற” என்று கேட்டவனை பொருட்படுத்தாமல், அவன் கையில் இருந்த நகையை பறித்து கொண்டவன், மலர் இருக்கும் கம்ப்யூட்டர் லேப்பிற்கு சென்று இருந்தான், இருவரும் அவளின் முன்னால் நிற்க, கேள்வியாக ரகுவை ஏறிட்டு பார்த்தாள், அவனோ அமைதியாக நின்று இருக்க, அகிதான் “நீ உடனே கிளம்பு அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட மனுஷனை யாரு என்று காட்டு!” என்று கோவமாக சொன்னவன் அவள் கையில் நகையை கொடுத்து விட்டு வேகமா காரை நோக்கி நடக்க, அவன் பின்னால் இருவரும் ஓடி சென்றனர்.

அவள் சொன்ன இடத்திற்கு சென்றவன், அங்கே நாற்பதை நெருங்கும் மனிதன் ஒருவன், அளவுக்கு அதிகமாக நகையை அணிந்து கொண்டு, வட்டி பணத்தை கொடுக்காதவரை மிரட்டியும் அடித்தும் தகாத வார்த்தைகள் பேசி கொண்டும் இருந்தான். அவனிற்கு முன்னால் மலர் நிற்பதை பார்த்தவன், வாயெல்லாம் பல்லாக இளித்து வைத்து கொண்டே, “எனக்கு தெரியும் உன்னால அவ்வளவு பணத்தை தர முடியாது என்று அதுக்கு தானே அவ்வளவு பணம் நீ கேட்கும்போதெல்லாம் கொடுத்தேன், எப்படி இந்த மாமன்கிட்ட சிக்கினியா!” என்று பேசியவன் பார்வை அத்துமீறி வக்கிரமாக அவளை பார்க்க, மலருக்கு முன்னால் இருவர் வந்து நிற்க, தடையாக நிற்பவர்களை கோவமாக பார்த்து, “டேய் தள்ளி நில்லுங்கடா குட்டியை பார்க்க முடியல” என்று வாயில் இருந்த பீடாவை துப்பியாவாறு முறைத்தான்.

“சரி என்ன விசயம் எதுக்கு இப்படி விரைச்சிட்டு நிக்கிறீங்க! எவ்வளவு பணம் வேணுமோ அவன் கிட்ட கேட்டு வாங்கிட்டு போங்க” என்று ஒருவனை கைகாட்டி சொன்னவன் பார்வை மட்டும் மலரை மொய்த்து கொண்டு தான் இருந்து, அதில் இன்னும் கோபமான ரகு அவனின் முகத்தில் கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். “ஏண்டா அரைகிழவா, உனக்கு என்னோட மலரு கேட்குதா! ஆளும் வயிறும் பாரு அப்படியே சிலிண்டரை உருட்டி விட்ட மாதிரி இருந்துகிட்டு, உனக்கு சின்ன பொண்ணு கேட்குதா, அவ என்னோட பொண்டாட்டிடா இன்னொரு முறை இவ இருக்கிற திசைக்கு உன்னை பார்த்தேன் அதுதான் நீ இந்த உலகத்தில் இருக்கிற கடைசி நாள், உன்னால ஒரு பிரச்சனை என்று அவ சொல்லட்டும்” என்று சொன்னவன், அவனுடைய கை வலிக்கும் அளவிற்கு அடித்த பிறகே, அவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர்.

“டேய் என்னடா இப்படி அவனை அடிச்சிட்ட, அவ்வளவு லவ்வா மலர் மேல!” என்று கேட்டவன், அவர்களை சமன் செய்யும் பொருட்டு இருவரையும் அருகில் இருக்கும் ஜுஸ் கடைக்கு அழைத்து சென்று இருந்தான், இவ்வளவு நாள் வணக்கம் மட்டும் சொல்லி பேசியவள், திடீரென்று அவனுக்கு அருகில் அமர்ந்து இருக்க, இருவருக்கும் ஜுஸ் வாங்க சென்று இருந்தான் ரகு.

“உங்களுடைய உதவியை என்னைக்கும் மறக்கவே மாட்டேன் சார்” என்று சொன்னவள் “சீக்கிரமே அந்த பணத்தை கொடுக்க முயற்சி செய்யுறேன் சார்” என்று ஒரு மாதிரி சங்கடமாக உக்கார்ந்து கொண்டு இருந்தாள், “அட என்னமா நீ ரகுவோட பொண்டாட்டி, எனக்கு தங்கை மாதிரி தான் அவன் நிறையவே சொல்லி இருப்பானே, அவங்க அண்ணன் தான் என்னோடு ஃப்ரெண்ட் ஆனா இப்ப அவனை விட, இவன் தான் ரொம்ப ஒட்டிக்கிட்டு இருக்கான்” என்று அவளை இயல்பாக மாற்ற நிறைய பேசிக்கொண்டு இருந்தான் அகி.

ஜுஸ் வாங்கும் இடத்தில் யாரிடமோ ரகு பேசுவதை பார்த்த அகில் அவனை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு, அவன் கொண்டு வந்த ஜூசை குடித்து விட்டு கல்லூரிக்கு சென்று இருந்தனர். அதற்கு பிறகு நாட்கள் வேகமாக ஓடினாலும் அகியின் வாழ்வில் பெரியதாக முன்னேற்றம் இல்லை, அவள் அதற்கு மனசு வைக்க வேண்டுமே! காலேஜ் செல்வதும் வீட்டுக்கு வந்து நாயை கொஞ்சுவதும் என்று சுடரும், அவளை தூரத்திலே ரசித்து கொண்டு இவனும் என்று இருந்தனர்.


அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, மகேந்திரன் தான் பேச்சை ஆரம்பித்து இருந்தார், “வரும் வாரம் நம்ம பிசினஸ் ஷேர்
ஓல்டெர், இன்வெஸ்டெர் அப்புறம் விஐபி என்று எல்லோருக்கும் உங்க வெட்டிங் பார்ட்டி வைச்சி இருக்கேன், அதற்கு ஏற்றார் போல நல்லா கிராண்டா மாடலா ட்ரஸ் எடுத்துக்குங்க” என்று சொன்னவர் தன் மனைவிக்கு கண்ணை காட்டி விட்டு சென்றார். இந்த விசயத்தை நீ தான் பார்த்து கொள்ளவேண்டும் என்பதை பார்வையால் கடத்திவிட்டு சென்றார். அகியிற்கு சொல்லமுடியாத சந்தோசம் அவளுடன் ஜோடியாக நிற்க போவதை எண்ணி, இதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்று சுடர் யோசித்து கொண்டு இருக்க, அவள் வளர்த்த நாய்குட்டியோ அகிலன் காலை நக்கியது, அதில் சுயம் வந்தவனாக உடனே தனது காலை வேகமாக இழுத்து கொண்டவன், ஒரே ஓட்டமாக மேலே சென்று அறையை பூட்டி கொண்டான். எங்கே பின்னாலே வந்து விட போகிறது என்ற எண்ணத்தில்.

“பாருமா இவ்வளவு பயம் வைச்சிகிட்டு, எதுக்கு இந்த நாய்க்குட்டியை வாங்கிட்டு வரணும், எல்லாம் உன்னோட விருப்பத்துக்கு நடக்கணும் சொல்லி ஓவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்யுறான்” என்று மகனுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தாள். மெல்லியதாக சிறு புன்னகையை தனது மாமியாருக்கு கொடுத்தவள், அந்த குட்டியை தூக்கிக்கொண்டு வெளியே சென்றாள்.

“வெளியே வந்தவள் அங்கு வேலை செய்யும் நபரை அழைத்து, இந்த மினி பிளாக்கியை சாப்பிட வைச்சி அவங்க இடத்துல படுக்க வைச்சுங்க” என்று சொன்னவள், தனது போனை எடுத்து அந்த பார்ட்டியில் செய்யவேண்டியதை, எதிரில் கேட்டுக்கொண்டு இருந்தவரை தான் சொல்வது போல் செய்ய தயார் செய்து கொண்டு இருந்தாள். தனது வேலையை சத்தமில்லாமல் முடித்தவள் வஞ்சமாக சிரித்தவள் அமைதியாக அகியுடன் படுத்து கொண்டாள்.

பார்ட்டி நாளும் வந்தது, மகேந்திரன் தனது ஷேர் ஹோல்டரில் இருந்து கடைநிலை ஊழியர் வரைத் அழைத்து இருந்தார், கம்பனி பார்ட்டி என்பதால் குறைந்த அளவிலே பெண்கள் கூட்டம் இருந்தது, மருமகளுக்கு துணையாக மேடையில் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தாள் கல்யாணி.

வரிசையாக வந்தவர்கள் விலையுர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்து தங்களின் செல்வாக்கை பிறர் பெருமையாக பேச வேண்டியே, சிரித்த முகமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து நின்று இருந்தனர். ஒரு புறம் வெளிப்படையாகவே மது விருந்தும் நடந்து கொண்டு இருந்து, பெண்கள் ஒருசிலரும் மதுவை அருந்தி கொண்டு இருந்தனர், சைவம் முதல் அசைவம் வரை அனைத்து வகையான உணவுகளை பரிமாறினார்கள், இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க, மெல்லிய இசை ஓட விட்டு அதற்கு ஏற்றாற்போல் நிறைய தம்பதிகள் ஆடிக் கொண்டு இருந்தனர், பெரிய எல்இடி திரையில் இப்போது படமாக்க பட்டதும், ஏற்கனவே நடந்த கல்யாணம், சுடர் அகியின் தனிப்பட்ட போட்டோ ஷூட் என்று மாற்றி மாற்றி ஒளிர விட்டு கொண்டு இருந்தனர்,

ஒருவழியாக பரிசு கொடுப்போர் எல்லாம் கொடுத்துவிட்டு பார்ட்டியை சந்தோசமாக கொண்டாடி கொண்டு இருந்தனர், தம்பதிகளை ஆட அழைத்து அதில் அகியின் தோலில் கையை போட்டு சுடரும், சுடரின் இடையில் கையை வைத்து அகிலும் ஒரு மெல்லியே மேற்கத்திய இசைக்கு நடனம் ஆடினர், கற்று கொடுத்தது போலவே இருவரும் ஆடினார்கள், ஆடும் போது அவனை ரசித்து ஆடியவள் பாட்டு முடிந்ததும் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தாள், அவள் பார்வையில் தொலைந்த தன்னை அவளிடம் தேடாமலே விலகி நின்றான் வேற வழியில்லாமல் ஒருவித அவஸ்தையுடன்.

ஆடியதிலும் இவ்வளவு நேரமும் நின்று கொண்டு இருந்ததாலும், போலியாக புன்னகை செய்து பேசியதில் கலைத்து போயினர் இருவரும், “சரி நீங்க இப்படி அமைதியாக உக்காருங்க உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து அனுப்புறேன்” என்று கல்யாணி சொல்லிவிட்டு நகர அவள் செல்வதற்குள் தெரிந்தவர் பிடித்து வைத்து கொண்டு பேசி கொண்டு இருக்க, இவளும் வந்த விசயத்தை மறந்து கதை அளந்து பேசி கொண்டு இருந்தாள்.

எல்லோருக்கும் குளிர்பானமும், மதுவும் கொடுத்து கொண்டு இருந்த நபர் இவர்களை நோக்கி வரவும் தங்களுக்கு தான் மாமியார் அனுப்பி வைத்து இருப்பார்கள் என்று நினைத்த சுடர், இரண்டு டம்ளர் எடுத்து கடகடவென்று குடித்தாள். எடுத்து கொண்டு வந்தவனும் இந்த காலத்தில் இதெல்லாம் சகஜம் என்றும் எத்தனையோ பார்ட்டியை பார்த்தவர் என்பதால், சுடர் எடுத்து குடிப்பதை பெரிய விஷயமாக கருத்தில் கொள்ளாமல் அடுத்த வேலையை பார்க்க சென்று இருந்தான், பாட்டு சத்தத்தில் காது கேக்காமல் போகவே போனை எடுத்து கொண்டு அவள் கண்படும் தூரத்தில் நின்று பேசியவன் அப்போது தான் சுடரின் அருகே வந்தான்.

“உங்களுக்கு வேண்டுமா!” என்று கையில் மீதம் வைத்து இருந்த ஜுஸ் டம்ளரை அவன் முகத்துக்கு நேராக நீட்டினாள் அதிலிருந்து வந்த வாசத்தில் திடுக்கிட்டு அவளை பார்த்தவன், “இதையா குடிச்சிங்க சுடர்!” என கேட்டான்.

அவள் தலையை உலுக்கி கொண்டே “இதையா இந்த பசங்க குடிக்குதுங்க சாப்ட் ட்ரிங் உடம்புக்கு நல்லதே இல்ல, அதுவும் போக வாய்க்கும் கூட நல்லாவே இல்ல ' ச்சீ ஊவா' வாயெல்லாம் கசக்குது” என சொல்லியவள் தடுமாறவே அப்படியே அகியின் தோலில் சாய்ந்தாள்.

அப்போது பெரிய திரையில் மகேந்திரன் தனது பி ஏ விடம் பேசியது ஓட விடபட்டது. அதை பார்த்த அனைத்து விருந்தினரும் ஒரு சேர அதிர்ச்சியாக, மகேந்திரன் இருந்த இடத்தையும் அந்த திரையும் மாறி மாறி பார்த்தனர்.
 
  • Love
Reactions: shasri and Vathani

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
ava maamanaruku aapu ready pannitu ippo avalae avaluku aapu vaychuta pola
இதுவும் அவளுக்கு சாதகமா தான் அமைந்து இருக்கு, ஒரு வழியா மனசுல இருந்த காதலை சொல்லிட்டாளே அவனும் கேட்டு விட்டானே