• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 18

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
நாள் முழுக்க வீட்டிலே இருந்ததால் வெறுப்பாக உணர்ந்தவள் மினி பிளாக்கியுடன் விளையாடி கொண்டு இருந்தாள், தனது அறையில் அங்கும் இங்குமாக ஓடி திரிந்த மினியை துரத்தி கொண்டு விளையாடியவள் கண்ணில் பட்டது ஜிம் அறை, சட்டென்று யோசித்தவள்
வேகமாக அகியின் காப்போர்ட்டை திறந்து பார்க்க அவனின் ஜிம் உடையை தேடி பார்க்க, அதில் இருந்தவை அனைத்தும் அரை பேண்டும் டி ஷர்ட்டும் தான், ' இந்த அகிலன் ட்ராக் எல்லாம் போடமாட்டானா!' என்று மீண்டும் அவனது ஆடையை கலைத்து போட்டு தேடினாள் ஆனால் அதில் இருந்து துணிகளுடன் ஒரு போட்டோவும் சேர்ந்தே விழுந்தது, போட்டோவை கவனிக்காமல் விழுந்த அனைத்தையும் எடுத்து அவனது அலமாரியில் வைத்து விட்டு, அவனை திட்டி கொண்டே வேற வழியில்லாமல் அவனுடைய உடையை அணிந்து கொண்டவள் மினியுடனே ஜிம்மில் நுழைந்தாள்,

சுடர் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மினி அவளை போலவே உட்கார்வதும் பிறகு எழுந்து கொள்வதும் என்று விளையாடி கொண்டு இருந்தது, வீட்டுல இருந்த வரைக்கும் நிறைய வேலை இருந்தது பசங்களுக்கு சொல்லி தருவது, வயலுக்கு போகிறது என்று சுத்திகிட்டே நேரம் போகிறது கூட தெரியாமல் இருந்திட்டு இப்ப காலேஜ், காலேஜ் விட்டா வீடு இப்படி இருக்கிறது உடம்பை சோம்பேறி தனமா மாற்றி வைத்து இருக்கு என்று புலம்பியவள், சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தாள்.

மினிக்கு இயற்கை அழைப்பு வரவே வாசலை பார்த்து கத்தி கொண்டே, சுடரை சீண்டி கொண்டு இருந்தது,
“சரி வரேன் போகலாம்” என்று கதவை திறக்கும் போது, சரியாக அப்போது தான் அகியும் கதவை திறக்க, அவனின் காலில் இடைவெளியில் புகுந்து ஓடி சென்றது வழக்கமாக இயற்கை அழைப்பை கழிக்கும் இடத்திற்கு,

ஜிம்மின் கதவை பிடித்து அவளும், அறையின் கதவை பிடித்து கொண்டு அவனும் நின்று கொண்டு இருக்க, ஒருவரை ஒருவர் இமைக்காமல் சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தனர், முதலில் சுயத்திற்கு வந்தது என்னவோ சுடர் தான், கதவில் இருந்து கையை எடுத்தவள் வழிந்த வியர்வையை டவலில் துடைத்து கொண்டே அவனை பார்த்து, “இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நின்னுகிட்டு இருக்கிறதா உத்தேசம்!” என அவள் சொல்லிய பிறகே கதவை மூடிவிட்டு அவளின் அருகே வந்தான்.

அவளை விழுங்கும் அளவிற்கு பார்த்தவன் பார்வையில் கூசி போனவளோ “ஏன் இதற்கு முன்னாடி என்னை பார்த்து இல்லையா? இப்படி முழுங்கிற மாதிரி பாக்குற” என்று அவள் கோவமாக கேக்க, “ஐய்யோ அப்படி இல்லைங்க! நான் உங்களை ட்ராக் ல பார்த்து இருக்கேன், ஆனா இந்த மாதிரி ஆஃப் பேன்ட் ல பார்த்தது இல்லை அதான்!” என்று இழுத்தவன் முகமெல்லாம் சந்தோஷ ரேகையில் படர்ந்தது,

“சும்மா ஜிம் போகலாம் என்று ட்ரஸ் தேடி பார்க்கும் போது இது தான் இருந்தது, வேற வழியில்லாமல் தான் உன்னோட ட்ரெஸ் போட்டேன், ஏன் உன்னோட துணியை போட்டது உனக்கு பிடிக்கலையா!” என்று கோவமாக பேசியவள் அவனின் மனம் புரிந்தும் கோவமாக பேசிவிட்டு உடையை மாற்றி கொண்டு வந்து அவன் கையில் திணித்தவள் கொடுத்த கையோடு வெளியேவும் வேகமாக சென்று விட்டாள்,

கோவமாக பேசி தன்னை விட்டு விலகி சென்ற தன் மனைவி கொடுத்த உடையை தொட்டு பார்த்தவன் அதற்கு ஒரு முத்தத்தை கொடுத்து, “எப்படி சுடர் நீங்க என்னோட துணி போட்டதை நான் தப்பா நினைப்பேன், அதுக்கு நான் கொடுத்து வைக்கணும்” என்று அந்த உடையை நாசியின் அருகே கொண்டு வந்து வியர்வையில் நனைந்த துணியில் அவளின் வாசனையில் தன்னை தொலைத்து கொண்டு இருந்தான்.

அவனிடம் கோவமாக பேசி வெளியே வந்தவள், தன் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி வெக்கப்பட்டு கொண்டாள், தோட்டத்தில் உள்ள கல்நாற்காலியில் அமர்ந்தவள் இப்போதும் அங்கு நடந்த நிகழ்வை எண்ணி இதயம் படபடத்தது, எப்படி தன்னை சமன் செய்வது என்று தெரியாமல் அமைதியாக பூக்கள் நிறைந்த செடியை பார்த்து கொண்டு இருந்தாள். அவனின் முன்னால் இப்படி அறை குறையாக நின்றத்தில் வெக்கம் தாளாது குனிந்து கொண்டவள் அவன் கண்ணோடு தன் கண்ணை கலக்க விட்டவள் அவன் கண்ணிலே தொலைந்து தான் போனாள், தன்னிலையை மீட்டவள் கோவம் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு அவனிடம் இருந்து தப்பி இங்கே வந்து அமர்ந்து கொண்டாள்.


அவளின் பார்வையில் எதையோ உணர்ந்தவனும் அவளின் கோவத்தை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளாமல், அவள் தந்த துணியும் அவள் தனக்கு முன்னால் நின்றத்தையும் எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவன், கதவை மூடிவிட்டு அவள் கொடுத்த தனது உடையை போட்டு கொண்டு கண்ணாடியில் தன்னையே ரசித்து பார்த்தவன் எண்ணத்திலோ அதே உடையில் அவளும் தன்னோடு இருப்பது போல கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டு இருந்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக கழற்றியவன் கையில் இருந்த துணி நழுவி கீழே விழுந்து, அதை எடுக்காமல் “இதோ வரேன்” என்று சொன்னவன் ஏதோ ஒரு துணியை போட்டு கொண்டு கதவை திறந்தான்.

“தம்பி அம்மா உங்களுக்கும் பாப்பாவுக்கும் பாலை கொடுக்க சொன்னாங்க” என்று இரண்டு டம்ளர் பாலை தாங்கிய ட்ரைவை நீட்டினாள் சகு, அவளிடம் இருந்து பாலை வாங்கியவன் “சுடர் வெளியே இருப்பாங்க அவங்க கிட்டவே கொடுத்துடுங்க” என்று தனக்கானது மட்டும் எடுத்து கொண்டு அவளை அனுப்பினான். அவள் சென்றதை பார்த்தவன் டேபிளில் பாலை வைத்தவன், விழுந்த துணியை எடுக்க கீழே அமர்ந்தவன் கண்ணில் வேற ஒன்றும் தெரிந்தது துணியை தோளில் போட்டவன் அந்த புகைபடத்தை எடுத்து பார்த்தான், “ஓ அம்மா அன்னைக்கு கொடுத்தாங்க இல்ல, ச்சை இதை எப்படி மறந்தேன்” என்று அந்த புகைபடத்தை தனது போனில் போட்டோ எடுத்தவன் அதை ஒருத்தருக்கு அனுப்பி விட்டு, போனை போட்டு தனது தாய் சொன்ன விவரங்களை சொல்லி சீக்கிரம் கண்டு புடிச்சி தருமாறும் கேட்டு கொண்டான். அதன் பிறகே அவள் அணிந்த துணியை பொக்கிஷமாக மடித்து வைத்தவன் தொட்டு பார்த்து சிரித்து விட்டு அலமாரியின் கதவை மூடினான்.

தோட்டத்தில் இருந்தவளும் ஓரளவு ஆசுவேசமாக மாறிய பின்பு அங்கே பூத்து குலுங்கிய பூக்களை பொறாமையாக பார்த்து “உங்களுக்கு என்ன கவலை!, உங்களை தொடுத்து கடவுளுக்கு காணிக்கையாகவோ, இல்லை தலையிலோ, அப்படியும் இல்லையா இந்த செடியிலோ இருந்து ஒருநாள் மலர்ந்து மடிந்து போயிடுவீங்க, ஆனா இந்த மானுட பிறவி ஒரே நாளில் முடிந்து விடாதே! ஒரு விதத்தில் நம்ம இருவருக்கும் ஒற்றுமை இருக்கு இல்ல!” என்று சொன்னவள் விரக்தியாக சிரித்தாள்,

“எல்லா பூக்களும் சாமிக்கு போய் சேரது இல்லையே! கொஞ்சம் பேரு தான் போறீங்க! இதோ பாதி பேரு செடியில் இருந்து போன பிறகும், கடவுளுக்கும் இல்லாமல் தலைக்கும் இல்லாமல் விற்பனை ஆகாமல் வாடி குப்பைக்கும் போறவங்களும் இருக்கீங்க, எனக்கும் தான் நல்ல வாழ்க்கை அமைந்தும் வாழவும் முடியாமல், விலகவும் முடியாமல் யாருக்கும் பயன்படாமல் இப்படி தனிமரமா இருக்கிறது நெருப்புல மாட்டின புழுவா துடிக்கிறேன்” என்று வருத்தமாக கையில் இருந்த பூவினை பார்த்து பேசினாள்.

சரியாக அந்நேரம் வந்த சகுவும் “பாப்பா என்ன பூக்கூட பேசிட்டு இருக்க” என்று கேட்டதும் திடுக்கிட்டு திரும்பி அவளை பார்த்து “அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா, சும்மா தான் காத்து வாங்க வந்தேன் இந்த பூ அழகா இருந்ததா அதான் அவங்களை கொஞ்சிட்டு இருந்தேன்” என்று சிரித்து கொண்டே சொன்னாள்.

“இந்த பாலை புடிங்க” என்று சொன்னவள் “நாளைக்கு உங்களுக்கு இந்த பூவையெல்லாம் பறித்து கட்டி கொடுக்கிறேன்” என்று சொன்னவளை தடுத்து, “ஐய்யோ அக்கா வேணாம் வேணாம் செடியிலே இருக்கட்டும் அதுல இருந்து பறிக்காதீங்க, இப்படி பார்க்க தான் பிடித்து இருக்கு” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு பாலை குடித்து விட்டு அமர்ந்து இருந்தவள் தனது குடும்பத்திற்கு போனை பேசி ஆறுதல் தேடினாள்.

தனது வீட்டாரின் குரல் கேட்டதும் கொஞ்சம் மனம் தெளிந்தது போல் உணர்ந்தவள், டம்ளரை எடுத்து கொண்டு உள்ளே நடக்க அப்போது தான் மகேந்திரன் காரும் உள்ளே வந்தது, அவனை கோவமாக பார்த்தவள், தன்னை நெருங்கி வரும் போது போலியாக குறுநகை செய்தாள், “வாங்க மாமா போய் பிரஷ் ஆகிட்டு வாங்க அத்தைகிட்ட டிஃபன் எடுத்து வைக்க சொல்றேன்” என்று சுடர் சொல்ல,

“அம்மாடி வேண்டாம் மா நான் ஏற்கனவே சாப்பிட்டு வந்துட்டேன், நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் அதான் ப்ரெண்ட்ஸ் கூட வெளியே போயிட்டு வரும் போது சாப்பிட்டு வந்துட்டேன், உங்க அத்தையை தொந்தரவு பண்ணவேண்டாம்” என்று மகிழ்ச்சியாக சொல்லி அவளிடம் நில்லாமல் அவளை கடந்து சென்றார்.

இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அவரது வாயில் இருந்து வந்ததும் முகம் வாடியவள் அவனிடம் காட்டாது சரி என்ற தலை அசைப்புடன் தனது அறைக்கு சென்றாள்.

கல்யாணியை பார்த்தவர் “தான் நேற்று சொன்னது போல் எந்த தவறும் செய்யவில்லை என்று இன்னைக்கு அகிலன் நிரூபித்துவிட்டான் பார்த்தியா” என்று பெருமையாக சொன்னவரிடம் கோவமாக வந்தவள்,

“நேற்று நீங்க எந்த தப்பும் பண்ணல என்பது சரி தான் ஆனால் நீங்க தப்பே பண்ணாதவரு இல்லையே! செய்த பாவம் தான், செய்யாத தப்புக்கு ஒரு நாள் முழுக்க அவமானம் பட்டு நிக்கவைச்சிஇருக்கு” என்று குத்தலாக பேசியவள் வேகமாக கதவை திறந்து வெளியே வந்தாள்,

அடுப்படியில் இருந்து தண்ணிரை நிரப்பி கொண்டு வந்த அகிலன் கோவமாக வெளியே வரும் தனது அன்னையை பார்த்தவன் அவளின் அருகே சென்று “என்னமா ஆச்சி அதான் அப்பா மேல எந்த தப்பும் இல்லை சொல்லி நிரூபிச்சாச்சே! அப்புறமும் எதுக்கு கோவமா இருக்கீங்க” என்று தனது கையில் இருத்த வாட்டர் பாட்டிலை கொடுத்து குடிக்க வைத்தவன் அவளை அமர வைத்து அவளுடனே அமர்ந்து கொண்டான், அவளின் மனதை மாற்றவே பேச்சை மாற்றினான்.

“அம்மா அன்னைக்கு ஒரு போட்டோ கொடுத்தீங்க தானே!” என்று சொல்லி முடிக்கும் முன்னமே, “அவங்களை பத்தி ஏதாவது தெரிந்ததா, அவங்க இப்போ எங்க இருக்காங்க உனக்கு தெரியுமா? என்னை அவங்க கிட்ட கூட்டி கொண்டு போக முடியுமா!” என்று ஆவலாக கேள்வி கணைகளை தொடுத்து கொண்டு இருந்தாள் கல்யாணி.

“ஐய்யோ அம்மா என்னை கொஞ்சம் பேச விடுங்க, நீங்களாகவே கேள்வி கேட்டு கொண்டு போனால் என்ன அர்த்தம்! அவங்களை பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன், அந்த போட்டோல இருக்கிறவங்க பெயரை மட்டும் வைச்சி ஒண்ணுமே செய்ய முடியாது! அவங்களை பத்தி உங்களுக்கு தெரிந்தது சொன்னா உதவியா இருக்கும் சொல்லி கேக்குறாங்க! உனக்கு தெரிந்தது சொல்லு நான் அவங்ககிட்ட சொல்லி தேட சொல்றேன், அன்றைக்கு கேக்கும் போது நேரம் வரும் போது சொல்றேன் சொன்னீங்க! இப்ப சொல்லியே ஆகணும், அப்ப தான் அவங்களை தேட முடியும்” என்று பேசிய மகனை சோகமாக பார்த்தார் கல்யாணி.சிறிது நேரம் யோசித்தவர் தீர்க்கமாக மகனை பார்த்து “யாருகிட்ட சொல்லனுமோ அவங்களை என்னை பார்க்க ஏற்பாடு பண்ணு!” என்ற சொல்லோடு எழுந்து சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

'அப்படி என்ன? என்னிடம் சொல்லாமல் யாரோ ஒருத்தர்கிட்ட சொல்ல முடியும் போது, என்னிடம் சொல்லாமல் மறைக்க வேண்டிய அவசியம் என்ன! நான் தெரிந்து கொள்ள கூடாத அளவுக்கு அப்படி என்ன நடந்து இருக்கும்! இவங்க நேத்து சண்டை போட்ட மாதிரி இதுவரைக்கும் சண்டை போட்டு பார்த்ததும் இல்லையே! இப்பவும் கோவமாக தான் வெளியே வந்தாங்க, என்னவோ இருக்கு ஆனா எனக்கு தெரிய வேணாம் நினைக்கிறாங்க!' என்று அப்படியே நின்று யோசித்தவன் “பார்ப்போம் ஒரு நாள் வெளியே வராமல் போகுமா என்ன! அப்போ பார்த்துக்கலாம்” என்று பெருமூச்சி விட்டு கொண்டே மேல சென்றான்.

இரண்டு நாள் தூங்காமல் இருந்தவனுக்கு படுத்ததும் தூக்கம் தழுவி கொள்ள, அவன் அருகிலே படுத்தவள் அகிலன் நன்றாக தூங்கியது உறுதி செய்த பிறகே, தனது அலமாரியில் இருந்து ஒரு புகைபடத்தை எடுத்தவள் அதை வெறித்து பார்த்து கொண்டும் விரல்களால் வருடி கொண்டும் இருந்தவள் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் அந்த புகைப்படத்தில் விழுந்தது, பழைய படம் இந்த கண்ணீரில் சிதிலம் அடைந்து விடுமோ! என்று எண்ணியவள், தனது தாவணியை கொண்டு அந்த கண்ணீர் துளிகளை ஒற்றி எடுத்து தனது நெஞ்சோடு அணைத்து கொண்டாள். அகிலன் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் திரும்பி படுக்க அசைவதை பார்த்தவள் சட்டென்று அந்த போட்டோவை தனது தலையணையின் அடியில் வைத்து விட்டு படுத்து கொண்டாள்.
 
  • Wow
Reactions: shasri