முகத்தை துடைத்து கொண்ட சுடர் “இந்த காதல் வர வரைக்கும் நாம நமக்கு பிடிச்ச எது வேண்டுமானாலும் தைரியமா செய்யலாம்ல, இந்த காதல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கோழையா மாத்திட்டு இருக்கு தீபா, அவரு என்னை பார்க்குற ஒவ்வொரு நொடியும் எனக்குள்ள இருக்கிற காதல் வெளியே வர பார்க்குது! நான் சொன்னேன்ல பார்டில நான் தெரியாமல் குடிச்சிட்டேன் என்று, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு எனக்கே தெரியாமல் அவர்கிட்ட என்னோட காதலை சொல்லிட்டேன் தீபா, அவருக்கு இன்னும் நம்பிக்கை கொடுத்துட்டேன் இது உடையும் போது அவரு எப்படி தாங்குவாரோ தெரியல!” என்று புலம்பியவளை அணைத்து கொண்டு,
“விடு சுடர் அவருக்கு நீ குடிச்சிட்டு சொன்ன என்று தான் தோணும்! அவருக்கு சந்தோசமா தான் இருந்து இருக்கும், இப்ப என்ன செய்ய முடியும்! நடந்தது எதுமே மாற்ற முடியாது அதை நினைக்கிறதை விட்டு அடுத்து என்ன செய்யலாம் யோசி மனசை மாற்ற முயற்சி பண்ணு” என்று அவளை தட்டி கொடுக்க,
ஆனால் அவள் மனமோ பின்னோக்கி தான் சென்றது, மகேந்திரன் சாருக்கு பதிலா அவங்க பையன் பொறுப்பெடுத்து நடத்த போறாராம், வரிசையாக நின்ற ஆபீஸ் ஒர்க்கர் தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர் புதியவன் எப்படியோ என்ற கவலையில், ஆனால் ஒருத்தியோ அதற்கு மாறாக “இப்ப வந்து இருக்கிற சேர்மன் பையன் ரொம்ப அழகா செம ஸ்டைலா பயங்கர ஹேண்ட்சம் மா இருக்கிறார் என்று ஸ்டூடண்ட் பேசிட்டு இருக்கிறதை கேட்டேன் சுடர்” என்று சுடரிடம் கிசுகிசுத்து கொண்டு இருந்தாள் தீபா.
சலிப்பாக அவளை பார்த்து “ஹே அவரை விடு டி நேற்று எங்க ஊருக்கு ஒரு பையன் வந்தான் பார்க்க அப்படி இருந்தான், பயங்கர மேன்லி பெர்சன் தெரியுமா!” என்று சொன்னவளை ஆச்சரியமாக பார்த்தாள் தீபா.
“ஹான் என்னோட சுடரா இது நான் ஒன்னும் கனவு காணலையே! அவளா ஒரு பையனை பற்றி புகழ்ந்து சொல்றது ரொம்பவே அதிசயம் தான்” என்று சொல்லி கொண்டு இருக்க, அப்போது தான் அங்கே நடந்து வந்த அகியிடம் ஒவ்வொருத்தாராக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் அனைவரும்,யாரையும் பெரியதாக எடுத்து கொள்ளாதவன் அவளிடம் வரும் போது அப்படியே வியப்பாக நிற்க, அவளோ அதிர்ச்சியாக நின்றாள், தீபா இடித்த பின்பே சுயத்திற்கு வந்தவள் லேசாக புன்னகைத்தாள் “ஹலோ சார் என்னோட பெயர் சுடர் கொடி, நான் இங்க அக்கௌன்ட் டிபார்ட்மெண்ட்டில் ஒர்க் பண்றேன்” என்றதோட பேச்சை நிறுத்த, அவளை பார்த்து சிரித்து விட்டு அடுத்து தீபாவிடம் நின்றான் அவளும் அறிமுகம் செய்த பிறகு, அனைவருக்கும் முன்னால் நின்றவன் பொதுவாக பேசினான் “என்னோட பெயர் அகிலன் என்னோட அப்பா இந்த காலேஜ் பொறுப்பை முழுசா என்னிடம் கொடுத்துட்டு அவரு பிசினஸை பார்க்க போறாரு! இனி எல்லாமே நான் தான் கவனிக்க போறேன்” என்று சொன்னவனோட பார்வை மட்டும் அடிக்கடி சுடரை தொட்டு மீண்டது.
“பார்த்தியா நான் சொன்ன மாதிரி ரொம்ப அழகா ஸ்டைலா இருக்காருல” என்ற தீபாவை முறைத்தாள் சுடர், அதில் அவனை ரசிக்கிறாள் என்ற பொறாமையே எட்டி பார்த்தது, “ஹே இவரு எல்லாம் அழகு சொல்லாதே நேற்று பார்த்தேன் பாரு ஒருத்தரை ப்பா என்ன ஸ்டைல் நடக்கிற விதம் ஓ மை காட் செம மாஸா இருந்தாரு, நீ என்னடா இந்த வத்தல் மூஞ்சியை பார்த்து வழிந்துட்டு இருக்க, பார்த்து மேடத்துக்கு கல்யாணம் ஆகி புருஷன் இங்கே தான் இருக்கான் என்ற நினைப்பு இருக்கா!” என்று சொல்ல, “அடிபாவி கல்யாணம் ஆனால் சைட் அடிக்க கூடாது என்ற ஏதாவது சட்டம் இருக்கா என்ன?” என்று சொல்ல, “ஹான் வாங்க மாணிக்கம் அண்ணா எங்க இவ்வளவு தூரம்?” என்றதும் சுற்றி முற்றி பார்த்தாள் தீபா.
“இவ்வளவு பயம் இருக்குல! ஒழுங்கா ஆண்டி மாதிரி நடந்துக்க, சும்மா அவரு நல்லா இருக்காரு சொன்ன அப்புறம் அண்ணனுக்கு போனை போட்டுவிடுவேன் பார்த்துக்க!” என்ற சுடரை பார்த்து, “என்னது ஆண்டியா?” என்று கடுப்பாக கேட்க, “பின்ன இல்லையா! அதான் கல்யாணம் ஆகிடுச்சு தானே” என்றாள் சிரித்தவாறு, “என்னைய விட மூணுமாசம் பெரிய பொண்ணு நீ, உன்னை விட சின்ன பொண்ணு நானு, நான் ஆண்டி என்றால் நீ பாட்டி போடி” என்றாள் சிடுசிடுப்பாக,
“ஹே கல்யாணம் ஆனாலே ஆண்டி தான் போடி சும்மா கோவப்பட்டுகிட்டு, நீ தானே அவசர பட்டு கல்யாணம் பண்ண அப்ப ஆண்டி சொன்னால் ஏத்துக்கிட்டு தான் ஆகணும், இப்ப நானும் நீயும் நிற்கும் போது ஒரு சின்ன குழந்தை என்ன சொல்லும் உன்னை ஆண்டி என்றும் என்னை அக்கா என்றும் சொல்லிதானே கூப்பிடும் அப்புறம் ஆண்டியை ஆண்டி சொல்லாமல்!” என்று சிரித்தவளின் மேல் கொலை காண்டு ஆகி துரத்தி கொண்டு இருக்கும் போது, ஹே என்னடி பண்ணிட்டு இருக்க அங்கே கிரவுண்டில் பெரிய சண்டையே போயிட்டு இருக்கு, நீங்க என்னடா என்றால் விளையாடிட்டு இருக்கீங்க! சீக்கிரம் வாங்க” என்று சொல்லி விட்டு ஒருத்தி ஓட,
குறும்பு தனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இவர்களும் அவ்விடத்திற்கு செல்ல அங்கே சீனியர் ஸ்டூடண்ட் இருவர் ஒருவரை மாற்றி ஒருவர் அடித்து கொள்ள, சக மாணவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர், விசயம் அகிலன் காதுவரைக்கும் சென்று இருக்க அவனும் வந்து சேர்ந்து இருந்தான், கல்லூரி முதல்வரே வரும் போது சண்டை போட்டவர்களும் விலகி நிற்க, சுற்றி இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு “வேடிக்கை பார்த்து முடிச்சிட்டிங்க என்றால் எல்லோரும் கிளம்புங்க!” என்று கோவமாக சொன்னதும், நிமிடத்தில் கூட்டம் கலைந்து இருந்தது, அங்கே ஸ்டாஃப் ஒரு சிலர் நிற்க அதில் சுடரும் நின்று இருந்தாள், “உங்களுக்கும் தனியா சொல்லணுமா?” என்றதும் அவனை முறைத்தவள் முன்னே வந்து நின்றாள்,
“நீங்க புதுசு தானே இவங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்! யார் சொல்லி தெரிந்துகொள்ள போறீங்க? அதுக்கு எங்களில் யாராவது இங்கே இருந்து தானே ஆகணும்” என்று மிடுக்காக பேசிய சுடரை கையை பிடித்து கிசுகிசுத்தாள் தீபா. “ஹே சும்மா இருடி அவருகிட்ட போய் நெஞ்சை நிமிர்த்தி சண்டை போட்டு இருக்க, அமைதியா இருடி” என்று சொல்லும் போது, “மிஸ்..!” என்று சொல்லி தயங்கியவன் அவளின் பெயரை தெரிந்தும் அழைக்காமல் யோசிப்பது போல் நடிக்க, “சுடர்கொடி” என்று அவனை முறைத்து கொண்டே கணீர் குரலில் சொன்னாள், அதில் அவனும் மிரண்டு தான் போனான் இருந்தும் வெளியே காட்டாமல்,
“நீங்க இவங்களோட என்னோட கேபின் வரைக்கும் வாங்க” என்றதும், மற்றவர்கள் கலைந்து செல்ல, தீபா தான் என்ன பேச போராளோ என்று பயந்து கொண்டே சென்றாள். அகிலனை தொடர்ந்து நடந்த மூவரும் ஒரு மர்ம புன்னகையை உதிர்த்து கொண்டனர் யாரும் அறியா வண்ணம். அவனது அறைக்கு சென்று அவனுக்கு முன்னால் இருவர் நிற்க சுடர் அகிலனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்,“சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எதுக்கு இப்படி காலேஜ் ஹவர்ல சண்டை போடுறீங்க!” என்று கேக்க, இருவரும் ஒரு சேர எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் சொல்ல, தலையை குனிந்து சிரித்தாள் சுடர்.
“இது வழக்கமாக நடக்கிற விசயம் தான் இவனுங்களில் யார் பெரியவன் என்ற போட்டி தான், இவன் ஒரு நல்லது செய்தால் அவன் கெடுப்பான், அவன் செய்தால் இவன் கெடுப்பான் ஈகோ போட்டி சார் இப்ப கூட போட்ட சண்டை எனக்கு தெரிந்து ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ஸை வெல்கம் பண்றதுல போட்டி வந்து இருக்கோம்” என்று இவள் சொல்ல, அவனும் இவளின் பேச்சை கேட்டு கொண்டே,இரண்டு மாணவர்களை பார்க்க ஆமாம் என்பது போல் தலையை அசைத்தனர் இருவரும்.
“நீங்க என்ன கிண்டர் கார்டன் கிட்டா! இப்படி சண்டை போட, போயி படிக்கிற வேலைய பாருங்க இன்னும் ஒரு வருஷம் தான் இங்க இருக்க போகிறது, உங்க பேரை கெடுத்துக்காமல் படிச்சி டிகிரி வாங்கி கொண்டு கிளம்புற வழியை பாருங்க” என்று சொல்லி அனுப்பினாள் சுடர், இதில் வெறும் பார்வையாளர்களை போல அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் அகிலன்.
விட்டால் போதும் என்பது போல் இருவரும் ஓட்டம் பிடிக்க, அமர்ந்து கொண்டு இருந்தவள் எழுந்து “அப்ப என்னோட வேலையை பார்க்க போறேன்” என்று சொல்ல 'மிஸ் ஒரு நிமிடம் நீங்களா வந்தீங்க நீங்களா பேசி அனுப்பி வைச்சீங்க! என்ன ஏது கேக்காமல் நான் வேடிக்கை பார்த்திட்டு இருக்கேன், எனக்கு ஒரு விசயம் புரியல இங்க நான் சேர்மனா இல்ல நீங்களா?' என்று கேக்க தோன்றியதை திரும்பி பார்த்த அவளின் பார்வையில் கட்டுண்டு அப்படியே மயங்கி நின்றான் எதுமே பேசாமல். “சார் கூப்பிட்டிங்களா!” என்றதும் அப்போது தான் நினைவுக்கு வந்தவன் “இல்லையே!” என்று சொன்னதும், வெளியே கிளம்பி சென்றவள் அவன் உறைந்து நின்ற அழகில் இவளும் மெய்மறந்து ரசிக்காமலும் இல்லை, சிரித்து கொண்டே நடந்து வந்தாள்.
அனைவரும் கிளம்பிய பிறகே வந்தவனில் ஒருவன் நேற்று பார்த்த பையன் மாதிரி தெரியுது என்று யோசித்தவன், உறுதி செய்துகொள்ள தனது போனை எடுத்து பார்த்தவன், அவனே தான் அப்போது தான் அவனும் சுடரை முறைத்து கொண்டு நின்றதை நினைவு கூர்ந்தான். அவனை பற்றி முழுசா தெரிந்து கொள்ள வேண்டும் என்று, கதவை திறந்து வெளியே வந்தவன் எதிரே வந்த ஸ்டாஃப் வணக்கம் வைக்க, பதிலுக்கு வணக்கம் வைத்தவன் “இப்போ சண்டை போட்ட இரண்டு பேரை பற்றிய டீடெயில் என்னோட கேபினுக்கு இன்னும் பத்து நிமிடத்தில் வரணும்” என்று சொல்லி அனுப்பி இருந்தான்.
சொல்லியது போலவே பத்து நிமிடத்தில் வந்தவர், அவர்களை பற்றிய டீடெயில் அடங்கிய ஃபைல் வைத்து விட்டு அவர்களை பற்றி சொல்லி கொண்டு இருந்தார். “சார் இவன் பேரு சரத் நம்ம சுடர் மேடம் ஊரு தான், படிப்புல எந்த குறையும் இல்ல, இவனுக்கும் இதோ என்று இன்னொரு ஃபைல் நீட்டி இவனுக்கும் எப்போதும் ஒத்து போகாது படிக்கிற விஷயத்தில் இரண்டுபேரும் போட்டி போட்டு படிக்கிறவங்க, படிக்கிற விஷயத்தில் ஆரம்பித்த போட்டி இப்ப அவன் எது செய்தாலும் இவன் மல்லுக்கு நிக்கிறது, இவன் செய்யுறத்தை அவன் கெடுக்கிறதும் என்று ஒரே பிரச்சனை தான் இவனுங்க கூட, ஆனால் கெட்ட பசங்க இல்லை, இன்னிக்கு கூட ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ஸை வெல்கம் பண்ண நீயா நானா என்ற போட்டி தான் கை கலப்பா மாறி இருக்கு” என்று சொன்னவர் கிளம்பி விட, அந்த ஃபைல் எடுத்து பார்த்தவன் அப்படியே வைத்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.
நாட்களும் நகர்ந்து கொண்டு இருக்க அவளை தூரத்தில் இருந்து ரசிப்பதும், அவளை வித விதமாக போட்டோ எடுத்து வைத்து கொண்டு மணிக்கணக்காக அவளின் படத்துடன் பேசி கழிப்பதும் என்று இவன் நாட்கள் நகர, அவனை பார்த்தும் பார்க்காதது போல் கண்களால் களவாடினாள் கள்ளி அவள், அவப்போது ஸ்டூடண்ட் சண்டை போடுவதும் அவற்றை சரி செய்வது போல் சுடர் அவ்விடத்தில் இருப்பதும் என்று அகியின் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தாள், சண்டை நடந்தால் அதை தீர்க்க கண்டிப்பா சுடர் வேண்டும் என்பது போல் ஒரு நிலமையை உருவாக்கி இருந்தாள், இவற்றை பார்த்த அகிலனுக்கு பெருமையாக இருந்தாலும் இதனால் இவள் மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வாளோ என்ற பயம் அவன் மனதை வருத்தி கொண்டே இருந்தது,
அவனின் வருத்தமும் பயமும் ஒரு நாள் உண்மையாக மாறும் என்று எதிர் பார்த்திருக்க மாட்டான், ஆனால் அப்படி ஒரு நாளும் வந்தது