ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர், அகி விட்டால் போதும் என்பதுபோல், அவனது அறையை சென்று அடைந்து கொண்டான்.
அவன் பின்னே வந்த சுடரை பார்த்து
“என்னமா வெளியே ஏதாவது
சாப்பிட்டிங்களா?என்றாள் கல்யாணி.
“இல்லை அத்தை!” என்றதும் ஓடி மறைந்த மகனின் அறையை கோவமாக பார்த்தாள்.
‘அகிலன் இங்கே போகனும், அதை பண்ண போறேன், ஏதோதோ சொன்னவன், இவ்வளவு சீக்கிரம் வரும்போதே தெரியும்!’ என்று நினைத்தவள்
“சரிமா நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா, சகுந்தலாவை அதுக்குள்ள டின்னர் ரெடி பண்ண சொல்றேன்”என சொல்லி அவளை அனுப்பி வைத்து இருந்தார்.
சகு அவர்கள் இருவரையும் சாப்பிட வைத்து அனுப்பியவள் தனது வேலை முடித்து கொண்டு,
தங்களுக்காக வழங்கிய அவுட் ஹவுஸ்க்கு சென்றாள்.
மகேந்திரன் அவரது அறைக்கும், சுடர் கெஸ்ட் ரூமிற்கும் சென்று விட, இருவரும் சென்றனர் என்பதை உறுதி செய்து கொண்ட கல்யாணி, இவ்வளவு நேரம் தனது கண்ணை காட்டி நிறுத்திய அகிலனிடம்
சென்று, அவனின் காதை திருகி வைத்தார்.
சத்தமாக கத்த முடியாமல் மெல்லமாக,
“அம்மா…மா, பிளீஸ்மா பிளீஸ் விடு மா!” என்று கெஞ்சினான்.
“காலேஜ் ல இருக்கும் போது, போன் பண்ணி என்ன சொன்னே?
அவ கூட வெளியே
போகப்போறேன், காம்ப்ளக்ஸ் போகபோறோம், பீச் போக போறேன், டின்னர்க்கு எங்களை எதிர் பார்க்காததீங்க, அப்படி இப்படி சொல்லிட்டு, இப்ப சீக்கிரமாக வந்து இருக்கீங்க?” என்றாள்.
“ஐய்யோ அம்மா நீங்க வேற!, அவளை பீச் கூட்டிட்டு போயிட்டு, அப்படியே டின்னர்க்கு போகலாம் பிளான் பண்ணேன், எல்லாம் நினைச்ச மாதிரி தான் நடந்தது,
'எனக்கு என்று எங்கே இருந்து வருவங்களோ' தெரியல!,
பேசலாம் ஆரம்பிக்கும் போதே சுண்டல், காபி, பூ எல்லாம் வந்து தொந்தரவு பண்ணிட்டு போனாங்க, சரி எல்லாம் முடிஞ்சது, இனிமேல் எந்த தொந்தரவும் இல்லை நினைச்சிட்டு இருக்கும் போது வந்தாங்க பாரு ரெண்டு போலீஸ் ..!”
என்று, அங்கே நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்து இருந்தான் அவனின் அன்னையிடம்.
அவன் சொல்லிய விதத்திலும், அவன் முகம் போன போக்கையும் பார்த்து சிரித்தே விட்டாள்.
அடக்க முடியாமல் சிறிது நேரம் சிரித்தவர், “அடேய் இதை எல்லாம் நீ செய்ய வேண்டியது, அவ பேசுறது கேட்டு வந்து சின்ன புள்ளை மாதிரி குற்ற பத்திரிக்கை வாசிக்கிற, ‘எப்படா நீ வளர போற, ஆசை பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க தான் முடியும், மத்தது எல்லாம் நீ தான் பார்க்கணும்’ இன்னும் அம்மா முந்தானையில் ஒளியாமல், அவ கூட தைரியமா
பேசி குடும்பம் நடத்துற வழியை பாரு!” என்றவர் சிரித்து கொண்டே சென்று விட.
“அவ கூட ஒரே ரூம்ல இருந்தாவது, ஏதாவது ஒன்னு பேசலாம், அவ ஒரு இடம், நான் ஒரு இடம், இப்படியே கல்யாணம் பண்ணி பிரிச்சி வைங்க, ‘டிவியில் வர சீரியல் கூட, உங்க கிட்ட வந்து பிச்சை எடுக்கணும்’” என்றவன் தனது அறைக்கு செல்லும் முன், தனது ஆசை மனைவியை பார்த்து விட்டு செல்லலாம் என கதவை தட்டி திறந்தான்,
எப்படியும் அகியாக தான் இருக்கும் உணர்ந்தவள், அவசர அவசரமாக கையில் இருந்த புகைபடத்தை தலையணையில் அடியில் மறைத்து வைத்தவள், “வாங்க என்ன இந்த நேரத்துல?” அவனை பார்த்து கேக்க,
தாய் கொடுத்த தைரியத்தில் கதவை திறந்தவனுக்கு, அவளை பார்த்தும் ஓடி மறைந்த பயம் மீண்டும் வந்து ஒட்டி கொண்டது, “அது.. அது. வந்து ஒன்னும் இல்ல, குட் நைட் சுடர்!” சொல்லி அவளையே பார்த்தான்.
அவன் திக்கி பேசுவதும், அவளிடம் இன்னும் பேச வேண்டும் என்ற ஆர்வத்தை பார்த்தவளுக்கு, அவனின் மேல் உள்ள காதல், தன்னையும் மீறி அவன் கண்டுவிட கூடாது என்று, அவனை முறைத்து பார்த்தவள்.
“அதான் குட் நைட் சொல்லிட்டீங்க தானே! அப்புறம் இன்னும் இங்கேயே நிக்கிறீங்க, கிளம்ப வேண்டியது தானே” என்றவளை,
“என்னங்க சுடர் உங்களுக்கு என்னிடம் பேசணும், என்று தோணவே இல்லையா!” என்று ஏக்கமாக கேட்பவனிடம் என்ன சொல்வது என்று சங்கடமாக இருந்தவள்,
“கோவிலுக்கு போயிட்டு வந்து பிறகு நிறைய பேசுவோம், நீங்க இப்ப கிளம்புங்க” என வெக்கப்படுவது போல், அவனை வெளியே தள்ளி கதவை சாத்தி பூட்டினாள்.
அவளின் முகத்தில் இருந்த வெக்கத்தை பார்த்தவனுக்கு, “அவங்களுக்கும் என்னை புடிச்சி இருக்கு, ஆனால் இந்த ஜோதிடர் பண்ணவேலை!” என்று பல்லை கடித்து எங்கேயோ இருக்கும் ஜோதிடருக்கு இவன் சாபம் கொடுக்காத குறை தான் இங்கே!,
கல்யாணி சமையல் அறையில் இருக்க, அகிலன் காலேஜ் போக கிளம்பி கீழே வர, நடு கூடத்தில் இருந்த ஷோபாவில் அமர்ந்து கொண்டு இருந்த மகேந்திரன், தனது காலில் இருக்கும் கட்டை அவிழ்த்து வேற ஒன்றை போட, ஃபர்ஸ்ட் அய்ட் பாக்ஸ் எடுத்து கொண்டு அமர்வதை, மேலே இருந்து பார்த்தவள், தனது அறைக்கு சென்று எதையோ தேடி ஒன்றை மறைத்து எடுத்து வந்தாள்,
“சார் கொடுங்க, நான் உங்களுக்கு போட்டு விடுகிறேன்” என்றவள், அவர் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள்,
தான் மறைத்து எடுத்து வந்த பொருளை அதிலே வைத்து விட்டாள்,
‘கல்யாணிக்கோ பரவலையே மருமக குடும்பத்தோட ஒத்திட்டு வாழ பழகிட்டா’ என்று பெருமையாக எண்ணினாள்.
அகிலன் மனமோ
“எல்லோர்கிட்டையும் இயல்பா இருக்குற இவளுக்கு, என்னிடமும் இயல்பா இருந்தால் என்ன?” என்று ஆதங்கம் பட்டு கொண்டான்.
( அய்யோ தம்பி அகிலா, காதல் கொண்ட மனசு, தனது காதலனுடன் இயல்பா பேச, முதலில் வெக்கமும், தயக்கமும் கொள்ளும் என்பதை உணர முடியாத மக்கா இருக்கீங்க?)
“என்னமா நீ இன்னும் காலேஜில் படிக்கும் போது, சொல்ற மாதிரி இன்னும் ‘சார்’ சொல்றியே!,வாய் நிறைய மாமா சொல்லு மா!” என்று அவளின் தலையை பாசமாக வருடியவாறு கேட்டார்.
அவரின் காலை சுத்தம் செய்து கொண்டே, “ரொம்ப வருஷ பழக்கம் உடனே மாத்திக்க, கொஞ்சம் கஷ்டமா இருக்கு சார், போக போக மாத்திக்கிறேன் சார்” என்றாள் சுடர்கொடி.
சார் என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தார், “சரி… ஈ..ஈ மாமா” என்றவாறு சிரித்தாள்.
அவள் எடுத்து வந்து பொருளை கொண்டு அவரின் காலில் ஆழம் பார்த்தாள், அதே சிரிப்பு மாறாமல்
“ஐய்யோ! அம்மா” என்று கத்தி கொண்டே காலை இழுத்து கொண்டார்.
என்ன ஆச்சி, எதுக்கு இப்படி கத்துகிறார் என்று அனைவரும் ஒன்று கூடி விட்டனர்.
“என்ன ஆச்சி சுடர் எதுக்கு அப்பா இப்படி கத்துறாறு?” பதற்றமாக ஓடி வந்தான் அகி.
கல்யாணியும் சமையல் அறையில் இருந்து ஓடி வந்து வந்தவளும், துடிதுடித்து போனாள், கணவனின் காலில் இருந்து வரும் இரத்தத்தை கண்டு.
“ஐய்யோ என்னது சார் இது!, காலுல இவ்வளவு பெரிய கண்ணாடி துண்டு இருக்கு, அதை கூட பார்க்காம அப்படியே கட்டு போட்டு இருக்கீங்க?” தான் எடுத்து கொண்டு வந்ததை, அவர் காலில் இருந்து எடுத்ததை போல் காண்பித்தாள்.
ஏற்கனவே கண்ணாடி குத்தி காயம் இருந்ததால், யாருக்கும் சந்தேகம் வராது, தனது ஆட்டத்தை ஆரம்பித்து இருந்தாள்.
கல்யாணி புலம்பி கொண்டே “அதுக்கு தான் அப்பவே சொன்னேன் வீட்டுல நம்ம பார்க்காம, டாக்டர் வர சொல்றேன் என்று, எங்கே என்னோட பேச்சை கேட்டா தானே!”
அகில் உடனடியாக தனது ஃபேமிலி டாக்டர் வரவழைத்து இருந்தான்.
வந்த டாக்டர் அவரை பார்த்து
“என்ன சார் நீங்க!, நீங்களே கட்டு போட்டுகிட்டா சரியா போச்சா, பாருங்க எவ்வளவு ஆழமா இருக்கு காயம்” என்றவர் சுத்தம் செய்து மருந்து போட்டு கட்டி விட்டவர், ஊசி போட்டு விட்டு சென்றார்.
“பாருங்க மருமகள் உள்ளே இருந்த கண்ணாடி பார்த்து எடுத்து விட்டா, இதுவே நீங்களே போட்டு இருந்தா, இன்னும் அந்த கண்ணாடி உங்க காலுகுள்ளவே இருந்து இருக்கும்.
இனிமேல் அலட்சியமாக
இருக்காதிங்க!” என்று திட்டிவிட்டு சென்றாள் அவனின் மனையாட்டி.
வேலைக்கு கிளம்பிய மகேந்திரனை, காலில் இப்படி அடிபட்டு இருக்கும் போது, கண்டிப்பா வேலைக்கு போயி தான் ஆகணுமா! என்று வருத்த பட்ட கல்யாணியிடம்,
“இது முக்கியமான டெண்டர் மா, இதுக்காக நிறையவே உழைச்சி இருக்கேன், இன்னைக்கு தான் தெரியும், யாருக்கு கிடைக்க போகுது என்று, எனக்கு தெரியும் கண்டிப்பா அது நம்ம கம்பனிக்கு தான் கிடைக்கும்!” என்று சந்தோசமா சொன்னவரை தடுக்கமுடியாமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்ல ஆரம்பித்து இருந்தாள்
“ஜோதிடர் சொன்ன ஆறு நாள் இன்னியோட முடியுது,
நாளைக்கு குல தெய்வம் கோவிலுக்கு போகனும், அதற்கு வேண்டியதை, நானும் சகுவும் எடுத்து வைச்சிடுறோம், காலை ஏழு மணிக்கு எல்லாம் எல்லோரும் இந்த இடத்துக்கு வந்திடனும்” என்றாள் கல்யாணி.
அகிலன் சுடரை காலேஜுக்கு அழைத்து சென்று இருந்தான்.
போகும் வழியில் அவளை பார்ப்பதும், பேச வாயை எடுப்பதும் பிறகு தயங்கி, அமைதியாக வண்டி ஓட்டுவதும் என்று இருந்தான் அகில்.
அவனது செய்கையை ஓர கண்ணால் பார்த்தாலும், அவனை கண்டும் காணாமல், தனது கையில் இருந்த ஆபீஸ் ஃபைல் பார்த்து கொண்டு இருந்தாள்.
‘என்னடா இது, பக்கத்துல புருசன் இருக்கானே, அவன் கூட ஏதாவது பேசலாம் அப்படி ஏதாவது தோணுதா!, சுடரின் காதில் விழுவது போல் முணங்கினான். அவன் பேசினாலும் கண்டு கொள்ளாமல் அமைதியாக அவனை பார்த்தவள்.
“அகிலன் சார், நீங்க ஏதாவது என்னிடம் சொல்லவேண்டியது இருந்தா நேரடியா பேசலாம் எதுக்கு முணங்கிட்டு இருக்கீங்க?” என்று சொன்னவள் குரலில் இருந்த கம்பீரமோ அவனை ஆட்டம் காண வைத்தது.
அவளின் பேச்சில் அதிர்ந்தவன், மனதினுள் ‘பாரு எப்படி அதட்டி பேசுறா, என்னவோ எதிரி நாட்டு மன்னனை சண்டைக்கு கூப்பிடற மாதிரி’ நினைத்தவன்.
“ஹாக்.. ஹ.. அதெல்லாம் ஒன்னும் இல்லை, அந்த ஃபைல் ஆடிட்டர் ஆபீஸ்க்கு, அனுப்ப வேண்டியது தானே!” என்றான்.
“ஆமாம் சார், நாளைக்கு வந்து வாங்கிட்டு போவாங்க, அதான் போன மாசத்தில் இருந்த வரவு செலவு சரியா இருக்கா பார்த்திட்டு இருக்கேன்” என்று கணீர் குரலில் கூறினாள்.
“ஓ அப்படியா!, சரி அப்ப பாருங்க” என்றவன் ‘வேலை விசயம் பேசுனா பேசுறா, இவகிட்ட பர்சனல் விசயத்தை பேச மட்டும் வாய் வர மாட்டது, இதுக்கு தான் ஒன்னு, இரண்டு பொண்ணுங்க கூடவாது, நட்பை வளர்த்துக் கொண்டு இருந்தாவது, ஒரு ஐடியாவாது கேட்டு இருக்கலாம். அம்மா கிட்ட போனால், கல்யாணம் பண்ணி தான் வைக்க முடியும், நீதான் மத்தது எல்லாம் பார்த்துக்கணும் என்று சொல்லி ஒதுங்கிட்டாங்க!”
‘காயத்ரி கிட்ட தான் ஏதாவது கேக்கணும்’ நினைத்து கொண்டே, கல்லூரி வந்து சேர்ந்தனர்.
காரை விட்டு இரங்கியவள் அவனிடம் நன்றி சொல்லிவிட்டு, வேலை செய்யும் இடத்தை நோக்கி சென்றாள்.
இவனோ அவளை பார்த்து விட்டு ஏகத்துக்கும் பெரு மூச்சு ஒன்றை எடுத்து விட்டு, அவனது அறையை நோக்கி நடக்க சென்றான்.
(கூச்சமும் தயக்கமும் மனைவிடம் இருக்கலாம், ஆனால் கணவன் மனைவியை நெருங்க தயக்கம் காட்டினால் எப்படி?)
அவளிடம் போனில் பேச வரும் தைரியம், நேரில் அவளின் அம்பாய் துளைக்கும் கண்களை பார்த்து பேச தயக்கமும் சிறு பதட்டமும் இருக்கத்தான் செய்தது அவனுக்கு,
அவள் செய்த சம்பவம் அப்படி! தன்னையே அறியாமல் அன்றைய சம்பவம் மனதில் படமா ஓடும் போது, எப்படி பயப்படாமல் இருப்பான்.
“கூழிற்கும் ஆசை மீசைக்கும் ஆசை” என்ற நிலைமையில் அகிலன் இருக்கிறான், அவளின் தைரியத்தை பார்த்து ஆசை பட்டு காதலித்தவன், அவளின் அதிரடி செயலில் தள்ளி நிற்க வைக்கும் போது, அதை உடைத்து கொண்டு, தன்னுள் தைரியத்தை வரழைத்து தான், அவளிடம் நெருங்க வேண்டும்.
அதையும் உடைத்து கொண்டு வரும் காலமும் வர தான் போகிறது அகிலனுக்கு
‘அப்போது இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்குமா? இல்லை இருவரையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்குமா?’