• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 6

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
வேகமாகவும் கோபமாகவும் வீட்டில் நுழைந்த மகேந்திரன் தனது கையில் இருந்த பைல்களை தூக்கி விசிறி எறிந்தார். காற்றில் பேப்பர் மொத்தமாக வீடு முழுக்க பரவி இருந்து.

அவர் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை ஏற்கனவே தெரிந்த சுடரோ, மாடியில் இருந்து ரசித்து கொண்டு இருந்தவள், மற்றவர்கள் வருவது தெரிந்தும், அவர்களுடன் அங்கே வந்து சேர்ந்தாள்.

அவரின் கோவத்தை கண்ட, அவரின் மனைவியோ, தண்ணிரை கொண்டு வந்து குடிக்க கொடுக்க, இருந்த கோவத்தில் அதுவும் தரையில் விழுந்து நொறுங்கி இருந்து.

“எதுக்கு அப்பா இப்படி கோவத்தை காட்டுறீங்க! என்ன நடந்தது சொன்னால் தானே தெரியும்! சும்மா கோவப்பட்டு அம்மாவை கஷ்டம் படுத்ததீங்க!” என்றதும்,

“எதுக்கு இப்படி கோவம் படுறீங்க மாமா, ஏற்கனவே உங்களுக்கு BP இருக்கு, கொஞ்சம் அமைதியா இருங்க, அத்தையை பாருங்க, எப்படி கலங்கி போயி இருக்காங்க!” என்று அவளை காண்பித்து சுடர் சொன்னாள்.

மருமகளின் பேச்சில் சுற்றி ஒருமுறை பார்த்தவர், “சாரி இப்ப எனக்கு யாருக்கிட்டையும் பேச மனசு இல்லை” என்றவர் அமைதியாக தனது அறைக்கு சென்றார்.

“சரி நீங்க தூங்க போங்க, நாளைக்கு கோவில் போகணும், சீக்கிரம் ரெடியாகி வாங்க!” என்று மட்டும் சொல்லி, கணவர் பின்னாலே சென்றாள்.

நடப்பதை வஞ்சகமாக பார்த்து சிரித்தவள், 'அந்த டெண்டர் உங்க கைக்கு கிடைக்காமல், உங்க எதிரி கம்பனிக்கு போயிடுச்சி அந்த கோவம் தானே! மிஸ்டர் மகேந்திரன்' தனக்குள்ளே பேசியவள் சந்தோசமாக தனது அறைக்கு சென்று விட்டாள்.

காலையில் கல்யாணி சொன்ன நேரத்திற்கு அனைவரும் கிளம்பி வந்து விட்டனர்.

பட்டு வேட்டியில் அகிலனும், பாவாடை தாவணி உடுத்தி நேர்த்தியாக அதற்கு ஏற்றாற் போல் அலங்காரமும் என அழகாக மாடியில் இருந்து இறங்கி வந்தாள் சுடர் கொடி,

அவள் நடந்து வரும் அழகை ரசித்து கொண்டு இருந்தான் அகில்,
அவனின் கண் முன்னால் கையை அசைத்து, “போதும் கண்ணு வெளியே வந்து விழுந்துட போகுது! என்னோட மருமகளுக்கு திருஷ்டி சுத்தி போடணும், உன்னோட கண்ணு பட்டே அவளுக்கு காய்ச்சல் வந்துடும் போல” என்றாள் கல்யாணி.

“இச் அம்மா.. ஆ பேச்சு கூட அப்படி சொல்லாதீங்க! என்னோட சுடருக்கு ஏதும் ஆக விட மாட்டேன்” நொடியில் பதறி தாயுடன் சண்டைக்கு நின்றான்.

இந்த சந்தோஷ நிலைக்கு மாறாக மகேந்திரன் முகம் இருந்தது,
யாரோ நெருப்பில் தள்ளியது போல், புழுவாக துடித்துடித்து போனார், மறந்து போன ஒன்றை கிளரிவிட்டது, அவளின் ஆடையும்,தோற்றமும்.

இறங்கி வந்தவளிடம் “என்ன சுடர் கோவிலுக்கு புடவை கட்டாமல், தாவணி போட்டு வந்து இருக்க” மனதிலே ஏற்பட்ட,பதட்டத்தை மறைக்க முடியாமல் கேட்டார்.

அவர் முகம் போன போக்கை பார்த்து திருப்தி கொண்டாள், இதற்கு தானே! அவளும் இந்த உடையை தேர்ந்து எடுத்து இருந்தாள். சுடர் பேசுவதற்கு முன், அகிலன் முந்தி கொண்டு

“நான் தான் பா அவங்களை முதல் முறை பார்த்த போது எப்படி இருந்தார்களோ, அப்படி இருக்கணும் ஆசை பட்டு, இனிமேல் வீட்டில் இருக்கும் போது இப்படி போட சொல்லி கேட்டேன்” என்றான்.

“என்னங்க இந்த உடையில் என்ன பிரச்சனை? சின்ன பொண்ணு இப்பதான் இந்த உடையை போட முடியும், என்னோட வயசுல போட்டா நல்லவா இருக்கும், பார்க்கவும் லச்சனமா மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா!” என்றதும் இன்னும் பதட்டமாக இருந்தவர்,

“ஒரு பிரச்சனையும் இல்லை எல்லோரும் கிளம்பி வாங்க, நான் காரில் இருக்கேன்” என்று நழுவி விட்டார், இங்கேயே இருந்தால் தன்னோட முகமே, நம்மை கேள்வி கேக்க வைக்கும் என்று உணர்ந்து கொண்டு.

கல்யாணி மருமகளிடம் வந்து, “அம்மாடி இனிமேல் வீட்டில் தாவணி போட்டுக்க, இப்ப மட்டும் புடவை மாத்திட்டு வந்துடு மா” என்றாள்.

சுடரும் நினைத்தது நடந்த மகிழ்ச்சியில், அவளது அறை சென்று, புடவைக்கு மாறி வந்து இருந்தாள்.

அனைவரும் காரில் ஏறி கோவிலை நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்து இருந்தனர்.

தாயும் மகனும் பேசி சிரித்து கொண்டு வந்து இருந்தனர்.
மகேந்திரன் நினைவு எல்லாம் பின்னோக்கி சென்று இருந்தது, அவரின் முகமே சொன்னது, தான் இந்த உலகத்தில் இல்லை என்று, இன்னும் என்ன செய்யலாம் என்று, சுடர் மனதில் கணக்கு போட்டு கொண்டு இருந்தாள்.

மகனுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை அமைந்து விட்ட மகிழ்ச்சியில் கல்யாணி இருந்தாள்.
அப்பாடா இன்னிக்கு கோவில் போயிட்டு வந்துட்டா, சுடர் என்னோட ஒரே ரூம்ல தங்க போறா, என்ற எண்ணத்தில் அகிலன்.

இப்படி ஆளுக்கு ஒரு எண்ணத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
இரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு, அவர்களின் குல தெய்வ கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

பாலாறு என்ற ஆற்றங்கரை ஓரத்தில் இருந்தது அக்கோவில்,
கரையை தொட்டு கொண்டு ஓடி கொண்டு இருந்த ஆற்று நீர், கோடை காலத்தில் நதி இங்கே தான் இருந்ததா? என்று கேட்பது போல் வறண்டும், மழை காலத்தில் ஆற்றில் இறங்குவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை,
அவ்வளவு நீர் கரைபுரண்டு ஓடும்.

கோவில் வந்தவுடன் ஆற்றில் காலை நனைத்து விட்டு, தலையில் தண்ணிரை தெளித்து கொண்டு, பொங்கல் வைப்பதற்காக ஆற்றில் இருந்து தண்ணிரை எடுத்து வர சொல்லி விட்டு, பெரியவர்கள் சென்று விட,

“ஏங்க சுடர் நீங்க கரையில இருங்க! நான் எடுத்து தரேன்” என்றான் அகி.

“சரி” என அவளும் அவன் கையில் குடத்தை கொடுத்து விட்டு, என்னதான் செய்ய போறான், என்று அவனையை பார்த்து கொண்டு இருந்தாள் சுடர்.

வேட்டியை மடித்து கட்டி கொண்டு, தண்ணிரை நோக்கி நடக்க ஆரம்பித்தது இருந்தான் அகிலன்.

போன வேகத்தில் தண்ணிரை எடுத்து கொண்டு வந்து சேர்ந்தான்.
அவனிடம் வாங்கி கொண்ட குடத்தை இடுப்பில் வைத்து நடக்க ஆரம்பித்து இருந்தாள் சுடர்கொடி.

அவளை முன்னே நடக்க வைத்து விட்டு, அவள் நடக்கும் போது இடது வலதுமாய் இடையை தொட்டு நடனம் ஆடி கொண்டு இருந்த அவளின் கார்குழலின் அழகில் சொக்கிதான் போனான் அவளின் அவன்.

நானும் அங்கே தான் இருக்கிறேன், என்னையும் பார் என்று நீண்டு தொங்கி இருந்த மல்லி சரம் காற்றில் வாசத்தையும் பரப்பி கொண்டே, அவளின் நடைக்கு ஏற்றார் போல் அசைந்து கொண்டு இருந்தது.

‘என்ன இவரு இப்படி அமைதியா வர ஆள் இல்லையே!’ என்று நடந்தவள் தனது நடையை நிறுத்தி அவனை திரும்பி பார்த்தாள்.

அவளின் திடீர் நிறுத்தத்தில் பதறியவன் “என்ன ஆச்சி சுடர்?”

“நீங்க முன்னாடி நடங்க, நான் உங்களுக்கு பின்னாடி வரேன்” அவனின் திருட்டு தனத்தை கண்டு கொண்டாள்.
இதுக்கு மேல ஒன்னும் பன்றத்துக்கு இல்லை என்பது போல்,
பொங்கல் செய்ய இருக்கும்
இடத்தை நோக்கி நடந்து சென்றனர்.

அவர்களின் வரவிற்கு காத்து கொண்டு இருந்த கல்யாணி, இருவரையும் பொங்கல் வைப்பதற்காக வைத்து இருந்த பாத்திரத்தை தொட்டு வணங்க சொல்லி விட்டு, அகிலனை அனுப்பி விட, மற்ற வேலையை சுடரை வைத்து செய்து இருந்தார்.

நம்ம குலத்தை காக்கும் தெய்வம், எந்த கிழமை, எந்த நேரம் என்று பார்க்க வேண்டியது இல்லை, எல்லா நாளும், நேரமும் சன பொழுதும் நம்மை தொடரும் காவல் தெய்வம், நம்ம குல தெய்வம் அப்படி இருக்க, அவளுக்கு பொங்கல் வைக்க இந்த நேரம் தான் சரி என்று சிந்திக்க வேண்டியது இல்லை.

ஜோதிடர் சொன்னது கூட இருவரின் ஜாதகத்தை பார்த்து தான், நாம் மனதில் ஒரு உந்துதல் கொடுத்து அந்த தெய்வமே, நம்மை அவளை தேடி வரவழைத்து விடும்.

கூட்டம் இல்லாமல், எவ்வித ஆர்பாட்டம் இல்லாமல், மன நிறைவுடன் பொங்கலை
தெய்வத்திற்கு படையலை போட்டு, கோவிலை சுற்றி வந்தனர் நால்வரும்.

நல்லபடியாக கோவிலை சுற்றி வந்து, சமைத்த பொங்கலை அனைவருக்கும் கொடுத்து தாங்களும் உண்டனர்.
கொஞ்சம் இயற்கை காற்றை வாங்கவும், கோவிலை சுற்றி இருக்கும் கடைகளை பார்த்தபடியே நடந்து கொண்டு இருக்க,

கல்யாணி அகிலனிடம் காதில் ஏதோ சொல்லி அனுப்பினாள்.

“ஏங்க சுடர் அம்மா உங்களை வளையல் கடைக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க!” என்றான்.

கல்யாணி தலையிலே அடித்து கொண்டாள், “அவனே கூட்டிட்டு போற மாதிரி போக கூட தெரியாத மக்கா இருக்கான்!” என்று.

அவனின் பேச்சில் இருவரும் பார்த்து கொண்டனர், “சுடர் நீ வா மா!” என சொல்லி அழைத்து சென்று இரண்டு கைகள் முழுவதும் வளையல் போட்டு விட்டு இருந்தாள்.

“அவளின் கண்ணை பார்த்து சாரிங்க?” என பாவமாக கெஞ்சினான்.

“எதுக்கு!”

“இப்படி கல்யாண பொண்ணுக்கு அவ புருசன் செய்ய வேண்டியது, தெரியல!” அதான்

அவளோ “பரவலை இருக்கட்டும், நான் யார்கிட்டேயும் எதிர்பார்க்க மாட்டேன்!” என்று ஆர்பாட்டம் இல்லாமல் கடுஞ்சொல் சிந்தி விட்டு சென்றாள்.

“இவ என்னைய இன்னும் அந்நியமா தான் பார்க்கிறாள்!” என கவலை பட்டான்.
அவனை தள்ளி வைப்பது எல்லாம், தனக்கு தானே போட்டு கொள்ளும் கடிவாளம் என்று நினைத்து கொண்டாள், பெண்ணவள்.


எங்கேயோ இருந்து ஒரு குரல் சொன்னது,
“கடந்த கால பகை ஒன்னு உங்களை தேடி வந்து பழி தீர்க்க காத்து கொண்டு இருக்கு!, செய்த பாவத்திற்கு பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை?, நிம்மதி இல்லாமல் அலைய போற!,
எதை தேடி தேடி சேர்த்தியோ அதுவே உனக்கு வினையா திரும்ப போகுது!” என்றது அக்குரல்.

குரல் வந்த திசையை நோக்கி,கலவரமான முகத்துடன் வேகமாக நடந்து சென்று இருந்தார்,
காலில் அடிபட்டு இருந்தும் அதை பொருட்படுத்தாது, நெஞ்சமெல்லாம் படபடக்க சென்றார்.
அவரை பின் தொடர்ந்தனர் முவரும்,

மகேந்திரன் செல்வதற்குள் பேசியவர், வெகு தொலைவில் சென்று விட, அப்படியே நின்று விட்டார்.

“என்னங்க ஆச்சி, எதுக்கு இப்படி ஓடி வரீங்க! அவரு வேற யாருக்கோ சொல்லி இருப்பாரு! இங்கே எத்தனையோ பேர் இருக்கும் போது, அதுல யாராவது இருக்கும்.நீங்க எதுக்கு இப்படி பயந்து வரீங்க?, நம்ம யாருக்கும் எந்த பாவமும் செய்யாத பட்சத்தில், எதுக்கு அதை தலையில் ஏத்தி கஷ்டம் படணும், வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்.” என்று அவரின் கையை பிடித்து நடக்க ஆரம்பித்து இருந்தாள் கல்யாணி.

அவரின் முகமெல்லாம்
வெளிறிபோய்விட்டது. வயது இருக்கும் ஜோரில் செய்த பாவம் எல்லாம், வயது முதிர்ச்சியை அடையும் போது ஆட்களை கொஞ்சம் ஆட்டம் காண வைக்க தான் செய்யும்.

கோவிலை விட்டு சென்ற மூவருக்கும் பரிகாரம் செய்து விட்ட மகிழ்ச்சி,
சுடர் செய்த பரிகாரம் தான் மகேந்திரன் முகத்தில் நன்றாகவே தெரிகிறதே!

கிளம்பும் போது இருந்த மனதை விட, இன்னும் சலனம் பட்டு கொண்டு இருந்தது அவர் மட்டும் தான்.

அனைவரும் வீடு வந்து சேர்ந்து விட,
கல்யாணிடம் மகேந்திரன் என்னை தொந்தரவு செய்யவேண்டாம், பசிக்கும் போது சொல்றேன் சாப்பிட ரூமிற்க்கு எடுத்து வருமாறு சொல்லி விட்டு சென்றார்.

அகிலன் ஹாலில் உட்கார்ந்து கொண்டு, படத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

கல்யாணி சகுவை வரவழைத்து, சமையல் தயார் செய்ய சொல்லி ஒய்வு எடுக்க சென்று இருந்தார்.
சுடர் அவளின் அறைக்கு சென்று, தனது மாமாவுக்கு போன் போட்டு நடந்த விசயத்தை சொல்லி சந்தோஷ பட்டு இருந்தாள்.

“மாமா அந்த பெரியவர் பேசனதில் இருந்து அவரின் முகத்தை பார்க்கணுமே!”
“அந்த பெரியவருக்கு பேசின பணத்தை விட இரண்டு மடங்கு கொடுங்க மாமா” மகேந்திரன் கலவரபடுத்திய சந்தோசத்தில்.

வழக்கமாக அனைவரின் நல விசாரிப்பு கேட்டு வைக்கும் முன்,
பிளாக்கி கத்தும் சத்தத்தில்,
“எதுக்கு பிளாக்கி கத்திட்டு இருக்கு?” என்று கேட்டாள்.

“அவன் உன்னை பார்த்து ஒரு வாரம் ஆச்சி!, உன்னை வீடு முழுக்க தேடி முடிச்சதும், உன்னோட ரூம்ல இருக்குற உன்னோட போட்டோ பார்த்திட்டு கத்திட்டு இருக்கு?” என்றார்.

“‘ம்ம்’ அவங்களுக்கு இருக்குற நன்றி கூட, இந்த மனுச பிறவிக்கு இருக்கிறது இல்லை?” விரக்தியாக கூறினாள்.

“ அதை விடுமா நாளைக்கு மறுவீட்டிற்கு உன்னை கூப்பிட, நானும் அத்தையும் வரோம், உங்க மாமனார் கிட்டையும் சொல்றேன்” என்றவர் போனை வைத்து விட்டார்.

சுடரின் அறையை தட்டும் சத்தம் கேட்டு, கதவை திறந்தாள்

வேற யாரு சகுந்தலா தான். “பாப்பா அம்மா உன்னோட பொருளை எல்லாம் எடுத்து அகிலன் தம்பி ரூம்ல வைக்க சொன்னாங்க!” என உள்ளே நுழைந்தாள் சகு.

இல்லை நானே செய்து கொள்கிறேன் என்றாலும், விடாது அனைத்து பொருளையும் அகிலன் ரூமில் வைத்து விட்டு சென்று இருந்தாள் சகுந்தலா.

இன்று முதல் முறையா அவனுடன் இருக்க போறோம் என்ற நினைப்பு அவளை தடுமாற செய்தது.
கண்களை மூடி வாயில் முனங்கி கொண்டே, தன்னை தைரியம் படுத்தி கொண்டாள்.

அனைவரும் சாப்பிட்டு தூங்க செல்ல எத்தனிக்கும் போது, கல்யாணி சுடரை அருகில் அமர வைத்து, புத்தி சொல்கிறேன் என்ற பெயரில் தனது மகனின் காதலை மேம்போக்காக சொல்லி இருந்தாள்.

“சரிங்க அத்தை” என்று மட்டும் சொல்லி, அகிலன் அறைக்கு சென்று இருந்தாள்.

“ஹீம் என்ன நடக்க போகுதோ? டேய் அகிலா நீ ரொம்ப பாவம் டா, நானே அவ கிட்ட பேசும் போது, உடம்பு இவ்வளவு ஒதறல் கொடுக்குது” சரிங்க அத்தை சொல்லும் போது கூட, ‘தேவசேனா சிவகாமிதேவி பார்த்து சொல்ற மாதிரி மிடுக்கா சொல்லிட்டு போறாள்' என்று சொல்லி விட்டு அவளது அறைக்கு சென்றாள்.

முதலிரவு அலங்காரம் இரண்டாவது முறை அகிலன் அறையில், முதல் முறை மாதிரி இல்லாமல் கொஞ்சம் எளிமையாக இருந்தது, அவளின் வரவுக்கு காத்து கொண்டு இருந்தான், உள்ளுக்குள்ளே ஒரு வித பயபந்து உருள தான் செய்தது, அதை எல்லாம் மீறி ஒரு ஆவல் எட்டி பார்க்கதான் செய்தது அவனுக்கு.
 
  • Love
Reactions: shasri and Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,343
557
113
Tirupur
இந்த அகிலன் ஏன் இப்படி இருக்கான்