• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 7

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
சுடர் வருவாளா! என்று கதவையும், கடிகாரத்தையும் பார்த்து கொண்டு இருந்தவன்.
கதவை திறக்கும் சத்தம் கேட்டு, எழுந்தே நின்று கொண்டான் அகிலன்.

நெஞ்சமெல்லாம் படபடக்க வியர்த்து கொட்டியது ஏசி அறையிலும் அகிலுக்கு, அவனிடம் விளையாடி பார்த்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது சுடருக்கு.

நல்ல பொண்ணா, தலையை குனிந்து கொண்டு அகிலனிடன் வந்தவள் கையில் இருந்த பால் சொம்பை அவனிடம் நீட்டினாள்.

‘இது நிஜமா கனவா’ என்று கிள்ளி பார்த்து கொண்டான் அவளின் மென்மையில்.

“ஆ… வலிக்குது கண்டிப்பா இது நிஜம் தான்!” கையை தேய்த்து கொண்டே சுடரை பார்த்தான்.

“என்ன ஆச்சி?” என்று வழக்கமாக பேசும் தோரானையை விட்டு, மென்மையான குரலில் கேட்டாள்.

அவள் தலை குனிந்து வருவதே அதிசயம் என்றால், இதில் இவ்வளவு மென்மையாக பேசுறது, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இல்லை.. ஒன்னும் இல்லை..!” என்றவன் கை கால்கள் நடுங்க ஆரம்பித்து இருந்தது.

“ஏங்க நீங்களா இது! என்னால நம்ப கூட முடியல?” என்றான் ஆச்சர்யமாக.

“ஏன்? நானும் பொண்ணு தானே எனக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் இருக்க தானே செய்யும்!” வெக்கத்துடன் சொன்னாள்.

‘ஹாஹா புலி எதுக்கோ பிளான் போட்டு இருக்கு, உஷாரா இரு அகிலா, அவளோட நடிப்பை பார்த்து ஏமாந்து போகாத, எங்களால முடிந்தது, அப்புறம் நீயாச்சி
அவளாச்சி என்று மூளை அவனுக்கு அபாய மணியை அடித்தது, இருந்தும்.’

மூளையை தாண்டி மனதுக்கு கட்டுபட்டவன், அவளை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தான்.

“ஆமாம் நீங்க என்னை காதலித்து கல்யாணம் பண்ண மாறி அத்தை சொல்றாங்க!
எனக்கு தெரிஞ்சி நீங்களா வந்து, என்கிட்ட பேசின மாதிரி தெரியலையே!, நானா வந்து தான் காலேஜ் விசயம் பேசி இருக்கேன்” அவளை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது அவனின் கண்ணில் இருந்த காதலை பார்த்து சந்தோஷப்பட்டவள், இப்போது அவன் காதலித்த விசயம் தனக்கு தெரியாது போல் அவனிடம் கேட்டாள்.

“ஆமாம் உங்களை தூரத்தில் இருந்து பார்த்ததோட சரி, அப்புறம் நீங்க எல்லோரும் இருக்கும் ரூம் கேமராவை பார்த்திட்டு இருப்பேன்.” என்று சட்டென்று உண்மையை ஆர்வத்தில் சொல்லிவிட்டான்.

“என்னது?” என கோபமாக அவனை மிரட்டும் தொனியில் கேட்டாள்.

“அய்யோ தப்பா இல்லைங்க! எல்லா கேமராவும் பார்க்கிற மாதிரி தான் ஆபீஸ் ரூம் ல பெரிய ஸ்கிரீன் இருக்கு ல, அதுல பார்ப்பேன்” அவளின் முறைப்பில் பயந்து

(ஐய்யா இப்பவும் ஒன்னு மறைச்சி தான் சொல்றாரு, எப்பவுமே அவளை பார்க்கணும் என்று அவனது போனில் சேர்த்து வைத்து, ரசித்து கொண்டு இருப்பதை, சொன்னால் யாரு வாங்கி கட்டி கொள்வது)

“ஓ அப்படியா!” என்று அமைதியாக இருந்து விட்டாள்.

“ஏங்க உங்களை ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டிங்களே?” என்றான் தயங்கியவாரே,

“கேளுங்க” என்றவள் வார்த்தையில் மென்மை காணாமல் போனது.

“ஏங்க இப்படி விறைப்பாக பேசுறீங்க?,
பதட்டமா இருக்கு, இது என்னோட
மனசுல ரொம்ப வருசமா உறுத்தி கொண்டே இருக்கு, காலேஜ்ல கூட கேட்டுடலாம் தோனி நிறைய முறை முயற்சி பண்ணி இருக்கேன், அப்பயெல்லாம் நீங்க கோவமா பேசிட்டு இருக்கிறதை பார்த்திட்டு, அப்படியே திரும்பி வந்துடுவேன்” என்றான்.

‘சுடரும் இவரை இவ்வளவு நேரம் பேச விட்டது தப்போ?’ என நினைத்து கொண்டாள்.

“இப்ப விஷயத்துக்கு வரிங்களா?” என்று வழக்கமாக தைரியமாக கணீர் குரலில் கேட்டாள்.

பலநாட்கள் யோசித்து பதிலே கண்டு பிடிக்க முடியாமல் இருந்தவனுக்கு, இப்போதே கேட்டு விடவேண்டும் என்ற ஆர்வத்தில், “உங்க ஊருல இருக்கிற பஞ்சாயத்து அலுவலகத்தில், நான் பார்க்கும் போது ஒருத்தரை புழுவை விட அறுவருப்பா பார்த்து பேசினிங்களே அவரு யாரு?” என்றான்.

அவன் யாரை நினைத்து கேட்கிறான் என்று புரிந்து போனது சுடருக்கு, கேட்ட அடுத்த நொடியில் கோவத்தில் சிவந்து போனது அவளின் முகம், சிறிது நேரம் கொதிகனல் போன்று இருந்தவள்

நீண்ட பெரு மூச்சை இழுத்து விட்டு,
“அவனை நீங்க தெரிஞ்சிக்க நேரம் வரும் போது சொல்றேன்!” என உள்ளே போன குரலில் பேசினாள்.

“தூங்கலாம் நினைக்கிறேன்,” என்றவள் அவனின் பதிலை எதிர் பார்க்காது, படுக்கையின் நடுவே தலையணை சுவரை எழுப்பி அவனுக்கு முதுகை காட்டி படுத்து கொண்டாள்.

“தப்பான கேள்வி கேட்டு விட்டேனா?” என்றான் அவளின் அருகே சென்று

“இப்ப லைட் ஆஃப் பண்ணிட்டு
தூங்குற வேலையை பாருங்க!” என்றாள் சற்று கோவமாக.

அவளின் குரலில் கட்டுபட்டவனாய், கட்டிலில் மறுபுறம் சென்று படுத்து கொண்டான்.

( அடப்பாவி எந்த இடத்துல வந்து, என்ன கேள்வி கேட்டுகிட்டு இருக்க, உனக்கு யாரும் சூனியம் வைக்க வேண்டாம், உனக்கு உன்னோட வாயை போதும்!)

அவனை போக சொன்னவள் தான் அனுபவித்த கசப்பான சம்பவத்தை நினைத்து கொண்டாள்.

அன்றைய நாள்,

சின்ன குழந்தையை யார் என்ன செய்து விடுவார்கள் என்று நம்பி, தெருவில் விளையாட அனுப்பினார் சுடரின் மாமா.
குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை பார்த்து கொண்டு இருந்த, மற்ற மனிதர்களுக்கு குழந்தை என்று தோன்ற வேண்டுமே! அனைவருடைய பார்வையும் ஒரே மாதிரி தான் இருக்கும், என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

நம்ம ஊரு, நம்ம சனங்க நினைத்து தெருவில் விளையாட விட்டு இருந்தார் விருத்தாச்சலம்

பொழுது சாயும் நேரம் ஒளிந்து விளையாட ஏற்ற சூழல் என்பதால், அனைவரும் விளையாட ஆரம்பிக்க, சுடரும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி கொண்டு இருந்தாள்.

அங்கே இருந்த கயவர்கள் இவள் மறைய சென்ற இடத்திற்கு அவள் பின்னே சென்று,

“சுடர் இங்கே வா, மாமா உன்னை யாரும் கண்டு பிடிக்காதா இடத்தை காட்டுறேன்” என்று சொல்லி தனியாக அழைத்து சென்று இருந்தார்கள், தங்களின் இச்சைக்கு அவளை இரையாக எண்ணி,

“இங்கே ரொம்ப இருட்டா இருக்கு, எனக்கு பயமா இருக்கு, நான் போறேன்!” என்று பயந்து கொண்டே சொல்லிய சுடரை தடுத்து நிறுத்தி, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, மாமா உங்க கூட தானே இருக்கேன், இங்கேயே இருங்க!” என்றவன் அக்கம் பக்கம் சுற்றி பார்த்து, அவளை நெருங்கி வந்து இருந்தான்.

சிறியவள் என்றும் பாராது, இவள் வயதில் தனக்கும் ஒரு குழந்தை உள்ளது என்றும் சிந்திக்காமல், அந்த சில நிமிட தாபத்திற்கு, மொட்டு விட ஆரம்பிக்கும் போது, பெண் குழந்தைக்கு இருக்கும் ஜொலிப்பை கண்டு, அதில்
மயங்கி வதைக்க தயாராகி வந்து விட்டனர், மனித மிருகங்கள்.

“இப்ப என்னை விடுகிறீங்களா, இல்லை எங்க மாமாவை
கூப்பிடவா!” என்றாள் அவர்களின் தவறான தொடுகையில்

“டேய் அவளின் வாயை பொத்து” என்று இன்னொருவனுக்கு கட்டளை இட்டான் எங்கே ஊரார் முன்னிலையில் மாட்டிக்கொள்வோமோ! என்ற பயத்தில்.

அவனோ குடிபோதையில் தள்ளாடி வர,வந்தவனின் கைகள் எதையோ அவளிடம் தேடி சென்றது, அவனின் தள்ளாட்டம் அருகில் இருப்பவனை நிலை தடுமாற செய்ய, இது தான் சமயம் என்று அந்த போதை ஆசாமியை இன்னொருவனின் மேல் தள்ளி விட்டு, காற்றுக்கே சவால் விடும் அளவு ஓடி சென்றாள், அவளது தாய்மாமனை தேடி,

“மாமா…ஆ! மாமா.. !” என்று கதறி அழுது கொண்டு இருந்தவள், சுற்றி முற்றி பார்க்க, தன்னுடன் பேசிக்கொண்டு இருந்தவர்களை, அனுப்பி வைத்து இருந்தார்.

அவளின் அழுகையும், பதட்டத்தை கண்டு துடித்து போனவர்.

“என்ன சுடர் என்ன ஆச்சி எதுக்கு இப்படி ஓடி வர?” என்றார்.

அவளும் அந்த கயவர்கள் செய்த செயலை சொல்ல ஆரம்பித்து இருந்தாள், இரண்டு வார்த்தையிலே புரிந்து போனது விருதாச்சலத்திற்கு என்ன நடந்திருக்கும் என்று,

அவள் காண்பித்த இடத்தில், குடி போதையின் தாக்கத்தில், அங்கேயே வாந்தி எடுத்து படுத்து கொண்டு இருந்தனர் இருவரும்.

இவர்கள் தான் என்று கையை நீட்டி அடையாளம் காட்டி, அழுது கொண்டே நின்றாள் சுடர்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், விருத்தாச்சலம் தோட்டத்தில், இரவு என்றும் பாராது, எறும்பு புற்று இருக்கும் தென்னை மரமாய் பார்த்து கட்டி வைத்து, புற்றை கிளறி விட்டு, இடுப்பிற்கு கீழே இருக்கும் ஆடைகளை கிழித்தெறிந்தார்.

காவலுக்கு இரண்டு பேரை விட்டு வந்து இருந்தார்.

மறுநாள் அந்த மிருகத்தின் மனைவிமார்கள், அழுது கேட்டு கொண்டு இருக்கவே, எச்சரித்து விடுதலை செய்து இருந்தார்.

ஒருவர் அடுத்த நாளே ஊரை காலி செய்து விட்டு சென்று இருந்தான்.
மற்றவன் இங்கேயே இன்னும்
சுடருக்கு முன் பாவ விமோசனம் கேட்டு நிற்கிறான்.

அந்த சம்பவம் பிறகு அவளுக்கு தற்காப்பு கலை எல்லாம் பயில ஆசிரியர் நியமித்த விருத்தாச்சலம், அவளை முன்னிலை படுத்தி ஒவ்வொரு பொது விசயம் செய்ய ஆரம்பித்து இருந்தார்.

இன்று வரை இவள் அனுபவித்த கசப்பை அவளின் தாயிற்கும், அத்தைக்கும் தெரியாது பார்த்து கொண்டார்.

இத்தனையும் நினைத்தவள் கண்களுக்கு தூக்கம் காணாமல் போனது, அவளை எண்ணியே இருந்த அகிலனும் ஒருவாறு என்ன நடந்தது இருக்கும் என்று நினைத்து இருந்தான் அவன் யூகமும் சரியாக தான் இருந்தது.

முதலிரவு ஒவ்வொருவரும் எப்படி எப்படியோ கழிப்பார்கள், இவனின் வாய் தன் இவனுக்கு எதிரியா இருக்கும் போது நம்ம என்ன சொல்ல…?

சொல்லமுடியாமல் வேதனையில் அவள், அதை ஓரளவு புரிந்து கொண்டவனின் என்னமோ, தன்னுடைய ஆண் இனத்தின் மேலே வெறுப்பு வந்தது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்க முடியாமல் அலைபவர்களே,
வேண்டாம் என்று சொல்லும் பெண்களுக்கும், தனக்கு சொந்தமில்லா பெண்களையும், காதல், காமம் என்பது என்ன என்று கூட தெரியாத பச்சிளம் குழந்தை, வளர் குழந்தைகளை வதைப்பது ஏன்?.

இயல்பா கணவனுக்கும் மனைவிக்கும் நடக்கும் தாம்பத்தியம் இந்த கயவர்கள், மொட்டிலே வதைக்கும் போது எப்படி சரியான வயதில், தன்னுடைய இணையவுடன் புனிதமான ஒன்றை எப்படி எதிர்கொள்ளும் அக்குழந்தை. அவள் வளர்ந்து பெண்ணாக மாறினாலும், அவளின் நினைவு முழுக்க கடந்த கால கசப்புகளை எப்படி மறைத்து அல்லது மறந்து, ஒன்றுமே நடக்காதது போல், புதிய உறவை ஏற்றுக்கொள்ளும். அப்படி கடந்து வாழும் பெண்கள் சொற்பமே! சகித்து வாழ்பவர்கள் இங்கே அதிகம்.

இருவரும் நேரம் கடந்து தூங்கியதால், வழமையாக எழும் நேரத்தை விட தாமதமாக எழ, மணியோ பதினொன்று என்று கடிகாரம் காட்டியது.

முதலில் எழுந்த அகிலன் அவள்
தூங்கும் அழகை ரசித்து விட்டு, தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தான்.

ஈரம் சொட்ட சொட்ட வந்தவனின் வெற்று மார்ப்பும், இடுப்பிலே இருந்த வெள்ளை டவளும் என கவர்ச்சியாக சுடருக்கு முன்னே வந்தவன்.

“ஏங்க சுடர் எழுந்திருக்க!” ரொம்ப நேரம் ஆகிவிட்டது என்பதை சொல்லி எழுப்பி கொண்டு இருந்தான்.

“ம்ம் கபிலா கொஞ்ச நேரம் கழித்து எழுந்துகிறேன், என்னோட செல்ல மாமா தானே! போடா அம்மாவை காபி போடச் சொல்லு” என்றாள் கண்களை திறக்காமல்.

“என்னது அந்த பொடியன் உங்களுக்கு மாமாவா…!
ஏங்க சுடர் எழுந்திருக்க!” என்றான் காளான் போன்று திடீரென்று முளைத்த பொறாமையால் அவளை கத்தி எழுப்பினான்.

அவன் கத்திய கத்தலில் எழுந்தவள் வீட்டை ஒருமுறை தனது விழியால் அளந்து பார்த்தாள்.

“ஸ்சப்பா என்னதான் பிரச்சனை! உங்களுக்கு, இப்படி காலங்காத்தால கத்தி எழுப்புறிங்க” என சலித்து கொண்டே கேட்டாள்.

“என்னது காலையா..! ஏங்க மணியை பாருங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல மதியமே ஆக போகுது,”என்றான்.

அகிலன் சொன்னதும் கடிகாரத்தை பார்த்தவள், தலை தெறிக்க ஓடி மறைந்தாள்.

அவளின் செயலில் வெளிப்படையாக சிரித்து இருந்தான் அகிலன்.

சுடர் குளித்து கொண்டு இருக்கும் போதே, வெளியில் கதவை தட்டி இருந்தார் கல்யாணி.

கொஞ்ச நேரத்தில் வந்து விடுவதாக தலையை மட்டும் நீட்டி சொல்லி அனுப்பி வைத்து இருந்தான்.
இவனின் செயல் கல்யானியை மகிழ்ச்சியடைய செய்தது.

நடந்தது அவருக்கு எப்படி தெரியும், வெளியே இருப்பவர்களுக்கு முதலிரவு முடிந்து, இவ்வளவு நேரம் கதவு திறக்காது இருந்தால், ஒவ்வொருவரும் தங்களுடைய கற்பனை குதிரையை ஓட தானே செய்யும்.
 
  • Love
Reactions: shasri and Vathani

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
intha punishment nalla irukay but innum kadumaiyana thandanai kudunga
ஆமாம் இன்னும் கடுமையான தண்டனை அரசாங்கமும் கொடுக்கும் போது இந்த மாதிரி ஆண்கள் கொஞ்சம் பயப்படுவாங்க எங்க😥
 
  • Like
Reactions: shasri