கடிகாரத்தை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்தவள், மாற்று துணி எடுத்து வர மறந்து போனாள்.
காலேஜ் செல்ல கம்பீரமாக தயாராகி கொண்டு இருந்த அகிலன்,
சுடரின் சத்தம் இல்லாமல் இருப்பதால், கதவின் அருகே சென்று “ஏங்க சுடர் ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
அவனிடம் உதவி கேக்கலமா வேண்டாமா என்று தயங்கி கொண்டு இருந்தாள்,
“எனக்கு டவல் மட்டும் வெளியே எடுத்து வைத்து விட்டு கொஞ்சம் வெளியே போறீங்களா?” என்று கேட்டாள்.
அவள் கேட்டதும் இவனுள் சொல்லமுடியா தபாங்கள் கிளர்ந்து எழ, தன்னை அடக்கியவாறு, “சரிங்க இங்கே வைக்கிறேன்!” என்று வைத்து விட்டு வெளியே கதவை அழுத்தி சாத்திய சத்தம் கேட்ட பின்பே, அவள் வெளியே வந்து அவளின் வழமையை செய்ய சென்றாள்.
“என்னடா நேரம் ஆகுது, இவ்வளவு நேரமா?, டேய் அகில் அவளை பார்த்து பயந்துட்டு இருந்த, எப்படிடா ஒரே நாள்ல இவ்வளவு தைரியம் வந்தது.” என்றாள் கல்யாணி அவனின் தோலை தட்டி,
வேறு வழி இல்லாமல் அவரை பார்த்து சிரித்து வைத்தான்.
சிறிது நேரத்தில் சுடரும் வந்து விட, அவளின் கண்கள் சிவந்து காண படவே, அளவில்லா ஆனந்தம் கொண்டாள் கல்யாணி.
பெற்றவர்களுக்கு தனது பிள்ளை பேறு கொடுக்கும் சந்தோசத்தை விட, பேரன் பேத்தி வரவு தான் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கும்.
இருவரிடமும் ஒன்றும் கேட்காது, “போங்க இருவரும் சேர்ந்து சாமியை கும்பிட்டு வாங்க!” என்று அனுப்பி வைத்தாள்.
வாழ ஆரம்பிக்காதா போதும் பெரியவரின் சொல்லிற்கு மரியாதை கொடுத்து பூஜை அறை சென்று கடவுளை வணங்கி வந்தனர் இருவரும்.
சுடரும் அகிலனும் காலேஜ் கிளம்பும் நேரம்,விருத்தாச்சலம் சாந்தாவும் வந்து சேர்ந்தனர்.
வழக்கமான நல விசாரிப்பு முடித்து கொண்டு, வந்த விசயத்தையும் சொல்லி, சீர் வரிசையை வைத்தனர்.
அகிலனுக்கு பட்டு வேட்டியும் சட்டையும், தங்கத்தால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் காப்பும். சுடருக்கு தங்க சரிகை பட்டு புடவையும், அனைத்து விதமான நகைகள் அடங்கிய ஒரு பெட்டியும் வைத்து, இருவருக்கும் கொடுத்தனர். சீர் வாங்குவதற்கு முன் இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினர்.
அகிலன் சுடர்கொடி இருவரையும் நாளை அனுப்பிய வைப்பதாக சொல்லி, மதிய உணவு சாப்பிட வைத்த பிறகே அனுப்பி வைத்து இருந்தனர் கல்யாணி- மகேந்திரன் தம்பதியினர்.
இதற்கு மேல் எதற்கு காலேஜுக்கு போய் கொண்டு, ஏதாவது படத்திற்கு போய் வாருங்கள் என்று பெரியவர் சொல்ல, சிறியவர்களும் கிளம்பினார்கள்.
“அங்க, அங்கே! எப்படி இருக்காங்க, இந்த பையன் மட்டும் எதுக்கு இவ்வளவு மக்கா இருக்கானோ?” என்று கணவனிடம் சொல்லி கொண்டு இருந்தாள்.
வெளியே சென்றவர்கள் இந்த முறையாவது, ஒழுங்கா வருவாங்களா?
இருவரும் அமைதியாக படத்தை பார்த்து கொண்டு இருக்க, இது மேட்னி ஷோ என்பதால், வெயிலுக்கு பயந்து ஒதுங்கியவர்கள் ஒரு சிலரும், காதல் ஜோடிகள் சிலரும், இவர்களை குறி வைத்து பின்தொடரும் காளி பசங்களும் என்று இருந்தது அந்த இடம்.
சுடரின் பின் இருக்கையில் வரிசையாக நான்கு தடிமாடு மாதிரி ஆண்கள் அமர்ந்து கொண்டு, கண்ணில் படும் காதலர்களை பற்றி கொச்சையாகவும், இழிவாகவும் பேசி கொண்டு இருந்தார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல், சுடர் அமர்ந்து இருக்கும் இருக்கையை அசைப்பதும், உதைப்பதும் என்று இருந்தவர்களை முறைத்து பார்த்தாள் சுடர்.
“ஹலோ மிஸ்டர் கொஞ்சம் ஒழுங்கா உக்காருங்க, இப்படி தொந்தரவு செய்யுற மாதிரி, பேசிக்கிட்டு, சீட்டை உதைச்சிட்டு இருங்கிங்க?” கோவமாக கேட்டாள் சுடர்.
“சுடர் என்ன ஆச்சி?”
“ம்ம் ஒன்னும் ஆகல, பேசாம படத்தை பாருங்க!” என்றவள் மீண்டும் படத்தை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
“என்ன ஆச்சி தானே கேட்டேன் அதுக்கு போய் இப்படி கோவபடுறாங்க?” என்றவன் ‘அகிலா எப்படிடா இவங்களை உசார் பண்ண போற?’ என்று நினைத்து கொண்டான்.
“டேய் மச்சி முன்னாடி இருக்குற பொண்ணு செமையா இருக்கு டா!, அவளை பாரேன், பார்க்கவே இருப்பு கொள்ள முடியலை…” என்றான் ஒரு தடியன்.
இன்னொருவன் “ஆமாம் டா, செம பிகரா இருக்கா!” என்றான் மற்றொருவன்.
இன்னும் ஒரு படி போய் அவளின் உடலை பற்றி கொச்சை கொச்சையாக பேசினான், பொறுத்தது போதும் என்று, எழுந்து கொண்டான் அகிலன்.
“ஹலோ யாரை இப்படி வர்ணித்து பேசுறீங்க?.”
“தோ உனக்கு பக்கத்துல இருக்குற, இந்த பாப்பா பார்த்து தான்” என்றான் திமிராக.
“அவ என்னோட பொண்டாட்டி கொஞ்சம் மரியாதையா பேசுங்க!” என்றான்.
“தோடா வந்துட்டாரு பொண்டாட்டியை காப்பாத்த, இப்படி தான் பேசுவோம், என்னடா பண்ணுவ!”
“இரு போலீசுக்கு போன் பண்ணுறேன்!” என்று தனது போனை எடுத்து போலீஸ் எண்ணை அழுத்த எத்தனிக்கும் போது அவனின் கையில் இருந்த போனை பிடுங்கினான் அந்த தடியன் குருப்பில் இருந்த ஒரு ஆள்.
“இவரு போலீஸ் சொன்னதும், நாங்க பயந்திடுவோம் என்ற நினைப்போ, நாங்க பார்க்காத போலீசா!” என்றான் நக்கலாக.
“சும்மா நச்சுனு இருக்கா,உண்மையா உன்னோட பொண்டாட்டி தானே!, இல்லை மத்தவங்க மாதிரி..” என்று அவன் சொல்லும் முன் அவனின் வாயில் இருந்து ரத்தத்தோடு ஒரு பல்லும் கிழே விழுந்தது.
ஒரு புருஷனா அகிலன் என்ன பண்ண போறான் என்று, கையை கட்டி கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் சுடர்.
வார்த்தைகள் எல்லை மீறி போகும் போது, சும்மா இருக்க முடியாமல், களத்தில் இறங்கி விட்டாள்.
அவனை அடித்தும் மற்ற தடிமாடும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து, நன்றாக வாங்கி கட்டி கொண்டனர். கொடுத்த ஒவ்வொரு அடியும் அவர்களை நிலை குலைய வைத்தது.
“டேய் மச்சான் பொண்ணா டா இது, பேய் மாதிரி அடிக்குறா, அப்ப முகத்தை பார்க்கும் போது என்னவோ மாதிரி ஆசையா இருந்தது, இப்ப பார்க்கும் போது பிடாரி கணக்கா தெறியுறா?” என்றான் முட்டியை பிடித்து கொண்டு.
இடுப்பில் சொருகி வைத்த தாவணியை, இறக்கி விட்டவள்.
“இன்னும் படம் பார்க்கணுமா?” என்று அகிலனை பார்த்து கோவமாக கேட்டாள்.
இல்லை என்பது போல் தலையை இடது வலது புறமாக வேகமாக அசைத்தான்.
வேகமாக நடந்து வந்தவளை, பின் தொடர்ந்தான் அகிலன்.
கோவமாக அவனை பார்த்து “பசிக்குது” என்றவள் முகத்தை ஏறிட்டு பார்த்தான் அகில்.
“இங்கே என்ன பார்வை வண்டியை ரோட்டை பார்த்து ஓட்டு!” என்றாள்.
மந்திரித்து விட்டவன் போல் மிரண்டு அவளை பார்த்தான்.
“இன்னொரு முறை என்னையை திரும்பி பார்த்த, அந்தத் ரெண்டு கண்ணும் காக்காவுக்கு புடுங்கி
போட்டுவிடுவேன்!” என்றாள் கோவமாக.
“ஏங்க நான் உங்களை பார்க்கலை ஆனா பசிக்குது சொன்னிங்க!, வெளியே சாப்பிட்டு போலாமா? இல்லை வீட்டுக்கு போலாமா!” என்றான்.
அவனை பார்க்காது “வீட்டுக்கு போங்க, சாப்பாடு ரெடியாக இருக்கணும் என்று சொல்லி வைங்க!” என்றாள் அதே கோபத்துடன்.
அவனும் வீட்டிற்கு அழைத்து, விவரம் சொல்லி இருந்தான்.
வீடு வந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது, கல்யாணி வந்து
“படம் எப்படி இருந்தது?’ என்றாள்.
பசியில் இருந்தவள் வேகமாக சாப்பிட்டு விட்டு,
“அதை உங்க பையன்கிட்ட கேளுங்க?” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
அவள் சென்று மறையும் வரை அமைதியா இருந்த அகிலன்.
அங்கே நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டான்.
இதில் சிரிப்பதா, அழுவதா என்று ஒன்றும் தெரியாமல்
“பார்த்துக்க அகி, தைரியமான பொண்ணு ஆசைபட்டு, கல்யாணம் பண்ண நீ தான் இதை சமாளிக்கணும்!” என்றவர்.
“நான் நினைச்ச பொண்ணை தான் நீ கட்டணும் ஆசை பட்டேன், ஆனா நீதான் முடியாது சொல்லிட்ட, இவளோடவது நல்ல படியா வாழுற வழியை பாரு!” என்றார்.
“கொஞ்ச நாளா இல்லாமல் இருந்தது, மறுபடியும் ஆரம்பிச்சாச்சு, யாருன்னு தெரியாது, எங்க இருக்காங்க கூட தெரியாத ஒரு குடும்பத்தை தேடி கண்டு புடிச்சி, அவங்க பொண்ணை கல்யாணம் பண்ண சொன்னா எப்படி அம்மா, உங்க ஆசைக்கு வேணும் என்றால், அவங்கல தேடுறேன், ஆனா பேச்சுக்கும் அவங்க பொண்ணு நான் கட்டணும் நினைச்சேன் எல்லாம் சுடர் கிட்ட சொல்லாதீங்க!
அவங்க என்ன நினைப்பாங்க, அதுவும் இல்லாமல் நீங்க சொல்ற பொண்ணு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் என்பது சந்தேகம் தான்?” என்றான்
“சரி சொல்லமாட்டேன், அவங்களை கண்டிப்பா தேடி தரணும்” என்றாள்.
“அவங்க சம்மந்தம் பட்ட பொருளோ, போட்டோவோ இல்லை வேற ஏதாவது இருந்தா கொடுங்க எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி தேட சொல்றேன்” என்றான்.
சிறிது நேரம் யோசனையாக இருந்தவள், “ஹ.. என்கிட்ட அவங்களும் நம்ம குடும்பமும் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்னு இருக்கு” என்றவள்.
அவளின் அறைக்கு சின்ன பொண்ணு மாதிரி வேகமா ஓடினாள்,எல்லாவற்றையும் களைத்து போட்டு விட்டு பழைய கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை நீட்டினாள்.
அதில் எண்பதுகளில் வரும் கதாநாயகர்கள் போல் மகேந்திரனும், அவனின் அருகில் இன்னொரு ஆணும் இருந்தனர்.
ஆண்கள் இருவர் நிற்பது போல் பெண்கள் இருவர் நாற்காலியில் அமர்ந்து இருந்தனர்.அகிலன் அவனது தந்தை அருகில் நின்று இருந்தான், காயத்ரி இரண்டு வயது குழந்தையாக, கல்யாணி மடியில் அமர்ந்து இருந்தால், இன்னொரு நாற்காலியில் மூன்று வயது பெண் குழந்தை அமர்ந்து இருந்தது.
இதை பார்த்து விட்டு,
ஆக இந்த போட்டாவில் இருக்குற இந்த குடும்பத்தை தேடனும் என்றான்.
“ஆமாம், ஆனால் இவரு இப்ப உயிரோடு இல்லை, இவங்க ரெண்டு பேரை தேடனும்” என்று அந்த பெண்மணியும் அவளின் குழந்தையையும் காட்டி.
“அவரு எப்படி மா இறந்தார்?” என்றான் அகிலன்.
“அதற்கான சமயம் வரும் போது சொல்றேன்!” என்றவள் சோகமாக சென்று விட்டாள்.
‘கண்டு பிடிக்கலாம்’ என்று அந்த போட்டோவை பார்த்து கொண்டே அவனது அறைக்கு சென்றான்.
அறைக்கு வந்தவன் சுடர் எங்கே இருக்கிறாள் என்று நோட்டமிட்டடான், அந்த அறையின் உள்ளே சிறியதாக இருக்கும் ஜிம்மிற்கு சென்றான், அங்கேயும் இல்லை மீண்டும் வந்தவன்
பால்கனி கதவை திறந்து பார்த்தான், அங்கே இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு தோட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் சுடர்.
“நீங்க இங்க தான் இருக்கீங்களா?” என்றான்.
“இது தானே நம்ம ரூம் அப்ப இங்க தானே இருக்க முடியும், ஒருவேளை இங்க இருக்கிறது உங்களுக்கு தொந்தரவா இருக்கோ? அப்படி இருந்தா சொல்லுங்க, நான் பக்கத்துல இருக்கிற ரூம் போய் இருந்துகிறேன்!”. என்று இஷ்டத்துக்கு பொரிந்து தள்ளினாள் சுடர்.
இவளின் பேச்சில் ஸ்தம்பித்து போனான் அகிலன். ஆசையா பார்த்து ரசித்த பொண்ணு, நமக்கு பக்கத்துல இருக்கிறதே சந்தோசம், இதுல அவளே பொண்டாட்டியா வந்தா அதை விட, வரம் எதுவும் இல்லை அப்படி இருக்க, அவளை எப்படி சுமை என்று நினைப்பான்.
“அய்யோ அப்படி எல்லாம் இல்லை, நீங்க விருப்பம் இல்லை சொன்னா நான் வேணும்னா, வேற ரூம் போறேன்!” என்று பாவமாக சொன்னான்.
கோவத்தை தாக்கு பிடித்தவள், “சரி ஒரு பிரச்சனையும் இல்லை!” என்றவள், நாளைக்கு எங்க வீட்டுக்கு போகனும் ஞாபகம் இருக்கு தானே! என்றாள் அதட்டும் விதமாக.