• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 9

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
நெருங்கலாம் என்று நினைத்து ஒரு அடி எடுத்து வைக்கும் போது, பத்து அடி தள்ளி வைக்கும் சுடரை நெருங்கவும் முடியாமல், விலகி இருக்கவும் முடியாமல் தவித்து தான் போனான் அகிலன்.

சுடர் எழுந்து கொள்ளும் முன் அகிலன் எழுந்து அவனது தனிப்பட்ட ஜிம்மில் இருந்தான்.
எழுந்தவள் தயாராகி வந்து, ஜிம்மில் அகிலன் இருப்பதை தெரிந்து கொண்டு,

“இன்னும் கிளம்பலையா?” என்றாள்.

அமைதியில் இருந்தவனுக்கு இவளின் சத்தம் தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.
“ ஒ காட் நீங்களா? திடீர் சத்தம் கேட்டு கொஞ்சம் பயந்துட்டேன்” என்றான்.

அவன் பயந்ததை பார்த்தவள் உள்ளூர சிரித்தாலும், விறைப்பாக “இன்னும் ஒரு மணி நேரத்தில் ரெடியாகி வாங்க, நான் கீழே இருக்கேன்” என்று சென்று விட்டாள்.

ஜிம்மை விட்டு வந்தவன், அவசர அவசரமாக தயாராகி வந்து இருந்தான்.

“ஏங்க நான் ரெடி போகலாமா?” என்றான்.

“டேய் இருடா சாப்பிட்டு போவ!” என்ற கல்யாணி இருவரையும் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார்.

சுடர் கல்யாணியிடம் காலேஜ் சென்று பிறகு, மாலை தனது வீட்டிற்கு செல்வதாக சொல்லி சென்றாள்.

“இப்பவே இப்படி இருந்தா, இன்னும் போக போக என்னவெல்லாம் நடக்குமோ? ம்ம் எங்க அண்ணி இருக்கீங்க? நீங்களும் என்னோட மருமகளும் இருக்கிற இடத்தை அந்த கடவுள் தான் காட்டணும்” என்றவள் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.

காலேஜ் வந்த அகில் வழக்கமாக செய்ய வேண்டிய வேலைகளை வெகு வேகமாக முடித்து கொண்டு இருந்தான். கூடவே ரகுவை வேலையை சீக்கிரம் முடித்து விட்டு தன்னை பார்க்குமாறு கட்டளை இட்டான் அகில்.

சுடரும் தீபாவிடம் நடந்தவற்றை சொல்லி ஆறுதல் தேடி கொண்டு இருந்தாள்.

காதல் கொண்ட மனதை யாராவது ஒருவரிடம் சொல்லி தனது
ஆற்றாமையை தீர்த்து கொண்டு, அடுத்த கட்ட திட்டத்திற்கு தன்னை திடம் படுத்தி கொண்டு இருந்தாள் சுடர்.

மாலை நேரமும் வந்தது சுடரும் அகிலும் காலேஜ் முடிந்த பிறகு காரில் ஏறி சென்றனர், போகும் வழியில் கபிலனுக்கு நொறுக்கு தீனியும், பிளாக்கிக்கு ஸ்பெசல் உணவையும் மறக்காமல் வாங்கி கொண்டாள்.

நாய்க்கு உணவு வாங்கும் போது
கண்டு கொள்ளாமல் இருந்தவன், கபிலனுக்கு வாங்கும் போது அவளையும் அவளின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தையும் பார்த்து பொறாமை கொண்டான் அகில்.

( எப்பா அகி ஒரு சின்ன பையனை போட்டியா நினைச்சி பொறாம படுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்)

அனைவருக்கும் ஏதாவது ஒன்றை வாங்கி கொண்டு அவளின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அகிலும் சுடரும்.

வந்தவர்களை வாசலில் நிற்க வைத்து ஆலம் சுற்றி இருந்தால் சாந்தா,புது தாலியுடன் முதல் முறையாக வந்தவளை முதலில் பூஜை அறை சென்று விளக்கை ஏற்ற சொன்னாள் சாந்தா.
அவளின் வாசம் கண்டு வேகமாக ஓடி வந்து அவளின் மேலே ஏறி, நாக்கினால் அவளின் முகத்தை நக்கி தனது அன்பை வெளிக்காட்டியது பிளாக்கி, அது வரை அமைதியாக இருந்த பிளாக்கி

அகிலன் புறம் திரும்பி கத்தி கொண்டே அவனை நெருங்கியது, அதில் பயமுற்றவனோ “ஏங்க சுடர் அந்த நாயை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்க பயமா இருக்கு, கத்துற கத்தலில் என்னோட உடம்பே நடக்குது!” என்றான்.

பிளாக்கியை சமாதானம் செய்து வைத்தவள் “இனிமே இப்படி முழிச்சிட்டு இருந்தீங்க என்றால் கண்டிப்பா குறைக்கும் இயல்பா இருங்க!” என்றவள் தனது தாவணியை இடுப்பை சுற்றி கொண்டு வந்து வலது கையால் சுழற்றி கொண்டே வெளியே நடந்தாள்.

அவனின் அருகே சென்று பிளாக்கி வாலை ஆட்டி கொண்டு அவனை பார்த்து, அவள் என்ன சொன்னாளோ, இது அவனை ஒன்றும் செய்யாமல் சுடரின் பின்னாலே நடக்க ஆரம்பித்து இருந்தது.

'ஷப்பா' என்று மூச்சினை வாங்கியவன் 'இன்னும் இரண்டு நாள் எப்படி ஓட்ட போற' அகிலா என்று தனக்கு தானே சொல்லியவன் கார்த்திக்கு போன் போட்டான்.

போனை எடுத்தவன் “சொல்லு மச்சான் கல்யாண வாழ்க்கை எப்படி போகுது!” என்றான்.

“ஹான் ஹா ரொம்ப நல்லா போகுதுடா! நல்லா போகுது!” என்றான் விரக்தியாக.

“சரி அதை விடு நான் உங்க ஊருக்கு தான் வந்து இருக்கேன், நான் வெளியே வரேன், கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வரலாம்!” என்றான்.

“என்ன மச்சான் முன்னமே சொல்ல கூடாது, சொல்லி இருந்தா நான் வீட்டில் இருந்து இருப்பேன்!” என்றான்.

“என்னது வீட்டுல இருந்து இருப்பியா? அப்படி என்றால் நீ வீட்டுல இல்லையா?” என்றான் ஏமாற்றமாக.

“இல்ல மச்சான் பொண்டாட்டி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போயி இருக்கா, அதான் அவ இல்லாம வெறுமையா இருக்கிறது சொல்லி கிளம்பிட்டேன்!” என்றான்.

“ம்ம் முதல் குழந்தைக்கு முழுசா முணு வயசு ஆகல, அதுக்குள்ள இன்னொன்னா சரி நீ நடத்து, 'என்னோட விதி அந்த லொட லொட வாய் ரகு' என்று எழுதும் போது நீ என்ன பண்ணுவ, விடு டா மச்சான் நான் ரகுவிடம் பேசிக்கிறேன்” என்றான்,

“சாரி மச்சான் அடுத்த முறை நீ வரும் போது கண்டிப்பா நான் இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன்” என்றான் கார்த்திக்.

கார்த்திக் பேசி வைத்த உடன் ரகுவிற்கு அழைப்பை விடுத்து, “டேய் நான் இப்ப உங்க ஊருக்கு வந்து இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்துல சுடர் வீட்டுக்கு நீ வரணும், என்ன புரிஞ்சுதா!” என்று அதட்டினான்.

“ஹலோ சார் இது உங்க காலேஜ் இல்ல ஆர்டர் போட, எங்க ஊரு என்னோட கோட்டை இங்கே நான் தான் அதிகாரம் பண்ணணும் நீங்க இல்லை! என்றான் ரகு நக்கலாக.


“எது! இது உங்க கோட்டையா! திருப்பி சொல்லுங்க, இல்லாத சுடரை சொல்லி அழைத்தான், சுடர் இங்கே இதைக் கேட்டீங்களா! இந்த ஊரு ரகுவோட கோட்டையாம், அவனை கேட்டு தான் இந்த ஊர் மக்கள் எதுவா இருந்தாலும் செய்யணும்மா அப்படியா!” என்றான்.

“அகி அண்ணா பிளீஸ் சும்மா இருங்க! சுடர் அப்படி ஒன்றும் இல்ல, தெரியாம சொல்லிட்டேன், இனிமேல் பேச மாட்டேன்!” என்று கெஞ்சினான், இல்லாத சுடரிடம்.

வாயை மூடி சிரித்து கொண்டு இருந்தவன் ரகு “ஹலோ ஹலோ!” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது, சிரிப்பை அடக்கி கொண்டு “ஹான் சுடர் உன்னை
மன்னிச்சிட்டாங்களாம் இனிமேல் அப்படி பேச கூடாது, அப்படி சொல்ல சொன்னாங்க!” என்றான்.

“ஏய் இரு உண்மையா சுடர் இருந்த மாதிரி தெரியலையே! நீயா கப்சா விடுரியா!” என்று சொல்லி கொண்டே வீட்டிற்கு வெளியே வந்தான் ரகு.

“இல்லையே நான் பொய் சொல்லல, நிஜமாக தான் சுடர் சொன்னாங்க!” என்று இவன் சொல்லும் போது,

புல்லட்டில் ரகுவை முறைத்து கொண்டே கடந்து சென்றாள் சுடர்.

“சரி சுடர் இப்ப எங்கே இருக்காங்க, அய்யா சொல்ல முடியுமா!” என்றான்.

“இந்த மாமனுக்கு காபி போட சமையல் கட்டுல இருக்காங்க!” என்றான் அகில்.

“கொஞ்சம் கூட கூச்சமே இல்லை, எப்படி இஷ்டத்துக்கு பொய்யை அளந்து விட்டு இருக்க, இப்ப தான் உங்க பொண்டாட்டி அவங்க தோப்பு வீடு இருக்கிற பக்கமா போனா,
கூடவே அந்த நாயும்!” என்று சொல்லி கொண்டே சுடரின் வீட்டிற்கு வந்தே விட்டான்.

“அத்தை அத்தை!” என்று வாசலில் நின்று அழைத்து கொண்டு இருந்தவனை எட்டி பார்த்த சாந்தா,
“வா பா ரகு மாப்பிள்ளை சுடர் ரூம் ல தான் இருக்காரு போய் பாரு நான் உங்க ரெண்டு பேருக்கும், காபி போட்டு எடுத்துட்டு வரேன்!” என்றார்.

“என்ன அத்தை வந்ததும் வராததுமா, சுடர் தனியா வெளியே கிளம்பிட்டாள், அகில் அண்ணாவை கூட கூட்டிட்டு போயிருக்கலாம் ல!” என்றான்.

சிறிது யோசித்தவள் “நானும் சொல்லி பார்த்தேன், அவரு இவ்வளவு நேரமும் வண்டி ஓட்டி வந்து இருக்காரு, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் அதுக்குள்ள வந்துறேன் சொல்லி கிளம்பிட்டா நான் என்ன பண்றது!” என்றாள் சாந்தா.

“மகேஷ்வரி அம்மா எங்கே காணும்!” என்றான்.

'என்ன இவன் சும்மா நோண்டி கேட்டு கொண்டு இருக்கான்' என்று சலித்தவள் “வழக்கம் போல தான் என்ற சொல்லோடு நிறுத்தி கொண்டு “போ பா மாப்பிள்ளை ரொம்ப நேரமா தனியா இருக்காரு!” என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டாள்.

அனுப்பிய சிறிது நேரத்தில் காபி பலகாரம் இரண்டு பேருக்கும் கொடுத்து விட்டு, “சாப்பிடுங்க நைட் டிஃபன் சமைக்க ஏற்பாடு பண்ணுறேன்!” என்று நழுவி கொண்டார்.

தோட்டத்து வீட்டுக்கு வந்தவள் “அம்மா” என்று சொல்லி கட்டி கொண்டாள்.

“வாம்மா!” என்று தனது மகளை கட்டி கொண்டவள்,

“இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி அவங்களுக்கு தெரியாம மறைந்து இருக்க போறீங்க?” என்றாள் சுடர்.

சுடரின் தலையை வருடி விட்டு கொண்டே, “அது எல்லாம் உன் கையில தான் இருக்கு! சீக்கிரமே அவனை ஒருவழி பண்ணிட்டு, அவன் நிலைகுலையும் போது அவன் கண் முன்னாடி வந்து நிற்பேன்!” என்றார் மகேஷ்வரி.

தாயின் அரவணைப்பில் இருந்தவள் மனமோ, அவர்களை நினைத்து கொதித்து கொண்டு இருந்தது.

“சரிம்மா நீங்க சாப்பிட்டு ஓய்வு எடுத்துக்குங்க!” நான் கிளம்புறேன் என்று சொல்லி தனது புல்லட்டை கிளப்பி கொண்டு வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தவளை, வழி மறித்தான் கபிலன்.

“டேய் மாமா என்ன இந்த பக்கம் இன்னேரம் நீ டியூஷன்ல தானே இருக்கணும், கிளாசை கட்டு அடிச்சிட்டியா?” என்றாள் சுடர்.


“என்னடா அத்தை பொண்ணு வந்து இருக்காளே! இந்த மாமனை காணாமல் கவலைப்பட்டு இருப்பியே! என்னை தேடி இருப்பியே சொல்லி, அந்த வாத்தியை ஏமாத்தி வந்தா ரொம்ப தான் போடி, நான் விளையாடவது போறேன் !”என்று நடக்க எத்தனிக்கும் போது, அவனின் கையை பிடித்து,

“சரி சரி கோவிச்சிகாதே! கபிலா வா வீட்டுக்கு போகலாம், உனக்கு பிடிச்சது எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்!” என்று தனக்கு பின்னால் அமர வைத்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி வீட்டை நோக்கி பயணித்தாள்,

வரும் வழியில் இது நாள் வரை இலவசமாக தற்காப்பு கலையை தன்னிடம் பயின்ற பிள்ளைகள் ரோட்டில் விளையாடி கொண்டு இருக்க, அவர்களை பார்த்து புன்னகைத்தாள்,

“நாளையில் இருந்து உங்களுக்கு புதுசா வாத்தியார் எனக்கு பதில் வருவாரு!” என்று சொல்லியவள் தன்னுடன் பயின்ற சகாவை அழைத்து அதற்கும் சம்மதம் வாங்கிய பின்னரே கிளம்பினாள்,

பின்னாளில் அமர்ந்து கொண்ட கபிலன் இவளின் இடையை சுற்றி வந்து தனது கையை கோர்த்து கட்டி கொண்டு வந்தான், அதற்கு ஏற்றாற் போல் இவளும் வண்டியை வேகமாக ஓட்டி வந்தாள்.

எவ்வளவு நேரம் தான் ஒரே ரூமில் இருக்கிறது என்று மாடி வந்தவன், அவன் கண்ட காட்சியில் ஏகத்துக்கும் கடுப்பாகி விட்டான்.
 
  • Love
Reactions: shasri and Vathani

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
கல்யாணி தேடுறவங்க இப்பவே சொல்லிட்டா நீங்க மீதியை கதையை படிக்க மாட்டீங்களே! 😁
 
  • Sad
Reactions: shasri