• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

*சுடும் நிலவு*

kkp44

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
8
அனைவருக்கும் என் இனிய வணக்கம் , 🙏போட்டிக்கான தொடர்கதை .கதையின் பெயர் "சுடும் நிலவு "
குடும்பம் , காதல், சிரிப்பு,கொலை, மர்மம், விழிப்புணர்வு போன்ற அனைத்தும் கலந்த ஒரு சுவாரசியமான கதை.

மறந்து போன கலைகளையும்,மாறாத ஆயகலை பரதம் போன்ற அனைத்தையும் மீண்டும் நினைவூட்டும். கிராமத்தின் இயல்பான வாழ்க்கையையும் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையையும் ஒன்றிணைத்து மாறுபட்ட சூழலில் காட்டும் கதை.
நிச்சயமாக என்னால் முடிந்த வரை கதையை சுவாரசியமான போக்கில் கொண்டு செல்வேன் .
என் இனிய உறவுகளே கதையை படித்து உங்கள் கருத்துக்களை அவ்வப்போது உடனுக்குடன் கருத்து பெட்டியில் உங்களது கருத்துக்களை தெரிவித்து ஆதரவு தரும்படி அன்புக்கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

*"சுடும் நிலவு:-1 *"
*"கண்ணைக் கவரும் வண்ணம்
பனிமலையும் பச்சைக் காடும்
பரபரப்பு நேரமும்
பறந்து விரிந்த சாலையும்
பல பேரை வாழ வைக்குமிந்த
எழில் மிகுந்த அமெரிக்க நாடு....!

அமெரிக்க நாட்டில் வாழ்ந்து வரும் இந்தியக் குடும்பம். பாரம்பரியம், பண்பாடு மாறாத மரபு நிறைந்த
தமிழ் குடும்பம் .
"கதிரவன்" இந்திய நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் "காளையார்கோவில்" என்ற கிராமத்தில் பள்ளி படிப்பை முடித்து பின்பு "மதராசபட்டினம்" என்கிற, சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து அலுவலகப் பணியும் செய்து காலப்போக்கில் பதவி உயர்வின்படி அமெரிக்க நாட்டில் சேர்ந்துவிட்டார்.
இவரது," மனைவி பிருந்தா" . இவரும் காளையார் கோவில் கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே பள்ளியில் படித்து ஒரே கல்லூரியில் படித்து ஒரே அலுவலகத்தில் வேலை செய்து, காதல் திருமணம் முடித்தார்கள்.இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு மகன்,
ஒரு மகள் .
மகன் ..."பாலமுருகன்" அமெரிக்காவில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார். இவரின் மனைவி..," காயத்ரி" இல்லத்தரசியாக இருந்தாலும் கணவருக்கு அலுவல் உதவி செய்யும் திறமை கொண்டவள்.
மகள் ...."மதுவர்த்தனா" கல்லூரி படிப்பை முடித்துவிட்டாள். மூலிகைகளை ஆராய்ச்சி செய்வதில் இவளுக்கு ஆர்வம் அதிகம். மூலிகைகளை ஆராய்ச்சி செய்து, அதன் மருத்துவ குணங்களை அறிந்து சிறந்த மருந்துகளை தயாரித்து உலக சாதனை செய்ய வேண்டும் என்பதே இவளது குறிக்கோள்.
இவர்களோடு தான் நம் கதை நகரப் போகிறது...!
"வாங்க கதைக்குள் செல்வோம்"....!
"*கௌசல்யா சுப்ரஜா
ராம பூர்வா
ஸ்ந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட தர ஸார்துல
கர்தவ்யம் தைவமாஹ்நிகம்*"

அதிகாலை சூரியன் உதித்திட,
குயில் கூவிட,
மிதமான காற்றில், இதமான சூட்டில்,
தேனீர் அருந்தும் "கதிரவன்...!
"பிந்துமா...! பிந்துமா....!
என்று மனைவியை ஆசையாக அழைத்திட,
என்னங்க., கூப்பிட்டுக்கிட்டே இருப்பீங்களா?? இப்பதானே தேநீர் கொடுத்துவிட்டு போனேன், அதுக்குள்ள கூப்பிடுறிங்க .ஒரு நிமிஷம் நான் உங்க பக்கத்துல இல்லனா சரி வராதே ,
ஒரு நாளைக்கு நூறு தடவையாவது பிந்துமான்னு கூப்பிடனும்,
என்று அலுத்துக் கொண்டே உதட்டோர புன்னகையோடு கணவரின் முகத்தை பார்த்த படியே கூறியவள்
ஏனோ.., வெட்கத்தில் முகம் சிவக்கிறாள்.
அவள் மடல் விரிந்ததைக் கண்ட கதிரவனும் பிந்துவின் அருகில் வந்து தனது, இடது கையை அவளின் தோளில் போட்டவாறு ,
ஆமாம்மா..! பின்ன உன்னை கூப்பிடாம பக்கத்து வீட்டுக்காரிய கூப்பிட முடியும்.??
ஒரு நாளைக்கு நூறு தடவை இல்லை ஆயிரம் தடவை கூப்பிடுவேன் என்று அனைத்த படியே அவளின் நெற்றியின் மீது ஒரு முத்தம் பதித்திட,
தலைவரே ....,! "இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு பேர பசங்க வர போறாங்க" நீ, கிழவன் ஆக போற, நான் கிழவியாக போறேன். நம்ம "தாத்தா, பாட்டி "ஆக போறோம். முடி எல்லாம் நிறைச்சு போயாச்சு, இந்த வயசுலையும் உனக்கு ரொமான்ஸ் தேவையா?? என்று சிரித்துக்கொண்டே கேட்கிறாள்.
பிந்துமா... எனக்கு பேரன் வந்தாலும் சரி, கொள்ளுப்பேரன் வந்தாலும் சரி, எத்தனை வருஷம் ஆனாலும் உசுரோட உன் பக்கத்துல இருக்கிற வரைக்கும் உன்னை இப்படிதான் நச்சரிச்சிகிட்டே இருப்பேன். என்று கூறிக் கொண்டே மெல்ல நகர்ந்தவன் அருகில் உள்ள ஊஞ்சலில் சென்று அமர்ந்து செய்தித்தாளை எடுத்து வாசிக்க துவங்குகிறான்.
தேநீர் குவலையோடு அருகில் வந்து அமர்ந்த பிந்து கணவரிடம் பேசிக் கொண்டிருக்க மருமகள் காயத்ரி அறையில் இருந்து வெளியே வந்ததும் "குட் மார்னிங் மாமா"," குட் மார்னிங் அத்தை"என்று புன்னகையோடு கூறிவிட்டு குளியல் அறைக்குள் செல்கிறாள்.
"காயத்ரி.."குளித்துவிட்டு கையில் தேநீர் எடுத்துக்கொண்டு பிந்துவின் அருகில் வந்து அமர்ந்தவள் தேநீரை சுவைத்துக் கொண்டே" என்ன அத்தை ,இன்னும் மதுவிற்கு விடியலையா" ...???நைட் ரொம்ப நேரம் தூங்காம விழிச்சிருந்தா போல, என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே காயத்ரி அருகில் வந்து அமர்ந்த "மது.." அண்ணி ,குட்மார்னிங் என்றிட...
வாங்க மேடம்..." டைம் என்ன ஆச்சு??? இப்போ தான்‌ எழும்பும் நேரமா?? இன்னும்..., கொஞ்ச நாள் தான் புருஷன் வீட்டுக்கு போனும் நினைப்பு இருக்கட்டும் என்று கேலி பேசவே,
அட.. போங்க அண்ணி, நான் என்ன யாரோ வீட்டுக்கா போகப் போறேன் என் அத்தை வீட்டுக்கு தானே போகப் போகிறேன்.
உங்க எல்லாரையும் விட என் செல்ல அத்தையும் ,"ஆகாஷ் "மாமாவும், என்னை நல்லா பாத்துப்பாங்க உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் என்று குறும்புத்தனமாக பதில் கூறுகிறாள்.
அதனைக் கேட்ட" காயத்ரி " இவளை பார்த்தீங்களா அத்தை.. இப்பவே இப்படி பேசுறாளே , நாளை நம்மள திரும்பி கூட பார்க்க மாட்டான்னு நினைக்கிறேன். என்று அனைவரும் மகிழ்ந்து பேசி சிரித்துக்கொண்டிருக்க ,"கதிரவனின் அலைபேசி ஒலிக்கிறது".
"கதிரவன் .."தனது அலைபேசியை கையில் எடுத்து யார் என்று அலைபேசியின் திரையை உற்று நோக்க,
அட... நம்ம "சாம்பசிவம் .."மாமா என்று கூறவே,
சரி..! உடனே எடுத்துப் பேசுங்கள் நிச்சயமாக கோவில் கும்பாபிஷேகம் பற்றி தகவல் தருவதற்காக தான் பேசுகிறார் ,என்று நினைக்கிறேன்னு பிந்து கூறிக் கொண்டிருக்கும் பொழுதே கதிரவன் தனது அலைபேசியை எடுத்தவன்..,
ஹலோ...".சாம்பு மாமா நல்லா இருக்கீங்களா??? என்று கேட்க உடனே அவரும், நன்னா இருக்கேன் டா அம்பி,
நீ நன்னா இருக்கியாடா?? ஆத்துக்காரி நன்னா இருக்காளா ?? பிள்ளைகள் சௌக்கியமா என்று அடுக்கு கேள்வியாய் கேட்க ,
அனைவரும் நல்லா இருக்கிறார்கள் மாமா என்று பதில் கூறவே..
மகிழ்ச்சி டா அம்பி. நம்ப கோயில் வேலைப்பாடுகள் கிட்டத்திட்ட முடிஞ்சிடுச்சு வருகின்ற ஆவணி மாதம் கும்பாபிஷேகம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளோம் நீயும் உன் குடும்பத்தோடு வந்து கும்பாபிஷேகத்தை முன்ன நின்னு செய்து தரனும் டா. என்று கூறுகிறார்.
ஆமாம் மாமா நிச்சயமாக கும்பாபிஷேகத்திற்கு குடும்பத்தோடு வருகிறோம். நாங்கள் ஊரை விட்டு வந்த பிறகு இன்னும் அந்த ஊருக்குள் வரவே இல்லை. கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேல் ஆகிறது.
பிந்துவின்..." தாத்தா, பாட்டி" இன்னும் நலமோடு இருப்பது எங்களை ஆசீர்வதிப்பதற்கு தான் என்று நினைக்கிறேன். வருகின்ற தை மாதம் எனக்கு 60 வயது முடிகிறது எனவே எங்களது "சஷ்டியப்த பூர்த்தி" விழாவினை தாத்தா பாட்டியோடு அவர்களின் ஆசியோடு அந்த ஊரிலே செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
சிறப்பு ,சிறப்பு டா அம்பி ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு டா .உன்னை எல்லாம் சின்ன பிள்ளைகளை பார்த்தது உன் பிள்ளைகளோட பார்க்க போறேன் மனசுக்கு சந்தோசமா இருக்கு. எதிர்பார்த்து இருக்கிறோம் சீக்கிரமா வாங்கபா ஆத்துக்காரியிடமும் சொல்லிடுப்பா நான் போன வைக்கிறேன். என்று பேசி முடித்து சாம்பசிவம் அலைபேசி துண்டித்து விட்டார்.
"பிந்துமா...." நீ, சொன்னது போலவே கும்பாபிஷேகம் ஆவணி மாதம் செய்ய இருக்கிறார்கள். அதற்காகத்தான் நமக்கு இந்த அழைப்பு விடுத்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது," மகன் பாலா"
அருகில் வந்து, அமர்ந்தவன் என்ன அப்பா? ஏதோ, மும்பரமா பேசிகிட்டு இருக்கீங்க ,என்ன விஷயம்? என்று கேட்கவே,
"பாலா .."அது ஒன்னும் இல்லடா நம்ம "காளையார்கோவில்" கிராமத்தில் அம்மன் கோவில் கட்டினோம்ல ,அதுக்கு கும்பாபிஷேகம் தேதி முடிவு செஞ்சுட்டாங்களாம் டா "சாம்பு... மாமா, இப்பதான் போன் செய்தார் .அதற்காக இந்தியா போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நாங்களும் அந்த ஊரை விட்டு வந்த பிறகு இன்னும் அங்கு போகவேயில்லை. கிட்டத்திட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
உன் அம்மாவின் தாத்தா பாட்டியின் ஆசியோடு எங்கள் "சஷ்டியப்த பூர்த்தி மற்றும் நம் ,"மது", குட்டியின் திருமணமும் அவர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும், என்று எனக்கு ஒரு ஆசை .எனவே, இப்பொழுது நாம் எல்லாம் கிளம்பி ஆறு மாத காலம் அங்கு தங்கி இருந்து திருமணம் முடித்து இங்கு வரலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் எல்லாம் என்ன சொல்கிறீர்கள் என்று கதிரவன் அனைவரின் கருத்தையும் கேட்கிறான்.
நல்ல விஷயம் தானே அப்பா நாங்களும் இது, போன்ற கிராமங்களை பார்த்தது கிடையாது. உங்கள் உறவு முறைகள் யாரையும் பார்த்தது கிடையாது. இது ஒரு நல்ல வாய்ப்பு நீங்கள் சொல்வது போல் அங்கு சென்று தங்கி இருந்து திருமணம் முடித்து அவர்களின் ஆசியோடு நாம் இங்கு வருவது நல்லது தான்னு என் மனம் சொல்கிறது. என்று மகன் பாலாவும் கூறவே,
"பிந்துமா.." நீ ஏன் அமைதியா இருக்க? எதுவுமே பேசாமல் நாங்கள் எடுத்த முடிவு உனக்கு பிடிக்கவில்லையா ?என்று கதிரவன் கேட்டிட,
அதற்கு," பிந்து.." இல்லைங்க நாங்கள் சென்னை வந்த பிறகு," தாத்தா பாட்டியிடம் "பேசவே இல்லை. சித்தப்பா சித்தி இறந்ததற்கும் போகவில்லை. தம்பி சுப்புரத்தினம் என்னிடம் பேச முயற்சி செய்த போதும் நான் பேசவில்லை. நீங்கள் மட்டும் தான் தொடர்பில் இருக்கீங்க அதான் இப்போது, நாம் அங்கு போனால் என்னிடம் முகம் கொடுத்து பேசுவார்களா ?? என்று ஐயமாக இருக்கிறது. ஆனாலும் தாத்தா பாட்டி தம்பி சுப்பு, அவன்" மகன் மருதுதுறை*. ஊர் மக்கள் எனது தோழிகள் எல்லாரையும் பார்க்க ஆசையாக தான் இருக்கிறது இருந்தும் தயக்கமாக இருக்கிறது என்று கூறவே,
அதைக்கேட்ட ,"கதிரவன் .."உன் மனம் எனக்கு புரிகிறதுமா. நீ நினைப்பது போல் கிடையாது உன் வரவை அங்கு எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இந்தியா புறப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம் .
இன்னும் பத்து நாட்களில் நாம் இந்தியா புறப்பட வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறகிறான்.
உடனே," மகன் பாலா "அப்பா நீங்கள் இப்போது கிளம்புங்கள் .எனக்கு கம்பெனியில் ஆன்கோயிங் ப்ராஜெக்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை மட்டும் முடித்துவிட்டு நான் அடுத்த மாதம் புறப்படுகிறேன் என்று கூற.
சரிடா .. !உன் வேலைகளை முடித்துவிட்டு, நீ கிளம்பு நாங்கள் இப்போது கிளம்புகிறோம், என்று கூறியபடியே, கதிர்" மதுவின் பக்கம் திரும்பி" மது..! நீ ,எப்ப டா கிளம்புற?? என் கூட வரியா ?அடுத்த மாதம் அண்ணா கூட வரியா ?என்று கேட்க..
நோ..! அப்பா, இப்போது நான் உங்கள் கூடவே வந்து விடுகிறேன். இந்த ராட்ஷசி அண்ணியிடம் என்னால இருக்க முடியாது. என்று விளையாட்டாக கூறிக்கொண்டே அண்ணியின் புறம் திரும்பிப் பார்க்கிறாள்.
காயத்ரி ..! அருகில் வந்து "மது.." வின் காதைத் திருகி உனக்கு கொழுப்பு நான் ராட்ஷசியா?? என்று கேட்க
மதுவும் ..! சிரித்து கொண்டே நீங்க என் செல்ல அண்ணி என்று அவள் கன்னத்தைக் கிள்ளி நான் அப்பா, அம்மா கூடவே போகிறேன். நீங்கள் அண்ணா கூட ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு அடுத்த மாதம் வாங்க அண்ணி "சிவ பூஜையில் கரடி ,எதற்கு?? நான் போறேன்பா ...,என்ற கேலி பேச்சு பேசுகிறாள்.
ஏய்...! மது, என்ன பேச்சு பேசுற? என்று பாலா கேட்க .
அடேய்..! தடியா, உன்ன பத்தி எனக்கு தெரியாது?? நீ, என்ஜாய் பண்ணுடா. ப்ராஜெக்ட் வொர்க் சக்சஸ் என்று சிரித்துக் கொண்டே கூற ,அதைக் கேட்ட பாலா மதுவை அடிப்பதற்கு வேகமாக வர அம்மா அவளைப் பிடிங்க ,
உன்னை என்ன பண்றேன் பாருடி, என்று கூறிக்கொண்டே மதுவை துரத்த இருவரும் ஓடிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக "நித்தியாவின்" வருகையை பார்த்த இருவரும் ஓட்டத்தை நிறுத்தி விட்டனர்.
*****தொடரும்****
நித்யா யார் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்....!!
தங்கள் கருத்துக்களை கருத்து பெட்டியில் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 😍
 

வித்யா வெங்கடேஷ்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 8, 2022
Messages
239
அன்பும், புரிதலும் நிறைந்த கலகலப்பான குடும்பம்;
காதலும், கரிசனமும் குறையாத இனிமையான இல்லறம்;
சீண்டலுக்கும், சிரிப்புக்கும் பஞ்சமே இல்லை இங்கே - இனி
நித்யாவின் வருகையில் நிம்மதி நீடிக்குமோ; நிலைகுலையுமோ?

Paragraphs & Dialogues நடுவில் Space விட்டு பதிவிட்டால், படிப்பதற்கு வசதியாக இருக்கும் ஆத்தரே.
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
Nice start.... கதையை கொஞ்சம் gap விட்டு போடுங்க... இடைவெளி இல்லாம இருக்கு paragraphs இடையில்
 

kkp44

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
8
அன்பும், புரிதலும் நிறைந்த கலகலப்பான குடும்பம்;
காதலும், கரிசனமும் குறையாத இனிமையான இல்லறம்;
சீண்டலுக்கும், சிரிப்புக்கும் பஞ்சமே இல்லை இங்கே - இனி
நித்யாவின் வருகையில் நிம்மதி நீடிக்குமோ; நிலைகுலையுமோ?

Paragraphs & Dialogues நடுவில் Space விட்டு பதிவிட்டால், படிப்பதற்கு வசதியாக இருக்கும் ஆத்தரே.
சரிங்க சகோ நனிநன்றிகள்🙏😍
 

kkp44

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
8
Nice start.... கதையை கொஞ்சம் gap விட்டு போடுங்க... இடைவெளி இல்லாம இருக்கு paragraphs இடையில்
சரிங்க சகோ மாற்றம் செய்கிறேன் நனிநன்றி 🙏😍
 
Top