• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..10

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
அத்தியாயம் ..10


ரிஹானா மனமோ பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லுவதை நினைக்கும் போதே மனதில் சிறு வலி இருந்தாலும் இந்தியா செல்ல வேண்டும் என்று கனவு நினைவாகப் போகிறது என்று மகிழ்ச்சியை உண்டாகியது. அதுவும் கௌசிக்யின் பாட்டி பேசியதில் உள்ள அன்பும் பாசமும் காட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணும் போது அவளுக்குள் பல பட்டாம் பூச்சிகள் பறந்தன.


அதனால் அவளும் மலர்ந்த முகத்துடன் கௌசிக்யிடம் 'சரி', என்று சொல்லிவிட்டாள் ரிஹானா.


அவள் சரி சொன்ன அடுத்த நிமிடமே அலைபேசி வாயிலாகவே எல்லாவற்றையும் பேச ஆரம்பித்து விட்டான் கௌசிக்.


பேசி முடித்ததும் அங்கிருந்து ரிஹானாவை அழைத்துக் கொண்டு வந்தவன் அவள் வீட்டிலே

டிராப் பண்ணிவிட்டு ''சீயூ ரிஹானா நாளை ஆபீஸில் பார்த்து மற்றதை எல்லாம் பேசிக்கொள்ளலாம்'',.. என்று சந்தோஷமான குரலில் இயம்பியவன், ''பை'', சொல்லிக் கிளம்பிவிட்டான் கௌசிக்.


அவனை வீட்டிற்குள் கூட அழைக்கத் தோணவில்லையே என்ற எண்ணம் தோன்றியதும் மனம் குன்றியது.


வீட்டில் அழைத்தால் அங்கே அவளின் அப்பா எவ்விதமாக நடத்துவார் என்று சொல்வதற்கில்லை. அவருக்கு ஆதாயமாக தோன்றினால் மட்டுமே நல்லவிதமாக பேசும் ஆள்…என்று தன் தந்தையின் குணத்தை வெறுத்தவள், கௌசிக் வீட்டினுள் அழைக்காமலே வாசலிலே பை சொல்லி அனுப்பி விட்டு மனதிற்குள் வருத்ததுடன் உள்ளே நுழைந்தாள் ரிஹானா…


எப்பவும் போல வீடு வெறுமையாகக் காட்சியளிக்க அங்கே தன் அப்பாவின் அறையினுள் அருவருக்கத்தக்கக் குரல்களின் ஒலியில் வேகமாக மாடி ஏறி தன் அறைக்குள் அடைந்துக் கொண்டவளுக்கு மனம் வெறுத்துப் போய் விரைவில் இங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது ரிஹானாவிற்கு.


கௌசிக் இந்தியாவிற்கு வரச் சொன்னப் போது கூட இரண்டு மனமாக இருந்தவள், வீட்டில் தன் அப்பாவின் செயலைப் கண்டதுமே விசா கிடைத்தால் நாளையே கிளம்பி விடலாம் என்று எண்ணம் உதிக்க, ஆனாலும் அது தற்காலிமானது தானே என்றும் தோன்றி உள்ளத்தை வருந்தவும் செய்யவும் இரண்டு கெட்டான மனநிலையில் சோர்ந்து படுக்கையில் படுத்துவிட்டாள் ரிஹானா.


அவள் நினைத்தைப் போலவே

மளமளவென்று அவ்வளவு எளிதாக எப்படி வேலை முடிந்தது என்று அறியாமல் கௌசிக்யின் அருகில் பிளேட்டில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் ரிஹானாவிற்கு ஆச்சரிமே மேலோங்கியது.


இமை மூடித் திறந்திட வினாடியில் ''எல்லா பார்மாலீட்டீஸ் முடிந்தது'', என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு இந்தியா கிளம்பி விட்டான் கௌசிக்.


நியூயார்க் ஏர்ப்போர்ட்டில் கிளம்பும் போது ஷான்வியோ , ''ஹேப்பி ஜர்னி பேபி டால்.. உன்னை நான் இந்தியாவிலே வந்துப் பார்க்கப் போகிறேன்'' என்று சொல்லுகிறவளை ஆச்சரியத்துடன் பார்த்தவளை நோக்கிக் கண்சிமிட்டி சிரித்த ஷான்வி பேச்சை மாற்றி வேறு கதைகளைப் பேசிக் கொண்டிருந்தவளைக் கண்டு காண்டானா ரிஹானா அவளை முறைத்தாள் …


ஷான்வியோ எதுக்கடி முறைக்கிற.. நான் இந்தியா வரக்கூடாதா.. எங்க பூர்வீகம் அங்கே தான் தெரியுமோ, என்று சொல்லியவள் வேறு எதுவும் சொல்ல வில்லை ஷான்வி.


பூர்வீகம் அங்கே இருந்தாலும் இத்தனை வருடங்களாகப் போகாதவள் இப்ப வரேன் சொல்வது சந்தேகமாக இருந்தாலும் நானே வேலை முடிந்ததும் திரும்பி இங்கே தானே வரப் போகிறேன்.. என்று எண்ணியவள், அப்ப ஷான்விக்கும் அங்கே கம்பெனி மூலமாக வேலைக்கு அங்கே போகச் சொல்வார்களா இருக்கும் என்று தோன்றியதால் மேலே எதுவும் தூண்டி துருவில்லை ரிஹானா.


அவளை அனுப்ப வந்த ரகுவோ ஏர்ப்போர்ட்டில் வந்தலிருந்து கௌசிக் அருகில் நின்று இருவரும் மும்மரமாகப் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள் , ஷான்வி அருகில் இருந்தால் அவர்களை நெருங்க முடியாமல் இருந்தவளுக்கு, ரகுவும் கௌசிக்கும் ஏதோ தனக்குத் தெரியாமல் ரகசியமாக எதையோ பேசுவதுப் போல தோன்றியதும், ஷான்வியிடம் ''இருடி வரேன்'', என்று சொல்லிவிட்டு அவர்களை நெருங்கினாள் ரிஹானா.


ரிஹானா அருகில் வந்ததுமே சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவளை என்னவென்று நோக்கிய கௌசிக்யை கண்டு கொள்ளாமல் ரகுவிடம் திரும்பி '' எனக்குத் தெரியாமல் இருவரும் என்ன ரகசியம் பேசுரீங்க?'', என்று கேட்டவளை,


'' ஹேய், நாங்க இருவரும் ஒரே ஊர்க்காரங்க, எங்களுக்குள் ஆயிரம் விஷயம் இருக்குமல'', என்று கிண்டலாகப் பேசிய ரகுவை முறைத்தாள் ரிஹானா.


அதைப் பார்த்து கௌசிக் சிரிக்க, ரகுவோ அவளின் முறைப்பிற்கு ''அம்மா பரதேவதை இப்படி முறைச்சா ஏசியின் குளிர் கூட அனல் காற்றாக மாறி வீசுதே'', என்று கலாய்த்தவன்,'' நானும் இன்னும் கொஞ்சம் நாளில் அங்கே வருவேன் அதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம் ரிஹா'',.. என்று ரகு சொல்லவும்


''ஷான் இதே தான் சொல்லறா நீயும் இதே சொல்ற.. எனக்குத் தெரியாமல் எதாவது பிளானிங் போட்டு இருக்கீங்களா'', என்று கேட்ட ரிஹானாவிடம்,


''ஹேய் அதுயெல்லாம் இல்லை, நான் வந்தால் எங்க ஊர்க்கும் உன்னை அழைச்சிட்டுப் போகலாம் உன் லவரைப் போய் பார்க்கலாம்'', என்று சொல்லிச் சிரிக்கிறவனை உற்றுப் பார்த்தவள், ''ம்ம்.. ஏதோ சொல்ற நம்பிட்டேன்'',.. என்று அதன்பின் எதுவும் கேட்டகாமல் ஷான்வியிடம் பேசப் போய்விட்டாள் ரிஹானா.


அப்பாடி என்று பெருமூச்சு விட்டவனைக் கண்டு கௌசிக் சிரிக்க…,


''உங்க இருவருக்கிடையே நான் மாட்டிக் கிட்டு முழிக்கிறேன்.. கதவு ஊடே சிக்கிய எலி மாதிரி'', என்று புலம்பியவனைக் கண்டு சிரித்த கௌசிக்,


''ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தான் காதல் தானே வளருமா'', என்று கேலியாகச் சொன்னக் கௌசிக்யை முறைத்தான் ரகு..


''உங்களுக்கு தகுந்த மாதிரி பழமொழியை மாத்திக்கிட்டிங்களே மன்னரே'', என்று ரகுவும் நக்கலடிக்க,


கௌசிக்கோ ''அமைச்சரே ரகசியம் காப்பதில் வல்லவராக இருப்பதால் தானே உம்மிடம் எல்லாவற்றையும் பகிர்ந்தோம்'', என்று கௌசிக் சொல்வதைக் கேட்ட ரகு…


''ம்ம்..நீங்கள் நினைத்தபடி எல்லாம் நடக்கட்டும் கௌசிக், ரிஹாவிற்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் என்னை விட என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் .. அந்தளவுக்கு அவள் மீது அன்பு அதிகம். இதற்கு ரிஹாவை அவள் பார்த்ததில்லை பேசியதில்லை, ஆனால் இவளுடைய வாழ்க்கை நல்ல அமையனும் தினமும் சாமி கும்பிடுகிறேன் சொல்லுவா'', என்று கொஞ்சம் எமோசனலாகப் பேசியவனை கட்டிப் பிடித்து விட்ட கௌசிக் ''அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் கவலை படாதீங்க.. அவளுக்குப் பிடித்த மாதிரி அவள் வாழ்க்கை மகிழ்ச்சியும் சந்தோஷமும் கும்மாளமுமாக குதூக்கலமாக இருக்க நான் கேரண்டி ரகு.. நீங்கள் எல்லாரும் அவள் மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும்போது அவள் எந்தளவுக்கு அன்புக்காகப் பாசத்திற்குக்காக ஏங்கிருக்கா என்று புரிகிறது'', என்று சொல்லியவன் ''அவள் எனக்காகப் பிரம்மானால் படைக்கப்பட்ட ஏஞ்சல் ,பிறந்த தேசம் வேறாக இருந்தாலும் பார்த்த அடுத்த வினாடியிலிருந்து என்னுள் ஏதோ செய்கிறாள்.. அதனால் தான் அவளை ஏதோ ஏதோ காரணம் சொல்லி அழைத்துப் போய் என் குடும்பத்தில் சேர்த்து விட்டால் மற்றது நான் நினைத்தபடி நடந்து விடும்'',.... என்று சொல்லியவனின் விழிகளில் கசிந்து உருகிய காதலைக் கண்ட ரகுவிற்கு, கௌசிக் மேல் இன்னும் மரியாதையும் அன்பும் அதிகமாயிற்று.


பிளைட் ஏறுவதற்கு அழைப்பு வரவும் ரிஹானா ''பை ஷான், ரகு'', என்று கையாட்டிச் செல்ல கௌசிக் இருவரிடம் லேசான தலையசைப்புடன் சென்றான்.


இப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த நிலையிலும் அதை ஏர்போர்ட்டில் நடந்ததை நினைததுப் பார்த்தவளுக்குத் திரும்பிக் கௌசிக்யைப் பார்த்தாள் ரிஹானா.


தன்னைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் ரிஹானாவை ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன? என்று வினாவை சைகையில் கேட்ட கௌசிக்கின் கூர்மையான விழியின் தீட்சண்யத்தில் மூழ்கியவள் அவனிடம் என்ன கேட்க வந்தோம்? என்பதே மறந்து பேந்த பேந்த விழித்தவளைக் கண்ட கௌசிக் வாய் விட்டுச் சிரித்தான்.


அவனின் நகைப்பொலி அவளை மேலும் அவன் மீது இருந்து பார்வையை விலக்க முடியாமல் தவித்தவளுக்குத் தன்னை அறியாமலே அவளுள் அவன் உள் நுழைந்து அவளின் இதயத்தை ஆட்சி செய்வதை அவள் உணரவில்லை. .. அவனின் பார்வை அவளுள் ஏதோ செய்வதை உணர்ந்தவள் சட்டென்று ஜன்னலோரம் திரும்பி மேகக் கூட்டங்களில் பார்வை பதித்தாள் ரிஹானா.


பஞ்சு பொதிகளாக மேகங்களின் நகர்வு அவளை உள்ளத்தை லேசாக்க மனதின் இறுக்கங்கள் சிறிது சிறிதாகக் குறைந்து பறவையின் மென்மையான சிறகாக மாறி விரித்து பறந்தது இந்தியாவை நோக்கி.. அங்கே அவளுக்குக் கிடைக்கப் போகும் நிகழ்வுகளால் அவளின் வாழ்க்கை வசந்தத்தை அறிவித்துச் செல்லப் போவதை அறியவில்லை ரிஹானா.


அதை அறிந்தவனோ அருகிலே அமர்ந்து அவளின் சிறு அசைவையும் மனதிற்குள் பொக்கிஷமான புதையலாக தனக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான் கௌசிக்.
 
Top