• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..11

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
97
அத்தியாயம் ..11


பிளைட்டில் வரும்போது தனிமையை உணராமல் இருக்கமாறு அவளிடம் பேசிக் கொண்டே வந்த கௌசிக், அவளுக்குத் தேவையானதையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டான்.


கேட்ட உணவை தருவித்துக் கொடுத்து இதமான பேச்சால் அவளின் மனத்தை வருடியபடி இருந்தால் அவனோடு பயணம் அவள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.


இந்தியா போவதாகத் தன் அப்பா ரிச்சார்ட்டிடம் சொல்லிய போதும் ''அது உன்னுடைய வாழ்க்கை, உன் இஷ்டப்படி நடந்து கொள்'' , என்று கண்டு கொள்ளாமல் போய்விட்டார்.


கேரீங்கா இது வரை வாழ்க்கையில் அனுபவித்திடாத ஒன்றை அனுபவிக்க வைத்த கௌசிக்யைப் பார்த்த ரிஹானாவின் மனம் நெகிழ்ந்து போனது.


பிறந்தலிருந்து தனியாகவே எல்லாமே செய்யும் சூழ்நிலையில் வாழ்ந்தவளுக்குத் தனக்காக ஒருவன் எல்லாமே கவனித்துச் செயல்படுவது கண்டவளுக்குக் கண்கள் கரித்தாலும் அவனுடைய இயல்பான பேச்சில் ஒன்றி போனாள் ரிஹானா.


பல மணி நேரப் பயணத்தில் விழித்து இருக்கும்போது பேசுவதும் தூங்கும்போது மெலோடியான பாடலை போட்டு விட அதில் தன்னை மறந்து துயில் கொண்டாள் ரிஹானா.


நல்ல உறங்கி எழுந்தவளை ரெப்பிராஷாகி வரச் சொன்ன கௌசிக், ''பிளைட் இறங்கும் நேரம் வந்துவிட்டது .. நாம் சென்னை ஏர்போர்ட் வந்துவிட்டோம்'' என்று சொல்லியவனின் முகத்தில் களைப்பின் சுவடே தெரியவில்லை.


அதை் கவனித்த ரிஹானாவிற்கு இவன் எப்பவும் இப்படி தான் இருப்பான் போல என்று எண்ணியபடி அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.


பிளைட் விட்டு இறங்கியதும் அவரவர் லக்கேஜ் எடுத்துக் கொண்டு வெளியே வரும்போது அவனின் குடும்பமே அங்கே காத்திருக்க, அதைக் கண்ட ரிஹானாவின் மனமோ மலைத்து போனது.


விடியற்காலையில் வந்து இறங்கியபோதும் கௌசிக் தாத்தா, பாட்டி அம்மா அப்பா தங்கை அவளுடைய கணவன் எல்லாருமே வந்திருக்க இவர்கள் இருவரையும் நோக்கி ஆரவாரத்துடன் அழைத்தனர்.


வேதவல்லியோ வேகமாக ரிஹானாவிடம் வந்தவர் ''ஹேய் ரிஹானா, வெல்கம் டூ இந்தியா'', என்று சொல்லி அவளை அணைத்தவர் தன் பேரனைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.


அதைக் கண்ட கௌசிக் சிரிக்க அவனை நெருங்கிய வைத்தீஸ்வரன் ,தன் பேரனின் கைகளை பிடித்துக் கொண்டு ரிஹானாவை 'வாம்மா', என்பதை போல தலையசைக்க, ராகவன் கோமளவல்லியும் மகனின் பக்கம் நின்று கொண்டு அவளை வரவேற்றனர்.


ரித்தன்யா ''ஹாய் அண்ணா'', என்று அருகில் வந்தவளின் களைத்த முகத்தைப் பார்த்தவன் ''இந்த நேரத்தில் நீயும் ஏன்டா அலையிற .. நான் நேராக வீட்டுக்குத் தானே வரப்போகிறேன்'', என்று சொல்லிய கௌசிக்யை முறைத்த மாதேஷ் ''உன் தங்கச்சி பிடிவாதம் தெரியாதா மச்சி.. ஒற்றை காலில் நிற்கிறாள், என் அண்ணியை நான் பார்க்கணும்னு , அதுவும் அவள் பாட்டியும் பண்ணுகிற அலைப்பறை தாங்க முடியல'', என்று அவனின் செவியின் அருகில் மூக்கால் அழுதபடிக் கூறியவனைக் கண்ட கௌசிக்,


''அச்சோ குடும்பமே அவளை அடுத்த பிளைட்டில் நியூயார்க்கு அனுப்பி விடுவீங்க போல'', என்று முணுமுணுத்தான்.


அவனின் முணுமுணுப்பைக் கண்டு '' கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா மாதிரி இனிதான் உனக்கு வாழ்க்கை அமோகமாக இருக்கப் போகிறது .. அதுவும் என் வீ்ட்டு அம்மா உங்க வீட்டில் இருக்கப் போகிறா.. இனி சும்மா வீடே அதிர போகிறது என்ஜாயி பண்ணுடா மச்சி'', என்று மாதேஷ் சொல்வதைக் கேட்ட ரித்தன்யா ''அப்ப என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீ ஜாலியா சுத்தப் போறீயா'', என்று கணவனை முறைக்க, அதைக் கண்ட கௌசிக் சிரிக்க அங்கே ஒரு நாடகமே அரங்கேறியது.


இதை எல்லாம் அறியாமல் ரிஹானா வேதவல்லியும் கோமளவல்லி பேசுவதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டு நின்றாள்.


''அங்கே பாருண்ணா உன் ரிஹானாவை,இப்பவே பக்தி பரவேசமா மாமியார், மாமியாருடைய மாமியார் பேச்சைக் கேட்டுக் கிட்டு இருக்காங்க.. அப்ப நாத்தானார் நா என்ன தக்காளி தொக்கா இரு வரேன்'', என்று வேதவல்லியிடம் போனாள் ரித்தன்யா.


மாதேஷ் இதைப் பார்த்துச் சிரித்தவன்'' காதலிக்கிற நீ இன்னும் அந்தப் பெண்ணிடம் சொல்லல காதலை…. ஆனா இங்கே குடும்பம் மொத்தமும் கொண்டாடுதே மச்சி'', என்று கௌசிக்யை கலாய்க்க..


அதற்கு மாதேஷ்யை முறைத்தவன், ''எதாவது இந்தக் குட்டிப் பிசாசு உளறி வச்சுச்சு முதலுக்கே மோசமாக போய்ரும் .. முதல இங்கிருந்து எல்லாரும் கிளம்பலாம்'', என்று சொல்லிய கௌசிக் தன் தாத்தாவைப் பார்த்துத் தலையசைக்க அவரும் உடனே ''வேது, மிச்சமெல்லாம் வீட்டுல போய் பேசிக்கோ.. நேரமாச்சு கிளம்பலாம்'', என்று ஒரு வார்த்தை சொன்னதும் மொத்த குடும்பமும் சேர்ந்து ரிஹானாவை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றனர்.


ரிஹானாவைச் சுற்றியே கௌசிக் குடும்பமே நின்று ரொம்ப நாள் பழகியதைப் போல பேசிக் கொண்டே அழைத்துக் காரில் ஏறிய வேதவல்லிக்கும் கோமளவல்லிக்கும் இடையே அமர வைத்துக் கொண்டவர்கள் அவளைப் பேச வைக்க நியூயார்க் பற்றியும் உன் நண்பர்களைப் பற்றியும் சொல்லுமாறு கேட்ட வேதவல்லிக்கு மட திறந்த பாயும் வெள்ள நீராக தன் ஊரின் சிறப்பையும் ஷான்வி ரகு அவர்கள் குடும்பம் என்று பேசிக் கொண்டே வந்தாள் ரிஹானா.


கௌசிக் தன் பாட்டிடம் அவளின் குடும்பத்தைப் பற்றி சொல்லியதால் அவர்கள் அதைக் கேட்கவில்லை .. அவளுக்குப் பிடித்த உணவு வகைகள், வேறு என்ன பிடிக்கும் என்று பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் கௌசிக் குடும்பத்தினர்.


வீட்டு கேட்டிலிருந்து உள்ளே நுழையே அரை கிலோமீட்டர் போய் போர்ட்டிக்கோவில் காரை நிறுத்தினார் டிரைவர்.


காரை விட்டு இறங்கியதும் சுற்றுமுற்றும் பார்த்த ரிஹானாவிற்கு இவ்வளவு பெரிய வீடா என்று கண்கள் விரிய பார்த்தவளுக்கு வீட்டின் முகப்பு அமைப்பும் செடி கொடிகள் ,புல்தரைகளில் ரீலாக்ஸா அமர்ந்து பேசிக் கொள்ள மூங்கில் சோபா சேர்கள், மரங்கள், குரோட்டன்ஸ், முல்லை மல்லிகை ராமவானம், ஜாதி முல்லை ரோஜா செடிகள் என அவள் கண்களுக்கு விருந்தாயின..


அத்தனையும் ரசனையோட வர்ணஜாலங்களை அள்ளித் தெளித்து நோக்கியவளை இரு விழிகளோ அவளை களவாடிக் கொண்டிருப்பதை அறியவில்லை ..


கௌசிக்யின் அருகே நின்ற மாதேஷ் குரலை செருமவும்.. அவனைத் திரும்பி முறைத்தவனை ''ஹலோ மச்சி இன்னும் கிரீன் சிக்னல் வரவதற்கு முன்பே நாங்கள் இருக்கிறோம் என்பதே மறந்திட்டே.. இன்னும் ஓகே ஆனால் நாங்கள் கண்ணுக்குத் தெரியவே மாட்டோம்'', என்று கலாய்த்தவனை,


அவர்கள் அருகில் வந்த ரித்தன்யா ''நீங்க விட்ட ஜொள்ளை விடவா என் அண்ணே விடறான்'', என்று மாதேஷ்யை சொன்னவுடன் அண்ணனும் தங்கையும் ஹைபைவ் கொடுத்துக் கொண்டார்கள்.


மனைவியை முறைத்த மாதேஷ் ''என் இமேஜ் டேமேஜ் பண்ணுவதே கூட வைச்சுகிட்டு சுத்தறேன்'',.. என்று கடுப்பாகிச் சொல்லியவனை மையலோடு பார்த்த மனைவி விழிகளில் மயங்கியவன் ஒற்றை கண்ணைச் சிமிட்டினான் மாதேஷ்.


அதைக் கண்டு முகம் சிவந்தவளைப் பார்த்து சிரித்த கௌசிக் ''இங்கே தனி டிரக் ஓடது இதிலே புருஷனும் பொண்டாட்டியும் என்னைக் கலாய்க்கிறீங்களா'', என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஆரத்தி எடுத்துக் கொண்டு வெளியே வந்த கோமளவல்லி மகனை அழைக்க.. அவர் அருகில் போனவனை கிழக்குப் பார்த்து நிற்க வைத்து ஆலம் சுற்ற முயலும்போது வேதவல்லியோ ''மருமகளே ரிஹானாவும் முதல் முறையாக இந்தியாவிற்கு வந்திருக்கா அவளுக்கும் சேர்த்தே சுற்று'', என்று சொல்லி ரிஹானாவை கௌசிக்யின் அருகில் நிற்க வைத்தார்.


அவரைத் திகைப்பாக நோக்கிய ரிஹானாவைக் கண்டு ''இது வெளிநாடு எல்லாம் போய்யிட்டு வந்தால் மகனை ஆரத்தி எடுத்துத் திருஷ்டி கழித்து வீட்டுக்குள் கூப்பிடுவது, நீயும் இப்ப தானே முதல் முறை வரே அது தான் உனக்கும் சேர்த்து சுற்றச் சொன்னேன்'', என்று விளக்கம் சொல்லவும் எதுவும் பேசாமல் கௌசிக்யின் பக்கத்தில் போய் நின்றாள் ரிஹானா.


அவளுக்கு எல்லாமே புதியதாக இருந்தது .. கௌசிக் தொழில் உயரத்தைத் தெரிந்தாலும், நேரடியாக அவன் வீடு அங்கே இருப்பவர்கள் பேசுவது எல்லாமே அவளுக்கு மலைப்பாகத் தோன்றியதால் ஏதோ புதிய உலகத்தியில் அடியெடுத்து வைத்த மனதோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரிஹானா.


கௌசிக் குடும்பத்தினர் கேட்பதற்குப் பதிலை அளித்தவளுக்குத் தானகவே அவர்களிடம் பேசவே யோசனையோடு இருப்பதைக் கண்ட கௌசிக் அவளின் செவி்யின் அருகே குனிந்தவன், ''ஹேய் ரிஹானா என்னாச்சு..ஒய் சைலன்ட்'', என்று கேட்டவனிடம் பதில் கூறாமல் நிமிர்ந்து அவன் விழிகளோடு விழி கலந்து நிற்க, அவன் விழி மொழிகள் கூறும் செய்தியை அறிந்தும் அறியாத பேதை மனதோடு பார்த்தபடியே நிற்க், இருவருக்கும் ஆலம் சுற்றிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றனர் கௌசிக் குடும்பத்தினர்.


வீட்டினுள் போனதும் ரிஹானா ''உனக்கு இங்கயே தங்க ரூம் அரேன்ஜ் பண்ணியாச்சு.. இங்கே எல்லாரும் இருப்பதால் உனக்கும் பிடிக்கும், இங்கே இருந்தே நாம் ஆபீஸ் போய்க்கலாம்'', என்று சொன்னான் கௌசிக் ..


அவன் சொன்னதைக் கேட்டவள் ''ஆபீஸ் ஹெஸ்ட் ஹவுஸ் இருக்கு சொன்னாங்களே கௌசிக்'', என்று கேள்வியோடு அவனைப் பார்த்தவளுக்கு,


''அங்கே வேலை முடிந்து போனால் உனக்கு போர் அடிக்கும் ரிஹா.. அதை விட இங்கே தங்கினால் உனக்குப் புது அனுபவம் கிடைக்கும் .. பாட்டி தாத்தா, என் தங்கை அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க .. உனக்கு ஒரு சேன்ஜா இருக்குமல'' என்று சொல்லியவன் தன் அம்மா கோமளவல்லியைப் பார்க்க,


அவரோ மகனின் அருகில் வந்தவர், "வா ரிஹானா மேலே மாடியில் உனக்கு அறை ஏற்பாடு பண்ணிருக்கோம் அங்கே போகலாம், இன்று ரெஸ்ட் எடுத்து நாளையிலிருந்து ஆபீஸ் போய்யிக்கலாம், நீ குளிச்சிட்டு ரெடியாகி கீழே வாம்மா சாப்பிட்டு போய் கொஞ்சம் நேரம் தூங்குவீயாம்", என்று சொன்னவர் அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் பார்வையாலே லக்கேஜ் மேலே எடுத்துவர கண்ணயசைத்தவர், வீட்டினுள் இருக்கும் லிப்ட் நோக்கி அழைத்துச் சென்றார்.


எல்லாரிடம் பொதுவாக ஒரு தலையசைப்புடன் கௌசிக்யின் அம்மாவின் பின்னால் போனாள் ரிஹானா.


வேதவல்லி தன் பேரனிடம் ''நீ போய் குளிச்சிட்டு வா, சேர்ந்து சாப்பிடலாம்'', என்று அவனையும் அனுப்பி வைத்தவர், ''ரித்து நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு அதுக்குள்ள இந்த ஜூஸை குடிச்சிட்டு போ மாப்பிள்ளை நீங்களும் தான்'', என்று வேலையாள் எடுத்து வந்ததை கொடுத்து அவர்களையும் அனுப்பினார்.


வைத்தீஸ்வரனும் ராகவனும் அங்கே அமர்ந்து ஆபீஸ் விசயம் பேசிக் கொண்டிருக்க அவர்கள் அருகில் வேதவல்லி போய் அமர்ந்தவர், இன்னும் நாலு நாளில் வரவிருக்கும் ரித்தன்யாவின் வளைகாப்பைப் பற்றி பேசினார்.


மாடிக்கு கோமளவல்லியோடு போன ரிஹானா அவர் காட்டிய அறையின் வசதியைப் பார்த்து வாயை பிளந்தாள்.


அறையில் நுழைந்ததும் முன்னால் நாலு பேர் அமரும் சோபா இருக்கை, அதற்கு அடுத்து டிவி மியூசிக் சிஸ்டம், அடுத்த பெரிய ஸ்கிரீன் போட்டுருக்க பெரிய மரக்கட்டில் மெத்தை ஏசி என்று மிதமான குளிராக இருக்க , ஒரு பக்கம் பால்கனியில் கண்ணாடி ஊஞ்சலும், மாடியில் சுவருக்குப் பதிலாக லேட்டஸ்ட்டாக இருக்கும் கண்ணாடி கிளாஸ் போட்டு இருக்க அதில் படர்ந்து வந்திருக்கும் ராமவானம், ஜாதிமுல்லை கொடியும் நறுமணத்தை கொடுக்க , இன்னொரு பக்கம் டிரஸிங் ரூம் பாத்ரூம் அட்டாச் இருப்பதைக் கண்டு கோமளவல்லியை திரும்பிப் பார்த்தவள், ''ஆன்ட்டி உங்கள் வீடு வெளியேயும், உள்ளேயும் கலையம்சத்துடன் ரசனையோடு ஒவ்வொன்றையும் செதுக்கி அமைச்சிருக்கீங்க… அவ்வளவு அழகாக இருக்கு'', என்று அறை முழுவதும் சுற்றிப் பார்த்தவள் கோமளவல்லியிடம் சொன்னாள் ரிஹானா.


''இப்படி இருக்கணும் என்று சொல்லிச் செய்தது கௌசிக் பாட்டி தான் ,அவர் சொன்னபடி எல்லாம் செய்தார்கள்'', .. என்று தன் மாமியாரை சொல்லியவரை திரும்பிப் பார்த்தவள், ''ஓ சூப்பரா இருக்கு ஆண்ட்டி.. வீடே கலைநயத்துடன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிறீங்க'',.... என்றவளிடம்


''அப்பறமாக வீட்டை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கலாம் ,நீ சீக்கிரம் குளிச்சிட்டு வாம்மா சாப்பிடலாம் , என்று சொல்லியவர், இங்கே நீ உன் வீடு போல நினைச்சு சகஜமாக இருக்கலாம்.. கூச்சப்பட்டு யோசனை பண்ணிக்கிட்டு இருக்க கூடாது…. உனக்கு வேலை முடிந்தாலும் இங்கே தங்க முழு உரிமை இருக்கு'',… என்றவர், அவளின் லக்கேஜை ஒரு பெண் உள்ளே கொண்டு வர அதை அங்கே கப்போர்டில் வைக்கச் சொன்னவர் ''நீ சீக்கிரம் வாடாம்மா'', என்று ரிஹானாவிடம் சொல்லிவிட்டு கீழே போனார் கோமளவல்லி.


தொடரும்
 
Top