• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..13

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
101
அத்தியாயம் .. 13


காரில் கலகலத்தப்படியே ஜவுளிக் கடைக்கு வந்து சேர்ந்தனர் கௌசிக் குடும்பத்தினர்…


அங்கே கடையின் பிரமாண்டத்தைப் பார்த்தபடி இறங்கியவளைக் கண்ட வேதவல்லி ''நாம் எப்பவும் வீட்டுக்கே கொண்டு வரச் சொல்லிவிடுவோம் ரிஹா.. நீ வந்திருப்பதால் கடை எல்லாம் சுற்றிப் பார்ப்பாய் தானே, உனக்கும் இது புதியதாக இருக்குமே தான் எல்லாரும் கடைக்குப் போகலாம் முடிவு பண்ணினோம்'', என்று அவள் அருகே வந்துச் சொல்லியவர், "நாம் எப்பவும் இங்கே தான் ஜவுளி வாங்குவோம் ரொம்ப ராசியான கடை", என்று அவளையும் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனார் வேதவல்லி..


ரிஹானாவோ ''பாட்டி வளையல் வாங்கணும் சொல்லிட்டு இங்கே வந்திருக்கோம்'', என்று கேட்டவளுக்கு ''முதல இங்கே வாங்குவதை முடிச்சிட்டு அங்கே போகலாம்'', என்று ரிஹானாவிற்குப் பதிலளித்தவர், ''ரித்து உனக்கு என்ன பிடிச்சிருக்கோ? அதை எடுத்துக்கோ கண்ணு'', என்று தன் பேத்தியிடம் சொன்னார் வேதவல்லி ..


''பாருடா மச்சி நீயும் நானும் வருவது கண்ணுக்குத் தெரியலே உங்க பாட்டிக்கு.. ம்ஹீம் '',என்று கௌசிக்யிடம் மாதேஷ் சொல்லவும் .. ''அடப்போடா நானும் வந்தலிருந்துப் பார்க்கிறேன் என்னையே தெரியலேயாம்'', .. என்று அவனும் சலித்துக் கொண்டான் கௌசிக்.


இருவரும் பேசியபடியே காரை பார்க்கிங் நிறுத்தி விட்டு வர கடைக்குள் போன வேதவல்லி குடும்பத்தினர்க்கு வரவேற்பைப் பார்த்தவள் திரும்பிக் கௌசிக் தேடினால் ரிஹானா.. அவன் காணாமல் திகைத்தவள், ரித்தன்யாவிடம் கேட்கத் திரும்ப அவளோ ''அவர்கள் பார்க்கிங் காரை நிறுத்திவிட்டு வருவாங்க ரிஹா.. வா நாம் பட்டு சேலை செக்ஷனுக்குப் போகலாம்'', என்று லிப்ட்டில் மேலே ஏறினர்..


கோமளவல்லியோ.. ''ரித்து இந்த ஜூஸை குடிச்சிட்டுப் போய் பாரு .. அங்கே போனால் உனக்கு நேரம் போவதே தெரியாது'' என்று மகளுக்கு வீட்டிலிருந்து கொண்டு வந்த ஜூஸை கொடுத்தவர் ரிஹாவுக்கும் கொடுக்க ''வேண்டாம் ஆண்ட்டி சாப்பிட்டதே வயிறு புல்லா நிறைஞ்சிருக்கு.. வேண்டும் என்றால் அப்பறம் வாங்கிக் குடிக்கிறேன்'', என்று சொல்லி மறுத்தவள் ரித்தன்யா குடிச்சு முடிகிற வரை அவளோட நின்றாள்..


அவள் குடித்து முடித்ததும் சேலை செக்ஷனுக்குப் போனவர்கள் அங்கே முதல அமர்ந்திருந்த வேதவல்லி ''வாடா வந்து பாருமா என்று பேத்தியை அழைக்க அவரின் அருகில் ரித்தன்யா அமரவும் இன்னொரு பக்கம் ரிஹானாவையும் அமர வைத்துக் கொண்டார்..


கடை சேல்ஸ்மேன்னிடம் ''வளைகாப்புக்குச் சேரி வேணும் .. புடவை முழுவதும் கண்ணன் படம் ஜரிகையாக இருக்குமாறு காமிப்பா'', என்று தன் கணீர் குரலில் வேதவல்லி சொல்ல .. சேல்ஸ்மேன் அந்த வகையில் இருக்கும் எல்லா கலரும் கொண்டு வந்து அடுக்கினார்..


தன்னருகில் அமர்ந்திருந்த கோமளவல்லிடம் திரும்பிய ரிஹானா ''ஏன் ஆண்ட்டி பேபிஷவர்க்கு இந்த மாதிரி சேரி தான் எடுப்பாங்களா'', என்று கேட்டாள் ரிஹானா..


''ஆமாம்டா .. முதலில் கல்யாணத்து அன்னிக்குக் கட்டிய மூதர்த்த சேலையிலே வளையல் அடுக்கிவிட்டு அதன் பின் இந்த சேலை உடுத்துவாங்க.. குழந்தை எல்லாரும் கிருஷ்ணன் உள்ள சேரியை தான் தேடி எடுப்பாங்க'', என்று சொல்லவும் அவளும் ''ஓ''.. என்று கேட்டுக் கொண்டாள் ரிஹானா.


சேல்ஸ்மேன் ஒவ்வொரு சேலையா விரித்து விரித்துப் பார்க்கும்போது அதில் எதாவது ஒன்று குறையாகவே சொல்லிக் கொண்டிருந்த ரித்தன்யா பின்னால் நின்ற தன் கணவனை நோக்க அவனோ சட்டென்று அங்கிருந்த ஒரு சேரியை உருவி விரிக்கச் சொன்னான் மாதேஷ்…


அடர் பச்சையில் செடி கொடிகளுக்கிடையே தொட்டிலில் கண்ணன் கால் விரலை எடுத்து வாயில் கடிப்பது போல சேலை முழுவதும் நெய்திருக்க முந்தியில் பெரிதாக கண்ணனும் , அதைச் சுற்றி சிறு சிறு குறும்புகள் செய்த கண்ணன் படமும் நிரம்பிருக்க..

அதைப் பார்த்த ரித்தன்யா ''சூப்பரா இருக்கு'', என்று சொல்லவும் எல்லாரும் ஒரு மனதாக அதை ஓகே என்று சொல்ல… ரிஹானா அந்தச் சேலையை கையால் வருடிப் பார்த்தாள்..


அவளுள் ஒரு ஏக்கம் மனதிற்குள் சூழ்ந்தது… நடக்க முடியாத ஒன்றிற்கு ஆசைப்படுவதைப் போல தோன்றவும் சட்டென முகப் பாவனையை மாற்றிக் கொண்டவள், ''ரித்தன்யாவிற்கு இந்த சேலை அழகாக இருக்கும் பாட்டி''…. மாதேஷ் எப்படி கூப்பிடுவது என்று தெரியாமல் திகைத்து தடுமாறியவள் ''உங்க செல்க்ஷன் சூப்பரா இருக்கு'', என்று சொல்ல..


மாதேஷோ… சிறு சிரிப்புடன் ''என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடு ரிஹானா இல்லை அண்ணா கூப்பிடு'', என்று சொன்னவன்.. ''ரித்தன்யாவை செல்க்ட் பண்ணிருக்கேன் .. இந்தச் சேலை எல்லா ஜூஜூபி மேட்டர்'', என்று சொல்லி ரித்தன்யாவைப் பார்த்துக் கண் சிமிட்டினான்..


அதில் அழகாக வெட்கப்பட்ட ரித்தன்யா .. வேகமாகத் திரும்பி ''ரிஹா உனக்கு ஒன்றை எடுக்கலாம் என் பங்கஷனுக்கு நீயும் சேலை கட்டு'', என்று சொல்லவும்.. ரிஹானா திகைத்தாள்.


''எ..என..எனக்கு சேலை கட்டி பழக்கமில்லை ரித்தன்யா.. வேண்டாம்'', என்று சொல்லியவளுக்கு இவர்களின் அன்பு அவளுக்கு மூச்சு முட்டியது ..



ஆள் ஆளாளுக்கு இத்தனை அன்பை கொட்டுகிறார்களே என்று நினைத்தபடி கௌசிக்யின் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.. அவனோடு பிளேனில் வந்தபோது பேசியது தான் அதன்பின் தனியாகப் பேசவே இல்லை என்பதை விட அவர்களின் குடும்பமே அவளைத் தாங்குவதைக் கண்டு எப்படி ரியாக்ட் பண்ணவது? என்று தெரியாமல் முழித்தாள் ரிஹானா ..


அவனோ பார்வையிலே சேலை எடு என்று சொல்ல, வேதவல்லியோ ''ரிஹா முதல்முறையாக ரித்து பங்கஷனுக்குக் கட்டுலாம்…. உனக்கு என்ன கலர் பிடிக்கும் என்று சொல்லு'' என்று கேட்டவருக்கு..


''பாட்டி எனக்குச் சேலை பற்றி எதுவும் தெரியாது'',… என்று முணுமுணுக்க.. அவரோ ''அப்ப நானே சேலை செல்க்ட் பண்ணுகிறேன்'', என்றவர்… கடையில் இருக்கிற எல்லாவற்றையும் அலசி விட்டார் …


அதில் அடர் பிங்க் கலரில் பச்சை கலர் பார்டர் ஜரிகையில் நிரம்பி இருப்பதை எடுத்தவர் பின்னால் திரும்பித் தன் பேரனைப் பார்க்க அவனோ லேசாகத் தலையசைத்து ஓகே சொன்னான் கௌசிக்..


சிறுவினாடிகளில் நடந்து முடிந்த பார்வை பரிமாற்றங்களைக் கண்டு மாதேஷ் சிரிக்க, ''டேய் கம்மனு இரு'', என்று அவனை அடக்கியவன், அதை ரிஹாவிற்கு கட்டிக் காமிக்கச் சொல்ல ஒரு பொண்ணு வந்து அவளுக்கு அதை உடுத்திக் காமிக்க அதை தன் அலைபேசியில் சேகரித்து வைத்துக் கொண்டான் கௌசிக் ..


ரிஹானாவின் பால் வண்ணத்திற்கு அச்சேலை அவ்வளவு அழகு கொடுக்க கோமளவல்லி அவள் முகத்தை வழித்து திருஷ்டி எடுத்தவர், ''ரொம்ப அழகாக இருக்குமா இங்கே பாரு கண்ணாடியில்'', என்று அவளைக் காமிக்க தன் கண்களாலே நம்ப முடியவில்லை .. அந்தக் கலர் அவ்வளவு பாந்தமாக அமைந்திருக்க தன்னையே பார்க்கும் கௌசிக் பார்வையே நோக்க அவனோ செமையா இருக்கு என்று சைகை செய்தான்..


பாட்டிக்கு கோமளவல்லிக்கு ரித்து மாமியார்க்கு எல்லாருக்கும் எடுத்துவிட்டு ஆண்களுக்குப் பட்டு வேட்டி சட்டை எடுத்து முடிக்க, கௌசிக் அருகில் வந்த ரிஹா ''இந்தச் சேலைக்கு நான் பே பண்ணிறேன் கௌசிக்'', என்று சொல்லவதைக் கேட்டவனுக்கு மனம் சுணுங்கிப் போக.. அவளை முறைத்தான்.


அவனின் முறைப்பில் அவள் மனம் பதறினாலும், இத்தனை வருடங்களாக யாருமே தனக்கனு வாங்கித் தந்துப் பழக்கம் இல்லாதால் இதைச் சொன்னாள் என்பதை உணராமல் கௌசிக், ''இதை உன் சம்பளத்தில் கழித்துக் கொள்கிறேன் ரிஹானா.. இங்கு பெரியவங்க முன்னால் இதைச் சொன்னால் மனம் வருத்தப் படுவாங்க .. அதனால் இதற்கான பணத்தை உன் வேலையில் காமி'',.. என்று முகம் கடுமையாகி இறுக்கமான குரலில் வெடுக்கென சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான் கௌசிக்.


அதைக் கேட்டவளுக்குக் கண்கள் கரித்தாலும் விழிகளை சிமிட்டாமல் விழிநீரை அடக்கியவள் வேதவல்லி அருகே போய் நின்று கொண்டாள் ரிஹானா..


அதன்பின் கௌசிக் எல்லாவற்றிற்கும் பணத்தைச் செலுத்தியவன், எல்லாரையும் நகைக் கடைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கே ரித்தன்யாவிற்கு தாய்வீட்டுச் சீராக ரூபி எம்ரால்ட் கலந்த கல் வளையல் செட் வாங்க, மாதேஷ் தன் மனைவிக்காக வைர வளையல் வாங்கினான்.


ரிஹாவிற்கு எல்லாமே புதியதாகத் தோன்றினாலும் சற்று முன் கௌசிக் கோபக் குரலில் முக வாடி இருந்தவள், அங்கிருந்த மற்ற நகைகளை எல்லாம் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.


அப்போது அவளுக்காக கௌசிக் ஒரு நகைசெட் வாங்கியதை அவள் அறியவில்லை .. அதற்குக் குடும்பமே அவனைக் கிண்டல் பண்ணியதையும் கவனிக்காமல் எழுந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்தபடி இருந்தாள் ரிஹானா.


அங்கே பர்சேஸ் முடிந்ததும் கண்ணாடி வளையல் வாங்கியவர்கள் ரிஹானாவின் சேலைக்கு மேட்சிங்காக வளையல் வாங்கச் சொல்ல அவளும் ஆசையாக வாங்கிக் கொண்டாள்.. அப்பறம் மற்றப் பொருட்களை வாங்கிவிட்டு ரிஹானாவிற்கும் ரித்தன்யாவின் புடவையின் பிளவுஸ்க்கு ஆரி ஒர்க் போட்டுத் தைக்கக் கொடுத்துவிட்டு வந்து சேர்ந்தார்கள் கார்க்கு..


அதற்குள் ரித்தன்யா விட ரிஹானாதான் வாடி வதங்கி விட்டாள் .. இத்தகைய அலைச்சலும், எல்லாரும் கொண்டாட்டமாக ஒவ்வொன்றும் பார்த்து வாங்குவதும் கண்டு மனம் மலைத்துப் போக, அதைவிட கௌசிக் பாராமுகம் அவளைச் சோர்வடையச் செய்தது.


சேலை கடையில் பேசிய பிறகு அவன் அவளைக் கண்டுக் கொள்ளாமல் வருவதைக் கண்டு மனம் வருந்தியவளுக்கு, வயிறும் பசித்தது. அதை வாய் திறந்து கௌசிக்யிடம் பேச முயலும்போதே


ரித்தன்யா ''அண்ணா எதாவது நல்லா ஹோட்டல் கூட்டிட்டு போ'', என்று சொல்ல ''ஒகேடா போகலாம்'', என்று சொல்லி அழைத்துப் போனவன்.. ஹோட்டல் முன் காரை நிறுத்திவிட்டு அங்கே ஏசி அறையில் எல்லாரையும் அமர வைத்தான்..


அப்போது கோமளவல்லி வேதவல்லியும் அருகே உட்கார மாதேஷ் அருகே ரித்தன்யா அமரவும் இவள் கௌசிக் அருகே அமர்ந்தாள்.


அவன் அப்போவும் அவள் பக்கம் திரும்பாமல் ''எல்லாருக்கும் என்ன வேண்டுமானாலும் ஆர்டர் பண்ணுங்க'', என்று பொதுவாக சொல்லிவிட்டு அலைபேசியை நோண்ட ஆரம்பித்து விட்டான்…


''ரிஹா இங்கே காளான் பிரியாணி நல்லா இருக்கும் சாப்பரீயா'', என்று ரித்தன்யா கேட்க, அவளும் ''ஊம்'', தலையாட்ட, வேதவல்லியோ ''ஏன் ரிஹா ஒரு மாதிரி இருக்க .. ரொம்ப டயர்டு ஆயிட்டியா..சாப்பிட்டுட்டு வீட்டில போய் ரெஸ்ட் எடுக்கலாம்.. வந்த அன்னிக்கே உன்னை ரொம்ப அலைய வச்சிட்டமல'', என்று சொல்ல…


''அச்சோ பாட்டி, எனக்கு இது புதுசா நல்ல இருக்க… இப்படி எல்லாரும் குடும்பத்தோடு சுற்றுவது எல்லாம் ஒருத்தர்க்கு ஒருத்தர் வாங்கிய பொருளை பல முறை நல்ல இருக்கா கேட்டுச் செய்வது எல்லாம் ஆச்சரியமாக இருக்கு பாட்டி.. அதுவுமில்லாமல் எனக்காக புது சேலை நீங்கள் எடுத்துக் கொடுத்தது நினைக்கும் போது இத்தனை வருடங்களாக எனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்தா தான் தோன்றியது.. இந்த மாதிரி முதல் முறை பார்த்தலிருந்து குடும்பமே என்னைத் தாங்குவது எனக்கு.. என்…என்ன சொல்லுவது தெரியல.. உங்களுக்குள் நானும் ஒருத்தி தான் என்று நினைச்சா எனக்கு அழுகை தான் வருது:', என்று சிறு தடுமாற்றமும் கரகரத்தக் குரலில் சொல்லியவளை அருகில் அமர்ந்திருந்த கௌசிக் யாருக்கும் தெரியாமல் அவள் கைகளை அழுத்தினான்.


அதில் இவ்வளவு நேரம் மனதில் அடைத்து வைத்திருந்த ஏதொன்று விடுபட்டு மனம் இதமாக உணர்ந்தது.


''ஹேய் ரிஹா இதுக்கெல்லாமா இவ்வளவு சோக கீதம் பாடுவ… உனக்காக நாங்க எல்லாரும் இருக்கிறோம் எப்பவும் சரியா'', என்று கோமளவல்லி அவள் தோளை அணைத்துச் சொன்னவர் ''சாப்பிட்டு முடிங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்'' என்றவர், ''ரித்து லேசான உணவா ஆர்டர் பண்ணிக்கோ இல்லனா நெஞ்சை கரிக்கது சொல்லுவ.. வீட்டிற்குப் போனதும் நான் செஞ்சு தரேன்'', என்று சொல்லவும்..


''போம்மா, எனக்குப் பிரியாணி தான் வேணும்'', என்று அடம்பிடித்தாள்..


மாதேஷோ ''விடுங்க அத்த , சாப்பிடட்டும்'', என்று அவளுக்காகப் பேச அதன்பின் எதுவும் யாரும் சொல்ல வில்லை…


எல்லாரும் ஆளுக்கொன்று ஒரு உணவு வகைகளைச் சொல்லி அதை சேர் பண்ணிச் சாப்பிட அந்த நிமிடங்களை மனதிற்குள் பொக்கிஷமாக பதுக்கிக் கொண்டாள் ரிஹானா …


எல்லாரும் சாப்பிட்டு முடித்து விட்டு வீடு வந்து சேரவும் மாலை ஆயிற்று.. அதன்பின் கொஞ்சம் நேரம் படுத்து எழுந்து வருமாறு ரிஹாவிடம் வேதவல்லி சொல்லியவர் பேத்திடமும் அதே சொல்லிவிட்டு தன் கணவனிடம் வாங்கிய பொருட்களை காமிக்கச் சென்றார்..


கோமளவல்லியோ இரவிற்கு உணவினை செய்யும் பெண்மணியிடம் வேண்டியதை சொல்லியவர், இன்னும் போனில் கூப்பிட வேண்டியவர்களை வளைக்காப்புக்கு அழைத்தபடி சோபாவில் அமர்ந்தார் ..


ரிஹானா இதை எல்லாமே கவனித்தவள் மாடிக்குத் தன்னயறைக்குச் செல்ல கூட வந்த கௌசிக் அவளிடம் ''நில் ரிஹா'', என்றவன், ''கடையில் ஏன் அப்படி சொன்னே.. நீ சொன்னது பாட்டிக்கோ அம்மாவுக்கோ தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாங்களா'', என்றவன்… ''இது உன் வீடு இங்கு இருப்பவர்கள் எல்லாரும் உனக்கு சொந்தம் தான் நினைச்சு இரு'',.. என்று சொன்ன குரலில் என்ன இருக்கிறது என்று பிரித்தறியாமல் திகைத்து நின்றாள் ரிஹானா.



தொடரும்
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Nice ma
 
Top