• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..18

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
சூடிக் கொண்ட சுடர்விழியே ..


அத்தியாயம்.. 18


மாலை நேர ரித்தன்யாவோடு தோட்டத்தை சுற்றி நடந்துக் கொண்டிருந்தாள் ரிஹானா..


மதியம் மேல் மருதாணி வைத்தால் அதை இன்னும் கலையாமல் அப்படியே இருக்க, இருவரும் ஏதோ கதையளந்துக் கொண்டே நடந்தனர்..


கோமளவல்லி அடுத்தநாள் சீமந்தத்திற்கு மகளுக்கு வைக்கப் போகும் அலங்கார சீர்தட்டை வரிசைப்படுத்தி கொண்டிருந்தார் ..


''ரிஹா நாளைக்கு என் பங்கஷனுக்கு அணியும் சேலை பிளவுஸ் ரெடியாகி வந்திருச்சு .. என் அறையில் இருக்கிறது'', என்றவள்,.. ''நீயும் நாளை பியூட்டிசனிடம் சொல்லி மேக்கப் போட்டுக்கீரியா'', என்று கேட்டாள் ரித்தன்யா.


''இல்லை ரித்து நானே பண்ணிக்கிறேன்'', என்று சொல்ல,


''ஹேய் உனக்கு லாங் சைனிங் ஹேர், வித்தியாசமான ஹேர் ஸ்டைல் பண்ணச் சொல்லாம்.. கூடவே சேலைக்கு மேட்சிங்கா பூவும் சொல்லிட்டேன்.. பிளீஸ்யா நாளைக்கு அவர்களே உனக்கும் மேக்கப் பண்ணட்டும்.. ஹெவியா பண்ண மாட்டாங்க'', என்று சொல்லி ரிஹாவின் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சினாள் ரித்தன்யா.


அவள் கொஞ்சிப் பேசுவதைக் கண்டு கலகல சிரித்த ரிஹா ''உனக்குத் தான் விசேஷம் எனக்கில்லை'', என்று சொல்ல,


''கூட நீ தான் இருப்ப ரிஹா.. மாதேஷ்க்கு அக்கா தங்கை யாருமில்லை .. அதனாலே அவரின் தங்கையா நீ தான் என் பக்கத்தில் இருக்கணும்.. இது பிள்ளைதாச்சி பொண்ணோட ஆசை .. இதை வேண்டாம் சொன்ன நாளை எனக்குப் பிறக்க போகும் பிள்ளையிடம் சொல்லி உன்னை அடிப்பேனாக்கும்'', என்று சிணுங்கலோடு சொல்லவும்…


''சரி சரி கூடவே இருக்கேன் .. ஆனால் இந்த மேக்கப் தான் வேண்டாமே'', என்று ரிஹா சொல்லவும்..


''ஏய் உனக்கு இதுவரை பட்டுச்சேலை கட்டி அலங்காரம் பண்ணிருக்காங்களா'', என்று கேட்டவளுக்கு…


''ம்ஹீம் இல்லை, எப்பவும் மாடர்ன் டிரஸ் போட்டு இருக்கேன்'', என்று யோசித்துச் சொன்னவளை கண்ட ரித்தன்யா,


''அப்ப நாளைக்கு உனக்கும் மேக்கப் போட்டு நகை அணிவித்து பட்டு சேலை கட்டணும்'', என்று சொன்னவள், அடுத்த நாளுக்குரிய பின்னல் அலங்கார படங்களை போனில் அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தபடி ரிஹாவிடம் காமித்து எது நல்லாருக்கும் என்று இருவரும் செல்கட் பண்ணினார்கள்.


அன்று இரவு அறைக்கு வந்த ரிஹா அடுத்தநாளில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காண ஆவலாக இருந்தாள்.. அதைவிட தன் கரங்களில் வீற்றிருக்கும் மருதாணி காய்ந்து விழுந்ததும் அதன் சிவப்பை காண வேண்டும் என்று நினைத்தபடி படுத்தவளுக்கு மனதில் இருக்கும் குதூக்கலத்தில் உறக்கம் கூட கொள்ள முடியவில்லை .. எப்படா விடியும் என்று நினைத்தவளுக்கு மருதாணி வைத்த போது பார்த்த கௌசிக்யின் பார்வை வேறு இம்சை செய்ய அவளால் உறங்கவே முடியவில்லை ..


புரண்டு புரண்டு படுத்தவளுக்கு நேற்று இரவு கௌசிக் கொடுத்த போனில் இருக்கும் பாடலை எடுத்து போட அதில் இருக்கும் மெலோடியான இசையில் மெய்மறந்து கண் உறங்கினாள் ரிஹானா.


வளைகாப்பு ரித்தன்யா மேக்கப் போட்ட பெண் ரிஹானாவிற்கும் மேக்கப் போட்டு விட்டாள் .. அப்போது அறைக்குள் வந்த வேதவல்லி பேத்திக்கு போட்டு விட்ட நகை மாதிரி ரிஹாவிற்கும் கொம்பு செட் கழுத்து ஆரத்தை போடச் சொல்லிக் கொடுத்தார் மேக்கப் போடும் பெண்மணியிடம்…


அதைப் பார்த்த ரிஹானா ''பாட்டி எனக்கு இதுயெல்லாம் வேண்டாம்'', என்ற மறுப்பை முகத்தில் காட்டி வாயால் மறுத்துக் கொண்டிருந்தாள்…


''இங்கே பாரு ரிஹா , இது என்னுடைய நகை தான் , கௌசிக் தாத்தா முதல் முறையாக வாங்கித் தந்தது… ரித்தன்யா மாதிரி நீயும் என் பேத்தி தான் .. அதனாலே வேண்டாம் என்று சொல்லாதே'', என்றவர்.. தன் கையாலே அவளுக்கு அணிவித்து அவளை எழுப்பி நிற்க வைத்துப் பார்த்தார்.


அவர் அன்பாக அணிவித்து விடுவதை கண்களில் லேசாக நீர் தேங்கினாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் புன்னகை முகத்துடன் நின்றாள்.


வேதவல்லியோ அவளின் சிலை போல அழகும் அலங்காரமும் கண்டு தன் கண்ணை பட்டுவிடும் போல என்று மனதிற்குள் நினைத்தவர், ''ரொம்ப அழகா இருக்கடா'', என்று சொல்லியவர், ''ரித்தன்யாவும் மாதேஷ் கூட போட்டோ எடுக்கப் போயிருக்கா நீயும் ரெடியாகி சீக்கிரம் வாம்மா'', என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே சென்றார் வேதவல்லி.


பாட்டியின் பார்வையும் அன்பும் அவளுள் ஏதோ செய்ய அப்படியே சேரில் அமர்ந்தவளை மேலும் சில டச்சப் செய்த பெண்மணி ''வேலை முடிந்தது மா.. நான் கிளம்பட்டா'', என்று கேட்டவரை ''சாப்பிட்டு போகலாம் இருங்கள்'', என்று அவ்வீட்டின் உரிமைகாரி போல உரிமையாக சொன்னாள் ரிஹானா.


அறையிலிருந்து வெளியே வந்தவள் அங்கே வேலை செய்யும் பெண்ணிடம் இவர்களுக்கு உணவை கொடு பொறுப்பை ஒப்படைத்தவள், மேக்கப் பெண்ணிடம் சிறு தலையசைப்புடன் ரித்தன்யா தேடிப் போக தோட்டத்தில் ரித்தின்யாவையும் மாதேஷ் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்..


அதைப் பார்த்தபடி நின்றிருந்த ரிஹானா ரித்தன்யாவின் முகத்தில் தெரிந்த தேஜ்ஸ் மாதேஷ் முகத்தில் தெரிந்த காதலும் பாசமும் பரிவும் அவளை அரவணைத்துப் பிடித்திருந்த செயலை பார்த்தவளுக்கு அகத்தில் கௌசிக் முகம் நிழலாடியது ..


அவனின் முகத்தில் தெரிந்த காதல் தன்னையும் அந்தச் சூழலுக்கு இழுத்து மூச்சு திணற வைக்கும் அவனின் பேரன்பு தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை தொடரமா.. என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருந்தாலும் இந்நொடி அவன் தன்னருகில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியவுடன் அவளின் பார்வை அவ்விடத்தைச் சுற்றியும் அலசியது…


அப்போது அவளின் தோளை ஒரு கை வந்து தட்ட சட்டென்று திரும்பிப் பார்த்தவள் மூச்சடைத்துப் போய் கற்சிலையாக மாறி நின்றாள் ரிஹானா.


காற்றில் கேசம் கலைந்தாட கண்களில் குறுகுறுப்புடன் அவளை விழுங்கிக் கொண்டிருந்த விழிகளின் சொந்தகாரன் கௌசிக் தன்னவளின் முதல் முறையாக அணிந்திருந்த சேலையும் நகையும் அவள் கூந்தலின் அலங்கார வடிவமைப்பும் பூச்சூடலும் கண்டவனுக்கு அவள் அழகு அவனை ஏதோ செய்ய தன் விழிகளை திருப்ப முடியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்…


தன்னைப் பித்தாக்கிக் கொண்டிருக்கும் அவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் திணறிபடி ''யூ ஆர் பியூட்பூல் பிரின்சிஸ்'', என்று சொல்லியவன் தன் பின் பக்க முடியை கோதியவன் வாயை குவித்து அடைத்திருந்த மூச்சை விட்டவனை கண்ட ரிஹானா அவனின் ஒவ்வொரு செயலும் அவளுள் புதிய உணர்வை தோற்றுவித்தது..


அவன் ரசித்து சொன்னதில் கன்னம் கதகதப்பாக மாறினாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அவனை நிமிர்ந்து பார்த்தவளோ பட்டு வேட்டி சட்டையில் அவனின் தோற்றம் புதுவிதமான அலையை அவளுள் பரப்ப ''உங்களுக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கு'', என்று சொல்லவதைக் கண்டு …


''நிஜமா இந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்கா'', என்றவன், ஆனால் ''எங்கடா கழன்று விழுந்திருமோ பயமே அதிகமா இருக்கு'', என்று கண்ணைச் சிமிட்டி சொல்லியவனின் குறும்பில் கலகலவென்று நகைத்தாள் ரிஹானா.


இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கி படி பேசிக் கொண்டிருக்க, அவர்களின் அருகே வந்த ரித்தன்யா ரிஹானாவை பார்த்தும் ''ஹேய் அழகா இருக்க ரிஹா'', என்று சொல்லியபடியே இருவரையும் பார்த்தவள் அருகில் நின்ற மாதேஷை ஒரு அர்த்தப் பார்வையை பார்க்க அதை கண்டு கொண்டவன், கௌசிக் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்..


அங்கே ரிஹா அறியாமல் மூவரும் கண்களாலே தங்களின் விருப்பங்களை பகிர்ந்து கொண்டவர்களை சாப்பிட அழைக்க வந்த கோமளவல்லி கௌசிக்கும் ரிஹாவும் அருகருகே நிற்கும் போது அவர்களின் ஜோடி பொருத்ததைக் கண்டவர் மகனின் ஆசை நிறைவேற வேண்டும் ஒரு வேண்டுதலை கடவுளிடம் வைத்தவர்'' ரிஹாவிடம் ரொம்ப அழகா இருக்கடா'', என்றவர் ''வாங்க எல்லாரும் சாப்பிட்டு கிளம்பலாம் நேரமாச்சு'', என்று சொல்லியவர் வீட்டினுள் திரும்பினார்.


அவர் பின்னால் போனவர்களோ அங்கே அவர்களின் முன்பே தாத்தா பாட்டி அப்பா எல்லாரும் அமர்ந்திருக்க அவர்களின் அருகே போய் உட்காரவும், கோமளவல்லி மகளுக்குத் தன் கையால் உணவினை தந்தார்..


''மகளுக்கு மட்டும் தான் ஊட்டுவீர்களா'', என்று வம்பிளத்தபடி கௌசிக் வாயை திறக்க, ''அப்ப எனக்கு இல்லையா'', என்று மாதேஷ் சொல்ல அங்கே இருந்தவர்களின் பாசபிணைப்பைக் கண்டவளுக்கு கண்களில் மளுக்கென்று கண்ணீர் தேங்கியது….


அதை ஓரக்கண்ணில் கவனித்த கௌசிக் தன் அம்மாவிடம் ஜாடை காமிக்க, ரிஹானாவின் வாயின் அருகே உணவை கொண்டு செல்ல அதை வாங்கியவளின் விழிகளிலிருந்து கண்ணீர் வடிந்தது.


அதை துடைத்த கோமளவல்லி ''ம்ஹீம்'', என்றவர் அவளுக்கும் உணவை ஊட்டிவிட்டு எல்லாரும் மண்டபத்திற்கு கிளம்பினர்..

அதன்பின் எல்லாரும் உறவினர்களை வரவேற்க என்று ஆளுக்கொரு வேலையில் பிஸியாகிப் போக ரித்தன்யா அருகே இருந்தாள் ரிஹானா.


அப்போது அங்கே வந்த மாதேஷின் அம்மா ரித்தன்யாவை மணையில் அமர வைக்க, வயதில் மூத்தவரான வேதவல்லி நலுங்கு வைத்து வேப்பிலை காப்பு அணிவித்து கண்ணாடி வளையலை அணிவித்தவர், தங்களின் பரிசான நவரத்தின கற்களாலான ஆன்டிக் வளையலையும் போட்டுவிட்டார்.. அதன்பின் எல்லா இலைதழைகளை கலந்த மருந்து தண்ணீரை பேத்திக்குக் கொடுத்து கைகளால் திருஷ்டி கழித்தவர் .. அங்கிருந்த மற்றவர்களையும் சாங்கியம் செய்யும் படி சொல்லியபடி எழுந்து சென்றார்..


அவரின் ஒவ்வொரு செயலையும் புதுவிதமாக இருக்க அதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த ரிஹானாவிற்கு பேபிஷவர் தங்கள் நாட்டில் நடப்பதற்கும் இங்கே நடப்பதற்கு உள்ள வித்தியாசத்தை யோசித்தப்படி நின்றாள் ரிஹானா .


அவருக்கு பின்னால் மாதேஷின் அம்மா தன் சார்ப்பாக வளைலை போட்டவர் மருமகளுக்கு தங்க வளையலை பூட்டினார்..


கோமளவல்லியும் தன் மகளுக்கு வளையல் போட்டுவிட்டவர் மற்றவர்களை அழைக்க அங்கே வந்த உறவினர்களும் நலுங்கு வைத்து வளையலை அணிவித்தனர்,


எல்லாரும் நலுங்கு வைத்தபின் அவர்களுக்கு வெற்றிலை பாக்கு வளையல் கிப்ட் செய்த பாக்ஸை தன் உறவுப் பெண்ணிடம் கொடுக்கச் சொல்லிய மாதேஷின் அம்மா மருமகளின் அருகே அமர மாதேஷை அழைத்தார்


அம்மா அமைக்கவும் தன் மனைவியை பார்த்தபடி மேடை ஏறி வந்தவன் ரித்தன்யாவின் கன்னத்தில் மெதுவாக சந்தனம் இட்டு குங்குமம் வைத்து தன் காதலின் அச்சாரமாக உதித்த மகவுவை சுமந்த மணையாளுக்கு கழுத்தாரமும் வைர வளைலையும் அணிவித்து நெற்றியில் இதழ் பதித்தான் மாதேஷ் .


அதைப் பார்த்த மாதேஷின் உறவினர்கள் அவனை வயது ஒத்த ஆண்கள் ஆரவாரம் செய்ய, கௌசிக்கோ ''மச்சி நடத்து நடத்து'', என்று கிண்டலடிக்க, அவ்விடமே மகிழ்ச்சி கடலில் மூழ்கியது…


ரிஹானாவையும் விடாமல் மாதேஷ் உறவினர்கள் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டவர்கள் கிண்டலும் கேலியுமாக கலகலத்தனர் ..


இப்படியே விசேஷம் முடிந்ததும் வீட்டுக்கு வந்தவர்களை திருஷ்டி கழித்தார் கோமளவல்லி.


ரித்தன்யாவிற்கு சோர்வாக இருக்கவும் தங்கள் அறைக்குச் செல்ல ரிஹானா தன்னறைக்கு வந்தவள் ஆளுயர கண்ணாடி முன் நின்றாள்..


அவளின் ஆடை ஆபரணங்களால் தான் மேலும் அழகுகூட்டுவதைக் கண்டு தன் போனில் செல்பீ எடுத்தவள், ரகுவிற்கும் ஷான்விக்கு அனுப்பி வைத்தவள் , நகையை கழற்றி அதற்குரிய டப்பாவில் வைத்தவிட்டு குளித்து இலகுவான ஆடை அணிந்தவளின் போன் சத்தமிட அதை எடுத்தவள் ''ஹேய் ரிஹா செமயா இருக்க, சோ க்யூட் பேபி டால், சேலையில் ரொம்ப அழகா இருக்க, நான் ஆம்பிளையாக பிறக்காமல் போய்விட்டனே இந்த அழகை ரசிக்க முடியாமல் போயிற்று'', என்று கலாய்த்தவளை ,


''ஹேய் லூசு'', என்று ஷான்வியை சொல்லியவள் சிறிஇங்கே நடந்த நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்தவள் , மேலும் சிறிதுநேரம் ஆபீஸ் பற்றி இருவரும் பேசிக் கொண்டே நேரத்தை ஓட்டியவள், ''நேரமாச்சு டா நாளை பேசறேன்'', என்று போனை வைத்தாள் ஷான்வி ..


படுக்கையில் படுத்தபடி ரிஹானாவோ ஷான்வி பேசியவள் அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மனதில் பொக்கிஷமாக மனதிற்குள் புதைத்துக் கொண்டாள் ..


கௌசிக் பார்வையில் தெரிந்த ஆர்வமும் ஆசையுடன் கேலியும் கிண்டலாக பேசியவன் புதுவிதமான தோற்றமும் அவளுள் சிறு அதிர்வை உண்டாக்கியது.


அதுவும் கௌசிக் அத்தை முறை ஒருவர் ரிஹானாவை பார்த்து ''வெளிநாட்டு புள்ள அழகா இருக்கா ராசா விட்டுராதே.. தூக்கிட்டு வந்திரு… நம்மூர் கோயிலை வச்சு தாலிக் கட்டிரு'', என்று சொல்ல.. அதைக் கேட்ட ரிஹானா அதிர்ந்து கௌசிக்யைப் பார்க்க, அவனோ குறும்புக் கண்ணாக கண்ணைச் சிமிட்டினான்..


எல்லாரும் அவளை வேற்றுயாளாக போல நடத்தாமல் தங்களில் ஒருவராக நடத்தியதும், ஆளுக்கு ஆள் உறவு முறை வைத்து கூப்பிட சொல்லி அலப்பறை பண்ணியதும் அவளுள் ஒரு தாக்கத்தை உருவாக்க … அதுவும் கௌசிக் தங்கைக்கு வளையல் பூட்ட அருகில் ரிஹானாவையும் அழைத்து கூட நிற்க வைத்து அவளையும் போட சொல்ல அதன் உணர்வோ இன்னும் அவளுள் ஒரு பேரலையை உருவாக்கியது…


அன்றைய நாள் அவளை ஒரு புது உலகத்திற்கு அழைத்துச் சென்றது.. அவ்வுகத்தில் அவளும் அவனும் மட்டுமே .. அவனின் விழிகளின் பரிபாஷையின் நேசத்தின் சாரலில் அவளை நனைக்க அதில் சுகமாக நனைந்தவளுக்கு.. உறங்க முடியாமல் தவித்தவள் எழுந்து மாடிக்குச் சென்றாள் ரிஹானா ..


அங்கே அதற்கு முன்பே மாலையில் செவ்வானமாக மாறிருந்த வானை வெறித்தபடி இலகுவான உடையை அணிந்து நின்றிருந்தான் கௌசிக்.

தொடரும்
 
Top