• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே .. 19

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
அத்தியாயம் ..19


இரவின் குளுமை மேனியை சிலிர்க்க வைக்க வானில் மிதக்கும் நட்சத்திரங்களின் ஒளியோ பெண்ணின் சிணுங்கல் போல மின்னி மின்னி ஒளிர.. அதை வெறித்த படி நின்றிருந்த கௌசிக் காலையில் சேலையில் பார்த்த அவளின் அழகின் தாக்கத்தை மனத்தை ஏதோ ஏதோ செய்ய தன் விருப்பத்தை செல்லியும் அவள் தன் கூட்டிலிருந்து வெளியே வராமல் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பினான் கௌசிக்..


பார்த்த சில நாட்களுக்குள் தன் வாழ்வின் இறுதி வரை வரும் சரிபாதியாக நினைத்து கனவுகளிலும் கற்பனைகளில் அவளோடு வாழும் நாட்கள் நடைமுறையில் விரைவில் சாத்தியமாகாதா என்ற அதீத எண்ணம் பேரலையாக சுழன்று அவனை அவள்பால் இழுப்பதை தவிர்க்க இயலாமல் தவித்துக் கொண்டிருநதவனுக்கு அறைக்குச் சென்று உறக்கம் கொள்ள முடியாமல் தனிமையில் நின்று கொண்டிருந்தவனின் அருகே காலடி ஓசை கேட்க சட்டென்று திரும்பிப் பார்த்தவன் தன் மனதிற்கினியாள் அவனை நோக்கி வந்துக் கொண்டிருந்தை பார்த்தவன் ஒரு புன்முறுவலுடன் அவளைத் தலையசைத்து ''இங்கே வா'', என்றான் கௌசிக்.


அவனின் புன்னகை முகத்திலும் விழி வீச்சிலும் ஈர்ப்பு விசையாக தானாகவே அவனை நோக்கிச் சென்றவளை மௌனமாக ஆழ்ந்து பார்த்தான் கௌசிக் ..


அவன் பார்வையின் பொருளை அறிந்தாலும் அதை அவனிடம் சொல்ல ஏதோ ஒன்று தடுக்க தயக்கத்துடன் அவனின் பக்கத்தில் பேசாமடந்தையாக நின்றவள் தன் மருதாணி போட்ட விரல்களை தேய்த்தபடி தன் கன்னங்களில் வைத்தவளின் கரத்தை தன்னை நோக்கி இழுத்தவன் மென்மையாக வருடிபடி சிவந்த அவள் விரல்களின் நளினமும் உள்ளங்கையில் காசு அளவிற்கு வைத்த வட்டமான வடிவமும் இயற்கையின் நறுமணத்தை அள்ளி கொடுக்க, ''நல்லா சிவந்து இருக்குல'', என்று சொன்னவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள் ரிஹானா.


அவனிடம் தெரிந்த அதீத நேசத்தின் சாயலை கண்டவளுக்கு உள்ளமோ படப்படத்தது. இவனின் காதலை உணர்ந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்தவள் கூச்சத்துடன் தன் கைகளை மெதுவாக இழுத்தபடி ''விடுங்க கௌசிக் '', என்று சொல்ல..


அவளின் கரத்தை அழுத்திவிட்டு விட்டவன், அக்கணங்களின் ஏகாந்தத்ததை அனுபவித்தபடி அவளுடன் விலகாமல் நின்றான் கௌசிக் …


இன்றைய நாள் இருவரையும் ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்றால் அதிலிருந்து மீள விரும்பாமல் அதனுள் ஆழ்ந்து போகவே விரும்பினர் இரண்டு உள்ளங்கள்..


காற்றின் ரீங்காரமும் இருளின் ஒளியும் நிசப்தமான அவ்வேளையில் இருவரிடமும் குடிக் கொண்டிருந்த மௌனத்தை யார் உடைப்பது என்பதே இருவருக்குள்ளும் நடக்கும் யுத்தமாக இருக்க … அவள் பேசட்டும் என்று அவன் நினைக்க அவன் பேசட்டும் அவள் நினைக்க … (யாராவது ஒருத்தர் பேச ஆரம்பிங்க என்று நம்முடைய சத்தம் இடியாக குலுங்கியது)…


இருவருமே அமைதியின் பிடியிலிருந்து வெளிவர விரும்பாமல் ஒருவருக்கொருவர் அருகாமையை விரும்பி நின்று கொண்டிருந்தனர்.


சற்று நேரத்தில் ''நா தூங்க போகட்டா'', என்று ரிஹானா கேட்க,


''உனக்குத் தூக்கம் வருதா'', என்று அதே கேள்வியை கேட்டவன், ''உன்னிடம் கொஞ்சம் பேசணும்'', என்றவனை சிறு சிரிப்புடன் ஏறிட்டவள்…


''கொஞ்சம்னா எவ்வளவு?'', கேலியுடன் விழிகளில் புன்னகையில் பளபளக்க கேட்டவளை பார்த்தவனுக்கு மனது ஒருவகையான இதத்தை அளித்தது.


எப்பவும் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் அதில் சில நேரங்களில் யாரும் நெருங்க முடியாத ஒதுக்கம் இருக்கும் .. ஆனால் இன்று அது அவளிடம் இல்லாமல் இருப்பது நினைச்சவன், ''ம்ம் கொஞ்சம்ம்ம்ம்'',.. இழுவையாக. சிறு சிரிப்புடன் சொல்லியவன், ''நம்ம வீட்டில் உள்ளவர்களை உனக்குப் பிடித்து இருக்கா'', என்று கௌசிக் கேட்கவும் …


''ம்ம் ரொம்ப பிடிச்சு இருக்கு.. தாத்தா பாட்டி இந்த வயதிலும் எவ்வளவு அட்டாச்மென்ட் லவ்ஸ் பண்ணிட்டு இருக்காங்க'', என்றவள், ''அதே மாதிரி தான் அங்கிள் ஆண்ட்டியும்,ரித்து மாதேஷ் அண்ணா ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பாக இருக்காங்க.. நீங்கள் கொடுத்து வைத்தவர்'',.. என்று கௌசிக் பார்த்துச் சொல்லியவள் , ''இப்படி எல்லாரும் மற்றவர்கள் மனமறிந்து அன்பாக உறவுகளை அரவணைத்துக் கொள்வதும், தாத்தா பாட்டி சொல்லுக்கு மறு வார்த்தை இல்லாமல் ஆண்ட்டி ஒவ்வொன்றும் கேட்டு நடப்பதும், இன்றைய தலைமுறைக்குத் தகுந்தபடி சின்னவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வதும் யூ ஆர் லக்கி பர்சன்'', என்று சொல்லியவளின் வார்த்தையில் வருத்தமோ தனக்குக் கிடைக்கவில்லையே என்ற பொறாமையோ இல்லை ..


அவளின் பேச்சை கேட்டவன், ''நீயும் லக்கி பர்சன் ஆகலாம்… தாத்தா பாட்டி அம்மா அப்பா இவர்களை பார்க்கும்போது நீயும் இவர்களின் தேன் கூட்டில் ஒருவராக மாறலாமே.. ஏன் மறுக்கிற ரிஹா'',.. என்று கேட்டவனின் குரலில் இருந்த சிறு வலியையும் உணர்ந்தவளுக்கு அவனுக்குரிய பதிலை கூற முடியவில்லை ..


''காலையிலிருந்து வண்ணத்துப் பூச்சியாய் என்னுள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் உன்னை எனக்கானவளாக மாறியதை எப்போ சொல்ல போற.. பிடிச்சிருந்தும் விலகி இருக்கும் கொடுமை எவ்வளவு பெரிது தெரியுமா.. காலையில் சேலையில் பார்த்தலிருந்து நான் நானாகவே இல்லை'', என்று தன் பின்னங்கழுத்தை வருடி விட்டவன் திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவன், ''உனக்கும் பிடித்திருக்கு தெரியும் ஆனால் சொல்ல தயங்கிட்டு இருக்க … என் குடும்பத்தைப் பார்த்துமா உனக்குத் தயக்கம்'', என்று கௌசிக் கேட்கவும்,


அதற்கும் பதில் சொல்ல முடியாமல் அவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு சரியென்று சொல்லிவிடத் தோனியது.. ஆனாலும் அவளுள் ஏதோ ஒரு தடை இருந்துக் கொண்டே இருக்க,


அவனோ ''இப்படி எந்தப் பதிலும் சொல்லாமல் இருந்தால் நாட்கள் ஓடிவிடும் ரிஹா .. வாழ்க்கை சேர்ந்து வாழ்ந்துப் பார்த்தால் தான் தெரியும் .. அதைவிட்டு பயந்து ஒளிந்தால் அது நம்மை இருளுக்குள் இழுத்து கண்ணிருந்தும் குருடனாக தான் வாழ முடியும் …


உனக்குள் இருக்கும் பயமே உன்னை விழுங்கி விடும்'',.. என்று சொல்லியவன், ''நான் எதுக்கும் இப்படிக் காத்திருந்தில்லை.. எனக்கு வேண்டியதை நினைச்சதை உடனே நடத்தித் தான் பழக்கம் .. ஆனால் உன்னைப் பிடித்திருந்தும் உன்னிடம் அதைச் சொல்லியும் அதற்கான பதிலுக்காக காத்திருக்கும் நாட்கள் நரகமா இருக்கு'',.. என்று சொல்லிய கௌசிக் , ''ஆனால் உன்னை அவ்வளவு சுலபமாக விட்டுவிடுவேன் நினைச்சிடாதே.. எப்போ முதல் முதலாக பார்த்தேனோ அப்பவே நீ எனக்கானவள் முடிவு பண்ணிட்டேன்'', என்றவன் , அவளை இன்னும் அருகே இழுத்து அவள் விழிகளோடு விழியை கலந்தவன் ''யூ ஆர் மைன், இனி உன்னை விடுவாதில்லை.. சீக்கிரம் நம்முடைய திருமணம் நடக்கும்.. அதன்பின் உன் வாழக்கை பற்றிய பயம் தயக்கம், எல்லாம் என்னுடன் வாழ்ந்து பார்த்தால் ஓடிவிடும் …


அப்படி இருந்தும் உனக்கு என் மேலே நம்பிக்கை வரவில்லை என்றால் ஒரு அக்ரிமென்ட் போட்டுக் கொள்ளலாமா'', என்று கேட்டவனை அதிர்ந்து பார்த்தவளை, ''ஆமாம் என் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால் நீ என்னை விட்டு எபபோது வேண்டுமானாலும் விலகிக் கொள்ளலாம் .. உனக்குப் பிடித்த மாதிரி வேறு வாழ்க்கையும் அமைத்துக் கொள்ளலாம் '', என்று சொல்ல,


அவளோ அவனின் கரங்களை விட்டு விலகியவள், கண்களில் சினமேறி முறைத்து விட்டு, ''லூசா டா நீ'', என்று மரியாதை பன்மை காற்றில் பறக்க அவனைக் கேட்டாள் ரிஹானா.


அவளின் பேச்சில் ''ஙே'', என விழித்தவனை உறுத்துப் பார்த்துக் ''எனக்குக் கல்யாணம் பற்றி பயம் ஏன் தெரியுமா?.. என் அப்பாவின் வாழ்க்கை அவர் இஷ்டப்படி தான்தோன்றி தனமாக. வாழ்ந்து என் அம்மாவின் வாழ்க்கை வீணாக்கினார், அதனாலே என் அம்மா கவலைப்பட்டு இறந்தாக என் பாட்டி சொல்லிக்கிட்டு இருப்பாங்க, அதன்பின் என் அப்பா அவர் நினைச்சபடி யாரோட கூட வாழலாம் என்று பலபேரோடு வாழ்ந்தும் இரண்டாம் தாரமாக ஒரு பெண்ணைக் கட்டியும், அவங்களோடவும் அவர் வாழ்க்கை நிலைக்கல … அவர் வாழ்க்கை முழுவதும் ஜஸ்ட் லைக்ஸ் தட் மாதிரி ஈஸியா கை கழுவிச் சென்று கொண்டே போனாதால் பெரிதாக கல்யாண வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் போனது'', என்றவள், ''ஒரு பெண் குழந்தைக்கு முதலில் அறிமுகமாகும் ஆண் அவளின் அப்பா தான்.. அவரின் மேலே வைக்கும் அன்பு பாசம் நம்பிக்கை எல்லாமே அடுத்த வரும் கணவன் மேல் வரும்.. ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி என் அப்பா எனக்கு காமித்துவிட்டார்.. அதனாலே எனக்கு அவ்வளவு எளிதாக வாழ்வில் யாரையும் நம்ப முடியாமல் போனது'',.. என்று சொல்லியவளின் வார்த்தைகளிடமிருந்த வலியை உணர்ந்தவன் எதுவும் பேசாமல் வானத்தை வெறித்து நோக்கினான்..


அவளின் நம்பிக்கையை சிதைத்த அவளின் அப்பா மேல் கடும் சினம் உண்டாகியது .. அவர் செய்த காரியத்தால் மகளின் வாழ்க்கையை கெடுத்தும் இல்லாமல் தன் வாழ்வில் விளையாடிவிட்டார் என்ற எண்ணம் தோன்றினாலும், அதற்காக அவளை இப்படியே விட மாட்டேன், அவளின் நம்பிக்கை நுனி நானாகவே மாற்றி விடுவேன் என்று எண்ணியவன்,அவளைத் திரும்பிப் பார்த்தான் கௌசிக்.


கண்களில் மெல்லிய நீர்படலத்துடன் தொலை தூர வானத்தில் அவளுக்கான விடியல் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தவளின் மனநிலை புரிந்தே இருந்தது கௌசிக்கு.


அவளை இப்படியே விட்டால் யோசித்தே காலம் தள்ளி விடுவாள்,நாம் தான் அதியடியாக முடிவு எடுக்க வேண்டும் நினைத்தவன், ஹேய் ரிஹா நாம் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம், என்றவன், அவளின் திகைத்த முகத்தைப் பார்த்துச் சிரித்தபடி ''ஆமாம், கல்யாணம் தான் இதற்கான வழி .. என்னுடன் வாழாமலே நம்பிக்கை எப்படி வரும்.. வாழ்ந்து தான் பார்ப்போமே .. அதன்பின் பிரிவு என்று எப்போதும் நம்மிடையே வராது என்ற எண்ணம் உனக்குத் தோன்றி விடும்.. சும்மா அப்பா வாழ்க்கை இப்படி ஆனதால் நான் இப்படி இருக்கேன் சொல்லாமல் நாம் உடனே கல்யாணம் என்ற கடலுக்குள் விழுவோம் அங்கே மென்மையான அலைகளும் இருக்கும் சீற்றமான அலைகளும் உண்டு ஆனாலும் அலைகள் என்றும் கடலைவிட்டு ஒதுங்காது என்றவனின் கூற்றில் இருக்கும் மெய்யை உணர்ந்தாலும் அவனை வார்த்தையால் காயப்படுத்தி விடுவோமா என்ற பயமே அதிகமாக இருந்தது ரிஹானாவுக்கு..


அதுவுமில்லாமல் அவனின் பெரும் பணபுலம் நிறைந்தவன் தன் மேலே வைத்திருக்கும் அதீதக் காதலை நினைச்சு மனம் துள்ளிக் குதித்தாலும் இது சரி வருமா என்ற மலைப்பில் அவள் மனம் மருகினாள் ரிஹானா.


அவளின் மௌனமும் உள்ளத்தில் மருகிக் கொண்டு மனதிற்கு பிடிச்சதை கூட செய்ய தயங்கும் ரிஹானாவை இப்படியே விட்டால் தனக்குள்ளே வெந்து நொந்து நொறுங்கிப் போய் விடுவாள் என்று எண்ணியவன் உடனே கல்யாணத்துக்கு நாளை பார்க்கச் சொல்ல வேண்டும் தோன்றிய உடனே அதைச் செயல்படுத்தினான் கௌசிக்.


அவனின் வேகத்தை கண்டு புரிந்து புரியாமல் மலைத்து திகைத்து நின்றவளுக்கு இனி அதைத் தடுக்க முடியாது என்று எண்ணினாலும் அதை வேண்டாம் சொல்ல மனம் வரவில்லை .. தன் வாழ்க்கையை அவன் கைப்பிடித்து சென்றால் முள்ளோ பூவிரிப்போ எதுவாகிலும் அவன் துணை இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது ரிஹானாவுக்கு.

தொடரும்
 
Top