அத்தியாயம்..2
கௌசிக் பேசுவதைக் கவனித்தபடி இருந்தவளுக்கு அருகிருந்த ஷான்வி ரிஹானாவின் கரங்களை சுரண்ட,அதில் திடுக்கிட்டு ஷான்வியை திரும்பிப் பார்த்த ரிஹானாவிடம்…
மெல்லிதான குரலில் ஷானவியோ ''ரிஹா, கௌசிக் ஹேண்ட்சமா இருக்காரு பாரேன்.. இந்திய பையன்களே அழகு தான் அதுவும் தமிழ்நாட்டு பையன்கள் பேரழகு தான் போல.. அவருடைய பேச்சும் ஸ்டைலும் அந்த லூக்கும் சும்மா ஆளை அள்ளது'', என்று சொல்லியவளை முறைத்தவள்,
''ஷட் அப் ஷான்,.. அவர் எவ்வளவு முக்கியமான வேலையைப் பற்றி சொல்கிறார், நீ அவரை ரசிக்கிற, அதில் என்னையும் கூட்டுச் சேர்க்கிற'', என்று சொல்லியவளை,
''நீ ஓல்டு வுமென் மாதிரி பேசாதே.. அழகை எங்கிருந்தாலும் ரசிக்கணும்'', என்று சொல்லுபவளைக் கையிலிருந்த பென் கொண்டு அவளின் கைகளைத் தட்டியவள், ''மூச்.. மீட்டிங் முடிகிற வரை வாய் திறந்த குத்திருவேன்'', என்று சொல்லும் ரிஹானாவை எந்தக் கிரகத்திலிருந்து இங்கே இறங்கி வந்தாலோ என்ற பார்வையில் மேலும் கீழும் பார்த்த ஷான்வியைக் கண்டு, '' நான் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்துருக்கேன்.. இப்ப வேலையை பாரு'', என்று ரிஹானா சொல்ல, அதில் ஷான்வியின் முகமோ அஸ்டகோணலாக மாறியது..
அதைப் பார்த்ததும் சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டவள் கௌசிக் இருந்தப் பக்கம் திரும்ப அவனோ இவர்கள் இரண்டு பேரையும் ஆராய்ச்சியான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தான் .
அதைக் கண்டு மனதினுள் ஜெர்க் ஆன ரிஹானா ''சாரி சார்'', என்று சொல்ல,
அவனோ'' இட்ஸ் ஒகே''.. என்றவன், மேற்கொண்டு அங்கிருந்தவர்களோடு கலந்துரையாடினான் கௌசிக் வைத்தீஸ்வரன்.
ரிஹானாவோட பேசும் போது அவள் சொன்ன சின்ன குறிப்புகளையும், அதில் சின்ன மாற்றங்களை அவனும் சொல்ல அதைக் குறித்துக் கொண்டவள், அவளின் அறிவு கூர்மையை மெச்சும் பார்வையோடு அவனைப் பார்க்க,
அவளைச் சில நிமிடங்கள் அவளின் காந்த விழிகளை உற்று நோக்கி விட்டு மற்றவர்களிடம் ஒரு தலையசைப்புடன் ''ஹெவ் எ நைஸ் டே '', என்று சொல்லி கையசைத்து ஹெட் ஹார்ன்லாட் உடன் பேசியபடி அந்த ஹாலிருந்து வெளியேறினான் கௌசிக் வைத்தீஸ்வரன்.
அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த ரிஹானாவின் தோளைத் தட்டிய ஷான்வி ''அடி நல்லவளே, நான் பார்க்கும் போது முறைச்சு பையிங்,... இப்ப நீயென்ன முறைப் பையனைப் பார்ப்பதைப் போல பார்க்கிற'', என்று சொல்லியவளிடம் மறைந்திருந்த நக்கலைக் கண்ட ரிஹா..
''ஏய் லூசு , அவர் பேசியதில் அத்தனை கலை நுட்பங்களும் கொண்ட தமிழ்நாட்டிலே இருப்பதைக் கண்டு அதை அவர் விரல் நுனியில் வைத்து பேசுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கு'' , என்று சொல்லிய ரிஹானாவை,
''ஆமாம் ஆமாம் வானத்தில் வெள்ளை காக்கா பறக்கதாமா அதைப் பார்த்தாளாம். ம்ஹூம், நம்பிட்டேன்'', என்று சொன்ன ஷான்விக்குப் பூர்வீகம் தமிழ்நாடு தான் .. அவளுடைய அப்பா நியூயார்க் நகரத்தில் வேலைக்கு வந்ததும் அவரின் குடும்பமும் இங்கே குடிப் பெயர்ந்தது.
அதனால் அவள் வீட்டில் பாட்டி தாத்தா அம்மா அரவணைப்போட அவள் வளர்ந்தவள், பாட்டி தாத்தாவிடம் அடிக்கடி சொல்லாடல்களைச் சொல்லுவதால் அதை ரிஹானாவிடம் சொல்லிச் சிரிப்பாள் ஷான்வி..
ஷான்விக்கு தமிழ் சரளமாகப் பேசுவதால் ரிஹானாவிற்கு இன்னும் அழகாகத் தமிழை உச்சரித்துப் பேச முடிந்தது.
ஷான்வியை முறைத்துக் கொண்டே தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எடுத்துக் கொண்டவள், ''நா போறேன்'', என்று சொல்லிக் கிளம்ப,
ஷான்வியோ ''ஏய் டெடிபேர் இதுக்கு போய் கோபம் படலாமா'',.. என்று கேட்டபடி அவள் பின்னே ஓடினாள்.
பெண்கள் தங்கள் கேபினுக்குள் நுழைந்ததும் அவரவர் வேலையில் மூழ்கினர்.. கௌசிக் சொன்ன சின்ன சின்ன விசயங்களையும் குறித்து வைத்தவள் அதற்கான வடிவமைப்பை லேப்டாப்பில் ஏற்றி முடித்தவளுக்கு மீண்டும் மீண்டும் அதை உன்னிப்பாகக் கவனத்தைச் செலுத்தி நேர்த்தியாகக் கச்சிதமாக அவ்வேலையை முடித்தவளுக்கு உள்ளம் திருப்தியடைந்தது.
வேலை முடிந்ததும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷான்வியை திரும்பிப் பார்த்தாள் ரிஹானா
அப்போது அவளும் மும்மரமாக லாப்டாப்பில் டைப் பண்ணுவதைக் கண்டு எட்டிப் பார்க்க, அங்கே அவளின் பாய்பிரண்ட் கூட சாட்டிங் பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள்,
''ஏய் ஷான், என்னடி பண்ணற, வேலை செய்யற நேரத்தில் உன் பாய்பிரண்ட் கூட கடலை போடற'', என்று அவளின் தோளில் தட்டிய ரிஹானாவை திரும்பிப் பார்த்தாள் ஷான்வி.,
தோளைத் தட்டிய ரிஹானாவை ஒரு ஜந்துவை போல பார்த்து ''ஏய் டெடி நீயும் மிங்கிள் ஆகமாட்டே , மிங்கிள் ஆனவளையும் பீரியா பேச விட மாட்டேங்கிறயே.. நீயெல்லாம் சாமியாராகப் போய்ரு'', என்று சொல்லியவளோ.. ''அச்சோ அது தப்பு, சாமியாராக போன அங்கே குத்தாட்டம் தான் நடக்கும்.. அங்கே வேண்டாம்'', என்று கலகலத்தவள், ''நீயும் ஒருநாள் இப்படி உன் பாய்பிரண்ட் கூட உன்னையும் மறந்து சுற்றியிருக்கும் எங்களையும் மறந்து அவரோட உறைந்து உருகிப் போய் நிற்க தான் போற .. அதை நான் பார்க்கத் தான் போறேன்.. இது தான் என்னுடைய சாசனம்.. இது தான் நடக்க வேண்டும் என்பதே என் கட்டளை'', என்று ஷான்வி நக்கலுடன் சொல்லவும்..
அதைக் கேட்ட ரிஹானாவோ கலகலவென்று சிரிக்க, அவளோடு அவளின் விழிகளும் சேர்ந்து சிரிக்க கன்னங்களோ குழைந்து குழி விழும் அழகை ரசித்த ஷான்,
''இந்தக் பன்னுக் கன்னத்தில் விழும் குழியில் யார் வந்து குப்பிற விழப் போகிறார்களோ தெரியலயே'', என்று நினைத்த ஷான்வியை பார்த்துக் கலாய்க்கும் குரலில், ''மைன்ட் வாய்ஸ் நினைச்சு வெளியே சொல்லிட்டியே ஷான்'', என்று ரிஹானா சொல்லவும் ஷான்வி அசடு வழிந்தாள்..
''சரி வாடி கீழே காப்பி கேப் போகலாம் .. பசிக்கது'', என்று சொல்லிய ஷான்வியை அழைத்துக் கொண்டு போன ரிஹானா ஆளுக்கொரு ஹாட் சாக்லெட் காப்பியை அருந்தியபடி ரீலாக்ஸாகப் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
ஷான்வியோ தன் தாத்தா பாட்டியின் கதைகளைச் சொல்ல அதைக் கேட்டுக் கலகலவென்று சிரித்தாள் ரிஹானா.
ஹெட் ஹார்ன்லாட், கௌசிக் வைத்திஸ்வரனை தன்னறைக்கு அழைத்து வந்தவர், கம்பெனியின் சீக்ரெட்டான விசயங்களை டிஸ்கஸ் பண்ணி முடித்ததும், அதற்கான பேப்பர்ஸ் ரெடி பண்ண அன்று முழுவதும் கௌசிக்கு வேலை நெட்டி முறித்தது.
அப்படியே சீட்டில் சாய்ந்தவன் காலையில் பார்த்த பெண்ணைப் பற்றிய சிந்தனை அவனுள் ஓடியது.. அதை நினைத்தபடி இருந்தவனின் வயிறோ பசி என்று அலறவதைக் கேட்டு… இங்கே கம்பெனிக்கு வந்தலிருந்து வேலையிலே மூழ்கிதால் பசியே மறந்து போனவனுக்குச் சூடான பானம் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஹார்ன்லாட்டை அழைக்க',
அவரோ ''சாரி சாரி கௌசிக் , நான் தான் உங்களை அழைத்துப் போகணும், பேச்சு சுவாரசியமாகப் போக மறந்துவிட்டேன்'', என்று மன்னிப்பைக் கேட்க…
அவனோ ''ஹேய் சார், இட்ஸ் ஓகே நோ ப்ராப்ளம் … இப்ப வாங்க போகலாமே'', என்று சிரிப்புடன் அழைத்தான் ..
இருவரும் அங்கே காபி கேப்க்கு வந்தவர்கள் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்த கௌசிக் ''என்ன குடிக்கீறிங்க ஹார்ன்லாட்'', என்று கேட்க,
அவரோ ''ஹாட் காப்பி'', என்று சொல்லிவிட்டு அவனைக் கேட்க அவனோ ''இங்கே பில்டர் காபி கிடைக்குமா'', என்று கேட்க ''எஸ்,எஸ் கிடைக்கும்'', என்று சொல்லியவர், அங்கிருந்தவனின் கொண்டு வரச் சொல்ல,
கௌசிக் தன் பார்வையை சுழற்றினான்.. அப்போது அவனின் பார்வையில் சிக்கிய பெண்ணயவளின் சிரிப்பு மனதிற்குள் மத்தளம் வாசிக்க, அதையே உற்று நோக்கியவனுக்குள் மனம் குறுகுறுத்தது.
இதுயென்ன, கம்பெனி வேலையாக வந்துவிட்டு ஒரு பெண்ணைப் பார்த்தும் மனம் தடுமாற நாம் என்ன டீன் ஏஜ் பையனா?.. என்று தன்னையே சாடிக் கொண்டவனுக்கு அவளின் முகத்தை விட்டுப் பார்வையை திருப்ப முடியவில்லை.
நம்மூரில் பார்க்காதா பொண்ணா.. வெளிநாட்டில் வந்து இங்கே இருப்பவளின் மீது மனம் செல்லுவதைக் கண்டு தன் மேலே சினம் கொண்டவன், அவளைப் பார்க்கக் கூடாது வலுக்கட்டாயமாக மனத்தை வேறு திசையில் திருப்பினான் கௌசிக்.
அவனுக்குரிய காபி வரவும் ஹார்ன்லாட் அவன் முன் எடுத்து வைத்தவர், ''டேக் இட் '',என்று சொல்லியவர் தனக்குரியதை எடுத்துக் குடித்தார்,
கௌசிக் தன் முன் இருக்கும் காபியை எடுத்து உறிஞ்சியவன் என்ன தான் நம் வீட்டில் போடும் காபி போல இல்லை என்று எண்ணிபடி அருந்தியவன், ஹார்ன்லாட்டிடம்.. ''சார் எனக்கு இங்கே இருக்கும் பல கட்டிடங்களைப் பார்க்க வேண்டும் .. அதைப் பற்றி நுணுக்கமாகத் தெரிந்த கைடு வேண்டும்'', என்று சொல்லியவன், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவரிடம் சொல்லவும்…
ஹார்ன்லாட்டோ.. ''இங்குள்ளதைப் பற்றி நீங்கள் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதுக்கு கைடு தேவையில்லை… இங்கே நம்முடைய ஆபீஸில் வேலை செய்யும் ரிஹானாவே போதும் சார்.. அவளிடம் சொல்லி விடுகிறேன்.. நீங்கள் நாளை காலையில் கிளம்பிப் போய் பாருங்கள்'', என்று சொன்னார் ..
அவனோ நாம் அவளைப் பார்க்க வேண்டாம் நினைத்தால் அவளின் துணைக் கொண்டே இங்குள்ளதை அறிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறதே .. இது தான் விதியின் சாரம்சமா என்று எண்ணம் அவனுள் தோன்ற.. அங்கே இன்னும் அமர்ந்து தன் தோழியோடு பேசிக் கொண்டிருந்தவளிடம் கௌசிக்கின் பார்வை சென்றது.
ரிஹானாவோ ஷான்வின் பேச்சில் சிரித்துக் கொண்டிருந்தவளின் உள்யுணர்வோ தன்னையை யாரோ உற்றுப் பார்க்கிறார்களே என்று எண்ணம் தோன்றியதும், ஓரக்கண்ணால் நோட்டம் விட, அங்கே வேறு பக்கம் அமர்ந்திருந்த கௌசிக்யின் தீட்சண்யமான பார்வையை கண்டு கொண்டவளுக்கு மனதிற்குள் ஒரு சிறு அச்சமும் சிலிர்ப்பும் ஒருங்கே உண்டானது ..
இங்கு இருப்பவர்கள் அவளைக் கண்டால் ஒரு நொடி ரசிப்பு பார்வையோடு கடந்து விடுவார்கள்.. இவனை மாதிரி உள்ளுற ஊடுருவி இதயத்தின் சுவர்களை உடைத்து குருதியை உறைய வைக்கும் பனிப் பார்வையில் ரசனை கலந்து இருப்பதைக் கண்டவளுக்கு மனதினுள் குளிர் பரப்பியது ..
உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என மனம் உந்த உடனே ''ஷான் வா போகலாம், இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு கிளம்பணும்'', என்று சொல்லவும், அவளைத் திகைப்பாகப் பார்த்தாள் ஷான்வி.
எப்பவும் பதட்டமில்லாமல் எது நடந்தாலும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவளிடம் இன்று ஒரு தடுமாற்றம் குழப்பம் பரபரப்பு, பதட்டம் கலந்த கலவையாக இருப்பதைக் கண்டவள், அவளிடம் அதைப் பற்றி கேட்க வாயைத் திறக்க,
ரிஹானாவோ அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே செல்லவும் ''ஹேய் டெடிபேர் இரு, நானும் வரேன்'', அவள் பின்னால் ஓடினாள் ஷான்வி.
வேகமாக தன்னிடத்திற்கு வந்த ரிஹானா சற்று மனத்தை அமைதிப்படுத்த சீட்டில் கண் மூடி அமர்ந்தாள்..
அங்கே வந்த ஷான்வியோ ''ஏய் ஸீலிப்பீங் பியூட்டி இப்படி என்னை அவ்வளவு அவசரமாக விட்டுட்டு இங்கே தூங்க வந்தீயா'', என்று கேட்டவளை தன் இமைச் சிறகுகளை மெதுவாக விரித்தவளின் பார்வையிலிருந்த வெறுமையில் அவள் மனதிற்குள் ஏதோ ஒன்று ஷான்வியை உலுக்கவும்,
அவள் அருகில் வந்த ஷான்வி அவளைத் தோளோடு அணைத்தவள், ''காலையில் வீட்டில் நடந்ததை நினைச்சு வருத்தப்படரீயா ரிஹா'', என்று கேட்க…
அவளோ ''ப்ச்ச்.. இது எல்லாம் என்ன புதுசாவா இங்கே'',.. என்று சொல்லியவள், '' உங்க வீட்டைப் பாரு…. உன் தாத்தா பாட்டி, அம்மா அப்பா, எல்லாம் எவ்வளவு அன்னியோனியமாக வாழறாங்க.. ஆனால் என் வீட்டில் அப்படியா இருக்கு.. ஒருத்தர் வாழ்க்கையே வெறுக்க அவர்களின் சுற்றியிருக்கும் சூழ்நிலை தான்'',.. என்றவளின் வார்த்தையில் வாழ்க்கையே வெறுத்து ஒதுக்கித் தள்ளும் தன் தோழியை நினைத்து வருந்தியவளுக்கு, இவளுக்கு ஒரு அழகான குடும்பப் பிண்ணனியும் அன்பையும் காதலையும் கொட்டும் ஒருத்தன் வந்தால் இவளுள்ளே சுருங்கிக் கொள்ளும் தன்மை மாறிவிடும் என்று எண்ணம் தோன்றியது ஷான்விக்கு..
ஆனால் அவளை இயல்பு நிலைக்கு மாற்ற எண்ணிய ஷான்வி, ''ஹேய் டெடிபேர்… நான் ஒண்ணு சொன்னா அடிக்க வரக்கூடாது'',… என்று சீரிஸசான குரலில் கேட்டவளை புரியாமல் நிமிர்ந்து பார்த்த ரிஹானாவை விட்டு சற்று விலகி நின்ற ஷான்வி…
''இன்று நம் ஆபீஸிற்கு வந்திருக்கும் ஹேண்ட் சம் பாய்யை கரெக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாமே'', என்று சொல்லியவளை விழிகள் தெறிக்க முறைத்தாள் ரிஹானா..
''ஏய், அதுக்கு ஏன் இந்த பத்ரகாளி வேசம்.. பயந்து வருதுல'', என்று சொல்லியவளை ரிஹானாவோ அடிக்க கை ஓங்க,..
''ஏய், பேச்சுப் பேச்சாக இருக்கணும், நீயும் அந்தக் கோட்டைத் தாண்டி வரக் கூடாது, நானும் வரமாட்டேன்'', என்று சொல்லியவிட்டு, ''நல்லதுக்கே காலம் இல்லை இவ்வுலகில்'', என்று சொல்லிய ஷானவியைக் கண்டு கலகலவென்று சிரித்தாள் ரிஹானா…
''உன்னை என்ன சொல்லத் திட்ட மங்கி'', என்று கேட்ட ரிஹானா, ''இங்கே பாரு, வேலைக்கு வந்தோமா, போனாமா இருக்கணும் ஊடுல இந்தக் காதல் கண்றாவி கத்திரிக்காய் எல்லாம் விற்க வேண்டாம்'', என்று ஷானவிடம் சொன்னாள் ரிஹானா..
''அடப்போ டெடி.. உனக்கு உயிர்யற்ற கட்டிட்டத்தை ரசிக்கும் அளவுக்கு உயிர் உள்ள ஜீவன்களை ரசிக்கத் தெரியல'', என்று சொல்லி அலுத்துக் கொண்டாள் ஷான்வி..
அவள் சொன்னதைக் கேட்டு மெல்லிய சிரிப்பை சிந்தியவள், ''உயிர்யற்ற பொருளாக நீ நினைக்கும் கட்டிடத்தில் உயிர்ப்பு இருக்கும்.. அதை ரசனையோடு பார்த்தால் புரியும்.. அதைவிட்டு காதல் அன்பு சொல்லி வருபோரின் பின்னால் போனால் , சில காலம் கழித்து அழுகை பிரிவு தான் வந்து நம் மனசை நோகடித்துக் கொள்வதைவிட இப்படியே நம் வாழ்க்கையை வாழலாம்.. நம் கற்பனை திறனில் அழகான கட்டிடத்தை உருவாக்கலாம்'', என்று சொல்லியவளை முறைத்தாள் ஷான்வி..
''லூசு மாதிரி பேசாதே.. ரிஹா உனக்காக உன் மேலே உயிராக இருக்கும் ஒருத்தர் வருவாங்க பாரு…அப்ப அவங்க உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்'', என்று சொல்லிய ஷான்வியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தாள் ரிஹானா..
''ஏன் ஷான் என்னை உள்ளங்கையில் தாங்கினால் கை வலிக்காது என் வெயிட்டை கைத் தாங்குமா'', என்று அதிமுக்கியமானக் கேள்வியைத் தீவிரமாகக் கேட்பவளைக் கண்ட ஷான்வி தன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரிப்பது போல பார்க்க,
அவளைக் கடுப்பேற்றிய திருப்தி ரிஹாவுக்கு உண்டானது , அவளிடம் ''இப்படியே கோபமாகவே இரு ஷான் அப்ப தான் அழகா இருக்க.. இதோ உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன். .. அதை உன் பாய்பிரண்ட் கிட்ட காமிக்க'', என்று சொல்லி அலைபேசியை எடுப்பவளை கண்டு காண்டாகிப் போன ஷான்வி அவள் கழுத்தை நெறுக்கிற மாதிரி கரங்களைக் கொண்டுச் செல்ல,
ரிஹாவோ ''கொலை அய்யோ கொல்லப் போறாலே'', என்று கத்தவும் அவள் கேபினைத் திறந்து கௌசிக்கும் ஹார்ன்லாட் வந்தவர்கள் அவர்களின் செய்கைகளைப் பார்த்து அதிர்ந்து நின்றனர்..
ரிஹானாவும் ஷானவியும் அவர்களைப் பார்த்ததும் அசடு வழியே எழுந்து நின்று ''சும்மா விளையாட்டு சார்'', என்று ஷான்வி திணறலான குரலில் சொல்லவும், ''ம்ம்..ஆமாம் சார்'', என்று ரிஹானாவும் சேர்ந்து அசட்டுக் குரலில் சொல்லவும்,
''ம்ம்ம்'',.. தலையாட்டிவிட்டு உள்ளே வர அவர்களுக்கான இருக்கையை காமித்த ரிஹானா ''எஸ் சார் சொல்லுங்க'', என்று சட்டென்று விளையாட்டை விட்டு வேலையில் கவனத்தைச் செலுத்தியவளை ஊடுருவிப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கௌசிக்.
ஹார்ன்லாட்டோ, ''ரிஹா நாளிலிருந்து ஒரு வாரம் சார் கூட இங்குள்ள முக்கியமான இடங்களுக்குப் போகணும்.. அங்குள்ள கட்டிடங்களைப் பற்றி கைடு பண்ண இந்த ஆபீஸில் உங்களை விட்டால் ஆளியில்லை'', என்று சொல்லபவரைக் கண்டு அதிர்ந்து ஷான்வியை திரும்பிப் பார்த்தாள் ரிஹானா.
ஷான்வியோ கொப்பளித்தச் சிரிப்பை உதடுக்குள் மறைத்துக் கொண்டு ''என்ஜாய் பேபி'', என்று மெல்லமாகச் சொன்னாள்..
அதைக் கண்டு அவளைச் செல்லமாக முறைத்தவள், ஹார்ன்லாட்டிடம் ''ஒகே சார்'', என்று ஒரு வார்த்தையில் சொல்லியவளைக் கண்ட கௌசிக், ''ஒகே கேர்ள்ஸ் நாளை பார்ப்போம்'', என்று சொல்லிவிட்டு ஹார்ன்லாட்டோடு வெளியேறினான் ..
அவர்கள் போவதைப் பார்த்தபடி நின்ற ரிஹானாவின் தோளைத் தட்டிய ஷான்வி ''காதல் பொல்லாதது .. அதுவே உன்னைத் தேடி வரப் போகது'', என்று ஆரூடம் சொன்னாள் ஷான்வி..
அதைக்கேட்ட ரிஹானாவோ ''உன்னை'', என்று மீண்டும் அடிக்க கை ஓங்கியபடி வர அவளும் ஓட அந்நிமிடங்களில் ரிஹானாவின் மனம் சிறு பறவையாக சிறகடித்துப் பறந்தது…
தொடரும்..
ஹாய் மக்கா கதையின் அடுத்த அத்தியாயாம் பதிவு பண்ணிட்டேன் படித்துப் பாருங்கள். கதை பற்றிய கருத்துக்களை கூறுங்கள் மக்கா..