அத்தியாயம் ..4
பனிக் காற்றில் சுருண்டு படுத்திருந்த ரிஹானாவிற்கு ஆபீஸில் நடந்த நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க, கௌசிக்யை அழைத்துக் கொண்டு நாளை வெளியே போவதை நினைத்தாலே ஏனோ அவளின் உள்ளம் படபடத்தது.
அவனின் தோற்றமும், தீட்சணயமான பார்வையோ எதிராளியைக் கூட காந்தமாக இழுத்து இதயத்திற்குள் ஊடுருவிச் சென்று மனத்தை குளிரைப் பரப்பி மெய்யை சிலிர்க்கச் செய்யவதை உணர்ந்தவளுக்கு ஏனோ அச்சம் அவளுள் எழும்பியது , அவனுடைய ஆளுமையான பேச்சும் தொழிலில் அவனுக்கு இருந்த திறமையும், செய்யும் வேலையில் மற்றவர்கள் சொல்லியதது சரியில்லை என்றால் புன்னகை முகத்தோடு தன்னுடைய மறுப்பை ஆணித்தரமாக எடுத்துரைத்து அதில் சிறு மாற்றங்களை கூறி அதைச் சொன்னவர்களே ஒத்துக் கொள்ள வைக்கும் திறனைக் கண்டவளுக்கு வீட்டிற்கு வந்தும் அவனைப் பற்றிய சிந்தனையே ஓடியது.
அதே நேரம் ஷான்வி கிண்டலாக அவனைத் தன்னோடு இணைத்துப் பேசியதை நினைத்தவளுக்கு மனம் குறுகுறுக்க, அவளுக்கு அறிவே இல்லை… என்று தன் தோழியைத் திட்டியவள், இன்னும் ஒரு வாரம் பத்து நாளோ அவனின் வேலை முடிந்ததும் அவன் அவனுடைய நாட்டிற்குப் போய் விட்டால் சந்திக்கக் கூட வாய்ப்பில்லை. அதற்குள் ஆயிரம் கற்பனைகளை வளர்த்து அதையே என்னிடம் சொல்லும் ஷான்வியை நினைத்து சிறு கோபம் எட்டிப் பார்த்தது.
இந்தக் காதல் கல்யாணம் சுத்த கம்பக் .. என்று தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.. தன் அப்பாவின் வாழ்க்கை முறையைப் பார்த்து வெறுத்துப் போனவளுக்குக் காதல் கல்யாணம் என்றாலே கசந்து போனது தான் நிஜம்…. இப்படி பலவித யோசனைகளோட இருந்தவள் நாளை அவனோடு செல்ல வேண்டிய இடங்களை மனதிற்குள் வரிசைப்படுத்திக் கொண்டாள் ரிஹானா.
நாளைக்கு முதலில் 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்', பார்க்கப் போக வேண்டும் என்று முடிவு செய்யவள், இதைப் நாளை ஆபீஸில் பார்த்து அவனிடம் சொல்லிடலாம் என்று நினைத்தபடி உறங்கினாள் ரிஹானா.
அடுத்தநாள் ஆபீஸ்க்குக் கிளம்பியவள், பயணத்திற்குத் தகுந்தபடி நேவிகலர் ஜீன்ஸும் மஞ்சள் கலர் டாப்ஸ் அணிந்து மூடியை பாதியை கிளிப்பில் அடக்கி மீடியை விரித்து நெற்றியில் சிறிய பொட்டு ஒன்றை ஒட்டினாள் ..அவள் எப்பவும் பொட்டோ பூவோ அதிகம் வைப்பதில்லை.. அதை விரும்பவதுமில்லை…
அந்த நாட்டின் கலாச்சாரத்தில் எவரும் யாருடைய வாழ்க்கை முறையில் தலையிடுவதில்லை.. பெற்றவர்களாக இருந்தாலும் ஒரு வயதிற்கு மேல் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்து கொள்வதும் அவர்களின் வாழ்க்கையை அவரவர் கையில் அமைத்துக் கொள்ளுட்டும் என்று ஒதுங்கி நிற்பார்கள் ..…
ஆனால் ரிஹானாவிற்கு அந்த மாதிரி இருப்பதைவிட தன்னைத் தாங்கும் பெற்றோர் வேண்டும் என்ற எண்ணம் அதிகமுண்டு… தனக்கு அம்மா இருந்திருந்தால் தன்னைச் சிறு வயதிலிருந்து அலங்காரம் பண்ணி அழகு பார்ப்பாங்க.. அதுக்குத் தான் வழியில்லாமல் போச்சே.. என்று நினைத்தவளுக்குள் மனதின் ஆழத்தில் சிறு ஏக்கம் இருக்கத் தான் செய்தது..
ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள் ரிஹானா.. வெளிநாட்டில் பிறந்தாலும் அவளுக்கு எப்பவும் தன்னிச்சையாக எந்த முடிவு எடுத்துப் பழகிருந்தாலும் அன்பா கேரீங்கா நம்மை யாரும் கவனித்துக் கொள்ள மாட்டாங்களா என்ற ஏக்கம் மட்டுமே அவளுள் நிரம்பிருந்தது.
பல எண்ணங்கள் மனதில் ஓடியதை ஒதுக்கி வைத்து விட்டுக் கம்பெனிக்குக் கிளம்பியவள் அங்கே தனக்கு முன்னே இருந்த கௌசிக் வைத்திஸ்வரனைப் பார்த்ததும் மனதினுள் 'சின்சியர் சிகாமணி', தான் என்று நினைத்தபடி இதழ்களில் தவிழ்ந்த புன்னகையுடன் அவனை நெருங்கினாள் ரிஹானா.
அவள் வருவதை உள்யுணர்வின் அலறலில் அறிந்து கொண்ட கௌசிக்கோ அவளைத் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு ஹார்ன்லாட் கூட இன்று போகப் போகிற இடங்களைப் மும்மரமாகப் பேசிக் கொண்டிருந்தான் கௌசிக்.
அவன் அருகில் சென்றவளோ.. ''ஹாய் சார் மார்னிங்'', என்று இருவருக்கும் பொதுவாகச் சொல்லியவளை அப்போது தான் பார்ப்பதைப் போலப் பார்த்தவன் ''மார்னிங் ரிஹானா .. ஹெவ் எ நைஸ் டே '',என்று சொல்லியவன்
''கிளம்பலாமா''.. என்று கேட்டவனிடம் ''ஒகே சார்'', என்று அவள் சொல்லும்போதே ஹாசினி அவ்விடம் வந்தாள்..
''ஹேய் கைஸ் குட்மார்னிங்.. என்று ஹாசினி சிறு சிரிப்புடன் சொல்லிவிட்டு , ''ஹேய் டெடி.. சீக்கிரம் கிளம்பிட்டே போல என்றவள் .. அவளின் உடையை பார்த்தும்'' ம்ம்.. கலக்கிற பேபி'', என்று ரிஹானாவை கண்ணயடித்துக் கலாய்த்தாள் ஹாசினி
அவளிடம் சினப் பார்வை ஒன்றை வீசியபடி ஒரு விரலை நீட்டிக் ''கொன்னுருவேன்'', என்று சொல்லியவள், தன்னைத் தாண்டி ஒரு உருவம் வேகநடையுடன் செல்வதைக் கண்டு திரும்பிப் பார்க்க கௌசிக் தான் சென்றுக் கொண்டிருந்தான்.
அவன் போவதைப் பார்த்த ரிஹானா ,ஹார்ன்லாட்டிம் ஹாசினிடமும் தலையாட்டிவிட்டு அவனின் வேகத்திற்கு ஈடுக் கொடுக்க பின்னாலே ஓட வேண்டிதாக இருந்தது, ஏனோ அது மனத்தை உறுத்தவும்
அவள் முகம் சட்டென்று நிறம் மாறியும் போனது..
கூட வருபவர்களைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாகச் செல்லும் அவனைக் கண்டு சிறு கோபமும் எட்டிப் பார்த்தாலும் அதை மறைத்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்தக் காரில் ஏறினாள் ரிஹானா.
அவள் காரில் ஏறியதும் திரும்பி, அவளின் முகத்தைப் பார்த்தவன், ''ஹாய், உனக்கு என் கூட வர இஷ்டமில்லையா, ஏன் உன் முகம் டல்லாக இருக்கு?'', என்று கேட்டான் கௌசிக்..
அவன் ஒருமையில் அழைத்ததைக் கவனிக்காமல் ரிஹானாவோ ''அப்படி எல்லாம் இல்லை சார்'', என்று சொல்லியவள்,'' நீங்கள் எந்த இடம் போகணும்,பார்க்கணும் முடிவு பண்ணிருக்கீங்களா'', என்று அவன் பார்க்க விரும்பும் இடத்தைப் பற்றி கேட்ட ரி்ஹானாவிடம்..
''இது உங்க ஊர் மா ,இங்கே போகும் வழி போகிற இடம் எல்லாம் நீ தான் சொல்லணும்'', என்று சிறு சிரிப்புடன் கௌசிக் சொல்ல..
அவளோ ''இது எங்க ஊர் தான் ஆனால் என்னை விட அதிகமாக இவ்வூரைப் பற்றி தெரிந்து வைச்சிருப்பது நீங்க தானே'', என்று அவன் நேற்று பேசியதை வைத்துச் மெல்லிதான சிரிப்புடன் சொல்லவதைக் கேட்டுக் முகம் மலரச் சிரித்த கௌசிக்…
''ஏட்டுச் சுரக்கையாய் கறிக்கு உதவாது என் பாட்டி சொல்லவாங்க.. எதையும் படித்தால் மட்டும் போதாது, அதைப் பற்றிய நேரடியான பார்வையில் கண்டறிய வேண்டும் என்று சொல்வாங்க … நான் எனக்குத் தெரிந்த விஷயங்களை இங்கே சொன்னேன் .. நீங்கள் எல்லாரும் இங்கே இருப்பவர்கள் .. உங்க அளவுக்கு எனக்குத் தெரியாதே... அதனால் நீயே எங்கே போகலாம் என்று சொல்லு'' என்று புன்சிரிப்புடன் சொல்லிய கௌசிக்கு ஹார்ன்லாட்டிம் பேசும் போதே செல்ல வேண்டிய இடங்களை சொல்லியும் அதன் வழிகளை அறிந்து கொண்டான் தான். ஆனாலும் அவளிடம் எதுவும் தெரியாத போல காட்டிக் கொண்டுப் பேசினான் கௌசிக்…
அவன் பேசுவதைக் கேட்டவள் நம்பாத பார்வையோடு ''ஒகே சார் நாம எம்பயர் ஸ்டேட் கட்டிடம் பார்க்க போகலாம் சார்.. 102 மாடிக் கட்டிடம் .. ஒவ்வொரு தளமும் வித்தியாசமான பாணியை பயன்படுத்திக் கட்டிருக்காங்க .. மீதி விவரங்களை அங்கே போய் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் தானே சார்'', என்று கேட்டவளை ஊடுருவிப் பார்த்தான் கௌசிக்.
''கட்டிடத்தை பற்றி அங்கே போய் பார்த்துப் பேசிக் கொள்ளலாம்''.. என்றவன் "அப்பறம் இன்னொன்று
நான் ஒன்றும் உனக்கு மேலதிகாரி இல்லை ரிஹானா.. பெயரைச் சொல்லியே அழைக்கலாம் .. இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம்", என்று சொல்லவும்..
"நீங்கள் எங்க கம்பெனிக்கு வருகை தந்து இருக்கிறீர்கள் .. அதற்கான மரியாதை அழைப்பு தான் .. சார்", என்று அழுத்தமாகச் சொல்லியவளை…
"அது கம்பெனியில் இருக்கும் போது தான் .. அதுவும் ஜஸ்ட் ஒன் வீக் .. ஆனால் இப்ப வெளியே நாம் வந்து இருக்கிறோம்.. அதனால் பெயரை சொல்லிக் கூப்பிடு", என்று மீண்டும் அழுத்தமாகக் கூறியவன், ''உங்க ஊரில பெயரைச் சொல்லி அழைப்பது ஒன்றும் புதி்யதில்லையே.. என்றவன் அதுவும் என் பெயர் உன் வாயில் நுழைய முடியாத அளவிற்காக பெரிதாகவா இருக்கு'', என்று குறும்புத்தனத்தோடுக் கேட்டவனைக் கண்ட ரி்ஹானா..
இவன் ஒண்ணை நினைத்தால் அதை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டான் போல என்று எண்ணியவள், அவனையே உற்று நோக்கியவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்..
அவனின் கண் சிமிட்டல் அவளை ஏதோ செய்ய சட்டென்று பார்வையை காரின் கண்ணாடி ஊடுடே வெளியே பார்த்தவளுக்கு உள்ளம் படபடத்தது.
இவன் அருகே இருந்தால் தனக்குள் பல மாற்றங்கள் உருவாகுவதை மாற்ற முடியாமல் திகைத்து போனாள் ரிஹானா.
அவள் அமைதியாக எங்கோ வெறித்துக் கொண்டு வருபவளைக் கண்ட கௌசிக் இவள் எப்பவும் அமைதியாக இருப்பவளா.. இல்லையே நேற்று ஷான்வி கூட அரட்டை அடித்துக் கொண்டு சிரித்த முகத்தோடு தானே இருந்தாள்.. என்று எண்ணியவன்.. அவளிடம் திரும்பி ''லுக் ரிஹானா நீ இப்படி பேசாமல் அமைதியாக வந்தால் எனக்கு அன்ஈஸி பீலிங் கொடுக்கது.. என் கூட வர விருப்பமில்லாத மாதிரி உணர்வுகளைக் கொடுக்கது.. பேசாமல் உன்னை கம்பெனியிலே கொண்டு போய் விட்டுட்டு நான் வேறு யாரையாவது அழைத்துக் கொள்ளுட்டுமா'', என்று வெறுமை நிறைந்த குரலில் கேட்ட கௌசிக், அவளின் அமைதி அவனின் மனதிற்கு ஏனோ பிடிக்கவில்லை .. அதனால் தான் நேரடியாகவே அவளிடம் கேட்டு விட்டான் கௌசிக்.
அவனின் குரலும் அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு இவன் முன் என் நேச்சரே மாறிப் போவது ஏன்? என்று புரியவில்லை.. வீட்டை விட்டு வெளியே வந்தாலே சிறகடித்துப் பறக்கும் பறவையாய் பறப்பவள் இவனைப் பார்த்துப் பேசப் பழக ஒரு தயக்கம் உண்டாகுவதற்கு காரணமறியாமல் திகைத்தாலும், அதை அவனிடம் காமிக்காமல் , அவன் முகத்தைப் பார்க்க அவனோ அவனின் காந்த
விழிகளாலே அவளின் கருவண்டு விழிகளோடு உறவாடிக்கொண்டு அவள் மனத்தை களவாடினான் அந்தக் கள்ளன் ..
அவன் பார்வையில் கட்டுண்டு இருந்தவளுக்கு அவனிடம் என்ன சொல்ல வந்தோம்? என்பதே மறந்து விட திக்பிரமை பிடித்தாற்ப் போல இருப்பவளைக் கண்ட கௌசிக் சிரித்தபடி அவள் முன் தன் கரங்களை வைத்து ஆட்டி விட்டு ''ரிஹானா இது நியூயார்க்… நான் கௌசிக்.., நீ ரிஹானா.. நாம் இப்ப எம்பயர் ஸ்டேட் கட்டிடம் பார்க்கப் போகிறோம்… அதற்கு முன் என் வயிறு சாப்பாட்டுக்காகக் கூவிக் கொண்டிருக்கு… அதற்குத் தீனிப் போட்டே ஆகவேண்டும் நல்ல உணவகம் இருந்தால் சொல்லுவீயாம்'', என்று படபடவென்று பேசியவனைக் கண்டவளுக்கு சட்டென்று சிரிப்பு அலையலையாகப் பொங்கிப் பெருக வாய் விட்டுச் சிரித்தாள் ரிஹானா.
அவளின் சிரிப்பை ஆழ்ந்து பார்த்தவன் எவ்வளவு அழகான சிரிப்பு!. ஒரு மழலையின் சிரிப்பு எப்படி இருக்குமோ அதை மாதிரி கள்ள கபடமில்லாத அழகு சிரிப்பு.. ஒரு மொட்டு இதழ் விரித்து மந்தகாசமாகக் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டுவதைப் போல இவளின் சிரிப்பு இருக்கிறது என்று நினைத்தவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவளோ அவனின் விழி வீச்சியில் சட்டென்று சிரிப்பை அடக்கிக் கொண்டு ''நாம் போகிற வழியில் நான் அடிக்கடி போகும் ஒரு இந்தியன் உணவகம் இருக்கு கௌசிக்.. சாப்பாடு நல்லாயிருக்கும்.. அங்கே போகலாம்'', என்று சொல்லியவள், ''உங்கள் உயரத்திற்கு இவ்வளவு இலகுவாகப் பேசுவீங்க நான் நினைக்கவே இல்லை'',.. என்று சொல்லிய ரிஹானாவை ஆழப் பார்வைப் பார்த்து சிறு மென்சிரிப்புடன்.. ''நான் அவ்வளவு உயரம் இல்லை ரிஹானா ஜஸ்ட் ஆறடி நாலு அங்கலம் தான்'', என்று சொல்ல அவளோ பொய்யாக அவனை முறைத்தாள் ரிஹானா.
அவளுடைய முறைப்பைக் கண்டு மேலும் சிரித்தவன், ''தொழில் வசதி எல்லாம் எங்க தாத்தா காலத்திலிருந்து இருக்கிறது. அவர்கள் விதைப் போட்டு வளர்த்து விட்டார்கள் நான் அதை பல கிளையாக்கிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவு தான்.. மற்ற படி தொழிலுக்கும்
மற்றவர்களிடம் பேசாமல் விரைப்பாக இருக்கணும் எந்த அவசியமில்லை .. எல்லாரிடமும் பேசும் போது அவர்களின் எண்ணப்போக்கினை அறிய முடியும்.. பல பேரை வைத்து வேலை வாங்கும்போது அவர்களின் நிறைகுறைகளை கண்டறிந்து எனக்கான வேலையை நான் வாங்கிக் கொள்ள முடியும்'', என்று சொல்லியவனை ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்த்தாள் ரிஹானா.
''கொக்குக்கு ஒன்றே மதியாக நம்மக்குரிய காரியம் ஆக வேண்டும் நினைத்தால் அவர்களின் போக்கில் சென்று தன் பக்கம் திசை திருப்பி காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும்'', என்று சொல்லியவனின் வார்த்தையில் தனக்கானது எதுவோ ஒன்று இருப்பதை அறிந்தாலும் அது அவளுக்குப் புரியவில்லை.
அவள் முகத்தில் இருக்கும் குழப்பத்தைக் கண்டு, ''ஹேய் ஈஸி.. நீ சொன்ன உணவகம் அதுவா பாரு'', என்று தூரத்தில் தெரிந்த உணவகத்தைக் கை நீட்டிக் காமிக்க, தன் கூடப் பேசிக் கொண்டிருந்தவன் எப்படி வெளியே இருப்பதைக் கவனிக்கிறானே.. உடம்பு முழுவதும் கண்ணா இவனுக்கு என்று எண்ணியவள் அவனிடம் மௌனமாகவே அது தான் என்று தலையாட்ட, டிரைவரை அங்கே நிறுத்தச் சொன்னான் கௌசிக்.
தான் இறங்கியதும் அவள் இறங்கும் வரை இருந்து அழைத்துக் கொண்டு போகும் அவனின் கேரிங் கண்டு அவளுக்குக் கண்கலங்கியது.
அதை மறைத்தப்படி உணவகத்திற்குள் சென்றவர்களை அங்கே இருந்த ரகு பார்த்தவன் வேகமாக அவர்கள் அருகில் வந்து, ''ஹேய் ரிஹா என்ன இந்த நேரம்?'', என்று கேட்டபடி அவர்கள் அருகில் வந்தான் ரகுவரன்.
''ஹாய் ரகு, இவர் கௌசிக்.. எங்க கம்பெனிக்கு வந்திருக்கும் உங்க ஊர்க்கார் தான்'', என்று சொல்லியவள், கௌசிக்கிடம் திரும்பி ''இவர் ரகுவரன் இங்கே மேனேஜராக இருக்கிறார்'', என்று இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் ரிஹானா.
ஆண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆராய்ச்சி பார்வையுடன் ''ஹாய்'' சொல்லி கைக் குலுக்கிக் கொண்டவர்கள், ரகு அவர்களை அங்குள்ள இருக்கையில் அமரச் செய்தவன், " சார் நீங்கள் என்ன சாப்பிடீரிங்க?", என்று கேட்டான்.
"இங்கே வந்த மூன்று நாளிலே நம்மூர் உணவை நாக்கு தேட ஆரம்பிருச்சு ரகுவரன்.. அதனால நம்மூர் அயிட்டம் எதாக இருந்தாலும் ஒகே தான்", என்று சொல்லியவன், ரிஹானாவிடம் "உனக்கு என்ன வேண்டும்! என்று கேட்க,
அதற்கு முந்திக்கொண்ட ரகு "அவளுக்கு என்ன வேண்டும் எனக்குத் தெரியும் சார், அதைக் கொண்டு வரேன்", என்று சொல்லிவிட்டு, செல்பவனைக் கண்டு ரிஹானாவை ஒரு புரியாத பார்வையோடு நோக்கினான் கௌசிக்.
அவளோ நமட்டுச் சிரிப்புடன் "அவர் கொண்டு வரும்போது உங்களுக்கே தெரியும் கௌசிக்", என்று சொல்ல,
கௌசிக்கோ "இந்த ரகுவரன் உனக்கு எப்படி நண்பர் ஆனார்'', என்ற கேள்வியை எழுப்பியவனை வினோதமான பார்வையோடு உற்று நோக்கினாள் ரிஹானா.
அவளின் பார்வையை கண்ட கௌசிக் ''ஹேய் என்ன வித்தியாசமாகப் பார்க்கிறாய்
எதார்த்தமாகத் தான் கேட்டேன்.. இந்தியாவிலிருந்து வந்தவர் எப்படி உனக்கு நண்பர் ஆனார் என்று தெரிந்து கொள்ளலாமே தான் கேட்டேன்.. தெரிந்தால் எனக்கும் யூஸ் ஆகுமல.. என்று சொல்லியவன் உனக்கு இஷ்டமிருந்தால் சொல்லாம். இல்லைனாலும் ஒகே தான்'',.. என்று சொல்பவனிடம்…
''என்ன ஒகே புரியவில்லை'', என்று திரும்பக் கேட்டாள் ரிஹானா.
''ரகுவரனை பற்றி சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் எனக்கு ஓகேதான் என்று சொன்னேன்.. உன் பர்சனலில் மூக்கை நுழைப்பதாக நினைத்தால் சொல்ல வேண்டாம் என்பதை தான் சொன்னேன்'',.. என்று நீண்ட விளக்கமாக விளக்கிச் சொல்பவனைக் கண்டு சிரித்தாள் ரிஹானா.
''அதற்கு நீங்க நேரடியாகவே ரகு உனக்கு யாருனு கேட்டு விடலாமே'', என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே ரகுவரன் கூட ஒரு ஆளின் துணையோட அவர்களுக்கான உணவினை எடுத்துக் கொண்டு வந்தான்.
தொடரும்..
ஹாய் மக்கா அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிருக்கேன் .. படித்துப் பாருங்கள் .. உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்..
உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள எனக்கும் ஆவலாக ஆசையாக இருக்கே மக்கா..
.