அத்தியாயம் ..8
ரிஹானா தன் வீடு வந்து சேர்ந்ததும் அங்கே ரிச்சார்ட் கூட ஜேம்ஸ் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை ஒரு வெறு
ப்பான பார்வையோடு கடந்து சென்றாள்.
பெண் பிள்ளை என்றாலே அப்பாவுக்கு லிட்டில் பிரின்ச்ஸாக எல்லாரும் வீட்டில் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறாள் ரிஹானா. ஆனால் தன் வீட்டில் அங்கே இருக்கும் அலங்கார பொம்மையை போல தானும் என்ற எண்ணம் தான் அவளுக்குள் இருக்கும்.. அதனாலே என்னவோ ஓரளவுக்கு விவரம் தெரிந்த உடனே தனக்கானதை தானே செய்துக் கொள்ள பழகிக் கொண்டவள் தனக்குப் பிடித்த படிப்பு, வேலை, விடுமுறை நாட்களில் படிப்புக்குத் தகுந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தல் என்று தனக்கான வாழ்க்கை முறைகளை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டாள் ரிஹானா.
தான் உண்டு தன் வேலை உண்டு, என்று இருப்பவளிடம் முக்கியமான நண்பர்கள் என்றால் ரகுவரனும், ஷான்வி இருவரும் மட்டுமே .. தன் வீட்டிற்கு அப்பாவை தேடி வருபவர்களையோ லாஸ்யாவை தேடி வருபவர்கள் பார்ட்டி என்று எந்த இடத்திலும் கலந்து கொள்ள மாட்டாள். ரிச்சார்ட் மகளிடம் வற்புறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் பிடிவாதமாக மறுத்து விடுவாள் ரிஹானா. எப்பவும் தன்னைச் சுற்றி ஒரு நெருப்புக் கம்பி வேலியைப் போட்டுக் கொண்டு நெருங்க விடாமல் இத்தனை நாட்கள் அவ்வூரில் வாழ்ந்தவளுக்கு இன்று ஜேம்ஸ் நடந்து கொண்டதும் கௌசிக் அவனை அடித்ததும் கண்டு மனம் ஏனோ ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
அதே சிந்தனைகளோடு வீட்டுக்கு வந்தவள் அங்கே அப்பாவிடம் ஜேம்ஸ் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு சினம் உண்டானாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தன் அறையை நோக்கி நகர இருந்தவளை அவளின் அப்பா அழைப்பில் அப்படியே அதே இடத்தில் நின்றாள் ரிஹானா.
''ரிஹா பேபி, கம்,கம், உன்கிட்ட முக்கியமான விசயம் பேசணும்'', என்று அன்பான சொல்லில் பொய் வர்ணம் பூசிக் கூப்பிடுவதைக் கண்டு நின்ற இடத்திலிருந்து அவர்களை நோக்கித் திரும்பினாள் ரிஹானா.
''பேபி நம்ம ஜேம்ஸ் உன்னை விரும்புகிறானாமா'',.. என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தவர், ''அவன் இங்கே நல்ல பிசின்ஸ் பண்ணுகிறான், உன்னை கல்யாணம் பண்ணனும் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருந்தான். இன்று கூட உன்னிடம் கேட்க வந்தப்ப யாரோ ஒரு இடியட் அவனை அடித்துத் துரத்திவிட்டானாமே.. யார் அவன்? என்று கேட்டவர், ''உன் பாய் பிரண்டா'', என்று கேட்டவர்க்குப் பதிலை அளிக்காமல் அழுத்தமாக நிற்பவளைக் கண்டு,
''டெல் மீ பேபி'', என்று மீண்டும் ரிச்சார்ட் கேட்க, அவளோ பதிலே இல்லாமல் அவரை தீட்சண்மான பார்வையோடு பார்க்க, அவரோ அவளின் விழிகளில் தெறிக்கும் தீப்பொறிகளில் அதிர்ந்தே போனார்.
எப்பவும் மகளிடம் இடவெளி விட்டே தனக்கு என்ன தேவையோ அதில் மட்டுமே நாட்டம் கொண்டு சுயநலமாக இருப்பவருக்கு இன்று மகளிடம் புதியதாக என்ன அக்கறை என்ற கேள்வி அவளிடத்தில் தோன்றியதும், அவரைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்டாள் அதிலே மேலே பேசமுடியாமல் தலை குனிந்து விட்டார் ரிச்சார்ட்.
கொஞ்சம் நாளாக ரிச்சர்ட் செய்யும் தொழில் நஷ்டமடைந்து வருவதைக் கண்டு கொண்டு தான் லாஸ்யா அவனிடம் உன்னைப் பிடிக்கவில்லை சொல்லி டைவர்ஸ் வாங்கிச் சென்று விட்டாள். இப்ப அவளுடைய தம்பி ஜேம்ஸால் எதாவது ஆதாயம் கிடைக்க வழி இருக்குமோ என்ற சந்தேகம் அவளுள் இருந்தால் தன் அப்பாவிடம் ''ஜேம்ஸ் உங்களுக்கு எவ்வளவு பணம் தருகிறேன் சொன்னான்.. அதற்காக என்னை விலை பேசுகிறீர்களா?'', என்று கேட்டவளைத் திகைத்து நோக்கியவர், உண்மை அது தான் அவரின் உடல்மொழி கூறியது கண்டு அறுவெறுத்துப் போனவள், ஜேம்ஸ் பார்த்து ''என்னை விலை பேசி வாங்கிட முடியும் என்று நினைத்து இங்கே வந்தாயா'', என்று கேட்டாள் ரிஹானா.
ஜேம்ஸோ, ''இங்கே பாரு ரிஹானா உன் அப்பாவிற்குப் பண தேவை இருக்கிறது .. எனக்கு நீ வேண்டும். உன்னிடம் நான் நேரடியாகவே கேட்டு விட்டேன், கல்யாணம் பண்ணிக் கொள்ள,அதுவும் வேண்டாம் நினைச்சா லிவீங் டூ கெதர் மாதிரி வாழலாம் .. பிடிக்கும் வரை வாழலாம் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று தான் கேட்டேன் அதுக்கும் ஒத்து வரல, இப்படி எது சொன்னாலும் வேண்டாம் சொன்னதால் உங்க அப்பாவிடமே பேசலாமே வந்தால் இங்கயும் இப்படி பதில் சொல்கிறாய், உன்னை அளவுக்கு அதிகமாகப் பிடித்தால் தான் திரும்பத் திரும்ப வருகிறேன் .. இல்லை என்றால் இவ்வூரில் பெண்களா இல்லை'', என்றவன், ''நீ தனியாக எங்காயவது மாட்டாமலா போவாய், அப்போது நடக்கும் செயலுக்கு நீயே வந்துக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சி நிற்க தானே போகிறாய்'', என்று எகத்தாளமாகப் பேசுவதைக் கண்டு ரிஹானாவின் கோபம் பன்மடங்கு உயர்ந்தது.
பெண்ணை ஒரு சக மனுஷியாக உணராமல் ஆதிக்காலத்து ஆளாகப் பேசுபவனைக் கண்டு கோபத்துடன் ''இனி இப்படி கல்யாணம் கேட்டுக் கொண்டு வந்தால் அவ்வளவு தான் போலீஸ் கம்பிளைன்ட் பண்ணிவிடுவேன்.
அதன் பின் நீ நானிருக்கும் பக்கம் கூட வர முடியாது தெரியுமல'', என்று சொல்லியவள், தன் அப்பா ரிச்சர்ட்டின் பக்கம் திரும்பியவள், ''இவனுடைய அக்கா லட்சணம் தெரிந்தும் என்னிடம் இவனைப் பற்றி பேசுகிறீர்கள் , நான் தான் எனக்கு விவரம் அறிந்தது இருந்து உங்களிடம் படிப்பிற்க்கோ மற்ற செலவுகளுக்கோ வந்ததில்லை.. இப்ப வரை என்னை நானே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன்.. இன்று உங்கள் பேச்சைக் கேட்டு இந்த மாதிரி இடியாட்ரிக் வேலை எல்லாம் செய்யாதீர்கள்'' என்று முகத்தில் அடைத்தாற்ப் போல பதிலைக் கூறிவிட்டு மேலே தன் அறையை நோக்கிச் சென்றவளுக்கு மேல் மூச்சு வாங்கியது.
அவளின் மனமோ கசங்கிப் போகப் பெற்றவரின் பேச்சில் இருக்கும் அறுவெறுப்பான செயலில் கண்டு மனம் வெதும்பி அப்படியே படுக்கையில் படுத்து விட்டாள் ரிஹானா.
மனமோ காலையில் கிளம்பும் போது இருந்த மனநிலைக்கும் இப்பயுள்ள மனநிலையை எண்ணியவள், மகிழ்ச்சி என்பது அவள் வாழ்க்கையில் அரிதான ஒன்றாக தான் இருக்கிறது என்ற பச்சாதாபம் தோன்றி விட்டது.
இவ்வூரில் பிறந்து ஒரு வயதுக்கு மேலே தனக்கான வாழ்வை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தும் அவளால் தனக்கான ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு அதை மீறாமல் இவ்வளவு நாள் வாழ்ந்தவளுக்குத் தனக்கான மகிழ்ச்சி சந்தோஷம் எல்லாம் தன்னிடத்திலே இருக்கிறது, அதை மற்றவர்களின் கையில் கொடுத்தால் மலரைப் போலக் கசங்கி உதிர்த்து மிதித்து விடுவார்கள் என்று எண்ணியபடி படுத்திருந்தவளுக்கு திடீர்ரென்று கௌசிக் ஞாபகம் அலையலையாக அவளுள் எழுந்தது.
அவன் அருகில் இருக்கும்போது தனக்கான பாதுக்காப்பையும் அக்கறையும் உணர்ந்தவளுக்கு, அவன் ஜேம்ஸை எதிர்த்து நேரமும் சரி, அதன் பின் அதைப் பற்றி தூண்டி துருவிக் கேட்டகாமல் அவளிடம் பேச்சை மாற்றியது கண்டு அவனிடம் ஒரு மதிப்பை உருவாக்கியது… காலையிலிருந்து அவனுடன் இருந்தபோது விகல்பமில்லாமல் பழகவும் அவனிடம் கூட இருக்கும் போது ஒரு பாதுக்காப்பை மறைமுகமாக தனக்கு உணர்த்தியதைக் கண்டு அவன் மேலே ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியது.
அதற்காக அவன் மேல் காதல் கண்றாவி எல்லாம் இல்லை … என்று அவள் தனக்குள்ள ஒரு சுய அலசலில் இருந்தவளுக்கு, இந்த ஜேம்ஸ் இனி தன் வாழ்க்கையில் எந்தயிடத்திலும் பிரச்சினை வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை நாளை ரகுவிடம் பேசணும் என்று எண்ணிக் கொண்டே விழி மூடி உறங்கினாள் ரிஹானா.
மறுநாள் விரைவில் கிளம்பி நேராக ரகு இருக்குமிடம் தேடிச் சென்றவள் அவனிடம் அமர்ந்து வெகுநேரமாகப் பேசிக் கொண்டிருந்தாள் ரிஹானா.
ரிஹானா சொல்வதைக் கேட்டபடி அமர்ந்திருந்த ரகுவிற்கோ அதீத கோபம் உண்டானாலும் இப்போதைக்கு இவளுக்கு ஒரு பாதுக்காப்பான இடம் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
''ரிஹானா இப்படி நீ வீட்டை விட்டு வெளியேறினால் தங்குவதற்கான இடம் பாதுக்காப்பான இடமாக இருக்கணும்'', என்று சொல்லிக் கொண்டிருக்க, ''அதற்கு முன் போலீஸிலும் கம்பிளைன்ட் கொடுத்து விடலாம்'', என்று சொன்னான் ரகுவரன்.
''இனி இதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீ காலையிலிருந்து காபிக் கூட குடித்திருக்க மாட்டே.. உனக்குச் சாபபிட எதாவது எடுத்து வருகிறேன்'', என்று சொல்லி ரகு எழும் போதே அங்கே வந்த கௌசிக் ''ஹாய் ரகு அப்படியே எனக்கும் சம்பார் இட்லியும் வடையும்'', என்று சொல்லி ரிஹானாவின் அமர்ந்திருக்கும் இருக்கையின் எதிர் இருக்கையில் அமர்ந்தான்.
அவனைப் பார்த்ததும் ''ஹாய் சார், இதோ உங்களுக்கு அதே கொண்டு வரேன்'', என்று சொல்லிய ரகு, கௌசிக்கை ஒரு ஆராய்ச்சி பார்வையோடு பார்த்தபடியே உள்ளே சென்றான்.
தன் எதிரில் அமர்ந்த கௌசிக் கண்டு எதுவும் பேசாமல் தன்னையே மறந்து அமர்ந்திருப்பவளைக் கண்டவன், அவள் பேசுவாளா என்று பார்த்துக் கொண்டே இருக்க, அவளோ உணர்வற்ற ஜடமாக அமர்ந்திருப்பதைக் கண்டு இன்னும் நேற்று நடந்த நிகழ்விலிருந்து வெளியே வரவில்லையா என்ற எண்ணம் உதிக்க, அவளையே பார்த்தபடி இருந்தான் கௌசிக்.
ரகு இருவருக்கான உணவை எடுத்து வந்தவன் அங்கே இருவரும் மௌன பொம்மையாக இருப்பதைக் கண்டு கௌசிக்கைப் பார்க்க அவனோ ரிஹானாவை பார்த்த பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்தது.
அவர்களுக்கான உணவை எடுத்து வைத்த ரகு அவர்கள் அருகிலே அமர்ந்து ''ஏய், ரிஹா சார் வந்து எவ்வளவு நேரமாச்சு..எங்கே வேடிக்கை பார்த்துட்ட இருக்க'', என்று கேட்டவனை நோக்கி மலங்க மலங்க விழித்தவளைக் கண்டு ஆதூரமாகப் பார்த்த ரகு, ''சார் வந்து பத்து நிமிடம் ஆச்சு அவரும் வந்தலிருந்து உன்னைக் கூப்பிட்டார் நீ தான் கவனிக்காமல் தவ நிலைக்குப் போய்விட்ட'', என்று அந்த நேரத்தை சகஜமான சூழ்நிலையை உருவாக்கக் கொஞ்சம் கிண்டலாகப் பேசினான் ரகுவரன்.
கௌசிக்கோ, ''ரகு அவள் கனவுலகில் டூயட் பாடிக்கிட்டு இருக்கா.. அதை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்றுதான் நானும் அவளையே பார்த்துக் கொண்டு இருக்கேன்'', என்று சொல்லிச் சிரித்தான் கௌசிக்.
அவன் சொன்ன பாவனையில் ரகு சிரிக்க கௌசிக் கூட சேர்ந்து சிரித்தான்.
இருவரையும் முறைத்தவள் தனக்கு முன்னே இருந்த புட்டும் கொண்டைகடலையும் பார்த்தவள் அவ்வளவு நேரமாக மனதிலிருந்த கோபதாபங்களைத் தள்ளி வைத்தவள், உணவை எடுத்து உண்ண ஆரம்பித்துவிட்டாள் ரிஹானா.
அதைப் பார்த்ததும் மேலும் சிரித்தவர்கள், ரகுவிடம் இவ்வளவு நேரம் மூக்கால் அழுத ஒருத்தி இப்ப சாப்பாட்டைக் கண்டதும் மற்றது எல்லாம் மறந்து போச்சு என்று கிண்டலடிக்க,
அவளோ ''சண்டை கோபம் எல்லாம் சாப்பாடட்டுக்கு முன்னே பறந்து போய்விடும்'',.. என்று சொன்னவள், ''வயிறு காயவிட்டு பிரச்சினைக்குத் தீர்வு கண்டு பிடிக்க மூளை போட்டுக் குழப்பிக் கொள்வதைவிட நல்ல சாப்பிட்டு ரீலாக்ஸாக யோசனை செய்தால் அதற்கு என்ன செய்யலாம் நினைச்சாலே முடிவு தெரிந்து விடும்'', என்று சொல்லியவள் தன் முன் இருக்கும் உணவை ரசித்து உண்டாள் ரிஹானா.
இடை இடையே ரகுவிடம் ''இந்தப் புட்டும் கொண்டைக் கடலை கறியும் செமயா இருக்கு'', என்று சொல்லியபடி சாப்பிடுவளை இருவருமே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர்.
கௌசிக் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு ''நீங்களும் சாப்பிடுங்கள் கௌசிக்'', என்றவனை அருகில் அமரச் சொல்லிச் சைகை செய்த கௌசிக் ரகுவிடம் குனிந்து சில விஷயங்கள் பேசினான்..
நேற்று நடந்த நிகழ்வான ஜேம்ஸ் பற்றியும் ,அதை தன் பாட்டியிடம் பேசியதும் அதற்கான தீர்வையும் மெதுவான குரலில் சொல்லியதைக் கேட்டு ரகு ஆச்சரியமாகப் பார்த்தவன், ''சார் நிஜமாக சொல்லறீங்களா'', என்று கேட்டவனின் குரலில் ''இது உண்மையாக இருக்கணுமே'', என்று ஆனந்தமும் ஆராய்ச்சி நிறைந்திருக்க பார்த்தான் ரகுவரன்.
'இப்பதான் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கண்டுபிடிக்க என்று இருவரும் டிஸ்க்ஸ் பண்ணினாலும் அதில் வரும் நல்லது கெட்டதை நினைத்து ஆராய்ந்து கொண்டியருக்கும் போது கௌசிக் சொன்னதை நினைச்சு மனமே மகிழ்ச்சி கடலில் மூழ்கியது ரகுவரனுக்கு.
அவர்கள் இருவரும் பேசுவதை ஓரக்கண்ணால் கவனித்தாலும் காரியத்தில் கண்ணாக உணவை உண்டு முடித்தவள், டிஸ்யூவில் வாயை துடைத்துக் கொண்டே ''என்ன இருவரும் எனக்குத் தெரியாமல் என்னைப் பற்றி பேசி முடிச்சாச்சா'', என்று கேட்டவளை கண்டு ரகுவை முந்திக் கொண்டு ''உன்னைப் பற்றி என்ன பேசப் போகிறோம் .. நாங்க ஒரே ஊர்க்காரங்க, இன்னும் இரண்டு நாளில் நான் ஊருக்குக் கிளம்பப் போகிறேன்.. அதைப் பற்றி தான் சொல்லிகிட்டு இருந்தேன்'', என்று சொல்லியவன் அவளை ஊடுருவிப் பார்த்தான் கௌசிக்.
ரகுவும் ரிஹானாவின் முகத்தைப் பார்த்தவன் அதில் தெரிந்த சிறு மாற்றங்களைக் கண்டு கொண்டவன் அவளாக எதாவது சொல்வாளா என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரகுவரன் .
ஆனால் அவளோ,'' ஒ.. உங்கள் ஒர்க் முடிந்தால் கிளம்பிருவீங்க தானே'', என்று சொல்லியவளின் பேச்சில் சிறு தடுமாற்றம் இருந்தாலும் ''இன்று பூங்கா போகணும் சொன்னீங்களே போகலாமா இல்லை உங்கள் புரோகிராம்மில் வேறு சேஞ்ச்ஸ் இருக்கா'', என்று கேள்வி கேட்டவளை உற்று நோக்கியவன்,
''இன்று அங்கே போக தான் போறோம்.. இன்னும் இரண்டு நாள் இருக்குல, அதுக்குள்ளே இங்கே இன்னும் சில இடங்கள், சிறு வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும்'', என்று சொல்லியவன், ''சாப்பாட்டாச்சுனா போகலாமா'', என்று கேட்டவனிடம்.. ''எஸ் சார் போகலாம்'', என்றவள் ரகுவிடம் திரும்பி'' ரீவினிங் வரேன், ரகு அதற்குள் எதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கணும்'', சிறு குரலில் கௌசிக்யின் காதில் விழாமல் மெதுவான குரலில் சொல்லியவள் அவனுடன் கிளம்பினாள் ரிஹானா.
இருவரும் ரகுவிடம் கையை ஆட்டிவிட்டுச் செல்ல, கௌசிக் சொன்னதை நினைத்தவன், அவர் சொன்னபடி நடந்தால் இந்தப் பெண்ணிற்கு நல்வாழ்க்கை அமையும்.. அவள் எதிர்ப்பார்த்தப்படியே எல்லாமே அவளின் குடும்ப வாழ்க்கை அன்பு சூழ் உலகு ஆக இருக்கும் என்று எண்ணியபடி காரில் ஏறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகுவரன்.
தொடரும்..