• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சூடிக் கொண்ட சுடர்விழியே ..9

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
அத்தியாயம்…9


கௌசிக் இன்று தானே காரை எடுத்து வந்திருந்தான்.. அதைக் கண்ட ரிஹானா ''என்ன சார், நீங்களே ஓட்டி வந்திருக்கீங்க, டிரைவர் பிரோ வருவாரே'' என்று கேட்ட படி முன் இருக்கையில் இயல்பாக அமர்ந்தாள் ரிஹானா.


''இன்னும் என்ன சார், சார் கூப்பிடரே ரிஹானா, என்னைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடு சொல்லுகிறேன்ல'', என்று சலிப்பான குரலில் கேட்டவனை,


அவன் சொன்னதைக் கேட்டு ''சாரி சாரி, கௌசிக்''.. என்று சொல்லியவள், 'ஏன் டிரைவர் வராமல் நீங்க ஓட்டிக்கிட்டு வந்திருக்கீங்க'', என்று கேட்டவள், அவள் அறிந்த வரை அவன் எவ்வளவு பெரிய பிசின்ஸ்மென் அதுவுமில்லாமல் 'பார்ன் வித் கோல்டு ஸ்பூன்:, போல பிறந்தலிருந்து சொகுசாக இருப்பவன் இங்கே சகஜமாக எல்லாரிடமும் பழகவதும் பேசுவதும் அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் அவனின் விழிகளைப் பார்க்கும்போது அவளுக்குள் ஒரு ஈர்ப்பு உண்டாக்குவதைத் தடுக்க இயல வில்லை.


ஆனால் அவ்விழிகள் கூற வரும் செய்திகளை அறிய மனம் விளைந்தாலும் அதை அவளால் நேரடியாக எப்படி கேட்பது என்று மனம் தடுமாறியது ரிஹானாவிற்கு.


ரிஹானாவின் தடுமாற்றம் கண்டவன், ''ஏன் ரிஹானா என் கூட வரப் பயப்பறீயா.. நேற்று வந்தவன் மாதிரி கைப் பிடித்து இழுத்து உன்னை மேலே பாய்ந்திருவேன் நினைக்கிறீயா'', என்று கேட்டவனின் குரலில் வெறுமை கூடியிருந்தது.


அதில் அதிர்ந்த ரிஹானா ''அய்யோ அப்படி எல்லாம் நினைக்கல கௌசிக்'', என்று பதற்றத்துடன் பதில் அளித்தவள், ''ஒருத்தர் பார்வையிலே அவர் எப்படி பட்டவர் என்று உணராமலே இத்தனை வருஷமாக தனியாக என்னை நானே பார்த்துக் கொள்ள முடியுமா'' என்று எதிர் கேள்வி கேட்டவளைப் பார்த்தவன், ''இன்று நாமே தனியாகப் போனால் என்ன தோன்றியது எனக்கு, அதுதான் .. கூட யாரோ இருந்தால் உன்னிடம் பீரியா பேச முடியல'' என்று சொல்லியவனின் குரலில் இன்று உன்னிடம் முக்கியமான விசயம் பேசப் போகிறேன் என்று சொல்லாமல் சொன்னான் கௌசிக்.


''அதுவுமில்லாமல் இங்கே உனக்குத் தெரியாத இடம் எதுவுமில்லை, அப்பறம் எதற்கு இன்னொருவர் வேலையை சேர்த்துக் கெடுப்பானே'', என்று தான் என்று சொல்லிவிட்டு அவளிடம் ''இப்ப போகிற பூங்கா பற்றி உனக்குத் தெரியும் தானே'', என்று கேட்டான் கௌசிக்..


''எஸ் எஸ். மேன் காட்டனில் அமைந்திருக்கும் மைன் பூங்காவிற்குப் போகலாம் கௌசிக் .. இப்பூங்கா இயற்கையாக அமைந்தது போல தான் இருக்கும் ஆனால் மக்களின் உழைப்பால் செப்பனிப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 30 மில்லியன் மக்கள் இப்பூங்காவைப் பார்க்க வருவதாகச் சொல்கிறார்கள் . பல ஏரிகளும், குளங்கள் பனி சறுக்குகள் அரங்குகளும் இருக்கிறது'', என்று சொன்னவள், ''அங்கே வனவிலங்கு காப்பகமும், சதுப்பு நிலங்களும் இருக்கிறது'', என்று அங்குள்ளவைப் பற்றி சொல்பவளைக் கண்டவன், மெல்லியதாகச் சிரித்து.. ''நீ சொன்னதைப் பார்த்தால் நேரில் சென்றே பார்க்க வேண்டாம் .. நீ சொல்வதை வைத்தே எல்லாமே கண் முன் காட்சியாக வருகிறது'', என்று சொல்லிச் சிரித்தான் கௌசிக்.


''கிண்டலா பண்ணறீங்க'', என்று அவளும் சிரித்தவள், மேலும் பலதை பேசியபடியே பூங்காவிற்கு வந்து சேர்ந்தார்கள்.


காரை பார்க்கிங்ல நிறுத்திவிட்டு இருவரும் இறங்கியவர்கள் அங்கே நுழைவு வாயிலில் நுழைந்து ஒவ்வொரு இடமாகச் சுற்றிப் பார்க்க கௌசிக்கை விட ரிஹானா தான் ரொம்ப ஆர்வமாகப் பார்த்தாள்.


தான் பார்த்ததை அவனிடம் பகிர்ந்தபடி நடந்துக் கொண்டே வந்தவள் ஏரியைப் பார்த்தும் ''படகில் போகலாமா'' என்று சிறு குழந்தையாக ஆர்வத்துடன் கேட்டவளைக் கண்டு "ம்ம் போகலாம் நாமே பெடல் போடுகிற படகை எடுத்துக் கொள்ளலாம்", என்று சொல்லியவன் அதைப் படகை எடுத்துக் கொண்டு பெடல் போட்டுக் கொண்டே வர ரிஹானா சுற்றி இருக்கும் ஒவ்வொரு இடத்தைப் பற்றி சிறு விளக்கம் கொடுத்தபடி வந்தாள்.


அவள் பேசுவது அவன் மனதிற்கு இனிமையாக இருப்பதால் அவன் மறு வார்த்தை பேசாமல் கேட்டுக் கொண்டே வந்தான். காலையில் ரகு சொன்ன விஷயத்தைக் கேட்டதலிருந்து அவள் மனம் சுருங்கி அச்சத்துடன் அதற்கான வழியை தேடிக் கொண்டு இருப்பாள் என்று நினைத்தால், அவளோ அதைப் பற்றிய நினைவே இல்லாமல் சகஜமான உரையாடிக் கொண்டும் கிண்டலும் கேலியுமாகவும் சுற்றிருப்பதை ரசித்துக் கொண்டு வருவதைக் கண்டவனுக்கு, அவள் மேல் இரக்கம் உருவாகியது.


தன்னுடைய பிரச்சினைக்குச் சுயப்பச்சாதாபமாக அடுத்தவர்களிடம் தேடாமல் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருப்பவளின் தைரியத்தை மெச்சிக் கொண்டான் கௌசிக்.


அவளையே பார்த்தபடி வந்தவனைக் கண்டு தன் பேச்சில் அவன் கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருப்பதைக் கவனித்தவள், ''கௌசிக் கௌசிக்'', என்று சிறு பயக்குரலில் கூப்பிட்டவள், ''அங்கே பாருங்க முதலை, முதலை'', என்று சொல்லியவளை அதிர்ந்து பார்த்தவன் அவள் சொன்ன இடத்தைப் பார்க்க அங்கே எதுவுமில்லாமல் இருப்பதைக் கண்டு அவளை முறைக்க அவளோ

கலகலவென்று சிரித்தாள் .


''உன்னை'', என்று தன் கையை ஓங்கி அவளின் தலையில் தட்டியவன், '' உனக்குக் குறும்பு கூடிப் போயிருச்சு'', என்று சொல்லியவளைக் கண்டவள், அவன் தட்டிய தலையை தடவி விட்டப்படி ''பின்னே என்ன சாரே இவ்வளவு தூரம் வந்து நானும் என் நாட்டின் அருமை பெருமைகளைக் கூறிக் கொண்டு வருகிறேன் .. நீங்க என்னவென்றால் என்னவோ பகல் கனவில் காதலியோடு டூயட் பாடிக் கொண்டே விழித்தபடியே கனவு காணுறீங்க'', என்று அவன் காலை வாரினாள் ரிஹானா.


அவள் சொன்னதற்கு சிரித்தவன் ''உனக்குக் கொழுப்பு தான்.. அது சரி ,எனக்குக் காதலி இருக்கா உனக்கு யாரும்மா சொன்னா , அப்படியே என் காதலியோடு நான் டூயட் பாடினால் உனக்கு எதும் வருத்தமா'', என்று கேட்டவனின் குரலில் இருக்கும் நய்யாண்டியில் திருதிருத்தாள் ரிஹானா .


அதைப் பார்த்தவன்'' ஹாஹாஹா'', எனச் சிரித்த சிரிப்பில் ''அய்யோ கௌசிக் நீங்க இப்படி வில்லதனமாகச் சிரித்தால் ஏரியில் இருக்கிற மீன் எல்லாம் பயந்து ஓடுவதைப் பாருங்க'', என்று அங்கே பல வண்ணமீன்கள் கூட்டமாக அங்குமிங்கும் செல்வதைக் கண்டவன் மீண்டும் இருவரும் சேர்ந்தே சிரித்து விட்டனர்.


சிறிது நேரம் இப்படி பலதை பேசிவிட்டு பனிச் சறுக்கு அரங்குள் போனவர்கள் அங்கே கொடுத்த ஆடைகளை மேலே அணிந்தபடி பனிக்கட்டிகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்தும் சறுக்கல் விட்டும் சிறு பிள்ளையாக விளையாடிவர்களின் மனம் லேசானது.


கௌசிக் பிசின்ஸ் என்று வந்தவன் தன் காரியத்தின் குறிக்கோளாக அதுவும் நல்லபடியாக முடிந்ததால் அவனின் மனம் எந்தவித டென்ஷன் இல்லாமல் தனக்குரிய நாளாக அந்நாளை அவன் மனதுக்குப் பிடித்தவளோடு என்ஜாய் பண்ணினான்.


ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகக் கூறாமல் இருக்க காரணமே அவளுக்குள் இருக்கும் காதல் கல்யாணத்தின் மீது இருக்கும் அவநம்பிக்கையால் அவளிடம் அதைப் பேசத் தயங்கிக் கொண்டிருந்தான் கௌசிக்.


திடீரென்று கௌசிக் மௌனமாக மாறி ஏதோ யோசனையோடு இருப்பதைக் கண்டவளுக்கு, அவனிடம் அளவுக்கு மீறி விளையாடிக் கொண்டிருக்கமோ என்ற எண்ணம் தோன்ற அவளும் சட்டென்று மௌனித்துவிட்டாள் ரிஹானா.


சில மணித்துளிகள் இப்படியே நகர்ந்து கொண்டிருக்க, கௌசிக் தான் முதலில் அவளின் மௌனத்தை உணர்ந்து ''ஹேய் ரிஹானா ஏன் பேசாமல் இப்படி அமைதியாக இருக்க'', என்று கேட்டவனிடம் ,


''அப்படி எதுவுமில்லை , நீங்க அமைதியாக இருக்கவும் நான் பேசித் தொந்தரவு பண்ணுகிறோனோ என்று தோன்றி விட்டது'', என்று உள்ளத்தை மறைக்காமல் கூறினாள்.


அவள் சொல்வதைக் கேட்டவனோ ''ஹாஹா நீ எனக்குத் தொந்தரவாக லூசு'', என்று சொல்ல,


அவளோ அவனை முறைத்து ''நா லூசா '',என்று கேட்டவளிடம் ''ஏய் இது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது'', என்றவன், ''நா உன்னைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்'', என்று சொல்லியவனைக் கண்டவள் முகம் மாறினாள் ரிஹானா.


'எங்கே இவனும் காதல் என்று சொல்லப் போகிறானா? அப்படி சொன்னால் நான் அவனை மறுத்துப் பேசுமளவுக்கு பேசுவானா என்ற சந்தேகமும் உதிக்க, அவனையே பார்த்தப்படி பீரிஸ் ஆகி இருந்தாள் ரிஹானா.


''ஹேய் ரிஹா என்ன பனிச் சிலையாய் உறைந்து விட்டாயா'', என்று சொல்லி அவள் முன் கையை ஆட்டியவன், ''இன்னும் மூன்று நான்கு நாட்களில் நான் இந்தியா திரும்பப் போகிறேன்.. அங்கே ஒரு பெரிய பிரஜெக்ட் எடுத்திருக்கிறோம் அதற்காகத் தான் உங்கள் கம்பெனியோட ஒப்பந்தம் போட வந்தேன் உனக்குத் தெரியும் தானே.. அதற்கு இங்கிருந்து உங்க கம்பெனியிலிருந்து ஆர்ட்டிடெக் ஒருத்தரை எங்கள் கம்பெனிக்கு வேண்டும் என்று சொல்லிருந்தோம்.. அதற்குத் தகுந்த ஆளாக உன்னைக் கம்பெனி அனுப்பி வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்காங்க.


''ஆனால் நீ அதை அக்சப்ட் பண்ணுவியா மாட்டீயா என்று யோசிக்கிறாங்க நீ இந்த ஊரை விட்டுப் போக விரும்ப மாட்டேனு ஷான்வியும் சொல்லறாங்க.. அதை உன் கிட்டே நேரடியாக விருப்பம் இருக்கா என்று கேட்கலாம் தான் யோசனை செய்துக் கொண்டிருக்கிறேன்'', என்று வார்த்தைகளை கோர்த்து பேசினான். எங்கே தன் மனக்கிடங்கில் உள்ளதை அவள் கண்டு பிடித்தால் வர மாட்டேன் என்று சொல்லிருவாளா என்று உள்ளுற ஒரு பயம் இருந்தது.


காலையில் ரகுவிடம் பேசும்போது அவளுக்குரிய பிரச்சினையை அவன் சொன்னதற்கு தான் எடுத்த முடிவை கேட்ட ரகுவிடம் தன் விருப்பத்தையும் கூறலாம் என்று நினைத்தாலும்..இப்போதைக்கு அதைப் பற்றி பேச வேண்டாம் அதற்கான நேரம் காலம் வரும் போது பேசிக் கொள்ளலாம் என்று ரகுவிடமும் சொல்லியவன், கம்பெனி விசயத்தை மட்டும் அவளிடம் சொல்லிவிடுவதாக இப்போதைக்கு அவளுக்கு இது தெரிய வேண்டாம் என்று வலியுறுத்தி சொல்லிவிட்டு நானே ரிஹானாவிடம் பேசிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான் கௌசிக்.


அதனால் கம்பெனி விசயமாகவே அவன் பேசினான் . அவளுக்குத் தன் கம்பெனிக்கு வர விருப்பம் இருக்காதா என்பதை தான் தெரிந்து கொள்ளணும் என்று ஆர்வத்துடன் அவளுடைய கம்பெனியில் இருப்பவர்கள் பேசுவதை விட தானே கேட்ட விடலாம் என்று தான் கேட்கிறேன்'', என்று கௌசிக் சொல்லவும் , ரிஹானாவோ திகைத்தாள். அவளின் மனம் சிறு ஏமாற்றமும் அடைந்தது.



தான் நினைத்தது வேறு ஒன்று அதற்கான மறுப்பை அவனிடம் எப்படி சொல்வது என்று பலவாறு சிந்தித்தவளுக்கு அவன் வேலையை பற்றிய பேச்சை கேட்டு ஏதோ மனதில் ஒரு ஓரமாக ஏமாற்றம் மிஞ்சியது . ஆனால் அதை மறைத்துக் கொண்டு இப்ப இங்கே ஜேம்ஸ் பண்ணுகிற பிரச்சினைக்குத் தற்காலிக தீர்வாக இவ்வேலை வருவதும் நல்லது தான். சில ஆண்டுகளாக இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் உண்டு. இன்று கம்பெனியே அனுப்பவதற்கு சரி என்கிற பொழுது அதை மறுக்க எதுவுமில்லை என்ற எண்ணம் அவளுள் வலுப்பெற்றது.


அதை அவனிடம் சொல்லாம் என்று திரும்பிப் பார்க்கும்போது அவனுக்கு இந்தி்யாவிலிருந்து போன் வரவும் அவன் பேசிக் கொண்டிருந்தான்.


அவன் பேசுவதைப் பார்க்கும்போது மற்றவர்கள் அவனைச் செல்லம் கொஞ்சிப் பேசுவதும் அவனும் அவர்களோடு அவனும் கொஞ்சிக் குலாவிக் கொண்டு பேசுவதைக் கண்டு மனதிற்குள் சிறு பொறாமையும் உண்டானாலும், குடும்பமே அன்பின் பிணைப்பாகப் பேசுவதைக் கண்டவளுக்குக் கண்கள் கரித்தது.


இந்த மாதிரி அன்பை பொழியும் உறவுகள் தனக்கு யாரும் இல்லை என்று நினைக்கும்போது மனம் வலிக்க, அவ்விடத்தை விட்டு எழுந்தவளை கவனித்தவனோ போன் பேசியபடி தன்னை நோக்கி இழுக்க அவளோ பேலன்ஸ் தவறி அவன் மேலே விழுக போனவளை ஒற்றை கைகளால் பிடித்துத் தன்னருகில் அமர வைத்தான் கௌசிக்.


சொற்ப வினாடியிலே மனதில் பயபந்தை அவளுள் உணர்ந்தவள் ஒருவித தவிப்போடு அவனைப் பார்க்கத் தன் கையிலிருந்த அலைபேசியை அவளிடம் நீட்டி ''இந்தா என் பாட்டி உன்னிடம் பேசணுமா'', என்று நீட்டவும், அவர்கள் தன்னிடம் என்னப் பேசப் போகிறார்கள் என்று அவன் முகத்தைப் பார்த்தபடியே வாங்கினவள் ''ஹலோ'', என்று சொல்ல, அங்கிருந்த வேதவல்லியோ மடை திறந்த வெள்ளமாக பேச ஆரம்பித்து விட்டார். அவர் பேச்சில் இருக்கும் அன்பில் நெக்குருகிப் போய் அமர்ந்திருந்தாள் ரிஹானா.


''ஹலோ ரிஹானா ஹௌ ஆர் யூ? எப்ப இந்தியா வர.. உன்னைப் பார்க்கணும்னு எங்களுக்கு எல்லாம் ஆசையா இருக்கு.. உன் வேலை பற்றியும் அதில் நீ சொல்லும் ஐடியாக்களை பற்றி கௌசிக் சொன்னான்.. அவன் ஒருவரை பாராட்டிப் பேசுவது முதல் தடவை அது தான்'', .. என்று பேசிக் கொண்டே இருந்தவர் , ''பாரேன் உன்னைப் பேச விடாமல் நானே பேசிக்கிட்டு இருக்கேன்", என்று சொல்லியவர், "உனக்கு இந்தியா உணவு எல்லாம் ரொம்ப பிடிக்குமாமே அதையும் சொன்னான்.. ''நியூயார்க் வந்த நாலே நாளில் உன்னைப் பற்றியே தான் பேச்சே'', என்று சொல்லியவரிடம் என்ன சொல்லுவது என்று புரியாமல் திகைத்தவள்,


''பாட்டி அது அது'', வார்த்தைகள் வராமல் திகைத்தவள் கண்டு வேதவல்லியோ ''நீ இந்தியா வாம்மா, இங்கே வந்தால் எல்லாமே உனக்குப் பிடிக்கும் .. நீயும் பாதுகாப்பாக தங்க எல்லா வசதியும் உண்டு பயப்படாமல் வாம்மா'', என்று சொல்லியவர் அவளைப் பேசவே விடவில்லை. தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு ''கௌசிக்யிடம் கொடும்மா'', போனை என்று சொல்லவும் அவனிடம் போனை நீட்டினாள் ரிஹானா.


''என்ன பாட்டி முதல் தடவையை பேசியே பயப்படுத்திட்டே போல இங்கே ரிஹானா அப்படியே உறைஞ்சு போய் இருக்காங்க'', என்று சொல்லியவனிடம், ''நான் பயப்படுத்திறேன்.. போடா போடா

நீதான் பயந்தாங்கொலியா மனசிலே இருப்பதை சொல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொட்டுக் கிட்டு இருக்கே'', என்று அவனை வாரியவர் ''சீக்கிரம் கிளம்பிற வழியை பாரு.. இன்னும் நான் இதைப் பற்றி மற்றவர்களிடமும் பேசணும்'', என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் வேதவல்லி.


''மழை பெய்ஞ்சு ஓய்ந்தது போல இருக்கும் எங்க பாட்டிடம் பேசினால்'', என்று சொல்லிச் சிரிக்க அவளும் லேசாக சிரித்தபடி ''என்னைப் பற்றி அவர்களிடம் எல்லாமே சொல்லிருப்பீங்க போல'', என்று கேட்டாள் ரிஹானா.


''ம்ம்ம்''.. சொன்னவன், அதற்கு மேல் பேசாமல் ''கிளம்பலாம்'', என்றவன், ''நாளை உன் முடிவை சொன்னால் அதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்ய முடியும்'', என்று சொல்லியவனின் மனமோ படபடத்தது. எங்கே வர மாட்டேன் சொல்லிவிடுவாளோ என்று… அவன் முகமே நிறம் மாறியது


அதைக் கண்டவள்'' ம்ம்… நாளை ஆபீஸில் பேசி இந்தியா வருவதற்கான பார்மாலீட்டீஸ் எல்லாம் பார்க்கலாம்'', என்று அவனிடம் நேரடியாகவே சம்மதம் சொன்னாள் ரிஹானா.


கௌசிக்கிற்கோ அப்படியே சிறு பிள்ளை போல குதித்து ஆடணும் போல இருக்க மகிழ்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்தவன் ''ரொம்ப தேங்க்ஸ் ரிஹானா'', என்று சொன்னான் கௌசிக்.


தொடரும்
 
Top