• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
தன் கன்னத்தில் முத்தமிட்ட குழந்தைக்கு தானும் முத்தமிட்டு அன்னையை நோக்கிச் செல்லுமாறு கைகாட்டிய ராமை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டது அந்த குழந்தை.

"இந்த பாப்பா யாரு பையா?" என்று அருகில் இருந்த அபி ராமிடம் வினவிட,

"என் பொண்ணு சோட்டூ" என்றான் ராம்.

அபியோ அதிர்ச்சியோடு என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில் இருந்தான்.

"பையா!!! ஆர் யூ க்ரேசி? என்ன உலறிங்க?"

"கூடிய சீக்கிரமே இவங்க அம்மாவை கல்யாணம் செய்துக்கப் போறேன் சோட்டூ... அப்போ இவ என் பொண்ணு தானே!!!" என்றவன் அபி என்ன நினைக்கிறான் என்று கூட யோசிக்கத் தோன்றாமல், தன் போக்கில் அவனிடம் பேசிக் கொண்டே இருந்தான் ராம்.

"சோட்டூ எனக்கு தமிழ் கத்துக்கனும். என் பொண்ணு கூட பேசுறதுக்கு... எனக்கு சொல்லித் தாயேன்."
"பையா என்ன நடக்குது இங்கே? நீங்க என்ன என்னென்னவோ சொல்றிங்க... எனக்கு ஒன்னும் புரியல... கொடி பெரியம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா? நம்ம தாத்தா என்ன சொல்லுவாறு எதுவுமே யோசிக்காம பேசுறிங்க..... ஃபஸ்ட் இந்த குழந்தை யாருதுனு சொல்லுங்க?" என்று அதிர்ச்சியும் கோபமுமாகக் கத்தினான் அபி.

அபியின் இந்த டென்ஷனுக்குக் காரணமானவனோ அந்தச் சிறுமியின் சிரிப்பில் தொலைந்து கரைந்து கொண்டே,

"சோட்டூ பாப்பா பெயர் என்னனு கேட்டு சொல்லேன். நான் கேக்குறதும் அவளுக்கு புரியலே. அவ சொல்றதும் எனக்குப் புரியலே... ப்ளீஸ் நீ கேட்டு சொல்லேன்..." என்றான்.

தன்னிலை மறந்து பிதற்றிக் கொண்டிருக்கும் ராமை ங்ஙே..வென வாய் பிழந்து பார்த்தான் அபி.
'என் பொண்ணுனு சொல்றாங்க, இந்த பாப்பாகிட்ட பேசுறதுக்காக தமிழ் கத்துக்கப் போறேன்னு சொல்றாங்க... ஆனால் குழந்தை பேர் கூடத் தெரியலே... ஒரே கொழப்பமா இருக்கே...!!!' என தன் மனதிற்குள் ஏற்பட்ட குழப்பத்துடன் போராடிக் கொண்டிருந்த அபியிடம் எந்த அசைவும் இல்லை என்றவுடன், அவன் தலையில் தட்டி

"சோட்டூ... பாப்பா பேர் கேளு டா" என்றான் ராம்.

"பாப்பா, உங்க பேர் என்ன?" என்று அபி அந்த குழந்தையைப் பார்த்து மென்மையாக அன்பாக வினவினான்.

"பெம்பாவே...." என்று தன் மழலை மாறாமல் உரைக்க, ஆண்கள் இருவரும் ஒன்று புரியாமல் உறைந்து நின்றனர்.

அபியோ மீண்டும் மீண்டும் பல முறை கேட்டுப் பார்த்தான். ஆங்கிலத்திலும் கேட்டுவிட்டான், அனைத்திற்கும் குழந்தையின் ஒரே பதில் "பெம்பாவே" என்று தான் வந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான சிறுமி அபியைப் பார்த்து "உன் தலை" என்று அவன் நெற்றியில் அடித்து தள்ளிவிட்டது.

"ஒனக்கு ஒரு தப சொன்னா புர்யாதா? திம்ப திம்ப கேக்குற நீ? ஒ காது என்ன டமாரமா? லூசு... லூசு..." என்றிட, அபியோ பாவம் போல் தன் அண்ணனைப் பார்த்தான்.

"பாப்பா என்ன சொல்லுது?" என்று கேட்ட ராமிடம் குழந்தையின் பேச்சைக் கூறிட ராமோ பொங்கி வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்கத் தொடங்கினான்.
தூரத்தில் இருந்து இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியின் பாட்டி அவளின் கடைசி வார்த்தையில் அவர்கள் அருகில் வந்து,

"ஏய் வாயாடி... என்ன பேச்சு இது. சாரி சொல்லு..." என்றிட, முதலில் சிலுப்பிக் கொண்டாலும் பின் "சாரி சோட்டூ" என்று ராமைப் போல் கூறிவிட்டு தன் பாட்டியிடம் தாவியது.
சிறுமியின் பாட்டியைக் கண்ட அபி அதிர்ச்சியில் மீண்டும் உரைநிலைக்குச் சென்றான். ராம் அவனை உலுக்கி "சோட்டூ பேர் கேளு" என்றிட,
"பையா இது யாருனு தெரிஞ்சு தான் பேசுறிங்களா?"
"சோட்டூ நாம பேசிக்கிற நேரமா இது, நீ அவங்ககிட்ட பாப்பா பேர் கேளுடா..."
"பையா... இந்த பாப்பாவோட அம்மா யாரா இருக்கும்னு உங்களால கெஸ் பண்ண முடியுதா? ஏன் இப்படி நடந்துக்கிறிங்க?"
"கெஸ் பண்ணுறது என்ன!!! அது யாருனு எனக்கு நல்லாவேத் தெரியும். அவங்க போறதுக்குள்ள மரியாதையா பேரைக் கேட்டு சொல்லு" என்று சத்தமே இன்றி உதட்டை மட்டும் அசைத்துப் பேசிக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் கிசுகிசுப்பாக பேசிக்கொள்ள அதனைக் கண்ட அந்தப் பெண்மணி அபியிடம்

"எதுவும் கேட்கனுமா தம்பி?" என்றிட,
"நத்திங்" என்று கூறிக்கொண்டே இடவலமாக தலையசைத்த அபியின் கால்களை ராம் மிதித்திட

"ஆஆஆஆமா பெரியம்மா... பாப்பா பேரென்ன பெரியம்மா?" என்று கேட்டான் அபி.

அந்த சிறுமியோ அபியை பார்த்துக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டு "ஹையோ... ஹையோ... மைமி சொல்லாதிங்க... எத்தனிவாட்டி சொன்னாலும் திம்ப திம்ப கேப்பாங்க அங்கிள்...." என்று அழுத்துக் கொண்ட சிறுமி, மாம்மை என்று அழைக்கத் தெரியாமல் மைமி என்று அழைத்தது
தன் பேத்தியை அமைதியாக இருக்கும் படி கூறிவிட்டு "வெண் பாவை" என்று கூறி அவ்விடம் விட்டுச் சென்றார், சிறுமியின் பாட்டி விமலா.

"ஸ்வீட் நேம்ல சோட்டூ..." என்றவனின் கண்கள் இப்போது வெண்பாவின் அன்னையத் தழுவிட அபி தன் தமையனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல பையா!!!" என்று தன்னை வளர்த்தவரின் வளர்ப்பு தவறிவிட்டதோ என்ற ஐயத்தில், நேத்ராவை தன் கண்களாலேயே விழுங்கிக் கொண்டருந்த ராமைப் பார்த்துக் கூறினான் அபி.

தன் அனுஜனை ஆழ்ந்த பார்வை ஒன்றை பார்த்தபடி "எதை?" என்றான் ராம்.

"பையா... நீங்க நேத்ராகிட்ட நடந்துக்கிற முறை தப்புனு படுது.... " என்று தமையனாலும் தவறு என்பதை சுட்டிக்காட்டினான் அபி.

"ஓஓஓ.... இத்தனை நாள் ராம் பையா செய்றது தான் சரினு எனக்கு சப்போர்ட் பண்ணுவே.... இப்போ தப்பு.... எப்போதுல இருந்து இப்படி மாறின அபினவ்.... எல்லாம் இந்த நேத்ரா வந்த பின்னாடி தானே.... நீ முன்னே மாதிரி இல்ல சோட்டூ.... நீ மாறிட்ட... உனக்கு இப்போலாம் என்னை விட அவ தான் முக்கியமா போய்ட்டல..." என்றான் முகத்தைத் தீவிறமாக வைத்துக் கொண்டு.

"நான் மாறல பையா... நீங்க தான் மாறிட்டிங்க... ஒரு கல்யாணம் ஆன பொண்ணை கையப் பிடிச்சு வம்ப பண்றளவுக்கு உங்க எண்ணங்கள் மோசமா மாறிடுச்சி... கேட்டா கல்யாணம் செய்துக்கப் போறேன்னு சொல்றிங்க... முன்னமாவது நேத்ரா நம்ம பிஸ்னஸ் டீலர் தான்... அப்போ நீங்க கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்டிருந்தா தப்பில்ல... ஆனால் இப்போ.... இது சரியில்லை பையா.....

இதுல நம்ம மிதுன் அண்ணியோட வாழ்க்கையும் இருக்கு... உங்களுக்கு நல்லது கெட்டது சொல்றதுக்கு எனக்கு வயசும் அனுபவமும் இல்லை தான். ஆனால் சொல்ல வெச்சிட்டிங்க... இனிமேலாவது பார்த்து நடந்துக்கோங்க..." என்று கூறிவிட்டு விறுவிறு என்று அங்கிருந்து சென்றுவிட்டான் அபி.

தனக்கு அறிவுரை வழங்கிச் செல்லும் தன் தம்பியை நினைத்து பெருமிதம் கொண்ட ராம், தன் தாத்தாவுடன் தனியாக அமர்ந்திருந்த மிதுன்யாவிடம் சென்றான்.

"பவன் எங்கே போனார் மிதுன்?" என்றான்.

அவள் கை காண்பித்த திசையைக் கண்டவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஏனென்றால் அங்கே வெண்பாவிடம் அதி தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான் பவன்.

"நீங்க இவ்வளோ நேரம் எங்கே இருந்திங்க ராம்?"

"வெளிய தான் இருந்தேன் மிதுன்... ரிஸப்ஷன் எப்படி போச்சு? எல்லாம் ஓகே தானே?"

அவர்களின் பேச்சில் இடைப்புகுந்தார் லட்சுமணன், "எங்க வீட்டு மூத்த பேரன் இங்கே இல்லாதது தான் குறை. மத்தபடி அவன் ஏற்பாட்டில் எல்லாம் நல்லபடியா தான் நடந்தது" என்று அவன் இங்கே இல்லாமல் போனதை கோபமும் வருத்தமுமாகக் கூறினார்.

"சாரி தாத்தா... கொஞ்சம் மைண்ட் அப்செட்டா இருந்தது. அதான் வெளியே போய்யிருந்தேன்" என்று தன் தாத்தனின் அருகில் சென்று அமர்ந்து காக்கா பிடிக்கத் தொடங்கினான்.

அதற்குள் பவனும் வந்துவிட மிதுன்யாவிடம் "மித்து நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமே... வீட்டுக்குப் போனா உன் வசதிப்படி ட்ரெஸ் பண்ணிக்க முடியும்... நீ என்ன சொல்றே?" என்று அவள் காதருகே சென்று கூறினான்.

'நான் இவன்கிட்ட பேச விரும்பலேனு தெரிஞ்சும் இவனால எப்படி என்கிட்ட சகஜமா பேச முடியுது... ரெம்பத் தான் அக்கறை... வந்துட்டான் எனக்கு நல்லது சொல்றதுக்கு... ஒருவேளை நீ வீட்டுக்கு போனு என்னை மட்டும் விரட்டுறானா?!!! துரைக்கு அப்படி என்ன கழட்ற வேலை இங்கே இருக்காம்.... ஏதோ இருந்துட்டுப் போது நாம கொஞ்ச நேரம் இவன் தொல்லை இல்லாம ஃப்ரீயா இருக்கலாம்...' என்று தவறாக சிந்தித்தவள் அவனிடம் பதிலுரைக்காமல், லட்சுமணனிடம்...

"தாத்தா... எனக்கு டயர்டா இருக்கு. நாம வீட்டுக்குப் போலாமா?" என்றிட
அவரோ 'மறுவீடு அழைப்பு இருக்கிறதே... மாப்பிள்ளை வீட்டிற்கு அல்லவா அழைத்துச் செல்ல வேண்டும். நேத்ரா வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார்களே...' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
சுஷேண்-குந்தவியின் திருமணத்தில் மணமகன் முறைப்படி தான் சம்பிரதாயங்கள் நிகழ்ந்தது. அதே போல் இப்போதும் தமிழ் முறைப்படியே சம்பிரதாயங்கள் நடக்கட்டும் என்ற சுஷேணின் வார்த்தைகளுக்கு இணங்கி அனைத்தும் தமிழ் முறைப்படியே செய்தனர்.

லட்சுமணன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சொல்லி வைத்தார் போல் கங்காதரனும் விமலாவும் லட்சுமணனிடம் வந்தார்கள். மறுவீடு அழைத்துச் செல்ல பெண்ணின் அன்னை தந்தையரை ஆசிர்வதிக்க அழைத்தார் லட்சுமணன்.

மூத்த தலைமுறையான லட்சுமணனும், மலையரசியும் திருநீறுயிட்டு ஆசிர்வதிக்க, அதன்பின் பாரிவேந்தன்-பூங்கொடி, புகழேந்தி-மீனாட்சி, சுஷேண் கிருஷ்ணன்-குந்தவி என அனைவரும் திருநீறு பூசி ஆசிர்வதித்து கங்காதரன் குடும்பத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

இவ்வளவு நேரம் தன் சொந்தங்களுடன் இருந்தவள் இந்த சடங்கை துளியும் எதிர்பார்த்திடவில்லை... பவனுடன் காரில் ஏற்றிவிட்டுவிட்டு தன் சொந்தங்கள் காருக்கு வெளியே நின்று கையசைத்திட அவளின் இருதயம் வெளியே வந்து துடித்தது.

முதல் நாள் பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தை போல் 'நான் போக மாட்டேன். உங்களோடேயே இருங்கேன்' என்று கூறி வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு... அதிர்ச்சியுடன் கண்ணீருமாக அவளின் கண்கள் 'என்னோடான இந்த குடும்பத்தின் உறவு அவ்வளவு தானா?!!!' என அவளின் கண்கள் வினவிட, அதனை உணர்ந்து கொண்டவர்களின் கண்களும் கலங்கியதேத் தவிற பதிலளிக்கவில்லை... கார் நகர ஆரம்பித்ததும் தலையை வெளியே நீட்டி, தெருவைத் தாண்டும் வரை தன் குடும்பத்தை கண்களில் நிரைத்துக் கொண்டாள்.

-ஊடல் கூடும்.​
 
Top