• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ராவின் வீடு, முன்புற கார் பார்க்கிங்கை அடுத்து திறந்த வெளி வராண்டாவும், உள்ளே நுழைந்தவுடன் பெரிய ஹாலில் இரண்டு படுக்கை அறை மற்றும் சாமியறையும், பின்கட்டில் சமையலறையும் பின்வாசலும் என விசாலமான வீடாக இருந்தது. மேலே ஒரு ஹால் மற்றும் நான்கு படுக்கையறை கொண்ட விருந்தினர் மாளிகை போல் இருந்தது.
கீழே ஹால் சோஃபாவில் அமர்ந்து வெண்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் மிதுன்யா...

"மிதும்மா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடும்மா... ஈவ்னிங் உங்களை அழச்சிட்டு போக சித்தி சித்தப்பா வருவாங்க... மாடில ரூம்ல பவன் இருக்கான், அங்கே போறியா இல்லே கீழ் ரூம்ல இருக்கியா?" என்று வினவினார் விமலா.

"இல்லே... நான் இங்கேயே இருக்கேன்" என்று எங்கோ பார்த்து பதிலளித்தாள்.

பட்டும் பாடாமலும் வந்த அவளின் பதிலில் மென்னகை புரிந்த விமலா,

"உன் கோபம் எனக்குப் புரியுதுடா... உன் கோபத்தை உன் புருஷன்கிட்ட எவ்வளவு காட்ட முடியுமோ தாராளமா காட்டிக்கோ... 'என் புள்ளைய நீ எப்படி அடிக்கலாம்னு' ஒரு நாளும் சண்டைக்கு வரமாட்டேன்.
இப்போ நீ ரெம்ப டயர்டா தெரியிறே... கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து ரெஃப்ரெஷ் பண்ணிக்கோ... திரும்போ நீ உன் அம்மா முன்னாடி நிக்கும் போது சோர்ந்த முகத்தோட இருந்தா அவங்க மனசு கஷ்டப்படாதா? சொல்லு..."

தன்னிடம் இலகுவாக பேசும் விமலாவைக் கண்டு அவள் மனம் இலகியது. அவர் கூற்றில் மற்ற அனைத்தையும் விடுத்து

"அப்போ உங்க புள்ளைய அடிச்சா என் கூட சண்டை போட மாட்டிங்களா?" என்று வருத்தமாக வினவிட,

"ஓஓஓ... உனக்கு உன் புருஷனை அடிக்கிறத விட மாமியார் மருமக சண்டை தான் பிடிச்சிருக்கா?" என்று சிரித்துக் கொண்டே வினவிட,

"அது அப்படி இல்லே அத்தமா... ஜஸ்ட் இமாஜின்... உங்க பையன் என்கிட்ட ஈவ்னிங் அடி வாங்க.... நீங்க அதுக்கு மார்னிங் என் கூட சண்ட போட... அப்படியே ஒரு ஜாலியா இருந்தா தானே... டே அன்ட் நைட் செம என்ட்டர்டைன்மெண்ட்டா இருக்கும்... இப்போ நீங்க சண்ட போடலேனா நான் டே டைம்ல என்ன செய்வேன்?"

"அப்படிங்குற.... அப்போ டெய்லி சண்ட போட்டுக்கலாம். ஆனா ஒரு கன்டிஷன்... யாரு சண்டை ஆரம்பிக்கிறாங்களோ அவங்க தான் நைட் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து காம்ப்ரமைஸ் பண்ணனும்....." என்று கூறி சிரித்திட,

மீண்டும் இலகியது மிதுன்யா தான். பதிலுக்கு அவளும் மெல்லிய சிரிப்பை சிந்திவிட்டு கீழிருக்கும் அறைக்குள் சென்றுவிட்டாள்.
தூக்கம் சிறிதும் அருகில் வந்திடாத நிலையில் குழப்பங்கள் தானாகத் தேடி வந்து அவள் மூளையைக் குடைந்தது. 'பவன் அன்னையிடம் எப்படி என்னால் இயல்பாகப் பேசிட முடிந்தது. அவரை எப்படி அத்தமா என்று அழைத்தேன். என்று மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அதற்கு ஒரு தீர்வும் கண்டு பிடித்திருந்தாள். தன் சோர்ந்த முகத்தைக் கண்டால் தன் அன்னை வருத்தப்படுவார் என்று கூறியதில் மாமியாராக இல்லாமல் அன்னையாக இருந்து யோசித்திருக்கிறார் அந்த பேச்சில் தான் தன் மனம் இலகியிருக்கக் கூடும் என்று ஒரு முடிவுக்கு வந்து அமைதியடைந்தாள்.

இரவு நெருங்கும் நேரம் புதுமண தம்பதிகளை அழைத்துச் செல்ல புகழேந்தியும் மீனாட்சியும் வந்திருந்தனர். இவர்களுடன் ராம் வந்திருந்தான். மூவரும் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து வெண்பா ராமிடமே ஒட்டிக் கொண்டிருந்தாள்.

"அங்கிள்... எங்கூட வாங்க... நாம ப்ளே ஸ்டேஷன் வியாடலாம்..." என்று அவன் காதில் ரகசியமாகக் கூறினாள்.

ராம் தன்னுடன் வர மறுத்த அபியை இப்போது தாலித்துக் கொண்டிருந்தான். 'அடப்பாவி சோட்டூ... நேரம் பார்த்து என்னை பழிவாங்கிட்டியே டா... இப்போ வெண்பாகுட்டி என்ன கேக்குறானு புரியலயே... என்ன செய்வேன்??!!!' என்று தன் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கே நேத்ரா அனைவருக்கும் சூடான இஞ்சி டீயுடன் வந்து நின்றாள். அவளிடம் கேட்கலாமா என்று தோன்றிட, 'நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதடா' என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு, அவளிடம் வினவினான்.

"என் பொண்ணு என்ன கேட்டிருந்தாலும் செய்து கொடுக்க நான் இருக்கேன். நீங்க அவ பேசுறது புரியலயேனு கவலைப் பட வேண்டாம்." என்று அவளுக்கே உண்டான திமிருடன் கூறிட அப்போதும் அவன் மனம் அதனை ரசிக்கத் தான் செய்தது.

வெண்பாவை கங்காதரனுடன் மாடியறைக்கு அழைத்துச் செல்லுமாறு பணிந்தாள்.

மிதுன்யா தனக்கான அறையில் தயாராகிக் கொண்டிருக்க, பவன் மாடியில் மற்றொரு அறையில் தயாராகிக் கொண்டிருந்தான். நேத்ரா பின்கட்டுக்குச் செல்வதை கவனித்த ராம் தன் சித்தி மற்றும் சித்தப்பாவிடம்,

"சித்தி நீங்க மிதுன் ரெடியானு பாருங்க..." என்று அனுப்பி வைத்தான்.

அவரும் சரி என்று கூறி எழுந்து சென்றார்.

"சித்தப்பா நீங்க ஏன் இங்க உக்காந்திருக்கிங்க... நீங்களும் பவன் ரெடியானு பார்த்துட்டு வாங்க" என்றிட,

அவரோ "டேய், வயசு பையன் நீ போடா... என்னை ஏன் டா அண்ணன், தம்பிக்கு நடுவுல கோர்த்துவிடுற. மாப்பிள்ளை ரெடியானதும் கீழே வருவாரு. நான் எங்கேயும் போகல..." என்று மறுத்துவிட்டார்.

"என்ன சித்தப்பா... உங்களையும் பெரிய மனுஷனா மதிச்சி அனுப்பி வெச்சிருக்காங்க... வீட்டு மாப்பிள்ளைய அவர் ரூம்ல போய் பார்த்துட்டு அழச்சிட்டு வர சொன்னா அதைக் கூட செய்யமாட்டிறிங்க... உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல சித்தப்பா... உங்ககிட்ட நான் இதை எதிர்பாரக்கல சித்தப்பா... நானே இவ்வளோ வறுத்தப்படுறேன்னா தாத்தா கேள்விபட்டார்னா 'எனக்கு இப்படி ஒரு பையனானு' அசிங்கப்படுவாரு" என்று மரியாதையாக கழுவிக்கழுவி ஊத்தினான்.

"எப்பா சாமி உங்கிட்ட உன் மொழில திட்டு வாங்குறதுக்கு அண்ணன் தம்பிகளுக்கு நடுவுல நந்தியா கூட இருந்துக்கிறேன் டா... ஆளை விடுடா சாமி" என்று எழுந்து சென்றார் புகழ்.

அடுத்த நிமிடமே பின்கட்டுக்குச் சென்றிருந்தான் ராம். அங்கே சாமிக்கு செம்பருத்திப் பூ பரித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. உயரத்தில் இருந்த பூவை பரிக்க கை உயர்த்திட அவள் கைபிடித்து தன் புறம் திருப்பினான்.

"வெண்பா உன் பொண்ணு தான் இல்லேனு சொல்லலே... அவளுக்கு அம்மாவா நீ செய்ய நினைக்கிறத செய்... ஆனால் அவ என்கிட்ட என்ன கேட்டாலும் அப்பாவா இருந்து நான் செய்து கொடுப்பேன்... அதை தடுக்க நினைக்காதே... தடுக்க நெனச்சாலும் முடியாது" என்று கூறி முடித்திருக்க அவனை அடிக்கக் கை ஓங்கியிருந்தாள்.

அவளின் செயல் இதுவாகத் தான் இருக்கும் எனக் கனித்திருந்தவன் அவளின் கையைப் பிடித்திருந்தான்.
அவனின் பிடியில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டவள்,

"யாரு பொண்ணுக்கு யாரு டா அப்பா??? பார்க்லே நீ பேசினதுக்கு எல்லாம் அமைதியா இருந்துட்டேனு திரும்பவும் வம்பு பண்ண நெனைக்காத..."

"எனக்கு கூட நீ அமைதியா இருந்தது பிடிக்கலே தரு... இந்த வாய்த்துடுக்கும் திமிரும் ஈவ்னிங் மிஸ்ஸிங்... அப்பறம் நம்ம வெண்பா குட்டிக்கு எல்லாம் புரியுற வயசு வந்திடுச்சி... அதனால அவ முன்னாடி அடிச்சிடாதே... கன்னத்துல அடிச்சா மட்டும் எனக்கு கோபம் தலைக்கு ஏறிடுது. அப்பறம் நானும் பதிலுக்கு ஏதாவது செய்து வெச்சா வெண்பா தான் பயந்துடுவா..." என்று பேசிக் கொண்டே அவனும் இணைந்து பூ பரித்துக் கொடுத்தான்.

அவன் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் அங்கிருந்து செல்ல எத்தனித்தவளை கைபிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து நிருத்தி வைத்தான்.

"பேசிட்டு இருக்கும் போதே எங்கே டி போற!!!" என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டே கூறிட, அவளோ பூக்கள் சிந்தாமல் தன்னை மீட்டுக் கொள்ள அவனுடன் போறாடிக் கொண்டிருந்தாள்.

அவனோ மற்றொரு கையால் அவளின் அக்மார்க் கொண்டையை அவிழ்த்துவிட்டான். அவளின் இடை தாண்டி வந்து விழுந்த நீண்ட கூந்தலைக் கண்டு பிரமித்தவன், அந்த கார்குழலில் கை வைத்து ரசித்திட, பெண்ணவள் கூச்சத்திலும் அறுவறுப்பிலும் அவனின் கைப்பிடியிலேயே நெளிந்தாள்.

"என் அம்மாக்கு இந்த மாதிரி நீண்ட கூந்தல் இருக்க பெண்ணை ரெம்ப பிடிக்கும்... தளர்வா பின்னலிட்டு தலை நிறைய பூ வெச்சா ரெம்ப அழகா இருக்கும். நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் தினம் தினம் உன்னை பூ வைக்க சொல்லி ரசிச்சு பார்த்துட்டே இருப்பேன்..." என்று காதல் பித்தின் காரணமாக புலம்பிக் கொண்டிருந்தான்.

"அம்மா..." என்ற வெண்பாவின் அழைப்பில் சடாலென அவன் பிடியில் இருந்து தன் கையை உருகிக் கொண்டவள் தன் பிள்ளைச் செல்வத்தைக் கண்டிட, சிறுமியோ கண்களை விரித்து வாய் பிழந்து
"வா...வ்" என்று கூறி அசையாமல் நின்றிருந்தாள்.

அச்சிறுமியின் செய்கையே கூறியது தன் அன்னையின் கூந்தலை இன்று தான் காண்கிறாள் என்பதை.

இதனைக் கண்ட ராம் 'தன் குழந்தையிடம் கூட தன் உண்மை சொருபத்தை காண்பிக்காத அன்னையா இவள். வீட்டில் கூட குழந்தை இங்கே தங்கியதற்கான அடையாளமே இல்லையே...
இவளுக்குள் இன்னும் எத்தனை ரகசியங்கள் மறைந்திருக்கிறதோ...' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

வெண்பாவின் பின்னாலேயே வந்த கங்காதரனைக் கண்டு "என்னாச்சு மாமா? ஏன் வெண்பா கீழே வந்துட்டா?" என்று வினவினாள் நேத்ரா...

-ஊடல் கூடும்...​
 
Top