• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"என்னாச்சு மாமா? ஏன் வெண்பா கீழே வந்துட்டா?" என்று நேத்ரா கங்காதரனிடம் கேட்டாள்.

"பொம்மிக்கு ராம்கிட்ட அவளோட டாய்ஸை காண்பிக்கனுமாம். அவரை அழச்சிட்டு போகத் தான் வந்திருக்கா" என்று ராமை பார்த்துக் கொண்டே கூறினார்.

ராமிற்கு தன்னைப் பற்றி தான் ஏதோ பேசுகிறார் என்று மட்டும் புரிந்தது. நேத்ராவையும் கங்காதரனையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

கங்காதரனின் கண்கள் தன்னை ஆழம் பார்ப்பதையும் அவனால் உணர முடிந்தது. அந்த பார்வையில் சிறிய மிரட்டல் கூட இருந்ததை அறிந்தான். அதற்காக அவன் தலை குனிந்திடவில்லை. இன்னும் இன்னுமே நிமிர்ந்து நின்றான். உதட்டோர மென்னகை அவனின் துணிச்சலை பறைசாற்றியது.

பின் வெண்பா அவன் கையைப் பிடித்து இழுத்திட அச்சிறுமியின் இழுப்பில் அவள் பின்னால் சிறுவனைப் போல் பயணித்தான். செல்லும் முன் அவனது கண்கள் நேத்ராவிடம் விடை பெறவும் தவறவில்லை.

'வெண்பாவிற்கு ஒரே நாளில் ராமின் மேல் எவ்வாறு இப்படி ஒரு பிடிப்பு வந்தது!!!' என்று யோசித்து மனம் கலங்கி நின்றிருந்தாள் நேத்ரா...

"சிவாம்மா என்னடா யோசிக்கிறே? ஏன் முகம் வாட்டமா இருக்கு?" என்றார் கங்காதரன்.

"மாமா உங்களை விரட்டுறதா நினைக்காதிங்க மாமா... வெண்பா இங்கே இவங்களோட பழகுறது எனக்குப் பிடிக்கலே... நீங்களும் அத்தையும் பொம்மிய கூட்டிட்டு நாளைக்கு மதுரை போய்டுறிங்களா?"

"சிவா என்னடா நீயே இப்படி யோசிக்காம பேசினா எப்படி டா? அப்படி செய்தா அவங்க குடும்பத்தை அவமானப்படுத்தின மாதிரி ஆகிடாதா?"

"புரியுது மாமா... ஆனா பொம்மி....?"
"நீ இன்னும் மாறவே இல்லை சிவா... உன்னால இன்னமும் இதை உன் குடும்பாவும், எங்களை உன் சொந்தமாகவும் நினைக்கத் தோனவே இல்லேயா?!!"

"அப்படிலாம் இல்லே மாமா... ஏன் இப்படி கஷ்ட்டபடுத்துற மாதிரி பேசுறிங்க?"

"பின்னே என்ன ம்மா... சின்ன வயசுலே இருந்து உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அந்த தடி பசங்க ரெண்டு பேரும் தான் உனக்கு பாடிகார்ட் மாதிரி பின்னாடியே சுத்திவந்து தீர்த்து வைப்பானுங்க. நீ ஒரு வார்த்தை இது தான் பிரச்சனை இவனாலத் தான் எனக்கு பிரச்சனைனு உன் வாய் திறந்து சொல்லிருக்கேயா?!!! இதுவே உன் அப்பா இருந்திருந்தா இப்படி உன்னை தவிக்கவிட்டிருப்பாரா?" என்று வருத்தமுடன் கூறினார்.

அவரை ஆழ்ந்த பார்வை பார்த்தவள், "என் அப்பா அம்மா கூட இருந்ததை விட நம்ம வீட்ல தான் நான் ரெம்ப சேஃப்டியாவும், சந்தோஷமாவும் இருந்திருக்கேன்னு உங்களுக்கும் தெரியும் மாமா... நான் ஒன்னும் சொல்லாத போதே பவனும் கமலும் ஒரு பொண்ணோட பாவத்தை சம்பாதிச்சி வெச்சிருக்கானுங்க. நான் வாய் திறந்து ஏதாவது சொல்லப் போய் இன்னும் இன்னும் மோசமான காரியத்துல இறங்கிட்டா என்ன செய்றதுனு பயம் தான் மாமா" என்று அவளும் வருந்திட, அதனைக் கண்டு கொள்ளாதவர் போல்,

"அது மட்டும் தான் காரணமா!!!? இல்ல அந்த ராம்-ஐ நீ குறை சொல்ல விரும்பலேயா?" என்று அவளின் கண்கள் பார்த்து வினவினார். அவள் தன் வாய்வழி மொழிந்திட வேண்டியே அவ்வாறு கேட்டார்.
அவரின் சாதுரியம் அவரை ஏமாற்றிடவில்லை. அதிர்ச்சியாக அவரைப் பார்த்தாலும் அவரிடம் மறைக்க முடியாமல் வாய் திறந்தாள்.

"ஈவ்னிங் ரிஸப்ஷன் அப்போ வெண்பா பக்கத்துல இருந்த பார்க்குக்கு அத்தைய கூட்டிட்டு போகச் சொல்லி அடம்பிடிச்சா... அங்கே போன அத்தையால அவளை தனியா சமாளிக்க முடியாதுனு நானும் கூடப் போனேன்"

😎😎😎வாங்க நாமலும் போவோம். என்ன நடந்துச்சுனு பார்த்துட்டு வருவோம்...😎😎😎

சிறிது நேரம் ஊஞ்சல், சறுக்குமரம் என விளையாடிய வெண்பா, ஹைட் அன்ட் சீக் விளையாட அழைத்தாள் மற்ற இருவரையும்.

"அம்மா... வாங்க ஹெய்ட் அன் சீ வியாடலாம்... மைமி வாங்க..."

"சரி அது தான் அப்போ லாஸ்ட் கேம். மைமி பொம்மிய கண்டுபிடிச்சிட்டா நாம தாத்தாகிட்ட போய் சமத்தா உக்காந்துக்கலாம்... டீல் ஓகே வா?"
சிறிது நேரம் யோசித்து அறைகுறை மனதோடு "ஓகே..." என்று பதில் கூறினாள் வெண்பா.

"அம்மா... மைமி கண்துபிதிக்காத எரத்துல ஹெய்ட் பண்ணுங்க..." என்று கூறி தன் அன்னையுடன் ஒழிந்து கொண்டாள். அவர்கள் ஒழிந்து கொண்ட அனைத்து இடங்களையும் விமலா கண்டுபிடித்துவிட தன் அன்னை தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து, நேத்ராவிடம் இருந்து தனியாக வந்து நடைபாதையில் நடப்பட்டிருந்த ஒரு மரத்தின் பின்னால் ஒழிந்து கொண்டாள் சிறுமி.

அந்த மரத்தின் அருகே இருந்த ஸ்டோன் பென்ச்சில் தான் ராம் அமர்ந்திருந்தான். வெண்பாவின் செயல் கண்களில் தெரிந்ததே ஒழிய மூளையில் பதியவில்லை அவனுக்கு.

சிறிது நேரத்தில் நேத்ரா "பொம்மி... பொம்மி..." என்று அழைத்துக் கொண்டு பதற்றத்துடன் அவ்விடம் வருவதைக் கண்டான். சிறிய சிரிப்பொலியில் சத்தம் வந்த திசையைப் பார்த்தான். வெண்பா தன் அரிசிப் பற்களை காண்பித்து தன் அன்னையைக் கண்டு சிரித்தாள்.

ராமிற்கு சந்தேகம் தோன்றியது. 'இந்த குழந்தையைத் தான் தேடுகிறாளா? யார் இந்த குழந்தை? இவளுக்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?' என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

விமலாவும் "என்னடா என்னாச்சு? பொம்மி எங்கே?" என்று பதற்றமாக வினவிட,

"தெரியலே... என் கையை உதறிட்டு இந்த பக்கமாத் தான் ஓடி வந்தா... எனக்கு பயமா இருக்கு அத்த.." என்று கூறியவளின் கண்கள் கலங்கிட,
தூரத்தில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதும் கேட்கவில்லை என்ற போதும் அவளின் பதற்றம் கூர்மையாக கவனிக்கத் தூண்டியது.

மரத்திற்குப் பின்னால் இருந்து குழந்தை அவனை "ஸ்ஸ்ஸூஸூ... சொல்லாதே" என்று சைகை செய்திட அதனைக் கண்டு சிரித்தவன் "சரி" என தலையசைத்தான்.

அங்கும் இங்கும் சுற்றிச்சுற்றி தேடிய நேத்ராவின் கண்ணிற்கு அங்கே அமர்ந்திருந்த ராம் தெரிந்திட, அவனிடம் "இங்கே ஒரு குட்டி பாப்பா வந்ததா?" என்று கேட்டாள்.

"இங்கே தான் ஒழிஞ்சிருக்கு... டென்ஷன் இல்லாம தேடுங்க..." என்றான்.

அதனைக் கேட்டப் பின்பு தான் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அந்த பக்கமாக தேடிக் கொண்டிருந்த விமலாவை அழைத்தாள்.

"அத்த... பொம்மி இங்கே தான் ஒழிஞ்சிருக்காளாம்... பயப்பட வேண்டாம்" என்று சத்தமாக உரைத்துவிட்டு ராமிடம் "தாங்க்ஸ்" என்று கூறிச் சென்றாள்.

ராமிற்கு தமிழ் தெரியாவிட்டாலும் குடும்பத்திற்குள் உறவுமுறை சொல்லிக் கொள்ளவது எல்லாம் தமிழில் தான் என்பதால் நேத்ராவின் 'அத்தை' என்ற அழைப்பிற்கு அர்த்தம் அறிந்திருந்தான்.

'அது அவங்க அம்மா தானே... ஏன் அத்தைனு அழைக்கிறாள்?!!' என்று மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான்.
அதற்குள் வெண்பா மரத்தின் பின்னாள் இருந்து வெளியே வந்து தான் ஜெயித்துவிட்டதாகக் கூறி கத்திக் கொண்டிருந்தாள்.

"நேத்ரா இது உன் அம்மா இல்லேயா? இவங்களை நீ ஏன் அத்தைனு கூப்பிடுற?" என்று குழப்பமும் ஆர்வமுமாக வினவினான் ராம்.

அவனின் திடீர் கேள்வியை எதிர்பார்த்திடாத நேத்ரா முதலில் முழித்தாள். பின் தன்னை சுதாரித்துக் கொண்டு

"இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்..." என்று அழுத்தம் திருத்தமாக அவன் கண்களைப் பார்த்துக் கூறினாள்.

"எனக்கு இப்போ தெரிஞ்சாகனும். இவங்க உன்னை பெத்தவங்க இல்லேயா?"

"ஷட்அப். இது என் குடும்ப விஷயம். கண்டவங்ககிட்ட சொல்ல முடியாது" என்றாள் சற்று நிதானமாக.

"இப்போ இது நம் குடும்பம், எனக்கு தெரிந்து கொள்ள உரிமையிருக்கு... நீ சொல்லி தான் ஆகனும்." என்று அவனும் விடாபுடியாக வினவினான்.

"எல்லார்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லிட முடியாது... அனாவசியமா நீங்க அதைத் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லே... கெட் லாஸ்ட்..." என்று பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினாள்.

ராம் சிறிதும் நகராமல் தன் கைகளைக் கட்டிக் கொண்டு 'எனக்கு இப்போ பதில் தெரிஞ்சாகனும். அதுவரை இங்கிருந்து போகமாட்டேன்' என்ற அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

நேத்ரா அங்கிருந்து வெண்பாவை அழைத்துச் செல்ல முற்படுகையில் வெண்பா அடம்பிடிக்கத் தொடங்கினாள்.

"நீங்க ரெண்து பேரும் என்ன கண்துபிதிக்கவே இல்ல. இன்னோருக்க வியாடலாம்... நான் ஒயிஞ்சிக்கிறேன்." என்று கூறி நேத்ராவின் கையில் இருந்து ஓட முயற்சிக்க,

"அடிச்சேன்னா தெரியும்" என்று குழந்தையைக் கை ஓங்கினாள் நேத்ரா. விமலா நேத்ராவைத் தடுப்பதற்குள் ராம் குழந்தையைத் தூக்கியிருந்தான். தன் அன்னையின் கோபத்தை முதல்முறை கண்ட பிஞ்சு நெஞ்சம் பயத்தில் ராமின் கழுத்தைக் கட்டிக் கொண்டது.

"என் மேல இருக்க கோபத்தை ஏன் குழந்தை மேல காண்பிக்கிறே..." என்று வெண்பா மிரளாத அளவில் வார்த்தையில் கடுமைக் கூட்டி நேத்ராவை திட்டினான்.

விமலா வெண்பாவை வாங்கிக் கொள்ள, "பெரியம்மா இவ உங்க பொண்ணா? இல்லையா? ஏன் உங்களை அத்தைனு கூப்பிடுறா? அதை மட்டும் சொல்லுங்க..." என்றிட, அவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

விமலா விழித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த நேத்ரா "அத்த... வாங்க நாம போலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.

மீண்டும் அவளின் முன்னே வந்து நின்று கைகளை மறித்து "பதில் சொல்லிட்டு போடி" என்று அழுத்தமாக, அமைதியாக வினவினான்.

"ஆமா... இது என் அம்மா இல்லே... நான் இவங்களுக்கு பொறந்த பொண்ணு இல்லே. போதுமா.... இதை வெச்சி இன்னும் என்னை அசிங்கப்படுத்துறதா இருந்தா தாராளமா செய்ங்க.... ஐ நெவர் மைண்ட் இட் அட் ஆல்..." என்று கூறிவிட்டு விமலாவுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள்.

அவளின் பதிலில் இன்பமாக அதிர்ந்தான் ராம். 'இவள் எனக்கு தங்கை முறை இல்லே... நேத்ரா என் சிஸ்டர் இல்லை...' என அவன் மனம் மீண்டும் மீண்டும் உரைக்க மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தான்.

என்ன செய்கிறோம் என்று உணராமல், பார்க்கைவிட்டு வெளியே சாலையில் வந்து நிற்பதையும் கவனிக்காமல் நான்கே எட்டில் அவள் கையைப் பிடித்து இழுத்திட, பெண்ணவளோ பத்தடி பின்னே நகர்ந்திருந்தாள்.

அவளின் அருகே சென்று இரண்டு தோள்பட்டையையும் பிடித்து அவள் முகத்தருகே குனிந்து "ஐ லவ் யூ" என்றான். அனைத்தும் சில நொடிகளில் நடந்துவிட அவளிடம் பேசிய பிறகு தான், தான் என்ன கூறினோம் என்று உணர்ந்திருந்தான்.

அவன் இழுத்த இழுப்பில் அதிர்ச்சியில் இருந்தவள் அவனின் வார்த்தைகளில் பேரதிர்ச்சி அடைந்திருந்தாள். தன் காதுகளையே நம்ப முடியாமல் அவன் வாய் அசைவைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

நேத்ராவை தங்கை என்று ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவளைப் பார்த்தாலே தன் மனதில் தோன்றிடும் வலியை தாங்கிக் கொள்ள முடியாமலும் தான் அவளைப் பார்ப்பதை தவிர்க்க நினைத்து இங்கே வந்து அமர்ந்திருந்தான்.

அவள் தனக்கு தங்கையல்ல என்று தெரிந்தவுடனேயே அவள் மீதான தன்னுடைய எண்ணம் அவனையும் அறியாமல் வார்த்தைகளாக வெளிவந்திட அப்போது தன் அவனே அவன் காதலை உணர்ந்திருந்தான்.

"எஸ்... எஸ்... ஐ லவ் யூ....... ஐ லவ் யூ....... ஐ..... லவ்..... யூ....." என்றிட இப்போது இருவரின் கண்களும் கலந்து உறவாடியது.

விமலா சற்று தள்ளியிருந்ததால் அவருக்கு கேட்டிட வாய்ப்பில்லை. அவருக்குத் தெரிந்தது என்னவோ ராமின் முதுகு மட்டும் தான். ஏதோ தவறாக நடக்கிறது என்று புரிந்திட பதற்றமாக இருந்தார்.

சாலையின் மறுபக்கத்தில் இருந்து வந்த ஹார்ன் ஒலியில் சுயம் பெற்றவள் கண்களில் சத்தமின்றி கண்ணீர் துளி வடிந்திருந்தது.

ராம் சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்திட அங்கே அபி தான் தன் பைக்கை நிறுத்தி ஹார்ன் அடித்திருந்தான். அவனுக்கும் எதுவும் கேட்கவில்லை தான். அவன் பார்த்த போது ராம் நேத்ராவின் தோளில் கை வைத்து அழுத்தமாக பிடித்திருப்பது மட்டுமே கண்டான். அந்நிலையைக் கலைக்கும் பொருட்டே ஹார்ன் ஒலி எழுப்பியிருந்தான்.

நேத்ரா கண்களை துடைத்துக் கொண்டு ரிஸப்ஷன் ஹாலின் கார்டனில் சென்று அமர்ந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

மிதுன்யா மயக்கமடைந்த நிலையில் அவளுக்கு தேவையான பொருளை வாங்க மருந்தகம் சென்ற அபி திரும்பி வரும்போது தான் இதனைக் கண்டிருந்தான். இருக்கும் நிலை தெரியாமல் இப்போதும் நேத்ராவிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்த தன் தமையன் மீது கோபம் மூண்டிட எதுவும் பேசாமல் ரிஸப்ஷன் ஹாலுக்குள் நுழைந்தான் அபி.

அவனை சமாதானப்படுத்த வேண்டி ராமும் அவன் பின்னாளேயே சென்றான். அப்போதும் கார்டனில் அமைதியாக அமர்ந்திருந்த நேத்ராவைக் கண்டு ரசித்து கண்களில் நிரப்பிக் கொண்டு தான் உள்ளே நுழைந்தான்.😎😎😎

நடந்தவற்றை நேத்ரா கங்காதரனிடம் சொல்லி முடித்திருந்தாள்.

"அத்தை அவங்களுக்கு புரிஞ்ச வரைக்கும் உங்ககிட்ட சொல்லிடுவாங்கனு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு தெரியவரும்னு நினைக்கலே"

"உன் அத்தை இத பத்தி இன்னும் என்கிட்ட சொல்லலே... பொம்மி தான் குழந்தை... வந்த வேலையை மறந்து உன் கார்குழல் பார்த்து மயங்கி நின்றிருக்கலாம். ஆனால் பின்னால் வந்த நான் குழந்தை இல்லையே.

நான்கு வருஷமா அள்ளி முடிந்த கொண்டையோடு வளம் வருபவளின் கூந்தல் கலைந்திருந்தா அதற்கு காரணம் யாரா இருக்கும், என்ன நடந்திருக்கும்னு யோசிக்க முடியாத அறிவிலியும் இல்லையே..." என்றிட,

சங்கடமாக உணர்ந்தவள், "என்னை தப்பா நெனச்சுட்டிங்களா மாமா?" என்று வருத்தமும் இயலாமையுமாக வினவிட,

"கண்டிப்பா இல்லே ம்மா... நீ அந்த சிவனோட மூன்றாம் கண். தப்பு செய்தவங்க உன் எதிரில் கண்டிப்பா நிமிர்ந்து நிக்க முடியாது, ஆனால் இந்த ராம் இன்னும் நிக்கிறான்னா அவன் தான் உனக்காக அவன்கிட்ட ஏதோ ஸ்பெஷல் இருக்கு." என்று குறுநகையோடு, மகிழ்ச்சி ததும்பக் கூறினார். தன்னுடைய அடுத்த சந்தேகத்தையும் அவளிடமே வினவினார்.

"இப்போ ராம்-க்கு நீ என்ன பதில் சொல்லப் போறே சிவா?" என்றார் கங்காதரன்.

அவரின் இக்கேள்வியை எதிர்பார்த்தவள் போல் "இது என்ன மாமா கேள்வி!!!!... எனக்கு என்னைக்கும் என் பொண்ணு மட்டும் போதும் மாமா... நான் எப்போதும் இன்னொரு கல்யாணம் செய்துகிறதை பத்தி யோசிச்சது இல்லே... முடிஞ்ச அளவு சமாளிச்சு பாக்குறேன். முடியலேனா என் பொண்ணு கூட மதுரை வந்து தங்கிடுவேன்."

"உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா? இப்படியே கடைசி வரை இருக்கப் போறியா?" என்று கங்காதரனின் பின்னாலிருந்து கேட்ட குரலில் இருவரும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தனர்.

-ஊடல் கூடும்.​
 
Top