• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா? இப்படியே கடைசி வரை இருக்கப் போறியா?" என்ற குரலில் இருவரும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தனர்.
பூப் பரிக்க வந்தவளைத் தேடி அங்கே வந்திருந்தார் விமலா.
"அத்தே... இப்போ எதுக்கு தேவையில்லாம இதை பேசிகிட்டு.... நீங்க பவனையும் மிதுன்யாவையும் வழியனுப்புறதைப் பாருங்க... இதை பத்தி அப்பறம் பேசலாம்.." என்று கூறி அடுத்த வேலையை கவனிக்கச் சென்றாள் நேத்ரா.
நேத்ராவின் பதில் 'முடியாது' என்பதாகத் தான் இருக்கும் என்று தெரிந்தும் இருவரும் அவளிடம் வினவிப் பார்த்தனர். முதலில் ராம் நேத்ராவை கேலி பேசியதில் அவர்களுக்கும் ராமின் மேல் கோபம் இருக்கத் தான் செய்தது.
அதுவும் விமலாவிற்கு இன்று அவன் நடு ரோட்டில் கைபிடித்து இழுத்து நேத்ராவிடம் வம்பு செய்கிறான் என்று நினைத்தவருக்கு சுத்தமாக அவனைப் பிடிக்கவில்லை தான். இரவு தன் கணவரிடம் கூறி இதற்கு ஒரேடியாக முடிவுகட்ட வேண்டும் என்று தான் நினைத்திருந்தார்.
ஆனால் ராம் நேத்ராவை விரும்புகிறான் என்று தெரிந்த பின் அதில் நூறு சதம் காதல் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அமோதிக்க இருவரும் தயாராக இருந்தனர். ஆனால் நேத்ரா இதற்கு சம்மதிக்க வேண்டுமே என்பது தான் இருவரின் சந்தேகமாக இருந்தது.
அதனாலேயே அவளின் விருப்பத்தை முதலில் அறிந்திட முற்பட்டனர். தான் பெற்றெடுத்திடாத செல்வத்தின் வாழ்வை நினைத்துக் கலங்கிய விமலாவை கங்காதரன் தான் எப்போதும் போல் தேற்றி அழைத்துச் சென்றார்.
பூஜையறையில் விளக்கு ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டு கங்காதரன்-விமலா இருவரையும் சேர்ந்தார்போல் நிற்க வைத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர் புதுமணத் தம்பதியினர்.
நேத்ராவை திருநீறு இட அழைக்க அவளோ மறுத்து ஒதுங்கி நின்றாள். பவன் வம்படியாக அவளை அழைத்து அவளிடமும் ஆசி பெற்றுக் கொண்டு தான் கிளம்பினான்.
ராம் புறப்படும் போது கங்காதரன், விமலா, கமல் என அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு நேத்ராவைப் பார்த்தான். அவளோ அவன்புறம் திரும்புவதாகக் கூட இல்லை. பவனுக்கும் மிதுன்யாவிற்கும் கையசைத்துக் கொண்டிருந்தாள். அவளின் ஒரு நொடிப் பார்வை கூட போதும் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அவள் நிச்சயமாக தன் புறம் திரும்பமாட்டாள் என்று அவளை சரியாக யூகித்தவன் மனதிற்குள் 'சரியான திமிர் பிடிச்சவ.... கொஞ்சமாவது மதிக்கிறாளா பாரு... ஒரு நாள் வசமா மாட்டுவேல அன்னைக்கு இருக்குடி உனக்கு... ஒருநாள் என்ன ஒருநாள் இதோ இப்பவே வறேன் இருடி...' என்று நினைத்துக் கொண்டு சின்ன சிரிப்புடன் கங்காதரனிடம் சென்றான்.
கங்காதரனிடம் இருந்து வெண்பாவை தூக்கிக் கொஞ்சிட, சிறுமியோ "நேத்துக்கும் வாங்க வியாடலாம்... இன்னு நெரியா கேம் நானுக்கு தெர்யும்..." என்றாள்...
ராமிற்கு எப்போதும் போல் புரியாமல் போக, சிறுமியின் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக எல்லா பக்கமும் தலையசைத்து வைத்தான்.
அவனின் தலை எல்லாப் பக்கமும் உருளுவதைக் கண்ட நேத்ரா தனக்குள் எழுந்த சிரிப்பை கடினப்பட்டு அடக்கி வைத்தாள். 'சதிகாரி... சிரிக்கிறா பார், அதுவும் யாருக்கும் தெரியாம... குழந்தை என்ன சொல்லுச்சினு சொன்னா தான் என்னவாம்.... ராட்சசி... ராட்சசி...' என்று மீண்டும் மனதிற்குள் திட்டினான்.
காரின் அருகே நின்றிருந்த மிதுன்யா ராமிற்கு துணை வந்தாள். "நாளைக்கு நீங்க எல்லாரும் வாங்க... நான் உனக்கு நியூ ஸ்டோரி சொல்றேன். நிறைய சாக்கி தறேன். ப்ளே கிரவுண்ட் கூட்டிட்டு போறேன்... நீ வரியா?" என்று சிறுமிக்கு ஆசை காட்டினாள்.
வெண்பா பதில் கூறாமல் தன் அன்னையைப் பார்த்திட, நேத்ரா அனைவரின் முன்னிலையிலும் மறுக்க முடியாமல் கண்ணசைத்து சம்மதம் தெரிவித்தாள்.
குதூகளித்த சிறுமி ராமிடம் இருந்து நேத்ராவிடம் தாவியது. வெண்பாவை நேத்ராவிடம் கொடுக்கும் சாக்கில் அவளின் கடைக்கண் பார்வையையும் பெற்று "பை ஸ்வீட்டி" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி ஹஸ்கி வாய்ஸில் கூறினான். ஒரே ஒருநொடி அவள் தன் பார்வையை உயர்ந்திட ஒற்றைக்கண் சிமிட்டி விடைபெற்றுச் சென்றான்.
நேத்ரா பதற்றத்தோடு தலை கவிழ்ந்து கொண்டாள்.
புதுமணத் தம்பதியர் மிதுன்யா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்றைய இரவிற்கான ரிட்சுவல்ஸ் இல்லை என்பதால் அலங்காரங்கள் இன்றி சாதாரணமாக இருந்தது அவளது அறை.
மீனாட்சியும் புகழும் சுஷேண் வீட்டிலேயே தங்கிக் கொள்ள, ராம் மறுநாள் காலை அனைவரையும் பெரிய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வருவதாகக் கூறி விடைபெற்றான்.
இரவு பவன், மிதுன்யாவின் அறையில் காத்திருக்க, குந்தவி மிதுன்யாவிடம் ஒரு ப்ளாஸ்கில் பால் ஊற்றிக் கொடுத்து அறைக்கு எடுத்துக் கொண்டு போகும்படி கூறினார்.
"ம்மா... என்ன விளையாடுறிங்கலா... இன்னைக்கு தான் ஒன்னு இல்லயே.. அப்பறம் ஏன் என்னை அங்க போக சொல்றிங்க!!!" என்று பேரதிர்ச்சியில் வினவிட,
"தெரியும் டி உன்னே பத்தி... இப்படி எல்லாம் அபசகுனமா நடக்கனும் தானே ஆசப்பட்ட... இதுக்கு நீ அந்த தம்பிய பிடிக்கலேனு சொல்லி ஒதுங்கியிருக்க வேண்டி தானே..." என்றார் குந்தவி.
"ஓஓஓ உன் மாப்பிள்ளை மேலே மரியாதை பல மடங்கு ஏறிடுச்சு போல... தம்பினு உரிமையா சொல்லிக்கிறிங்க... இன்னைக்கு ஸ்டேஜ்ல நான் மயங்கினதைப் பார்த்து அவன் உருகுற மாதிரி நடிக்கவும் அவன் மேல உங்களுக்கு மதிப்பு வந்திடுச்சோ..." என்று ஏற்ற இறக்கத்துடன் சீறிக் கொண்டு சண்டைக்கு வந்தாள்.
"ஆமாடி... அந்த பையன் உன்னை உருகி உருகி பாத்துக்கிட்டதுக்கு நீ இதுவும் பேசுவே... இன்னமும் பேசுவே...அது ஒன்னும் நடிப்பு இல்லே... அதுப் புரிஞ்சிக்கோ... இன்னைக்கு அப்படி அவரு துடிக்கலேனாலும் மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுத்து தான் பேசியிருப்பேன். நீயும் ஒழுங்கா மரியாதை கொடுத்துப் பேசு... போ... அந்த தம்பிக்கு வேற என்னென்ன தேவைனு பார்த்து செய்து கொடுத்துட்டு நீ சுனோ ரூம்ல தூங்கிக்கோ..." என்று விரட்டினார்.
மிதுன்யா தன் அறைக்குள் நுழைந்திட குப்புறப் படுத்திருந்தான் பவன். அவள் வரும் அரவம் கேட்டு தூங்குவது போல் நடித்தான். அவன் முதுகுபுறமாக நின்று மெதுவாக எட்டிப் பார்த்தவள், அவன் தூங்குகிறான் என்பதை உறுதி செய்து கொண்டு, தான் கொண்டு வந்த பாலை கொஞ்சமே கொஞ்சமாக அவன் கன்னத்தில் ஊற்றியேவிட்டாள்.
சூடான பால் கன்னத்தில் பட்டவுடன், "ஸ்ஸ்ஸ் ஆஆஆ" என கத்திக் கொண்டு எழுந்து அமர்ந்தவன் தன் கன்னத்தில் கை வைத்து தடவிக் கொண்டே அவளைப் பாரக்க, அவளோ ஒன்றுமே நடவாதது போல் நிதானமாக ப்ளாஸ்கை மூடி ஓரமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
"பாதகி... ஏன்டி இப்படி செய்தே?..."
"அம்மா பால் சூடா இருக்கு கொஞ்சநேரம் கழிச்சி குடிக்க சொன்னாங்க. எவ்வளோ சூடா இருக்குனு உங்களுக்குத் தெரிய வேண்டாமா!!! அதுக்குத் தான்..." என்று கூறி அவனைப் பார்த்து கூறிவிட்டு "வெவ்வெவ்வ" என்று ஒழுங்கு காட்டிவிட்டு சிட்டாய்ப் பறக்க நினைக்கையில் அவனிடம் சிக்கிக் கொண்டாள்.
கதவு திறந்திருக்கும் தைரியத்தில் தான் அவள் அவனிடம் வம்பு வளர்த்தாள். ஆனால் அவளின் கள்வனோ அவளைப் பிடித்து மெத்தையில் தள்ளிய கையோடு கதவை அடைத்திருந்தான்.
"பால் மட்டும் எவ்ளோ சூடா இருக்குனு தெரிஞ்சா போதுமா போண்டா!!!?" என்று கிரக்கமாக கேட்டுக் கொண்டே தன் சட்டையில் மேலிரண்டு பட்டனைக் கழட்டிட,
'ஆத்தி இவன் பேசுற மாடுலேஷனும் சரியில்ல, பாக்குற பார்வையும் சரியில்ல, அய்யய்யோ சட்டைய வேற கழட்றானே... மிதுக்குட்டி நீயா வந்து மாட்டிக்கிட்டியே டி...' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு படபடவென கண் சிமிட்டிட, அவளின் கள்வன் அவளைக் கண்டு மெய்மறந்து தான் போனான்.
அவளோ உருண்டோடிச் சென்று மரக்கட்டிலின் அடியே சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.
அவளின் செய்கையில் சிரித்தவன், கதவைத் திறந்து "போ... உன்னை ஒன்னு செய்யமாட்டேன்... நல்லா தூங்கி ரெஸ்ட் எடு." என்றிட இப்போது அவனைப் பார்ப்பது அவளது முறையாகியது.
அறையைவிட்டு வெளியேறியவள் அவன் நினைவுகளைத் தான் சுமந்து கொண்டு சென்றாள். அவன் அவளை கட்டிலில் தள்ளி கதவைப் பூட்டிய வேகத்திலும் அவன் செய்கையிலும் கட்டியணைக்க வேணும் செய்வான் என்று நினைத்திருந்தாள், ஆனால் அவன் அவ்வாறு ஏதும் செய்யாமல் அனுப்பி வைக்க அவளுக்கே குழப்பம் தான்.
அவளும் அறிந்திருந்தாளே இன்று மாலை மேடை ஏறியதிலிருந்து தன்னை அவன் ஓரக்கண்ணால் பார்ப்பதையும், மயங்கி சரியும் முன் தன் மேல் தாங்கி நின்றதையும், அவள் விழித்து எழுந்தப்பின் நார்மலாக இருக்கிறாளா? இல்லை அவஸ்தைப் படுகிறாளா? என்று அனைத்தையும் நோட்டமிட்டுக் கொண்டே தான் இருந்தான் என்பதை அவளும் கவனித்துக் கொண்டு தானே இருந்தாள்.
'மிதுன் இப்படியே அவனை யோசிட்டே இருந்தா அவன் மேல சாஃப்ட் கார்னர் வந்திடும். அப்பறம் அவனை இந்த மாதிரி டெய்லி பாடாய்படுத்த முடியாது... உன்னைப்பத்தி யோசிக்காம உன்னை மிரட்டி கல்யாணம் செய்துகிட்டான். அதைமட்டும் நெனச்சிக்கோ' என்று மீண்டும் தனக்குத் தானோ சொல்லிக் கொண்டவள், நாளை அவனை எப்படி பழிவாங்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினாள்.
இரவு பவனும் மிதுன்யாவும் தனித்தனி அறையில் உறங்கச் செல்ல, புது இடத்தில் தூக்கம் வராமல் தவித்தது என்னவோ பவன் தான். மிதுன்யாவின் அறையில் அவளின் புத்தகக் கலெக்ஷன்னைப் பார்த்துக் கொண்டு இரவைக் கழித்தான் அவன்.
இங்கே லட்சுமணன் இல்லத்தில் இரவு உணவின் போது, கங்காதரன் குடும்பத்தை வீட்டிற்கு அழைப்பது பற்றி பேச்சு வந்தது. ஆரம்பித்தது என்னவோ லட்சுமணன் தான், ஆனால் முதலில் மறுப்புத் தெரிவித்தது அபினவ் தான்.
"அபி நீ இன்னும் நேத்ரா மேல கோபமாத் தான் இருக்கியா?... நேத்ரா தான் பல தடவை உன்கிட்ட சொல்றாலே இந்த கல்யாணத்துக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லேனு... அதுவும் இல்லாம இப்போ பெரியவங்க சம்மதத்தோட எல்லாம் நல்லபடியாத் தானே போகுது... இன்னு உனக்கு அந்த பொண்ணு மேல அப்படி என்னடா கோபம்? அந்த பொண்ணு நல்ல பொண்ணு டா" என்று பாரி எடுத்துரைத்தார்..
அபி பதில் கூறாமல் தன் அண்ணனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ராம் அப்போது தான், தன் அன்னை கொண்டு வந்து வைத்த மொறு மொறு நெய் தோசையை சாம்பார், தேங்காய் சட்னியுடன் பிறட்டி, ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அபியின் மனதிலோ 'அய்யோ பெரியப்பா நான் வேண்டாம்னு சொல்றதே உங்க அருமை புள்ளைக்கு பயந்து தான். ஒன்னுமே தெரியாதவன் மாதிரி உக்காந்து இந்த வெட்டு வெட்டுறான் பாரு...' என்று மரியாதையை காற்றில் பறக்கவிட்டு வசைபாடிக் கொண்டிருந்தான்.
"ஆமா சோட்டூ... நேத்ரா பாக்க ரெம்ப நல்ல பொண்ணாத் தான் தெரியுறாங்க... நீ அவங்க கூட எப்பவும் போல பேசுடா..." என்று அபிக்கு மட்டும் புரியும்படியாக மெல்லிய புன்னகையுடன் தன் பங்கிற்கு அறிவுரை வழங்கினான் ராம்.
அண்ணனின் அறிவுரையில் உச்சகட்ட கோபத்திற்குச் சென்ற அபி, இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள,
"என்னாச்சு அபி, ஏன் சாப்பிடாம எழுந்துட்ட?" என்று ஆரவ் கேட்டப்பின் தான் அனைவரும் அவனை நிமிர்ந்து பார்த்தனர். லட்சுமணன் அவனை சற்று முறைப்பது போல் பார்த்தார். இருந்தும் உண்ணப் பிடிக்காமல்,
"சாரி தாத்தா... எல்லாரும் மன்னிச்சிடுங்க" என்று கூறிவிட்டு கைகழுவிக் கொண்டு தனதறைக்குச் சென்றான்.
ராம் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோசையோடு எழுந்து கொண்டான். அடுக்களை சென்று அடுப்பை ஆன் செய்து தட்டுத் தடுமாறி இரண்டு ஊத்தப்பம் ஊற்றினான்.
தோசையை திருப்பிப் போட்டு எடுக்கும் போது உள்ளே நுழைந்த கொடி,
"ராம்கண்ணா... நீ இங்கே என்ன பண்ற? தோசை வேணுனா அம்மாகிட்ட கேட்கலாமே... நீ ஏன் கஷ்டபடுறே..."
"எனக்கு ஒரு கஷ்டமும் இல்லே கொடி... இது எனக்கு இல்லே, சோட்டூக்கு... எனக்காக நீ செய்யும் போது நீ கஷ்டமாவா நெனப்ப? அது போலத் தான் நானும் அவனை பாக்குறேன்." என்றிட பூங்கொடி அவன் தலை கோதி வாஞ்சையோடு கொஞ்சினார்.
நேரே அபியின் அறைக்குச் செல்ல, அவனோ ராமைக் கண்டதும், முதுகு காட்டிப் படுத்துக் கொண்டான்.
"சோட்டூ..."
"……………"
அவனிடம் எந்த பதிலும் இல்லை என்றவுடன், கையிலிருக்கும் தட்டை சைட் டேபிளில் வைத்துவிட்டு சத்தமில்லாமல் அபியின் முன்னால் வந்து நின்று, தன் காதைப் பிடித்துக் கொண்டு,
"சாரி சோட்டூ" என்றிட, ராம் எதிர்பார்த்தது போலவே விரைந்து எழுந்து அவன் கையைப் பிடித்து,
"பையா... வேண்டாம்..."
"சரி... சாப்பிட வா..."
"எனக்கு வேண்டாம்..."
"சரி உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுறேன். நாளைக்கு நேத்ராகிட்ட எந்த வம்பும் செய்யமாட்டேன். ப்ராமிஸ்"
இதற்கெல்லாம் அசருவேனா என்பது போல் ராமைப் பார்த்தான் அபி.
அப்போது ஆரவ்-வும் தட்டுடன் உள்ளே நுழைந்தான்.
"ராம் பையா நீங்களும் சாப்பாடு எடுத்துட்டு வந்திங்களா? ஆமா இவன் ஏன் இன்னமும் சாப்பிடாம உக்காந்திருக்கா?" என்றான் ஆரவ்.
"எனக்கும் அவனுக்கும் ஒரு சின்ன வாய்க்கா தகராறு... அதான் சமாதானம் செய்திட்டிருக்கேன்." என்றான் ராம்.
"அபி உங்க மேல கோபமா இருக்கானா? இதுக்கே பூமி ரெண்டாகிடுமே... Be safe பையா" என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஆரவ்.
"அபி என்னை இன்னும் நம்பலயா நீ?" என்றான் ராம்.
ஆரவ் நாகரிகம் கருதி வெளியே செல்ல எத்தனிக்க, ராம் அவன் கைகளைப் பிடித்து "பரவா இல்லே நீயும் இங்கே இரு. அப்பறம் உனக்கு விஷயம் தெரிய வரும்போது, உன்னை தனியா சமாதானம் செய்து, உனக்கு தனியா ப்ராமிஸ் பண்ண முடியாது" என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
"நாளை ஒருநாளைக்கு மட்டும் தான் ப்ராமிஸ் செய்திருக்கிங்க... அது எனக்கு பத்தாது, நீங்க எப்பவும் நேத்ராவை தொல்லை பண்ணக்கூடாது. எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க..." என்று தன் தமையனைப் பார்த்து கேட்டான் அபி.
ஆரவ் தானாக ஒரு அனுமானத்திற்கு வந்தான். இன்னும் பழைய தொழில் பகை தான் நீண்டு கொண்டிருக்கிறது என்று நினைத்து அமைதி காத்தான்.
"என்னால அந்த ப்ராமிஸ் செய்ய முடியாது சோட்டூ... ஆனால் இன்னொரு ப்ராமிஸ் செய்றேன். நான் எப்பவும் தப்பு செய்யமாட்டேன். இப்பவும் நான் தப்பு செய்யலே... ஐ லவ் ஹெர். அவளும் என்னை விரும்பினா கண்டிப்பா அவளைத் தான் கல்யாணம் செய்துப்பேன்..." என்றிட, ஆரவ் ராமை அதிர்ந்து பார்த்தான்.
"ஹய்யோ.... பையா அவங்க பவனோட சிஸ்டர். நமக்கும் அவங்க சிஸ்டர் தான்னு அம்மா சொன்னாங்களே.... பின்னே எப்படி இப்படி பேசுறிங்க...?" என்று ஆற்றாமையோடு வினவினான் அபி.
"அவ பவனுக்கு சிஸ்டர் இல்லே... போதுமா? அது தெரிஞ்சப் பிறகு தான் அவளை கல்யாணம் செய்துக்க நெனச்சேன்... இப்போ ஓகே வா?" என்று ராம் கூறியதைக் கேட்டு இருவரும் திருதிருவென முழித்தனர்.
தம்பிகள் இருவருக்கும் தனக்குத் தெரிந்ததையும், பார்க்கில் நடந்ததையும் விளக்கமாக எடுத்துக் கூறினான் ராம். முழுமையாகக் கேட்டப் பின்பு தான் அபியின் முகத்தில் புன்னகை எட்டிப்பார்த்தது.
"ஆல் தி பெஸ்ட் பையா..." என்று ஆரவும், அபியும் மாற்றி மாற்றி வாழ்த்து கூறி அவனை அணைத்துக் கொள்ள, அபியோ மீண்டும் ராமைக் கட்டியணைத்து "பையா... நேத்ரா எனக்கு அண்ணியாகப் போறாங்க..." என்று கூறி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த, அவன் அண்ணி என்றதில் ராமிற்குமே ஏகபோக சந்தோஷம். தம்பிகளின் முன் பதின்பருவ வாலிபனைப் போல் நடந்து கொள்ள விரும்பாமல் சிரித்து மட்டும் வைத்தான்.
"இப்போ சாப்பிடு வா" என்று அழைத்தான். ராம்.
ஆரவும், ராமும் அபிக்கு ஊட்டிவிட, அவனும் இருவருக்கும் இடைஇடையே ஊட்டி விட என்று மூவருமாக உண்டு முடித்தனர்.

ஊடல் கூடும்.​
 
  • Like
Reactions: dsk
Top