• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, ராம், ஆரவ், சுஷேணை மற்றும் ஏமாற்றிவிடுமா என்ன!!! தமிழ் தெரியாத போதும் அனைவரும் இவர்கள் மூவரிடமும் தெரிந்தவரை ஹிந்தியில் பேச முயற்சித்தனர். சுஷேணிற்கு தமிழ் ஓரளவு புரிந்தும் இருந்தது. அதனை அதிதீவிர கேள்வியாக ஆரவ் வினவினான்.

"மாமா உங்களுக்கு மட்டும் எப்படி அவங்க பேசுறது புரியுது?"

"டேய்... நான்லாம் அப்பவே அப்படி.... இப்போ சொல்லவா வேணும்..." என்று தனக்குத் தானே செல்ஃப் டப்பா அடித்துக் கொண்டார்.

"இப்போ நீங்களா சொல்றிங்களா இல்லே, அத்தைட்ட கேட்கட்டுமா? அத்தே....."

"அவளை ஏன்டா இப்போ கூப்பிடுற...!!!!" என்று பதறினார் அந்த அப்பாவி மனிதர்.

"அப்போ உண்மைய சொல்லுங்க?" இது நம்ம ராம் பாய் தான்.

"மருமகனே உங்ககிட்ட சொல்றதுக்கு என்னடா... உங்க அத்தையும், உங்க அத்தை பெத்த ரெண்டு ரத்தினமும் என்னை சிரிச்சிக்கிட்டே தமிழ் ல தான் திட்டுவாங்கப்பா.... அவ்... அவ்...அவ்..." என்று தன் பல வருட ரகசியத்தை அம்பலமாக்கினார்.

ஆரவ்வும் ராமும் சிரித்துக் கொண்டே "அது எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது"

"அதுவாடா மருமகனே... உங்க அத்தை லவ் பண்ணும் போது என்னை கரெக்ட் பண்ணுறதுக்காக ஹிந்தி, உருது ரெண்டுமே கத்துக்கிட்டாளா.... சரி நாமலும் அவளை கரெக்ட் பண்ணுறதுக்கு தமிழ் கத்துக்களாம்னு நெனச்சி கொஞ்சமே கொஞ்சம் தமிழ் கத்துக்கிட்டேன்..." என்று தலையில் கை வைக்காத குறையாகக் கூறிட,

"நீங்க தமிழ் கத்துக்கிட்டது அத்தைக்குத் தெரியாதா?"

"ஓஓஓஓ தெரியுமே... அதுக்கப்பறம் தானே சங்கத் தமிழ்ல இருந்து சென்னை தமிழ் வரையும் திட்ட ஆரம்பிச்சா..."

மருமகன்கள் இருவரும் மீண்டும் சிரிக்க... "டேய் சிரிச்சி அசிங்கப்படுத்தாதிங்க டா..." என்று இருவரையும் அடக்கினார்.

ராமிற்கு மொழிப்பெயர்த்துக் கூற மிதுன்யாவும் அபியும் உடன் இருந்தனர். சில நேரங்களில் நேத்ரா கூட அந்த வேலையை செய்தாள்.

ஆனால் ஆரவ்வின் பாடு தான் திண்டாட்டமாகியது. அதில் சிக்கிக்கொண்டது விமலா தான். விமலாவும் "ஏக்... தோ... தீன்..." எல்லாம் சொல்லிப் பார்த்தார். அவன் விடுவதாக இல்லை.... ஆங்கிலம், ஹிந்தி என ஏதேனும் ஒரு மொழியில் தன் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தான்.

சில நேரங்களில் லட்சுமணன் பழைய காலத்து நடிகர் 'மேஜர் சுந்தர் ராஜன்'-ஐ போல் ஹிந்தி மற்றும் தமிழ் இரண்டிலும் மாற்றி மாற்றிக் கூறி பேரன்களை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொண்டார்.

லட்சுமணனின் குடும்பம் வந்த முதல் நாள் அனைவரும் ஓய்வு எடுக்க, மாலைவேளையில் அடுத்த நாள் எங்கேனும் செல்லலாம் என இளைய தலைமுறைகள் வர்ப்புறுத்தினர். ஆனால் மிதுன்யாவிற்கு மெகந்தி வைக்க பார்லரில் இருந்து ஆள் வருவதால் எங்கும் செல்ல முடியாமல் போனது. பிறகு கங்காதரன் நம்ம கடைக்கு போய்ட்டு வரிங்களா என்று கேட்க, சரி என்றனர்.

லட்சுமணன் அப்போது தான் முதல்முறையாக நேத்ராவின் தந்தை பற்றி பேச்செடுத்தார்.

"உன் அப்பாவும், கங்காதரனும் சேர்ந்து ஆரம்பிச்ச கடை..... கடை இரண்டாக பிரிக்கப்பட்டாலும் நல்ல முறைல விரிவு படுத்திருக்காங்க...." என்று நேத்ராவிடம் கங்காதரனை பாராட்டினார்.

பேரன்கள் லட்சுமணனை வியப்பாக பார்க்க, "என்னடா பாக்குறிங்க? நான் ஆரம்பிச்ச தொழிலைத் தானே நீங்க நடத்திட்டு வரிங்க. என் வாடிக்கையாளர் யாருனு எனக்குத் தெரியாதா?"

அவசர குடுக்கை அபி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் "அது இல்லே தாத்தா... அப்போ நேத்ரா அண்ணி... க்சும்... க்சும்... க்சும்" என்று இருமி தொண்டையை சரி செய்து கொண்டே தன் தமையனைப் பார்க்க அவனோ 'அடேய் தாத்தாவுக்கு தெரிஞ்சாக் கூட சமாளிச்சிடுவேன். என்ன பெத்த அம்மா கொடிக்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான்... பார்த்து பேசுடா' என்று கண்களாலேயே மிரட்டினான் ராம்.

"அவங்கள பத்தின எல்லாம் உங்களுக்கு மொதோவே தெரியுமா?" என்று தாத்தாவிடம் மேற்கொண்டு கேட்டான் அபி.

"ஏன் தெரியாம!!! நேத்ராவோட அப்பா ரவிச்சந்திரன். அவரும் கங்காதரனும் கூட்டு சேர்ந்து ஆரம்பிச்சது தான் ரங்கா சில்க்ஸ் & ரெடிமேட்ஸ். மொதோ முறை நம்ம கூட கான்ட்ராக்ட் போட்டது ரவிச்சந்திரன் தான். தமிழனுக்கு தமிழன் உதவினு சொல்லி அதே போல நடந்தும் கொண்டார்.

நேத்ராவோட அப்பா இறந்துதுக்கு அப்பறம்" என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே

"நான் எல்லாருக்கும் டீ எடுத்துட்டு வரேன்." என்று கூறி அடுக்களைக்குள் எழுந்து சென்றாள் நேத்ரா.

செல்லும் அவளின் கலங்கிய கண்களைப் பார்த்துக் கொண்டே "அப்பறம்?" என்று தன் தாத்தாவை மேலே கூறுமாறு ஊக்கினான் ராம். பெரியோர்களின் பேச்சு புரியவில்லை என்றாலும் ராமின் மடியில் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருந்தாள் அந்த வீட்டு பெரிய மனுஷி வெண்பா.

"அவங்க அப்பா இறந்தப் பிறகு கங்காதரன் தான் தொழிலைப் பார்த்துக்கிறதா சொன்னாரு. அதுக்கப்பறம் கொஞ்ச வருஷம் கழிச்சி கடைய ரெண்டா பிரிச்சிட்டதா சொல்லி நேத்ரா சில்க்ஸ்க்கு தனியா அக்ரிமெண்ட் கையெழுத்து போட்டுட்டு போனாரு.

அப்பறம் பாரியும், புகழும் இன்டஸ்ட்ரிய முழுசா பாத்துக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால கங்காதரனை பார்க்குறது ரெம்பவே குறைஞ்சிடுச்சி. இப்போ பேரன்ங்க நீங்கல்லாம் வந்ததுப் பிறகு நான் சுத்தமா அந்த பக்கம் வரதே இல்லே... அதனால சமீப காலமா எந்த விசயமும் தெரிஞ்சிக்காம போய்ட்டேன்.

கங்காதரனை கடைசியா பார்த்தது மூனு வர்ஷத்துக்கு முன்னாடி நேத்ரா பொண்ணு கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்தாரு. கல்யாணத்துக்கும் போக முடியலே. இப்போ நாம எல்லாரும் சொந்தமா மாறினப்பின்னாடி தான் நேத்ராவை பார்க்குறேன். அவங்க அப்பாகிட்ட இருந்த அதே தங்கமான குணமும், கங்காதரன் வளர்ப்புல வந்த தைரியமும், பெரியவங்களுக்கு கொடுக்குற மரியாதையும்.... எவ்வளவு அடக்கமான பொண்ணு..." என்று கூறி சிலாகித்தார்.

"கடவுள் அந்த சின்னப் பொண்ணோட வாழ்க்கைல இப்படி விளையாண்டு பார்க்குறாரேனு தான் கஷ்டமா இருக்கு...." என்று தனக்குத் தெரிந்தவற்றை கூறிமுடித்தார்.

அவரின் கூற்றில் ராமிற்கு அதி முக்கிய சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை கேட்கலாமா!!! கூடாதா!!! என்று தன் மனதிற்குள் வைத்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்.

அதற்குள் அவனின் கருப்புநிலா தொண்டையைக் கணைத்து தன் இருப்பைக் காண்பிக்க, புரியாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தான்.

அவனின் குழப்பம் படர்ந்த முகத்தைக் கண்டவள், தன்னையும் அறியாமல் 'தேவையில்லாமல் யோசிக்காதிங்க... இப்போது தேநீர் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கண்ஜாடை செய்திட, மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல் அவளின் விழிமொழியில் தன் குழப்பத்தை ஒத்தி வைத்து தேநீர் பருகத் தொடங்கினான்.

அதன்பின் தன் சந்தேகத்தை தானே தீர்த்துக் கொள்ள நினைத்து வெண்பா மற்றும் நேத்ராவை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். பற்றாகுறைக்கு தன் நண்பன் சுராஜித்தின் உதவியுடன் ஒரு நம்பகமான டிடெக்டிவ் ஏஜென்ட்டைப் பிடித்து இன்னும் சிலவற்றை அறிந்து கொண்டான்.

வரவேற்பு முடியவும் இது பற்றி முதலில் நேத்ராவிடமும், பின் தன் குடும்பத்திடமும் தன் முடிவை தெரிவிக்க நினைத்தான்.

மறுநாள் ஊர்சுற்றி பொழுதைக் கழித்துவிட்டு, மாலை அனைவரும் மெஹந்தி வைத்துக் கொள்ள நேத்ரா மட்டும் தனக்குப் பிடிக்காது என்று கூறி ஒதுங்கிக் கொண்டாள்.

வரவேற்பு அன்று காலை சுனைனாவும் வந்துவிட வீடே குதூகளித்தது. மாலை ரிஸப்ஷனுக்கு ஆளுக்கு முன்பாக தயாராகி கீழே வந்தாள் சுனைனா.

மெஜந்த்தா மற்றும் க்ரே கலர் லெஹெங்காவில் அழகுப் பதுமையாக நடந்து வந்தவளைக் கண்டு ஒரு நிமிடம் சருக்கி விழுந்த மனதை நிலைப்படுத்திக் கொண்டு தன்னையும் நிலைப்படுத்திக் கொள்ள அருகே இருந்த சோஃபாவில் அமர்ந்து நிதானமாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான் அவளின் முறைப்பையன்.

அவளின் அருகில் வந்து அவள் கூந்தல் நுனியைப் பிடித்து இழுத்து "ஹேய்... முட்டபொம்மா... உனக்கு இப்படிலாம் கூட ட்ரெஸ் பண்ண தெரியுமா!!!" என்று ஆச்சரியமாக கேட்டான் கமல்.

இதனைக் கண்ட முறைப்பையன், கமலின் உரிமையான தீண்டலில் காண்டாகி எழுந்து சென்றுவிட்டான்.

"ஓய்... என்ன பார்த்தா எப்படி தெரியுது? நானும் தமிழ் பொண்ணு தான். ஆமா அது என்ன முட்டபொம்மா?"

தன் மொபைலை எடுத்து அதில் முட்டபொம்மா பாடலை ப்ளே செய்து காண்பித்து, "காலைல இப்படித் தானே ட்ரெஸ் பண்ணிருந்த... அதான் அந்த பேரு"

"டேய் நான் ஒன்னு இவ்வளோ லோ நெக் போடலே... அண்ட் மோர் ஓவர் நான் போட்டிருந்த ட்ரெஸ் நீ(knee) க்கும் கீழே தான் இருந்தது. என்னை அப்படி கூப்பிடாதே..."

"உனக்கு நீ போட்ட ட்ரெஸ் நல்லா, அழகா தெரிஞ்சிருக்கலாம். பட் பாத்தவுடனே எனக்கு இந்த ஹீரோயின் நியாபகம் தானே வந்திச்சி... சோ என்னை பொறுத்த வரைக்கும் நீ முட்டபொம்மா தான்..."

"ங்ங்ங்" என்று பல்லைக் கடித்துக் கொண்டு "என்னை அப்படி கூப்பிடாதே டா..."

"அப்படித் தான் டி கூப்பிடுவேன்..."

"ஆஆஆ" என்று மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, கோபமாக அவனை நோக்கி "டீ?... மீ?... உன்னை..." என்று அவனை அடிக்கச் செல்ல, கமலோ லாவகரமாக அவளின் அடியில் இருந்து தப்பி

"நீ மட்டும் என்னை டா போட்டு பேசுறே.... முட்ட பொம்மா... அப்படித் தான் கூப்பிடுவேன்... முட்டபொம்மா..." என்று கத்திக் கொண்டே வீட்டைவிட்டு வெளியே வந்து கார்களுக்கு நடுவே புகுந்து அவளுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான்.

பின் மீண்டும் அவன் உள்ளே விறைந்து ஓடிட, அவனைத் துறத்தி வந்தவள் நிலைப்படி தாண்டி உள்ளே நுழையும் போது எதிரே வந்த அபியின் மேல் இடித்து இருவரும் நிலை நடுமாறி கீழே சரிந்தனர்.

அபியின் மேல் சுனைனா விழுந்திட, ஒட்டிக்கொள்ளவதற்காக காத்திருந்த உதடுகளுக்கு நடுவே தன் உள்ளங்கை வைத்து தடுத்திருந்தான் அபி. மற்றவர் பார்க்கும் முன் அவளை எழுப்பி நிற்க வைத்து, உஷ்ணப் பார்வையால் தள்ளி நிறுத்தி,

"ரெடியாகிட்டா அமைதியா சோஃபால உக்காரேன்... ஏன் இப்படி ஓடியாடிட்டு இருக்கே?... டாக்டரேட் படிக்கிறேனு தான் பேரு, அறிவு சுத்தமா இல்லே. அழகா பொம்பளபிள்ளையாட்டம் ட்ரெஸ் பண்ணிருந்தா மட்டும் போதுமா? கொஞ்சமாவது அடக்கமா இருக்கத் தெரிய வேண்டாமா!!! " என்று காட்டுகத்தல் கத்திவிட்டு நகர்ந்து சென்றுவிட்டான்.

அமைதியாக சோஃபாவில் சென்று அமர்ந்திவளின் அருகே வந்து இடித்துக் கொண்டு அமர்ந்தான் கமல்.

"எல்லாம் உன்னால தான் டா. பாரு அந்த தடிமாடு என்னை எப்படி திட்டிட்டு போறான்னு..." என்று அவளைப் போல் மிமிக்கிரி செய்து காண்பித்தான் கமல்.

"ச்சீ... போடா நானே மிஸ் ஆகிடுச்சேனு வருத்தத்துல இருக்கேன்..." என்று உண்மையாகவே கவலையாக கூறினாள் சுனைனா.

கமலுக்கு கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் குழப்பமாக தோன்ற, "என்ன மிஸ் ஆகிடுச்சி?" என்று கேட்டேவிட்டான்.

"ம்ம்ம்... கிஸ் தான்..." என்று அதே வருத்தத்துடன் கூறினாள்.

அதிர்ச்சியாக அவளைப் பார்த்தவன், "அவ்வ்வ்வா... அடிப்பாவி... என்னடி இப்படி ***** பச்சையா பேசுறே... அய்யோ... நீ சொன்னதை உன்கிட்ட திரும்ப சொல்றதுக்கே எனக்கு சங்கோஜமா இருக்கே... நீ என்னடானா ரெம்ப சர்வசாதாரணமா சொல்றே." என்று உண்மையாகவே புலம்பினான் கமல்.

"அடேய்... அடங்கு டா... நானே இரண்டு வருஷமா பேசாத அபி மச்சான் இப்பவும் திட்டிட்டு தான் போறாங்கனு வருத்தமா இருக்கேன்... இங்கே வந்து அழுதுவடியிறே... இடத்தை காலி பண்ணு காத்துவரட்டும்."

மீண்டும் கமலின் மனதில் உரிமை போராட்டம் தொடங்கியது. "ஓஓஓ அவன் என்னைவிட ஒரு வயசு சின்னப்பையன். அவனை அவங்க இவங்கனு சொல்றே... என்னை டா... ரெம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு தான் நீ... நடத்து நடத்து... அவன் ஏன் உன்கிட்ட இரண்டு வருஷமா பேசலே?... அப்படி என்னத்த செய்து வெச்சே?..."

"12th முடிச்சிட்டி டாக்டருக்கு படி, மும்பைல நல்ல காலேஜ் பார்த்து சேர்த்துவிடுறேனு ராம் மச்சான் சொன்னாங்க... நான் இவன்கிட்ட போய், அபி மச்சான் அபி மச்சான் எப்படியும் என்ன படிச்சாலும் உங்களைத் தான் கட்டி வைக்க போறாங்க, அதுக்கு எதுக்கு நான் டாக்டர் படிக்கனும். இங்கேயே லோக்கல்ல ஒரு காலேஜ் போய்ட்டு வரேனே... உங்களையும் டெய்லி பார்த்துப்பேன், நம்ம வீட்டைவிட்டும் பிரிஞ்சு இருக்கத் தேவையில்லேனு சொன்னேன்...

அதுக்கு என்னமோ கொலைக்குத்தம் செய்த மாதிரி 'இதென்ன பேச்சு... இப்பவே கல்யாணம் அது இதுனு சொல்றே... இந்த வயசுல ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு... திரும்ப என் முன்னாடி இப்படி வந்து பேசிட்டு நின்னேனு வை... உன்னை கொலையே பண்ணிடுவேன்... போ... போய் பையா சொல்ற காலேஜ்ல உருப்படியா படிக்கிற வழிப்பாரு'னு... தாம்தூம்னு குதிச்சி கத்தி என்னை திட்டி அனுப்பிட்டான். அதுக்கப்பறம் அவங்ககிட்ட நான் பேசவே இல்லே... பட் ஸ்டில் ஐ லவ் ஹிம்..." என்று கண்களில் காதல் பொங்கக் கூறினாள்.

"அவன் சொன்னது சரி தான். இப்போ மட்டும் உன் லைஃப் பாட்னரை நீயே ச்சூஸ் பண்ற வயசு வந்திடுச்சா என்ன!!!!" என்று அவன் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க சுனைனாவின் மைண்ட்,

'அடுத்து ஆட்சிக்கு யார் வரனும்னு முடிவெடுக்க வேண்டிய வயசே வந்திடுச்சி... என்னை யாரு ஆளனும் நான் முடிவு பண்ணக் கூடாதா என்ன?' என்று அவனுக்கு எதிராக குரல் கொடுத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தது. அதற்குள் அவன் மீண்டும் பேச அங்கே கவனத்தைப் பதித்தாள்.

"என்ன தான் அவன் என் எனிமியா இருந்தாலும் உனக்கு சரியான அட்வைஸ் கொடுத்திருக்கான். கண்டிப்பா இதுக்காகவே அவனை பாராட்டலாம்.... இன்னு உன் படிப்பே முடியலே... அதுக்குள்ள என்ன காதல் கல்யாணம் அது இதுனு... அப்படி என்ன அவசரம் உனக்கு. ஏதோ இவனா இருக்கப்போய் நல்ல விதமா அட்வைஸ் பண்ணி அனுப்பிருக்கான். அவனுக்கு பதிலா நானா இருந்திருந்தா, செவில்லேயே இரண்டு போட்டு அனுப்பிருப்பேன்." என்று அவன் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டிருக்கும் போதே,

"கமல் எனக்கு தூக்கம் வருது கமல்..." என்று ஒரு கொட்டாவியை வெளிவிட்ட படி கூறினாள் பெண்ணவள்.

உடைக்குப் பொருத்தமாக வளையல் அணிந்திருந்த அவளின் பட்டுக் கைகளை முறுக்கிப் பிடித்து அவள் முதுகில் நான்கு அடிகளை பரிசாகக் கொடுத்துவிட்டு "போடி" என்றுவிட்டு எழுந்து சென்றான்.

தூரத்தில் இருந்து இந்த கடைசி காட்சியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த முறைப்பையனால் முறைக்க மட்டுமே முடிந்தது. அவளிடம் கண்டிக்கவும் முடியவில்லை, அவனிடம் கோபப்படவும் முடியவில்லை.

-ஊடல் கூடும்​
 
Top