• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை வாசிக்க வாசிக்க தானாக நேத்ராவின் கண்கள் குளம் கட்டியது.

"இதுக்கு கூலி நீங்க என்ன கொடுத்திங்க? என்கிட்ட என்ன எதிர்பார்க்குறிங்க? என்ன கேட்டாலும் தந்துதானே ஆகனும்... என்னைக் கேட்டாலும்!!! எங்கே? எப்போ? எத்தனை நாள்னு மொதவே சொல்லிடுங்க?" என்று பிசிரற்ற குரலில் பார்வையை எங்கோ வைத்துக் கொண்டு கூறினாள்.

அவளின் முகத்தில் புன்னகையை எதிர்பார்த்திருந்தவன் தன் காதுகளில் அமிலம் வந்து விழுந்திட, அதை உதிர்த்தவளின் கன்னத்தை பதம் பார்த்தது அவன் கைகள். அவன் கொடுத்த அடியில் காது 'கொய்ய்ய்ய' என்றது அவளுக்கு. தன் கன்னத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தாள்.

சுற்றி இருந்த ஒரு சிலர் தங்களை திரும்பிப் பார்ப்பதை உணர்ந்து மற்றவர் முன் காட்சிப்பொருளாக நிற்க விரும்பாமல், அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு காரின் முன்சீட்டில் அவளை அமரவைத்து ட்ரைவர் சீட்டில் அவன் அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு அவளது வார்த்தைகளே காதுக்குள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க, கோபத்தில் ஸ்டாரிங் வீலை குத்தி ஹார்ன்-ஐ பலமாக அழுத்தினான். தலையைக் கோதி பின்னால் சாய்ந்து அமர்ந்தவன் அருகில் இருப்பவளை திரும்பிப் பார்த்தான். கன்னத்தில் தான் பதித்த கைத்தடங்களுடன் இன்னும் கண்களில் கண்ணீர் ஓய்ந்தபாடில்லாமல் அழுது கொண்டிருந்தாள். எதிரே இருந்த மலையை வெறித்துப் பார்த்தபடி அமரிந்திருந்தவளிடம்,

"உன்னை புரிஞ்சிக்கவே முடியலே டி... நீ சந்தோஷப்படுவேனு நெனச்சு தான் செய்தேன். ஆனால் இப்படி கேட்டு என்னையும் அசிங்கப்படுத்துவேனு தெரிஞ்சிருந்தா அவனை கொன்னுட்டு வந்திருப்பேன்..." என்று ஒருவித இயலாமையோடு கூறினான்.

"நீங்க எனக்காக என்ன செய்திருந்தாலும் என் கேள்வி இதுவாகத் தான் இருந்திருக்கும்." என்றாள் மீண்டும்.

அதில் மீண்டும் கோபம் கொண்டவன், அவளின் முழங்கை அருகே அழுத்தமாக பிடித்து தன் அருகே இழுத்து, "திரும்பவும் அப்படி கேட்டு பாரு... உன்னை கொல்லுவேன்..." என்று கர்ஜித்தான். மற்றொரு கையால் அவள் தாடையை வன்மையாகப் பிடித்து நிமிர்த்தி, "என்னைப் பார்த்தா அதுக்காகவே அலையிறவன் மாதிரி தெரியுதா?" என்று கேட்டுவிட்டு அவளைத் தள்ளிவிட்டான்.

அவன் அழுந்தப் பிடித்ததிருந்ததில் வழியெடுத்த தன் கையை பிடித்துக் கொண்டு "நீங்க அப்படிபட்டவர் இல்லை தான்... ஆனால் நான் உங்களுக்குப் பொருத்தமானவ கிடையாது."

"பொருத்தம்...." என்று கூறி பல்லைக் கடித்தவன் அதே கோபத்தோடு அவளிடம் வினவினான், "எதைவெச்சு பொருத்தம் இல்லேனு சொல்லுறே....? கலரையா? இல்லே டிவர்ஸ் ஆனதை வெச்சா?"

"இரண்டும் தான். நீங்களே அப்படித் தானே சொன்னிங்க, எனக்கு விவாகரத்து ஆனதற்கு காரணம் இது தான் என்று" தன்னைத் தானே மேலிருந்து கீழே சுட்டிக்காட்டி வினவினாள்.

"நான் எப்போ....?" என்று ஆரம்பித்தவன் தங்களின் முதல் சந்திப்பு நினைவில் வர, "நம்மலோட பஸ்ட் மீட்ல பேசினதே சொல்றியா!!!" என்று அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக கேட்டான்.

இப்போது அவளும் தன் கண்ணீரை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, முற்றிலுமாக அழுகையை நிறுத்தி ஆம் என மேலும் கீழுமாக தலையசைத்தாள்.

அவளின் பதிலில் தன் கோபம் முழுதுமாக கரைந்திட, "அது... அது... அன்னைக்கு நான்.... உன்னை.... உனக்கு.... ஏன் அப்படி.... பேசினேனு... ?" என்று என்ன கூறுவது எதை முதலில் சொல்வது என்று தெரியாமல் திக்கித்தினறி ஒவ்வொரு வார்த்தைகளாக கோர்த்திட,

"நல்லாவே தெரியும்.... என்னை தல குனிய வெச்சி உங்களை நான் எதிர்த்து நிற்காம இருக்குறதுக்கு..." என்று அவள் முடித்து வைத்தாள்.

"ஆ .. ஆனா... ஆனா என் மனசுல உண்மையாவே அப்படி ஒரு எண்ணம் இல்லே மா..." என்று குற்றவுணர்வோடு கூறினான்.

"அதுவும் தெரியும்... இப்போ உங்க குடும்பத்தோட பழகின பின்னாடி அதையும் தெரிஞ்சுகிட்டேன்..."

அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி "பின்னே ஏன் டி இப்படி பேசுறே!!!" வலிகள் நிறைந்த குரலில் வினவினான்.

மெதுவாக அவன் கைகளை விலக்கிவிட்டு, "நீங்க உலக அளவில் புகழ் பெற்ற பெரிய பிஸ்னஸ் மேன். உங்களுக்கு மனைவியா வரதுக்கு இந்தியால பல அழகிகள் காத்துட்டு இருப்பாங்க... உங்களுக்காக விருந்து சாப்பாடே காத்திருக்கும் போது ஒருத்தன் வேண்டானு உதறிட்டுப்போன எச்சில் இலையான என்னை ஏன் நீங்க கல்யாணம் செய்துக்கனும்!!!" என்று தெளிவாக வினவினாள்.

கண்களில் ரௌத்திரம் மின்ன அவளைப் பார்த்தவன், அவளின் பின் கழுத்தை தலையை அசைக்க முடியாதபடி பிடித்து, மற்றொரு கையை இடையில் வைத்து தன்னோடு சேர்த்து அணைத்து அவளின் இதழ்களை முரட்டுத்தனமாக முற்றுகையிட்டிருந்தான்.

அவனின் இதழ் முற்றுகையில் மென்னையின் அர்த்தமோ, பெண்ணவள் தாங்குவாளா என்று யோசனையோ அவனுக்கு சுத்தமாக இல்லை என்பதையும், அவனிடம் இப்போதைக்கு கோபம் மட்டுமே நிறைந்திருக்கிறது என்பதையும் பெண்ணவள் நன்கு உணர்ந்து கொண்டாள்.

வந்ததில் இருந்து தன்னை வார்த்தைகளால் வதைக்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்து கொண்டிருந்த பெண்ணவளின் மென்னிதழ்களை கோபம் தீரும்மட்டும் சித்ரவதை செய்து கொண்டிருந்தான் ஆடவன்.

ஒரு கட்டத்திற்கு மேல் வலி தாங்க முடியாமல் அவன் புஜங்களை அழுத்திப்பிடித்து தள்ள முயற்சித்து முடியாமல் போக கண்ணீர் சொறிந்தாள். இதழ்களின் சங்கமத்திற்கு நடுவே கண்ணீரின் தித்திப்பை உணர்ந்தவன் அவளை இருக்கையில் தள்ளிவிட்டு, காரை ஸ்டார் செய்தான்.

மகிழுந்து அவளின் வீட்டிற்கு செல்லும் பாதையில் பயணித்தது. தெருமுனையில் காரை நிறுத்தி, அவள் புறம் திரும்பிட சீட்டில் தலையை சாய்த்து கண்களை மூடி படுத்திருந்தாள். மூடிய கண் இமைகளுக்கு நடுவே எப்போது வேண்டுமானாலும் வடிந்திடுவேன் என்று பரைசாற்றிக் கொண்டு நின்றிருந்ததது கண்ணீர். கன்றி சிவந்திருந்த இதழ்கள் கொஞ்சம் வீக்கமாகத் தெரிந்திட மென்மையாக வருடிவிட்டான். அடுத்த நொடி கண்ணீர் அவன் கையை வந்தடைய அவளும் அவன் கையைத் தட்டிவிட்டு தன் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"தரு.... இங்கே பாரு...." அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவனே தொடர்ந்தான்,

"சாரி... தரு... ஒரே ஒருமுறை என்னைப் பாரு..." அவள் திரும்பவில்லை...

"சரி பார்க்க வேண்டாம். சொல்றதை மட்டும் கேளு போதும்..."

எதற்கும் அவள் அசைந்தால் இல்லை... ராம் தான் சொல்ல வேண்டிவதை சொல்லத் தொடங்கினான்.

"இது தான் உனக்கும் முதல் முத்தம்னு எனக்குத் தெரியும். என்னைவிட்டு விலகுறதுக்காக இனிமே இப்படி 'எச்சில் இலை' அது இதுனு அனர்த்தமா பேசாதே... அப்பறம் என்னோட தண்டனை இதைவிட கடுமையா இருந்திடப் போகுது... " என்று உள்ளாசமாக உரைத்தான்.

"சரி எனக்கு ஃப்ளைட்டுக்கு டைம் ஆகிடுச்சி, நான் டாக்ஸி புக் பண்ணி போறேன். நீ வீட்டுக்கு போயிடுவ தானே!!!" என்று கேட்டு காரைவிட்டு இறங்கி அவள்புறம் வந்து நின்றான்.

காரின் மேல் தன் வலது கையை வைத்து வின்டோ அருகே குனிந்து "ஏதாவது பதில் சொல்லு தரு..." என்றிட,
"இது தான் எனக்கு ஃபஸ்ட் டைம்னு உங்களுக்கு யாரு சொன்னா? கல்யாணம் ஆகி ஒரு குழந்தைக்கு அம்மா நான்" என்று கண்கள் திறவாமலேயே வினவினாள்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தலை குனிந்து, "இருக்கலாம், ஆனா உன்னை தொடுற உரிமைய என்னைத் தவிர வேறு யாருக்கும் நீ கொடுக்கலைனு எனக்குத் தெரியும்" என்றான்.

"அந்த மதன் சொன்னானா? அவன் சொல்றது உண்மைனு எப்படி நம்புறிங்க? உங்க பணத்துக்கு ஆசைப்பட்டு அப்படி சொல்லிருக்கலாமே!!! என்னையும் வெண்பாவையும் உங்ககிட்ட தள்ளிவிட்டா தானே அவனுக்கு வருமானம் குறையில்லாம வரும். அதனால அவன் பொய் சொல்லியிருந்தா?"

"ஏன்டி? இந்த வாய் அடங்கவே அடங்காதா? உனக்கு மட்டும் என்னை உயிரோட கொல்லும் சொற்கள் எங்கிருந்து தான் கிடைக்குமோ... நீ என்னவள்... எனக்கு மட்டுமே சொந்தமானவள்... உனக்காக அந்த நாய்க்கு பணம் கொடுத்திருப்பேனு எப்படி நெனச்சே.... அப்படி பணம் கொடுத்தா நம்ம ரெண்டுபேரோட அன்புக்கும் நானே தப்பான பேர் வாங்கித் தந்த மாதிரி இருக்காதா!!!"

அவனது பேச்சு காதில் விழ கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தாள். அவனிடம் இதனை எதிர்பார்த்திடவில்லை தான். நிச்சயம் மதனுக்கு பணக்கட்டுகளை கண்ணில் காட்டாமல் எந்த காரியமும் செய்ய வைக்க முடியாது என்று மட்டுமே யோசித்திருந்தவள், இன்று அந்த பணப்பேயை எதிர்த்து நின்றது வல்லவனுக்கு வல்லவன், வில்லாதி வில்லன் என்பதை மறந்து போனாள்.

அனைத்தும் புத்திக்கு எட்டியப் பின்னும் அவளது பார்வை ராமைவிட்டு அசையாமல் 'கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு' என்று நின்ற நிலையில் நிற்க,

"அவன் சொன்னான் தான். ஆனால் நம்பினது அவன் வார்த்தைகளை இல்லே, உன்னை... என் தரு-க்கு யாரை எங்கே வைக்கனும்னு தெரியும்... அப்படி நீ ஒதுக்கி வெச்ச கோபத்துல இன்னும், கூடக்கொஞ்சம் பேசினான்... இனி அவனுக்கு ஒழுங்கா பேச்சு வரதுக்கு ஒரு மாசம் ஆகும்..." என்று தன்மையாக பேச ஆரம்பித்தவன் வன்மமான சிரிப்போடு நிறுத்தினான்.

மீண்டும் அவள் அமைதியடைந்து எங்கோ வெறித்திட, "சரி நான் கிளம்புறேன்... நீ வீட்டுக்கு போ..." என்று கூறி திரும்பி நடக்கத் தொடங்கினான்.

அப்போது கதவு திறந்து மூடும் சத்தம் கேட்க தலையை மட்டும் திரும்பிப் பார்த்தான். காரைவிட்டு வெளியே வந்து கதவின் மேல் சாய்ந்து நின்றவள், "அப்போ முழு உண்மையும் தெரிஞ்சப் பிறகு தான் என்னை கல்யாணம் செய்துக்க முன் வந்திருக்கிங்க!!!?" என்று அவனை வெறுப்பேத்த வேண்டியே வினவினாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே கோபம் கொண்டவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கிட, பெண்ணவள் மெய்யாகவே பயந்து பின்னால் முழுவதுமாக சாய்ந்த காரை ஒட்டி நின்று கண்களை மூடிக்கொண்டு முகத்தையும் ஒருபக்கமாக திருப்பி வைத்து குனிந்து நின்றாள்.

அப்போது அவர்களுக்கு நேர் எதிரே ஒரு கார் வந்து நின்றிட, அதிலிருந்து இறங்கிய வெண்பாவின் "ராம் ப்பா..." என்ற கூவலில் சிறுமியைத் தொடர்ந்து இறங்கிய மிதுன்யா மற்றும் பவன் இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

தன் சத்தமான அழைப்பிற்குப் பிறகு தான் அருகில் தன் அன்னை இருப்பதை கவனித்து கண்களை விரித்து, வாயை தன் கரம் கொண்டு மூடி, தவறு செய்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டு, அப்பாவோடு கூட்டு சேர்ந்துகொள்ளும் குழந்தைகளைப் போல் ராமின் அருகே வந்து நின்றாள் சிறுமி.

ராம் அவளைத் தூக்கி முத்தமிட, "சாரி... அம்மா இருக்கதை கவனிக்காம அப்படி சொல்லிட்டேன்." என்று ரகசியக் குரலில் மன்னிப்பு கேட்டிட,

"இன்னமே எல்லார்... முன்னேயும் என்னிய அப்பானே... சொல்லு... யாரும் ஏதும் திட்டமாட்டாங்க..." என்று குழந்தையிடம் மட்டும் தமிழில் பேசி மீண்டும் முத்தமிட்டான்.

வெண்பாவும் அவனுக்கு முத்தமிடுகையில் அவன் கன்னம் நேத்ரா அடித்ததில் சிவந்திருப்பதைக் கண்டு "அப்பா... இதென்ன?" என்று கேட்க,

நேத்ராவைப் பார்த்துக் கொண்டே "அம்மா கொடுத்த கிப்ட்..." என்றான். மூன்று வயது சிறுமிக்கு ஒன்றும் புரியவில்லை, ராமையே பார்த்து முழித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் மிதுன்யாவும் பவனும் அங்கே வந்து நிற்க, நேத்ரா ராமின் அடியில் மட்டுமல்லாது இவ்வளவு நேரம் அழுது வீங்கிய முகத்தை அவர்கள் முன் காண்பிக்க விரும்பாமல், மறுபக்கம் திரும்பி நின்று "பவன் இவங்க ஏர்போர்ட் போகனுமாம், நீ ஃப்ரியா இருந்தா கொண்டுபோய் விட்டுட்டு வா..." என்று கூறிவிட்டு தன் காரில் ஏறி அமர்ந்து வீட்டிற்கு புறப்பட்டாள்.

"என்னாச்சு ராம்? உங்க இரண்டு பேருக்கு இடையிலே ஏதாவது பிரச்சனையா?!!!" என்று மிதுன்யா அவன் கன்னத்தைப் பார்த்துக் கொண்டே வினவினாள்.

"போகும் போது சொல்றேனே... ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு..." என்று அவனும் இருவரையும் மாறி மாறி பார்த்தாலும் மிதுன்யாவிற்கு பதிலளித்தான்.

அனைவரும் பவனின் காரில் ஏறி அமர, தான் கொண்டு வந்த பையில் இருந்து வெண்பாவிற்கு இடைவரை நீண்ட முடி கொண்ட பார்பி டால் ஒன்றை எடுத்துக் கொடுத்தான் ராம். பார்பி டாலும் வெண்பா தன் மடியில் அமர்த்திக்கொள்ளும் அளவிற்கு பெரிதாகவே இருந்திட, பின் சீட்டில் ராமின் அருகே அமர்ந்து டாலை தன் மடியில் அமர்த்திக்கொண்டு அதனுடன் பேசிக்கொண்டே வந்தாள் சிறுமி.

"பவன்.... தருகிட்ட வெண்பா கேஸ் விஷயமா ஒரு டாக்யுமெண்ட் கொடுத்திருக்கேன். அந்த பத்திரத்தை கோர்ட்ல சப்மிட் பண்ணினா போதும், வெண்பா நேத்ராவோட பொண்ணுனு தீர்ப்பு வந்திடும்...." என்றிட

மிதுன்யா வெண்பாவை திரும்பிப் பார்க்க அவள் ஆர்வமாக தன் பார்பியுடன் விளையாடுவதைக் கண்டு, "பொம்மி நேத்ரா அக்கா பொண்ணு தானே!!!" என்று பவனிடம் வினவிட, அவனோ இல்லை என இடவலமாக தலையசைத்தான்.

அவன் பதிலில் அதிர்ச்சியடைந்து ராமைத் திரும்பிப் பார்த்தாள் மிதுன்யா... மேலும் 'இது சரிவருமா?' என்று தன் கணவன் யோசித்தது எதற்கு என்று இப்போது தான் புரிந்தது அவளுக்கு...

"சிவாவைப் பற்றி எல்லாம் தெரியுமா?" என்று ராமிடம் வினவினான் பவன்.

"இதோ பார்... அவளோட பாஸ்ட் எனக்குத் தேவையில்லே... முதல் சந்திப்பிலேயே அவள் மேல் தப்பு இருக்க வாய்ப்பில்லைனு எனக்கு தோனுச்சு தான். அன்னைக்கு இருந்த பிஸ்னஸ் மைண்ட்ல தான் அவளை காயப்படுத்தினேன். அவளை அசிங்கப்படுத்தனும்னு நான் நினைச்சது இல்லே. இப்போ கூட அவளோட பாஸ்ட்டை தெரிஞ்சுக்கக் காரணம் வெண்பா கேஸ் தான். இனி அடுத்த ஹியரிங்ல கேஸ் முடிஞ்சிடும். அதுக்கப்பறம் யார் சம்மதிச்சாலும் சம்மதிக்கலேனாலும் எனக்கும் நேத்ராவுக்கும் கல்யாணம் நடக்கும்... அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு, ஆனால் ஏதோ ஒன்னை மனசுல வெச்சிக்கிட்டு பிடிக்காத மாதிரி நடிக்கிறா... இனி அவளே என்னைவிட்டு விலகிப்போக நெனச்சாலும் அது நடக்காது..." என்று எவ்வளவு தான் நீயும் நானும் நெருங்கிய சொந்தம் ஆகிப்போனாலும், உனக்கும் எனக்குமான மோதல் என்றும் சரியாகாது என்பது போல் கராராகப் பேசினான் ராம்.

ஏர்போர்ட்டும் வந்திட ராமை வழியனுப்பிவிட்டு "கடைக்குப் போகலாமா? இல்லே வீட்டுக்குப் போவோமா?" என்றாள் மிதுன்யா.

"வந்த வேலை முடியலேயே!!! பொம்மிக்கு ட்ரெஸ் எடுக்கத் தானே கிளம்பினோம். எடுத்துட்டே போகலாம்..." என்றான்.

"நீங்க...? உங்களுக்கு...?"என்று இழுத்து பேச்சை நிறுத்தினாள்.

"ஐ ஆம் ஆல்ரைட் நௌ... இப்போ ட்ரெஸ் எடுக்கலேனா பொம்மிய ஏமாத்தின மாதிரி ஆகிடும். நம்ம கடைக்கு தானே போறோம்... கையோட ட்ரெஸ் எடுத்துட்டே போயிடலாம்..." என்று முடித்தான்.

இன்னும் ஒரு மாதத்தில் வெண்பாவையின் மூன்றாம் பிறந்த நாளைக்காக விமலா தான் ஆடை எடுத்தவரச் சொல்லி அனுப்பி வைத்திருந்தார்.

மிதுன்யாவின் மேல் கோபப்பட்டதற்கு சமாதானம் செய்ய வீட்டிற்கு வந்த பவனிடம் விமலா விஷயத்தை சொல்ல, அதனை கவனித்த வெண்பா, இப்போதே நியூட்ரெஸ் வேணும் என்று அடம்பிடித்து பவன் கிளம்பும் பொழுது அவளும் உடன் கிளம்பிட, விமலா மிதுன்யாவையும் பொம்மியுடன் அனுப்பி வைத்தார்.

தங்களின் கார் கேட்டைவிட்டு வெளியே வந்தவுடனேயே ராமையும், நேத்ராவையும் கண்டு கொண்டனர் மிதுன்யா மற்றும் பவன் இருவரும். அதன்பின் வெண்பாவின் அப்பா என்ற அழைப்பும், நேத்ராவின் தவிர்ப்பும் இருவருக்கும் இடையேயான காதலை ஊர்ஜிதம் செய்ய, இனி இருவரிடமும் கேட்பதற்கு எதுவும் இல்லை என்ற அறிந்து கொண்டான் பவன்.

கடையில் கேஷ் கவுண்டரில் கமல் அமர்ந்திருக்க அவனின் பின்னால் இருக்கும் சிறிய அலுவலக அறைக்கு மிதுன்யாவை அழைத்துச் சென்றான் பவன். அங்கே வெண்பாவிற்கான ஆடைகளை எடுத்துவரச் சொல்லியிருந்தான்.

நொடிக்கொரு முறை தன்னவனின் முகத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தவளை நெருங்கி,

"நான் நார்மலா தான் இருக்கேன் மித்து... எனக்கு யார் மேலேயும், எந்த கோபமும் இல்லே... வந்த வேலையை முடி... சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்... சரியா?" என்று கனிவாகக் கூறினான் பவன்.

அவளும் சம்மதம் என தலையசைத்துவிட்டு ஆடைத் தேர்வு செய்வதில் இறங்கினாள் மிதுன்யா
.

-ஊடல் கூடும்.​
 
Top