• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அலைபேசி அழைப்பில் சிறிது நேரம் மௌனம் நிலவ, அதனை முதலில் கலைத்தது நேத்ரா தான்.

"வேற என்ன வேணும்? என்னால கொடுக்க முடிந்த பொருள் ஏதாவது சொல்லுங்க!!", என்று அழுத்தம் திருத்தமாக கூறினாலும், மனமோ என்ன கேட்டுத் தொலையப் போறானோ தெரியலேயே என்று நினைத்து வெளியே வந்து விழுந்துவிடும் அளவிற்குத் துடித்துக் கொண்டிருந்தது.

"வேற என்ன கேட்க போறேன்... எனக்கு உன்னை பார்க்கனும்... எப்போ வருவே?" என்று அவனையும் தாண்டி அவனது ஏக்கம் வெளிப்பட்டுவிட்டது.

மீண்டும் பலத்த அமைதி. ஆனால் இருவருக்கும் போனை வைக்க மனமில்லை.

இன்றே எப்படியும் தன் பதிலை கூறிவிட வேண்டும் என்ற முடிவோடு மீண்டும் பேசத் தொடங்கினாள்.

"பொருளா இல்லாம, உயிரா கொடுத்தா பத்திரமா பார்த்துப்பிங்களா?" என்று வெகு அமைதியாக வினவினாள்.

அவளின் கேள்வியும் அமைதியும் அவனுக்கு சற்று குழப்பத்தைக் கொடுத்தது. 'பொருளாக அல்லாமல் உயிராக என்றால் என்ன கூற வருகிறாள். ஒருவேளை அவளைத் தான் சொல்கிறாளா!!! அதற்கு வாய்ப்பே இல்லையே... இந்த திமிர்காரி அப்படியெல்லாம் சொல்லக் கூடியவள் இல்லையே!!!

அப்போ யாரைச் சொல்கிறாள்!!! ஒருவேளை வெண்பாவிற்காகத் தானே இத்தனையும் செய்தாய், உன்னுடன் வெண்பாவை அழைத்துச் செல்ல முடியுமா!!! என்று எதுவும் சவால் விடும் யோசனையில் இருக்கிறாளா! அதற்கும் தான் வாய்ப்பில்லையே! வெண்பாவை ஒட்டுமொத்தமாக பிரிந்து இருக்கமாட்டாளே!!' என்று யோசித்தாலும் காதல் கொண்ட மனம் நூறில் ஒரு சதம் தன்னை விரும்புவதாக ஒத்துக்கொண்டு கல்யாணத்திற்கு சம்மதித்துவிட்டாள் என்றால்!!! என்ற நப்பாசையும் இருந்தது. ஆனாலும் அசராமல் பதில் கொடுத்தான்.

"உயிரா கொடுக்குறதா இருந்தால் எனக்கு ஒன்னு இல்லே, இரண்டு வேணும்..." என்றிட

'சரியான விடாக்கண்டன்' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,

"ஒன் பை ஒன்னா தான் கிடைக்கும். எல்லாம் ஒரே நேரம் கையில் கிடைத்தால் அதன் அருமை எப்படி தெரியும்? மொதோ ஒன்னை பெற்றுக்கொள்ளுங்கள். அப்பறம் உங்களுக்கு சொந்தமான மற்றொன்று உங்களைத் தேடி வரும்."

அவளின் பதிலில் கடுப்பானவன், "புதிர் போடாமா என்னனு சொல்றியா?" என்று கோபமாகமனவே வினவினான்.

"இன்னு ஒரு வாரத்தில் பொம்மி பிறந்தநாள் வருது... இதுநாள் வரை ஹரித்ரா இழப்பை நினைத்து பெரிதா கொண்டாடிக்கலே. வீட்டளவில் தான் பிறந்தநாள் கொண்டாடி இருக்கோம்... முதல்முறை பார்ட்டி செலிப்ரேட் பண்ணப் போறோம்... நீங்களும் உங்க குடும்பமும் கண்டிப்பா வரனும். வீட்டில் பெரியவங்ககிட்ட மாமா பேசுவாங்க... வெண்பாவையின் அம்மாவா நான் உங்களை ஸ்பெஷல் கெஸ்ட்டா அழைக்கிறேன். வருவிங்களா?" என்று பதில் தெரிந்தும் வினவினாள்.

"இதுக்கும், நீ மொதோ சொன்னதுக்கும் எந்த சம்மந்தம்? என் பொண்ணு பிறந்தநாளைக்கு என்னையே ஸ்பெஷல் கெஸ்ட்டா நீ இன்வைட் பண்ணத் தேவையில்லே..." என்று சிடுசிடுத்தான்.

"இங்கே வந்தால் என்ன சம்மந்தம்னு தெரிஞ்சிடப் போகுது. பொம்மி பிறந்தநாளைக்கு நீங்க கண்டிப்பா வருவிங்கனு தெரியும். பார்ட்டில மீட் பண்ணலாம்." என்று கூறி அவன் அனுமதியுடன் அழைப்பைத் துண்டித்தாள். தனது முதல் திட்டம் நிறைவேறிய சந்தோஷத்தில் நேத்ராவிற்கு மென்னகை பூத்தது. அடுத்த நிமிடமே காய்ந்து சருகாகவும் மாறிப் போனது.

அங்கே ராம் இன்னும் அலுவலக அறைக்குள் நுழையவில்லை என்றவுடன் ஆரவ் வெளியே வந்து தன் தமையனைப் பார்த்தான். வானையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகில் சென்று உலுக்கினான் ஆரவ்.

"பையா எல்லாம் ஓகே தானே!!!"

"ம்ம்ம்... இப்போ வரை ஓகே தான்." என்று கூறி மீண்டும் அமைதியாகிட,

"என்ன பையா? ஏதோ போல இருக்கிங்க! இப்போ தான் மிதுன் ஃபோன் செய்தாள், நெக்ஸ்ட் வீக் வெண்பா குட்டி பர்த் டே பார்ட்டியாமே. நாமெல்லாம் மீட் பண்ணப்போறதை சந்தோஷமா சொன்னாள்... நீங்களும் அதே எண்ணத்துல ஹாப்பியா இருப்பிங்கனு நெனச்சேன்... ஆனா ஏதோ யோசனைல இருக்கிங்க!... என்னாச்சு?" என்று அக்கறையாக வினவினான்.

அவர்களின் உரையாடலுக்கு நடுவே தன் தலையை நீட்டினான் அபி.

"எல்லாம் இவனோட ஐயர்ன் லேடியால தான்..." என்று கூறி அங்கிருந்த மரத்தடி பென்ச்சில் அமர்ந்தான். வேலையாட்கள் காற்றோட்டமாக ஓய்வெடுக்க விரும்பினால், ராமினால் செய்யப்பட்டிருந்த ஏற்பாடு தான் ஒவ்வொரு மரத்தின் கீழேயும் அமைக்கப்பட்ட கல்மேசை.

"எதுவும் சண்டை போட்டாங்களா? இல்ல உங்களை மட்டும் வரக் கூடாதுனு எதுவும் சொன்னாங்களா?" என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தனர்.

"அப்படி சொல்லிருந்தா கூட பரவா இல்லை போலனு தோனுது... எவ்வளோ ஸ்மார்ட்டா ப்ளான் பண்ணிருக்கா தெரியுமா? இத்தனை வருடம் இல்லாம இப்போ ஏன் பர்த் டே செலிப்ரேட் பண்ணனும்!!!" என்று தன் முதல் ஆராய்ச்சியைக் கூறினான்.

"அதனால என்ன பையா? எப்படி இருந்தாலும் நீங்களும் வெண்பா பர்த் டேக்கு போறதா தானே இருந்தது. இப்போ அவங்களே அழைச்சிருக்காங்க. அவளோ தான்..." என்ற அபியை 'இவ்வளவு மக்காடா நீ!!?' என்பது போல் பார்த்தான் ராம்.

"அந்த பயம் தான் அவளுக்கும். இந்த பர்த் டேக்கு நான் வெண்பா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன்னு அவளுக்குத் தெரியும். அப்படினா இந்த பர்த் டே வெண்பாவிற்கு ஸ்பெஷல் பர்த் டே ஆகிருக்கும். எனக்கும் வெண்பாவிற்கும் இன்னும் கொஞ்சம் நெருக்கம் வந்திருக்கும். வெண்பாவிற்கு நான் ஸ்பெஷலா தெரிஞ்சிருப்பேன். அப்படித் தெரியக்கூடாதுனு தான் இந்த பார்ட்டியே அரேன்ஞ் பண்ணிருப்பா!!!

அதே நேரம் நான் மட்டும் போனா முழுநாளும் வெண்பா கூட தான் இருந்திருப்பேன். ஆனா இப்போ எல்லாரும் வரும்போது நான் மட்டும் வெண்பா கூட ரெம்ப நேரம் ஸ்பெண்ட் பண்ண முடியாது. சேம் டைம் வெண்பா நான் வரலேனு ஏமாற்றமாவோ, ஏக்கமாகவோ இருக்க மாட்டாள். என்னை இன்வைட் பண்ற மாதிரி பண்ணிட்டு, வெண்பாகிட்ட இருந்து பிரிச்சு வெக்கிறா...

இதுபோக ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஒன்னு எனக்கு இருக்கும் போல. அதுல என்ன குண்டு வெடிக்கப் போகுதோ தெரியலே!!!" என்று விரக்தியாகக் கூறி தலையைப் பிடித்துக் கொண்டான்..

"திங்க் பாஸிட்டிவ் பையா" என்று தோள்தட்டிய ஆரவ்விடம்,

"அவளை லவ் பண்ணிட்டு எப்படி பாஸிட்டிவ்வா திங்க் பண்ணுறது? அவளோடு பாஸிட்டிவ் சைட்ஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு காண்பிக்கிறது மட்டும் தான். அவளுக்கோ... அவளை லவ் பண்ற எனக்கோ கிடையாது.

கேட்டா, நான் 'உங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லே'னு சொல்லி அவளை அவளே தாழ்த்திக்கிறா... மனசும் மனசும் விரும்பும் போது வெளித் தோற்றத்திற்கு அங்கே என்ன வேலை. இதை எப்படி அவளுக்குப் புரிய வைப்பேன்!!!" என்று புலம்பிட ஆரவ், அபினவ் இருவரும் காதலோடு சேர்ந்து புதிதாக ஜனனம் எடுத்திருக்கும் தன் தமையனை கண்ணிமைக்காமல் ஆச்சரியமாக பார்த்தானர்.

இந்த காதல் ஒவ்வொருவருக்குள்ளும் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்திவிடுகிறது! பிறப்பு இறப்பிற்கு நடுவே புது உலகில் நம்மை தவிக்கவிடுவதும், சிரிக்க வைப்பதும், மகிழ்ச்சியில் தத்தளிக்க வைப்பதும், சோகக்கடலில் மூழ்க வைப்பதும் என அனைத்தும் இந்த காதலில் அழகு தான்.

ஆரவ் மற்றும் அபினவ்-யின் ஆராய்ச்சிப் பார்வையில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு "சரி வாங்க வேலையேப் பார்ப்போம். டிக்கெட் வேறு புக் செய்ய வேண்டும். ஆரவ் அந்த வேலையே நீ பார்த்துக்கோ... யாரெல்லாம் போறோம்னு தாத்தாகிட்ட கேட்டுக்கோ. அப்பறம் எல்லாருக்கும் பிஸ்னஸ் க்ளாஸே புக் பண்ணிடு." என்று கூறி பழைய ராமாக மாறி தன் பணியைத் தொடர்ந்தான்.

புகழ், மீனாட்சி, ஆரவ் மற்றும் ராமைத் தவிர மற்ற அனைவரும் முதல் நாளே வந்துவிட, வெண்பா நேத்ராவை கேள்வி கேட்டே படுத்தி எடுத்தாள்.

" ராம் ப்பா எப்போ வருவாங்க? ராம் ப்பா ஏன் இன்னு வரலே? ராம் ப்பாக்கு முக்கியமான வேலை இருக்கா?" என்று ஒரே கேள்வியை பல விதங்களில் கேட்டாள்.

"பொம்மி பர்ட் டே வராம இருப்பாங்களா! பொம்மி அவங்களோட செல்ல ஏஞ்சலாச்சே! ஆனால் நீ 'ராம் ப்பா'னு சொல்லாதே டா செல்லம்." என்றிட குழந்தையின் முகம் சுருங்கியது.

"அம்மாவுக்காக அம்மா சொன்னா கேட்பியா? இல்லேயா?" என்று சிறுமியின் முதுகில் வருடிக் கொண்டே கேட்க,

குழந்தைக்கு என்ன புரிந்ததோ "அப்படி கூப்பிட்டா ராம் ப்பாவோட அம்மா திட்டுவாங்களா?" என்றிட,

நேத்ரா அதிர்ச்சியடைந்தாள், "நீ அவங்க முன்னாடி அப்படி சொன்னேயா?" என்று சற்று படபடப்பாக வினவினாள்.

"அவங்க கிட்ட ராம்ப்பாவே ஏன் விட்டுட்டு வந்திங்க?னு கேட்டேன். அவங்க பதிலே சொல்லாம என்னையே பார்த்துட்டு இருந்தாங்க" என்று மழலையில் கொஞ்சிட, நேத்ராவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. இருந்தும் தன் மகளும் பயந்துவிடாமல் இருக்க,

"வெண்பா குட்டியா இவ்வளோ அழகா பேசுதுனு உன்னை பார்த்திருப்பாங்க, நெக்ஸ்ட் டைம் இந்த கேள்விய அம்மா தவிர யார்கிட்டேயும் கேட்காதே... சரியா?" என்று அப்போதைக்கு சமாளிப்பதற்காக கூறினாள்.

அதிகாலை விமானத்தில் ஒருவிதமான எதிர்பார்ப்புடனும், அதே நேரம் சிறிய அச்சத்துடனும் வந்து இறங்கினான் ராம்கிரன்.

ராம் மற்றும் உடன் வருவோரை வரவேற்க பெயர்பலகை மற்றும் பூங்கொத்தோடு கோர்ட், சூட் அணிந்து ஒருவர் ஏர்போர்ட்டில் காத்திருந்தார். முன்னதாகவே தன் பெயரைக் கண்டு கொண்ட ராமின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்து சிதறத் தொடங்கியது.

"இது என்னடா புதுசா இருக்கு!!! நம்ம மிதுன் ரிஸப்ஷனுக்கு முதல் முறையா வந்தப்போ கூட இந்த வரவேற்பு இல்லே. இப்போ என்ன ஸ்பெஷல் வெல்கம் நம்ம ராமிற்கு!!!" என்று புகழ் தன் பங்கிற்கு எரியும் நெருப்பில் நெய் வார்த்துக் கொண்டிருந்தார்.

ராமின் முகத்தில் இருந்த கோபத்தைக் கண்டு கொண்ட மீனாட்சி, ஆரவ்-ஐ அந்த பெயர்பலகை வைத்திருந்த நபரிடம் அனுப்பிவிட்டு ராமின் அருகில் வந்து நின்றார்.

"ராம்... இப்போ ஏன் கோபமா இருக்கே? எதை நெனச்சு கோபமா இருக்கே?" என்று அன்னையாய் மாறி வினவிட,

"பின்னே என்ன சித்தி நாம என்ன வேற்று மனிதர்களா? இப்படி நேம்போர்ட் வெச்சி வீ.ஐ.பி மாதிரி வெல்கம் பண்ணுறதுக்கு?" என்று சத்தமில்லாமல் பல்லைக்கடித்து முணுமுணுத்தான்.

நேத்ரா தன்னை ஸ்பெஷல் கெஸ்ட் என்று கூறியதும் இல்லாமல் வந்து இறங்கியவுடனேயே அதனை காண்பித்தும்விட்டாளே என்ற கோபத்தில் தான் இருந்தான் ராம். ஆனால் மீனாட்சி கேட்கும்போது அதனைக் கூறமுடியாமல் மாற்றிக் கூறினான்.

"மிதுன் வீட்டிலிருந்து இந்த காலை நேரத்துல யாரும் வரமுடியாதுலேடா கண்ணா, அதான் மரியாதை நிமித்தமா இந்த ஏற்பாடு செய்திருக்கலாம். நீ ஏன் தப்பா நினைக்கிறே?... வீட்டிற்குள் நுழையும் போதே கோபமா இருக்காதே..." என்று அவன் தோள் தடவி அமைதிப்படுத்தினார்.

நேத்ரா ஏற்பாடு செய்திருந்த காரில் அனைவரும் ஏறிக்கொள்ள ஆரவ் ஒருமுறை சுற்றிமுற்றி ஏதோ தேடிவிட்டு ஏமாற்றத்தோடு ஏறிச்சென்றான். தூரத்தில் நின்ற ஒரு உருவம் இதனைக் கண்டு சிரித்துச் சென்றது.

லட்சுமணன் குடும்பத்தாருக்கு ஒருபோதும் வேலையாட்களை நியமித்தது இல்லை விமலா. எப்போதும் வீட்டு ஆட்கள் தான் என்ன வேண்டும்? ஏது வேண்டும்? என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர்.

வீட்டில் ஒவ்வொருவராக எழுந்துக் கொண்டிருக்க, காலை காஃபியுடன் லட்சுமணன் அறைக்குச் சென்றாள் நேத்ரா. இருவருக்கும் காலை மெனு சொல்லிவிட்டு, ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்றும் கேட்டுக் கொண்டாள்.

அடுத்ததாக சுஷேண் மற்றும் குந்தவிக்குக் கொடுத்துவிட்டு, பாரி மற்றும் பூங்கொடியின் அறைக்குச் செல்ல சற்று தயங்கியவள், தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே பூங்கொடி கொஞ்சம் இறுக்கமாகத் தான் அமர்ந்திருந்தார்.

"அத்தை, காஃபி எடுத்துக்கோங்க..."

"அங்கே வெச்சிடு நான் எடுத்துக்கிறேன்" என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினார். பாரியிடம் ட்ரேவை நீட்ட அவர் மறுக்காமல் எடுத்துக் கொண்டதோடு, புன்னகைத்து நன்றி உரைத்தார்.

"வேற எதுவும் வேணுனா சொல்லுங்க அத்தை. மாமா நீங்களும்..."

"எனக்கு ஒரு சின்ன உதவி செய்வியா?"

"சொல்லுங்க அத்தை"

"என்னை இனிமே அத்தைனு கூப்பிடாதே..." என்று அமைதியாகவேக் கூறிட, நேத்ராவிற்கு தான் முகத்தில் அறைந்தார் போல் இருந்தது.

'பின்னே எப்படி அழைக்க? என்று கேட்கத் தோன்றினாலும், அழைக்கத் தேவையில்லாத போது எதற்காக இந்த கேள்வி கேட்க வேண்டும்!' என்று நினைத்து சரி என்ற தலையசைப்புடன் வெளியேறினாள்.

ஊடல் கூடும்.​
 
Top