• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
உள்ளே நுழையும் போது வெண்பாவின் அறையை நோட்டமிட்டுக் கொண்டே தான் வந்தான் ராம். ஆனால் அறை பூட்டியிருக்க, அமைதியாக தன் சித்தப்பா புகழின் பின்னாலேயே சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.

நேத்ரா உள்ளே இருந்தாளென்றால், மற்றவர்கள் தான் வெண்பாவை பார்க்கச் செல்வதை விரும்பமாட்டார்கள் என்று தோன்றிட அமைதி காத்தான்.

கங்காதரனும் விமலாவும் வந்தவர்களை கவனிக்க, நேத்ரா எழுந்திருப்பவர்களுக்கு காஃபி கொடுத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள்.

கூடத்தில் அமர்ந்திருப்பவர்களைக் கண்டு புன்னகை செய்துவிட்டு அடுக்களை நுழைய, ராம் தன் தோள்ப்பை, ரோளர் சூட்கேஸ் மற்றும் ட்ராவல் பேக்குடன் வெண்பாவின் அறை நோக்கிச் செல்ல, வந்திருப்பவர்களுக்கு காஃபி எடுத்துக்கொண்டு வந்த நேத்ரா அவசரமாக அவனைத் தடுத்தாள்.

"பொம்மி இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா... அப்பறமா அவளைப் பார்க்கலாமே" என்றிட,

நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன் கண்களில், கோபம் குறைவில்லாமல் தெரிந்தது. ஏற்கனவே அவள் மேல் கோபத்தில் இருந்தவன் இப்போது அவள் தடுக்கவும் இன்னும் அதிகமாகவே கொந்தளித்தான்.

அவனின் கோபம் கண்டு சத்தமில்லாத குரலில் தெளிவாக மன்னிப்புக் கோரினாள். அவளின் கெஞ்சல் குரலில், தன்னை சமன் செய்து கொண்டவன் சற்று நொடியில் கோபம் பறந்து செல்ல,

"நான் தான் வெண்பாவை பார்க்கனும், அதற்கு குட்டிம்மா விழித்திருக்க வேண்டியதில்லை. சத்தமில்லாமல் பார்த்துவிட்டு வருகிறேன்... " என்று முடிந்த அளவு முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு கூறினான்.

ட்ராவல் பேக்கில் இருந்து ஆளுயற டெடி ஒன்றை எடுத்து வெண்பாவின் அருகில் படுக்கவைத்தான். குழந்தையின் தலையில் முத்தமிட்டு வாழ்த்துகூறி, ரோளர் சூட்கேஸில் இருந்து இரண்டு பாக்ஸை எடுத்து, அதில் ஒன்றை பிரித்து சிறிய பேப்பர் ஒன்றில் ஏதோ எழுதி அதனை டேபிலில் வைத்தான்.

மற்றொன்றை பிரித்து அதிலிருந்த ஆடையை வெண்பாவின் மறுபக்கம் விரித்து வைத்துவிட்டு அருகில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அதற்குள் நேத்ரா காஃபி ட்ரேவோடு உள்ளே நுழைய, தனது சூட்கேஸை அவசரமாக மூடி வைத்தான்.

காஃபியை அவன் முன்னே நீட்டிவிட்டு, மெத்தையில் அவன் விரித்து வைத்திருந்த ஆடையை இரண்டாக மடித்தாள்.

அடுத்த நிமிடம் "ம்ம்ச்ச்ச்" என்ற சத்தத்தோடு ராமின் கண்கள் அவளை முறைத்தது.

அடுத்த நொடியே அந்த ஆடையை அவன் வைத்திருந்தது போலவே வைத்துவிட்டாள் நேத்ரா...

அவனின் முகத்தைப் பார்க்காமலேயே அவனின் கோபத்தை உணர்ந்து கொண்டவள், தன் மனதிற்குள் 'இவனை நிரந்தரமாக பிரியப் போவது உருதியானாலும், இவன் கோபம் ஏன் எனக்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறது! அவனின் சின்ன அசைவிற்கு கூட என்னை எப்படி அடிபணிய வைத்திருக்கிறான் பார்!' என்று திட்டிக் கொண்டே அறையைவிட்டு வெளியேறினாள்.

எப்போதும் தன் கோபத்தை உணர்ந்து கொண்ட அடுத்த நொடி அவள் செய்யும் செய்கையில் சிறு புன்னகை அவனுக்கு எழுவது உண்டு, அவளின் திட்டத்தை அறிந்திடாதவனுக்கு இன்றும் அதே போல் மென்னகை தோன்றிட, அமைதியாக வெளியேறிச் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ராம் மற்றும் ஆரவ் இருவரும் அபியின் அறைக்குச் சென்று சற்று நேரம் ஓய்வெடுக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னருகே படுத்திருந்த டெடியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ராமைத் தேடி அங்கே வந்து நின்றாள் வெண்பா.

தூங்கிக் கொண்டிருக்கும் ராமின் முதுகில் ஏறிப்படுத்துக் கொண்டு, அருகே இருந்த அபியை எழுப்பி உருட்டிவிட்டு அங்கே தன் டெடியை படுக்கவைத்துக் கொண்டாள்.
அதனை உணராத அபியோ தூக்கக் கலக்கத்தில் மீண்டும் உருண்டு டெடியின் மேல் படுக்க, கத்தோ கத்தென்று கத்தி அழுதுவிட்டாள் வெண்பா. அவளின் அலறலில் மூவரும் அறண்டடித்துக் கொண்டு எழுந்தனர். ராமோ வெண்பா எதற்கு கத்துகிறாள் என்று தெரியாமல் அவளைத் தூக்கி சமாதானம் செய்தான்.

எதற்கும் சமாதானம் ஆனாலில்லை. அதற்குள் அனைவரும் அங்கே வந்துவிட, விமலா வெண்பாவைத் தூக்கிச் சென்று என்வென்று கேட்க,

"தித்தப்பா ஏதித்தான்..." என்று அழுதுகொண்டே மழலையில் கூறினாள்.

"எந்த சித்தப்பா ஏறினாங்க? எங்க ஏறினாங்க? குட்டிம்மா கனவு கண்டிங்களா?"

"இல்ல... அபி தித்தப்பா... டெடி மேல ஏதித்தான்..."

மழலையின் மொழியைப் புரிந்து கொண்ட அபியோ "என் ரூம்ல, என் பெட்ல உன்னை யாருடி டெடிய படுக்க வெக்க சொன்னது?" என்று அபியும் குழந்தையுடன் மல்லுகட்டிட,

அவன் பேச்சில் கோபம் கொண்ட கமல் "பொம்மி ம்மா அது யக்கி பெட் டா... அபி சுச்சா போன பெட்... நீ இனிமே அங்கே போகாதே... கமல் அங்கிள் உன் டெடிக்கு பேபி பெட் செட் பண்ணித் தரேன் அதுல படுக்க வெச்சிக்கோ..." என்று குழந்தையை சமாதானம் செய்கிறேன் என்ற பேரில் அபியின் காலை வாரினான்.

ராம் கமலை ஒரு மார்க்கமாகப் பார்த்து 'உன் பகைய தீர்த்துக்கிற நேரமாடா இது?' என்று மானசீகமாக மனதிற்குள் கருவிக் கொண்டிருக்கும் போதே மிதுன்யா அந்த டெடியைப் பார்த்து, ராமிடம் சண்டையட்டாள்.

"அன்னைக்கு வந்தப்போ தான் எனக்கு டாய் வாங்கிட்டு வரலே, இன்னைக்கும் பொம்மிக்கு மட்டும் தான் வாங்கிட்டு வந்திருக்கிங்க மச்சான். திஸ் இஸ் நாட் ஃபேர். இந்த டெடி எனக்கு தான்." என்றிட

வெண்பா மீண்டும் கத்தத் தொடங்கினாள். அதனைக் கண்டு ஆளுக்கு ஒருபுறம் குழந்தையை சமாதானம் செய்ய முயற்சித்தனர். ராம் தான் கொண்டு வந்திருந்த சூட்கேஸில் இருந்து ஒரு கிஃவ்ட்டை எடுத்து வெண்பாவின் முன் நீட்ட அழுகை பறந்தோடிச் சென்றது. மாறாக மிதுன்யா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ராமை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் ஒரு கிஃவ்ட் பாக்ஸை நீட்டினான் ராம். தன் கண் முன்னாலேயே தன் அரவணைப்பில் வளர்ந்த மிதுனம் பற்றி அறியாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம்.

மகிழ்ச்சியாக வெண்பாவும், மிதுன்யாவும் ஹை-பை அடித்துக் கொண்டு தங்கள் பரிசை பிரித்துப் பார்க்க, வெண்பாவிற்கு அன்று வாங்கி வந்த பார்மியின் மேக்-அப் செட்டும், மிதுன்யாவிற்கு அவளுக்கான ஒரிஜினல் மேக்-அப் செட்டும் இருந்தது. இருவரும் குதூகளித்துக் கொண்டிருந்தனர்.

பவன் தன் மனைவியின் சிறுபிள்ளைத் தனத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் என்றால், பூங்கொடி தன் மகனிடம் தெரிந்த மாற்றத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அதன்பின் ஒவ்வொருவராக வெண்பாவிற்கு வாழ்த்து கூறி தங்கள் பரிசையும் கொடுத்திட, வெண்பாவும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் முத்தங்களை வாரிவழங்கினாள். ராம் ஒருபடி மேலே சென்று, அவள் உண்ண அமரும் போது அவள் அருகே ஒரு கிஃவ்ட் பாக்ஸை வைத்தான். அடுத்து குளித்து முடித்து உடைமாற்றி வந்தபோது அடுத்த பரிசு, ஹான்ட் பெய்ன்டிங் செய்கிறேன் என்று உடையில் வண்ணங்களைக் கொட்டிக் கொண்டால் ஒரு பரிசு, கார்டனில் விளையாடுகிறேன் என்று கையெல்லாம் மண்ணாக்கிக் கொண்டால் ஒரு பரிசு என அன்று முழுதும் அவளின் ஒவ்வொரு செயலுக்கும் பரிசுகளைக் குவித்தான்.

நேத்ராவிற்கு தான் கண்ணைக் கட்டியது. தன் முதல் திட்டத்திற்கே இப்படி ஒரு பதிலடி என்றால், அடுத்த திட்டத்திற்கு என்ன கிடைக்குமோ! என்று மலைத்துப் போனாள். மாலைநேரம் நெருங்க அனைவரும் பார்ட்டிக்கு தயாராகத் தொடங்கினர்.

பவன், நேத்ரா எப்போது வெளுத்த நிறம் அல்லது அடர் நிறங்களில் மட்டுமே உடை அணிவாள் என்று அறிந்து நேத்ரா மற்றும் வெண்பாவிற்கு அடர் நீலநிறத்தில் ஆடை எடுத்திருந்தான். வெண்பா ராம் எடுத்து வந்த உடையைத் தான் போடுவேன் என்றே அடம்பிடிக்க,

"இப்போ மட்டும் அதனை போட்டுக்கொ. பிறகு கேக் கட் செய்யும் போது பவன் அங்கிள் வாங்கி கொடுத்த ஆடை போட்டுக்கோ" என்று அனுமதி அளித்தாள் நேத்ரா.

அடர் மஞ்சள் நிற முழுநீள உடையில் டிஸ்னி ப்ரின்ஸஸ் பெல்லியைப் போல் வளம் வந்த வெண்பாவைக் கொஞ்சிடாத ஆளே இல்லை.

நேத்ரா தன் அறையில் இருந்த வெண்பாவின் மஞ்சள் நிற உடைக்குப் பொருத்தமாக ராம் வைத்துச் சென்றிருந்த மஞ்சள் நிற சேலையை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது மல்லிகைப் பூவுடன் உள்ளே நுழைந்த பூங்கொடி, நேத்ராவை சிறிது நேரம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்துவிட்டு, அருகில் வந்து

"உனக்கும் வெண்பாவுக்கும்..." என்று கூறி பூவை ட்ரெஸ்ஸிங் டேபிளில் பூவை வைத்துச் சென்றார்.

பூவோடு ராம் கொடுத்த சேலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு பவன் எடுத்து வந்திருந்த சேலையை உடுத்திக் கொண்டு தயாராகி வந்தாள் நேத்ரா. எப்போதும் போல் கொண்டையிட்டுக் கொண்டு வந்தவளைக் கண்ட பூங்கொடி,

"பூ வைக்கலேயா? என்று வினவிட

"பொம்மிக்கு எடுத்துக்கிட்டேன். நான் பூ வைக்கிறது இல்லே அத்..." என்று ஆரம்பித்து சொல்ல வந்த வார்த்தையை தொண்டைக்குழியில் விழுங்கிக் கொண்டாள்.

"நல்ல நாளும் அதுவுமா இது என்ன வீம்பு! பெரியவங்க கொடுத்தா காரணம் இல்லாமலா இருக்கும்... இப்போ இருக்கிற சின்னஞ்சிறுசுங்க சொல்றதை கேட்டா தானே..." என்று அவளை கடிந்து கொண்டே மிதுன்யாவிடம், "ஒரு சீப்பு எடுத்துக் கொடு மிதுன்" என்றிட, அவளும் எடுத்துக் கொடுத்தாள்.

நேத்ராவின் கொண்டையை அவிழ்த்துவிட்டு முறுக்கி இருந்த பின்னலை கலைத்து மீண்டும் பின்னலிட்டு, அவள் தலையில் பூ வைத்துவிட பெண்ணவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். 'காலையில் அத்தை என்று அழைக்காதே என்றதென்ன!, இப்போது உரிமையாய் கடிந்துகொள்வதென்ன!' என்று யோசித்து அமைதியாக நின்றிருந்தாள்.

இதனை படியில் அபி மற்றும் ஆரவ்வுடன் இணைந்து இறங்கி வந்தபடியே புன்னகையோடு ரசித்துக் கொண்டே வந்தான் ராம். உடன்வந்த தம்பிகள் கிண்டல் செய்து கொண்டிருந்த எதுவும் அவன் காதில் விழுந்தது போலத் தெரியவில்லை. அதுமட்டுமா... அங்கே நேத்ராவின் அருகில் நின்றிருந்த அவன் அன்னை கூட அவனுக்கு அவுட் ஆஃப் போகஸ்ஸில் தான் தெரிந்தார்.

பூங்கொடி பூவை வைத்துவிட்டு நகர்ந்து சென்றுவிட சுற்றி இருப்போர்கள் தங்கள் வேலையில் மூழ்கியிருப்பதைக் கவனித்துவிட்டு மெதுவாக தொண்டையைக் கணைத்தான் ராம். அப்போது தான் அவன் அங்கே வந்து நிற்பதைப் பார்த்தாள் நேத்ரா.

நிச்சயம் அவன் கொடுத்த சேலையை அணியமாட்டாள் என்று அறிந்திருந்தான் தான். ஆனால் தன் அன்னையின் கையால் பூ வைத்துக் கொள்வாள் என்று அவன் நினைத்து கூட பார்த்திடவில்லை. ராமின் கண்களை நேருக்குநேர் சந்தித்திட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள் பெண்ணவள். கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த துணிவை ஒன்று திரட்டி அவனைக் காண, சட்டென ஒற்றைக் கண் சிமிட்டி புருவம் உயர்த்தினான் காதலனவன்.

அவனின் செயலில் கால்கள் ஏனோ தரையில் நிற்க மறுக்க, வைரமுத்துவின் வரிகள் போல் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருளையும் உருண்டது என்றால் மிகையாகாது. செயலிழந்த மூளையைத் தட்டி எழுப்பி அவசரமாக அவன் கண்ணில் இருந்து மறைந்தாள் நங்கையவள்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். காங்காதரனும், விமலாவும் அனைவரையும் வரவேற்க அங்கே சென்று நின்றாள் நேத்ரா. தலைநிறைய பூவுடன் வந்து நிற்பவளைக் கண்ட விமாலா இருக்கும் இடம் மறந்து, நேத்ராவை கட்டிக்கொண்டு விசும்பிட,

"அத்தை ப்ளீஸ். எல்லாரும் பார்க்குறாங்க... அழாதிங்க..."

"யாரு பார்த்த எனக்கென்ன? என் பொண்ணு எத்தனை வருடம் கழிச்சு எனக்கு திரும்ப கிடைச்சிருக்கா தெரியுமா!!!" என்று பூரித்து அவளை உச்சிமுகர்ந்தார்.

அவரின் சந்தோஷத்தைக் கண்டு ஒருநொடி அனைவரையும் எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்று தோன்றினாலும், அடுத்த நிமிடம் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு

"இதுவும் ஒரு வேஷம் தான் அத்தை. என் காரியம் நல்லபடியா நடந்துட்டா இந்த வேஷத்தைக் கலைச்சிடுவேன்..."

"அபசகுணமா பேசாதேடி பிடிவாதக்காரி... இனி அப்பப்போ நல்லநாளில் பூ வெச்சிக்கோ..." என்று மட்டும் கூறி அனுப்பி வைத்தார்.

வெண்பாவைத் தேடிச் சென்று அவளுக்கும் உடை மாற்றிவிட்டு சிறிதே சிறிதாக அவள் தலைக்குப் போதுமான அளவிற்கு பூவை வைத்துவிட்டு பார்ட்டி நடக்கவிருக்கும் கார்டன் ஏரியாவிற்கு அழைத்து வந்தாள். அலங்கார விளக்குகளின் உதவியால் இரவும் பகலாகத் திகழ்ந்தது அந்த கார்டன்.

சரியாக கேக் கட் செய்யும் நேரத்தில் மட்டும் ராம் அங்கிருந்து சென்றிருந்தான். நேத்ராவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஊகித்திருந்தவன், அவளின் திட்டத்தில் குழப்பம் நிகழாகமல் இருக்கவேண்டியே தன்னை ஒழித்துக் கொண்டான். வெண்பாவும் அருகில் நின்றிருந்த, தன் அன்னை, தாத்தா, மைமி என்று அழைத்து அழைத்து கேக்கை ஊட்டிவிட்டாள். மற்றவர்களும் சிறுமிக்கு ஊட்டிவிட, சிறிது நேர மகிழ்ச்சியில் ராமை மறந்திருந்தாள்.

வெகுநேரம் கழித்து அங்கே வந்தவன், தன் தாத்தா கையசைக்கவும் அங்கே அவரின் அருகே சென்று அமர்ந்தான்.

"ராம் கண்ணா... அதோ அங்கே நிக்கிறா பார், அந்த பொண்ணு எப்படி இருக்கிறாள் என்று பார்... "

"யார் தாத்தா அது?"

"அந்த பெண்ணின் பெயர் அம்ரிதா. அவங்க அப்பா நகை வியாபாரி. குணமான பொண்ணு.." என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே ராமின் முகம் சிறுத்து சுருங்கியது.

'கிராதகி... தெரியும் டி... நீ இப்படித் தான் ஏதாவது செய்வேனு...' என்று மனதிற்குள் நேத்ராவை திட்டிக்கொண்டே,

"என்ன தாத்தா? நேத்ரா மேடம் சில்க் சேரி பிஸ்னஸை விட்டுட்டு எனக்கு பொண்ணு தேடுற வேலைல இறங்கிட்டாங்களா?" என்று நக்கலாக வினவிட,

"அந்த பொண்ணை எதுக்கு டா இதுக்குள்ள இழுக்குறே. பொண்ணு பார்க்க லட்சணமா, அழகா, உனக்கு பொறுத்தமா இருக்கேனு நான் தான் கங்காதரன் கிட்டே கேட்டேன். அப்படியே அவங்களே உனக்கு அந்த பொண்ணை பார்த்து வெச்சிருந்தாலும் இப்போ என்ன? உனக்கு பொருத்தமான பொண்ணை தானே பாத்திருக்காங்க" என்று எடுத்தக் கூறிட ராம் மேலும் கொஞ்சம் காண்டாகினான்.

"அதானே... பொருத்தமான தானே இருக்காங்க... அப்படியே இல்லாட்டாலும் தான் என்ன? இப்போ ஒன்னு இல்லேயே... அந்த பொண்ணு எனக்கு ஓகே தான். இதை நானே அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்." என்று கோபமாக கூறிவிட்டு நேத்ராவைத் தேடிச் சென்றான்.

ஊடல் கூடும்.​
 
Top