• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ரா விருந்தினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ராம் அவளை நோக்கி சென்று கொண்டிருந்த நேரம், விமலாவுடன் நின்றிருந்த வெண்பா அவனை நோக்கி ஓடி வந்தாள்.

வெண்பா ராமின் காலைக் கட்டிக்கொள்ள அவளை தூக்கி கொஞ்சியவன் மனம் முழுதும் வலிகள் நிறைந்திருந்ததை அந்த பிஞ்சு நெஞ்சம் அறியவில்லை.

"ராம் ப்பா இவ்ளோ நேரம் எங்கே போயிருந்திங்க?" என்று தன் அன்னையின் கண்டிப்பை மறந்து அவனை அப்பா என்று அழைத்திருந்தது.

வெண்பாவின் அழைப்பில் உள்ளம் கலங்கிட 'அந்த ராட்சசியின் பிடிவாதத்தில் இந்த சிறுமியை ஏமாற்றியது போல் ஆகிவிட்டதே! கடவுளே இன்னும் எத்தனை வலிகள் தரப்போகிறாய் எனக்கு?' என்ற அவனின் மனக்குமுறல் அந்த கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ! அவருக்கு தான் வெளிச்சம்.

"மை ஸ்வீட் ஏஞ்சல் இந்த ட்ரெஸ்ல சூப்பரா இருக்கிங்களே?" என்று பேச்சை மாற்றினான்.

"ஆமா..."

"கேக் சாப்பிட்டேயா?"

"ம்ம்ம்... நெறியா சாப்தேன்..."

"எனக்கு கிடையாதா?"

"தருவேன்... இங்கேயே இருங்க நான் எருத்துட்டு வதேன்." என்று கூறி அவனைவிட்டு இறங்கி ஓடினாள்.

அதற்குள் நேத்ரா அங்கே இல்லாமல் இருக்க அவள் எங்கே என்று தேடினான். சற்று தள்ளி நின்று அம்ரிதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். இது இன்னுமே நல்ல சந்தர்ப்பம், என்று நினைத்து 'இருடி வரேன். எனக்கா பொண்ணு பார்க்கிறே... உன்னை கதற வைக்கிறேனா இல்லையா பார்!' என்று மனதிற்குள் கருவிக் கொண்டு அவர்கள் அருகே சென்றான்.

"ஹாய் அம்ரிதா. ஐ ம் ராம். ராம்கிரன். ஹௌ டூ யூ டு?" என்று நேத்ராவைக் கண்டு கொள்ளாதது போல் அம்ரிதாவிடம் பேசினான்.

அடுத்த நிமிடமே நேத்ரா, "அமி நீ பேசிட்டு இரு. நான் இதோ வரேன்" என்று கூறி சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ராமிற்கு தான் மீண்டும் ஏமாற்றமாகியது. இவளை எப்படி தான் என் வழிக்குக் கொண்டு வரதுனே தெரியலேயே... ஓ காட்... என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லேயா... என்று மீண்டும் தன் மனதிற்குள் புலம்பினான்.

"நீங்க தான் Mr. ராம்கிரன்-ஆ?"

"எஸ். இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்று மென்னகையுடன் கேட்டான்.

"நத்திங்..." என்று கூறி ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருந்தாள்.

நேத்ராவைக் கடுப்பேற்ற நினைத்து தானாக வந்து மாட்டிக்கொண்டதால் ராம் தேடிப்பிடித்து சில பல கேள்விகளை அம்ரிதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான். இதற்கிடையே அங்கே வந்த வெண்பா ராமிற்கு கேக் ஊட்டிவிட, அதனைப் பெற்றுக் கொண்டு வெண்பாவையும் தூக்கிக் கொண்டான். சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் சகஜமாகப் பேசிக் கொள்ள, அலைபேசி எண்ணையும் பரிமாறிக் கொண்டனர்.

கூட்டத்திற்கு மத்தியில் ஓரளவு இவர்களின் கல்யாணப் பேச்சும் அரசல் புரசலாகப் பேசப்பட்டது. இரவு உணவு தொடங்கிட, பஃபே சிஸ்டம் என்பதால் ஒவ்வொரு வராகச் சென்று கவனித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. பூங்கொடி வீட்டிற்குள் தனியாகச் செல்வதை கவனித்தவள், அவரைப் பின்தொடர்ந்து

"சாப்பிட்டிங்களா?" என்றிட, நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவர்

"ம்ம்ம்..." என்று தலையசைத்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல,

"நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்கிறேன். வெண்பா சின்ன குழந்தை உறவுமுறை சரியா சொல்லிக் கொடுக்காமவிட்டது என் தவறு தான். அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்... சொல்லப்போன நான் உங்களுக்கு எந்த விதத்திலும் சொந்தம் இல்லாத போது என் பொண்ணுக்கு என்ன உறவுமுறை சொல்லிக் கொடுக்குறதுனு எனக்குத் தெரியல... அதுக்காக அவ சொன்ன உறவுமுறை சரினு சொல்லவரலே... இனி அப்படி அழைக்கமாட்டாள். அதுக்கு நான் பொறுப்பு." என்று கூறி பூங்கொடியைப் பார்த்து,

"சொந்தமா நினைக்காம சும்மா பக்கத்து வீட்டுக்காரவங்களா, அல்லது பழக்கமானவங்களா நெனச்சுனாலும் உங்களை அத்தைனு கூட இல்லாம ஆன்டினு சொல்லட்டுமா?" என்று அவரின் அனுமதி வேண்டினாள்.

பூங்கொடி அவளை ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு, இப்போதும் இடவலமாக தலையசைத்துவிட்டு வீட்டிற்குள் செல்ல, பெண்ணவளுக்கு மீண்டும் ஒருமாதிரியாகிப் போனது.

மீண்டும் அவரின் முன்னாள் வந்து நின்று " நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா நடக்காது. ப்ளீஸ் என்னை நம்புங்க" என்று கெஞ்சும் குரலில் கூறினாள்.

"நான் தப்பா நினைக்கிறேனா சரியா நினைக்கிறேனானு உனக்கு எப்படித் தெரியும்? என் பையனுக்கு கல்யாணம் ஆனதும் நீ என்னை எப்படி வேணுனாலும் கூப்பிட்டுக்கோ... அதுவரை என்கிட்ட இது பத்தி பேச வேண்டாம்." என்று கூறிவிட்டு நேத்ராவைக் கடந்து சென்றுவிட்டார்.

வந்தவர்கள் அனைவரும் சென்றிருக்க கடைசியாக அம்ரிதாவின் குடும்பம் மட்டும் இருந்தது. அம்ரிதாவின் தாய் தந்தையர் புவனேஸ்வரி மற்றும் விஜயன் புறப்படும் போது கங்காதரனிடம்,

"அமி அந்த தம்பிகிட்ட பேசினாளாம். அவளுக்கு பிடிச்சிருக்குனு சொன்னா... அவங்க வீட்டு சைடும் கேட்டு சொல்லுங்க கங்கா, அவங்களுக்கும் சம்மதம் என்றால் நல்லநாள் பார்த்திடலாம்." என்றிட,

"நான் அவங்ககிட்ட பேசிட்டு நாளைக்கு உனக்கு ஃபோன் பன்னுறேன் விஜயா... அந்த பையனும் சம்மதம் சொல்லிட்டா நம்ம அமி உண்மையாவே லக்கி கேர்ள் தான்..." என்று தன் வளர்ப்பு மகளுக்கு அந்த பாக்கியம் கிடைக்காவிட்டாலும் இந்த அம்ரிதாவிற்காவது கிடைக்கட்டும் என்று முழுமனதோடு கூறினார்.

"நல்லது கங்கா நாங்க புறப்படுறோம்" என்று கங்காதரனிடம் கூறிவிட்டு, லட்சுமணன், மலையரசி இருவரிடமும் விடைபெற்றுச் சென்றனர்.

கங்காதரன் அவர்கள் கூறியது பற்றி லட்சுமணனிடம் கூறிட, அவரோ ராம் சம்மதித்துவிட்டான், குடும்பத்தில் மன்றவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவு கூறிவதாகவும் கூறினார்.

அடுத்த நிமிடம் நேத்ராவின் செவிகளுக்கும் சேதி வந்திட, ஒருநிமிடம் உறைந்து போனாள். 'அவன் எப்படி சம்மதித்தான். பெரிய போராட்டம் நிகழும் என்று நினைத்திருந்தேனே! எப்படியோ அவன் சம்மதித்தால் சரி தான்' என்ற தோன்றினாலும் மீண்டும் மீண்டும் இதே குழப்பம் எழுந்து கொண்டே இருந்தது அவளுக்கு.

இரவு அவரவர் அறையில் அடைக்கலம் புகுந்திட வெண்பா அன்று போல் இன்றும் ராமிடமே உறங்கிவிட, நேத்ரா வரும்வரை காத்திராமல் அவனே தூக்கி வந்து படுக்க வைத்துவிட்டு நேத்ராவின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காமல்,

"கடைசியா கேட்குறேன்? உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லேயா?" என்று முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு வினவினான்.

"இது என்ன கேள்வி!!! நான் என்னைக்காவது உங்களை பிடிச்சிருக்குனு சொல்லிருக்கேனா? அமி பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்குறதா சொல்லவும் எனக்கு உங்க நியாபகம் தான் வந்தது. அதனால தான் மாமாகிட்ட சொன்னேன்... அதுவும் இல்லாம அமி உங்களுக்கு எல்லாவிதத்திலும்... " என்று அவன் கேட்காமலே விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அறையில் இருந்து வெளியேறியிருந்தான் ராம்.

'வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவா. அதை கேட்டுட்டு நிக்கனுமா!!!' என்று கோபம் ஒருபுறம் என்றால், அடுத்து அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டதால் அங்கே நிற்க பிடிக்காமல் வெளியேறி இருந்தான்.

ராம் வெளியேறியதும் அவ்வளவு நேரம் தக்க வைத்திருந்த தைரியத்தை இழந்து இடிந்து போனாள். அதற்கு மேல் உறக்கம் வராமல் தவித்தவள், 'இனி தினமும் இது தான் உன் நிலை' என்று தனக்குத் தானேக் கூறிக்கொண்டு உறங்க முயற்சித்தாள்.

காலை எழுந்து வந்த ராமின் முகத்திலும் தூக்கமின்மை அப்பட்டமாகத் தெரிந்தது. என்னவெனக் கேட்ட தாத்தாவிடம் ஏதேதோ காரணம் கூறி சமாளித்தான். கூடுதல் சேதியாக,

"தாத்தா, நேத்து அம்ரிதா பத்தி சொன்னிங்களே!!! எல்லாருக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருந்தா, வந்த வேலையோடு சேர்த்து கல்யாணத் தேதி பேசிடலாமே!" என்றிட மீனாட்சியும், குந்தவியும் அவனை கிண்டல் செய்யத் தொடங்கினர்.

"ராம்... நீயா இது!!! உன்னை இத்தனை வருடமா கெஞ்சினோமே அப்பேலாம் வாய் திறக்கலே... இப்போ நீயா வந்து கல்யாணம் செய்து வைங்கனு சொல்றே!!!" என்று ஆச்சரியமாக வினவினார் மீனா.

"அது... அப்படி இல்லே சித்தி" என்று ஏதோ கூற வர,

அதற்குள் குந்தவியோ "ஓஓஓ என் பொண்ணுகிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு தான் இத்தனை நாள் காத்திருந்தேயா? பவன் தான் இது தெரியாம வந்து மாட்டிக்கிட்டாறா?" என்றிட,

'நேரம் காலம் தெரியாம இவங்க வேற கிண்டல் பண்றாங்களே!, அந்த குட்டிச் சாத்தான் கேட்டுச்சுனா அதுவேற சண்டை போடுமே!' என்று மிதுன்யாவைத் தேடினான். மிதுன்யாவும் பவனும் தங்களின் தனி உலகில் மூழ்கி கண்களால் காதல் செய்து கொண்டிருந்தனர். அதனைக் கண்டவுடன், 'அவனவன் காதலிச்ச பொண்ண கல்யாணம் செய்துக்க முடியாம திண்டாடிட்டு இருக்கான். இவெ என்னடானா கடத்திட்டு போய் கல்யாணம் செய்துக்கிட்டு இப்போ ஜாலியா பக்கத்துலேயே வெச்சிக்கிட்டு லவ் பண்ணிகிட்டு என் வயித்தெறிச்சல வேற வாங்கிக்கிறான்' என்று மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தான்.

இங்கே இவர்களின் கிண்டல் பேச்சு நீண்டு கொண்டிருக்க, இவை அனைத்தையும் சமையலறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நேத்ராவிற்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை. 'எப்படி திருமணத்திற்கு சம்மதித்தான்! ஆனால் அது தானே எனக்கு வேண்டும்... பிறகு ஏன் இந்த கண்ணீர்... அழாதே சிவா...!' என்று ஆயிரம் முறை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும் கண்ணீர் நின்றபாடிலில்லை.

விஜயன் குடும்பத்துடன் ஃபோனில் பேசிட, இன்றிலிருந்து பதினேட்டாம் நாளில் வரக்கூடிய முகூர்த்தத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு அதன்பின் நிதானமாக திருமண ஏற்பாடு செய்யலாம் என்று கூறிட, மீண்டும் ராம் குறுக்கிட்டான்.

"நிச்சயதார்த்தம் எல்லாம் வேண்டாம் தாத்தா. டைரெக்ட்டா மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிடுங்க. நீங்களும் பாட்டியும் அலைய வேண்டாம். முடிஞ்சா அந்த முகூர்த்தத்தில் கல்யாணம் பிக்ஸ் பண்ணிடுங்க..."

"ராம்... ஏன் இந்த அவசரம்? எதுவும் குழப்பத்துல இருக்கியா?" என்று பூங்கொடி கேட்டிட,

"இல்ல ம்மா, இப்போ தான் கிளியரா இருக்கேன். எதுக்கு தேவையில்லாத அலைச்சல், இந்த பதினேட்டு நாளில் எந்த அளவுக்கு அரேஞ் பண்ணமுடியுமோ அதுவே போதும். தேவையில்லாம கூட்டம் சேர்க்க வேண்டாம். அதுவும் இல்லாம என் கல்யாணத்தை காஞ்சிபுரத்தில் தானே வைக்கனும்னு நெனச்சிருந்திங்க... அதனால இப்போ திருமணம் நடக்கட்டும். வாரணாசில ரிஸப்ஷன் வெச்சிக்கலாம்." என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் தன் பதிலைக் கூறினான்..

இப்போது தான் பூங்கொடிக்கு சந்தேகம் அதிகமாகியது, சந்தோஷமான மனநிலையில் தன்னை 'கொடி' என்று அழைப்பவன், மற்றவர்களின் முன் மரியாதை தரவேண்டும் என்று நினைத்தால் 'மாம்' என்று கூறுபவன், அதிகபட்ச மரியாதையாக 'அம்மா' என்கிறான் என்றால் நிச்சயம் குழப்பத்திலோ அல்லது கோபத்திலோ எடுத்த முடிவு என்று ஊர்ஜிதம் செய்து கொண்டார்.

அபியோ என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. கோபமா? வருத்தமா? இல்லை அண்ணனின் வலிகளை புரிந்து கொண்டானா? என்று அவனுக்கே ஒன்றும் புரியவில்லை. மெதுவாக ராமின் அருகே சென்று அமர்ந்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

"ராம் பையா... நீங்க லவ் பண்ற விஷயம் யாருக்கும் தெரியாததால் தான் இந்த ஏற்பாடு பண்றாங்க. நீங்க நேத்ரா அண்ணிய விரும்புறதை இப்போ தாத்தாகிட்ட சொன்னாகூட உங்களுக்கும் நேத்ரா அண்ணிக்கும் திருமணம் செய்து வைப்பார். ப்ளீஸ் பையா இப்போவாச்சும் எல்லாருகிட்டேயும் சொல்லுங்க..." என்றிட

"தரு வீட்ல எல்லாருக்கும் தெரியும் சோட்டூ... இந்த பொண்ணை முடிவு செய்ததே உன் ஐயர்ன் லேடி தான். இதுக்கு மேல காதலை கெஞ்சியோ கட்டாயப்படுத்தியோ யாருக்கும் தினிக்கவும் முடியாது, யாருக்கிட்ட இருந்தும் வாங்கவும் முடியாது... இந்த பதினேட்டு நாளில் அவள் என்னை எந்த அளவு நேசிச்சிருக்கானு அவளே புரிஞ்சுப்பா... என் இழப்பில் தான் என் காதலோட அருமையும் அவளுக்குப் புரியும்" என்று கோபமாகத் தான் உரைத்தான்.

அபி மட்டுமல்லா யார் மறுப்பு கூறினாலும் பதிலை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு உடனுக்குடன் பதில் கொடுத்தான்.

ராமின் வாதத்தில் அவன் உறுதியாக இருக்க, இறுதியில் அவன் விருப்பப்படியே பதினெட்டு நாளில் லட்சுமணனின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் திருமணம் என பேசிமுடித்தனர்

சபை நாகரிகம் கருதியேனும் வாழ்த்து கூற வேண்டும் என்று நினைத்தாலும் வாய் திறந்தால் அவன் முன்னால் அழுதிடக்கூடும் என்று அமைதியாகவே வளம் வந்தாள்.அன்று மாலை பாரியும் பூங்கொடியும் தங்கள் வீட்டு இளவரசர்களுடன் வாரணாசி பயணித்தனர். புறப்படும் வரை நேத்ராவை சந்திக்க விரும்பவில்லை ராம்.

அதில் நேத்ராவின் மனம் சுருக்கென்று குத்தினாலும் அதனை துடைத்து எறிந்து இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ள நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்தது. பகல் பொழுதில் அழுது கலைத்திடும் கண்களை சேலைத்தலைப்பு அணைத்து ஆறுதல் செய்தது என்றால், இரவுப் பொழுதில் தலையணை அப்பணியை செய்தது.

லட்சுமணன் தம்பிதியினர், புகழ் தம்பியினர், சுஷேண் தம்பதியினர் அனைவரும் இங்கேயே தங்கிவிட, கல்யாண வேலைகளும் தொடங்கியது.

அங்கே பூங்கொடி தன் மகனுக்கு மறைமுகமாக பல அறிவுரைகளை வழங்கினார்.

"உன்னை நம்பி வர பொண்ணுக்கு நீ நூறு சதம் உண்மையா இருக்கனும். கல்யாணத்துக்குப் பின்னால் எந்த காரியம் செய்தாலும் உன் மனைவிய மனசுல வெச்சுகிட்டு செய்... எந்த இடத்திலேயும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே... அமி பொண்ணு முழுக்க முழுக்க உன்னை மட்டுமே நம்பி தான் இந்த வீட்டுக்குள்ள வரப்போறா... உன்கிட்ட இருந்து சின்னதா ஒரு ஏமாற்றத்தைக் கூட நிச்சயமா அவளால் ஏத்துக்க முடியாது..." என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகக் கூறினார்.

வீட்டில் இப்படி என்றால், அலுவலக வேலையில் கவனம் இல்லாமல் தவறு செய்வதும், அதனை அபி சுட்டிக் காட்டவதும், சுட்டிக்காட்டிய தவறைக் கூட சரி செய்ய முடியாமல் ஆரவ்விடம் வேலையை ஒப்படைப்பதும் , ராத்தூக்கம் இல்லாததால் அலுவலக நேரத்தில் தூங்குவதும் என நிம்மதி இன்றி ஏனோ தானோ என்று திரிந்தான்.

கல்யாண வேலையில் நாட்கள் பறந்தோடியது, நாளை மறுநாள் கல்யாணம். அனைவரும் காஞ்சிபுரம் வந்தாகிவிட்டது. இன்னும் ராம் நேத்ரா இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவில்லை. வெண்பாவின் 'ராம் ப்பா' என்ற அழைப்பு எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத ஒன்றாகிப் போனது. நேரில் கேட்போருக்கு பதில் சொல்லிவிடலாம், ஆனால் பின்னால் சென்று பேசுவோருக்கு என்ன பதில் சொல்வது!!!

அதனால் முடிந்தளவு வெண்பாவை கமல் மற்றும் சுனைனாவின் பொறுப்பில் விட்டாள் நேத்ரா. ராமை வெண்பா சந்திக்காமல் இருந்தால் இந்த மாதிரியான பேச்சுகளில் இருந்து சிறிது தப்பிக்க வழி இருக்கிறதே என்ற எண்ணத்தில் தான். ஆனால் அவளின் ஒவ்வொரு செயலிலும் ராம் தான் மேலும் மேலும் நொந்து போனான்.

'என்னை நிரந்தமாகப் பிரிவது அவளுக்கு சிறிதளவு கூட வருத்தம் இல்லேயா!!! கல் நெஞ்சக்காரி... ஆடவன் என்னால் அப்படி இருக்க முடியவில்லையே!!! உன்னிடம் மண்டியிடக் கூட மனம் தயாராக இருக்கிறதே!!! எப்படி டி உன்னால் என்னை யாரோ போல் நினைக்க முடிகிறது!!! உன் நினைவுகள் என் உடலில், தசையில், ரத்தத்தில் கலந்த பிரிக்க முடியாத உணர்வுகளாகிக் கிடக்கின்றதே!!! என்னால் உன்னை யாரோ போல் பார்க்க முடியவில்லையே!!! நீ இல்லாத வாழ்வை எப்படி ஏற்கப் போகிறேன்!!! இப்படி தினம் தினம் சாவதற்கு பதிலாகத் தான் தற்கொலை செய்து கொள்கிறார்களோ!!!' என்று தடம் மாறி சிந்திக்கத் தொடங்கிய மூளைக்கு கடிவாளம் கட்டி இழுத்து வந்தான்.

திருமண நாள் காலைப் பொழுதும் விடிந்துவிட்டது. மண்டபம் கலைகட்டிக் கொண்டிருக்கிறது. மணப்பெண் அம்ரிதா கல்யாணக் கனவுகளைச் சுமந்து உறவுகளின் முன்னிலையில் நாணிக் கோணி மணமாலையோடு வந்து நின்றாள். மாப்பிள்ளை அழைத்து வரப்பட, 'இனி எதையும் மாற்றமுடியாது, நடப்பது நடக்கட்டும்' என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு மேடையில் வந்து நின்றான் மணமகன் ராம்கிரன்.

நேத்ரா பொது இடங்களிலும், விஷேஷ வீடுகளிலும் எப்போதும் முன்னால் வந்து நிற்கமாட்டாள். காரணம் 'தான் தன் வாழ்க்கை இழந்துவிட்டோம். மற்றவர் அதனை குறிப்பிட்டுக் கூற இடமளிக்கக் கூடாது' என்று தனக்குத் தானே ஒரு வட்டமிட்டுக் கொண்டவள், இன்றோ தன் மனம் கவர்ந்தவனின் மணக்கோலம் காண முடியாமல் ஒதுங்கி நின்றிருந்தாள்.

நேற்று வரை நேத்ராவை நிமிர்ந்து கூட பார்க்காதவன் இன்று காலையில் இருந்து அவன் கண்கள் அவளைத் தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவள் எங்கே சென்றாலும் அவனது பார்வையும் அவளைப் பின் தொடர்ந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க ஏதோ ஒரு உணர்வு அவன் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது.

மங்களத்திருநாண் பெரியோர்களின் ஆசியோடு ராமின் கையில் கொடுக்கப்பட, கைகள் நடுங்கிட வாங்கிக் கொண்டு ஒருமுறை திருமாங்கலயத்தைப் பார்த்தான். அடுத்த நொடி அவன் பார்வை அவனையும் அறியாமல் நேத்ராவைப் பார்த்திட, அதே நேரம் கெட்டிமேளம் முழங்க, பெண்ணவளின் கண்களில் கன்னம் தாண்டி வடிந்துக் கொண்டிருந்த கண்ணீர் அவன் மேலிருக்கும் காதலை பறைசாற்றியது. ராமின் பின்னால் நின்றிருந்த பாரி மகனை உலுக்கி திருநாண் அணிவிக்கக் கூறிட, அவரின் உந்துதலில் பெண்ணவளின் கழுத்தில் தங்கத்தாலி அணிவித்திருந்தான்.

அதற்கு மேல் நேத்ராவால் அங்கே நிற்க முடியாமல் கால்கள் துவண்டு, கண்கள் சொருகிட, நின்ற இடத்திலேயே மூர்ச்சையாகிப் போனாள்.

-ஊடல் கூடும்​
 
Top