• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
ராம்-நேத்ரா திருமணம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு தருணத்தில் இனிதே நிகழ்ந்திட ஆரவ் மற்றும் அபி இருவரும் ராமைத் தூக்கி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

தம்பிகளின் தோளில் அமர்ந்திருந்த ராம், அப்போது தான் லட்சுமணனைப் கவனித்தான். தம்பிகளிடம் "டேய் தாத்தா பார்க்கிறார் டா. இறக்கிவிடுங்க டா..." என்று கெஞ்சாத குறையாகக் கூறி கீழே இறங்கினான்.

மேலே இருந்து பார்க்கும் போது தான் ஒவ்வொருவரின் முகத்திலும் அப்படி ஒரு அதிர்ச்சி தெரிந்தது ராமிற்கு. 'அம்மாடியோ நெறையப்பேரை சமாதானம் செய்யனும் போலயே' என்று நினைத்துக் கொண்டே தாத்தாவிடம் சென்றான்.

"தாத்தா... நான் தரு-வ" என்று ஆரம்பித்து, தன் மனைவியை மெல்லிய புன்னகையோடு ஒருமுறை பார்த்துவிட்டு "சிவநேத்ரா-வ தான் விரும்புறேன். அவளும் என்னை விரும்புறா... ஆனால் பைத்தியம் மாதிரி பொருத்தம் இல்லே, அது இல்லே, இது இல்லேனு சொல்லி, அவளே எனக்கு அமியை முடிவு செய்து பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் வரை கொண்டுவந்துட்டா. அதான் சின்ன ட்ராமா பண்ண வேண்டியதாகிடுச்சி... சாரி தாத்தா... எங்களை ஆசிர்வாதம் செய்க" என்று லட்சுமணன் சம்மதித்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பிசிரற்றக் குரலில் சிரித்த முகமாக கூறி முடித்தான்.

அவரோ அவனுக்கு பதிலளிக்காமல், அமியின் தந்தை விஜயனிடம் சென்று "உங்க பொண்ணையும், உங்க குடும்பத்தையும் அவமானப்படுத்துவது போல் நடந்த கொண்டதுக்கு எங்களை மன்னிச்சிடுங்க... மொதவே தெரிஞ்சிருந்தா இதெல்லாம் நடக்காம தடுத்திருப்போம்... இப்போ தி கிரேட் பிஸ்னஸ் மேன் Mr.ராம்கிரன் செய்த தப்புக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் அவர் குடும்பத்தார் நாங்க ஏத்துக்க தயாரா இருக்கோம்..." என்று தலை குனிந்து நின்றார்.

லட்சுமணன் செயலில் ராமின் மேல் இருக்கும் கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது. ராமிற்கும் அவரின் பேச்சில் இருந்த மாற்றம் உருத்தலாகத் தோன்றிட, தலை குனிந்து நின்றான்.

விஜயனோ "அப்படி பார்த்தா எங்க பொண்ணும் தானே உடந்தையா இருந்திருக்கா... முதல் தண்டனை அவளுக்கு தான் கொடுக்கனும். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கிட்ட மாதிரி..." என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே ஆரவ்-வும், அம்ரிதாவும் இருவரின் முன்னால் வந்து ஜோடியாக நிற்க,

அம்ரிதா ஆரவ்வை கண்டு 'பேசுடா' என்று கண்களால் மிரட்டிட,

"தாத்... ம்க்ம்ம்... தாத்தா..." என்று தாத்தாவை அழைத்து முடிப்பதற்குள் நான்கு முறை எச்சிலை விழுங்கிட, அருகில் நின்றிருந்தவள் தன் தலையில் அடித்துக்கொண்டு,

"அப்பா... எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு... உங்களுக்கு இவர் மாப்பிள்ளையா வரது ஓகேனா கல்யாணம் செய்து வைங்க" என்று கூறி முடித்த அடுத்த நிமிடம்,

"என்ன நடக்குது இங்கே?!! என்ன தான் நெனச்சுட்டு இருக்கிங்க?!! எங்களேலாம் பார்த்தா சுத்த அறிகெட்ட கேனைகள் மாதிரி தெரியுதா? பெரியவங்க நாங்க ஒரு முடிவு எடுத்தா அது இஷ்டமா இல்லையானு சொல்றதை விட்டுட்டு ஆளாளுக்கு ஒரு முடிவோட சுத்திட்டு இருக்கிங்க... இதுக்கு எதுக்கு நாங்க இங்கே இருக்கனும்... உங்க விருப்பப்படி கூத்தடிங்க..." என்று கத்திவிட்டு அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார் லட்சுமணன்.

ஆரவ் மீனாட்சி-புகழை ஒருபுறம் சமாதானம் செய்ய, அமி புவனா-விஜயனை சமாதானம் செய்து சம்மதம் சொல்ல வைத்திருந்தாள்.

இங்கே நேத்ராவோ முதலில் கண்டது பூங்கொடியைத் தான். தன் 'அத்தை' என்ற அழைப்பையே ஏற்காதவர் இதனை எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று பயத்தில் இருந்தாள். அவளின் பயந்த விழிகளைக் கண்ட பூங்கொடி, தன் கைகளை கட்டிக்கொண்டு கண்டிப்பது போல்,

"இப்போ என்ன சொல்றே?" என்றிட,

அவரின் முறைப்பைக் கண்ட ராம் அன்னையின் அருகே வந்து "கொடி... சாரி கொடி... அவளை ஏன் முறைக்கிறிங்க... தப்பு செய்தது நான்..." என்று இறைஞ்சும் குரலில் கூறினான்.

இன்று ராமின் வாயிலிருந்து வந்த அனைத்து வார்த்தைகளும் தமிழாகவே இருக்க, அவன் குடும்பம் முழுதும் அவனைத்தான் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தது.

"ராம்... நீ இப்போ பேசுறதைக் கேட்கும்போது ரெம்ப சந்தோஷமா தான் இருக்கு. நீ பேசுறதை கேட்டுகிட்டே இருக்கலாம்னு கூட இருக்கு. ஆனால் இப்போ எனக்கும் உன் பொண்டாடிக்கும் தான் பேச்சுவார்த்தை நடக்குது. உன் தமிழ் புலமைய அப்பறமா கேட்குறேன்... இப்போ நீ குறுக்க பேசாம என்னை அவகிட்ட பேசவிடு.." என்று சிரித்தும் முறைத்தும் ஏற்ற இறக்கத்தோடு ராமிடம் கூறிட, பாவம் ராம் தான் நொந்து போனான்.

நேத்ரா எதுவும் பேச முடியாமல், அமைதியாக தலைகுனிந்து நின்றிட, தன்னவளின் வாடிய வதனம் கண்டு ராம் மீண்டும் தன் அன்னையின் முன் வந்து நின்றான்.

"மாம்... ப்ளீஸ்... அவ மேல எந்த தப்பும் இல்லே ம்மா... அவளுக்கே இங்க என்ன நடந்ததுனு தெரியாம தான் அதிர்ச்சில மயங்கிட்டா... உங்களுக்கு வேற எதுவும் கேட்கனும்னா என்கிட்ட கேளுங்க... ப்ளீஸ்..."

"நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு ராம். அவளுக்கு என் மேலயும் நம்பிக்கையில்லே உன் மேலயும் நம்பிக்கை இல்ல. நான் அவளை மருமகளா ஏத்துக்கமாட்டேனு நெனச்சது மட்டும் இல்லாம, உனக்கு வேற பொண்ணை பார்த்து, கட்டி வெச்சிட்டா நீ அவளை மறந்திடுவேனும் நெனச்சிருக்கா... அது தான் எனக்கு கோபமே... இப்போ என்ன சொல்றே!!! நீ நடக்காதுனு சொன்னதை என் பையன் நடத்திக்காட்டிட்டான்." என்று சற்று பெருமையுடனே கூறிட, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நேத்ராவிற்கு சுத்தமாக புரிந்திடவில்லை.

ஆனால் அன்னையின் கூற்றில் ஒருசிலவற்றை புரிந்து கொண்ட ராம்,

"மாம், அப்போ உங்களுக்கு கோபம் இல்லேயா? ஆனால் என்கிட்ட அம்ரிதாவை பத்தி நிறையா பேசினிங்களே!!!"

"ஆமாடா, நான் பேசினேன் தான். நீ இவளை விரும்பிட்டு, இன்னொரு பொண்ணை கல்யாணம் செய்துக்க ரெடியாகிட்டே... அந்த அமி பொண்ணுக்குனு ஒரு ஆசை, கனவு இதெல்லாம் இருக்குமே, உங்க ரெண்டு பேர் தகராறுல அந்த பொண்ணை கஷ்ட படுத்தக் கூடாதேனு தான் பேசினேன்.

பொண்டாடியா வரப்போறவே என்னெல்லாம் எதிர்பார்ப்பா, உன்னால அதெல்லாம் நேத்ராவை நினைக்காம செய்து கொடுக்க முடியுமானு மறைமுகமா யோசிக்க வெச்சேன்... நீ அமியையும் கூட்டு சேர்த்து ப்ளான் செய்திருக்கேனு எனக்குத் தெரியாதே!!! அதான் இன்னு கொஞ்சம் அதிகமா பேச வேண்டியதாகிடுச்சு..." என்று விளக்கம் கொடுத்திட,

"கொடி... ஐ லவ் யூ கொடி... யூ ஆர் ஆல்வேஸ் மை ஸ்வீட் மாம்..." என்று தன் அன்னையைக் கட்டிக் கொண்டு கொஞ்சினான்.

இருவரும் சகஜமாக பேசிக்கொள்வதைப் பார்த்தப்பின் தான் நேத்ராவிற்குப் புரிந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம் இருந்தது, 'எதற்கு அத்தைனு கூப்பிடாதேனு சொன்னாங்க?' என்று யோசித்து அவரிடமே கேட்க முடிவு செய்தாள்.

"அதுக்கெல்லாம் முன்னாடியே என்னை அத்தைனு கூப்பிடக் கூடாதுனு சொன்னிங்களே!" என்று தன்மையாக வினவிட, ராமின் முகத்தில் சிறிய அதிர்ச்சி,

"ஏன் மாமியாரை அத்தை, ஆன்டி அப்படினு தான் கூப்பிடுவேங்களோ!!? அம்மானு எல்லாம் கூப்பிட மாட்டிங்களோ!?? என் பையன் சொல்ற மாதிரி உனக்கு திமிர் அதிகம் தான்... ஒரு வார்த்தை 'பின்னே எப்படி கூப்பிட'னு கேட்டியா? இல்லேல!!! அதான் நானும் என் மனசார உன்னை மருமகளா ஏத்துக்கிட்டதை சொல்லலே..." என்று அப்போதும் விறைப்பாகவேக் கூறினார்.

நேத்ராவோ தன் கண்ணீர் வெளிப்படாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். எங்கே தான் அழுதால் விமலா கலங்கிவிடுவாரோ என்றே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். பூங்கொடியின் மறுபுறத் தோளில் சாய்ந்து நின்று "சாரி ம்மா... என்னையும் வெண்பாவையும் நீங்க ஏத்துக்கிட்டதுல எனக்கு ரெம்ப சந்தோஷம்..." என்று கூறி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

நேத்ரா வெண்பா இருப்பதை நியாபகப்படுத்துவது போல் இணைத்துக் கூறிட ஒருநொடி அனைவர் முகத்திலும் யோசனை தோன்றியது போல் கங்காதரனுக்கு ஒரு பிரம்மா தோன்றி மறைந்தது.

ஒருவழியாக இரு தம்பதியரும் அனைவரையும் சமாதானம் செய்திருந்தனர், மலையரசி உட்பட. என்ன இருந்தாலும் லட்சுமணனின் வார்த்தை தவறாத மனைவியல்லவா! கணவரை விட்டுக் கொடுப்பாரா என்ன! "ராம் கண்ணா தாத்தா என்ன டா சொன்னாங்க?" என்றிட,

"தாத்தா இன்னு சம்மதிக்கலே பாட்டி. நான் தாத்தாகிட்ட பேசிட்டு வரேன்" என்று கூறி லட்சுமணன் இருந்த அறைக்குள் நுழைந்தான் ராம். லட்சுமணனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து,

"தாத்தா... நான் செய்தது பெரிய தப்பு தான்... அதுக்கு தண்டனை எனக்கு மட்டும் கொடுங்க... அம்ரிதா, ஆரவ்வை விரும்புறது தெரிஞ்ச பின்னாடி தான் நான் அவங்கள எனக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டேன். அது முழுக்க முழுக்க என்னோட தப்பு தான். நான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லேனு மொதவே சொல்லியிருந்தாக் கூட ஆரவ்-அமி க்கு தான் திருமணம் நடந்திருக்கும். அதை இப்போ இன்னைக்கே அடுத்த முகூர்த்ததிலேயே செய்திடலாமே... ப்ளீஸ்.

என்னால ஒரு பொண்ணு கல்யாணமேடை வரை வந்து நின்னு, ஏமாந்துட்டானு நினைக்கும் போது கில்ட்டியா இருக்கு தாத்தா... ப்ளீஸ்... எனக்காக இல்லேனாலும் அமிக்காக வாங்க தாத்தா..." என்று கெஞ்சிட,

"என் செல்ல பேத்தி திருமணமும் சரி, என் மூத்த பேரன் திருமணமும் சரி நான் ஆசைபட்ட படி நடக்கலே. இப்போ அடுத்ததா இரண்டாவது பேரன் திருமணமும் அந்த லிஸ்ட்ல இருக்கு. அவ்ளோ தான். ஆரவ் திருமணம் அவங்க விருப்படி நடக்கட்டும். நான் வேண்டாம்னு சொல்லலே, சொல்லவும் மாட்டேன். உங்க விருப்படி என்ன செய்யனும்னு நெனைக்கிறிங்களோ செய்ங்க..." என்று வேறு புறம் திரும்பிக்கொண்டு பதில் கூறினார்.

"தாத்தா... ப்ளீஸ்... நீங்க சொல்ற எல்லா தவறுக்கும் நான் ஒருத்தன் தான் முழுமுதல் காரணம்... அதுக்கு தண்டனை ஏத்துக்க தயாரா இருக்கேன். நான் என்ன செய்தா நீங்க முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பிங்க? நான் இப்பவே என் பனிஸ்மெண்ட்டை ஏத்து நடக்குறேன்... ஆனால் அமியை ஒரு நொடி யோசிச்சு பாருங்க தாத்தா... ஆரவ் உங்க சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காதுனு ஸ்ட்ராங்கா சொல்லிட்டான். ப்ளீஸ் தாத்தா..." என்று கெஞ்சிட,

சிறிது நேரம் யோசித்த லட்சுமணன், அவன் கூறுவதிலும் நியாயம் இருக்க, "உனக்கு தண்டனை கண்டிப்பா உண்டு. அதை வாரணாசி போனதும் சொல்றேன். அதுவரை என்கிட்ட பேசாதே..." என்று கூறி இருக்கையில் இருந்து எழப்போக,

"தாத்தா இதுவே பெரிய தண்டனை தான். இது போக ஒரு பனிஸ்மெண்ட் வேற இருக்கா?" என்னையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க தாத்தா..." என்று கெஞ்சிட,

இருக்கையைவிட்டு எழுந்தவர் கூட மீண்டும் அமர்ந்து கொண்டார்.

"ஓகே... ஓகே... சாரி... சாரி... நீங்க என்ன பனிஸ் பண்ணினாலும் ஏத்துக்குறேன்... வாங்க... ப்ளீஸ்..." என்று மீண்டும் கெஞ்சினான்.

அவனை முறைத்துக் கொண்டு எழுந்து வந்தவர், விஜயனிடம் ஆரவ்விற்காக பெண் கேட்டிட, ஆரவ்-அம்ரிதா திருமணமும் இனிதே முடிந்திருந்தது. இரு தம்பதியருக்கும் மாலை ஒன்றாகத் தான் ரிஸப்ஷன் நடைபெற்றது.

ஏற்கனவே தன்னவள் தன்னை இழக்கத் துணிந்துவிட்டாளே என்ற கோபத்தில் இருந்த ராம், இப்போது தாத்தாவின் கோபத்திற்கு ஆளாகிவிட்டது வேறு சேர்ந்து கொள்ள நேத்ராவின் மேல் மேலும் கோபம் கொண்டான்.

"எல்லாம் இந்த ராட்சசியாலத் தான்... அன்னைக்கு நைட் கேட்டேன்ல, அப்பவாச்சும் உண்மைய சொல்லிருக்கலாம்... இவளுக்கு இருக்கு இன்னைக்கு" என்று ஏதோ அடித்து துவம்சம் செய்துவிடுவது போல் வீராப்பாக மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் அன்னையிடம் சென்று, காஞ்சிபுரத்தில் இருந்து வரும்போது அவளுடன் அமர்ந்து வரமாட்டேன் என்று அடம்பிடித்தான். பூங்கொடி தான் அவனின் சிறுபிள்ளைத் தனத்தை நினைத்து கடுப்படைந்தார்.

இப்போதும் அறைக்குள் செல்வதற்கு அடித்துத் துரத்தாத குறையாகத் தான் தள்ளிவிட்டார் பூங்கொடி. வேறு வழியில்லாமல் உள்ளே வந்தவன் தன்னவளின் அழுகை கண்டு அதற்கு மேலும் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருக்க முடியாமல், நின்றநிலையிலேயே அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள,

"ஐ ம் சாரி... ஐ ம் சாரி... ஐ ம் சாரி..." என்று மீண்டும் மீண்டும் அதனையே அழுது கொண்டே கூறிக் கொண்டிருந்தாள். எவ்வளவு தான் ஏங்கி ஏங்கி அழுதாலும் ராம் தான் அவளை அணைத்திருந்தான். அவள் அவனை அணைக்கவில்லை என்பதை அவனும் கவனிக்கத் தான் செய்தான்.

"சரி டா... அழாதே... இப்போ என்னாச்சு... எல்லாம் நல்லபடியாத் தானே முடிஞ்சிருக்கு... போதும்... அழாதே... நீ என்கிட்ட சாரி கேட்கவேண்டிய அவசியமும் இல்லே... இங்கே பார்... என்னை நிமிந்து பார்..." என்று அவள் கண்களை துடைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

"நான் அந்த இடத்திலேயே இருந்திருக்கக் கூடாது. உங்க கண்ணிலேயே பட்டிருந்திருக்கக் கூடாது. என்னைப் பார்த்ததும் தான் நீங்க ஏதோ அமிகிட்ட சொன்னிங்க... என்னால தான் எல்லாம்... " என்று ராமை தவறாகப் புரிந்து கொண்டு உளற,

"நீ என் கண்ணில் படாமல் போயிருந்தா ஆரவ்-அமி கல்யாணம் மட்டும் நடந்திருக்கும்... அவ்ளோ தான்." என்று சாதாரணமாகக் கூறினான்.

அதில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் "நீங்க பொய் தானே சொன்னிங்க, அமியும் ஆரவ்வும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்கனு?" என்று சந்தேகமாக வினவிட,

"அது உண்மை தான். அமி ஆரவ்வைத் தான் விரும்பினாங்க. அன்னைக்கு வெண்பா பர்த் டே பார்ட்டில அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம். அப்பறம் தான் நான் உன்னை விரும்புறதை சொன்னேன். அமிக்கு அதுல பயங்கர சந்தோஷம்."

"ஆனால் நான் அன்னைக்கு ராம்கிரன்-ஐ பார்த்தியா? பிடிச்சிருக்கானு கேட்டதுக்கு பிடிச்சிருக்குனு சொன்னாளே. அப்பறம் தான் நீங்க வந்து அமிகிட்ட பேசினிங்க..."

"அங்க தான் ட்விஸ்டே... நீ என்னை வெல்கம் பண்ணுறதுக்கு நேம்போர்ட் வெச்சியே, அங்கே போனது ஆரவ், இதை பாத்த அமி ஆரவ்வை நான்னு நெனச்சு, வாலன்டியரா வம்பு பண்றதுக்கு போயிருக்காங்க. ஆரவ் லவ் அட் ஃபஸ்ட் சைட் மாதிரி பாத்த உடனேயே ஃப்ளாட் ஆகிட்டான். அப்பறம் என்ன!, அமிக்கும் அவனோட இன்னோசென்ட் பிடிச்சிபோச்சு.

இங்கே பார்ட்டில நான் தான் ராம்கிரன்னு சொல்லவும் அவங்க முகத்துல ஏமாற்றம், குழப்பம் எல்லாம் தெரிஞ்சது. என்ன ஏதுனு சிலமுறை கேட்டப்பின்னாடி தான் இதை சொன்னாங்க. அப்பறம் நானும் நம்ம லவ்வை சொன்னேன். 'சிவா அக்காக்கு கல்யாணம் நடக்கும்னா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண ரெடியா இருக்கேன்'னு சொன்னாங்க...

நீ கடைசி வரை என்னை லவ் பண்றதா உணரலேனா, லாஸ்ட் மினிட் கல்யாணத்தை நிறுத்தி எனக்கு பதிலா ஆரவ்வை நிக்க வைப்பேனு இரண்டு பேருக்கிட்டேயும் சொன்னேன். ஆனால் மேடம் கண்ணே காட்டி கொடுத்திடுச்சே... காலைல இருந்து என்னை பார்க்குறதும், தவிக்கிறதும், கடைசியா அழுது மாட்டிக்கிட்டே..." என்று ஶ்ரீரங்கநாதனைப் போல் மெத்தையின் குறுக்கே தலைக்குக் கை வைத்துபடுத்துக் கொண்டு கூறினான்.

இவ்வளவு நேரம் கதை கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்த நேத்ராவிற்கு, வேண்டிய விளக்கம் எல்லாம் கிடைத்துவிட, அடுத்து என்ன என்று யோசித்த நொடி பயப்பந்து உருளத் தொடங்கியது.

-ஊடல் கூடும்.​
 
Top