• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
சந்தேகங்கள் தீர்ந்த பின் அடுத்து என்னவென்று யோசித்த நேத்ராவின் முகத்தில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

நேத்ராவின் கண்களில், அவள் யார்? எப்படிப்பட்டவள்? என்று தெரிவதற்கு முன்பே இயலாமையின் வருத்தத்தைக் கண்டவன், அவளைப் பற்றி அறிந்து கொண்டபின் அவள் தன்னிடம் காட்டிய திமிரை கண்டறிந்து ரசித்தவன், காதல் இருந்தும் அதனை மறைக்க நினைத்த போது அவளின் வேதனையை புரிந்து கொண்டவன், கண்ணீர் மூலமே ஆனாலும் அவள் காதலின் கரையுடைத்து மடைத்திறந்த வெள்ளமாக்கியன், அவளின் கண்ணில் தெரியும் பயத்தை அறிந்திடமாட்டானா என்ன!!!

ஆனால் அது எதற்கு என்று தான் அவனுக்கு புரிபடவில்லை. வாழ்வின் அடுத்தகட்டம் என்ன என்று யோசித்து அதற்கேற்றார் போல் தன்னை தயார்படுத்திக் கொண்டு அதில் உறுதியாக நிற்பவள் எதற்காக பயப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் அவள் பயம் ஒழியட்டும் அதன் பின் அவளிடம் இது பற்றி பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன், அவளை இயல்பாக்க

"ஓகே தரு... வேற எதுவும் கேட்கனுமா? தூக்கம் வருது...தூங்கலாமா?" என்று வராத கொட்டாவிக்கு வாய் பிளந்து கை அரணைக் கொண்டு தடுத்திட, பெண்ணவள் அவனை வினோதமாகப் பார்த்தாள்.

"ஹேய்... இன்னு எதுவும் சந்தேகம் இருக்கானு கேட்டேன்?" என்று மீண்டும் வினவி, அவளை இயல்புக்கு கொண்டு வந்தான்.

பெண்ணவள் "ம்கூம்ம்" என்று இடவலமாக தலையசைத்திட,

"ஓகே... குட்நைட்... நான் தூங்குறேன்..." என்று கூறி அவளுக்கு மறுபக்கம் நகர்ந்து சென்று, மின்விளக்கு வெளிச்சம் கண்ணில் படாமல் இருக்க குப்புறப்படுத்து கண்களை மூடிக்கொண்டான்.

மூடியவிழிகளுக்குள் கருவிழிகள் இரண்டும் உருண்டு கொண்டே இருக்க, வெளிச்சத்தில் தான் உறக்கம் வராமல் சிரமப்படுகிறான் என்று நினைத்து விளக்கை அனைத்துவிட்டு வந்து அமர்ந்தாள். வெகுநேரமாக அப்படியே அமர்ந்திருந்தவளை,

"உனக்கு தூக்கம் வரலேயா!!! ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்து தூங்கு தரு..." என்று ராம் தெளிவாக உரைத்திட, அவன் இன்னும் உறங்கவில்லை என்பதை அறிந்து கொண்டதோடு, உடைமாற்றும் சிறிய அறை இருந்தும் ஏதோ ஒரு பயம் ஏற்பட உடை மாற்றாமல் அப்படியே படுத்துக் கொண்டாள்.

பல குழப்பங்களுக்கு நடுவே உறக்கம் வராமல் தவித்தவள், இறுதியாக அவனிடம் கேட்டேவிட்டாள்.

"இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமா?"

ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் "என்ன நாள்?" என்று அதையே அவளிடம் வினவினான்.

பெண்ணவள் சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துவிட்டு பதில் கூறாமல் மறுபுறம் திரும்பி படுத்துக்கொள்ள சற்று நேரத்திற்கெல்லாம் ஆடவனின் பிடியில் இருந்தாள்.

பதறித் தவித்து மேனி எங்கும் நடுங்கிட, கண்களையும், கைகளையும் இறுக மூடிக்கொண்டு அமைதி காத்தாள்.

அவள் அருகே சென்று காதுமடலில் இதழ் உரச "கல்யாணம் ஆன உடனேயே நீ உன்னை எனக்கு தரணும்னு அர்த்தம் இல்லே... இதோ இந்த நடுக்கம் வெட்கத்தால் வந்தது கிடையாது தரு. அதை நான் ஃபோட்டோ எடுக்க உன்னைத் தொடும்போதே தெரிஞ்சுகிட்டேன். ஒருவேளை எதிர்பாரத தருணத்தில் நடந்த திருமணம் என்பதால் வந்த பயமா இருக்கலாம். அந்த பயம் மொதோ போகட்டும்.

இன்னைக்கு என்ன நாள்னு கேட்டேல!!! நம் காதலோட ஆழத்தை ஒருத்தருக்கு ஒருத்தர் புரிய வைக்க வேண்டிய நாள். அதில் காதல் மட்டுமே இருக்கனும். பயம் இருக்கக் கூடாது. இன்னைக்கு இன்னொரு முக்கியமான நாளும் கூட."

அவன் பேசிய விதத்தில் கொஞ்சம் தெளிவு பெற்றவள், முகத்தை மட்டும் திருப்பி 'என்ன?' என்பது போல் பார்க்க,

விடிவிளக்கின் வெளிச்சத்திலும் அவள் கண்கள் அவனை மயக்கிட, சிரமப்பட்டு தன்னை விழிச்சிறையில் இருந்து வெளிக்கொணர்ந்து

"நம்ம ரெண்டு பேரோட அன்புக்கும் உரு கொடுத்து வெண்பாக்கு உயிருள்ள கிப்ட் கொடுக்க தயாராக வேண்டிய நாள். அந்த கிப்ட்டை ஏத்துக்க வெண்பாவையும் ரெடி பண்ண வேண்டாமா!!! இரண்டாம் குழந்தைக்கு ரெடி ஆகுறவங்க, முதல் குழந்தை அதை எந்த அளவு அக்சப்ட் பண்ணுனு யோசிக்கனும் தானே!!! அதுக்கு நமக்கும் டைம் வேணும் தானே!!! அதனால இன்னைக்கு வேற எதுவும் யோசிக்காம தூங்கு..." என்று கூறி அவளை அவன் புறம் முழுமையாகத் திருப்பி தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்...

தன்னையும், வெண்பாவையும் எவ்வளவு இயல்பாக ஏற்றுக்கொள்கிறான்!!! ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு செயலிலும் அவனது காதலையும் எவ்வளவு அழகாக, ஆழமாக வெளிப்படுத்துகிறான்!!! ஆனால் என் காதலுக்காக நான் எதுவுமே இதுவரை செய்தது இல்லேயே!!! இனியும் என்ன செய்யப் போகிறேன்? என்ன செய்ய வேண்டும்? எதுவுமே புரியவில்லையே! என்று அவன் முகம் பார்த்து யோசித்துக் கொண்டே உறங்கியும் போனாள்.

அதிகாலை ஜாக்கிங் செல்வதற்காக எழுந்த பவன் தன்னை இடித்துக் கொண்டு படுத்திருப்பவளைக் கண்டு பிரமித்துப் போனான்.

'இப்படியெல்லாம் வந்து இடிச்சிகிட்டு படுத்துப்பாளாம். நான் உரிமையா கிட்ட வந்தா மட்டும் இன்னு உங்க மேல கோபமா தான் இருக்கேன், தள்ளிப்போங்கனு சொல்லுவாளாம். இப்போ நீ எப்படி தப்பிக்கிறேனு பாக்குறேன் டி' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,

பாதி அணைத்தும் அணைக்காமலும் படுத்திருப்பவளை, முழுமையாக தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, விழித்து எழுந்த பெண்ணவள் அவனைவிட்டு விலக நினைக்க, மேலும் தன்னோடு சேர்த்து இறுத்திக் கொண்டான்.

"எங்கே டீ தப்பிக்க பாக்குறே... இன்னைக்கு வசமா மாட்டிக்கிட்டேயா?.." என்ற பவனுக்கு, ப்ரஷ் பண்ணாமல் பேச விருப்பம் இன்றி, வெறுமனே "ம்ம்கூம்... ம்கூம்..." என்று மட்டுமே கூறிட,

"ஓ... இது வேறயா!!! ப்ரஷ் பண்ணலேனா பேசமாட்டேயா!? எனக்கு இன்னும் வசதியா போச்சி" என்று கூறி அணைத்தபடியே இதழோடு இதழ் பதிக்க முயற்சித்தவேளையில், அவன் நெஞ்சில் நன்றாக கிள்ளி வைத்து, அவன் அசந்த நேரம் பார்த்து எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

குளியலறைக் கதவை தாளிடுவதற்குள் எட்டிப்பிடிக்க நினைத்து முடியாமல் தோற்று நின்றான்.

"கதவைத் தொற டீ..." என்று செல்லக் கோபத்தோடு பல்லைக் கடித்துக் கொண்டு கூறிட, உள்ளிருந்து எந்த பதிலும் வராமல் போனது.

"போண்டா... உன்னை ஒன்னும் செய்யமாட்டேன்... இப்போ நீயா கதவைத் தெற... இல்லேனா இதுக்கும் சேர்த்து தனியா கவனிக்க வேண்டி வரும்..." என்று மிரட்டிட,

உள்ளே இருந்தவளோ, 'போடா டேய்... இதுக்கெல்லாம் பயந்தா உன் கூடலாம் குப்பை கொட்ட முடியுமா!!!' என்று மனதில் நினைத்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து காது குடைந்து கொண்டிருந்தாள்.

வெளியே பவன் சிறிது நேரம் சத்தமில்லாமல் மெதுவாக கத்தியும், கதவைத் தட்டியும், கெஞ்சியும் பார்த்தான். அவள் திறப்பதாகவும் இல்லை, பதில் சொல்வதாகவும் இல்லை.

"கட்டினா இவளைத் தான் கட்டிப்பேன்னு, கோபிச்சிட்டு போனவளையும் திரும்ப தேடி போய் கட்டிட்டு வந்த என்னை சொல்லனும் டீ... இவளுக்கு பதிலா சுனோவையே கல்யாணம் செய்திருக்கலாம். 'மச்சான்... மச்சான்னு வாய்நிறைய கூப்பிடுறதை கேட்கவே எவ்ளோ இனிமையா இருக்கு... இவளும் தான் இருக்காளே!!!" என்று அவளை வெளியே வரவைக்க ஏதேதோ பேசிப் பார்த்தான். அவளிடம் எந்த பதிலும் இல்லை. அவளை திட்டிக்கொண்டே ஜாக்கிங் செல்ல ட்ராக் சூட், டீ-சர்ட் மாற்றிக் கொண்டு,

"ஏய்... என்ன பாத்ரூம்லயே தூங்கிட்டியா?" என்று சத்தம் கொடுக்க, சிங்க்-ஐத் திறந்து தண்ணீர் சத்தம் கேட்கும்படி செய்து அவனுக்கு தான் விழித்திருப்பதை தெரியப்படுத்த,

"ஆனாலும் ரெம்ப கொழுப்பேறி போச்சு டீ உனக்கு!!!... நான் ஜாக்கிங் கெளம்பிட்டேன். வெளியே வந்து பெட்ல படுத்து நல்லா கொரட்டைவிட்டு தூங்கு..." என்று சற்று எரிச்சலுடனே கூறிச் சென்றான்.

அப்போதும் வெளியே வராமல், அவன் சென்றுவிட்டானா இல்லை எங்கேனும் ஒழிந்திருக்கிறானா என்று கவனித்துப் பார்த்தப்பின் தான் வெளியே வந்தாள். ஆனால் அவன் அறையில் உண்மையாகவே இல்லாமல் இருக்க ஏமாற்றமாக உணர்ந்தாள். அதன் பின் பல விதங்களில் உருண்டு உருண்டு படுத்துப் பார்த்துவிட்டாள் தூக்கம் தான் வருவேணா என்றது.

'டேய்... கொஞ்சம் பிகு பண்ணினா அப்படியே விட்டுட்டு போய்டுவேயா டா... வீட்டுக்கு வா, நீ என்ன என்னை கவனிக்கிறது! நானே உன்னை கவனிச்சிக்கிறேன்.' என்று வீராப்பாக தனக்குத் தானே கூறிக் கொண்டாலும், அதனை கற்பனையில் கண்டவளுக்கு கன்னம் சூடேரிட, 'ஐயோ மித்து... உனக்கும் வெட்கம்லா வருது போலயே... இப்படி வெட்கப்படுறதைப் பார்த்து ரசிப்பானா! இல்லே சிரிப்பானா!' என்று அடுத்த கற்பனைக்குள் நுழைந்து மேலும் மேலும் சிவந்து, தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.

பவன் ஜாக்கிங் முடித்து வருவதற்குள் குளித்துத் தயாராக அமர்ந்திருந்தாள். வந்ததும் எப்படியும் வம்பு வளர்ப்பான், அல்லது கோபமாகப் பேசுவான் என்ற எதிர்பார்ப்போடு தான் அமர்ந்திருந்தாள்.

ஆனால் ஜாக்கிங் முடித்து வந்தவன் அவளிடம் எதுவும் பேசாமல், ஏன்? அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் திரிய, அவன் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று நின்றாள். ஆனால் அவன் கண்டுகொள்வதாகவே இல்லை. வெண்ணிற துவாலை ஒன்றை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு குளியலறை நோக்கி செல்ல, பெண்ணவள் பின்னாலேயே சென்று கதவில் முட்டிக்கொள்ள, கோபத்தில் கதவை ஓங்கி உதைத்தாள்.

அவன் குளித்து முடித்து வரும்வரை மிதுன்யா அறையிலேயே காத்திருக்க, வெளியே வந்தவன் அவளை கண்டு முறைத்துவிட்டு, 'இன்னு எதுக்கு இங்கே உக்காந்திருக்கா!!!' என்று யோசனையோடு "போயி சத்துமாவு கஞ்சி எடுத்துட்டு வா..." என்று அவளுக்கு வேலை கொடுத்து அனுப்ப நினைக்க,

"அப்பாடா பேசிட்டிங்களா!!! இதுக்கு தான் இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தேன்... தாங்க் யூ மச்சான்..." என்று கூறி இதழ் குவித்து பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு வாசல் வரை சென்று,

"இன்னைக்கு தான் ஷோரூம் திறக்கலையே... அதனால கீழேயே வந்து சாப்பிட்டுக்கோங்க..." என்று கூறி கன்னம் குழிய சிரித்து கண் சிமிட்டிவிட்டு விறைந்தாள்.

சரியான அராத்து... போறவ சும்மா போக வேண்டி தானே... வம்பு பன்றதுக்குனே மச்சானு கூப்பிடுது பார்... பல்லைக்கடித்துக் கொண்டே கோபமாக கண்ணாடி பார்த்து தலைவாரிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தவன், திடீரென 'ஐயோ சும்மா இருந்தவனை சொரிஞ்சிவிட்ட மாதிரி முத்தம் வேற கொடுத்துட்டு போய்ட்டாளே...' என்று அழுவது போல் கூறிவிட்டு, உடை மாற்றிவிட்டு சற்று நேரம் காத்திருந்து பார்த்தான் அவள் வருகிறாளா என்று. ம்கூம்....

தன் திறன்பேசியை எடுத்து தன் போண்டாவிற்கு, "நீ இப்போ ரூமுக்கு வரலேனா, இன்னைக்கு முழுதும் ரூமைவிட்டு வெளியே வரவும் மாட்டேன், சாப்பிடவும் மாட்டேன்" என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு படுத்துக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்தே அறைக்குள் நுழையும் அரவம் கேட்க, கண்களைத் திறவாமல் அவளே அழைக்கட்டும் என்று காத்திருந்தான்.

"பவன்... உங்களுக்கு கஞ்சி சூடு பண்ணி கொண்டு வந்திருக்கேன்..." என்றிட, அவன் அவளுக்கு முதுகு காண்பித்துப் படுத்துக் கொண்டான்.

"பவன்... நான் தான் நீங்க சொன்ன மாதிரி வந்துட்டனே... இதை மொதோ சூடு போறதுக்குள்ள குடிங்க..."

"டோர் லாக் பண்ணிட்டு வா..."

சங்கடமாக நெளிந்து கொண்டே "பவன் கீழ அம்மா, அப்பா, தாத்தா எல்லாரும் எந்திருச்சிட்டாங்த பவன். நேத்ரா அக்கா கூட எழுந்து வந்தாச்சி... இப்போ நான் கீழே போலாட்டா எல்லாம் என்ன நெனப்பாங்க!!?... ப்ளீஸ்..."

"இப்போ சொன்னதை செய்யலேனா பனிஸ்மெண்ட் கூடிட்டே போகும். நீ என் கூட இருக்குற டைம் அதிகமாகிட்டே போகும்..." என்று கராராகக் கூறினான்.

சிணுங்கிக் கொண்டே அவன் சொன்னதைச் செய்தாள். "ம்ம்ம்... இப்போ உங்க டர்ன்... இதை காலி செய்ங்க..."

எழுந்து அமர்ந்தவன், "அப்போ என்னை என்னனு சொல்லிட்டு ஓடின?"

"கிண்டல் பண்ண கூடாது, சிரிக்க கூடாது..." என்று வெட்கப்பட்டுக் கொண்டே இரண்டு கண்டிஷனை முன் வைத்தாள்.

"ம்ம்ம்..."
"மச்சான்..." என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் கன்னங்கள் சிவந்துவிட, அவசரமாக தலை குனிந்து கொண்டாள்.

அவளின் அழைப்பை விட, கன்னங்கள் சிவப்பதை ரசித்தவன் மேலும் இரண்டு மூன்று முறை மீண்டும் மீண்டும் கூறச் சொல்லி கேட்டு மகிழ்ந்தான். அவளை நெருங்கி அமர்ந்த, "மச்சான் சாப்பிடுங்க மச்சானு சொல்லி ஊட்டிவிடு, நான் சாப்பிடுறேன்..." என்றிட.

அவளும் தன் காதுமடல் வரை சூடேறுவதை உணர்ந்து மென்னகைத்து "பவன் ஒரு மாதிரி கூச்சமா இருக்கு பவன்..."

"அப்போ கீழே எடுத்துட்டு போய்டு. நான் இன்னைக்கு சாப்பிடலே.." என்று கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டு அவளை விரட்ட,

"சரி சொல்றேன்... "என்று அவன் கூறியது போலவே தே.கரண்டியில் அள்ளி ஊட்டிவிட, கிண்ணத்தை காலி செய்தான்.

அவன் உண்டு முடித்ததும், "நான் போகட்டா.." என்று அவனிடம் அனுமதி வேண்டி நிற்க... "ம்ம்ம் போ" என்றதும் பெண்ணவள் முகம் சுருங்கி வருந்தியது ஒரு நொடி தான். அடுத்த நொடி கோபம் எட்டிப்பார்க்க "சரி தான் போடா..." என்றிட,

மெத்தையிலிருந்து எழுந்தவளை இழுத்த அணைத்து அவளது மெல்லிடையை தன் கைச்சிறையிலும் அவள் அதரங்களை தன் இதழ் சிறையிலும் சிறைபிடித்திருந்தான்.

முதலில் அதிர்ந்து விலக நினைத்து அவனைத் தள்ளிவிட, ஆடவனோ பெண்ணவளை, தன்னவளாக தனக்குள் புதைத்துக் கொள்ளும் நோக்கில் தன் இறுக்கத்தை, நெருக்கத்தை இன்னும் அழுத்தம் கொடுத்து அதிகப்படுத்தினான். கள்வனவன் பெண்ணவளின் இரு இதழ்களுக்கும் பாரபட்சம் காட்டாமல் மாற்றி மாற்றி கடித்துச் சுவைத்திட,

அவனின் முரட்டுத்தனமான முத்தத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பிடிமானமற்றுத் தவித்தவள் இறுதியில் அவனின் சட்டையையே தன் பிடிமானமாக்கி அவனது முத்தத்தில் தன் பங்களிப்பையும் நிலைநாட்டினாள்.

தன்னவள் மூச்சுக்காற்றுக்காக தவித்து தன் நெஞ்சில் பட்டுக்கரம் கொண்டு அடித்து உரைத்தப் பின்னே அவளை பிரிந்தான். மனையாளின் காதல் பார்வைக்காக ஏங்கித்தவித்து அவள் முகத்தையே பார்த்திருக்க, அதில் மேலும் வெட்கம் கொண்டவள் எழுந்து செல்ல முற்பட்டாள். அவள் கையைப் பிடித்து இழுத்து தன் மேல் கிடத்திக் கொண்டு,

"பிடிக்கலேயா?" என்று இப்போதும் அவளின் பார்வையை எதிர்பார்த்து கேட்டான்.

அவன் கண்களைக் காணமுடியாமல் தலைகுனிந்தபடியே உதடுகளில் தன் புறங்கையால் ஒத்தடம் கொடுப்பது போல் செய்து "வலிக்குது" என்றாள்.

"உண்மையாகவா!!! அட ஆமா லைட்டா சிவந்து இருக்கே..." என்று கூறி அவள் இதழ்களை இதமாக விரல்கள் கொண்டு பிடித்துவிட்டான்.

அதில் மேலும் மேலும் சிவந்தவை அப்படியே விட்டுவைக்கவில்லை மனமில்லாமல், "கையை விட என் லிப்ஸ் இன்னும் கொஞ்சம் சாஃப்ட்டா இருக்கும், வேணுனா ட்ரைப்பண்ணலாமா!!!" என்று கேட்டுக் கொண்டே அவள் கன்னங்களைப் பிடித்து நிமிர்த்தி தன்னைக் காணச் செய்ய, பெண்ணவளின் வெட்கம் மறைமுக சம்மததைத் தர, அங்கே முத்தப் போராட்டத்தையும் தாண்டி கட்டில் எனும் போர்களத்தில் யுத்தப் போராட்டம் தொடங்கியிருந்தது.

நேரம் கழித்து தலை களித்து உடைமாற்றி வந்தவர் குடும்பமே ஒருநொடி நின்று நிமிர்ந்து பார்க்க அதில் மீண்டும் பவனின் கோபம் கொண்டது தனிக்கதை.

இங்கே ராம் காலைப்பொழுதில் தாமதமாகத் தான் எழுந்திருந்தான். கண்விழிக்கும் போது நேத்ரா அருகில் இல்லாமல் போக ஏமாற்றத்தோடு எழுந்து சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

குளித்து முடித்து வந்தவனிடம் சூடான இஞ்சி டீ நீட்டப்பட, அதனை எடுத்துக் கொண்டு தன்னவளை நோட்மிட்டான்.

அவளுக்காக அவன் எடுத்து வந்திருந்த மஞ்சள் நிற சேலையில், தளரப் பின்னிய கேசத்தில் மனக்கும் மல்லிகையும், நெற்றி வகிட்டில் தாழம்பூ குங்குமமும், திருத்தம் செய்த புருவமும், மையிட்ட காந்த விழிகளும், இதழில் சிறு புன்னகையும், கழுத்தில் உன்னவள் என்று பறைசாற்றிடும் அவன் அணிவித்த பொண் சங்கிலியும் என அவளின் முக அழகை அதுவரை ரசித்துக் கொண்டிருந்தவன், அப்போது தான் கவனித்தான்,

காதில் காதோடு ஒட்டிய ஒற்றைக்கல் கம்மலும், கையில் அணிய வேண்டும் என்வதற்காக அணிந்திருந்த ஒன்றை வளையலும், பாதத்தில் திருமணம் ஆனவள் என்ற அடையாளமாக இருக்க வேண்டிய மெட்டி இன்றி வெறும் விரல்களாக இருக்க,

"ஏன் மெட்டி போடல?" என்று டீயை அருந்திக் கொண்டே வினவினான்.

"இதுவரை போட்டதே இல்லை, அதான் அத்தை கொடுத்ததை போடாம வெச்சிருக்கேன்..." என்று 'ஒருவேளை அவன் அணிவித்து விடுவானோ!' என்று யோசித்துக் கொண்டே கூறினாள்.

"கடைக்குப் போகலாமா?" என்று அடுத்த மிடரு மிடரிவிட்டு வினவினான்.

"இப்போவா? எதுக்கு?"

அதற்குள் டீயை அருந்தி முடித்திருந்தவன் அங்கே இருந்த மேசையில் கோப்பையை வைத்துவிட்டு,

அவளை இடையோடு வளைத்து தன் அருகே நிற்க வைத்து தன் விரல் கொண்டு கழுத்தில் ஊர்வலம் செய்திட, அவன் இழுத்த இழுப்பில் அவனின் வெற்று மார்பில் மோதி மீண்டவள், இப்போது அவனை நகர்த்தவோ இல்லை பிடித்து நிற்கவோ வேண்டுமெனில் அவன் தோளில் தான் கைவைக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கை அவள் கழுத்தில் ஊரத்தொடங்கியிருந்தது. துவண்ட கால்களை கடினப்பட்டு அழுந்த ஊன்றி நின்றிருந்தாள் பெண்ணவள்.

"இதோ இந்த செய்ன் நான் உனக்காக ச்சூஸ் பண்ணினேன். இன்ஃபேக்ட் பேமிலியோட போய் ச்சூஸ் பண்ணின செயின் அமி கழுத்துல இருக்கு... தென் நீ கட்டியிருக்குற சேலையும் என்னோட ச்சாய்ஸ் தான். இதுபோக இப்போ உன்னை ஒட்டி உறவாடக் கூடிய எல்லா ஆபரணமும் நான் உனக்காக வாங்கிக் கொடுத்ததா இருக்கனும்னு நெனைக்கிறேன்." என்று கூறி கைவிரல் பயணித்த அங்கங்களை இதழ்கள் கொண்டு வருடிவிட, பெண்ணவள் அவன் பேச்சிலும் செய்கையிலும் கரைந்து மயங்கி நின்றிட, அவனின் இதழ் ஊர்வலம் அவளின் இதழ்களில் முடிவு பெற்றது.


-ஊடல் கூடும்.​
 
Top