• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ரா, ராமின் மென்மையான தொடுகையில் தன்னை மறந்து கரைந்து அவனின் முத்தத்தில் லயித்திருந்தது ஒரு சில நொடிகளே... விழிகளோடு சேர்ந்து மூளையும் விழித்துக் கொள்ள பட்டென அவனைத் தள்ளிவிட்டு, மறுபுறம் திரும்பி நின்று கொண்டு, தனக்குள் தோன்றிய ஏதோ ஒரு உணர்வை ராம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவதற்குள் மறைத்து மாற்றி தன் முக பாவனையை சரி செய்தும் இருந்தாள். மீண்டும் ராமின் அருகே வந்து

"இப்படியே நின்னுட்டு இருந்தா எப்படி!!! கடைக்கு புறப்பட வேண்டாமா?" என்று கூறி, புன்னகைத்து அவன் மேசையின் மேல் வைத்திருந்த கோப்பையையும் எடுத்துக் கொண்டு, வெளியே செல்ல

"நேத்ரா மேடம் ஒரு நிமிடம்..." என்று ராம் அழைத்திட, ஏன் இந்த பெயர் மாற்றம்!? ஒருவேளை தன்னைக் கண்டு கொண்டானோ என்று எண்ணி அஞ்சி, நின்ற நிலையில் அப்படியே நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனோ மெல்லிய புன்னகையுடன் "வெண்பாவையும் ரெடி பண்ணு. மூனு பேரும் தான் போறோம்..." என்று கூறிட,

அதுவரை இருந்த பயம் விலகி அவன் கண்களோடு தன் கண்களை கலக்கவிட, அவனின் ஆளைத் துழைக்கும் பார்வையில் பனியாய் உருகி, மெய்மறந்து அவனையேப் பார்த்திருந்தாள். அவளின் குண்டுவிழிப் பார்வையிலும் தெரிந்த மாற்றத்தைக் கண்டவன், இடைவெளி விட்டு எட்டி நிற்க முடியாமல் அவளை நோக்கி முன்னே வர, சடுதிக்குள் சுயம் பெற்று வேகமாக பின்னே சென்று,

"நான் பொம்மிய ரெடி பண்ணப் போறேன்..." என்று அவசரமாகக் கூறி அங்கிருந்து வெளியேறிச் சென்றாள்.

அவளின் செயலில் சிறிய புன்னகை தோன்றினாலும், "பெரிய பிஸ்னஸ் மேக்னட்!! சோட்டூவோட அயர்ன் லேடி!!!....புருஷன் பக்கத்துல வந்தா மட்டும் பயந்து ஓடுறா!!" என்று முணுமுணுத்துக் கொண்டே தன் வேலையை கவனித்தான்.

நேத்ரா விமலாவின் அறைக்குச் செல்வதற்குள் வெண்பா எழுந்து எப்போதும் போல் ராமைத் தேடி அபி தங்கியிருக்கும் அறைக்குச் சென்றாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அபியின் அலரல் சத்தம் கேட்டிட,

"ஸப்பா... இங்கேயே சின்ன குழந்தை கூட எப்போ பார் தகராறு பண்ணிக்கிட்டே இருக்கானே!!! இனி அங்கே வாரணாசி போன டெய்லி இந்த பஞ்சாயத்து நடக்கும் போலியே" என்று மலையரசி வசைப்பது போல் தன் பேரன் அபியை குழந்தைக்கு இணையாகக் கருதி மெச்சிக் கொள்ள,

"கொஞ்சம் என்னனு தான் போய் பாரேன் அரசி. புகழும், மீனாவும் அமி வீட்ல இருக்காங்க, அவன் அண்ணங்காரனுக்கு வர வர குடும்பம் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது. காதல்ல மயங்கி கிடக்குறான்..." என்று தன் வருத்தம் தாங்காமல் ஆதங்கமாக முகத்தை சுளித்துக் கொண்டு கூறிட, மலையரசி அவரை வினோதமாகப் பார்த்தார்.

"என்னை ஏன் பார்த்துட்டு இருக்கே... போய் உன் பேரனைப் பார்..." என்று மலையரசியையும் கடிந்து கொண்டார்.

மலையரசியும் அவரின் வித்தியாசமான பேச்சைக் கேட்டு எதுவும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்.

அங்கே அபியின் அறை வாயிலில் கை கொட்டி சிரித்துக் கொண்டிருந்தான் கமல். அவனை பின்னந்தலையில் அடித்து "சிரிக்காதே டா கொன்றுவேன்" என்று மிரட்டினாள் சுனைனா. மற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து என்னவென்று பார்க்க, அபியின் தோளில் ஏறி அமர்ந்து அவன் முடியைப் பிடித்து தலையை முன்னும் பின்னுமாக உலுக்கிக் கொண்டிருந்தாள் வெண்பா.

"பொம்மி... விடுடா... அபி பாவம் ல?" என்று கூறிக்கொண்டே வெண்பாவைத் தூக்கினாள் நேத்ரா.

அதே நேரம் ராம் அந்த அறைக்குள் நுழைய, நேத்ராவிடம் இருந்து ராமிடம் தாவி இருந்தது குழந்தை.

"ராம் ப்பா... இந்த அபி பேட் பாய்... அபிகிட்ட பேசாதிங்க..."

"ஏன் டா செல்லம்? சித்தப்பா என்ன செய்தாங்க?"

"ராம் ப்பாவே டைனோஸர் தூக்கிட்டு போச்சு சொல்லிட்டாங்க..." என்று ஏதோ அந்த டைனோஸரிடம் இருந்து காப்பாற்றுவது போல் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு கூறிட,

குழந்தையை சமாதானம் செய்திட ராமும் அவளை அணைத்துக் கொண்டு, "டைனோஸர் வந்தா அபி சித்தப்பாவ பிடிச்சு கொடுத்திடலாம்... சரியா?" என்றவுடன், அபியைப் பார்த்து கொன்னை வைத்துக் காட்டினாள் வெண்பா.

"குட்டிம்மா நீ தானே மொதோ என்னை டைனோஸர் கிட்ட பிடிச்சு கொடுத்திடுவேனு சொன்னே... அதனால தானே சித்தப்பா அப்படி சொன்னேன்..." என்று அபியும் குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்.

நேத்ரா இடுப்பில் கைவைத்துக் கொண்டு வெண்பாவின் முன்னே வந்து நின்று "டைனோஸர் வந்தா உன்னையும் ராம் ப்பாவையும் சேர்த்து பிடிச்சு தரேன் பார்... எப்போ பாத்தாலும் அபியை அடிக்கிறதும், கடிச்சு வெக்கிறதும்... அட்டூலியம் பண்றே டீ..." என்று திட்டிட,

"டேய் சோட்டூ... இனி வெண்பாகுட்டிய வம்பு செய்தேனா அவளுக்கு கிடைக்கிற பனிஸ்மெண்ட் தான் உனக்கும்... உன்னால வெண்பா திட்டு வாங்கினா நீ என்கிட்ட அடி வாங்குவ சொல்லிட்டேன்.. " என்று ராம் அபியை மிரட்டிவிட்டு,

"குட்டிம்மா நீங்க குட் கேர்ள் தானே... இனிமே சித்தப்பாவ அடிக்கக் கூடாது... ஓகே" என்ற இருவருக்கும் சமாதான உடன்படிக்கை செய்து வைத்தான்.

காலை உணவை முடித்துக் கொண்டு ராம், நேத்ரா மற்றும் வெண்பா மூவரும் ஊர் சுற்றப் புறப்பட்டனர். முதலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, அம்மையப்பனை தரிசித்துவிட்டு, அடுத்ததாக நகைக்கடை அழைத்துச் சென்றான். அதனையடுத்து மதிய உணவை வெளியேயே முடித்துக் கொண்டு, வெண்பாவை wallabies kids park அழைத்துச் சென்றான். எல்லாம் முடித்து மாலை தாண்டியே வீட்டிற்கு வந்து சேர்ந்திட, லட்சுமணன், மலையரசியிடம்

"உன் பேரன் செயலை நல்லா பாத்துக்கோ!!" என்று கண்களாலேயே கூறிட, மலையரசியோ வார்த்தைகளை முணுமுணுத்தார்,

"ஆமா... இவரு செய்யாததையா என் பேரன் செய்துட்டான்... சும்மா எதுக்கெடுத்தாலும் தாம்தூம்னு குதிக்கிறாரு கெடந்து... ம்ம்க்கும்ம்ம்" என்று முகவாட்டில் இடித்துக் கொண்டு அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறினார்.

நேத்ரா மிதுன்யாவிற்கும் சுனைனாவிற்கும் ராம் வாங்கிய செயினுடன், தங்கள் கடையில் எடுத்த பட்டுசேலையையும் சேர்த்து கொடுத்து இப்போதே அணிந்து வருமாறு கூறினாள்.

அவளும் தனக்கு ராம் வாங்கிக் கொடுத்த ஆபரணங்களை அணிந்து, அழகுப் பதுமையாக வந்து நின்று பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கிட, முகமலர்ச்சியுடன் வாழ்த்தினார் லட்சுமணன்.

ஆனாலும் மலையரசியிடம், "ஏதோ நான் செய்யாததையா செய்றானு கேட்டேல, நான் என்னைக்கு உனக்கு மட்டும் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கேன் சொல்லு..." என்று அவர் தன் வாக்குவாதத்தை ஆரம்பித்த மறுநிமிடம், சுனைனாவும், மிதுன்யாவும் அறைக்குள் நுழைந்தனர்.

"தாத்தா..." என்று ஓடிவந்து ஆளுக்கு ஒருபுறம் அமர்ந்து கொண்டு, தாத்தனிடம் தன் மச்சான் வாங்கித்தந்த சேலையையும், செயினையும் காண்பித்து புகழாரம் பாடினர்.

சிறிது நேரத்தில் பூங்கொடி மற்றுமொரு பெட்டியுடன் வந்து தன் மாமியாரிடம்,

"இது அமிக்கு வாங்கி வந்திருக்காங்க அத்த... பாருங்க" என்று சேலையையும் செயினையும் எடுத்துக் காண்பித்தார்.

மலையரசியும் அணைத்தையும் பார்த்து தன் பேரனை நினைத்து பூரித்துப் போனார். அதனை லட்சுமணனிடமும் கூறினார்.

"நம்ம பேரன் உங்களை மாதிரி தாங்க... குடும்பத்தை ஒரு போதும் விட்டுக்கொடுக்கமாட்டான். அவனோட சூழ்நிலை அப்படி ஒரு முடிவை எடுக்க வெச்சிருச்சு... ஆனாலும் யாரையும் காயப்படுத்தாம தான் அவன் கல்யாணம் நடந்திருக்கு.

கல்யாணம் ஆன ஒரு பொண்ணு இரண்டாவது கல்யாணம் செய்துக்கிறதுக்கே பல முறை யோசிப்பாங்க தான். அதுவும் நேத்ரா மாதிரி பெண் குழந்தையை வச்சிருக்கிற பொண்ணு நிச்சயம் தயங்க தான் செய்வா... நேத்ரா முன்னாடி குடும்பத்தோடு அவ கால்ல மண்டியிட்டு என் பேரன் ராமை கல்யாணம் செய்துக்கோனு கேட்டிருந்தா கூட அவ நிச்சயம் சம்மதிச்சிருக்கமாட்டாள்.
மனசுக்குள்ள ஆசைய வெச்சுகிட்டு ராம்-காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் அவளே வேற ஒரு பொண்ணையும் பார்த்து கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்கானா அவளுக்கும் மனசுல எவ்வளவு வலி இருந்திருக்கும். அத்தனையும் ராம் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு தானே செய்தா... நாளைபின்ன ராமை யாரும் ஒரு வார்த்தை தப்பா பேசிடக் கூடாதுனு தானே செய்தா... அந்த பொண்ணை விட ராமுக்கு வேற நல்ல பொண்ணு கிடைச்சிருக்கமாட்டா... இப்போ இந்த கல்யாணம் நடந்ததுல அந்த பொண்ணு நேத்ராவும் சந்தோஷமாத் தானே இருக்கா...
அமியும் ஆரவ்வும் கூட ரெம்ப சந்தோஷமாத் தான் இருக்காங்க...நீங்க உங்க கோபத்தை கொறைச்சி கொஞ்சம் இறங்கி வரலாமே!!! நமக்கு நம்ம பேரபுள்ளைங்க சந்தோஷத்தை விட வேற என்ன வேணும் சொல்லுங்க..." என்று தன் பேரன் பக்க நியாயதத்தை எடுத்துக் கூறினார்.

"உன் பேரன் என்னை நெருங்கி வர நல்லவே வழி தெரிஞ்சு வெச்சிருக்கான். அவனுக்காக நீயும் நல்லாவே தான் சிபாரிசு செய்றே... வாசல்ல நிக்கிறவனை உள்ளே வரச் சொல்லு" என்று கூறி சாய்வு நாற்காலியில் வசதியாக சாய்து அமர்ந்து கொண்டார்..."

அறை வாசலில் நின்றிருந்தவனோ... "தாத்தா... நீங்க கேடிக்கும் கேடி... நான் வெளியே தான் நிக்கிறேனு கண்டுபிடிச்சுடிங்களே..." என்று கூறிக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தான்.

"ராம் நீ நேத்ராவை கல்யாணம் செய்துகிட்டது எனக்கு சந்தோஷம் தான். ஆனால் என் கோபம் எல்லாம் இது தான் உன் ஆசை... உன் கல்யாணம் இப்படி நடக்கவும் வாய்ப்பிருக்குனு எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்... எல்லார் முன்னாடியும் நம்ம குடும்பம் தலை குனிஞ்சு நின்றுக்காது. நல்ல வேலை இந்த அவமானம் வாரணாசில நடக்கலே... சரி சரி நாளைக்கு நாங்க எல்லாம் ஊருக்குப் போறோம். நீயும் ஆரவ்வும், ஒரு வாரத்துல வந்து சேருங்க..." என்று தன் கோபம் எதனால் என்பதை தன் பேரனிடமே நேரடியாகத் தெரிவித்து, தான் மன்னித்துவிட்டதை மறைமுகமாகக் கூறியிருந்தார்.

லட்சுமணன் தன்னிடம் பேசிவிட்டார் என்ற சந்தோஷத்தில் வெண்பாவைத் தூக்கிக் கொண்டு விசிலடித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்திட, நேத்ரா ராமின் ஆடைகள் சிலவற்றை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டவுடன் தன் முதல் திட்டமாக வெண்பாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

"குட்டிம்மா... தனியா விளையாட பாப்பாவுக்கு கஷ்டமா இல்லேயா டா!!!"

"எனக்கு வியாட பார்பி... டெடி... மைமி... அம்மா... தாத்தா... மிது சித்தி... சுனோ சித்தி... சோட்டூ... எல்லாரும் இருக்காங்களே..." என்று யோசித்து யோசித்து தலையை ஆட்டிக் கூறியவளைக் கண்டு செல்லமாக முறைத்தான் ராம்.

நேத்ராவோ தன்னவனின் தந்திரம் பலிக்காமல் போனதில் வாட்ரோப்பிற்குள் தலையை விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

"எல்லாரும் இருக்காங்க தான்... இருந்தாலும் பார்பி டால் மாதிரி டாலி பேபி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்..." என்று ஆசை காண்பிப்பது போல் கூறினான்.

"நோ ப்பா... டால் தான் நல்லா இருக்கும். அதை தான் நானே குளிக்கவெச்சி, தலைசீவி, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட மிடியும்... டாலி பேபிய எனக்கு தூக்கவே தெரியாதே..." என்று வருத்தமாகக் கூறினாள் சிறுமி.

"டாலி பேபி பேச ஆரம்பிச்சதும் வெண்பா குட்டிய அக்கா, அக்கானு கொஞ்சிக் கொஞ்சி சுத்தி வரும்..." என்றிட, வீரிட்டுக் கத்தினாள் வெண்பா...

"நான் தான் பேபியா இருப்பேன்... நான் அக்கா ஆகக் கூடாது... நான் பேபியா தான் இருப்பேன்..." என்று கத்திட, நேத்ராவிற்கு அப்பாடா என்றிருந்தது.

"ஓகே... வெண்பா குட்டிக்கு டாலி பேபி வேண்டாம்... இப்போ கொஞ்ச நேரம் விளையாடுங்க... டின்னர் ரெடியானதும் சாப்பிட்டு தூங்கலாம்... சரியா..." என்று வெண்பாவை சமாதானம் செய்திட, சிறுமியும் சந்தோஷமாக ராமைக் கொஞ்சிவிட்டு விளையாடச் சென்றாள்.

இன்னும் வாட்ரோப்பிற்குள் மூழ்கி இருந்தவளை பின்னாள் இருந்து அணைத்து, "என்ன நேத்ரா மேடம்... வெண்பாவை விட நீங்க தான் ரெம்ப ஹாப்பி போல!!!" என்று கூறிக் கொண்டே கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

ஒரே நாளிலேயே அவனின் தொடுகையை ஜீரணித்து தான் ஆக வேண்டும் என்று தன்னைத் தானே தயார் செய்து கொண்டவளுக்கு நடுக்கம் ஓரளவு குறைந்திருந்தது.

ஆனாலும் மனம் பந்தயக் குதிரை போல் ஓடிட, அவனின் நேத்ரா மேடம் என்ற அழைப்பு அதனை இரட்டிப்பாக்கியது.

"ரெம்ப நாள் வெய்ட் பண்ண முடியாது டீ... நீயாவது கொஞ்சம் சீக்கிரம் மனசு மாறேன்..." என்று இன்னும் அவள் கழுத்திலிருந்து இதழ் பிரிக்காமல் கூறிட, பெண்ணவள் மயிற்கூச்சமேறி அவனுள் கரையத் தொடங்கினாள்.

"ராம்... உங்களுக்கு நான் யாரு ராம்?" என்று தன்னையும் மறந்து வினவிட,

"உன்கிட்ட என் காதலை சொன்ன நாளிலிருந்து நீ என் பொண்டாட்டி தான் டீ..." என்ற பதிலில் மிரண்டு விழித்து அவன் முகம் காண முயற்சித்தாள்.

-ஊடல் கூடும்​
 
Top