• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
எப்போதும் தன்னை 'மிதுன்குட்டி' என்று செல்லமாக அழைத்திடும் தாத்தா இன்று முழுப்பெயர் சொல்லி அழைத்திடவும் கொஞ்சம் பதறியவளாய் தாத்தாவின் அருகே வந்தாள்.

வரவேற்பறைக்கு வந்த மிதுன்யா அங்கு அமர்ந்திருப்பவனைக் கண்டு அதிர்ந்து தன் வெற்றுக் கழுத்தில் அனிச்சையாக கைவைத்தபடி நின்றாள்.அவளின் பாவனைகளை எதிரில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் கண்டார் லட்சுமணன்.

தாத்தாவின் அழைப்பில் இருந்த வித்தியாசம் ராமின் அறைக்கும் எட்டிட குளியளறையில் இருந்து அரக்கப்பரக்க ஓடிவந்தான் ராம்.

பவனைக் கண்டவுடன் மூண்ட கோபத்தை, தாத்தாவின் முன் காண்பிக்க முடியாமல் கைவிரலை மடக்கி பற்களைக் கடித்து அடக்கிக் கொண்டு மிதுன்யாவின் அருகில் நின்றான். பேரனின் செய்கைகளையும் அந்த ஆளுயரக் கண்ணாடியில் கண்டு கொண்டார் லட்சுமணன்.

ஆரவின் மூலம் சுஷேண் மற்றும் குந்தவிக்கு விஷயம் தெரிவிக்கப்பட அரைமணி நேரத்தில் வந்துவிடுவதாகக் கூறினர்.

"இதோ பாரு தம்பி நீ சொன்ன விஷயம் விளையாட்டு இல்லே. நீ பொய் சொல்லிருந்தேனு தெரிஞ்சது வை முழுசா ஊர் போய் சேரமாட்டே. நியாபகம் இருக்கட்டும்" என்றார் லட்சுமணன்.

மெல்லிய புன்னகையுடன் மிதுன்யாவைப் பார்த்து "உண்மையா இருந்தா உங்க பேத்தி சம்மதிக்கலேனாலும்..... என் கூட அனுப்பி வைப்பிங்களா?" என்றான்.

அவனின் திடகார்த்தம் புரிந்திட மிரட்டி விரட்டிடும் நோக்கத்தில் "உண்மையா இருந்தா உன் உடம்புல உயிர் இருக்காது" என்று முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு கூறினார்.

இப்போதும் புன்னகை மாறாமல் "உங்ககிட்ட வீடு தேடி வந்து கேட்டா இல்லேனு சொல்லமாட்டிங்கனு சொன்னாங்க!!???..." என்றான் கேள்விக்குறியாக,

"பொருளைக் கேட்டா இல்லேனு சொல்லாம கொடுக்கலாம். நீ கேட்டது எங்க வீட்டு பொக்கிஷம்..." என்று பதில் கொடுத்தார்.

இரண்டு புருவங்களையும் உயர்த்தி, தன் அழுத்தமான உதடுகளை வளைத்து, ஒரு நொடியில் முகத்தில் பெறுமிதத்தைக் காண்பித்தான்.

"ஆனா இப்போ அந்த பொக்கிஷம் என்னோட சொந்தம்..."

அடுத்த நொடி லட்சுமணனிடம் இருந்து பதில் வந்தது "தம்பி நீங்க ரொம்ப அவசரப்படுறிங்க. முடிவெடுக்க வேண்டியவ இன்னு அமைதியாத் தான் இருக்கா. அவளுடைய அம்மா அப்பாவும் வரட்டும்..." என்றவர் எழுந்து நின்று மலையரசியிடம்,

"வீட்டுக்கு வந்தவங்களை கவனி" என்று கூறி உள்ளே செல்ல எத்தனிக்க,

பவனோ மலையரசியைப் பார்த்து "இப்போ எதுவும் வேண்டாம் பாட்டியமா... மதியத்துக்கு மாப்பிள்ளை விருந்தே சாப்பிடுறேன்." என்று துடுக்குடன் கூறினான்.

லட்சுமணன் நின்று அவனை முறைத்துவிட்டுச் சென்றார். செல்லும் முன் மிதுன்யாவை தன்னுடன் வருமாறு கண்ஜாடை செய்திட அவள் தலைகவிழ்ந்து நின்றாள்.

பவனை நோக்கிச் சென்ற ராமின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தாத்தாவுடன் சென்றாள் மிதுன்யா. அதனைக் கண்ட பவனிற்கு கோபமும் பின் சிரிப்பும் ஒரு சேரத் தோன்றி மறைந்தது.

தாத்தாவின் கோபத்தை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தவர்களுக்குக் கிடைத்தது அதிர்ச்சியே... கலங்கிய கண்களும் பொலிவிழந்த முகமுமாக அப்போதும் கம்பீரம் குறையாது பின்னால் கைகளைக் கட்டி தலையை நிமிர்த்தி நின்றிருந்தார் லட்சுமணன்.

"ஏன் என்கிட்ட சொல்லாமவிட்டிங்க? இந்த விஷயத்தை கேள்விப்பட்டா இந்த கிழவன் செத்துடுவான்னு நெனைச்சு மறச்சுட்டிங்கலா?"

"என்ன பேசுறிங்க தாத்தா!!! அவன்லா ஒரு ஆளுன்னு நடுவீட்ல உக்கார வெச்சி அவனுக்கு மரியாதை கொடுக்குறிங்க. அவன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து எங்க இரண்டு பேரையும் நிக்க வெச்சி கேள்வி கேட்குறிங்க. நம்ம குடும்பத்துல எல்லார் மனசும் கஷ்டப்படுமேனு தான் இந்த விஷயத்தை சொல்லலே. அதுவும் இல்லாம மிதுனைத் தான் ரெம்ப கஷ்டப்படுத்தும். மத்தபடி இது தேவையில்லாத விஷயம் தாத்தா..."

"எது டா தேவையில்லாத விஷயம்?...அந்தப் பயலைப் பாத்தவுடனே 'தாத்தா இவனை வெளிய போகச் சொல்லுங்கனு' என் பேத்தி எனக்கு கட்டளை போட்டிருந்தா இப்போ அவன் இப்படி உக்காந்து எகத்தாளம் பேசிருக்க முடியுமா!!!??.

இன்னமும் இவ ஒரு வார்த்தை வாயத் தெறக்கிறாளா பார்...
போறவன் வரவன் வார்த்தை எல்லாம் நம்பி என் பேத்திய கேள்வி கேட்க எனக்கு என்ன புத்திசுவாதியம் இல்லைனு நெனச்சியா?... பேச வேண்டியவங்க பேசியிருந்தா நான் ஏன் உங்களை கூப்பிட்டு கேக்கப் போறேன்..." என்று வருத்தமும் கோபமுமாக மிதுன்யாவைப் பார்த்து உரைத்தார் லட்சுமணன்.

கண்ணீர் கோடுகள் கன்னத்தில் தடம் பதித்திருந்தாலும் விசும்பலோ அழுகை சத்தமோ இல்லாமல் தன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து காலர் நெக் சுடிதாருக்கு மேல் வைத்தாள்.

அதனைக் கண்ட ராம் "இன்னும் நீ இதை கழட்டி எரியலேயா!!!" என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.

மிதுன்யாவை மதுரையில் இருந்து வாரணாசி அழைத்து வந்த அன்றே காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் கங்கைக் கரைக்கு அவளை அழைத்துச் சென்று, திருமாங்கல்யத்தை தண்ணீரில் விட்டுவிட்டு தலைமுழுகச் சொல்லியிருந்தான் ராம்.
அவன் கூறியது போல் மூன்று முறை மூழ்கி எழுந்தவள் கழுத்தில், மாங்கல்யம் இல்லை என்பதைப் பார்த்தப் பிறகு தான் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

ஆனால் இரண்டு வாரங்கள் கடந்தும் தன்னையும் ஏமாற்றி வீட்டிலும் யாருக்கும் தெரியாதபடி மறைத்து வைத்திருக்கிறாள் என்றாள் அதற்கு என்ன அர்த்தம் என யோசித்தான் ராம்.

அப்போது அங்கே வந்த சுஷேண் மற்றும் குந்தவி அவள் கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தைப் பார்த்து அதிர்ந்து நிற்க, குந்தவி தன் மகளை முடிந்த மட்டும் அடி பின்னியேடுத்தார்.

குறுக்கேப் புகுந்து சுஷேணும், ராமும் தடுத்திட குந்தவியின் மனம் அமைதியடைவதாக இல்லை. மீண்டும் அவளை அடித்திட

"போதும் குந்தவி...." என்ற லட்சுமணனின் குரலில் அவரிடம் தஞ்சம் அடைந்தார் குந்தவி.

"இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறாளே ப்பா!!!" என்று அவரின் தோளில் சாய்ந்து அழுதிட,

"உனக்கு இருந்த தைரியமும் நம்பிக்கையும் உன் பொண்ணுக்கு இல்லேனு நினைக்கிறேன். நீ முறையா இவரை விரும்புறேன். இவரைக் கல்யாணம் செய்து வைங்கனு எங்ககிட்ட கேட்டு எங்க சம்மதத்தோட கல்யாணம் செய்துக்கிட்டே... ஆனால் உன் பொண்ணு கல்யாணம் செய்துக்கிட்ட பின்னாடி சம்மதமா இல்லயானு ஆள்விட்டு மிரட்டுறா..." என்றார்
விறக்தியாக...

தாத்தாவின் கூற்றை முதலில் மறுக்க நினைத்த மிதுன்யா பின் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து மீண்டும் அமைதி காத்தாள். மறுப்பதற்கு வாய் திறந்த ராமையும் இழுத்து தன் கைப் பிடிக்குள் வைத்து வேண்டாம் என தலையசைக்க, அவளின் ஒவ்வொரு செயலிலும் ராம் தான் குழம்பி நின்றான்.

லட்சுமணனின் எண்ணம் எல்லாம் மிதுன்யாவும் விரும்புவதால் தான் பவன் இவ்வளவு தின்னக்கமாக நடுவீட்டில் அமர்ந்து 'மாப்பிள்ளை விருந்து ரெடியாகட்டும்' என்று கூறியிருக்கிறான் என்றே நினைத்தார்.

சுஷேண் மிதுன்யாவின் அருகில் வந்து "நீயும் அந்த பையனும் ஒருதருக்கு ஒருத்தர் விரும்புறிங்களா டா?" என்று கனிவாகக் கேட்டிட, பொய் கூறமுடியாமல் தவித்தாள் பெண்ணவள். மீண்டும் அமைதி எனும் ஆயுதத்தைக் கையால் எடுத்தாள்.

"இல்லேனு சொல்லேன் டி"... என்ற ராமின் கத்தலுக்கு கொஞ்சமும் வளைந்து கொடுத்தாலில்லை பெண்ணவள்.

ஒன்றன்பின் ஒன்றாக தன் குடும்ப உறுப்பினர் அனைவரும் அங்கே வந்து குழுமிவிட்டிருந்தனர். ஏறிட்டுப் பார்க்க அவளுக்கு துணிவு இல்லாவிட்டாலும் அனைவரின் பார்வையும் தன்மேல் படிந்திருப்பதை உணர்ந்தாள்.

அனைவரும் தன் வாய்மொழி வார்த்தைக்காகத் தான் காத்திருக்கின்றனர். 'ஆம்' என்று சொன்னால் மட்டுமே தான் நம்புவார்கள் என்று புரிந்திட,

"என்னை மன்னிச்சிடுங்க... நான் அவரை விரும்புறேன். இது ராம் மச்சானுக்கும் தெரியாது." என்று தன் மனதை கல்லாக்கிக் கொண்டு பொய் உரைத்திட இறுதியில் தன் பார்வையை ராமின் மேல் வைத்துக் கெஞ்சினாள்.

அவள் அழுவதைக் காணப் பொறுக்காமல் பாரி தன் மகனிடம், "மிதுனை அவ ரூமுக்கு அழச்சிட்டுப் போடா" என்றதும் கீ கொடுத்த பொம்மை போல் தந்தை சொன்னதை செய்தான்.

பெரியவர்கள் அடுத்து என்ன செய்வது என கலந்துரையாட, ராம் அவளை அவள் அன்னை தந்தை வந்தால் தங்கிக் கொள்ளும் அறைக்கு அழைத்துச் சென்றான்.

"ஏன் டீ இப்படி பொய் சொன்ன?"

"நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்தேன் ராம்." என்றாள் அழுத்தம் திருத்தமாக,

"முட்டாள்.... என்ன டி யோசிச்சு முடிவெடுத்த... இப்படி நம்ம குடும்பத்துக்கிட்ட பொய் சொல்லி அவன் கூடப் போய் வாழனும்னு உனக்கு என்ன டி தலையெழுத்து.... மிதுன், நான் இருக்கேன் டி உனக்கு... உன்னை எப்பவும் சந்தோஷமா வெச்சிப்பேன் டி. நான் சொல்றதை கேளு டி" என்று கத்தலில் ஆரம்பித்து இறைஞ்சும் குரலில் முடித்தான்.

"ராம் பையா ப்ளீஸ், நான் நமக்காகவும் தான் இந்த முடிவு எடுத்தேன்" என்று அடிக்குரலில் கெஞ்சினாள்.

அவளின் ராம் பையா என்ற அழைப்பில் சிலையாகி நின்றான் ராம்.

-ஊடல் கூடும்​
 
Top