• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 11

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 11

"காட் பிளெஸ் யூ ஆதி! வெல் டன்! ஐ க்நோ யூ டெசர்வ் இட்! ஐம் வெரி ப்ரௌட் ஆப் யூ!" ராஜசேகர் ஆசிர்வதிக்க, மெல்லிய புன்னகையுடன் கையில் இனிப்புமாய் அவர் முன் நின்றிருந்தான் ஆதி.

"ப்பா! ஜஸ்ட் கால் லெட்டர் தானே? வேலைக்கு ட்ரை பண்ணினா எப்பனாலும் வர்றது தானே? அதுக்கு ஏன் இவ்வளவு சந்தோசம்?" முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுபத்ரா கேட்க,

"சுபாம்மா! ஜஸ்ட் கால் லெட்டரா அது? ஆதியோட பெர்சிஸ்டன்ஸ்.. எவ்ளோ நாள் ட்ரை பண்ணிட்டு இருக்கான்.. உனக்கு தெரியாதா என்ன?" ராஜசேகர் கூற,

"வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு டி உனக்கு!" என்று வந்த சந்திராவின் கால்களிலும் விழுந்து எழுந்தான் ஆதி.

"நானும்!" என அப்போது தான் கவனித்த மதுவும் பாட்டியின் காலில் விழுந்து எழ, அவளை தூக்கிக் கொண்ட ஆதி,

"ஆதிப்பா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சொயிங்!" என பறக்க போவதாய் சொல்லிக் காட்ட, அதற்கும் நானும் என்று தான் குதித்தாள் மது.

"எப்ப டா ஜாயின் பண்ணனும்?" என்று வந்தான் உதயன்..

"இன்னும் ஒன் மந்த்ல வர சொல்லி இருக்காங்க வித் ஜாய்னிங் டேட்.." என்ற ஆதி,

"மது பர்த்டே வருதே! அதை முடிச்சுட்டு கிளம்பலாம்னு இருக்கேன்!" என்றான்.

"ஹ்ம்ம்!" என்றதோடு சரி உதயன்.

வளர்மதி "கங்கிரட்ஸ்" என்றதோடு சரி.

"மது தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவா ஆதி!" சந்திரா கூற,

"மது மட்டும் தானா அத்தை?" என்றவன் சுபத்ராவைப் பார்க்க, அவள் இவனை பார்க்காததைப் போல அமர்ந்திருந்தாள்.

"நாங்களும் தான்.. நீ இல்லைனா இந்த வீடு எப்படி இருக்கும்னு இப்பவும் என்னால நினச்சுப் பார்க்க முடியல!" என்றதும் என்னவோ போல ஆகிவிட,

"நான் மட்டும் உங்களை எல்லாம் மிஸ் பண்ண மாட்டேனா? அதை தான் சொன்னேன்.. தினமும் இந்த வீட்டுல நடக்குறது எனக்கு அப்டேட் வரணும்"

"பேசாம இருக்க முடியுமா? கண்டிப்பா!" என்று கூறி சந்திரா உள்ளே செல்ல,

"மதும்மா! ஆதிப்பா பேட்லி உன்னை மிஸ் பண்ண போறேன்.. பேசாம நீயும் வர்றியா?" என்றதும் சுபா இவர்கள் பக்கம் முறைத்துக் கொண்டு திரும்ப,

"வேற யாரும் வரணும்னு ஆசைப்பட்டா கூட வரலாம்..!" என்றான்.

அரங்கேற்றம் அன்று அவளிடம் காதலைக் கூறியதோடு சரி, அவள் விருப்பம் கூட இதுவரை இந்த இரண்டு மாதங்களில் ஆதி கேட்டுக் கொள்ளவில்லை.

ஆனால் சுபத்ரா தயாராய் இருந்தாள் தன் விருப்பத்தை கூற. ஒவ்வொரு நாளும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அதை கூற நினைக்க, ஆதி கேட்டால் தானே?

முன்பு இல்லாத ஒன்று அவன் கண்களில் மொத்தமாய் தன் மீதான நேசத்தைக் கண்ட நொடி பெரிதாய் ஒரு மாற்றம் அவளுனுள்.

கூடவே அவன் கூறிய வார்த்தைகள் வேறு அவ்வபோது காதுகளில் ஒலித்து இம்சிக்க, காரணமானவன் கண்டு கொண்டானே தவிர, வேண்டுமென்றே கேளாமல் தவிக்கவும் விட்டுக் கொண்டிருந்தான்.

இந்த நிலையில் வெளிநாடு செல்ல வேறு எல்லாம் தயார் என்ற நிலையில் காதல் கொண்டவள் கூடவே கோபத்தையும் சேர்த்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் எப்பொழுதும் போல வந்தா ஆதி அமர்ந்து பேப்பரைப் பார்த்துக் கொண்டிருக்க, அருகே டைனிங் டேபிளில் வந்து சாப்பிட அமர்ந்தான் உதயன்.

சுபத்ரா வந்து பரிமாறிக் கொண்டு இருந்தாள்.

"மது பர்த்டேக்கு என்ன பிளான்?" உதயிடம் ஆதி கேட்க,

"போன வருஷம் நீயும் சுபாவும் தானே ப்ளன் பண்ணீங்க? நீங்களே பண்ணுங்க!" என்றான் வெகு சாதாரணமாய்.

"ஆனா மது உன்னோட பொண்ணு!" என்று ஆதி அழுத்தமாய் கூற, நிமிர்ந்து தம்பியைப் பார்த்தான்.

"நான் இன்னும் ஒரு மாசம் தான் இங்க இருப்பேன்.. அப்புறம் மது? எனக்கு என்னவோ பயமா இருக்கு மதுவை உங்களோட.. உன்னோட விட்டுட்டு போக.. ஆனா உனக்குன்னு சில ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கு..!" ஆதி கூற, சுபத்ராவும் அந்தப் பேச்சைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

"என்ன பண்ண சொல்ற?" உதய் கேட்க,

"எல்லாமே சரி ஆகணும்! எனக்கு அது தான் வேணும்.. நார்மல் பேரண்ட்ஸ்ஸா நீங்க ரெண்டு பேரும் மதுவுக்கு வேணும்.. அவ வளந்துட்டு வர்றா உதய்!"

"உஃப்!" என்ற உதய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டான்.

"நான் மட்டும் நினச்சா எல்லாம் நடந்துடாது..!" என்றவன் உடனே கிளம்பிவிட, ஆதி சுபாவைப் பார்த்தான்.

அன்றே வளர்மதியிடமும் பேசிவிட்டாள் சுபத்ரா.

"என்னை என்ன பண்ண சொல்ற? பர்த்டேக்கு எதாவது வாங்கணுமா? நீயே வாங்கிட்டு வா.. கார்டு வேணுமா?" என்றாள் பெற்றவள்.

"க்கா! நீ அவ அம்மா! ஏன் இப்படி இருக்க?" ஆதங்கமாய் சுபத்ரா கேட்க,

"ப்ச்! இதையே இன்னும் எவ்வளவு நாள் சொல்லுவீங்க? எனக்கு என்னோட சந்தோஷமும் முக்கியம்.."

"ஆனா நீ உன்னோட சந்தோசம் மட்டும் தான் முக்கியம்னு நினைக்குற.. ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு!"

"எனக்கு எதுவும் தேவை இல்ல.. என்னை தனியா விடுங்க.. ஆல்ரெடி ஏகப்பட்ட ப்ரோப்லேம்ஸ்!" என்றவளுக்கு நிஜமாய் அத்தனை பிரச்சனைகளும் இருக்க தான் செய்தது.

திருமணமான பெண் தனக்கான தனிமையை வேண்டுவது நியாயம் தான் என்றாலும் அது எந்த அளவிற்கு என்று ஒரு விகிதம் இல்லாமல் இல்லையே!

தன் குடும்பத்தை விட்டே ஒதுங்கிக் கொண்ட வளர்மதி தன் ஆண் நண்பனிடம் அன்றாட நிகழ்வுகளை பகிர ஆரம்பித்து இருக்க, முதலில் தன்னுடைய அமைதிக்காக ஆரம்பித்தவளுக்கு நாளடைவில் அது அன்றாட வழக்கத்தில் கலந்த ஒன்றாக மாறி போனது.

இப்பொழுது அதுவே அவள் கழுத்தை நெறிக்கவும் ஆரம்பிக்க, தலையைப் பிய்த்துக் கொண்டு தான் சிக்கி இருந்தாள்.

இவ்வளவு நடந்தும் கூட அதற்கான காரணம் என்ன என்பதை கொஞ்சமும் ஆராய முற்படவில்லை அவள்

நண்பனாய் பழகியவனுக்கு தான் கொடுத்த இடம் அவனை அத்துமீற வைத்திருக்க, நினைத்த நேரம் நினைத்த இடத்திற்கு வர சொல்லி பேசி பேசி அவளை தன்வசம் கொண்டுவர முயற்சிக்க, அது வளர்மதிக்கு ஒரு விலங்கிடம் விடுபட்டு இன்னொரு விலங்கிடம் சீக்கியதாகவே மனதில் நின்றது.

இதையும் அவள் கமிட்மென்ட் என்ற பெயர் வைத்து அது வேண்டாம் என்ற முடிவுலேயே நிறுத்தி வைக்கப் பார்க்க விளைவு புரியவில்லை அவளுக்கு.

பேசிவிட்டு வந்தவள் முகம் பார்த்தே ஓரளவு புரிந்து கொண்ட ஆதிக்கு அடுத்து என்ன என்று தான் தெரியவில்லை.

மதுவை நிஜமாய் அப்படியே விட்டு செல்ல மனமில்லை.

சுபத்ரா, தாத்தா, பாட்டி என இருக்கும் பொழுதும் வளர ஆரம்பிக்கும் பெண்.. அடுத்து பள்ளி என வரும் பொழுது ஒவ்வொன்றிருக்கும் தாய் தந்தையை தேடும் தானே?

"அவங்க மாறுவாங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை தேவா!" சுபா அவளே கூற,

"ஹ்ம்! எனக்கும் கூட அதான் தோணுது.. ஆனா என்ன பண்றதுன்னு தான்.." என்றவன்,

"ஓகே! யோசிப்போம்! மது எங்க?" என்று கேட்க,

"அப்பா கூட மேல ரூம்ல!" என்றதும்,

"ஹ்ம்! சரி நான் கிளம்புறேன்!" என்று எழுந்து திரும்பியவன், மனதில் தோன்றிய சந்தேகத்தில் புருவங்கள் முடிச்சிட ஒரு நொடி நின்றவன் சட்டென அவள்புறம் திரும்பி,

"ஆமா இப்ப என்ன சொன்ன?" என்று கேட்க,

"ஹான்! ஒன்னும் சொல்லலையே!" என்றாள் நிஜமாய் என்ன என்று தெரியாமல்.

"ஆனா எனக்கு தெரியுமே!" என்றவன் குரலில் உல்லாசம் தெரிய, சற்றுமுன் இருந்த மனநிலை இருவருக்குமாய் மாறியது.

"தேவா! ஹ்ம் நைஸ் நேம்!" என்றதும் தான் அதிர்ந்த பார்வை பார்த்தவள் மானசீகமாய் தலையில் குட்டிக் கொள்ள,

"மைண்ட் வாய்ஸ் சத்தமா வந்துடுச்சு போலயே!" என்றவன்,

"இப்பவும் கூட சொல்ல தோணலையா?" என்று ஆழ்ந்த பார்வையுடன் கேட்க, அதில் புரிந்தவளோ,

"யூ! யூ! அப்ப தெரிஞ்சுட்டு தான் பேசவே இல்லை இல்ல?" என்றாள் கோபமாய்.

"ஆமா! நானும் தான் வெயிட் பண்ணினேன்.. நீ பேசினியா என்ன?" என்று பதிலுக்கு கேட்க, முறைத்து நின்றவளிடம் பதில் இல்லை.

"ஆனா எனக்கு உன் பதில் எல்லாம் தேவையே இல்லை.. சீக்கிரமே வருவேன் அப்ராட் போய்ட்டு.. ரெடியாகிக்கோ!" என்றவன் கிளம்ப தயாராக,

"நான் வர மாட்டேன்!" புன்னகையை மறைத்து அவள் கூற,

"அதை நான் பார்த்துக்குறேன்!" என்றவன் சென்றுவிட்டான் மனம் நிறைந்து.

இதமான மனநிலையில் காலை விடைபெற்றவர்கள் மாலையில் சந்திக்கும் நேரம் அப்படியே இருந்திருக்க கூடாதா என்பதாய் தான் இருந்தது.

இல்லை என்றாலும் இருந்த கொஞ்ச நிம்மதியையும் பறிக்கும் விதமாய் இருந்திருக்க வேண்டாம்.

சந்திரா மென்மையானவர் எளிதில் உடைந்து போவார் என்ற போதும் ராஜசேகர் என்றும் இப்படி இடிந்து அமர்ந்தது இல்லை.

அன்று தான் மகள்கள் தந்தையை அந்த விதமாய் காணும் நிலை வந்தது.

உதயன் வீட்டிற்கு வந்த சில நிமிடங்களில் எல்லாம் ஒரு பெட்டியுடன் கீழிறங்கி வர,

"கிளம்பியாச்சு!" என சுபத்ரா முணுமுணுக்க, எப்போதும் போல வேலை விஷயமாய் கிளம்பிவிட்டார் என்று அமர்ந்திருந்தனர் ராஜசேகர், சந்திரா கூடவே விளையாடியபடி மதுவும்.

டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து பருகிய உதயன் பேச தயாராய் நிற்க, அது புரிந்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை அவரே பேசட்டும் என்பதைப் போல.

வளர்மதியும் அப்போது தான் வீட்டிற்குள் வந்தவள் அறைக்கு செல்ல போக,

"ஒரு நிமிஷம் வளர்!" என நிறுத்தி இருந்தான் உதய்.

அதிசயமாய் வளர்மதி பார்த்த பார்வையில் சுபத்ராவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல வர, திரும்பிக் கொண்டாள்.

"என்னாச்சு ப்பா?" என தன் தந்தையிடம் வளர்மதி கேட்க,

"நான் உன்னை கூப்பிடவே இல்லையே ம்மா!" என்றவர் பதிலில் பல்லைக் கடித்தவள் கட்டியவன் பக்கம் திரும்ப,

"என்னங்க?" என்றார் சந்திரா கணவனிடம். பொறுமையாய் இரு என்று தலையசைத்தார் கணவர்.

ஏதோ பிரச்சனை என்பதைப் போல இப்போது உள்ளுணர்வு உணர்த்த, ஆதிக்கு அழைத்த சுபா பின் வேண்டாம் பார்த்துவிட்டு கூறலாம் என கட் செய்துவிட்டாள்.

முதன்முதலாய் சுபத்ராவிடம் இருந்து வந்த அழைப்பில் மென்னகையுடன் கிளம்பியவன், வீட்டிற்கு வந்து சேர்ந்த நேரம் கண்டது அதிர்ந்து நின்றிருந்த வளர்மதி, செய்வதறியாமல் நின்ற சுபத்ரா என இறுதியாய் மதுவை ராஜசேகர் உதயன் புறமாய் தள்ளிவிட, அதைக் கண்டும் காணாதவனாய் அண்ணன் உதயன் ஒரு பெண்ணுடன் உள்ளிருந்து வந்தவன் காரில் ஏறி சென்றது தான்.

தொடரும்..