அத்தியாயம் 12
"உதய்! நீங்க வளர் மேல இருக்குற கோபத்துல தானே இப்படி சும்மா சொல்றிங்க?" உதயன் கூறியதில் அதிர்ந்து நின்றவர்களில் முதலில் தெளிந்த ராஜசேகர் இவ்வாறு கேட்க,
"நான் விளையாட்டுக்கோ தேவை இல்லாமலோ இதுவரை பேசியதில்லையே மா..." மாமா என்று கூற வந்தவன் அதை நிறுத்திவிட்டான்.
"அப்ப என் பொண்ணு வாழ்க்கை?" கேள்வியாய் அவர் நிறுத்த, பெருமூச்சை விட்டுக் கொண்டவன்,
"அது என் கையில இல்லை!" என்றவன் மேல் வளர்மதி பார்வை கூர்மையாய் விழுவது தெரிந்தாலும் அதை எதிர்த்து பார்த்திடவில்லை உதயன்.
மொபைலில் யாருக்கோ அழைப்பு விடுத்து வைத்துவிட்டு அவன் நிற்க, சற்று நிமிடங்களில் எல்லாம் நவநாகரீக யுவதி ஒருத்தி வீட்டிற்குள் யார் அனுமதியும் இன்றி வந்து உதயனை ஒட்டி நின்றாள்.
"எனக்கு டிவோர்ஸ் வேணும்!" என்று தான் எடுத்ததும் சொல்லி இருந்தான் உதயன்.
அதற்கே அதிர்ந்து நின்றவர்களுக்கு இப்படி வந்து நின்ற பெண்ணைப் பார்த்ததும் புரிந்து போக,
"அடப்பாவி! ஏன் டா இப்படி பண்ணின? என் பொண்ணோட வாழ்க்கை உனக்கு சாதாரணமா போச்சா? இதுக்கு தான் அடிக்கடி ஊர் ஊரா சுத்துனியா?" என பெற்றவராய் தாங்க முடியாமல் உதயன் சட்டையைப் பற்றி சந்திரா உலுக்க,
"சந்திரா!" என தன் மனைவியை இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வந்த ராஜசேகருக்கும் அதே கோபம் தான்.
"மாமா! என்ன பிரச்சனைனாலும் பேசிக்கலாம்! இது ரொம்ப தப்பு.. பெரிய தப்பு பண்றிங்க!" பொறுமையை இழுத்து பிடித்து சுபத்ரா கேட்க,
"என்ன பேச? நான் எதுவும் தப்பா பண்ணினதா எனக்கு பீல் ஆகவே இல்லையே? எங்க என்னோட இந்த முடிவுக்கு நான் மட்டும் தான் காரணமா இருப்பேன்னு யாராச்சும் சொல்லுங்க!" என்று கேட்டவன் கேள்வியில் அனைவருமே விக்கித்து தான் நின்றனர்.
எத்தனை நிஜம்? அவன் மட்டுமா காரணம் என நினைத்தவர்களின் பார்வை தன்னைப் போல வளர்மதி மீது பாய்ந்தது.
கணவனை கணவனாக என்ன அந்த வீட்டில் ஒருவனாக கூட தினமும் பார்த்துக் கொண்டது இல்லையே!
"நானும் மனுஷன் தான்! இது எங்க எப்படி ஆரம்பிச்சதுன்னு எல்லாம் பேச வேண்டாம்.. சரி வராது! விட்டுடலாம்!" என்றவன் அந்த பெண்ணின் கைகளைப் பற்ற, அங்கே நடப்பது புரியாமல் இருந்தாலும் பயந்து சுபாவைக் கட்டிக் கொண்டு நின்ற குழந்தையை தன் பக்கம் வேகமாய் இழுத்த ராஜசேகர்,
"இவளுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க? விவாகரத்து அடுத்தடுத்த கல்யாணம் எல்லாம் சாதாரணமா போச்சா உங்களுக்கு? என் பொண்ணு மேல் தப்பு இருக்கட்டும்.. அதுக்காக இன்னொரு பொண்ணை தேடி போனா எல்லாம் சரி ஆகிடுமா? இவளுக்கு என்ன பதில்?" என்று ராஜசேகர் கேட்க,
மாதாமாதம் மதுவுக்கான பராமரிப்பு தொகையை அனுப்பும் திட்டம் வைத்திருக்கும் உதயனுக்கு அதை சட்டென்று சொல்லிவிட முடியவில்லை.
"இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை.. இனி எந்த விஷயத்திலும் எனக்கான உரிமைனு நான் வந்து நிக்க போறது இல்லை.. மாசம் மாசம்..." என்றவன் மதுவின் முகம் பார்க்க, சுபத்ராவிற்கு கண்மண் தெரியாத ஆத்திரம் உதயன் மீது.
"ஓஹ்! பெத்த பாவத்துக்கு பணத்தை வீச போறீங்க!" என்றாள் சட்டென்று. அத்தனை பேச்சு வார்த்தையிலும் ஒரு வார்த்தை பேசவில்லை வளர்மதி.
"என்னால அதை தான் செய்ய முடியும்!" உதயனும் வேகமாய் சொல்லிவிட, பெரியவர்களுக்கு மகள் மீதான பாசம் தான் அங்கே முன் நின்றது.
"உதயன் இதெல்லாம் சரி இல்ல! என் பொண்ணுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்!" ராஜசேகர் கூற,
"நான் முடிவு பண்ணிட்டு தான் பேச வந்ததே! பேசி முடிக்கணும்னு தான் வந்தேன்! சட்டப்படி தான் போகணும்னு நீங்க சொன்னா அதுக்கும் எனக்கு சம்மதம் தான்!" என்றவன் வெளியேற தயாராக,
"நில்லு!" என்ற ராஜசேகர்,
"என் பொண்ணு உனக்கு வேண்டாம்னா இவளும் இங்க யாருக்கும் தேவை இல்லை.. என்ற ராஜசேகர் மதுவை உதயன் புறமாய் தள்ளிவிட,
"மது!..." என்று ஓட இருந்த சுபத்ராவையும் கைகளைப் பிடித்தார் அவர்.
சந்திராவிற்கு அப்போதாவது உதயன் யோசிப்பானா என்பது போன்று பார்க்க, மதுவை பார்த்தும் அவளைக் கடந்து அந்த பெண்ணுடன் வெளியே சென்றுவிட்டான் அவன்.
ஆதிப் பார்த்ததும் கேட்டதும் என இறுதியாய் மதுவின் நிலையும் ராஜசேகரின் வார்த்தைகளும் தான்.
ஆதி வந்ததைக் கூட அங்கே யாரும் உணரவில்லை. அழுது ஏங்கிய மதுவை கைகளில் அள்ளிக் கொண்டு வளர்மதி அருகே வந்தாள் சுபத்ரா.
"பாத்தியா! எங்க வந்து முடிஞ்சிருக்குன்னு பாத்தியா? இதுக்கு தானே ஆசைப்பட்ட? உன் சுதந்திரம் இப்ப கிடைச்சுதா? இனி உன்னை யாரும் எதுவும் கேட்க முடியாது போதுமா?" என்று சுபத்ரா கேட்க, ஓடிந்து அங்கேயே அமர்ந்துவிட்டார் ராஜசேகர்.
சந்திரா வாயைமூடி அழுத்தபடி அமர்ந்துவிட,
"எவ்வளவு சொன்னேன்? படிச்சு படிச்சு சொன்னேனே!" என்று சுபத்ரா அழ, வளர்மதியின் பார்வை மதுவிடமே!
"பாரு! உன்னால இந்த பொண்ணோட எதிர்காலத்தை நினச்சுப் பாரு!" என்று சுபத்ரா வளர்மதி கன்னம் பற்ற,
"என் வாழ்க்கை மொத்தமா நாசமா போனதுக்கு முழு காரணம் இவ தான்!" என்று அமைதியாய் கூறியவள் பார்வை சென்ற திசையில் மது நிற்க, விதிர்விதித்துப் போனாள் சுபத்ரா.
ஆதி நின்ற இடத்திலேயே நின்றவன் கை முஷ்டிகள் இறுக நிற்க,
"வளர்!" என எழுந்துவிட்டார் ராஜசேகர்.
"ஆமா ப்பா! சந்தோசமா இருந்தேன்.. உங்களோட இருக்கும் போதும்... அவனை கல்யாணம் பண்ணிக்கிட்ட போதும்.. எப்ப இவ வந்தாளோ அப்ப இருந்து தான் என் வாழ்க்கை இப்படி போச்சு!" என்றவளை அதிர்ந்து சுபத்ரா பார்த்தால் என்றாள் ஆதி விழிகள் கனன்று பார்த்தான் ஆதி.
"இவ வேண்டாம்! இவ வேண்டாம்.. இவ இருக்குற வரை நான் நிம்மதியா இருக்கவே முடியாது.. உன்னால தான்... உன்னால தான் என் வாழ்க்கை மொத்தமும் போச்சு!" என பித்துப் பிடித்தவள் போல மதுவை வளர்மதி நெருங்கியவளை, அடுத்த அடியில் நிறுத்திவிட்டான் ஆதி.
ஆதியின் வரவே அப்போது தான் அங்கே அனைவராலும் உணரப்பட, வளர்மதியின் செயலில் திகைப்பாய் நின்றவர்களுக்கு மூச்சே அப்போது தான் வந்தது.
"அக்கா!" என வளர்மதியைப் பற்றி சுபத்ரா உலுக்க, நிஜமாய் மது பிறந்த நேரம் தானோ என தோன்ற ஆரம்பித்து விட்டது சந்திராவிற்கு.
சந்திராவின் பார்வையில் உணர்ந்தான் அதை ஆதி.
"ஜோசியம் ஜாதகம்னு எதுவுமே பார்க்காம பொண்ணை கட்டிக் குடுத்து இந்த பொண்ணுக்கும் ஜாதகம்...." என்று மதுவை சந்திரா காட்டவுமே சுதாரித்துவிட்டாள் சுபத்ரா. கண்டுகொண்டான் ஆதி. ஆதி மட்டும் அல்லாமல் அனைவருமே தான்.
"உன் வாழ்க்கையை நீயே கெடுத்தது போதாது? அந்த புள்ள பிறந்த நேரம் எப்படி வேணா இருக்கட்டும்.. நீ தானே காதலிச்சு கல்யாணம் பண்ணின? உன்னால வாழ முடியலைன்னா பச்ச புள்ள மேல பழி போடுவியா நீ?" என்று சுபத்ரா கேட்க,
"உனக்கு புரியாது.. சொன்னாலும் தெரியாது.. ஆனா நான் நம்புறேன்.. என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் முழுக்க முழுக்க இவ மட்டும் தான்!" என்று சத்தமாய் வளர்மதி கூற,
"போதும் நிறுத்து!" என்றுவிட்டான் ஆதி.. அங்கிருந்த அத்தனை பேரின் வார்த்தைகளையும் எப்படி இந்த பிஞ்சு மனம் எடுத்துக் கொள்ளும் என்று தான் தவித்தது ஆதிக்கு.
இந்த வயதில் புரியாது தான் ஆனால் பதியும் தானே? நினைவில் இல்லை என்றாலும் நினைவின் ஒரு ஓரத்தில் மங்கலாய் எங்கோ ஒரு மூலையில் அவளுள் அது தங்கிவிட்டால்? நினைக்க நினைக்க கொதித்தது ஆதிக்கு.
"அவன் தான் போய்ட்டான் இல்ல? பச்ச மண்ணுன்னு கூட பார்க்காம அபாண்டமா பேசுறீங்க.. அசிங்கமா இல்ல? அதுவும் அவ முன்னாடியே!" என்றவன் வளர்மதியைப் பார்த்த அதே சுளித்த முகத்தோடு அனைவரையும் காண, அதில் மீண்டும் அதிர்ந்தது என்னவோ சுபத்ரா மட்டும் தான்.
மதுவின் அந்த சிறு குழந்தையின் மனம் படும் பாடு பற்றி அறியாமல் தானும் எவ்வளவு பேசி என அவள் தன்னையே அறைந்து கொள்ள,
"பெத்துட்டா? நீங்க என்ன வேணா பேசலாமா? அவளால தான் உங்களுக்கு வாழ்க்கை போச்சுன்னு நீங்க சொன்னா அவளை பெத்ததே நீங்க தான்னு மறந்து பேசுறீங்க.. என்ன மனுஷி நீயெல்லாம்..." என்றவன்,
"பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் இல்ல?" என்று சந்திராவின் புறம் திரும்பி இருந்தான் ஆதி.
உங்க பொண்ணு நடந்துகிட்ட எதுவும் தப்பு இல்ல.. ஆனா இந்த குழந்தை ஜாதகம் தான் இங்க நடந்த எல்லாத்துக்கும் காரணம்.. அப்படி தானே? " என்று கேட்க, சந்திரா அதில் வாயடைத்து போனார்.
தான் கூறியது எத்தனை பெரிய அபத்தம் என்று அப்போது தான் புரிந்தது.
"கோவத்துல என்ன வேணா பேசுவீங்க இல்ல? உங்க பொண்ணை வேண்டாம்னு சொன்னா குழந்தைன்னும் பார்க்காம தூக்கி வீசுவிங்க இல்ல?" என்று ஆதி ராஜசேகரிடம் கேட்க,
"தேவா ப்ளீஸ்! என்ன நடந்துச்சுன்னு தெரியாம..." என்று சுபத்ரா பேச வர,
"என்ன என்ன நடந்துச்சு? கட்டினவளை விட்டு இன்னொருத்தி பின்னாடி போறாம்னா ச்சீ! நீ எல்லாம் ஆம்பளையான்னு கேக்குறதை விட்டுட்டு என் பொண்ணு வேண்டாம்னா உன் பொண்ணு வேண்டாம்னு சொல்லறாரு உன் அப்பா.. அது சரியா?" என்றவன் கேள்விக்கு அங்கே பதிலில்லை.
"ஆனா ஒன்னு சரி! நீ உன் அக்காவை கேட்ட பார்த்தியா? நீயாவது புரிஞ்சிகிட்டயே!" என்றவன் சொல்லில்,
"அவன் தம்பி தானே? வேற எப்படி பேசுவ?" என்றது வளர்மதியே!
"வேஸ்ட்! சுத்த வேஸ்ட்! திருத்த முடியாதவங்களைக் கூட திருத்திடலாம்.. ஆனா!" என்றவன் அத்தோடு நிறுத்திக் கொண்டான்.
மதுவை தூக்கி இருந்தவன் தோளில் இறுக்கமாய் கட்டியபடி இருந்தாள் மது.
"அம்மா அப்பா இல்லைனாலும் சொந்தம்னு இவளுக்கு நீங்க எல்லாரும் இருப்பிங்கனு நினச்சேன்.. " என்றவனின் இடவலமான தலை அசைப்பில்,
"ஆதி!" என்று அதிர்ந்து பார்த்தார் ராஜசேகர்.
"உங்க பொண்ணுக்காக வேற பொண்ணுன்னு இவளை நினைச்சவங்க தானே நீங்க?" என்று கேட்க, அவன் முகம் பார்க்கவே முடியவில்லை அவருக்கு.
சுபத்ராவின் கெஞ்சல் பார்வையில் கண்களை மூடி திறந்தவன் வளர்மதியைப் பார்க்க, அவள் பார்வை முழுதும் வெறுப்பாய் மதுவிடம்.
அதில் இன்னமும் சோர்ந்தவன் மனம் மது விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாய் இருந்திருக்க வேண்டுமோ என நினைத்து நினைத்து மருகி இருந்தது.
தொடரும்..