அத்தியாயம் 14
ஆறுதலுக்கும் ஆள் இன்றி தாங்கள் அனுபவித்த வலியை, தனியே கடந்த நிமிடங்களை என சுபத்ரா கூறி முடித்தவள், கேள்வியாய் இல்லை என்றாலும் 'நீ வந்திருக்கலாமே' என்ற அவள் மன பாஷையை புரிந்து கொண்டான் ஆதி.
பதில் கூற தோன்றாமல் ஆதி அமர்ந்திருக்க, அபிநந்தன் கூறியதில் குழப்பமும் பயமும் தான் மிஞ்சியது சுபத்ராவிற்கு.
"மது ஹெல்த்துக்கு என்ன? மதுவுக்கு யாரால பிரச்சனை?" விளங்கவே இல்லை சுபத்ராவிற்கு.
கேட்டுவிட்டு ஆதியைப் பார்க்க, அவன் சொல்வதாய் இல்லை என்பதை போல அமர்ந்திருந்தான்.
"மதுவோட ஆதியை ஒருநாள் நைட் தான் மீட் பண்ணினேன்.. எனக்கு முழுசா தெரியாது ஆனாலும் இப்ப என்னால அடிச்சு சொல்ல முடியும்!" அபி கூற,
"அபி!" என்று பொறுமை காக்கும்படி கண்ணசைத்தாள் சக்தி.
"இல்ல சக்தி! ஐம் சூர்!" என்றவன்,
"மதுவுக்கு இன்னும் பல நேரத்துல சரியா மூச்சு விட முடியுறது இல்ல.. இன்னும் சில நேரம் வீசிங் அதிகமாகி ஆகி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக வேண்டியது இருக்கு" அபி கூற,
"வீசிங் ப்ரோப்லேம்? மதுவுக்கா? என்ன சொல்றிங்க நீங்க? எங்க மதுக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்ல.. அவ கூடவே இருந்தவ நான்!" சுபா வேகமாய் கூற,
"உங்க அக்கா இன்சிடேன்ட்க்கு அப்புறம் அவ கூட நீங்க இல்லையே!" சக்தி கூற,
"வாட்?" என்றவளுக்கு புரிவது போல இருந்தாலும் நம்ப முடியவில்லை.
சக்திக்கும் கூட யூகம் தான்.. அதுவும் சுபத்ரா இல்லை என்று சொல்லவும் தான் அது இன்னும் ஊர்ஜிதம் ஆனது.
"அம்மா தான் பொண்ணு மனநிலையை பாதிக்க வச்சிருக்காங்க.. நீங்க கஷ்டப்பட்டிங்க தான் ஓகே.. அதுக்காக ஆதியை பழி சொல்றது சரி இல்லை. அவன் கஷ்டம் அவனை கேட்டா தானே உங்களுக்கு தெரியும்?" அபி.
"நாணயத்துக்கு ரெண்டு பக்கம் இருக்கு" சக்தி.
அபி சக்தி இருவருக்கும் ஒரு அச்சிடேன்ட்க்கு அப்புறம் தான் மதுவிற்கு இந்த பிரச்சனை என்று ஆதி கூறி இருக்க, சுபத்ரா கூறியவற்றை கேட்ட பின் அந்த அச்சிடேன்ட் என்னவாய் இருக்கும் என புரிந்து கொள்ள முடிந்தது.
"என்ன தேவா சொல்றாங்க? மதுவுக்கு என்ன பிரச்சனை? அவ நல்லா தானே இருந்தா?" சுபா கேட்க,
"இருந்தா! அதான் சொல்றியே இருந்தான்னு.. இல்லாதவங்களை பத்தி நான் பேசவோ குறை சொல்லவோ விரும்பல" என சுபத்ரா தாய் தந்தையை கூறியவன்,
"நீ அந்த இடத்துல இருந்த தானே? அவங்களை காப்பாத்துறது முக்கியம் தான் அதுக்காக மதுவை ஏன் அப்படி கவனிக்காம விட்ட?" ஆதங்கம் ஆற்றாமை என ஆதி கேட்க,
"இல்ல தேவா.. நான் வரவும்..." என்று ஆரம்பிக்க,
"உன் அம்மா சொன்னது மாதிரி நீயும் மது ஜாதகத்தை தான் சொல்ல போறியா?" என்றான் வலியோடு நக்கலாய்.
"அய்யோ! உங்களுக்கு மது எப்படியோ அப்படி தான் எனக்கும்.. அன்னைக்கு நடந்த இன்சிடென்ட் அப்ப நான் வீட்டுலயே இல்ல.. அம்மா அப்பா பார்த்துப்பாங்கனு வெளில போயிருந்தேன்.. ஆனா நான் வந்த அப்புறம் தான் அவங்களும் கார்ல வந்தாங்க.. அவங்க எப்ப போனாங்க.. எங்க போனாங்கனு கூட எனக்கு அப்ப தெரியாது.. நான் எப்படி மதுவை தனியா விட்டுட்டு போவேன்.. அதுவும் இவ்வளவு பெரிய அசம்பாவீதம் நடக்கும்னு எனக்கு தெரியாதே தேவா!" என்றவள் மடங்கி அமர்ந்து கால்களில் முகம் புதைத்துக் கொள்ள, ஆதி நகரவில்லை என்றதும்,
"சக்தி!" என்று கண் காட்டினான் அபி. சக்தி வந்து அவளை ஆறுதலாய் தாங்கி நிற்க,
"இப்ப சொல்ற எல்லாமே நீங்க தாங்கி தான் ஆகணும்.." என்று அபி கூற,
"அபி!" என்று தடுத்த ஆதியை கண்டுகொள்ளவில்லை அபிநந்தன்.
"மதுக்கு ஹார்ட்ல... ஹார்ட்ல கூட... சின்ன ப்ரோப்லேம்... ஒன்னு இருக்கு.." என்று அபி கூறவும் சடாரென சுபா நிமிர்ந்து பார்க்க,
"பெரிய ப்ரோப்லேம் எல்லாம் ஒன்னும் இல்லை.. இன்பாக்ட் சர்ஜரி அளவு கூட இல்லை.. கண்டின்யூவா மெடிசின் எடுத்துக்குறா.. சோ!" என்றவன் முடிக்க,
"அய்யோ!" என்றவளின் அழுகை அதிகமாகியது.
"மது உங்களோட எங்கயோ நிம்மதியா தானே இருக்கீங்க நினச்சேன்.. என்ன தேவா இது?" என்று சொல்லி அழ,
"ப்ச்!" என்று சலித்துக் கொண்ட ஆதிக்கு கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ தோன்றவில்லை.
"நான் மதுவை பாக்கணும் தேவா! ப்ளீஸ்! ஒரு ஒரு முறை மட்டும்.. ப்ளீஸ்!" என்று சுபா கெஞ்ச,
"ஆதி!" என்று அழைத்தான் அபி. அவனிடம் பதிலில்லை என்றதுமே அபி பார்வையில் சக்தி அழைத்து சென்றாள் சுபத்ராவை.
"என்ன டா நினைக்குற?" அபி ஆதியிடம் கேட்க,
"என்ன இருக்கு நினைக்குறதுக்கு?" என்றான் கேள்வியாய்.
"இவங்க..." என்று பேச வந்தவனை ஆதியின் பார்வை தடை செய்ய,
"அதான் அவ்வளவு சொல்றாங்களே! ஓகே! உனக்கு தான் எல்லாம் தெரியும்.. சோ உன்னோட விருப்பம்!" என்றவன் தள்ளி நிற்க, முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டவனுக்கும் பல எண்ணங்கள்.
"மார்னிங் பேசிக்கலாம்.. இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு.. டென்ஷன் வேணாம்!" என்று அபி பேசி அழைத்து செல்ல,
சக்தியுடன் வந்த சுபத்ரா செண்பகவல்லியின் அறைக்கு வந்திருந்தாள். அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதுவைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் விம்மிக் கொண்டு வந்தது.
மூன்று வருடங்களில் வளர்ந்துவிட்டிருந்தவளை ஆசையாய் பார்த்தவளுக்கு அவளைப் பற்றிய செய்தியில் இன்னும் பதற தான் செய்தது மனது.
நிஜமாய் தன் மேலும் தவறு தான்.. கொஞ்சமாய் கவனித்து இருந்திருக்கலாம் என்ற எண்ணம் மதுவைப் பார்க்க பார்க்க வெரூன்ற தொடங்க, அழுகையை அடக்க முடியாமல் அறையில் இருந்து வெளிவந்துவிட்டாள்.
அருகில் செண்பகவல்லி வேறு உறங்கிக் கொண்டு இருக்க, அவர் தூக்கம் தடைப்பட வேண்டாம் என்ற எண்ணம்.
"ப்ளீஸ்! கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருங்க.. இனி எல்லாம் காலையில பேசிக்கலாம்.." சக்தி கூறவும் அமைதியாய் அமர்ந்துவிட்டாள் சுபத்ரா.
அவளுக்கு தேவாவின் மீது இருந்த கொஞ்ச கோபமும் கூட சுத்தமாய் தேய்ந்து போனது அவன் கடந்த நாட்களை கண்டு.
இதற்கு தான் என்ன செய்திட முடியும்? என்று தோன்றவுமே மதுவை இதிலிருந்து மீட்டுவிட்டால் போதாதா? என்றும் தோன்ற, 'அதற்கு அவன் ஒத்துக் கொள்ள வேண்டுமே!' என்ற எண்ணம்.
நிச்சயம் இவ்வளவு கடந்து மதுவையும் கவனித்து வந்திருப்பவன் வளர்மதியை பார்க்க, அவன் வருவது என்ன மதுவை அனுப்புவான் என்பதே நம்பிக்கை இல்லாமல் போனது.
அடுத்து என்ன? வளர்மதி! அக்காவிடம் கூறினால்? மதுவை பார்க்க அடம் செய்வாள் தானே? உயிர் பிழைத்து வந்ததே அந்த சிறு உயிருக்காக தானே? என நினைத்துப் பார்க்க பார்க்க இருபுறமுமாய் தவித்தவளுக்கு உறக்கம் துளியும் இல்லை.
தேவா! அவள் தேவா! எத்தனை ஆசையான பார்வை அவளுக்காக அவனிடம் இருக்கும்.. குறும்பு புன்னகை அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் கண்ணில் மின்னிடும்.. கூடவே பிரத்யேகமான வார்த்தைகள்! நினைக்க நினைக்க இன்றைய தேவாவின் முகம் முற்றிலும் மாறுபட்டு நின்றது.
சிரிப்பை மறந்த உதடுகள், அதை தாடிக்குள் ஒழித்து வைத்திருக்க, யாரையும் எட்டி வைக்கும் கண்கள். அதில் அத்தனை அழுத்தம். பார்க்க பார்க்க ஆச்சர்யமும் கூட.. மனிதனுக்கு இந்த சூழ்நிலைகள் எவ்வளவு மாற்றத்தைக் கொடுக்கிறது?.
விடியும் வரை சுபத்ராவிற்கு உறக்கம் கண்ணில் எட்டிடவில்லை. அமர்ந்த நிலையில் இருந்தவள் அசையக்கூட இல்லை.
நீண்ட நேரம் சுபத்ராவின் சிந்தனையை கலைக்காது அவளருகே இருந்த சக்தி கண்கள் தானாய் சோர்ந்து ஓய்வுக்கு விழி மூடும் வரை அவளும் துணை இருந்திருந்தாள்.
விடிந்தத அடையாளமாய் ஒளிக்கற்றைகள் அறைக்குள் வரும் நேரம் சட்டென விழித்த சக்தி பார்த்தது இரவு இருந்த அதே இடத்தில் சுபத்ராவை தான்.
"சுபா! நீங்க தூங்கவே இல்லையா?" என்றாள் ஆச்சர்யமாய்.
"மது எழுந்திருப்பா இல்ல?" சுபத்ரா பதில் கேள்வி கேட்க, சில நொடிகள் பார்த்தவள்,
"அந்த ரூம்ல பிரெஷ் ஆகிட்டு வாங்க!" என்று கூறிவிட்டு கீழே செல்ல, சுபத்ராவும் எழுந்து சென்றாள்.
சக்தி கீழே வரும் நேரம் அபியும் சீதாவும் வெளியில் இருந்து வந்தனர்.
"என்ன டா பிரச்சனை? இப்பவாச்சும் சொல்லேன்!" சீதா அபியிடம் கேட்க,
"அவங்க எங்க?" என்று சக்தியிடம் கேட்டான் அபி.
"மேல! பிரெஷ் ஆகிட்டு வாங்கனு நான் தான் சொன்னேன்.."
"சொல்ல சொல்ல கேட்காம ஆதி மதுவோட வீட்டுக்கு கிளம்பிட்டான் சக்தி.." அபி கூற,
"அவன் தான் தெளிவா சொன்னானே! இங்க யாரோட கவனமும் அவன் மேல விழுறதை அவன் விரும்பலனு.. இப்ப எல்லாரும் எழுந்தா அந்த பொண்ணு யாருனு கேட்குறதோட விடுவாங்களா? அடுத்தடுத்து கேள்வி வரும்.. அவன் கிளம்பினது தப்பில்ல.. இப்படி தூங்குற குழந்தையை தூக்கிட்டு போயிருக்க வேண்டாம்.. ஏதோ பிரச்சனைனு தெரியுது.. பேசினா எல்லாம் சரியாகிடும்.. ஆளாளுக்கு மூஞ்சை தூக்கி வச்சுக்காம கிளம்பி போங்க.. ஆதி வீட்டுல தானே இருப்பான்?" சீதா கூற,
"ம்மா! எப்படி இவ்வளவு கூலா சொல்றிங்க?" அபி ஆச்சர்யமாய் கேட்டான்.
"உங்களுக்கு பிரச்சனை என்னனு தெரியும்.. எனக்கு ஆதி இங்க பிரச்சனை வேண்டாம்னு நினைக்குறது புரிஞ்சது.. அதான்.. போய் அவன்கிட்ட பேசுங்க.. பேசி சரி பண்ற வழியை பாருங்க.."
"வெரி ஸ்மார்ட் ம்மா நீங்க!" என்ற அபி,
"நீ அவங்களை கூட்டிட்டு வா.. நானும் டூ மினிட்ஸ்ல வர்றேன்!" என்று சென்றான்.
சுபத்ராவிடம் ஆதி சென்றதை தயங்கியே சக்தி கூற, பெரிதாக அதிர்ந்துவிடவில்லை அவள்.
அவரவர் எண்ணங்கள் அவரவர்க்கு சரி தானே? என்று நினைத்தவளுக்கு மதுவை சகோதரியிடம் அழைத்து செல்ல தேவாவிற்கு விருப்பம் இல்லை என்பது மிக தெளிவாய் புரிந்தது.
வளர்மதியின் மீது சுபத்ராவும் அளவில்லா கோபத்தில் தான் இருந்தாள் என்ற போதும் இந்த மூன்று வருடங்களில் பல புலம்பல்களையும் அக்காவின் கண்ணீரையும் என கண்முன் கண்டுவிட்ட பின் மனம் கணத்து தான் போனது.
முடிந்தவரை ஆதியிடம் கெஞ்சிப் பார்க்க நினைத்தவள் சக்தி கூறவும் சம்மதித்து ஆதியின் வீட்டிற்கு கிளம்பினாள்.
தொடரும்..