• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 15

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 15

"நீங்க ஏன் சிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கல?" அபி திடீரென வெளியே வந்த சுபத்ராவிடம் கேட்கவும் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து தான் விழித்தனர்.

"ஏன் இவ்வளவு ஷாக் எல்லாருக்கும்? தப்பா எதுவும் நான் கேட்கலையே?" என்றவனை ஓரப் பார்வையோடு முறைத்தான் ஆதி.

ஆதி வீட்டிற்கு சுபத்ராவுடன் அபியும் சக்தியும் கிளம்பி வந்திருக்க, வாசலை திறந்து வைத்ததோடு சரி இன்னும் வாயை திறக்கவே இல்லை ஆதி.

"ஹாய் மது! குட் மார்னிங்!" என்று அபி வர, பின்னோடே மதுவின் நியாபகத்தின் ஓரத்திலாவது தான் இருக்க வேண்டுமே எனும் பேராசையோடு அளவில்லா அன்பை விழிகளில் தேக்கி வந்திருந்தாள் சுபத்ரா.

"குட் மார்னிங் அபி!" என்ற மது, இரு நொடிகள் விழி அகலாது சுபாவைப் பார்த்து பின் புன்னகைக்க அதுவே அவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது சுபத்ராவிற்கு.

"ஏன் மது எங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு வர கூடாதா? இப்படி விடிஞ்சும் விடியாமலும் ஓடி வந்துட்டீங்க?" சக்தியின் கேள்வி மதுவிடம் என்பதை போல இருந்தாலும் பார்வை ஆதியிடம் தான் இருந்தது.

"நேத்து தான் எல்லாருமா ஃபங்சன் போயிட்டீங்களே! எனக்கு ஹோம் ஒர்க் கூட யாரும் சொல்லி தரலை.. அதான் செய்யலாம்னு தான் வந்தோம்.. இல்ல ப்பா?" என்று ஆதியை மது பார்க்க,

"ஹ்ம் டா!" என்றான் ஆதி வாஞ்சையாய் அவளைப் பார்த்து.

"அப்பாக்கு தப்பாம இருக்க டி நீ? உன் அப்பாவை காப்பாத்தறியா நீ?" கேலி போல என்றாலும் ஆச்சர்யமாய் இருந்தது சக்திக்கு மது பதில்.

"இவங்க யார்னு தெரியுதா மது?" அபி சுபத்ராவைக் காட்டி கேட்க, சுபத்ரா கண்களில் ஒரு தேடல். அதை கண்டும் மகள் பதிலுக்காய் நின்றான் ஆதி.

"ஹேய்! கேக்குறான் இல்ல.. சொல்லு டி!" என்று சக்தி கூற, அந்த உரிமைப் பேச்சு கூட மனதில் எங்கோ தைத்தது சுபாவிற்கு.

தான் அல்லவா அப்படி அழைக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டும்? நினைத்தபடி மதுவை சுபத்ரா பார்த்து நிற்க,

"பார்த்த நியாபகம் தான்.." என்று இழுத்த மது,

"உங்க ஆபீஸா ப்பா?" என்றாள் ஹஸ்கியாய் ஆதியிடம்.

ஆதி பதில் பேசவில்லை. அமைதியாய் டேபிளில் சாய்ந்து விரல்களால் மெல்லிய தாளம் இசைத்து நின்றிருந்தான்.

நீண்ட நேர அமைதி. யாராவது பேசட்டும் என்பதைப் போல அனைவரும் அமைதியாய் நிற்க,

"நீங்க யாருமே சொல்லி தர வேண்டாம்.. நானே ஹோம் ஒர்க் பண்ணிக்குறேன்.." என்ற மது உள்ளே செல்ல போக,

"நான் வரவா மது?" என்று தயங்கி கேட்ட சுபாவை ஆதி ஒரு பார்வை பார்க்க, அதற்குள் மது சம்மதமாய் தலை அசைத்து உள்ளே அழைத்து சென்றிருந்தாள்.

உள்ளே பேச்சுக் குரல் மிக சிறிதாய் ஆரம்பித்து பின் கொஞ்சம் கொஞ்சமாய் இருவரின் குரலும் வெளியே கேட்க ஆரம்பிக்க, அபி புருவம் உயர்த்தி சக்தியைப் பார்க்க, அவள் உதடு பிதுக்கி தலை அசைத்தாள்.

ஒரு மணி நேரம் சென்று முடியும் நேரம் சுபத்ரா மட்டும் வெளியே வர, "நீங்க ஏன் சிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கல இன்னும்?" என்று கேட்டு நிறுத்தி வைத்தான் அபி அவளை.

கேள்வியின் அதிர்வில் சுபத்ரா அப்படியே நின்றுவிட, ஆதி வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் தான் நின்றிருந்தான் இன்னும் அதே இடத்தில்.

"என்ன கேட்டிங்க?" சுபத்ரா கேட்க,

"இல்ல இன்னும் கல்யாணம் ஆகலையா.. பண்ணிக்கலையானு கேட்டேன்" என்றான் தெளிவாய்.

என்ன பதில் சொல்ல என விழித்தவள் பார்வை ஆதியை தொட்டு தொட்டு மீள, அபி கவனித்துக் கொண்டவன்,

"நீங்க மட்டும் இப்ப கல்யாணம் பண்ணு புருஷனோட வந்திருந்தா மது உங்க கூட வந்திருப்பா.. அது தான் ரூல்ஸ்.." என்று அபி முடிக்கும் போது டேபிளில் சத்தமாய் தட்டிவிட்டு நிமிர்ந்த ஆதி சட்டென உள்ளே சென்றுவிட்டான்.

"அதென்ன புடலங்காய் ரூல்ஸ்? புதுசா ரூல்ஸ் பத்தி எல்லாம் பேசுற?" சக்தி புரியாமல் கேட்க,

"ப்ச்! ஷ்ஷ்! கொஞ்ச நேரம் அமைதியா வேடிக்கை பாரு!" என்றவனுக்கு இப்பொழுது சக்தி மீதான கவலை வேறு சேர்ந்தது.

"எங்க டா கிளம்புற?" சட்டை கையை முழங்கை வரை மடித்துவிட்ட படி வந்த ஆதியை அபி கேட்க,

கடிகாரத்தைப் பார்த்தவன், "இந்நேரம் எங்க போவேன்? ஆபீஸ் தான்.. மதுவை ஸ்கூல்ல ட்ரோப் பண்ணிட்டு கிளம்பனும்" என்றான் வாட்ச்சை மாட்டியபடி.

"ஆதி! ஜஸ்ட் ஸ்டாப் இட்.. ரொம்ப ஸ்மார்ட்டா நடிக்குறதா நினைப்பா? எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?" விளையாட்டை விட்டு நேராய் கேட்டான் அபி.

"நீங்க தான் தேவை இல்லாம யார..." கூற வந்தவன் வார்த்தைகள் பாதியில் நிற்க, தன்னை ஊடுருவிப் பார்க்கும் விழிகளை தவிர்த்த ஆதி,

"டைம் வேஸ்ட் நீங்க தான் பண்ணிட்டு இருக்கீங்க.. மதும்மா கிளம்பிட்டியா?" என்று குரல் கொடுத்தவன்,

"யார் என்ன சொன்னாலும் நம்பிடறதா?" என்றான் அபியிடம்.

"ஆனா அதுக்கு இதுவரை நீ எந்த மறுப்பும் சொல்லல.. அண்ட் நீயும் சில விஷயங்கள் சொன்னதை வச்சு பார்த்தா இங்க எதுவுமே பொய்யில்ல ஆதி.. நீ ஒருவிதமா பாதிக்கப்பட்டிருக்கன்னா.. அவங்களும் தானே? அம்மா அப்பாவையும் இழந்துட்டு நிக்கிறாங்க"

அபி முழுதாய் சுபத்ராவின் பக்கம் பேசியவன், மது வருகிறாளா என பார்த்துவிட்டு,

"மது அம்மா உயிரோட இருக்கும் போதே நீ இப்படி பண்றது... அதுவும் இப்ப அனுப்ப மாட்டேன்னு சொல்றதெல்லாம் ரொம்ப தப்பு டா.. அவங்க கோர்ட்க்கு போனா ஈசியா மது நம்ம கையை விட்டு போய்டுவா" அபி எடுத்து சொல்வதாய் நினைத்து கூற,

"ஓஹ்! கோர்ட்டுக்கு எல்லாம் போவாங்களா? எப்படி? என்னனு சொல்வாங்க? மது அவங்க அம்மாக்கு இடைஞ்சலா இருந்தது, அவ ஜாதகம் சரி இல்லைனு அவங்க வீட்டுல பேசினது இதெல்லாம் சொல்லுவாங்களா? ஜட்ஜ் என்ன இவங்க வீட்டு வாட்ச்மேனா?" என்ற ஆதி,

"இப்பவும் மது அம்மா... ஹ்ம் அப்படி சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.. எனக்கு அவங்க மேல சந்தேகம் இருக்கு.. அன்னைக்கு வீட்டுல யாரும் இல்லைனு தெரிஞ்சு மதுவை ஏதோ பண்ண ட்ரை பண்ணி இருக்கலாம் இல்ல? அதுவே பேக்ஃபையர் ஆகி இருக்கலாம் இல்ல?"

"ஸ்டாப் இட் தேவா! என்ன பேசுறீங்க நீங்க? நீங்களா இப்படி? நான் இதை உங்ககிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணல!" கண்ணீர் முட்டி நிற்க சுபத்ரா கூற, ஆதி திரும்பிடவில்லை.

"ஆதி! என்ன டா இது? நீயா இப்படி பேசுற?" அபி திகைத்து தான் போனான் ஆதியின் கேள்வியில்.

"ப்ச்! உனக்கு தெரியாது அபி! நீ கேட்டது எல்லாம் பாதி கூட இல்ல.." ஆதி.

"அப்ப உங்க அண்ணன் பண்ணினது சரி இல்லையா?" சக்தி.

"நான் சொல்லவே இல்லையே! ஐ ஷேம் ஆன் ஹிம்.. இப்ப வரை அவன் இருக்கானா இல்லையானு எனக்கு தெரியாது.. இனியும் தெரிய தேவை இல்லை.." சாதாரணமாய் கூறினான்.

"சோ! நீங்களும் உங்க அண்ணன் மாதிரி தான் இல்ல?" எவ்வித முக பாவனையும் இன்றி சக்தி கேட்க, சுபாவின் பார்வையைப் போல ஆதியின் பார்வையும் தன்னைப் போல அவளை தொட்டு நின்றது..

இறுதியாய் பார்த்த அன்று சுபாவும் இதே வார்த்தைகளை தானே சொல்லி சென்றாள்!.

"என்ன பாக்குறீங்க? உங்களுக்கு சாய்ஸ் எல்லாம் இல்லை.. இன்னைக்கு மது அம்மாவை பார்க்க மது போகணும்!" கட்டளை போல கூறிய சக்தி,

"சுபாக்கு எந்த பிரச்சனையும் இல்லைனா நாங்களும் கூட வர்றோம்.." என்றாள்.

"சக்தி! இதுல நீ உள்ள வர தேவை இல்லை"

"அதை நீங்க சொல்ல வேண்டாம்.. நான் உங்ககிட்ட கேட்கல" என்ற சக்தி சுபா முகம் பார்க்க, அவள் சம்மதமாய் தலையசைத்தாள்.

"நான் பண்ணின தப்புக்கு ஆயுள் முழுக்க தண்டனை தானா தேவா?" சுபா.

"புதுசா இருக்கு ஆதி.. பிடிவாதம் இருக்கலாம்.. ஆனா நீ பண்றது... தெரிஞ்சே தப்பு பண்ற.. தப்பை திருத்திக்க நினைக்குறவங்களுக்கு தண்டனை தான் தீர்வுனு சொல்ற" அபி.

"உங்க அண்ணன் சொல்லிட்டு தான் போனார்.. ஆனா நீங்க?" என்று சக்தி தன்னால் முடிந்த மட்டும் அவனுக்கு புரியும்படி கொட்டினாள்.

"நீங்க எல்லாரோட இடத்துல இருந்தும் யோசிக்குறீங்க.. நான் மதுக்காக மட்டும் யோசிக்குறேன்.. யோசிப்பேன்.. அடுத்தவங்களுக்காக நின்ன பழைய ஆதி தேவா இப்ப இல்லை.. எனக்கு மது.. மதுவுக்கு நான்.. பெத்தவங்க பொண்ணை பார்க்க ஆசைபடலாம்.. ஆனா கூட வச்சுக்க உரிமையும் இல்ல.. தகுதியும் இல்ல.. ரெண்டு நாள் டைம்.. நாளன்னைக்கு மார்னிங் மது இங்க இருக்கனும்.. அண்ட் நானும் மனுஷன் தான்" என்ற ஆதி சுபாவை பார்க்காமல் வெளியே செல்ல முயல,

"எனக்கு உனக்கு அப்புறம் தான் டா அவங்க.. நீயும் வர்றன்னா நான் வர்றேன்.. இல்லைனா" என்று அபி சக்தியைப் பார்க்க,

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. நான் மதுவை பார்த்துப்பேன்" சக்தி தாராளம் போல கூற,

"ப்ச்! பட் மது மைண்ட் இட்!" என்று கூறி சக்தி மூக்கை ஆதி உடைத்தான்.

"மதுவை மட்டும் கூட நாம நம்பி அனுப்பி வைக்கலாம் டா!" என்றான் அபி சுபத்ராவின் பார்வை உணர்ந்து.

"நோ!" உடனே பதிலளித்த ஆதி,

"மதுவுக்காக... வர்றேன்!" என்று கூறி உள்ளே சென்றான்.

"இருந்தாலும் சார்க்கு இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டு ஆகாது அபி.. மேட் வித் ஸ்பெஷல் பார்ட்ஸ்!" சக்தி கிண்டலாய் கூற, அப்போது தான் மது வருவது உறுதியான பின் தான் கொஞ்சம் ஆசுவாசம் கொண்டாள் சுபத்ரா.

அபிக்கு தான் இன்னமும் குழப்பமும் பயமும் அதிகமானது. பார்வைகள் கொண்டு அவன் புரிந்தது சுபத்ராவின் காதல் என்றால் எதயும் வெளிப்படுத்தவில்லை ஆதியின் கண்கள்.

முன்பு காதலித்தார்கள் என்று விடவா இல்லை இப்பொழுது தொடர்கிறதா என்று தெரியாமல் குழம்பவா? என்று யோசிக்க, அவர்கள் காதலை மறக்கவில்லை மறக்க போவதுமில்லை என்று ஆதியே உணரவில்லையே!

போட்டு வாங்க முடிவு செய்து அபி கேட்ட திருமண செய்தி ஒரு பக்கம் அப்படியே இருக்க, தேவா என்ற அழைப்போடு சுபத்ராவின் குரலும் பல கதைகளை சொல்லியது இவர்களுக்கு.

சக்தி என்ன நினைத்து பேசுகிறாள் என்றும் புரியவில்லை.. ஒருவேளை அவள் காதல் பொய்த்து போனால் அவள் நிலை? நினைத்து தவித்தது என்னவோ அபி தான்.

தொடரும்..